அழகான ராட்சசியே -54

54 நெருஞ்சி முள்ளில் நடந்தாலும் நெஞ்சினிலே இனிப்பை சேர்க்கும்.. அழகான ராட்சசி நீ.... நரேந்திரனுக்கு கையசைத்தாள் ஊர்மிளா.. அவள...


54
நெருஞ்சி முள்ளில் நடந்தாலும்
நெஞ்சினிலே இனிப்பை சேர்க்கும்..
அழகான ராட்சசி நீ....


நரேந்திரனுக்கு கையசைத்தாள் ஊர்மிளா.. அவளது கையசைவில் அவன் முகம் மலர்ந்து போவதை அவள் உணர்ந்திருந்தாள்.. அதற்கு மட்டும்தான் என்றில்லை.. அவள் காபிக் கோப்பையுடன் அவன் பக்கத்தில் உட்கார்ந்து உரையாடினால் அவன் முகம் மலர்ந்தான்.. அவனுடைய சட்டையின் பொத்தான்களை போட்டுவிட்டு அவன் இடுப்பை வளைத்து அவன் மார்பில் முகம் புதைத்தால் முகம் மலர்ந்தான்.. அவன் கழுத்தில் டையைக் கட்டிவிட்டு.. அவள் அழகு பார்க்கும் போதும் முகம் மலர்ந்தான்.. அவனுடன் பேசியபடி இறங்கி வந்து டைனிங் டேபிளில் அவனை உட்காரவைத்து.. அவன் முகம் பார்த்து அவனுடைய தேவையை அறிந்து அவள் பறிமாறிய போதும் முகம் மலர்ந்தான்.. சாப்பிட்டு முடித்தவனுக்கு கை துடைக்க ரகசியமாக சில சமயம் அவள் சேலை முந்தானையை நீட்டும் போதும் முகம் மலர்ந்தான்.. அலுவலகத்துககு கிளம்புகிறவனுடன் வாசல் வரை வந்து போர்டிகோவில் நின்று அவனுடைய கார் கிளம்பும் போது அவள் கையசைத்து வழியனுப்பும் போது அதிகமாக முகம் மலர்ந்தான்..
இவை எதையும் ஊர்மிளா உணர்த்தும் வரை அவன் அறிந்ததில்லை.. நளினி உயிரோடு இருந்த வரை அவளுடைய கண்காணிப்பில் வேலையாள்கள்தான் அவனைக் கவனித்துக் கொண்டார்கள்.. அவள் உடல்நலம் சரியில்லாதவள்.. பெரும்பான்மையான நேரங்களை படுக்கையிலேயே கழித்தவள்.. அவளுக்குப் பின்னால் அவனுக்கு வேலையாள்கள் எல்லா வேலைகளையும் சரிவரச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்கக் கூட ஆளில்லாமல் வளர்ந்தவன் அவன்.. நளினியின் தாய் சித்ரலேகா மனதளவில் தளர்ந்திருந்தாள்.. அவளால் வேலை செய்ய முடியவில்லை..
அகல்யா அவனுக்கு ஒரு நாளும் பரிமாறியதில்லை.. அவளைச் சொல்லிக் குற்றமில்லை.. அவள் பெற்ற பிள்ளைகளுக்கே அவள் தட்டை எடுத்துப் போட்டு பரிமாற மாட்டாள்..
தன்னைத்தானே கவனித்துக் கொண்டு வளர்ந்தவன் அவன்.. ஊர்மிளா அவன் வாழ்வில் வந்தபின் அவள் உணர்த்திய வாழ்வின் இனிமைகள் அனைத்திலும் கரைந்து போனான் நரேந்திரன்..
"இன்னைக்கு மொட்டை மாடியிலே சாப்பிடலாம் வர்றீங்களா..?"
"ஏன்..? டைனிங் ஹால்தான் பெஸ்ட்.. டிபன் அயிட்டங்களை இரண்டு மாடி தாண்டி.. மொட்டை மாடிக்கு கொண்டு வந்து.. உட்கார்ந்து சாப்பிட இடம் செட்பண்ணி.. சொல்லும் போதே மூச்சிரைக்குது பார்.. வேலை மெனக்கெட்டு தேவையில்லாத வேலைகளைப் பண்ணனுமா..? நமக்கு டைமும் வேஸ்ட்.."
இப்படிச் சொல்பவனை ஊன்றிப் பார்த்த ஊர்மிளாவின் விழிகளில் இருந்த ஏதோ ஒன்றில் அவன் ஈர்க்கப்பட்டன்..
"என்னடி...?"
"எல்லாத்தையுமே வார்த்தைகளால் உணர்த்தி விட முடியாது நரேன்.. அனுபவிச்சு அதை உணரனும்.. நம் காதலைப் போல..! எனக்கு உங்ககூட ஸ்பெண்ட்பண்ணும் ஸ்பெசலான நிமிடங்கள் வேணும்.. ஆஸ்திரேலியாவில் எனக்குக் கிடைத்ததைப் போல.."
இப்படிச் சொல்பவளை எப்படி மறுத்துச் சொல்வான் நரேந்திரன்..
"உன் இஷ்டம் போல செய்.." என்று சொல்லி விட்டான்..
"மொட்டை மாடியா.. ஐய்யே.." அகல்யா முகம் சுளித்து விலகி விட்டாள்..
அருண்குமாருக்கும்.. அர்ச்சனாவிற்கும் வேறு வேலைகள் இருந்ததால் அவர்களும் மொட்டை மாடிக்கு வர முடியாது என்று தயக்கத்துடன் சொல்லி விட்டார்கள்..
"நோ பிராப்ளம்.. நீயும்.. நானும் மட்டுமே சாப்பிடலாம்.. இதுகூட ஒரு ஸ்பெசல் டின்னர்தான்.." நரேந்திரன் கண்சிமிட்டினான்..
அவளுக்காக அவன் மொட்டை மாடி விருந்தை நிறுத்தாமல் தொடர்ந்ததில் ஊர்மிளாவிற்கு உவகையாக இருந்தது..
வனிதாவின் உதவியுடன் சமைத்த பதார்த்தங்களில்.. அவளுக்கும்.. நரேந்திரனுக்கும் தேவையானதை மொட்டை மாடிக்கு கொண்டு வந்து விட்டாள் ஊர்மிளா.. ரமேஷின் உதவியுடன் மடக்கு டேபிளும்.. இரண்டு சேர்களும் வந்து சேர்ந்தன..
மொட்டை மாடியின் நடுவில் அந்த டேபிளை விரித்துப் போட்டு.. அதில் வெண்மையான டேபிள் விரிப்பை விரித்து.. சமைத்த பதார்த்தங்களை வைத்திருந்த மூடியிட்ட பாத்திரங்களை பரத்தி வைத்தாள் ஊர்மிளா..
இரண்டு பக்கமும் எதிரெதிரே சேர்கள் போடப் பட்டன.. டேபிளின் மையப் பகுதியில் மலர்க் கொத்துக்களுடன் பூஜாடி..
அதிகமாக மெனக்கெடாமல் அழகாக டேபிள் தயாராகிவிட்டது.. கம்பெனியிலிருந்து திரும்பி வந்த நரேந்திரன்.. குளித்து உடைமாற்றி புத்துணர்வுடன் மாடிக்கு வந்து பார்த்து விட்டு..
"வாவ்.." என்று ரசனையாக சொன்னான்..
சிலுசிலுவென வீசிய இயற்கைக் காற்று உடல்மீது படிந்து தழுவுவதை கண்மூடி அனுபவித்தவன்..
"நீ சொன்னது உண்மைதான ஊர்மி.." என்றான்..
"நானென்ன.. ஒன்னு ரெண்டையா சொல்லி யிருக்கேன்..? எக்கச்சக்கமா சொல்லியிருக்கேன்..
அதில எதை நீங்க சொல்கிறீங்கன்னு தெரியலையே.." ஊர்மிளா அவனுக்கு எதிரே உட்கார்ந்து டேபிளில் கையூன்றி அதில் முகத்தைப் பதித்தபடி சொன்னாள்.. அவள் முகம் ஆஸ்திரேலியாவில் அவர்கள் இருந்த போது ரகசியச் சிரிப்புடன் அவனை நோக்கிய அந்த நாள்களில் அவன் பார்த்த முகமாக மாறியிருந்தது...
சன்னமான விளக்கு வெளிச்சம் மட்டும் ஒளிர்ந்த அந்த பரந்த மொட்டை மாடியில்.. அவனும்.. அவளும் மட்டும் இருந்த அந்தச் சூழல் அவனைக் கவர்ந்தது.. ஸ்திரேலியாவில் அப்படித்தான் இருந்தார்கள்.. பெங்களூர் வந்ததும் லேசாக அது குறைந்திருந்தது..
அழகான அவனது மனைவியை ஊன்றிப் பார்த்தான்.. ஊர்மிளா சன்னக் கரையிட்ட ஷிபான் சேலையை உடுத்தியிருந்தாள்.. அதற்குப் பொருத்தமான ஜாக்கெட்.. தலைமுடியை தளர்வாக பின்னலிட்டிருந்தாள்.. நீண்ட வைர முகப்புடன் கூடிய தங்கச் சங்கிலியை சேலையின் மீது போட்டிருந்தாள்.. கனத்த தங்கத்தாலிச் சரடு.. சேலையின் உள்ளே மறைவாக இருந்தது.. காதில் வைரக் கம்மல்.. கைகளில் இரு வளையல்கள்.. கண்களில் மட்டும் அவனுக்கான.. அவனிடம் மயங்கிய மயக்கத்தை உணர்த்தும் பிரத்யேகப் பார்வை..
அதிகமான ஒப்பனையோ.. அலங்காரமோ இல்லை.. அவள் போட்டிருந்தது வைர அணிகலன்கள் என்றாலும்.. அவற்றை அதிகமாக அவள் சுமக்கவில்லை.. அளவாக.. அழகாக.. போட்டிருந்தாள்..
மொட்டவிழ்ந்து மணம் பரப்பிய மல்லிகை மலரின் வாசனை அவனை மயக்கியது.. அவனை ஆழ்ந்து பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த அழகோவியமான அவன் மனைவியின் தோற்றம் அவனை ஈர்த்தது.. வசீகரமான அந்த இரவுப் பொழுதை மனம் விட்டு ரசித்தான் நரேந்திரன்..
"நல்லா இருக்குடி.." சுற்றிலும் பார்த்தபடி சொன்னான்..
"அப்படியா..?" லேசாக புருவங்களை உயர்த்தி இறக்கினாள் ஊர்மிளா..
"யெஸ்.. டேபிளின் மத்தியில ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி வைச்சிருந்தா.. அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் டின்னர்தான்.."
"அதுக்காகத்தான் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கல நரேன்.."
நிதானமாக சொன்னவளை புரியாமல் பார்த்தான் நரேந்திரன்..
"ஏன்டி..?"
"இது இயற்கையை அனுபவிக்கும் விருந்து.. இங்கே செயற்கை வேணாம்.. இப்ப வீசுது பாருங்க குளிர்ந்த காற்று.. இதை ஏஸி கூட கொடுத்து விட முடியாது நரேன்.. நான் ஸ்டார் ஹோட்டல் டின்னரை உங்களுக்கு அறிமுகப் படுத்த இங்கே கூப்பிட்டுக்கிட்டு வரலை நரேன்.. மூன்லைட் விருந்தை அறிமுகப் படுத்த கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கேன்.."
"மூன் லைட் விருந்தா..?"
நரேந்திரன் வியப்புடன் கேட்டான்.. அதுநாள்வரை அப்படியொரு விருந்தை அவன் உண்டதில்லை..
"ம்ம்ம்.. மூன்லைட் விருந்துதான் நரேன்.. இதை 'நிலாச்சோறு..'ன்னு எங்கம்மா சொல்லுவாங்க.."
"நிலாச்சோறு..?"
"நிலாச்சோறுதான் நரேன்.. வானத்தைப் பார்த்தீங்களா.. இன்னைக்கு பௌர்ணமி.. முழுநிலா தெரியுதில்ல.. நிலா வெளிச்சம் பட்ட பகலைப் போல அடிக்குதில்ல..."
ஊர்மிளா சொன்னபின்னால்தான் முழுநிலவை நரேந்திரன் பார்த்தான்.. அந்த முன்னிரவுப் பொழுதில் பூமியை பட்டப் பகலாக்கிக் கொண்டு முழுநிலவு தன் பவனியை துவங்கியிருந்தது..
"இதுதான் நிலா வெளிச்சம் நரேன்.."
ஊர்மிளா அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.. அது நாள்வரை நிலாவை ஒரு கோளாகக் கண்டவன்.. உற்ற நண்பனாக கண்டது அந்த இரவில்தான்..
கண்ணைக் கூச வைக்கும் செயற்கை வெளிச் சத்துக்குள் மூழ்கியிருந்தவன்.. அதிலிருந்து வெளிவந்து நிலா வெளிச்சத்தைக் கண்டு உணர்ந்தது அந்த இரவில்தான்..
காரைக் கூட இறுக மூடி வைத்து செயற்கைக் குளிரில் தன்னை வைத்திருந்தவன்.. இயற்கைக் காற்றின் குளுமையை உணர்ந்தது அந்த இரவில்தான்..
அவன் ஊர்மிளாவைக் காதலித்த காலத்தில் அவளுக்காக திருச்சியில் தங்கியிருந்தான்.. அவன் தங்கியிருந்தது ஓட்டு வீட்டிலல்ல.. நட்சத்திர ஹோட்டலில்..
ஊர்மிளாவை அவன் சந்திக்கப் போகும்போது அவள் வரச்சொல்லும் இடத்திற்கு ஏஸி காரில் போய் இறங்கி விடுவான்.. அவள் வந்து கேட்கும்போது சோர்வாக முகத்தை வைத்துக் கொண்டு பஸ்ஸீல் வந்ததாகச் சொல்வான்..
அவளருகில் இருந்தபோது அவளை கைபிடிக்க என்ன சொல்ல வேண்டும்.. அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில்தான் அவனுடைய கவனம் இருந்ததே தவிர.. சுற்றுப்புற இயற்கையழகை ரசிக்க வேண்டும் என்பதில் அவனது கவனம் இருந்ததில்லை..
அவனது கவனத்தை இயற்கையின் மீது திருப்பி விட்டவள் ஊர்மிளாதான்.. பெங்களூரில் கம்யூட்டர் கம்பெனிகள் மட்டுமே இருக்கவில்லை.. பூங்காங்களும் இருக்கின்றன என்பதை அவள்தான் அவனுக்கு உணர்த்தி விட்டாள்..
"எப்பப் பார்த்தாலும் மெஷின்கூடவே மல்லுக்கட்டிக் கிட்டு இருக்கனும்னு அவசியமில்லை நரேன்.. கொஞ்சம் செடி கொடிகளின் மீதுகூட உங்க பார்வையைத் திருப்பலாம்.."
கிண்டல் போலச் சொல்லி.. அவனை இயற்கையை ரசிக்க வைத்தாள்.. தினந்தோறும் ஒரு பூங்கா என்று அவனுடன் விரல் கோர்த்து அங்கே உலா வந்தாள்.. அப்படி வரும் போது அவள் காட்டும் செடிகளையும்.. பூக்களையும்.. பறவைகளையும் ஊன்றிப் பார்க்கும் நரேந்திரனுக்கு இவை இருந்த பூமியில்தான் இத்தனை நாளும் அவனிருந்தானா என்ற கேள்வி நெஞ்சில் எழுந்தது..
செடிகளையும்.. பூக்களையும்.. பறவைகளையும் அவனுக்கு அறிமுகப் படுத்திய ஊர்மிளாதான் நிலா வெளிச்சத்தையும்.. அதில் நனைந்தபடி உண்ணும் நிலாச்சோற்றையும் அவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்..
"எங்க வீட்டில ஒவ்வொரு பௌர்ணமியிலேயும் நாங்க நிலாச்சோறு சாப்பிடுவோம் நரேன்.. அம்மா ராத்திரி சாப்பாட்டை மொட்டை மாடிக்கு கொண்டு வந்திடுவாங்க.. பட்டப் பகல்போல் வீசும் நிலா வெளிச்சத்தில நாங்க நிலாச்சோறு சாப்பிடுவோம்.. அதை வார்த்தைகளில் சொல்லி விட முடியுமா..?"
கடந்த காலத்தின் நினைவுகளை அவனிடம் பகிர்ந்து கொண்டாள் ஊர்மிளா.. அதை கவனமாக கேட்டுக் கொண்ட நரேந்திரன்..
"எனக்கு இதெல்லாம் தெரியாதுடி.. அம்மா எனக்கு சர்வ் பண்ணினாலே அதிசயம்.. அவங்க பேசண்ட்.. பெட் ரெஸ்டிலேயே இருப்பாங்க.." என்று வருத்தத்துடன் சொன்னான்..
"அப்பா..?" சட்டென்று கேட்டு விட்டாள் ஊர்மிளா..
அவளை நிமிர்ந்து பார்த்த நரேந்திரனின் விழிகள் பளபளத்தன.. அது எதற்காக என்று குழம்பிப் போனாள் ஊர்மிளா.. அவனுடைய தாய் கோடிஸ்வரி என்று அவனே அடிக்கடி சொல்லியிருக்கிறான்.. அப்படிப்பட்ட வசதி படைத்த மனைவியுடன் நரேந்திரனின் அப்பா தனது நேரத்தை செலவளித்திருப்பார்தானே..
நரேந்திரனின் அம்மா எப்படிப்பட்டவள் என்று அவளுக்குத் தெரியாது.. அவள் எப்படிப்பட்டவளாக இருந்திருந்தாலும் அகல்யாவை விடவும் குறைவான குணங்களைக் கொண்டவளாக இருந்திருக்க மாட்டாள் என்பதில் அவளுக்கு நிச்சயம் இருந்தது..
"இல்லை.. அம்மா உயிரோடு இருந்தபோது அப்பா எப்போது வீட்டுக்கு வருவார்.. எப்போது போவார்ன்னு யாருக்குமே தெரியாது.. அம்மா போனபின்னாலே, அவர் வீட்டுக்கு வருகிறது நின்னு போச்சு.."
"வாட்..?"
கோர்வையாக பேசிக் கொண்டிருந்த நரேந்திரனின் வார்த்தைகளை ஊர்மிளாவின் ஆச்சரியமான கேள்வி வேகத்தடையைப் போட்டது..
"என்ன சொல்கிறீங்க நரேன்..? உங்கப்பா வீட்டுக்கு வருகிறது நின்னு போச்சுன்னா.. எனக்குப் புரியலையே.. இந்த வீட்டில்தானே நீங்களும்.. அத்தையும் இருந்தீங்க..?"
"இல்லை..." வறண்ட குரலில் பதில் சொன்னான் நரேந்திரன்..
"நானும்.. அம்மாவும் இந்த வீட்டில் இருந்ததில்லை.. இது புதிதாக நான் வாங்கிய வீடு.. இன்னும் சொல்லப் போனா.. அப்பா செகண்ட் மேரேஜ் பண்ணின பின்னாலே.. சித்தியுடன் இந்த வீட்டில் குடும்பம் நடத்தலை.. அவர் தனிக் குடித்தனமாக வாடகை வீட்டில்தான் இருந்தார்.. அதிக வாடகை கொடுத்த பங்களா டைப் வீடு.. அங்கேதான் அருண்குமாரும்.. அர்ச்சனாவும் பிறந்தாங்க.. அந்த வீட்டில் நான் இருந்ததில்லை..."
"நீங்க எங்க இருந்தீங்க..?"
"என் அம்மாவோட வீட்டில்.. அதாவது எனக்கு மட்டும் சொந்தமான.. எனக்கு உரிமையான வீட்டில் இருந்தேன்.."
"அப்படின்னா.. உங்க அப்பாகூட எப்ப வந்து சேர்ந்தீங்க..?"
"இல்லை ஊர்மிளா.. என்னால அப்பாவை மன்னிக்க முடியலை.. என் அம்மா இறந்தவுடன் என் அப்பா செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு வீட்டை விட்டு வெளியேறியதை என்னால ஏற்றுக்க முடியலை... அவர் உயிரோடு இருந்தவரைக்கும் நான் அவரைச் சேர்த்துக்கவே இல்லை.. கம்பெனியில ஒரு வொர்க்கரா அவர்
இருந்தார்.. அதுக்கான சம்பளத்தை வாங்கிக் கிட்டார்.. அதில்தான் அவர் குடும்பம் நடத்தியிருக்கனும்.. ஆனா.. கோடிஸ்வரன்னு பொய் சொல்லி சித்தியை செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாருல்ல..? அதை மெயிண்டெயின் பண்ண கடன்மேல் கடனா வாங்கி கடனாளியாகி அதை வெளியே சொல்ல முடியாம மனசுக்குள்ளேயே வைத்துப் புழுங்கி.. ஒருநாள் அவரும் போய் சேர்ந்துட்டார்.."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -54
அழகான ராட்சசியே -54
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye54.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye54.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy