அழகான ராட்சசியே -58

58 ஆழ்மனதில் என்மீது.. அளவுகடந்த ஆசை கொண்ட.. அழகான ராட்சசி நீ.... நரேந்திரனுக்கும் ஊர்மிளாவுக்கும் நடந்த திருமணத்திற்கு ஏன் அ...


58
ஆழ்மனதில் என்மீது..
அளவுகடந்த ஆசை கொண்ட..
அழகான ராட்சசி நீ....


நரேந்திரனுக்கும் ஊர்மிளாவுக்கும் நடந்த திருமணத்திற்கு ஏன் அவனுடைய தாத்தாவும்.. பாட்டியும் வரவில்லை என்ற ஊர்மிளாவின் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது.. அதை உணர்ந்தவனாக அவன் ஓரிரு நிமிடங்கள் மௌனமாக வான்வெளியை வெறித்துக் கொண்டிருந்தான்..
ஊர்மிளா காத்திருந்தாள்... அவளுடைய கேள்விக்கான விடை கிடைத்தாலும்... கிடைக்கா விட்டாலும் அவள் கவலைப்படப் போவதில்லை.. கேள்வியை கேட்டு விட்டாள்.. பதில் சொல்ல அவனுக்கு விருப்பமிருந்தால் சொல்லட்டும்.. இல்லையென்றால் விட்டு விடட்டும் என்ற எண்ணம் அவளுக்கு..
ஊர்மிளா நரேந்திரனின் உணர்வுகளை மதித்தாள்.. அந்த நொடிகளில் அவனுக்கான அற்புதமான சிநேகியாக உடனிருந்தாள்.. அவளுடைய அந்த இதமான பரிவே அவன் மனதிலிருப்பதைக் கொட்ட வைத்துக் கொண்டிருந்தது.. அன்பான மனைவி, ஆசையான காதலியாக மட்டுமல்ல, அற்புதமான சிநேகிதியாகவும் பரிமளிக்கக் கூடும் என்பதை அந்த நொடிகளில் அவள் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள்..
"கூப்பிட்டேன்.. கூப்பிடாம இருப்பேனா..?"
நரேந்திரனின் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.. 'ம்ம்ம்' என்ற முணுமுணுப்புக்கூட அவன் பேச்சுக்கு இடையூறாக அமைந்து விடக் கூடும் என்பதால் ஊர்மிளா அதைத் தவிர்த்து அவன் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தாள்..
"பாட்டிக்கு மேரேஜை முன்னால நின்று நடத்தி வைக்கனும்னு கொள்ளை ஆசை.. இருக்காதா பின்னே..? என்னைத் தாய்க்குத் தாயா வளர்த்தவங்க அவங்க.. அவங்களோட சொந்தப் பேரனோட கல்யாணத்தில அவங்கதான் முன்னாலே நின்றிருக்கனும்.."
'ஏன் நீ நிற்க வைக்கலை..?'
"தாத்தா கோபப்பட்டார்.. அவரைக் கலந்துக்காம நானா என் மேரேஜை முடிவு பண்ணிட்டேன்னு சப்தம் போட்டார்.."
'உன்னைப் போல ஒருத்தியை நீ கல்யாணம் பண்ணிக்கலைங்கிற கோபமா இருக்கும்.. உன் ஸ்டேட்டஸை விட்டுவிட்டு காவேரிக்கரையில இருந்த ஒருத்தி மேலே காதல் வந்து கல்யாணம் வரைக்கும் நீ போனா உன் தாத்தா உன்னைச் சத்தம் போடாம கொஞ்சுவாரா..?'
ஊர்மிளாவுக்கு நரேந்திரனின் மீதான காதல் பெருகியது.. இவன்தான் எப்பேற்பட்டவன் என்று அவள் மனம் வியந்தாள்..
"உங்கப்பாவோட ஸ்டேட்டஸ் பத்தியெல்லாம் அவர் கோபப்படலை.."
அவள் மனதிலிருப்பதைப் படித்ததைப் போல இளநகையுடன் அவன் சொன்னான்.. ஊர்மிளா உதட்டைச் சுழித்தாள்.. அவன் மனம் மயங்கியது..
"நிஜமாத்தாண்டி சொல்றேன்.. தாத்தாவுக்கு அந்தக் கோபமெல்லாம் இல்லை.. மேரேஜைப் பத்தி யோசித்துப் பார்க்காமலிருந்தவன் மேரேஜ் பண்ணிக்கப் போறேன்னு வந்து நின்றதில அவருக்கு இமாலய சந்தோசம்.. என்ன ஒன்று.. அவர்தான் உன்னைப் பெண் கேட்டு வந்திருக்கனும்னு குதிச்சார்.."
"நியாயம்தானே..."
அமைதியாக இருந்த ஊர்மிளா வாய்திறந்தாள்.. நரேந்திரன் உரக்கச் சிரித்தான்.. அதுவரை அவனிடமிருந்து விடை பெற்றிருந்த சிரிப்பு மீண்டு விட்டதில் ஊர்மிளாவின் மனம் நெகிழ்ந்தது..
"நல்லாச் சொன்னே போ.. கஜேந்திரன் பென்ஸ் காரையே அவர் ஸ்டேட்டஸீக்கு ஈக்குவலான காரான்னு கேட்பார்.. முன்னாடி பத்து கார்.. பின்னாடி பத்து கார்ன்னு ஊர்வலம் இல்லாம வெளியூருக்கு போகவே மாட்டார்.. சாதாரண பிஸினெஸ் டிரிப்புக்கே அப்படின்னா.. உன்னைப் பெண் கேட்டு வருகிறப்பக் கேட்கவே வேணாம்... திருச்சியையே கார்களால நிறைச்சுருவார்.. அதுக்கப்புறம் உன் அப்பா என்னை கிட்டச் சேர்த்துக்குவாரா சொல்லு..?"
"அதைச் சொல்லுங்க..."
சோமசுந்தரத்தின் நினைவில் அவன் சொன்னதை ஆமோதித்துச் சிரித்தாள் ஊர்மிளா..
"அதில வேற என்னோட தாத்தா.. உன் அப்பா சொல்கிறதைப் போல.. அச்சு அசல் முதலாளித்துவத்தின் மொத்த உருவமா இருப்பார்.. அவரைப் போயி பெண் கேட்க அழைச்சுக்கிட்டு வந்தா உங்க வீட்டில மேரேஜ் பத்தின பேச்சு நடந்திருக்காது.. முதலாளித்துவமும்.. பொதுவுடைமையும் மோதிக்கிற பேச்சுத்தான் நடந்திருக்கும்.."
"போதும்.. போதும்.."
"இதனாலதான் அவங்களைப் பெண் கேட்க அழைத்துக்கிட்டு வரலை.. உங்க அப்பா பண்ணின அடாவடியில ரகசியமாத்தான் நான் மேரேஜ் ஹாலை புக் பண்ணினதில இருந்து.. இன்விடேசன் அடிக்கிற வரைக்கும் எல்லாத்தையும் பண்ணினேன்.. லோசா விவரம் கசிஞ்சாக்கூடப் போதும.. கஜேந்திரன்.. தும்பிக்கை இல்லாம கர்ஜனை பண்ணிக்கிட்டு.. என் பேரனை மேரேஜ் பண்ணிக்கப் போகிற குலவிளக்கு யாருன்னு நான் பார்த்தாகனும்னு திருச்சிக்கு கிளம்பி வந்துடுவார்.. ஆசாமி அந்த அளவுக்கு டெர்ரரானவர்.. அவரைக் கட்டுப் படுத்தறது கஷ்டம் ஊர்மிளா.."
"அருமையான தாத்தா இல்ல.."
ஊர்மிளா ஆர்வத்தோடு கேட்டாள்.. அவளுக்கு அப்போதே நரேந்திரனின் தாத்தாவையும்.. பாட்டியையும்.. பார்க்க வேண்டும்போல இருந்தது..
"ரொம்ப அருமையானவங்க.." தாத்தா பாட்டியின் நினைவில் வந்த கனிவுடன் அவன் சொன்னான்..
"அவங்களை நீங்க பிரிஞ்சிருக்கக் கூடாது.." பேச்சு வாக்கில் மனதில் பட்டதை ஊர்மிளா சொல்லி விட்டாள்..
சொன்னபின்புதான் அது தவறோ என்று அவளுக்குத் தோன்றியது.. நரேந்திரன் என்ன நினைத்துக் கொள்வானோ என்ற தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.. அவன் எதுவும் நினைத்துக் கொள்ளவில்லை என்பதைப் போல கனிவாக சிரித்ததுமில்லாமல் தலையை வேறு ஆட்டி வைத்தான்..
"உண்மைதாண்டி... நான் அவங்களைப் பிரிஞ்சிருக்கக் கூடாது.. என் அம்மாவுக்காக வாழ்ந்தவங்க.. அம்மா போன பின்னாலே எனக்காக வாழ்கிறவங்க.. அவங்களை நான் பிரிஞ்சிருக்கிறது அவங்களுக்குச் செய்கிற அநியாயம்தான்.. ஆனாலும் ஊர்மிளா.. தாத்தா இவங்களை நான் ஆதரிக்கறதை விரும்பலை.."
"ம்ம்ம்..."
"அதுக்காகத்தான் ஒரு கோபத்தில நான் இங்கே வந்து தங்கினேன்.. மத்தபடி என் மனசெல்லாம் தாத்தா, பாட்டிகிட்டத்தான் இருக்குடி.. அவங்க நினைவுதான் எப்போதும்.."
"ம்ம்ம்..."
"அருணும், அர்ச்சனாவும் நல்ல பசங்கதான்.. என் அப்பாவுக்கு பிறந்ததினால எனக்கு தம்பி, தங்கையா நிற்கிறவங்கதான்.. ஆனாலும் ஊர்மிளா.. இவங்களை இப்பத்தான் நான் பார்த்தேன்.. புதுசா பாக்கற உறவில என்ன ஒட்டுதல் வந்திரும்..? சொல்லு.."
"ம்ம்ம்..."
"தாத்தாவும், பாட்டியும் அப்படியில்லை.. நான் பிறந்ததும் என்னைக் கையிலெடுத்துக்கிட்டது என் பாட்டிதானாம்.. அப்போதிருந்து இப்போவரைக்கும் எனக்கான எல்லாத்தையும் பாத்துப் பாத்து செய்வாங்க.. அவங்க பாசத்துக்கு நிகரில்லை ஊர்மிளா.."
"ம்ம்ம்.."
"தாத்தா மேரேஜீக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டார்.."
"ஏன்..? அதான் அவருக்குப் பெரிதா கோபம் எதுவுமில்லைன்னு சொன்னீங்களே.."
ஊர்மிளா பதட்டத்துடன் கோட்டாள்.. ஏன் அந்தப் பதட்டம் வந்தது என்று அவளுக்கே புரியவில்லை.. எதனாலோ நரேந்திரனின் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பிரியமானவளாக அவள் இருக்க வேண்டும் என்று அவள் மனதார விரும்பினாள்..
"உன்னை மேரேஜ் பண்ணிக்கிறதில அவருக்கு எந்தவிதமான அப்ஜெக்சனும் இல்லைடி.. அவர் அப்ஜெக்ட் பண்ணிய விவரமே வேற.." 
நரேந்திரனின் குரலில் மர்மம் ஒளிந்திருந்தது.. அதை அறியும் ஆர்வம் ஊர்மிளாவுக்கு வந்தது..
"என்னங்க..?" அவள் கேட்டாள்...
"சித்தியும்.. அவங்களோட பிள்ளைகளும் மேரேஜ் ஹால் பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னார்.. மேரேஜ் முடிந்ததும் நான்... உன்னோடு தாத்தா வீட்டுக்கே போயிடனும்னு கண்டிசன் போட்டார்.. இதை எப்படி நான் ஏத்துக்கிறது..? நீயே சொல்லு.."
ஊர்மிளா என்னத்தைச் சொல்லுவாள்...? அகல்யாவைப் போன்ற குறுகிய மனம் படைத்த, சாகசக்காரியுடன்தான் அவள் வசிக்க வேண்டும் என்று விதித்திருக்கும் போது அவள் எதைச்சொல்லி என்ன ஆகப் போகிறது..?
நரேந்திரனுக்குப் பதில் சொல்வதைவிட வெந்நிலவை உற்றுப்பார்ப்பது சாலச்சிறந்தது என்று அவள் வெந்நிலவைப் பார்க்கத் தொடங்கி விட்டாள்..
அவளுடைய பதிலுக்கு காத்திருக்காமல் நரேந்திரனே பேச்சைத் தொடர்ந்தான்..
"தாத்தா பாட்டி வீட்டுக்கு உன்னோடு ரிடர்ன் ஆகிறதில எனக்கு எந்தவிதமான பிராப்ளமும் இல்லைன்னுதான் நான் சொன்னேன்.."
"என்னது..?!..."
ஊர்மிளாவால் அவள் காதுகளை நம்ப முடியவில்லை.. அவளுடைய கணவன் அப்படியொரு வாக்குறுதியை தாத்தாவுக்குக் கொடுத்தானா..? அவனுடைய அன்பான அம்மா பிறந்து.. வளர்ந்த வீட்டில் ஊர்மிளாவை வாழ வைக்க நினைத்தானா..? அவனை வளர்த்த அவனுடைய தாத்தா பாட்டிக்கு அவள் சேவை செய்யும் வாய்ப்பை அளிக்க முனைந்தானா..?
"ஆமாண்டி.. நம்ம மேரேஜீக்கு அப்புறம் தாத்தா பாட்டி கூடப் போயிடலாம்ன்னுதான் நான் பிளான் பண்ணியிருந்தேன்.. ஆக்சுவலா ஊர்மிளா.. எனக்கு எங்க வீட்டைத் தவிர வேற எங்கே தங்கினாலும் பிடிக்காது.. இந்த வீட்டுக்கு வந்ததே தாத்தாவை மிரட்டத்தான்.. இவங்களுக்கு ஹெல்ப் பண்றதை நீங்க தடுத்தீங்கன்னா நான் உங்களை விட்டுட்டு இவங்க கூடவே வந்திருவேன் என்று பயமுறுத்தத்தான்.. மற்றபடி இந்த வீட்டை என் வீடா என்னைக்குமே நான் நினைத்ததில்லை.."
ஊர்மிளா இமை கொட்டி விழித்தாள்.. நரேந்திரனின் மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கக் கூடும் என்று தெரிய வந்ததில் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது..
"எதுக்கு இப்படிப் பார்க்கிற..? இந்த வீட்டில நான் இருந்தாலும் எனக்கான பிரைவஸியில கவனமா இருப்பேன்.. என் ரூம் மாடியிலதான் இருக்கும்.. அர்ச்சனாவுக்கும், அருணுக்கும், மாடியில ரூம் இருந்தாலும்.. அது தள்ளித்தான் இருக்கும்.. என் ரூம் பக்கம் யாருமே வரக் கூடாதுன்னு கண்டிசனா சொல்லியிருக்கேன்.. நான் எப்போ போவேன்.. எப்போ வருவேன்னு யாரும் கேட்கக் கூடாது.. எங்கே போகிறேன், என்ன செய்கிறேன்னு தோண்டித் துருவக் கூடாது.. இப்படி.. அருண் படிப்பை முடிச்சதும் என் கம்பெனியில அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்திட்டேன்.. நல்லா வேலை செய்கிறான்.. அர்ச்சனாவுக்கு மேரேஜை பண்ணிக் கொடுத்துட்டா என் கடமை முடிஞ்சிரும்.. அதுக்கப்புறம் நான் இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன்.."
"ஓ.. ஆனா, உங்க சித்தி உங்களைக் கேள்வி கேட்கத்தானே செய்கிறாங்க..? உங்க வேலைகளில மூக்கை நுழைக்கத்தானே செய்கிறாங்க..?"
"அதனாலதான் நான் இந்த வீட்டுப் பக்கமே வரக் கூடாதுங்கிற முடிவுக்கு வந்திருக்கிறேண்டி.. சித்தியோட நோக்கம் என்ன தெரியுமா..? அவங்களை என் அம்மாவா நான் காட்டிக்கனும்கிறது.."
"அம்மான்னுதானே அவங்களை கூப்பிடறிங்க.."
"அது இப்ப.. வேலையாள்கள் அவங்களை மதிக்கலை.. வெளியாள்கள் அவங்களுக்கு மரியாதை கொடுக்கலைன்னு அழுதாங்க.. நீ மட்டும் என்னை அம்மான்னு அவங்க முன்னாலே கூப்பிட்டிருந்தா இந்தத் துணிச்சல் அவங்களுக்கு வந்திருக்குமான்னு கேட்டாங்க.. ஸோ.. அம்மாங்கிறதை அவங்களோட பெயராத்தான் நினைச்சுக் கூப்பிடறேன்.. உறவாய் நினைச்சுக் கூப்பிடலை.. மனசில இருந்து அந்த வார்த்தை எப்பவும் வந்ததில்லைடி.. எனக்கு அம்மா ஒருத்தங்கதான்.. அவங்க பெயர் நளினி.. என்னைப் பெற்ற தாய்.."
ஊர்மிளா கைநீட்டி மீண்டும் நரேந்திரனின் விரல்களைப் பற்றித் தட்டிக் கொடுத்தாள்.. அவன் குரல் கரகரத்தது..
"என்னை அம்மான்னு கூப்பிட வைக்கிறதின் மூலமா.. 'நரேன் குருப் ஆஃப் கம்பெனி'யில அருணுக்கும், அர்ச்சனாவுக்கும் ஷேர் கிடைச்சிரும்ன்னு இவங்க எதிர்பார்க்கிறாங்க.. என் அத்தனை சொத்துக்கும்.. அவங்க இரண்டு பேரையும் நான் வாரிசாக் கூட்டுச் சேர்த்துக்குவேன்னு ஆசைப்படறாங்க.. அது எப்படி முடியும் ஊர்மிளா..? என் பெயரில் இருக்கிற சொத்தும்.. கம்பெனியும் என் அம்மா எனக்குக் கொடுத்தது.. எனக்கு குருவா இருந்து பிஸினெஸ்ஸை சொல்லிக் கொடுத்தது என் அம்மாவோட அப்பா.. அவர் சொல்லிக் கொடுக்கலைன்னா நான் இவ்வளவு பெரிய பிஸினெஸ் மேனா உயர்ந்திருக்க முடியாது.. நான் பிஸினெஸ்ஸில் சம்பாதிக்கிற அத்தனை கோடி பணமும்.. அவங்க கொடுத்த மூலதனத்திலும்.. பயிற்சியிலும் வந்தது.. இதுக்கு வாரிசா என் அம்மாவின் மகனான நான் மட்டும்தான் இருக்க முடியும்.. என் அம்மாவின் மனதை சல்லடையாக்கி அவங்களை வேதனைப்படுத்தி சாகவிட்டு.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்ட என் அப்பாவின் இரண்டாவது மனைவியும்.. அவங்க பெற்ற பிள்ளைகளும் வாரிசா வரவே முடியாது.. அப்படி நான் செய்தா என் அம்மாவின் ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது.. இது சொத்தைப் பற்றிய பேச்சல்ல.. மனித மனங்களின் உரிமையுணர்வைப் பற்றிய பேச்சு.. நான் என் அப்பாவின் வேண்டுகோளை ஏற்றுக்கிட்டு அவரோட கடன்களை அடைத்தது அவர் என்னைப் பெற்ற கடனை அடைப்பதற்காக.. அதற்கு மேலேயும் அவர் பெத்த பிள்ளைகளுக்கு உதவி செய்கிறது சாகும் நிலையில இருந்தவர் கேட்டுக்கிட்டாரே என்கிறதுக்காக..என் அப்பாவே என் சொத்தில் பங்கு கேட்டு வர முடியாதுங்கிறப்ப.. அவரோட இரண்டாவது மனைவிக்கும்.. அவங்க பெத்த பிள்ளைகளுக்கும் எங்கிருந்து அந்த உரிமை வரும்..?"
'என்னங்கடா இது..'
ஊர்மிளா தலையைப் பிடித்துக் கொண்டாள்.. இது போன்ற சுழல்களைப் பற்றி அவள் அறிந்தவளல்ல... சோமசுந்தரம் இதனால்தான் பணக்காரர்களிடமிருந்து ஒதுங்கி நின்றாரோ என்று அவளுக்குத் தோன்றியது..
"அருணுக்கும், அர்ச்சனாவுக்கும் அவங்க லெவல் என்னன்னு தெரியும்.. அருணோட படிப்புக்கு அவனுக்குக் கிடைத்திருக்கிற ஜெனரல் மேனேஜர் போஸ்டுங்கிறது எட்டாக் கொம்புதான்.. அப்பா பார்த்த வேலையை அவனுக்குக் கொடுத்திருக்கேன்.. அதிலேயே அவன் பிரமிச்சுப் போயிருக்கான்.. அர்ச்சனாவுக்கு பெரிய இடத்தில மேரேஜ் பண்ணி வைப்பேன்ங்கிறது அவளுக்கே நல்லாத் தெரியும்.. நாலு வருசங்களுக்கு முன்னால் வரை இதெல்லாம் அவங்களுக்கு எட்டாக் கனியா இருந்தது.. இப்ப கிடைச்சிருக்குங்கிறப்ப.. அவங்க அதில் சந்தோசப்பட்டுப் போறாங்க.. சித்தி அப்படியில்லை.. அவங்க பேராசை பிடிச்சவங்க.. அவங்களுக்கு உரிமையில்லாத சொத்துமேலே ஆசைப்படறவங்க.. இவங்க கிட்ட இருந்து தள்ளித்தான் இருக்கனும்டி.."
இதைத்தானே உன் தாத்தாவும் சொன்னார் என்று மனதில் நினைத்ததை வெளியில் கேட்க முடியாமல் மௌனமானாள் ஊர்மிளா..
வெந்நிலவின் தண்ணொளியில் மூடப்பட்ட பாத்திரங்கள் திறக்கப் படாமலே இருந்தன.. நரேந்திரனின் திறந்த மனது மூட மறந்து பேச்சைத் தொடர்ந்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -58
அழகான ராட்சசியே -58
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-58.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-58.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy