அழகான ராட்சசியே -57

57 அரிதான குறிஞ்சி மலராய்.. ஆக்ரமித்து விலகி நிற்கும்.. அழகான ராட்சசி நீ.... "இவங்க பக்கமும் ஓட்டையிருக்கு ஊர்மிளா.. இவங...


57
அரிதான குறிஞ்சி மலராய்..
ஆக்ரமித்து விலகி நிற்கும்..
அழகான ராட்சசி நீ....


"இவங்க பக்கமும் ஓட்டையிருக்கு ஊர்மிளா.. இவங்களுக்கு ஜாதகம் சரியில்லைன்னு மேரேஜ் தள்ளிப் போயிருக்குது.. இவங்களுக்கு முன்னாடியே இவங்களோட தம்பிக்கு மேரேஜ் ஆகிருச்சாம்.. முப்பத்திரண்டு வயது வரைக்கும் மேரேஜ் ஆகாமல் வீட்டிலிருந்தவங்க.. செகண்ட் மேரேஜா இருந்தா பெட்டர்ன்னு தரகர்கிட்ட சொல்லி வைத்திருந்தாங்களாம்.. பர்ஸ்ட் மேரேஜ்ன்னா பெண் பார்க்க வருகிறவங்க வயதில குறைந்த பெண்ணாத்தானே பார்ப்பாங்க..?"
"உண்மைதான்.."
"வயது கூடிருச்சுங்கிறதினால இவங்க செகண்ட் வொய்பாத்தான் போக முடியும்ங்கிற முடிவுக்கு வந்திட்டாங்க.. அப்பாவுக்கு அம்மா போன துக்கம்.. அதுநாள்வரை இன்னாரோட மருமகன்.. இன்னாரோட ஹஸ்பெண்டுன்னு இருந்து வந்த அடையாளம் பறி போயிருச்சுங்கிற ஆவேசம்.. எதனால் அந்தத் தீ அணையும்ன்னு தேடியவர் எண்ணைக்கிணறில குதிச்சிட்டார்.."
அதிபயங்கரமான உவமானம் என்றாலும் அது பொருத்தமான உவமானம் என்பதால் ஊர்மிளா உதட்டைக் கடித்தாள்..
"இன்னொரு மேரேஜ் பண்ணி அந்த இன்விடேசனை தாத்தாவுக்கு அனுப்பி வைக்கனும்ங்கிற வெறி அப்பாவோட மனசில வந்துருச்சு.. அவர் தரகரைப் பார்த்திருக்கார்.. தரகர் இவங்களைப் பத்திச்சொல்லியிருக்கார்.. உடனே அப்பா பெண் பார்க்கப் போயிட்டார்.."
"ம்ம்ம்.."
"சித்தி வீட்டிலதான் எப்ப.. எப்பன்னு இருந்தாங்களே.. அப்பா பெண் கேட்டுப் போனதும் அமுக்கிட்டாங்க.. கோடிஸ்வரருக்கு மனைவியாகப் போகிறோம்ன்னு சித்தியும் பெருமை பேசிக்கிட்டு அப்பாவை மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க.. அதுக்கப்புறமா உண்மை தெரிஞ்சதும் இவங்க சொரூபத்தைக் காண்பிச்சுட்டாங்க.."
"ம்ம்ம்..."
"அம்மா.. அப்பாவுக்குன்னு ஒரு அடையாளத்தைக் கொடுத்தாங்க... அவர் கனவிலேயும் நினைத்துப் பார்க்காத வாழ்க்கையைக் கொடுத்தாங்க.. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவருக்கு.. பணத்தைக் கொண்டு போய் கொட்டினால்தான் மனைவியுடன் வாழ முடியும்ங்கிற நிலைமை வந்திருச்சு.. அப்பா தகுதிக்கு மீறின வாழ்க்கையை வாழ கடன் மேலே கடனா வாங்க ஆரம்பிச்சார்.."
"முடியாதுன்னு சொல்லியிருக்கலாமே.. ஜெனரல் மேனேஜர் வேலைக்குக் கிடைக்கிற சம்பளம் அதிகமானதா இருக்குமே.. அந்தப் பணத்திலேயே வசதியாய் வாழ்ந்திருக்கலாமே.."
"கோடிஸ்வரனோட பெண்டாட்டின்னு சொல்லிக் கிட்டவங்க.. லட்சாதிபதியோட பெண்டாட்டின்னு சொல்லிக்கிறதை விரும்புவாங்களா..? அப்பா அம்மாவுக்கு செய்ததை.. இவங்க அப்பாவுக்கு செய்ய ஆரம்பிச்சாங்க.."
"எதைச் சொல்கிறிங்க..?"
"சொல்லிக் காட்டறதைச் சொல்றேன்.. அப்பா அம்மாவோட நோயைச் சொல்லிக் காட்டினார்.. சித்தி அப்பாவுக்கு இரண்டாம் தாரமாய் வந்துட்டதை சொல்லிக் காட்டினாங்க.. அவர் சொன்ன பொய்யைச் சொல்லிக் காட்டினாங்க.. அவர் கோடிஸ்வரர்ன்னு சொன்னதினால தான்.. ஒரு விடோயருக்கு இரண்டாம் மனைவியாய் வர அவங்க சம்மதிச்சாங்கன்னு சொல்லிக் காட்டினாங்க.. இல்லைன்னா.. அப்பாவுக்கு கழுத்தை நீட்ட அவங்களுக்கு என்ன தலைவிதியான்னு கேள்வி கேட்டாங்க.. அப்பாவுக்கு வேலை கொடுத்திருக்கிற தாத்தாகிட்டேயே போய் நியாயம் கேட்கப் போகிறதா பயமுறுத்தினாங்க.."
"ஓ..."
"வேற எதுக்குப் பயந்தாரோ இல்லையோ.. அப்பா தாத்தாகிட்ட இவங்க நியாயம் கேட்கப் போகிறேன்னு சொன்னதும் பயந்துட்டார்.. தாத்தா ஏற்கனெவே கோபத்தில் இருக்கிறார்.. இப்படி ஒரு வழக்கு அவர்கிட்டப் போனா அப்பாவை வேலையை விட்டுத் தூக்கிருவார்.. அதுக்கப்புறம்.. இந்த வேலைகூட அவருக்கு இருக்காது.. கடன் வாங்கின பணத்துக்கு வட்டி கட்ட சம்பளம் வேண்டாமா..? அதற்கு அப்பா எங்கே போவார்..?"
என்ன மாதிரியான வாழ்க்கை இது என்று ஊர்மிளாவுக்கு ஆயாசமாக இருந்தது.. எதைத் தேடி செழியன் அலைந்தார்..? அவரைப் புறக்கணித்த அன்பு மனைவியை மறக்க முடியாமல் அவர் கொண்ட ஆவேசம் அவரை எங்கே போய் நிறுத்திவிட்டது..! அவரின் உறவை முறித்து வீட்டை விட்டு வெளியேற வைத்த மாமனாரின் மனதை நோக வைப்பதற்காக.. அவரேயல்லவா மீளமுடியாத நோவில் விழுந்து விட்டார்..!
"கடமைக்காக வாழ்ந்த வாழ்க்கை அவரை அருணுக்கும்.. அர்ச்சனாவுக்கும் அப்பாவாக ஆக்கியது.. கூடவே கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கியிருக்கும் கடனாளியாகவும் ஆக்கியது.. துரத்தும் வாழ்க்கை அவரை ஹார்ட் அட்டாக்கில் கொண்டு போய் நிறுத்தியது.. அவரோட கடைசி நிமிடங்களில என்னைப் பார்க்க விரும்பியதா ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தது.. அதுவரைக்கும் அவரிடம் அப்பான்னு நான் முகம் கொடுத்துப் பேசியதில்லை.. அம்மா போன பின்னாலே அவருக்கும் எனக்கும் இடையே இருந்த உறவும் அறுந்து போய் விட்டதுன்னுதான் நான் நினைச்சேன்.. எனக்கு எல்லாமே என் தாத்தாவும்.. பாட்டியும்தான்.. ஆனால்.. கடைசி நிமிடங்களில இருக்கிற என்னைப் பெற்றவரோட கோரிக்கையை என்னால் நிராகரிக்க முடியவில்லை.."
"ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்.."
"ஹாஸ்பிடல் ரூமில் அவரும் நானும் மட்டுமே இருந்தோம்.. என் கையைப் பிடிச்சுக்கிட்டு பாவ மன்னிப்பு கேட்டார்.. அவர் மனசில இருந்த எல்லாத்தையும் கொட்டினார்.. அம்மாமேலே அவருக்கிருந்த காதல் அழியாம அப்படியே பொக்கிசமா இருந்தது ஊர்மிளா.. அவரிடம் மட்டும் தாத்தா உண்மையைச் சொல்லி.. அம்மாவைப் பார்க்க வைத்து.. அவங்களை கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தால் மறுக்காம உடனே சரின்னுதான் சொல்லியிருப்பார்ன்னு சொன்னார் ஊர்மி.. அநாதைகளுக்கு முடிவெடுக்கிற உரிமை கிடையாதான்னு அவர் கேட்டப்ப அவர் மனசு எந்த அளவுக்கு காயப்பட்டிருந்ததுன்னு என்னாலே புரிஞ்சுக்க முடிஞ்சதுடி.."
"ம்ம்ம்.."
"இவங்களைப் பத்திச் சொன்னார்.. அவர் பேசின வார்த்தைகள் அத்தனையிலும் வெறுப்பும்.. கசப்பும்தான் இருந்தது ஊர்மிளா.. அருணையும்.. அர்ச்சனாவையும் காப்பாத்துன்னு கேட்டுக்கிட்டார்டி.. ஒருவார்த்தைகூட இவங்களைப் பத்திச் சொல்லலை.. இவங்களைக் காப்பாத்துன்னு கேட்கலை.. என் கையைப் பிடிச்சுக்கிட்டு கண்ணீர் விட்டவர்.. உயிரையும் விட்டு விட்டார்.."
"நரேன்.."
ஊர்மிளாவுக்குள் அந்த காட்சி வந்து நின்றது.. அவருடைய கணவன்.. சிறுவயதிலிருந்து பேசியறியாத.. வளர்ந்த பின்னால் வேண்டாம் என்று விலக்கி வைத்து விட்ட தந்தையை அவரின் மரணப்படுக்கையின் போது மீண்டும் சந்திக்கிறான்.. அவர் தரப்பு நியாயங்களை சொல்லி விட்டு அவர் மகனின் கையைப் பிடித்தபடி இறக்கிறார்..
அந்த நொடியில் அவளுடைய நரேந்திரன் எப்பேற்பட்ட மனவேதனையை அனுபவித்திருப்பான்..!
அவளுடைய கட்டுப்பாடு உடைந்தது.. கடிவாள மிட்ட மனக்குதிரையை அவள் பறக்க விட்டாள்.. தன்முன் அமர்ந்திருந்த அந்த கோடிஸ்வரனை இமைக்காமல் பார்த்தாள்..
அவள் கண்களுக்கு வெற்றி பெற்ற பிஸினெஸ்மேன் தெரியவில்லை.. தாயில்லாத.. தந்தையிருந்தும் இல்லாத நிலையில் வளர்ந்த சிறுவன் ஒருவனே தென்பட்டான்..
"என் நரேன்.."
ஊர்மிளா தாய்மைப் பெருக்குடன் எழுந்தாள்.. டேபிளைச் சுற்றி நரேந்திரனின் பக்கத்தில் போனாள்.. அவன் முகத்தை கைகளில் ஏந்தி அவன் முடியைக் கோதி விட்டாள்.. அவள் மனம் விம்மியது..
நரேந்திரனின் கரங்கள் அவள் இடுப்பை வளைத்தன.. அவள் வயிற்றில் முகம் புதைத்து.. கண்மூடினான் நரேந்திரன்.. அலையடிக்கும் அவன் மனதை அவளது தாய்மைப் பெருக்குடன் கூடிய அணைப்பு அமைதிப் படுத்தியது..
அவர்கள் பேசவில்லை... பேசாமல் இருந்தார்கள்.. மௌனம் அங்கே வந்து அழகாக அமர்ந்து கொண்டது.. பேச்சுக்கள் தேவையற்ற மௌனம் சில நேரங்களில் மனிதருக்குத் தேவைப்படுகின்றது.. அப்போது அது நரேந்திரனுக்கும்.. ஊர்மிளாவுக்கும் தேவைப்பட்டது..
வார்த்தைகள் கொடுக்க முடியாத ஆறுதலை வருடல்கள் கொடுத்து விடும்.. பேசி ஆற்ற முடியாத மனக் காயத்தை.. சின்னஞ் சிறு ஸ்பரிசம் ஆற்றி விடும்..
ஊர்மிளாவும் அதைத்தான் செய்தாள்.. அவள் வயிற்றில் முகம் புதைத்திருந்த நரேந்திரனின் முடிகோதி.. அவன் தோளை வருடிக் கொடுத்தாள்.. அவன் முதுகில் தட்டிக் கொடுத்து இதமான ஸ்பரிசத்தை உணரச் செய்தாள்.. கொஞ்சம்.. கொஞ்சமாக.. அந்த நிலையிலிருந்து மீண்டு.. நரேந்திரன் அவள் இடுப்பை விடுவித்தான்.. மனைவியைப் பார்த்து லேசாக சிரிக்க முயன்றான்..
"சாப்பிடலாமா..?" ஊர்மிளா பேச்சை மாற்ற முயன்றாள்..
"கொஞ்ச நேரமாகட்டும்.." நரேந்திரனுக்கு சொல்ல வேண்டியது இன்னும் இருந்தது..
அதை உணர்ந்தவளாக அவனருகே சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு.. அவன் விரல்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் ஊர்மிளா..
"அப்பாவை நான் பார்க்கப் போனப்ப அவர்கூட யாருமே இல்லைடி..."
அவன் சொன்ன செய்தியில் உறைந்து போனாள் ஊர்மிளா..
"என்னங்க சொல்கிறீங்க..? உங்க சித்தி.. தம்பி, தங்கை.. இவங்கள்ளாம் எங்கே போனாங்க..?"
"எனக்குத் தெரியாது.. முதல் இரண்டு நாள் சித்தி மட்டும் வந்து போனாங்களாம்.. அதுக்கப்புறமா ஹாஸ்பிடல் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கலையாம்.."
"கடவுளே.. அருணும் அர்ச்சனாவும் கூடவா வரலை..?"
"அவங்க சின்னப் பசங்கடி.. இவங்க விட்டாத்தானே அவங்களாலே வரமுடியும்..?"
"ஆமாமில்ல.. அது ஒன்னு இருக்கில்ல.."
"ம்ம்ம்.. அப்படிப் போட்டுட்டுப் போனவங்க.. அப்பாவைப் பார்க்க நான் வந்திட்டேன்ங்கிற செய்தி தெரிஞ்சதும்.. ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்திட்டாங்க.. அப்பாமேல விழுந்து அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க.. என் மகன் வருவான்.. உங்களையெல்லாம் பார்த்துக்குவான்னு வாக்குக் கொடுத்தீங்களே.. இப்படிப் போகப் போறிங்கன்னு தெரிஞ்சுதான் அப்படியொரு வாக்கைக் கொடுத்தீங்களான்னு டிராமா போட்டாங்க.."
அகல்யா எதையும் சொல்வாள் என்ற நினைவில் ஊர்மிளாவின் இதழோரம் சிரிப்பு அரும்பியது.. அந்த நிலையில் சிரிக்கக் கூடாதுதான்.. ஆனால்.. அகல்யாவின் நாடகத்தைப் பற்றிக் கேட்கும்போது சிரிப்பு வந்து தொலைக்கிறதே..
"அப்பாவோட கடைசிக் காரியங்களை ஒரு குறைவுமில்லாம செய்தேன்.. அவர் பட்டிருந்த கடன்களை அடைத்தேன்.. இவங்க குடும்பத்தோட வாழ்க்கையை நடத்த இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தேன்.. மாதா மாதம் இவங்க செலவுக்கு போங்கில் பணம் போட்டேன்.. ஆனாலும் எதையாவது சொல்லி போனில் அழுது என்னை இந்த வீட்டுக்கு வர வைச்சிருவாங்க.."
"என்ன சொல்லுவாங்க..?"
"அருணோட ஸ்கூலில பிரின்ஸிபால் என்னைப் பார்க்கனும்னு சொன்னார்.. அர்ச்சனாவோட ஸ்கூலில ஸ்போர்ட்ஸ்டே நடக்குது.. அதில பேரண்ட்ஸ் சார்பா நான் போய் நிற்கனும்.. இப்படி எதையாவது சொல்லுவாங்க.. அதில ஒருதிட்டம் ஒளிஞ்சிருக்கும்டி.. இவங்க நினைச்சுக்கு வாங்க... அது எனக்குத் தெரியாதுன்னு... எனக்கு இவங்களைப் பத்தின எல்லாமும் தெரியும்ன்னு இவங்களுக்குத் தெரியாதுடி.."
ஊர்மிளாவுக்கும் அது தெரிந்தது.. அது ஒரு தந்திரம்... அருண்குமாருக்கும்... அர்ச்சனாவிற்கும்... நரேந்திரன்தான் கார்டியன்.. என்று உலகத்துக்கு காட்டும் முயற்சி அது..
"எனக்கு எரிச்சலாய் வரும்.. ஆனா.. அருணும்.. அர்ச்சனாவும் பாவம்ங்கிற நினைப்பு மனசில வரும்.. அதனாலே இவங்க கேட்டதைச் செய்வேன்.. தாத்தாவுக்கு அது பிடிக்கலை..."
'யாருக்குத்தான் பிடிக்கும்..?' என்று ஊர்மிளா நினைத்துக் கொண்டாள்..
அவளுடைய கண்ணான மகளின் மனதைப் புண்ணாக்கி.. அதிவிரைவில் மேலோகத்திற்கு அனுப்பி விட்ட புண்ணியவானின் சாகசக்கார இரண்டாம் மனைவியையும் அவள் பெற்ற பிள்ளைகளையும் அவர் மகள் பெற்ற பேரன் பார்த்துக் கொள்வதை புத்தர்கூட அனுமதிக்க மாட்டார்.. கஜேந்திரன் எப்படி அனுமதிப்பார்..?
"இங்கே வரக்கூடாதுன்னு தடுத்தார்.. இவங்களை சென்னைக்கு அனுப்பி விடச் சொல்லிச் சொன்னார்.. என்னால் அது முடியலை.. அப்பா சித்தியைப் பார்த்துக்கச் சொல்லி என்னிடம் சொல்லலை.. ஆனா.. அருணையும்.. அர்ச்சனாவையும் காப்பாத்துன்னு கேட்டுக்கிட்டாரே.. அந்தக் கடமையிலிருந்து எப்படி நான் விலகி நிற்பேன்..? ஸோ.."
"ஸோ..?"
"நான் தாத்தா.. பாட்டியைப் பிரிந்து இவங்க வீட்டுக்கு வந்துட்டேன்.."
"அவங்களைப் பார்க்கப் போக மாட்டிங்களா..?"
"போவேன்... தாத்தாவைத்தான் தினமும் கம்பெனியில பார்த்துருவேனே.. பாட்டியைப் பார்க்க வேணாமா..? அதான்.."
நரேந்திரனின் கனிந்த முகத்தில் தெரிந்த பாசத்தில் இவன் அன்னையைப் பெற்ற அன்னையை.. அன்னைக்கு இணையாக நினைக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா..
"நம்ம கல்யாணத்துக்கு ஏன் அவங்க வரலை..? அவங்களைப் பார்க்க ஏன் என்னை நீங்க அழைத்துக்கிட்டுப் போகலை..."
ஊர்மிளா கேட்டு விட்டாள்.. அதைக் கேட்காமலிருக்க அவளால் முடியவில்லை.. அவளுடைய கணவனைப் பெற்ற அன்னையின் வீட்டை விட்டு.. அவனின் சிற்றன்னையுடன் அவள் சேர்ந்து வசிக்கிறாள்.. ஏன் நரேந்திரன் அவளை அவனுடைய சொந்த அன்னையின் வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை..?
இந்தக் கேள்விக்கான விடை அவளுக்குத் தேவைப்பட்டது..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -57
அழகான ராட்சசியே -57
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-57.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-57.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy