அம்மம்மா.. கேளடி தோழி...! -22

22 என்   நினைவில்   நீயிருப்பதை என்றுதான் நீ உணர்வாய்.. ? அதுவரை அவள் முகத்தைப் பார்க்காதவன்.. அப்போது மட்டும் அவள் முகத்தை நிமிர...


22
என்  நினைவில்  நீயிருப்பதை
என்றுதான் நீ உணர்வாய்..?

அதுவரை அவள் முகத்தைப் பார்க்காதவன்.. அப்போது மட்டும் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தது.. அவள் இதயத்தில் தைத்தது...
வலிதாங்காமல் அவளுக்கு லேசாக... மிக லேசாக... கண்கள் கலங்கி விட்டன... கணநேரத்தில் கண்களை சிமிட்டி... அவன் அதைக் கண்டு விடாமல் அவள் மறைத்து விட்டாள்....
அவள் ஷோபா...!
இன்னொருவனின் முன்னால்.. என்னதான் அவனைக் கைபிடிக்க அவள் பகீரதப் பிரயத்தனங்களை செய்து கொண்டிருந்தாலும்... அவள் கண்கலங்கி நிற்பதா...?
ஒருபோதும் அவள் அதைச் செய்ய மாட்டாள்...
"ஏன்னா... நான் காலேஜில் இருக்க மாட்டேன்..." அவள் சிரித்தபடி பேசினாள்...
"காலேஜில் இல்லாம எங்கே போகப் போகிற...?" எரிச்சல் பட்டான் சங்கர்...
"வீட்டுக்குப் போகப் போகிறேன்..." அவள் விளையாட்டாய் பேசுவதைப் போல பேசிக் கொண்டிருந்தாள்...
"இப்பத்தான் காலேஜ் வாசலிலே வந்து இறங்கியிருக்கிற... உடனே வீட்டுக்குப் போகப் போறியா..? இதுதான் நீ படிக்கிற லட்சணமா..?" அவளை மட்டம் தட்டினான் சங்கர்...
'ஆமடா.. நீ ஜொள்ளு விடுகிறதுக்கு பாலம் போடத்தான் நான் காலேஜீக்கு வருகிறேன்... அதுக்கு வேற ஆளைப் பாரு...'
"அப்படித்தான்னு வைத்துக்கங்களேன்.. எனக்கு ஒரே தலைவலி... ரெஸ்ட் எடுக்கனும்... அதுக்கு வீட்டுக்குப் போயாகனும்.." அவள் கொஞ்சலான குரலில் சொன்னாள்....
"அதுக்கு வீட்டுக்குப் போகனுமா என்ன..? காலேஜ் காண்டினில் ஒரு காபியையும்.. டேப் லெட்டையும் வாங்கி விழுங்கி விட்டு கிளாஸ் ரூமுக்குப் போக வேண்டியது தானே..." வழி சொல்லிக் கொடுத்தான் சங்கர்...
'ஆக.. அந்தக் காபியைக் கூட.. காலேஜ் கேண்டினில்தான் நான் வாங்கிக் குடிச்சுக்கனும்... நீ வெளியே கூப்பிட்டுக்கிட்டுப் போய் வாங்கிக் கொடுக்க மாட்ட.. பலே தில்லாலங்கடி ஐடியா வெல்லாம் கொடுக்கறியே மச்சான்..! நான் காலேஜ் கேண்டின்ல காபியை வாங்கிக் குடிச்சுட்டு.. சாயந்திரம் வரைக்கும் தலைவலியோட உனக்காக காத்திருக்கனும்... நீ வந்து என்னை நடுவில நிற்க வைச்சுக்கிட்டு.. அவகிட்ட கடலை போட்டு முடிப்ப... அதுக்குப் பின்னாலே நான் என் வீட்டைப் பார்த்துப் போகனும்... நீ உன் ரூட்டைப் பார்த்துப் போவ.. நினைப்புத்தாண்டா உனக்கு..'
"நோ சங்கர்... தலைவலி வந்தா வீட்டுக்கு வந்து விடனும்னு டாடி கண்டிப்பா சொல்லியிருக்கார்.. ஸோ.. நான் வீட்டுக்குப் போயாகனும்.. ஐ ஆம் ஸாரி.. ஈவினிங் நான் உங்களை மீட் பண்ண முடியாது..."
ஷோபா வருத்தம் தெரிவிக்க..
'நான் கேட்டேனா...' என்று பல்லைக் கடித்தான் சங்கர்...
என்னவோ... அவளுடன் அந்த மாலை நேரத்தைக் கழிக்க அவன் ஆவலோடு காத்திருப்பதைப் போலவும்.. அவளால் முடியாது என்று அவள் வருத்தம் தெரிவிப்பதைப் போலவும் அவள் பேசிவைத்த விதத்தில் அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
"இட்ஸ் ஆல்ரைட் ஷோபா.. உடம்பைப் பார்த்துக் கொள்..."
அதற்கு மேல் அங்கே நிற்காமல்... 'எனக்கென்ன...' என்று அவன் கிளம்பி விட.. அவள் புருவம் உயர்த்தினாள்...
"என்ன சங்கர்.. என்னை அம்போன்னு விட்டுட்டுப் போறிங்க...?"
அவளை கைவிட்டு அவன் போவதைப் போல அவள் வினவிவைக்க.. அவன் அவளை முறைத்தான்...
"வேற என்ன செய்யச் சொல்கிற...?"
"என்னை வீட்டில் கொண்டு போய் விட வேண்டாமா..? உங்க கடமையை நீங்க மறக்கலாமா..?"
"பேத்தாதே... என் கடமை எதுன்னு எனக்குத் தெரியும்... நீ உன் வீட்டுக்குப் போகனும்ன்னா கால்டாக்ஸியை பிடிச்சுப்போ..."
"எனக்குன்னு டாடி.. மூணு கார் வாங்கிக் கொடுத்திருக்கார் சங்கர்.. அதில் ஒன்னில் கூட இன்னைக்கு நான் ஏறலை... ஏன்னு உங்களுக்கு நினைவிருக்கா...?"
ஷோபா குத்தலாக கேட்டாள்.. சங்கருக்கு அது புரிந்தது.. அவளை அவன்தான் தன்காரில் வரும்படி வற்புறுத்தி அழைத்து வந்தான்...
'அதற்காக..?'
வந்த நோக்கம் நிறைவேறாததில் அவனே எரிச்சலுடன் இருந்தான்... ராதிகாவின் கோபம் அவனை பாதித்திருந்தது...
ஆசை ஆசையாக அவளைப் பார்க்க வந்தவன்.. அவளது கோபத்தின் பிண்ணனி எதுவென்று புரியாமல் திகைத்திருந்தான்...
"என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே ஷோபா... ஐ ஹேவ் சம் அர்ஜன்ட் வொர்க்..."
'ஓஹோ..'
"உடனே நான் ஆபிஸ் போயாகனும்..."
'இதுவரை உனக்கு அது நினைவில் இல்லையா...'
"ஸோ... நீ வீட்டுக்குப் போகிறதுன்னா உன் டாடிக்கு போன் பண்ணி கார் அனுப்பச் சொல்லிப் போ..."
'அது எனக்குத் தெரியாதா...?'
"இல்லை.. நீ ஈவினிங் வரைக்கும் மேனேஜ் பண்ணிக்குவேன்னா.. எனக்கு ஈவினிங் போன்பண்ணு..."
'நான் என்ன கேணச்சியா...?'
"ஸோ... பை..!"
'கிளம்பு.. கிளம்பு...'
"என்ன முடிவு பண்ணியிருக்க..?"
'இனி உன்னை நம்பி என்காரை வீட்டில் விட்டுவிட்டு வரக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்...'
சங்கர் எதிர்பார்ப்புடன் ஷோபாவின் முகம் பார்க்க... இன்னும் அவன் மீதான அவளின் ஆர்வத்தில் அவனுக்கு எத்தனை நம்பிக்கை என்று கசப்புடன் நினைத்துக் கொண்டாள் ஷோபா...
"நான் கால் டாக்ஸியில் வீட்டுக்குப் போய்க்குவேன் சங்கர்... நீங்க கிளம்புங்க...."
"டேக் கேர்..."
"தேங்க் யு..."
இதையாவது சொன்னானே என்ற நினைவில் பரந்தாமனுக்கு போன் பண்ணி காரை அனுப்பச் சொன்னாள் ஷோபா...
"என்னம்மா ஆச்சு...?"
"ஒரே தலைவலி டாடி..."
"த்ச்சு... உன்கிட்ட இது ஒன்னு இருக்கு ஷோபா... எதுக்கெடுத்தாலும் தலைவலிதானா...? இருந்திருந்து சங்கருடன் சேர்ந்து இப்போதுதான் முதன் முதலாய் வெளியே போகிற... இப்பவும் தலைவலின்னா அவன் உன்னைப் பத்தி என்ன நினைச்சுக்குவான்...?"
"ஒன்றும் நினைத்துக்க மாட்டார்... நீங்க முதலில் காரை அனுப்புங்க..."
'இவர் ஒருத்தர் நேரம் காலம் தெரியாம பேசி வைப்பார்...'
ஷோபாவுக்கு உண்மையிலேயே தலைவலி வந்து விட்டது...
மாலையில் அவள் காலேஜில் இல்லாமல் போனால்... சங்கரும் காலேஜீக்கு வரமாட்டான் என்ற நம்பிக்கையோடு காருக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் ஷோபா...
அவளுக்குத் தெரியாது... மாலையில் கட்டாயம் சங்கர் வருவான் என்பது...
சங்கர் காலேஜ் வாசலில் காரின்மீது சாய்ந்து... நின்றபடி காத்திருந்தான்.. தூரத்தில் ஹேமாவும்.. ராதிகாவும் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் அவன் கண்கள் மின்னின... ராதிகா அவனை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட... ஹேமா அவனருகில் வந்தாள்...
"இன்னும் அவங்க கோபம் தீரலையா..?" சங்கரின் முகத்தில் ஏமாற்றம் நிலவியது...
"அதுக்காக இப்படி முகத்தை தொங்கப் போட்டுக்கனுமா..? சிரிங்க சார்... உங்க முகத்துக்கு சிரிப்புத்தான் ஷீட் ஆடுது..."
"என்ன சொன்னாங்க...?"
"எதைப் பற்றி..?"
"காலையில் நான் சொன்னதைப் பற்றி..."
"அவ ஏதோ வியாக்கினம் சொன்னா... அதை விடுங்க சார்... இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்னை..?"
ஹேமா நேரடியாக விசயத்துக்கு வந்தாள்... சங்கரின் முகத்தில் வியப்பு வந்தது... அவன் இந்த நேரடிப் பேச்சு வார்த்தையை எதிர்பார்த்திருக்கவில்லை...
"அப்படின்னா...?"
"உங்களுக்கா புரியாது..? ஏன்சார்... ஷோபா இன்னைக்கு கிளாஸீக்கு வரலை... தலைவலின்னு வீட்டுக்குப் போயிட்டா.. ஆனா டாண்ணு நீங்க ஈவினிங் டயத்தில கரெக்டா வந்து நிற்கறீங்க... நீங்க ஷோபாவுக்காக வரலைங்கிறது இதிலிருந்தே தெரியுது.."
"அவளுக்காக நான் வருகிறேன்னு யார் சொன்னது...?"
"அப்போ யாருக்காக வருகிறீங்க...?"
ஹேமா மடக்கிவிட... சங்கர் பலமாகச் சிரித்தான்...
"எதுக்கு சார் இந்த வில்லன் சிரிப்பு..? நீங்க ராதிகாவுக்காகத்தானே வருகிறீங்க...?"
"யெஸ்..." அவன் உண்மையை சொல்லிவிட்டான்...
"நினைச்சேன்... இது ஷோபாவுக்குத் தெரியுமா..?"
"தெரியாது..."
"சொல்லிராதீங்க... ராதிகாவை கொன்றே போட்டு விடுவாள்..."
"என்னைத்தாண்டி ராதிகாவை நெருங்க யாராலும் முடியாது..."
"தோடா... இன்னும் அவகிட்ட நீங்க எதையும் சொல்லலை... அதுக்குள்ள இந்தப் பேச்சா...?"
"ஹேமா ஐ நீட் யுவர் ஹெல்ப்..."
"செய்துட்டாப் போச்சு..."
"நான் ராதிகாவை மீட்பண்ணி பேசனும்..."
"இங்கே முடியாது..."
"எனக்கும் அதுதெரியுது... வேற எங்கே மீட் பண்றதுன்னுதான் தெரியலை..."
"வெள்ளிக்கிழமைகளில் அவ கோவிலுக்குப் போவா..."
"எந்தக் கோவில்..."
"அவ ஏரியாவில இருக்கிற பெருமாள் கோவில்..."
"அப்புறம்..?"
"ஞாயிற்றுக்கிழமைகளில் லைப்ரரிக்குப் போவா..."
"அதுவும் அவ ஏரியாவில இருக்கிற லைப்ரரியா..?"
"எப்படிக் கரெக்டா கண்டு பிடிச்சீங்க...?"
"இதைக் கண்டுபிடிக்க.. ஷெர்லக்ஸ் ஹோமா வரனும்..? அதான் தெரியுதே..."
"அப்புறம் பார்க்குக்குப் போவா.. அதுவும் அவ ஏரியாவில் இருக்கிற பார்க்குன்னு உங்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை..."
ஹேமாவும்.. சங்கரும் சேர்ந்து சிரித்தார்கள்... சங்கரின் மனதில் ஹேமாவின் மீது ஓர்விதமான தோழமை உணர்வு தோன்றியது....
"தேங்க்ஸ்..." உண்மையான நன்றியுணர்வுடன் சொன்னான்...
"தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்... இதில என் சுயநலமும் இருக்கு..." அவள் கண்சிமிட்டினாள்...
"என்ன..?" அவன் கேள்வியாகப் பார்த்தான்...
"எங்க அம்மா அடிக்கடி ஒரு பழமொழியைச் சொல்வாங்க..."
"எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே ஸ்வீட் சாப்பிடனுமுன்னு சொன்னாங்களா..?"
"ஊஹீம்... ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா.. தன்பிள்ளை தானே வளருமாம்..."
"இதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது என்னவோ..?"
"மத்தவங்க காதலுக்கு ஹெல்ப் பண்ணினா.. என் காதல் தானாய் வளரும்..."
"நீங்க காதலிக்கிறீங்களா..? யாரைக் காதலிக்கிறிங்க..." சங்கர் வியப்புடன் கேட்டபோது.. 'உன்னைத்தான்...' என்று மனதில் சொல்லிக் கொண்டாள் ஹேமா...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -22
அம்மம்மா.. கேளடி தோழி...! -22
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy