அழகான ராட்சசியே -67

67 த றி யாக என்மனதை.. காதலிலே நெய்து விட்ட அழகான ராட்சசி நீ.... "எனக்கென்னவோ நீ கன்சீவ் ஆகியிருக்கிற மேட்டரை உன் ஹஸ்பெண்...


67
றியாக என்மனதை..
காதலிலே நெய்து விட்ட
அழகான ராட்சசி நீ....


"எனக்கென்னவோ நீ கன்சீவ் ஆகியிருக்கிற மேட்டரை உன் ஹஸ்பெண்டுக்கு இன்பர்ம் பண்ணிடனும்னு தோணுது ஊர்மிளா.."
ராதா யோசனையுடன் சொன்னாள்.. பூங்காவின் பூச்செடிகளின் அழகில் மனம் லயிக்காமல் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஊர்மிளாவின்
விசனம் தோய்ந்த முகத்தைப் பார்த்தபோது அவள் மனதை பிசைந்தது..
"சின்ன மேட்டர்.. ஊதி ஊதிப் பெரிசாகிட்டு இருக்கு.. நீ புத்திசாலிதானே.. இதைப் போல சிக்கல்களை இழுத்து விட்டுக் கொள்ளலாமா ஊர்மிளா..?"
ராதா இதமாக அறிவுரை சொன்னாள்.. பொதுவாக அவள் தனி மனித சுதந்திரங்களைப் பேணுபவள்.. மற்றவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதவள்.. அப்படிப்பட்டவளாலேயே ஊர்மிளாவின் வேதனையைப் பார்த்துக் கொண்டு எனக்கென்ன என்று இருக்க முடியவில்லை..
"இல்லை ராதா..." ஊர்மிளா சோர்வாக தலையசைத்தாள்..
"நான் இதைப்பற்றிச் சொல்லனும்னா நரேனிடம் பேசனும்.. அவருக்கு இது தெரிய வந்ததுன்னு வைய்யி.. இந்தம்மா என் பிள்ளையைக் காட்டி அவரை வசியம் பண்ணி வைச்சுட்டேன்னு சொல்லும்.. அந்த வார்த்தைகளைக் கேட்க என்னால் முடியாது.."
துயரத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்ட ஊர்மிளாவின் மனதை ராதாவினால் புரிந்து கொள்ள முடிந்தது..
ஊர்மிளா அவள் மீதான அவளது கணவனின் அக்கறை எப்படிப்பட்டது என்பதை அறியத் துடிக்கிறாள்.. யார் என்ன சொன்னாலும்.. அவன் நம்ப மாட்டான்.. ஊர்மிளாவை மட்டுமே நம்புவான் என்ற அவளது நம்பிக்கை பொய்த்துப் போய் விடக்கூடாது என்று தவிக்கிறாள்... அவளுக்கென்று அவன் மனதில் இருக்கும் இடம் எத்தகையது என்பதை அகல்யாவின் முன்னால் அவள் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்..
ஒரு மனைவியாக கணவனிடம் பேசுவதையே.. உன் கணவனிடம் நீ போனில் கொஞ்சிக் குழாவாமல் இருந்தால் போதும்.. அவன் நிச்சயமாக உன்னைப்
பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று சவால் விட்டிருப்பவள்.. இப்போது ஊர்மிளா தாய் மையடைந் திருக்கும் விவரத்தை கணவனிடம் தெரியப்படுத்துவதை அறிந்து விட்டால்.. குழந்தையைக் காட்டி நரேந்திரனை தன்பக்கம் இழுக்க ஊர்மிளா முயற்சி செய்வதாக சொல்லி விட மாட்டாளா..?
"அவர் எனக்காக பேசனும் ராதா.. என் கொஞ்சலுக் காகவோ.. என் வயிற்றிலிருக்கும் அவரின் பிள்ளைக் காகவோ பேசக்கூடாது.. அவருடைய ஊர்மிளாவுக்காக பேசனும்.. அதுதான் அவரோடு நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு மரியாதையை கொடுக்கும்.. உலகமே சேர்ந்து வந்து சொன்னாலும் என் புருசன் நம்ப மாட்டார்.. என்னைக் கேள்வி கேட்க மாட்டார்ன்னு நான் சொன்னதும் அந்தம்மா சிரிச்சுச்சே ஒரு சிரிப்பு..! அந்தச் சிரிப்பை ஆயுளுக்கும் என்னால மறக்க முடியாது ராதா.. அந்தச் சிரிப்பை எதிர்த்து நிற்கனும்.. நரேனின் மனதில் என்மேல எந்த அளவுக்கு ஆழமான நம்பிக்கை இருக்குன்னு அந்தம்மாவுக்கு நிருபிச்சுக் காட்டனும்ன்னு என் மனசில கிளம்புச்சே ஒரு வெறி..! அதைப் பத்தி வார்த்தையில சொல்ல முடியாது ராதா.."
ஊர்மிளா குமுறினாள்.. ராதா தோழியின் கையைத் தட்டிக் கொடுத்தாள்.. அருகிலிருந்த சறுக்கு மரத்தில குழந்தைகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. ஊர்மிளாவின் மனநிலையை மாற்ற விரும்பிய ராதா அதை ஊர்மிளாவுக்குச் சுட்டிக் காட்டினாள்..
"நாளைக்கு உன் குழந்தையும் இது போல விளையாடுமில்ல..?"
ராதாவின் திட்டம் பலித்தது.. ஊர்மிளாவின் முகம் மலர்ந்தது.. அவளது முகம் விகசித்தது.. தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்..
"குழந்தை யார் சாயலில் இருக்கும்ன்னு நினைக்கிற..?"
"நரேன் சாயலில் இருக்கனும்னு ஆசைப்படறேன்.."
ஊர்மிளாவின் வார்த்தைகளில் தோய்ந்திருந்த காதலில் கவரப்பட்டாள் ராதா.. அவளும் ராபிட்சனைக் காதல் திருமணம் செய்து கொண்டவள்தான்.. ஆனால்.. இந்த அளவுக்கு காதலை அவள் உணர்ந்ததில்லையே..
ராபிட்சனும் அவளும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தார்கள்.. இந்தியாவிலிருந்து நியுயார்க் போயிருந்த ராதாவுக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல் வந்து விட்டது.. ராபிட்சன் அவளைக் கவனித்துக் கொண்டான்.. அவனது இதமான கவனிப்பு நோயுற்றிருந்த சமயத்தில் ராதாவுக்கு ஆறுதலாக இருந்தது.. உடல் தேறிய பின்னால் அவர்களுக்குள் ஓர் இறுக்கமான நட்பு உருவாகியது.. சோர்ந்து பேசிய பொழுதுகளில் அவர்களின் எண்ணங்களும்.. ரசனைகளும் ஒரே அலை வரிசையில் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்..
"நாம் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது..?"
ராபிட்சன் ஒருநாள் கேட்டான்.. ஏன் கூடாது என்று ராதாவிற்கும் தோன்றி விட்டது.. அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.. ராபிட்சனுடனான அவள் வாழ்வு இனிமை நிறைந்ததாக இருந்தது.. வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் ராதாவின் சுதந்திரப் போக்கை வெகு இயல்பாக எடுத்துக் கொண்டான்.. அவளுக்கு மரியாதை கொடுத்தான்.. அவர்களுடைய வாழ்வில் ஓர் புரிதல் இருந்தது..
ஊர்மிளாவின் வாழ்வில் அது இருக்கிறதா என்று ராதாவிற்குத் தெரியவில்லை.. கணவன், மனைவிக்கு இடையில் அதித காதல் இருக்கிறதோ இல்லையோ.. புரிதலும், நம்பிக்கையும், மரியாதையும் இருக்க வேண்டும்.. அவை இருக்கின்றனவா இல்லையா என்று தெரியாமல் ஊர்மிளாவே தத்தளிக்கும் போது ராதா என்ன கருத்தைச் சொல்லி விட முடியும்..?
"நரேன் வருவார் ராதா.. நான் அவருக்காகத்தான் காத்திருக்கிறேன்.. அவர் வந்ததும் அந்தம்மா என்னைப் பேசிய பேச்சையும்.. படுத்திய பாட்டையும்.. அவர் தோள் மேல சாய்ந்து சொல்லி அழுவேன்.. அந்தம்மாவோட அக்கிரமமான பேச்சுக்கு ஒரு முடிவைக் கட்டுவேன்.. ராதா வந்ததை ராதாகிருஷ்ணன் வந்ததா உங்க
சித்தி சொன்னாங்கன்னு சொல்லுவேன்.. என் நரேன் கேட்பார் ராதா.. வீட்டிலிருக்கிற அத்தனை பேரையும் நிறுத்தி வைச்சு அந்தம்மாவை கேள்வி கேட்பார்..
நான் இல்லாதப்ப என் பெண்டாட்டியை எப்படி நீங்க தேவையில்லாம பேசலாம்ன்னு கேட்பார்.. ஏன் அவளோட செல்போனை எடுத்து வைத்துக்கிட்டு விளையாட்டுக் காட்டினீங்கன்னு கேட்பார்.. எதுக்காக ராதாவை ராதாகிருஷ்ணன்னு சொன்னீங்கன்னு கேட்பார்.. கண்டிச்சு வைப்பார்.. அதுக்கப்புறம்தான் நான் என் வயிற்றில் வளரும் அவரோட குழந்தையைப் பத்திச் சொல்லுவேன் ராதா.. அதுவரைக்கும் சொல்ல மாட்டேன்.."
ஊர்மிளா உறுதியாக சொல்லி விட்டாள்.. அவள் இந்த அளவுக்கு வைராக்கியம் காட்ட வேண்டுமா என்று ராதாவுக்குத் தோன்றியது.. எப்போதுமே ஊர்மிளா உணர்வு பூர்வமானவள்.. ராதாவைப் போல அறிவுபூர்வமாக எந்த ஒரு நிகழ்வையும் எடுத்துக் கொள்ள மாட்டாள்.. ஆவேசப் படுவாள்.. அதை அலட்சியப் படுத்திவிட்டுக் கடந்து செல் என்று ராதா சொல்லுவதை காதில் போட்டுக் கொள்ள மாட்டாள்..
"இதையெல்லாம் ஈஸியாக எடுத்துக்கிட்டுப் போயிடனும்.. நீ எதையும் சீரியஸா எடுத்துக்கற.. உன்னோட இந்த சென்சிடிவ் குணத்தைத்தான் உன் மாமியார் பிளஸ் பாயிண்டா எடுத்துக்கிட்டு இருக்கு.. இப்படி ஒரு கேம் விளையாடற தைரியத்தை உன்னோட இந்த ரோசம்தான் அந்த லேடிக்கு கொடுத்திருக்கு.. இதை ஏன் நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற..?" சிறு குழந்தைக்கு எடுத்துச் சொல்வதைப் போல சொன்னாள் ராதா..
நட்பு என்பது எது..?
உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவது.. துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்ப்பது.. துயரம் வந்த போதிலே, சாய்ந்து கொள்ள தோள் கொடுப்பது.. இவை அனைத்திலும் மேலாக மதியூக மந்திரியைப் போல ஆலோசனை சொல்வது..
ராதா அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்.. பெங்களூரில் இருக்கும் அவளது கம்பெனியின் கிளையில்  பணி புரிய டெபுடேசனில் வந்தவள் அவள்.. தாய் நாட்டில் சில நாள்கள் இருக்கலாம்.. அதேசமயம் விடுமுறை என்று சம்பளத்தை இழக்காமல் வேலையும் செய்யலாம் என்ற கணக்கீடுடன் பெங்களூரில் வசிக்கும் தோழியைத் தேடி வந்தவள்..
எதையும் அறிவு பூர்வமாக கணக்கிட்டு அணுக வேண்டும் என்று ராதா எடுத்துச் சொல்லிப் பார்த்து ஓய்ந்து போனாள்..
ஊர்மிளா நரேந்திரனுடன் போனில் பேசவும்.. அவள் தாய்மை அடைந்திருக்கும் விவரத்தைச் சொல்லவும் மறுத்துவிட்டாள்..
"இது எனக்கும் அந்தம்மாவுக்குமான சவால் ராதா.. நான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு கேள்வியில் நிறுத்தி வைச்சிருக்கு அந்தம்மா.. இதை ஜெயிச்சுக் காட்டாம.. என் வயிற்றில் இருக்கும் அவரோட குழந்தையைப் பற்றி நான் அவருக்குச் சொல்ல மாட்டேன்.."
"முட்டாளாடி நீ.."
"முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்.. ஊர்மிளா வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காட்டி புருசனை வசியம் பண்ணிக்ட்டா.. இல்லேன்னா அவர் அகல்யாவோட பேச்சைக் கேட்டுக்கிட்டு ஊர்மிளாவைப் பார்த்து கேள்வி கேட்காம இருந்திருக்க மாட்டார்ன்னு நாளைபின்னே ஒரு சொல் வந்துரக்கூடாது.."
"போடி.. நீயும் உன் சொல்லும்.."
ராதா தோழியின் மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.. அவளின் சிந்தனைகள் வேறு விதமானவை.. ஊர்மிளாவின் மனதில் அதைத் திணிக்க என்றுமே அவள் முற்பட்டதில்லை..
நேர்மையின் மறு வடிவமாக.. தவறை கண்டால் பொங்கும் ரௌத்திரம் கொண்டவளாக இருக்கும் ஊர்மிளாவின் மனதுக்குள் இருக்கும் ஆழ்ந்த பாசமும்.. நேசமும் காணக் கிடைக்காதது என்பதை ராதாவும்.. அமிர்தாவும் மிக நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்.. அதனால்தான்.. மேல்நிலைக் கல்விக்குப் பின்னர் மூவரும் மூன்றுவகையான படிப்புகளில்.. மூன்று திசைகளில் திரும்பிப் பயணித்தாலும்.. அவர்களுக்கு நடுவில் இருந்த நட்புப் பயிரை வாட விடாமல் தண்ணீர் ஊற்றி வளர்த்து மரமாக்கினார்கள்..
அமிர்தா மருத்துவராகி விட்டாள்.. ராதா என்ஜினியராகி விட்டாள்.. ஊர்மிளா ஆசிரியை வேலைக்குப் படித்து விட்டு நரேந்திரனுக்கு மனைவியாகி விட்டாள்..
ஆனாலும்.. அந்த மூன்று தோழிகளின் மனதிலும் இருந்த நட்பு இடம் பெயரவே இல்லை.. மாறாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டு ஒருவரையொருவர் நலம் விசாரித்து.. தோள் தாங்கி.. அரவணைத்துக் கொண்டிருந்தது..
ராதா தன் தோழியை பிரியத்துடன் பார்த்தாள்.. ஊர்மிளாவின் முகத்தில் பிரதிபலித்த துயரத்தில் அவள் மனம் துயரம் கொண்டது.. யுகம்.. யுகமாக.. பெண்குலம் அனுபவித்து வரும் அத்தனை துயரங் களையும் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்ததைப் போல ஊர்மிளாவின் துயரம் இருந்ததில் ராதாவின் மனதில் வருத்தம் வந்தது..
"எனக்காக அவர் இல்லையா ராதா..?" ஊர்மிளா தவிப்புடன் கேட்டாள்..
"லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவ கேட்கிற கேள்வியாடி இது..?" சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள் ராதா..
"இல்லை ராதா.." சோகையாக தலையாட்டி அதை மறுத்தாள் ஊர்மிளா..
"எனக்கும் அவருக்கும் நடுவில் இத்தனை நாளாய் இருந்தது காதலில்லை ராதா.. அவர் பாரின்ல இருந்து வந்ததும்.. என் நம்பிக்கையைக் காப்பாத்த என்னைப் பார்த்து எதையும் கேட்காம கைநீட்டி என்னை அணைச்சுக்குவாரு பாரு.. அதுதான் காதல்..! செய்வாரா ராதா..? என் நம்பிக்கையைக் காப்பாத்துவாரா..?"
ஊர்மிளாவின் உயிர் துடிப்பதை ராதாவால் உணர முடிந்தது.. அவளால் தோழிபடும் துயரத்தைப் பார்க்க முடியவில்லை.. எதுவுமே இல்லாமல் காட்டுத்தீயைப் போல பூதாகரமான பிரச்னைகளைக் கிளப்பி விட முடியும் என்பதை அகல்யாவைப் பார்த்த பின்னால்தான் ராதாவே தெரிந்து கொண்டிருக்கிறாள்..
வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் அவளுக்கே அகல்யாவின் நடவடிக்கை ஆத்திரத்தை உண்டு
பண்ணும் போது.. அதற்குள் சிக்கியிருக்கும் ஊர்மிளாவிற்கு எப்படியிருக்கும்..?
கருத்துச் சொல்வதும்.. அறிவுரை சொல்வதும் யார்க்கும் எளிது.. சொன்ன கருத்தையும்.. அறிவுரையையும் மனதில் வைத்து அதன்படி நடப்பது சொல்பவர்க்கே சிரமம் தரும் ஒன்று..
ராதா அமைதியாகி விட்டாள்.. நரேந்திரனிடம் அவள் போன் பண்ணி நடந்து கொண்டிருக்கும் அகல்யாவின் சில்மிசங்களையும்.. ஊர்மிளா தாய்மை அடைந்திருப் பதையும் சொல்லலாம்தான்.. அதை ஊர்மிளா எதிர்பார்த் திருந்தவளைப் போல முன்னெச்சரிக்கையாக தோழியை தடை செய்து விட்டாளே..
"ராதா நீ நரேனுக்கு போன் பண்ணி விடக்கூடாது.."
"ஏய்ய்.. உன் ஹஸ்பெண்ட் எனக்கு பிரதர்டி.."
"அடச்சீ.. நான் அந்த மீனிங்கில் சொல்லலை.. அது உனக்கும் தெரியும்.. பேச்சை மாத்த டிரை பண்ணாதே.."
"என்னதாண்டி உன் பிராப்ளம்..?"
"நீ சொன்னதினாலதான் அவர் என்னை கேள்வி கேட்காம விட்டார் என்ற பெயர் எனக்கு வரக்கூடாது.. என் வாழ்க்கை உன் சிபாரிசில் வந்ததா இருக்கக் கூடாது.. அவர் என்னைப் பத்தி என்ன நினைக்கிறார்.. அந்தம்மாவுக்கும் எனக்குமான சவாலில் என்னை ஜெயிக்க வைப்பாரா.. இதையெல்லாம் நான் தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்.."
ஊர்மிளா உறுதியாக நின்றாள்.. ஒரு வகையில் அவளது அந்த உறுதியில் நியாயம் இருப்பதாகவே ராதா நினைத்தாள்..
இந்த அளவுக்கு அகல்யா போகத் துணிந்திருக்கும் போது.. ஊர்மிளா அதை எதிர்கொண்டு.. அவளின் இருப்பிடம் எத்தனை உறுதியானது என்பதை நிரூபித்துத் தானே ஆகவேண்டும்..?
ஊர்மிளா ஜெயிப்பாளா.. இல்லை தோற்பாளா..?
இவை இரண்டும் நரேந்திரன் ஒருவனின் கையிலேயே இருந்தன..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -67
அழகான ராட்சசியே -67
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-67.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-67.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy