அழகான ராட்சசியே -56

56 எண்ணமெல்லாம் நிறைந்திருந்தும் எனைவிட்டு நீங்கிட்ட.. அழகான ராட்சசி நீ.... வருங்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்பதை நிகழ்கால...


56
எண்ணமெல்லாம் நிறைந்திருந்தும்
எனைவிட்டு நீங்கிட்ட..
அழகான ராட்சசி நீ....


வருங்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்பதை நிகழ்காலத்தில் கணித்துச் சொல்லக் கூடிய திறமை படைத்தவர் யார்..? தேர்ந்த ஆருடக்காரர்களால் கூட ஓரளவிற்கு மேல் அதைக் கணித்துச் சொல்ல முடியாது..
நரேந்திரன் தேர்ந்த ஆளுடக்காரன் அல்ல..
அவன் தேர்ந்த பிஸினெஸ் மேன்.. உலகம் சுற்றி வியாபாரம் செய்யத்தான் அவனுக்குத் தெரியும்.. எதிர்கால நிகழ்வுகளை கணித்துச் சொல்லத் தெரியாது..
அதனால்தான்.. அகல்யாவின் மீது அவனுக்கு அதிகப்படியான அன்போ.. நல் அபிப்ராயமோ கிடையாது.. அவனுக்கு அவளைப் பிடிக்காது என்பதை வெளிப்படையாக ஊர்மிளாவிடம் ஒப்புக் கொண்டான் அவன்..
"அப்பாவோட செகண்ட் வொய்ப்ங்கிறதினால நேச்சராவே எனக்கு அவங்க மேல வெறுப்புதான்.. பட்.. அப்பாவோட இறப்புக்குப் பின்னால அவங்களுக்குன்னு யாரிருக்கான்னு பரிதாபம் வந்தது.. அந்த பரிதாபம் இவங்களை நேரில பார்த்ததும் சொல்லாம.. கொள்ளாம ஓடியே போயிருச்சு.. ம்ஹீம்.. அப்பா போனதுக்கு இவங்க கொஞ்சம்கூட வருத்தப்படலை.. அதுக்குப் பதிலா அப்படி அவர் போனதினாலதான் இப்படியொரு லக்சரி லைப் அவங்களுக்கு கிடைச்சிருக்குங்கிறதைப் போல பேசினதில எனக்கு வெறுத்துப் போயிருச்சு.."
அகல்யா பேசும் விதத்தை அறிந்து வைத்திருந்த ஊர்மிளா மௌனமாக நரேந்திரன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள்.. ஒரே வீட்டில் மாமியார் என்ற உறவுடன் அகல்யா கூட வசித்துக் கொண்டிருக்கும் போது அவளைப் பற்றிய அபிப்ராயத்தை ஊர்மிளா பேசுவது ரசக்குறைவானது என்பது அவளின் எண்ணம்..
"என்ன சொல்லி என்ன பண்ண..? அம்மா ஹார்ட் பேசண்ட்.. எங்க தாத்தாவோட ஸ்டேட்டஸீக்கு ஈக்குவலான இடத்தில அவங்களை மேரேஜ் பண்ணிக் குடுத்தா போகிற வீட்டில தன்மகள் பாதுகாப்பா.. நிம்மதியா வாழ்வாங்களான்னு தாத்தாவுக்கு பயம்.. எந்த கோடிஸ்வர மாப்பிள்ளை நோயாளி மனைவியை பெட்டில் படுக்க வைத்து.. மருந்து மாத்திரை கொடுத்துப் பார்த்துக் கொள்வான்..?"
"உங்க அப்பா பார்த்துக்கிட்டாரா..?"
"இல்லை.. அதுதான் வேதனையான விசயம்.. எங்க தாத்தாவும் பாட்டியும் பாத்துக்கிட்டாங்க.. அந்த வகையில என் அப்பாவுக்கு அம்மாவை மேரேஜ் பண்ணிக் குடுத்தது அவங்களுக்கு வசதியான ஒன்னாத்தான் அமைஞ்சு போனது.. வீட்டோடு மாப்பிள்ளையாய் என் அப்பா இருந்ததினால்தான் என் அம்மாவை கண்ணுக்குள் வைத்து என் தாத்தா.. பாட்டியால் பார்த்துக் கொள்ள முடிஞ்சது.. அதுவே என் அம்மாவை வேறு இடத்தில மேரேஜ் பண்ணிக் கொடுத்திருந்தா அது முடிஞ்சிருக்காதில்ல...?"
"உண்மைதான்.. உங்க தாத்தா.. பாட்டியோட நினைப்பில தவறு இல்லை நரேன்... ஒற்றைப் பெண்ணைப் பெற்றவங்க இப்படித்தான் நினைப்பாங்க.. வசதியில்லைன்னாலும் பரவாயில்லை.. சொந்தபந்தம்ன்னு யாருமில்லாத அநாதையா இருந்தாலும் பரவாயில்லை.. வீட்டோடு மாப்பிள்ளையாய் இருந்தால் போதும்.. அப்போதுதான் நம்ம மகளை நாம கவனிச்சுப் பாதுகாத்து வைத்தியம் பண்ணிப் பார்த்துக்க முடியும்ன்னு உங்க தாத்தா பாட்டி நினைச்சிருக்காங்க.."
"யு ஆர் கரெக்ட் ஊர்மிளா.. அதை அப்பா புரிஞ்சுக்கலை.. மாறா.. அவரோட சூழ்நிலையை என் தாத்தாவும்.. பாட்டியும் யூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னு மருகியிருக்கிறார்.."
"உங்க அம்மாவோட அன்பும் காதலும் அவர் மனசை மாற்றலையா..?"
"அதுதான் என் கோபம் ஊர்மிளா.. ஆயிரம்தான் என் தாத்தாவும்.. பாட்டியும் செஞ்சது தப்பாவே இருக்கட்டும்.. அவங்க செய்ததுக்கு என் அம்மா என்ன பண்ணுவாங்க..? எப்படி என் அப்பாவின் சம்மதம் கேட்காமலேயே அவரோட மேரேஜை தாத்தா முடிவு பண்ணினாரோ.. அதைப் போலத்தான் என் அம்மாவோட சம்மதத்தையும் கேட்காம மேரேஜை முடிவு பண்ணியிருக்காரு.. இவர்தான் உனக்கு வரப் போகிற மாப்பிள்ளைன்னு மணமேடையில ஏறுகிற வரைக்கும் அம்மாவுக்கு.. அப்பாவை.. என்னோட தாத்தா அடையாளம் காட்டவேயில்லையாம்.. அம்மா அதைப் பெரிதாய் நினைத்திருக்கலாமே.. நான் ஹார்ட் பேசண்ட்ங்கிறதினாலதானே... என் கணவரை தேர்ந்தெடுக்கிற உரிமை எனக்கு மறுக்கப் பட்டிருக்குன்னு மனசுக்குள்ளே புழுங்கியிருக்கலாமே.. அம்மா அதைச் செய்யலையே.. ஒன்று சொல்லவா.. என் அம்மாவோட அழகுக்கும்.. குணத்துக்கும்.. அப்பாதான் அவங்களுக்கு மேட்சா இருக்க மாட்டார்.."
ஊர்மிளா கனிவுடன் புன்னகை செய்தாள்.. கணவனின் மனம் அவளுக்கும் புரிந்தது.. எல்லாக் குழந்தைகளும் மண்ணில் பிறந்தவுடன் முதலில் பார்ப்பது தாய் முகத்தைத்தான்... தாய்ப்பாசத்தை என்றுமே தந்தை பாசம் முந்தியதில்லை..
நரேந்திரன் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்து விட முடியுமா..?
"அம்மா அழகா இருப்பாங்கடி.. உன்னைப் போலவே அழகு.."
கணவனின் இந்த வார்த்தைகள் அவளைத் தாலாட்டின.. அவளுடைய சொந்த மாமியார் எப்படி இருப்பாள் என்று காணும் ஆவல் அவள் மனதில் எழுந்தது.. அடிக்கடி அவள் கேட்பாள்..
"உங்க அம்மா எப்படியிருப்பாங்க நரேன்..? போட்டோ இருக்குமே.. காட்டுங்களேன்.."
நரேந்திரன் பேசாமல் இருப்பான்.. அவள் கேட்டதற்கு சரியென்றும் சொன்னதில்லை.. மறுத்தும் சொன்னதில்லை.. அந்த வீட்டில் நளினியின் படமோ.. செழியனின் படமோ இருக்கவில்லை..
அதையெல்லாம் நினைவு படுத்திக் கேட்க இதைவிட சிறந்த தருணம் வாய்க்கப் போவதில்லை என்று அவளுக்குத் தோன்றியது... அவர்கள் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள்.. அவர்களுக்கு இடையில் இருந்த மேஜையில் சூடு குறையாமலிருக்க.. ஹாட் பாக்ஸ்களில் நிரப்பப்பட்ட பதார்த்தங்கள் மூடி திறக்கப்படாமல் வரிசை கட்டியிருந்தன..
சாப்பிடும் மனநிலையில் அவர்கள் இருவருமே இல்லை.. நிலவொளியில் சோறுண்ணுவது மட்டும் பேரானந்தம் கிடையாது.. மனதிலிருப்பதை அதை மதித்துத் கேட்பவரிடம் பகிர்ந்து கொள்வதும் பேரானந்தமே..
நரேந்திரன் அதைத்தான் செய்து கொண்டிருந்தான்.. அத்தனை காலமாக கணவனின் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை அவன் கொட்டித்தீர்க்க..
செவி மடுப்பதின் மூலம்.. அவனை அந்த பாரத்திலிருந்து மீட்டெடுத்து ரட்சிக்க முயன்று கொண்டிருந்தாள் ஊர்மிளா..
"அத்தையோட படத்தைக்கூட நீங்க எனக்குக் காட்டலை.."
ஊர்மிளாவின் மெல்லிய குற்றம் சாட்டும் வார்த்தைகளில் நரேந்திரன் தனது செல்போனை எடுத்தான்.. அதிலிருந்த அவனுடைய அம்மாவின் புகைப்படத்தைக் காட்டினான்..
நளினி அழகாக இருந்தாள்.. சோகையாக.. மெலிதான கொடிபோன்ற தோற்றத்துடன் அமைதி தவழும் சாந்தமான முகத்துடன் தெய்வீகமான அழகுடன் இருந்தாள்..
'இப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் வாழ இவருடைய அப்பா கொடுத்து வைத்திருக்கனும்ன்னு இவர் சொல்வதில் ஒன்னும் மிகையில்லை..'
"அத்தை படத்தையும்.. மாமா படத்தையும் இந்த வீட்டில் மாட்டி வைக்கலையே.. ஏன்..?"
"விட்டால்தானே.." நரேந்திரனின் முகம் மாறியது..
புருவங்கள் முடிச்சிட.. அண்ணாந்து முழுநிலவை வெறித்துப் பார்த்தவனின் புருவ மத்தியிலிருந்த சுளிப்பை வருடிக் கொடுத்து போக்கி அன்னையாய் அவனை மார்போடு அரவணைக்க அவளது உள்ளம் துடித்தது.. மனக் குதிரைக்கு கடிவாளமிட்டாள்..
"அம்மா படம் இங்கே இருந்தால்.. நான் வேறு.. இவங்க வேறுன்னு அருண், அர்ச்சனாவுக்கு தோணிப் போயிருமாம்.. வேலையாள்கள் இவங்களை மதிக்க மாட்டாங்களாம்.. இப்படிச் சொல்லியே இவங்களை அம்மான்னு கூப்பிடவும் வைச்சாங்க.."
"ஓ.."
"அப்பா படத்தைப் பார்த்தா.. அவர் ஏமாற்றி இவங்களை இரண்டாம் மனைவியாக மேரேஜ் பண்ணிக் கிட்டது ஞாபகம் வந்திருமாம்.. பொட்டுன்னு போய் சேர்ந்திருவாங்களாம்.."
அகல்யாவாவது.. பொட்டென்று போய் சேர்வத தாவது.. என்று தோன்றிய போதும் ஊர்மிளா அதைப்பற்றி எதையும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..
"அப்பா ஒரு வகையில வாழத் தெரியாதவர்டி.. அட்சய பாத்திரம் போல அள்ள அள்ளக் குறையாத அன்பைக் கொடுக்கிற என் அம்மா அவருக்கு மனைவியாக் கிடைச்சாங்க.. அந்த வாழ்க்கையை நிம்மதியா வாழ அவருக்குத் தெரியலை.."
"அவங்க சந்தோசமாத்தானே இருந்தாங்க..?"
"ஆரம்பத்தில் அப்பா ஒட்டாமல் இருந்தாலும்.. போகப் போக அம்மாவின் அழகில் மயங்கிப் போயிருக் கிறார்.. அவங்களோட சந்தோசமா குடும்பம் நடத்தியிருக் கிறார்.. அப்போதெல்லாம் அம்மா ஹார்ட் பேசண்ட்ங்கிற விவரம் அவருக்குத் தெரியாது.."
"ஓ.."
"அது தெரிய வந்தப்ப.. அவரையும் அறியாம ஒரு வார்த்தையை விட்டுட்டார்.."
என்ன வார்த்தையென்று கேட்டும் தைரியம் ஊர்மிளாவுக்கு வரவில்லை... அருமையான பெண்ணொருத்தி மனைவியாகிடைத்தும் அவளுடன் மனமொப்பி வாழாமல் வாழ்க்கையை தொலைத்து விட்ட மனிதர் என்ன மாதிரியான வார்த்தையைச் சொல்லியிருப்பார் என்று கேட்டறிய அவள்மனம் துணிய வில்லை...
"அவர் அனாதையா.. அம்மாவோட அப்பா கொடுத்திருக்கிற வேலையை நம்பி இருக்கிறவன்ங்கிற தினாலதான.. அம்மாவைப் போல ஒரு நோயாளிப் பெண்ணை அவர் தலையில் அம்மாவின் அப்பா கட்டி விட்டார்ன்னு கேட்டிருக்கார்.."
"கடவுளே..!"
ஊர்மிளா மனம் பதைத்தாள்.. ஒரு பெண்ணாக நளினியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவளால் உணர முடிந்தது..
"அவர் செய்தது தியாகம்ன்னும் அப்பா சொல்லி யிருக்கார்.. அம்மாவுக்கு அதைக் கேட்டதும் ஹார்ட் பெயின் வந்திருச்சு.. ஹாஸ்பிடலில் சேர்த்திருக்காங்க.. அப்ப
நான் மூன்று மாதக் குழந்தையாம்.. அம்மா டிஸ்ஜார்ஜ் ஆகி வந்தவுடன் அப்பா கில்ட்டியாய் ஃபீல் பண்ணி அவங்ககிட்ட ஸாரி சொல்லப் போயிருக்கார்.. அம்மா அவங்களோட ரூம் கதவை அடைச்சிட்டாங்களாம்.."
ஊர்மிளா பேச்சிழந்தாள்.. அவருடைய காதல் கணவனின் அம்மாவிற்கு எல்லாமும் இருந்திருக்கிறது.. இருந்தும்.. எதுவும் இல்லாத அநாதை போல அவளைத் திருமணம் செய்து கொண்டதை தியாகமென்று அவளுடைய கணவர் சொல்லியிருக்கிறார்..
எந்தப் பெண்ணால் அதைத் தாங்க முடியும்..?
"அம்மாவோட டெலிவரி டயத்திலதான் அவங்க ஹார்ட் பேசண்ட்ங்கிற உண்மையே அப்பாவுக்கு தெரிய வந்திருக்குது.. அம்மா மறைக்கனும்னு நினைக்கலை.. அவங்க அதை பெரிதாகவே நினைத்துக்க மாட்டாங்க.. அதோட தாத்தா சொல்லியிருப்பார்ன்னு நினைச் சிட்டாங்க.. அதை என் அப்பா வினயமா மனதில போட்டு வைச்சிருந்து.. நான் பிறந்த மூன்றாம் மாதத்திலே அப்படி ஒரு வார்த்தையை அவர் கேட்டுட்டார்.. அம்மா அப்போதிலிருந்து அப்பாகிட்ட முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசாம தள்ளி வைச்சுட்டாங்க.."
"ம்ம்ம்..."
"அப்பா அதை எதிர்பார்த்திருக்கலை.. அம்மாவோட அன்பையும்.. காதலையும் மட்டுமே பார்த்திருந்தவர்.. அவங்களோட ரோசத்தையும், கோபத்தையும் பார்க்க வேண்டி வந்திருச்சு.. அம்மா கடைசிவரைக்கும் அப்பாவை மன்னிக்கலை.. அவர் கூட சேர்ந்து வாழலை.. ஒரே வீட்டில் இருந்தாலும்.. ரெண்டு பேருமே தனித்தனி ரூமில் இருந்திருக்காங்க.."
"ம்ம்ம்..."
"அம்மாவோட கடைசி நொடிகளில தாத்தாகிட்ட சொன்னாங்களாம்.. அப்பாவை விடுவிச்சு வீட்டை விட்டு அனுப்பி வைச்சிருங்க.. அவருக்கு மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழட்டும்ன்னு கேட்டுக்கிட்டாங்களாம்.. அப்போக்கூட அவங்க அப்பாவோட முகத்தைப் பார்க்கலையாம்.. அவங்க போன பின்னாலே.. தானாவே அப்பா வீட்டை விட்டு வெளியே போயிட்டார்.. அப்போ நான் ஸ்கூலில் படிச்சுக்கிட்டு இருக்கேன்.. அவர் வீட்டை விட்டுப் போன மறுமாதமே அவரோட செகண்ட் மேரேஜ்க்கான இன்விடேசன் எங்கள தேடி வருதுடி.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..?"
துயரமாகத்தான் இருந்திருக்கும்.. அப்படிப்பட்ட தகப்பனை வெட்டிச் சாய்த்தாலென்ன என்ற வேகம் இருந்திருக்கும்..
ஊர்மிளாவின் விழிகளில் நீர் திரையிட்டது..
"அவர் மட்டும் அம்மாகிட்ட அப்படிப் பேசாம இருந்திருந்தா இன்னும் கொஞ்ச காலத்துக்கு என்
அம்மா உயிரோடு இருந்திருப்பாங்கடி.. அவங்க வாழ்கிற வாழ்க்கையை சந்தோசமா வாழ்ந்திருப்பாங்கடி.. அவர் அதைச் செய்யலை.. அவரும் வாழாம.. அம்மாவையும்
வாழ விடாம.. சீக்கிரமா அவங்களை மேலோகத்துக்கு அனுப்பி வைச்சார்.. அந்தப் பாவம்தாண்டி அவருக்கு செகண்ட் வொய்பா வந்து வாட்டுச்சு.. அவர் வாழ்ந்த வாழ்க்கையிலே எங்கம்மா சொர்க்கத்தைக் காண்பித்தாங்க.. இவங்க நரகத்தைக் காண்பிச்சு வைச்சு.. எங்கம்மாவை அவர் சீக்கிரமா மேலோகத்துக்கு அனுப்பி வைச்சதைப் போல.. அவரையும் அனுப்பி வைச்சாங்க.. இதை நான் சொல்லலைடி.. அவர்தான் சொன்னார்.."
"அவருக்கு உடம்பு சரியில்லையா..?"
"ம்ம்ம்.. சொன்னா ஆச்சரியப்படுவ.. அவரும் ஹார்ட் அட்டாக்கிலதான் போய் சேர்ந்தாரு.."
"என்னது..?..!"
ஊர்மிளாவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.. மனைவிக்கு இதய நோய் இருப்பதை குத்திக்காட்டிப் பேசியவருக்கே இதயநோய் வந்து இறந்தாரா..?
"ஆமாண்டி.. இதைத்தான் கடவுளோட ஜட்ஜ் மெண்ட்டுன்னு சொல்கிறது.. ஆரோக்கியமான மனிதன்.. அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குது.. எதனால தெரியுமா..? எல்லாம் இவங்க பேசின பேச்சினாலே.. ஒருவகையில் இவங்க பேசினதையும் குற்றம்ன்னு சொல்ல முடியாதுடி.. கோடிஸ்வரன்.. கம்பெனிக்கு முதலாளின்னு சொல்லிப் பெண் கேட்டு.. செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு வந்தபின்னால.. இல்லை யில்லை.. நான் கோடிஸ்வரியோட புருசன்தான்.. அவளோட கம்பெனியில சம்பளம் வாங்கற ஜெனரல் மேனேஜர்தான்னு சொன்னா எந்தப் பெண்ணுக்குத்தான் கோபம் வராது..?"
மற்றவர்களுக்கு வருகிறதோ இல்லையோ.. அகல்யாவிற்கு நிச்சயமாக வரும் என்று புரிந்து வைத்திருந்ததினால் ஊர்மிளா ஒன்றும் சொல்லவில்லை.. அகல்யாவைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அவளால் எதையும் பேச முடியவில்லை..
அந்த அளவுக்கு அகல்யாவைக் குறித்த எச்சரிக்கை யுணர்வு அவள் மனதில் இருந்தது.. என்ன இருந்து என்ன பண்ண..? அவளால் அகல்யாவின் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க முடியாமல் போய் விட்டதே..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -56
அழகான ராட்சசியே -56
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-56.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-56.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy