அழகான ராட்சசியே -63

63 என் விரலோடு விரல் பிணைந்தும்.. விரல்விட்டு நகர்ந்து விட்ட.. அழகான ராட்சசி நீ.... ராதாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் ஊர்மிளாவின...


63
என் விரலோடு விரல் பிணைந்தும்..
விரல்விட்டு நகர்ந்து விட்ட..
அழகான ராட்சசி நீ....

ராதாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் ஊர்மிளாவின் மன ரணம் கொஞ்சம் கொஞ்சம் ஆறுவதைப் போல இருந்தது..
ராதாவும்.. அமிர்தாவும்.. ஊர்மிளாவின் பள்ளிப் பருவ தோழிகள்.. எல்.கே.ஜியிலிருந்து பிளஸ் டூ வரை ஒரே செக்சனில்.. ஒரே பள்ளியில்.. ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் படித்தவர்கள்.. அவர்கள் மூவருக்கும்..
'மூவர் குழு..'
என்று பள்ளியில் பட்டப் பெயரே இருந்தது.. பிளாஸ் டூ முடித்தவுடன் அமிர்தா தஞ்சை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.. ராதாவோ.. சென்னை ஐ.டி.ஐயில்  என்ஜினியரிங் படிக்கப் போய் விட்டாள்.. ஆசிரியை வேலையில் ஆர்வமுள்ள ஊர்மிளா பட்டப் படிப்பில் காலடி வைத்தாள்.. அங்கே வீணா போல பல தோழிகள் கிடைத்தாலும்.. எவராலும் அமிர்தா, ராதாவின் இடத்தை இட்டு நிரப்ப முடியவில்லை..
அந்த மூன்று தோழிகளுக்கும் இடையே நிலவிய நட்பு ஆத்மார்த்தமானது.. அருமையானது.. ஆழமானது..
ஒரு கண்ணில் அடிபட்டால் மறு கண்ணுக்கு வலிக்கும்.. இங்கேயோ.. ஒருத்திக்கு அடிபட்டால்.. மற்ற இருவருக்கும் வலிக்கும்.. அப்பேற்பட்ட நட்பு அவர்களுடைய நட்பு...
அவ்வளவு நெருக்கமான தோழி.. வெளி நாட்டிலிருந்து ஊர்மிளாவைப் பார்ப்பதற்காக வந்திருக் கிறாள் எனும் போத அவளுக்கான சிறப்பான வரவேற்பை ஊர்மிளா தர வேண்டாமா..? அது அவள் வாழும் வீடல்லவா..? அங்கே அவளுடைய தோழியை உபசரிக்கும் உரிமையும், கடமையும் அவளுக்கு இருக்கிறதல்லவா..?
இந்த நினைவில்தான் ஊர்மிளா ராதாவுக்காக விருந்து சமைக்கச் சொன்னாள்.. அவளுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி சாப்பிட்டாள்.. ராதாவுடன் அன்றைய பொழுதைக் கழித்தாள்..
"இங்கே.. நம்ம வீட்டிலேயே தங்கிக்கடி ராதா.. நான் உனக்கு ஊரைச் சுற்றிக் காட்டறேன்.." ஊர்மிளா சொல்லிப் பார்த்துவிட்டாள்..
"இல்லைடி.. இங்கே என்னோட ஆண்ட்டி வீடு இருக்கு.. வந்தவுடன் உன் வீடு எங்கேயிருக்குன்னு தெரியாம அங்கே ஸ்டே பண்ணிட்டேன்.. இப்பக் கிளம்பி வந்தா.. சரியாயிருக்காது.." ராதா மறுத்து விட்டாள்..
"நியுயார்க்கிலேயே செட்டிலாகிட்டயா..?"
"ம்ம்ம்.. அங்கே சிட்டிசன்ஷிப் கிடைச்சிருச்சு.."
"எப்படி..?"
"அங்கே சிட்டிசனா இருக்கிறவரை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.."
இலகுவாக் சொல்லி விட்டு ராதா சிரித்தாள்.. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் அவளது தன்மையில் ஊர்மிளாவுக்கு ஏக்கமாக இருந்தது.. இதைப் போல அவளால் ஏன் இருக்க முடியவில்லை.. நடக்க இயலாமல் கால்களில் இரும்புக்குண்டைக் கட்டி விட்டதைப் போல தளைகளால் அவளை சிறை படுத்தியது யார்..?
"ராபிட்சன் இஸ எ வெரி குட் மேன்.. எ பெண்டாஸ்டிக் ஹஸ்பெண்ட்.." ராதா சொல்லிக் கொண்டே போனாள்..
வெள்ளைக்காரரை திருமணம் செய்து கொள்வதில் இந்த அளவுக்கு சந்தோசம் கொள்ள முடியுமா என்று ஊர்மிளா யோசித்தாள்..
காதலுக்கு நாடேது.. மொழியேது.. மதமேது.. இனமேது..?
"அப்பா எப்படியிருக்கிறார்..?"
வாஞ்சையுடன் விசாரித்தாள் ராதா.. அவளை சோமசுந்தரத்திற்கு மிகவும் பிடிக்கும்.. ராதா ஒரு வகையில் பொதுவுடைமை வாதி.. சோமசுந்தரத்திடமிருக்கும் தடித்தடியான கனம் மிகுந்த புத்தகங்களை அவள் பள்ளிப் பருவ நாள்களிலேயே விரும்பிப் படிப்பாள்.. ஊர்மிளாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சோமசுந்தரம் ஆற்றுகிற சொற்பொழிவை உன்னிப்பாக கேட்பாள்..
மற்றவர்களிடமிருந்து ராதா வித்தியாசப்பட்டவளாக இருந்தாள்.. கழுத்து.. கை.. காதுகளில் நகை அணிய மாட்டாள்..
"நகைங்கிறதும் ஒரு வகையில் பெண்களை அடிமை செய்ய உபயோகப்படுத்தும் தளைதான்.." என்பாள்..
என்ஜினியரிங் படித்து விட்டு.. முதலாளித்துவத்தின் ஒட்டு மொத்த பிறப்பிடமான நியுயார்க்கில் ஒரு மல்ட்டி இண்டர்நேசனல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து லட்சம்.. லட்சமாய் சம்பாதிப்பவள்.. அங்கேயே பிறந்து வளர்ந்த வெள்ளைக்கார ராபிட்சனைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறவள் சோசலிசத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதில் ஊர்மிளாவுக்குள் ஆச்சரியம் வந்தது.
ராதாவுடன் பேசும்போது அவளுக்கு சோம சுந்தரத்துடன் பேசுவதைப் போலவே இருந்து வைத்ததில்.. அவள் இருட்டும் வரை தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. இருட்டிய பிறகு கிளம்பியவளை காரில் விட்டுவிட்டு வரச்சொல்லி ரமேஷிடம் சொன்னாள்..
"உன் அப்பா உன்னைக் கொடி பிடிக்கிற வருக்குத்தான் மேரேஜ் பண்ணி வைப்பாருன்னு நினைச்சேன்.. நீ என்னடான்னா முதலாளித்துவத்தின் முதல் படியிலே நிற்கிற.." ஆங்கிலத்தில் சொன்னாள் ராதா..
அதை ரசித்துச் சிரித்தாள் ஊர்மிளா.. தோழியின் கைவிரல்களோடு தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டாள் ராதா.. அவர்களின் அன்பில் ஆச்சரியப்பட்ட அர்ச்சனாவிடம்..
"உன் அண்ணியை நியுயார்க்குக்கு கடத்திக்கிட்டுப் போகப் போறேன்.." என்றாள்..
"நீ என்னடி கடத்தறது..? நானே உன்கூட ஓடி வந்து விடமாட்டேனா..?" ஊர்மிளா சொன்னாள்..
மறுநாள் வருவதாக சொல்லி விட்டு ராதா கிளம்பிப் போனவுடன் தள்ளி நின்ற தனிமையுணர்வும், வெறுமையும் ஊர்மிளாவைச் சூழ்ந்து கொண்டன..
'அடடா..! புது போன் வாங்கனும்னு கிளம்பியவ அதை மறந்திட்டேனே.. ராதாகிட்ட சொல்லியிருந்தா அவ நாளைக்குக் காலையிலே வரும் போது புதிதா ஒரு போனை வாங்கிட்டு வந்திருப்பாளே.. முட்டாள் போல இருந்திட்டேனே..'
ஊர்மிளாவுக்கு துக்கமாக இருந்தது.. புது போன் கூட இருக்கட்டும்.. ராதா அன்று முழுவதும் ஊர்மிளாவின் பக்கத்தில்தானே இருந்தாள்..? அவளுடைய போனை வாங்கி அதிலிருந்து நரேந்திரனுக்குப் பேசியிருக்கலாமே.. அதைக்கூட ஊர்மிளா செய்ய மறந்து விட்டாள் என்றால்.. அவளுக்கு நரேந்திரனின் மீது நினைவே வரவில்லையா..?
ஊர்மிளாவுக்கு அழ வேண்டும் போல இருந்தது.. அவள் விம்மி அழுதாள்.. நரேந்திரன் அருகில் இல்லாத தனிமையையும், வெறுமையையும்.. ராதாவின் அண்மை விரட்டுகிறது என்பதினால்தானே அவள் தோழியுடன் அன்றைய பொழுதை கழித்தாள்..?
முதல்நாளைப் போலவே இரவெல்லாம் உறக்க  மில்லாமல் கழித்து விட்டு விடியும் போது உறங்கி வைத்தாள் ஊர்மிளா..
மறுநாள் விழிக்கும் போதே.. இன்று எப்படியாவது நரேந்திரனிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணமே அவளுக்குள் தகித்தது..
ஒன்று ராதாவின் போனில் பேசிவிட வேண்டும்.. இல்லையென்றால் புதிதாக ஒரு போனை வாங்கியாவது பேசிவிடவேண்டும்..
'இதுக்கு மேலே தாங்காது..'
நரேந்திரனைப் பார்க்காமலிருப்பதே பெருங் கொடுமை.. அவன் குரலைக் கேட்கவும் முடியாமலிருப்பது கொடுமையிலும் கொடுமை.. ஊர்மிளாவுக்குள் உத்வேகம் வந்தது..
முதல்நாளைப் போல இல்லாமல் அன்று அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டதில்.. அர்ச்சனா கல்லூரிக்கு கிளம்பிப் போவதற்கு முன்னால் அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள் ஊர்மிளா..
"ஹாய் அண்ணி.."
அப்போதுதான் ஜாகிங் முடிந்து வந்த அர்ச்சனா உற்சாகமாக காலை வணக்கம் சொன்னாள்..
"என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமாவே ரெடியாகிட்டிங்க..?"
அர்ச்சனாவின் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் வாயில் வந்ததை சொல்லி வைத்தாள் ஊர்மிளா..
"என் பிரண்ட் வரேன்னு சொல்லியிருக்கா.. இன்னைக்கு அவுட்டிங் போகிறதா இருக்கோம்.. அதான்.."
வேறு என்ன சொல்ல முடியும்..? என் போன் தொலைந்து விட்டது.. என் கணவனுடன் பேச முடியாமல் நான் தவியாய் தவிக்கிறேன்.. உன்னிடம் கேட்க முடியவில்லை.. வீட்டிலிருக்கும் லேண்ட் லைனிலும் பேச முடியவில்லை.. அதானல் என் தோழியின் போனை இரவல் வாங்கிப் பேசப் போகிறேன்.. அவளுடன் போய் புதிதாக ஒரு போனை வாங்கிக் கொள்ளவும் போகிறேன்.. அந்த நினைவிலேயே இரவு முழுவதும் தூக்கமில்லாமல் இருந்ததால் அதிகாலையிலேயே நான் குளித்துத் தயாராகி விட்டேன் என்றா சொல்ல முடியும்..?
அர்ச்சனா திருமண வயதில் இருக்கும் பெண்.. அவளிடம் போய் இந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா..?
"ஓ.. அவங்க உங்களோட திக் பிரண்டா அண்ணி..?" உதடுகளைக் குவித்ததாள் அர்ச்சனா..
"ஆமாம்.." மென்மையான முறுவலித்தாள் ஊர்மிளா..
கீழே இறங்கி வந்தவளின் மனம் பரபரப்பாக இருந்தது.. நரேந்திரன் அவளுடைய கணவன் என்பது மறந்து போய் காதலனுடன் பேசத்துடிக்கும் துடிப்புடன் இருந்தாள் ஊர்மிளா.. தோழி வரும்வரை பொறுமை காக்க முடியாது என்று தோட்டத்தில் சுற்றிப் பொழுதைக் கழித்தாள்..
அவளுடைய நடமாட்டங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த அகல்யா.. அருண்குமாரைக் கண்டதும்..
"என்னவோ.. குட்டி போட்ட பூனையைப் போல இல்ல இவ தோட்டத்துக்குள்ள ரோந்து சுத்தறா.." என்று வியாக்கினம் படித்தாள்..
"உங்களுக்கு வேற வேலையே இல்லையா..?" அவன் சுள்ளென்று எரிந்து விழுந்து விட்டுச் சாப்பிடப் போய் விட்டான்..
வாசலில் கார் சப்தம் கேட்டது.. ஊர்மிளா ஓடிப் போய் பார்த்தாள்.. ராதா இறங்கிக் கொண்டிருந்தாள்..
"ஏண்டி.. இவ்வளவு நேரம்..?" என்று பரபரத்த தோழியை விசித்திரமாகப் பார்த்துவிட்டு கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள் ராதா..
அது எட்டு என்றது.. ஊர்மிளாவின் முகத்துக்கு நேரே கையை உயர்த்திக் காட்டினாள்..
"எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டேன்.. நீ என்னடான்னா ஏண்டி இவ்வளவு நேரம்ங்கிற.. என்னடி ஆச்சு உனக்கு..?"
"சும்மா.." ஊர்மிளா அசடுவழிந்தாள்..
"பொறு கால்டாக்ஸிக்கு பணத்தைக் கொடுத்துட்டு வர்றேன்.."
ராதா கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்து விட்டு தோழியுடன் நடந்தாள்.. முதல் நாள் போல ஜீன்ஸீம், தொளதொள சட்டையுமாக இல்லாமல்.. ஜீன்ஸீம், குர்தாவுமாக இருந்தாள்.. இன்று விரித்து விடப் பட்டிருந்த முடி குதிரை வாலாக ஒரு கிளிப்பில் அடங்கியிருந்தது.. மற்றபடி எப்போதும் போல பொட்டு நகையில்லாமல் இருந்தாள்..
துடைத்து விட்டதைப் போன்ற முகம்... வெண்மை கலந்த சந்தன நிறத்தில் மாசு மருவில்லாமல் பளிச்சென்று இருந்தது.. மாடியிலிருந்து இறங்கி வந்த அர்ச்சனா.. ராதாவைக் கண்டதும்..
"வாவ்.." என்றாள்..
அவளது 'வாவ்' என்ற ஆச்சரியத்தில் சாப்பிட்டு விட்டு வந்த அருண்குமார் ராதாவைப் பார்த்தான்.. நேருக்கு நேரான பார்வையுடன் இயல்பாக புன்னகை செய்தாள் ராதா.. பதிலுக்கு அவனும் சிரித்து வைத்தான்.. அகல்யா கல்லுக்குண்டைப் போல சோபாவில் உட்கார்ந்தபடி அவர்களை நாடகம் பார்ப்பதைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"எதுக்கு இந்த 'வாவ்..?'" அர்ச்சனாவிடம் கேட்டாள் ராதா..
"எந்த மேக்கப்பும் இல்லாம எப்படிங்க இவ்வளவு அழகா இருக்கீங்க..? டிரஸ்ஸீம் கேசுவலா பண்ணிக்கறிங்க.. ஜ்வல்ஸ் போட்டுக்கறதில்லை.. ஆள் மட்டும் அட்ராக்டிவ்வா இருக்கீங்க.. எப்படிங்க..?"
அர்ச்சனாவின் வியப்பில் அருண்குமார் ராதாவை ஊன்றிப் பார்த்து வைக்க..
"எனக்கு மேரேஜ் ஆயிருச்சு.." என்றாள் ராதா..
ஊர்மிளாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. அருண் குமாருடன் அவள் நின்று பேசியதே இல்லை எனும் போது.. சிரித்து எங்கே பேசியிருக்கப் போகிறாள்..? முதன் முறையாக அவன் முன்னால் நின்று சிரித்தவளை வெட்கத்துடன் பார்த்தான் அருண்குமார்..
"நான் சும்மாதான் பார்த்தேன் அண்ணி.." விளக்கமும் சொன்னான்..
இப்போது பெண்கள் மூவரும் சேர்ந்து கொண்டு சிரித்ததில் அவன் முகம் சிவந்து விட்டது.. அங்கிருந்து வேக நடையுடன் அகன்று விட்டான்..
"இப்படித்தான் எதையாவது பேசி வைப்பான்.." அர்ச்சனா செல்லமாக சொன்னாள்..
தோழிகள் இருவரும் வெளியே கிளம்பினார்கள்.. ஊர்மிளா செல்போன் வாங்க வேண்டும் என்று சொல்ல முனைந்தபோது ராதாவிற்கு நியுயார்க்கிலிருந்து போன் வந்து விட்டது.. போன் பேசி முடித்தவள் ஊர்மிளாவிடம்..
"என் டெபுடேசன் முடிந்து விடும்போல இருக்கு.." என்று சொன்னாள்..
'ராதா கிளம்பிருவாளா..?'
நரேந்திரன் இல்லாத தனிமையில் நிராதரவாக நிற்பதைப் போன்ற உணர்வுடன் இருந்த ஊர்மிளா செல்போனை மறந்து போனாள்.. ராதாவின் நியுயார்க் பயணத்தைப் பற்றிப் பேசியபடி அன்றைய நாள் ஓடிவிட்டது.. மாலையில் வீடு திரும்பியவர்கள் அகல்யாவைப் பார்த்ததும் தள்ளிப் போனார்கள்..
ஊர்மிளாவும், ராதாவும் அகல்யாவின் காதுகளுக்கு எட்டாத வண்ணம் தாழ்ந்த குரலில் பேசியபடி சற்றுத் தள்ளியிருந்த சோபாவில் உட்கார்ந்தார்கள்.. அகல்யா காதைத் தீட்டி அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க முயன்றாள்.. அதை பார்த்தும் பாராததைப் போல பேசிய ராதா..
"உன் மேரேஜ் அரேன்ஜீடு மேரேஜா இருந்திருக்க முடியாதுதான்.." என்று சொன்னாள்...
"நோ.. நோ.. நரேன் என்னிடம் காதல் சொன்னதும் அப்பாவிடம் பேசச் சொல்லி நான்தான் சொன்னேன்.. இது அப்பா முடிவு பண்ணிய மேரேஜ்தான்.." என்றாள் ஊர்மிளா..
"ஐ..ஸீ.. இப்படிப்பட்ட சம்பந்தி இந்த வீட்டில இருக்கிறாங்கன்னு தெரிந்தும் அப்பா இந்த மேரேஜீக்கு ஓகேன்னு சொல்லியிருக்காருன்னா.. ஆச்சரியம்தான்.." தோள்களைக் குலுக்கினாள் ராதா..
ஊர்மிளா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அகல்யாவிடம் பேசிக் கொண்டிருந்த அர்ச்சனா பசிப்பதை உணர்ந்தவளாக டைனிங் ஹாலுக்குப் போனாள்.. அவள் கடந்து போகும் போது மிகச் சரியாக லேண்ட்லைன் போனின் மணியொலிக்க அவள் போனை எடுத்துக் காதுக்கு கொடுத்து.
"ஹலோ.." என்றாள்..
"அர்ச்சனா.." என்றான் மறுமுனையில் நரேந்திரன்..
சிலசமயங்களில் கடவுள் ஆடும்.. விளையாட்டிற் கான காரணம் யாருக்கும் பிடிபடு வதில்லை.. பிடிபட முடியாத ஆன்மீகம்தானே பரபிரம்மம்..? எந்த  நரேந்திரனின் குரலைக் கேட்க முடியாமல்.. அவனோடு பேச முடியாமல்.. அவன் நினைவாகவே அவனுடைய காதல் மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாளோ.. அந்த நரேந்திரன் அவளுடன் பேச லேண்ட்லைன் போனில் அழைக்கிறான்.. கைக்கெட்டும் தொலைவில் போனிருந்தும்.. அதை அறியாதவளாக அன்றாவது கணவனுடன் பேசி விட முடியுமா என்ற ஏக்கத்துடன் தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் ஊர்மிளா..
இறைவன் நடத்தும் இதுபோன்ற விளையாட்டுக் களில் அலைமேல் துரும்பாக அலைக்கழிக்கப்படுவது ஏழைமனம் கொண்ட ஜீவன்கள் தான்..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -63
அழகான ராட்சசியே -63
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-63.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-63.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy