அழகான ராட்சசியே -55

55 நெடுநாள்களாய் நான்கொண்டிருந்த.. நெருஞ்சிமுள் துயர் கலைந்த அழகான ராட்சசி நீ.... நாடாளும் வேந்தனாக இருந்தாலும் அவனுக்கும் மனத...

55
நெடுநாள்களாய் நான்கொண்டிருந்த..
நெருஞ்சிமுள் துயர் கலைந்த
அழகான ராட்சசி நீ....


நாடாளும் வேந்தனாக இருந்தாலும் அவனுக்கும் மனத்தை அழுத்தும் உணர்வுகள் இருக்கும்.. பகிர்வதற்கு ஆளில்லாமல் அவன் தவிக்கக் கூடும்.. அதைப் பகிரவே முடியாமல் வாழ்ந்து முடிந்து போனவர்களும் இந்த உலகத்தில் உண்டு.. நரேந்திரனும் அவ்வாறே வாழ்ந்து முடிந்திருப்பான்..
ஊர்மிளா என்றொரு தேவதை அவனது வாழ்வில் வராத வரைக்கும் அவனும் அவ்வாறுதான் இருந்தான்.. எதையும் யாரிடமும் சொல்லாமல் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டுப் புதைத்துக் கொண்டு.. இரும்பு மனிதனாக.. எல்லாத்துயர்களையும் ஜீரணம் பண்ணிக் கொண்டு.. எல்லோரையும் தாங்கும் வலிமையானவனாக வாழ்ந்து கொண்டிருந்தான்..
அவன் மனதில் உள்ளே புகுந்து.. மனக்கதவைத் தட்டி.. உள்ளே இருக்கும் உணர்வுகளை வெளியே கொண்டுவர யாராலும் முடிந்ததில்லை.. அந்த அளவுக்கு யாரையும் அவன் அருகே நெருங்க விட்டதில்லை.. ஊர்மிளா அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து அவன் மனக் கதவைப் புயலாய் திறந்து உள்ளிருக்கும் தூசிகளையும், துயர்களையும் வெரிக் கொணர்ந்தாள்..
மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மனதுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் துக்கங்களையும்.. குமுறள் களையும் கொட்டி விடும் தருணம் கூட அருமையான தருணம்தான்..
நரேந்திரனுக்கு அன்று அந்தத்தருணம் வாய்த்திருந்தது..
மெலிதான நிலவொளியில் அவனும்.. அவளும்.. மட்டுமே இருந்த அந்தத் தனிமையான பொழுதில் நரேந்திரனின் மனக்கதவு திறந்தது..
"என் தாத்தா.. அதாவது.. என் அம்மாவின் அப்பா.. இந்த பெங்களூரிலேயே நம்பர் ஒன் பணக்காரர்... கோடிஸ்வரர்.. அவருடைய பூர்வீகம் தர்மபுரி.. அவரோட தாத்தா காலத்திலேயே பிஸினெஸ்ன்னு பெங்களூருக்கு வந்து செட்டிலாகிட்டாங்களாம்.."
"உங்க அப்பா வழித்தாத்தா..?"
"இருந்தால்தானே சொல்கிறதுக்கு.."
வெறுமையான குரலில் சொன்னான் நரேந்திரன்.. அவனைப் பேச விட்டு அமைதி காத்தாள் ஊர்மிளா.. புரையோடிய நினைவுகளை வெளிக் கொணர்ந்தால்தான் அவற்றை ஆற்றிவிட வழி கிடைக்கும்..?
"அப்பா அநாதை.. ஒரு வகையில் நான் உன்னிடம் எனக்கு யாருமில்லைன்னு சொன்னதுக்கு அடிப்படை இதுவாக இருக்கக்கூடுமோ என்னவோ.. அப்பா தன்னோட கடைசி நிமிசங்களில இப்படித்தான் என்னிடம் சொன்னார் ஊர்மிளா... அவர் ஒரு அநாதை... அவருக்குன்னு யாருமில்லைன்னு சொன்னார்.. ஒன்றைச் சொல்லவா.. இந்த வார்த்தைகளை அவர் என்னிடம் சொன்னப்ப.. அவரோட முதல் மனைவியின் மகனா நானிருந்தேன்.. அவரோட இரண்டாவது மனைவியா சித்தி இருந்தாங்க.. அவங்க பெற்ற அருணும்.. அர்ச்சனாவும் இருந்தாங்க.. இருந்தும் அப்பா என்னிடம் அப்படிச் சொன்னார்.."
நரேந்திரனின் வார்த்தைகளில் மனதின் வலி தெரிந்தது.. ஊர்மிளா அவன் கைகளைப்பற்றி ஆறுதல் படுத்த முனைந்தாள்.. அது அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது..
அகல்யாவின் முன்னிலையிலும்.. அவளுடன் பேசும் போதும் மட்டுமே நரேந்திரன் அவளை அம்மா என்று அழைப்பதையும்.. மற்ற தருணங்களிலும்.. அவளைப் பற்றிக் குறிப்பிடும் போதும் அகல்யாவை சித்தி என்றே சொல்வதையும் ஊர்மிளா கவனித்திருந்தாள்..
அப்போது அதைப்பற்றி அவள் கேட்டே ஆக வேண்டியிருந்தது... இரட்டைவேசம் போடுவது தவறென்றால்.. அவளது நரேந்திரன் போடுவதும் இரட்டை வேடம்தானே..? அதை ஏனென்று அவள் அறிந்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமல்லவா..?
"என்னால் அவங்களை அம்மான்னு ஏத்துக்க முடியாது ஊர்மிளா.." என்றான் நரேந்திரன்..
ஏனென்று அவளால் கேட்க முடியவில்லை.. எப்படி அவள் கேட்பாள்..? யாராலும் இட்டு நிரப்ப முடியாத இடம் அம்மாவெனும் இடமல்லவா..?
"என் அம்மாவுக்கு என்னைக் கவனிக்க முடியாம அவங்க பேசண்டா இருந்திருக்கலாம்.. அதோட... அவங்களோட பழக்கப்படி.. வேலையாள்களை வைத்தே எல்லா வேலைகளையும் செய்ய வைத்திருக்கலாம்.. ஆனா அவங்கதான் என் அம்மாங்கிறதை ஒரு பார்வையாலே அவங்க உணர்த்தி விடுவாங்க.. ஒரு பேச்சில தெரியப் படுத்திருவாங்க.. அவங்களோட செய்கை அத்தனை யிலேயும் பாசம் கொட்டிக்கிடக்கும்.. என் அம்மா என்மேலே உயிரையே வைத்திருந்தாங்க ஊர்மிளா.. ப்ம்ச்.. எனக்குத் தான் கொடுத்து வைக்கலை.. என் சின்ன வயசிலேயே அவங்க என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க.. அவங்க இடத்திலே என்னால வேற ஒருத்தரை ஏற்றுக்க முடியலை.. என் அப்பாவை நான் தள்ளி வைத்ததுக்கு இதுதான் முக்கிய காரணம்.. பெண்டாட்டி செத்துட்டா புருசன்காரன் இன்னொரு மேரேஜ் பண்ணிக்கிட்டுத்தான் ஆகனுமா..? எப்படிடீ..? பெண்டாட்டி இடத்தில இன்னொருத்தியை வைத்துப் பார்க்க எப்படிடீ முடியும்..?"
அந்த நொடியில் அகில உலகத்துக்கும் தான் அரசியாகி விட்டதைப் போல ஊர்மிளா உணர்ந்தாள்.. தான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராதவனாக நரேந்திரன் தன் மனதிலிருந்ததைக் கொட்டிக் கொண்டிருந்தான்..
"எப்படி என்னால் அம்மாவோட இடத்தில வேறு ஒருத்தங்களை நினைச்சுப் பார்க்க முடியலையோ.. அப்படித்தானே அப்பாவுக்கும் இருந்திருக்கனும்..? பெண்டாட்டியோட இடத்தில வேறு ஒரு பெண்ணை நினைத்துப் பார்க்க முடியாதவன்தான் உண்மையான புருசன் ஊர்மி.."
அந்த உண்மையான புருசனை தனக்கு அளித்த கடவுளுக்கு மனதிற்குள் நன்றி சொன்னாள் ஊர்மிளா..
'இவனல்லவா உண்மைக் காதலன்..!'
அவனை இறுக்கிக் கட்டி முத்தமிட வேண்டும் போல அவளுக்கு இருந்தது.. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.. அது போன்ற சூழலில்.. அவளின் அருகாமை வேறு விதமான உணர்வுகளை அவனுக்குள் தூண்டி விடக்கூடும்.. அது கூடாது.. அவன் பகிர நினைக்கும் துயரங்களை, பகிர்ந்து முடிக்கும் வரை அவள் குறுக்கிடக் கூடாது..
"நான் இவங்களை சித்தின்னுகூட நினைச்சதில்லை ஊர்மிளா.. அதுக்கான அவசியமும் எனக்கு ஏற்படலை.. அம்மா இறந்தபின்னாலே அப்பா வீட்டை விட்டுப் போயிட்டாரு.. செகண்ட்மேரேஜ் பண்ணிக்கிட்டு தனிக்குடித்தனத்தை ஆரம்பிச்சிட்டாரு.. கம்பெனியில அவர் பார்த்து வந்த ஜெனரல் மேனேஜர் வேலையில
இருந்து அவரைத் தூக்கிக் கடாசிரனும்னு தாத்தா துடிச்சாரு.. நான் விடலை.."
"அப்பாங்கிற பாசம்.."
"ஊஹீம்.. அது அற்றுப் போயிருச்சு.. என் அம்மாவுக்கு மட்டும் புருசனா இல்லாதவர்மேலே அப்பாங்கிற பாசம் எப்படி வரும்..? எனக்கு வரலை.. பட்.. அவரை வேலையிலிருந்து தூக்கிட்டா அவருக்கு யார் வேலை கொடுப்பாங்க..? இந்த வயசில.. இவ்வளவு சம்பளத்தோட வேலை அவருக்கு நிச்சயமா வேலை கிடைக்காது ஊர்மிளா.. அட்டெண்டர் வேலை கூடக் கிடைக்காது.. அதனால்தான் வேணாம்ன்னு சொன்னேன்.."
"ம்ம்ம்.."
"அப்பா அநாதை ஆசிரமத்தில வளர்ந்திருக்காரு ஊர்மிளா.. அவரோட பெத்தவங்க யாருன்னு அவருக்குத் தெரியாது.. அதனால் அவர் அநாதைன்னு ஒரு காலத்தில சொல்லியிருக்கலாம்.. ஆனா அவர் சாகிறப்ப அப்படிச் சொன்னார்.. அவருக்குன்னு யாருமில்லைன்னு ஒன்றுக்கு இரண்டாய் பெண்டாட்டிகளைக் கட்டி குடும்பம்
நடத்தி.. அவங்களில ஒருத்தங்களை உயிரோட வைத்துக்கிட்டு அவர் அப்படிச் சொன்னார்.. மூத்த மனைவியின் மகனா நானிருக்க.. இளைய மனைவியின் பிள்ளைகளா அருணும், அர்ச்சனாவும் இருக்கும் போது அப்படிச் சொன்னார்.. அதுதான் என் மனசை வேதனைப் படுத்துச்சு.."
"நரேன்.."
"யார் மனசில என்ன துயரம் இருக்குன்னு யாருக்குத் தெரியும் ஊர்மிளா..? வெளியில சிரிச்சுக்கிட்டு மனசுக்குள்ளே அழுதுகிட்டிருக்கிற எத்தனை மனுசங்க
இந்த உலகத்திலே வாழ்கிறாங்களோ.. யாருக்கு அது தெரியும்..?"
ஊர்மிளா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. இது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது கடினமென்று அவளுக்குத் தோன்றியது..
விடை சொல்ல முடியாத இது போன்ற கேள்விகள் தான் மனித வாழ்க்கைக்கு தளையிட்டிருக் கின்றன..
'சிலர் சிரிப்பார்..
             சிலர் அழுவார்..
    நான் சிரித்துக் கொண்டே..
             அழுகின்றேன்..'
பழைய காலத்து திரைப்படத்தின் பாடல் வரிகள் அவள் மனதில் ஓடின.. அதைப் போன்ற ஓர் மனநிலையுடன் தான் நரேந்திரன் அவள் முன்னால் அமர்ந்து அவனது மன பாரங்களை இறக்கிக் கொண்டிருந்தான்..
"அத்தனை நாள் வரைக்கும் நான் என் பக்கத்தை மட்டுமே பார்த்துக் கிட்டு இருந்த குற்ற உணர்ச்சி என் மனசை தாக்குச்சு ஊர்மிளா.. அவர் பக்கம் என்ன இருக்குன்னு நான் கேட்காம விட்டுட்டேனோங்கிற குற்ற உணர்வு அதிகமாச்சு.."
"நீங்க உங்க அப்பாகிட்ட பேசியிருக்கலாம்.."
"முடியலை.. அதுக்காக காரணத்தையும் நான் சொல்லிட்டேன்.. அநாதை ஆசிரமத்தில வளர்ந்த என் அப்பா.. படிச்சு.. எம்.பி.ஏ பட்டம் வாங்கி.. ஒரு மேனேஜரா என் தாத்தாவோட கம்பெனியில நுழைஞ்சிருக்கார்.."
"ம்ம்ம்.."
"என் தாத்தா கஜேந்திரன் இந்த பெங்களூரிலேயே நம்பர் ஒன் கோடிஸ்வரர்ன்னு சொன்னேனில்லையா..?"
"ம்ம்ம்.."
"என் பாட்டி.. சித்ரலேகாவும் அவரோட பணத்துக்கு ஈடுகொடுக்கிற குடும்பத்தில பிறந்து வளர்ந்தவங்கதான்.."
"ம்ம்ம்.."
"இப்படிக் கோடிஸ்வரப் பரம்பரையிலே பெண் கொடுத்து.. பெண் எடுத்துக்கிட்டு இருந்த எங்க தாத்தாவோட மகள்.. அதாவது என் அம்மா நளினி.. அவங்க கம்பெனியில வேலைபார்த்த சாதாரண மேனேஜரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.."
"காதல் கல்யாணமா..? நம்ம காதலைப் போலவா..?"
கேட்கும் போதே அந்தக் கேள்வியிலிருந்த அபத்தத்தை உணர்ந்தாள் ஊர்மிளா..
"என்ன பேசற நீ.." முகம் சுளித்தான் நரேந்திரன்..
"உன்னை நினைச்ச மனசில வேற யாரையும் என்னால நினைக்க முடியாதுடி.. நம்ம காதலைப் போய் நீ அவரோட கல்யாணத்துக்கு இணையாப் பேசற..?"
சிறகுகள் விரித்து வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தாள் ஊர்மிளா..
இதுபோன்ற துயரமான தருணத்தில்தானா அவன் இப்படியெல்லாம் பேசியாக வேண்டும் என்றிருந்தது அவளுக்கு..
அவன் சொன்னதைக் கேட்டதும் சிறகடிக்கும் மனது.. அவனைக் கட்டிக் கொள்ளத் துடிக்கிறதே.. அவள் என்ன செய்வாள்..?
கட்டவிழும் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடினாள் ஊர்மிளா.. இனிமையான நிலாவிருந்தில்.. ஆஸ்திரேலியாவில் அவர்கள் இருந்த காலத்தை அருகில் அழைத்துக் காட்ட வேண்டும் என்று மனதுக்குள் எழுந்த தாபத்தை திரையிட்டு மறைத்தபடி கணவனின் மனபாரத்தை கேட்டுக் கொண்டிருந்தாள் அந்த அன்புக் காதலி..
"தாத்தாதான் அப்பாவை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணியிருக்கார்.. அம்மாவை பெண் பார்க்கக் கூட அவர் அப்பாவை அனுமதிக்கலையாம்.. என் பெண்ணுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாய் ஆக்கிக் கொள்ளப் போகிறேன்னு என்னவோ கம்பெனிச் செய்தியைச் சொல்கிறதைப் போலச் சொன்னாராம்.. அப்பாவிடம் சம்மதம் கூடக் கேட்கலையாம்.."
"உங்க அப்பா அதை வலியுறுத்தியிருக்கலாமே.. பெண்ணைப் பார்க்கிறேன்.. பிடித்திருந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கலாமே.. யார் அவரைத் தடுத்தாங்க..?"
"அவரோட நிலைமை அவரைத் தடுத்திருக்கு.. வேலை கிடைத்ததும் அநாதை ஆசிரமத்தை விட்டு அவரை வெளியே அனுப்பிட்டாங்க... அந்த வேலை போச்சுன்னா அவர் பிளாட்பாரத்திலதான் நின்றாகனும்ங்கிற நிலைமையில அவராலே மறுத்துப் பேச முடியலை.. அது அப்பாவின் மனசில ஆழப் பதிஞ்சிருச்சு.. என்ன தான் அவரோட கல்யாணத்துக்குப் பின்னாலே அம்மாவோட அழகிலும்.. அன்பிலும் அவர் மயங்கினாலும்.. அவங்களைத் தேர்தெடுக்கும் உரிமை அவருக்கு மறுக்கப் பட்டு விட்டதை நினைச்சு மனசுக்குள் குமுறியிருக்கார்.."
"ஓ.. அதனாலதான் அத்தை இறந்ததும் அவர் தானாய் தேர்ந்தெடுக்கனும்னு உங்க சித்தியைத் தேர்ந்தெடுத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ..!"
ஊர்மிளாவின் வார்த்தைகளில் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் நரேந்திரன்..
"எப்படிடீ இவ்வளவு கரெக்டாச் சொன்ன..? அப்பாவும் அதைத் தான் சொன்னார்.."
"ம்ஹீம்.. உங்க அப்பாவுக்கு தேர்ந்தெடுக்கிற திறமை ரொம்பவும் கம்மிங்கிறதினாலதான் கடவுளாப் பார்த்து அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திருந்திருக்கிறார்.. உங்க அப்பா அது தெரியாம புதைகுழியில போய் இறங்கிட்டாரே.."
வருத்தத்துடன் சொன்ன ஊர்மிளா சிறு மனத்திடுக்கிடலுடன் நாக்கைக் கடித்துக் கொண்டாள்..
இப்படியா அவள் வாயில் வந்ததை வைத்துத் தள்ளுவாள்..?
"ஸாரி.." என்றாள்..
"இட்ஸ் ஆல் ரைட்.. இதுக்குப் போய் ஏன் ஸாரின்னு கேட்கிற..? நான் இவங்களை சித்தின்னு கூடக் கூப்பிட்டதில்லை.. அப்பா போனபின்னாலே இவங்களைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருச்சு.. இந்த வீட்டை வாங்கி இவங்களையும்.. அருண், அர்ச்சனாவையும் அழைத்துக்கிட்டு வந்து குடியிருக்க வைத்தேன்.. ஆரம்பத்தில இங்கே வந்து இவங்களைப் பார்த்துட்டு மட்டும்தான் போவேன்.. தாத்தாவுக்கு அது பிடிக்கலை.. எதிர்த்தார்.. மொத்தமா வீட்டை விட்டு வெளியில் வந்து.. இந்தக் குடும்பத்தோடு சேர்ந்து இருக்க ஆரம்பித்தேன்.."
"அருண்.. அர்ச்சனா..?"
"இப்பத்தான்.. நான்கு வருசங்களுக்கு முன்னாலே தான் இவங்களை நான் பார்த்தேன்.. வளர்ந்து நிற்கிற தம்பி... தங்கையிடம் என்ன ஒட்டுதல் வரும்..? அருணும், அர்ச்சனாவும் நல்ல பசங்க.. அவ்வளவுதான்.. அருண் மரியாதையாய் ஒதுங்கி நிற்பான்.. அர்ச்சனா அண்ணான்னு ஒட்டிக்குவா.. ரெண்டு பேரையும் தள்ளி வைக்க எந்தக் காரணமுமில்லையே.. அதேசமயம் வலுக்கட்டாயமா பாசத்தைக் கொட்டனும்னா அது ஆர்ட்டிபிஷியலா இருக்காதா..? அவங்க மேலே.. என் அப்பாவுக்கு பிறந்தவங்க முறையில தம்பி, தங்கைங்கிற பாசம் லேசா இருக்குது.. அர்ச்சனா மேலே அதிகப்படியா அது உண்டு.. தங்கையாச்சே.."
அவன் சொன்னதை ஆமோதிப்பதைப் போல தலையை அசைத்துச் சிரித்தாள் ஊர்மிளா.. புரிதலுடன் கூடிய புன்னகை அது..
"அர்ச்சனா அருமையான பெண்.."
"ம்ம்ம்.. அந்த வகையில் அவள் அவளோட அம்மா மாதிரி இல்லை.."
"உங்களுக்கு அவங்களைப் பிடிக்காதா..?"
ஆழ்ந்த குரலில் கேட்டாள் ஊர்மிளா.. அதுவரை அப்படியொரு கேள்வியை அவள் கேட்டதில்லை.. நரேந்திரன் தலையை அசைத்தான்..
"ஆமாண்டி.. அவங்களை எனக்குப் பிடிக்காது.."
அப்படிச் சொன்ன நரேந்திரன் தான் பிறிதொரு நாளில் யாரை 

அவனுக்குப் பிடிக்காது என்று சொன்னானோ.. அந்த 

அகல்யாவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து.. ஊர்மிளாவை 

வீட்டு ஹாலில் நிற்க வைத்து கேள்வி கேட்டான்




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -55
அழகான ராட்சசியே -55
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-55.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-55.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy