அழகான ராட்சசியே -59

59 நிலவொளியில் விருந்துவைத்து.. நினைவலையை தட்டி எழுப்பிய அழகான ராட்சசி நீ.... "என்னாலே இவங்களையும்.. , அருண் , அர்ச்சனாவ...


59
நிலவொளியில் விருந்துவைத்து..
நினைவலையை தட்டி எழுப்பிய
அழகான ராட்சசி நீ....


"என்னாலே இவங்களையும்.., அருண், அர்ச்சனாவையும் மேரேஜீக்கு வராதீங்கன்னு சொல்ல முடியுமா..? மேரேஜ் முடிந்ததும் உன்னோடு தாத்தா வீட்டுக்கே போய்விட நான் ரெடியாத்தான் இருந்தேன்.. அதுக்கென்ன தாத்தா.. ஊர்மிளாவோட நான் நம்ம வீட்டுக்கே வந்திடறேன்னு சொன்னேன்.. பட், அவரோட பர்ஸ்ட் கண்டிசனை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.. தாத்தா அதில கோபமாயிட்டாரு.."
"அப்ப அவங்க நம்ம கல்யாணத்துக்கு வரவேயில்லையா..?"
"வந்தாங்க.. மூகூர்த்த நேரத்தில வந்து கெஸ்டைப் போல ஓரமா உட்கார்ந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க.. நான் ஆசிர்வாதம் வாங்க வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிட்டாங்க.. தாத்தா அதிலெல்லாம் கில்லாடி.."
"என்கிட்டச் சொல்லவேயில்லையே.."
"உன்னிடம் சொன்னா.. உன் அப்பாவிடமும் சொல்ல வேண்டியிருக்கும்.. பொதுவுடைமை தலைவர் சும்மா இருப்பாரா..? அதற்கும் சண்டை போட ஆரம்பிச்சுருவார்.. அதனாலதான் சொல்லலை... ஓகே... நிறையப் பேசிட்டோம்... இப்பத்தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே.. இனிமேலாவது டிபனை கண்ணில காட்டுவயா.. மாட்டயா..?"
நரேந்திரன் சிரித்தான்.. பழைய நினைவுகளில் இருந்து மீண்டு அவன் இலகுவான மனநிலைக்கு வந்து விட்டதை புரிந்து கொண்ட ஊர்மிளாவிற்கு நிம்மதியாக இருந்தது.. அவளும் பேச்சை வேறுதிசையில் திருப்பி விட்டபடி பரிமாற ஆரம்பித்தாள்..
"ஹௌ நைஸ்.." ரசித்துச் சாப்பிட்டான் நரேந்திரன்..
மொட்டை மாடியின் நிலா விருந்தை அவனுக்குப் பிடித்துப் போய் விட்டது.. இதமான தென்றல்காற்றின் குளுமையும்.. பட்டப் பகலைப் போல ஒளிர்ந்த நிலா வெளிச்சமும் காணக் கிடைக்காதவையாக அவனுக்குத் தோன்றின.. உணர்வு பூர்வமாக அதை உணர்ந்து அனுபவித்து ரசித்தான் நரேந்திரன்..
         "வெந்நிலவே..! தண்மதியே..!
                என்னுடனே வாராய்..
      நிலவே..! நிலவே..!
                வாராய்..!"
ஊர்மிளா மெல்லிய குரலில் பாடியதில் நரேந்திரன் வியந்து போனான்..
"பொருத்தமான பாட்டுடி.. அதுவும் இந்த நேரத்திலே.. நிலா வெளிச்சத்திலே நீ பாடும்போது கேட்கிறதுக்கு ரொம்பவும் நல்லா இருக்கு.. ஸ்வீட் வாய்ஸ்டி உனக்கு.." பேசியபடியே குனிந்தவன் அவள் எதிர்பார்க்காத சமயத்தில் அவள் உதட்டில் முத்தமிட்டு விட்டு கண் சிமிட்டினான்..
"ஸ்வீட் வாய்ஸாச்சே.. அதான்.. முத்தம் இனிக்குதான்னு செக் பண்ணினேன்.."
அவன் அடித்த கிளுகிளுப்பான லூட்டியில் ஊர்மிளா மையல் கொண்டாள்.. அவன் காலரைப் பிடித்து இழுத்து அவன் கழுத்தில் முத்தமிட்டு விட்டு..
"நீங்க இரும்பு மனிதன்னு பீத்திக்குவீங்களே.. அது உண்மையா.. பொய்யான்னு செக் பண்ணினேன்.." என்று கிசுகிசுத்தாள்...
நரேந்திரன் கிளர்ந்தான்.. சாப்பிட்டபடியே அவர்கள் தாழ்ந்த குரலில் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.. சில சமயங்களில் ஊர்மிளா வெட்கத்துடன்..
"ச்சீய்.." என்று அவனைக் கிள்ளினாள்..
சில சமயங்களில் நரேந்திரன்..
"ஏய்ய்.." என்று அவளை நெருங்கினான்..
சாப்பிட்டு முடித்தவர்கள் மொட்டை மாடியின் ஓரமாக இருந்த வாஷ்பேசினில் கை கழுவினார்கள்.. ஊர்மிளா செல்போனில் அழைத்ததில் வனிதா வந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனாள்.. தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் கால் நீட்டி சரிந்து படுத்த நரேந்திரன்.. ஊர்மிளாவையும் கைநீட்டி இழுத்துக் கொண்டான்.. அவன்மீது விழுந்த ஊர்மிளா அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டதில் கிறங்கிப் போனான்..
"இன்னைக்கு ஒரு மார்க்கமாத்தாண்டி இருக்க.. இதுக்காகவே அடிக்கடி நிலாச்சோறு விருந்துன்னு மொட்டை மாடிக்கு வந்துரலாம் போல இருக்கு.." அவள் கன்னத்தில் மூக்கை உரசியபடி சொன்னான்..
"ஹலோ.. மிஸ்டர் நரேந்திரன்.. நிலாச்சோறு விருந்தை பெயர்ணமியிலதான் சாப்பிட முடியும்.. அடிக்கடி சாப்பிட முடியாது.. மனசிலாயி.." அவன் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி அவள் சொன்னாள்..
"என்னடி இது அராஜகமா இருக்கு.."
"எது அராஜகம்..?"
"பௌர்ணமி அன்னைக்குத்தான் நிலாச்சோறு சாப்பிடனுமா..?"
"பின்னே, அம்மாவசையிலயா சாப்பிடுவாங்க..?"
ஊர்மிளாவின் கேலியில் அவள் முகத்தோடு முகம் வைத்து முட்டினான்.. அவள் வலிப்பதைப் போல பாவனை செய்ததில்..
"நடிக்காதேடி.." என்றான்..
"ஆஹா.. இதை நடிகர் திலகமில்ல சொல்கிறாரு.. தி பேமஸ் இண்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரன்.. திருச்சியில் வந்து ஓசுரில் வேலை பார்க்கிற மில் தொழிலாளியா
நடித்த கதையை மறந்து போனாரா..? நினைவு படுத்த என் அப்பாவை வேண்டும்னா கூப்பிட்டுக் கேட்டுப் பார்க்கலாமா..?"
"எதுக்குடி இந்த கொலைவெறி..?"
"அஃது.. அந்த பயம் இருக்கட்டும்.. யாருகிட்ட..?"
ஊர்மிளா கை முஷ்டியை உயர்த்திக் காட்டினாள்.. அவளை மிக எளிதாக வீழ்த்தி அவள்மீது பரவிப் படர்ந்த நரேந்திரன்..
"யாருகிட்டயா..? என் பெண்டாட்டிகிட்டடி.. இப்ப என்ன செய்வ..?" என்று பதிலுக்குச் சவால் விட்டான்..
ஊர்மிளா மயங்கிப் போனாள்.. அவளது கை தானாக நரேந்திரனைத் தழுவிக் கொண்டது.. அவன் மீதான அவளது மயக்கத்தில் அவன் போதை கொண்டான்.. அவள் காதருகே..
"பாடுடி.." என்றான்..
"என்ன பாட..?" அவள் கிசுகிசுப்பாக வினவினாள்..
"ஏதாச்சும் பாடு.. இந்த நிலாவைப் பத்தி.. மொட்டை மாடியைப் பத்தி.. உன்னையும், என்னையும் பத்தின்னு எதையாச்சும் பாடு.."
உல்லாசமான மனநிலையில் அவன் இருந்தான்.. ஊர்மிளா புரண்டு அவன் மார்பின்மீது தலை வைத்துப் படுத்து அவன் முகம் பார்த்தாள்.. அந்த நிலவின் வெளிச்சத்தில் ஒரு ரோமானிய சிற்பம் போல இருந்தவன் அவளின் ஆசைக்குரிய கணவன் என்பதில் மனதுக்குள் கர்வம் பொங்க.. பாட ஆரம்பித்தாள்..
"வெந்நிலா நேரத்திலே..
             வேணு கானம்..
    மேல்மாடி முற்றத்திலே..
             நீயும் நானும்.."
நரேந்திரன் மயங்கிப் போனான்.. மயக்கும் அந்த நிலவுப் பொழுது அவனையும்.. அவளையும் மயங்க வைத்து பின்னிப் பிணைத்தது.. நரேந்திரனின் நெற்றியிலிருந்து ஒற்றை விரலால் கோடு போட்டு இழுத்தபடி ஊர்மிளா மெல்லிய குரலில் கேட்டாள்..
"என்னை உங்க தாத்தா, பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கக் கூப்பிட்டுக்கிட்டுப் போவீங்களா..?"
நரேந்திரன் அவளை அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி பதில் சொன்னான்..
"ஆகட்டும்.. கட்டாயமாக நான் கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்.. நாளைக்கு ஃபாரின் போக வேண்டியிருக்கு.. அங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடிச்சுட்டு திரும்பி வந்தவுடனே முதல் வேலையா நாம தாத்தா, பாட்டியைப் பார்க்கப் போய்விடலாம்.. அவங்களும் சந்தோசப் படுவாங்க.."
"நானும் சந்தோசப்படுவேன்.."
"ஊஹீம்..? அப்ப நான் சந்தோசப்பட வேணாமா..?" நரேந்திரன் கேட்டதில் ஊர்மிளா விழித்தாள்..
"புரியலை.."
"மக்கு.. இதைக்கூடப் புரிஞ்சுக்கலைன்னா நீயென்ன பெண்டாட்டி.. என்னைச் சந்தோசப் படுத்துடி.."
நரேந்திரன் அவள் காதோடு சொன்ன வார்த்தைகளில் அவள் உடலில் உஷ்ணம் பரவியது.. சங்கேத வார்த்தைகள் அதிகரிக்க.. அதிகரிக்க.. அவளது ரத்த நாளங்கள் சூடேறின.. அவனிடமிருந்து புரண்டு விலகி எழுந்தாள்..
"எங்கேடி போற..? வா.." அவன் வேட்கையுடன் அழைத்தான்..
"இங்கே வேணாம்.." அவள் முகம் சிவக்க படிகளுக்குத் தாவினாள்..
நரேந்திரன் வருகிறானா என்று பார்த்தபடி தாவிக் குதித்து ஓடி வந்தவள் அப்படியே நின்று விட்டாள்..
அங்கே மடமடவென்று இறங்கிப் போய் கொண்டிருந்தது..
அகல்யா..!
ஊர்மிளாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.. விழிகளை விரித்தவளால் அதை நம்ப முடியவில்லை.. கணவனும், மனைவியும்.. அந்தரங்கமாகப் பேசிக் குழாவுவதை ஒளிந்திருந்து பார்த்துக் கேட்கும் ஜென்மம் என்ன ஜென்மம்..?
"உன்னை.." சிரித்தபடி அவளருகில் வந்த நரேந்திரன்.. அசைவற்று நின்ற ஊர்மிளாவின் அதிர்ந்த பார்வையில் திகைத்தான்..
"ஊர்மிளா..? என்னடி ஆச்சு..?"
'சொல்லி விடலாமா..?'
ஊர்மிளாவால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. பேச முடியாமல் விதிர்த்துப் போய் நின்றிருந்தவளை உலுக்கினான் நரேந்திரன்..
"என்னன்னு சொல்லுடி.."
ஊர்மிளாவால் சொல்ல முடியவில்லை.. அதுநேரம் வரை அவளும் நரேந்திரனும் என்னவெல்லாம் பேசிக் கொண்டார்கள்.. எப்படியெல்லாம் பின்னிப் பிணைந்தார்கள் என்பதைப் பற்றியே அவளது சிந்தனை இருந்தது..
அவளுக்கும்.. அவளுடைய கணவனுக்கும் மட்டுமே சொந்தமான அந்தரங்க பரிபாசைகளை அகல்யா கேட்டுக் கொண்டிருந்தாளா..?
அருவெறுப்பில் முகம் சுளித்தாள் ஊர்மிளா.. வீட்டு விவரங்களைப் பற்றி நரேந்திரன் அவளிடம் சொன்னதை அகல்யா கேட்டுக் கொள்வதில் அவளுக்கு எந்தவிதமான மன உறுத்தலும் இல்லை..
'அதுக்குப் பின்னால் நானும் அவரும் பேசிக் கிட்டது.. தொட்டுக்கிட்டது... கட்டிக்கிட்டது... இது அத்தனையையும் இந்தம்மா கவனிச்சுச்சா..'
அவளுக்கு உயிர்துடித்தது.. உடல் கூசியது.. மனதிலிருந்த கிளர்ச்சியும், மயக்கமும் சொல்லாமல் கொள்ளாமல் விலகி ஓடியதில் பதுமை போல அவள் படிகளில் இறங்கினாள்..
நரேந்திரனின் புருவங்கள் சுருங்கின.. மனைவியின் தோள் தொட முயன்றான்.. நெருப்புப் பட்டதைப்போல அவள் பதறி விலகிட்டதில் அவனுக்குள் கேள்வி வந்தது..
மாடி ஹாலுக்கு அவர்கள் வந்தபோது.. அப்போது தான் படியேறி வந்ததைப் போன்ற பாவனையுடன் மாடிக்கு வந்து நின்றாள் அகல்யா.. ஊர்மிளாவின் வெறித்தபார்வை அவளைக் கண்டதும் பதறியது.. அகல்யாவின் இதழோரமாக வளைந்து நெளிந்த குறுஞ்சிரிப்புக்கான அர்த்தம் என்னவென்பதை அவளால் அறியமுடியவில்லை..
"என்ன..?"
நரேந்திரன் அம்மா என்று அழைப்பதை தவிர்த்தான்.. அதை வெகு நுணுக்கமாகக் கவனித்த அகல்யாவின் முகம் அதிபயங்கரமாய் மாறியது.. சிரமப்பட்டு பவ்யமாக முகத்தை வைத்துக் கொண்டாள்..
"இல்லேப்பா.. காலையிலே நீ பாரின் கிளம்பிருவ.."
"ஸோ வாட்..?"
"அதுக்குள்ள அர்ச்சனாவைப் பற்றி ஒரு விவரம் பேசனும்ப்பா.. கீழே ஹாலில் காத்துக்கிட்டு இருந்தேன்.."
அகல்யா சொல்லிக் கொண்டிருக்க.. ஊர்மிளா அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தாள்.. ஊர்மிளாவின் நேரடியான பார்வையினைச் சந்திப்பதைத் தவிர்த்தாள் அகல்யா..
'இவளா கீழே காத்துக்கிட்டு இருந்தாள்..?'
ஊர்மிளாவினால் அகல்யாவை மரியாதையாக நினைக்க முடியவில்லை.. அவள் செய்து வைத்திருந்த காரியத்தில் ஊர்மிளாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது..
"இப்ப நீங்க இறங்கி வர்ற சப்தம் கேட்டு அவசரமாக மாடிக்கு வந்தேன்.. நீங்க தூங்கப் போன பின்னாலே கதவைத் தட்டினா அது நாகரிமில்லை பாரு.."
'கடவுளே..!' ஊர்மிளா இமை மூடித் திறந்தாள்..
நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது என்ற வரைமுறையே இல்லையா..?
நரேந்திரன் முகம் சுளித்து விட்டு கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான்..
"மொட்டை மாடியிலே டின்னர் முடிச்சுட்டு... கொஞ்ச நேரம் காற்றாட பேசிவிட்டு வரக்கூட இந்த வீட்டில் சுதந்திரம் இல்லையா..?" நறுக்கென்று கேட்டுவிட்டான்..
"நரேன்.." இரு காதுகளையும் பொத்தாக குறையாக துடிதுடிப்பதைப் போல பாவனை காட்டினாள் அகல்யா..
"உன் வாயாலே இப்படிப் பேசலாமா நரேன்..?"
"வேற யார் வாயாலே பேசச் சொல்கிறிங்க..? அர்ச்சனாவைப் பற்றிப் பேசனும்னா ஈவினிங் நான் வீட்டுக்கு வந்தப்பவே பேசியிருக்கனும்.. அதை விட்டுட்டு லேட் நைட்டில பேசனும்னு மாடிக்கு வந்து நிற்கறிங்க.. என்ன பழக்கம் இது..?"
"நரேன்.."
"போங்க.. போய் தூங்குங்க.. நான் பாரின் போய் வந்த பின்னாலே அர்ச்சனாவைப் பத்திச் சொல்லுங்க.. கேட்டுக்கறேன்.. இப்ப எனக்குத் தூக்கம் வருது.."
"அர்ச்சனா உனக்குத் தங்கைப்பா.."
"நான் இல்லேன்னா சொன்னேன்..? என்னதான் உங்க பிரச்னை..? சொல்லுங்க.. அர்ச்சனாவைப் பற்றி என்ன பேசனும்..?"
"அவளுக்கு கல்யாணா வயசு வந்திருச்சுப்பா.. நல்ல இடத்தில மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்.."
நரேந்திரனுக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது.. அகல்யா போடும் நாடகத்தில் அவன் மனம் வெறுத்து விட்டான்..
"இதைச் சொல்லத்தான் இந்த நேரத்தில மாடிப் பக்கம் வந்தீங்களா..? நான் என்னவோ.. ஏதோன்னு நினைச்சுட்டேன்.. போங்க.. போய் தூங்கற வேலையைப் பாருங்க.. ஊர்மிளா.. வா.."
நரேந்திரன் அறைக் கதவை படாரென்று சாத்திய வேகத்தில் அவனுடைய கோபத்தின் பரிணாமம் தெரிந்தது.. வேறு ஒருவராக இருந்திருந்தால் முகம் சிறுத்துக் கூனிக் குறுகிப் போயிருப்பார்கள்.. அகல்யா அந்த கவரிமான் வகையைச் சேர்ந்தவள் அல்லவே..
அவள் நிஷ்டூரமாக ஊர்மிளாவை முறைத்தாள்.. அவள் முகத்தில் அந்த அதிபயங்கரம் மீண்டிருந்தது.. ஊர்மிளாவுக்கு அவள் முகத்தைப் பார்க்கும் போது முதுகுத் தண்டு ஜில்லிட்டது..
"என்னடி.. நரேந்திரனை இந்த வீட்டை விட்டுப் பிரிக்கத் திட்டம் போடறயா..? இப்பச் சொல்றேன் எழுதி வைத்துக்க.. இந்த வீட்டை விட்டுப் பிரியப் போகிறது நரேந்திரன் இல்லைடி.. நீதான்.. நீ மட்டும்தான்.."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -59
அழகான ராட்சசியே -59
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-59.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-59.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy