அழகான ராட்சசியே -51

51 ஒரு கண்ணில் வெயில் தந்து.. மறுகண்ணில் குளிர் தரும்.. அழகான ராட்சசி நீ.... நரேந்திரனும்.. ஊர்மிளாவும் காரை விட்டு இறங்கிய ப...


51
ஒரு கண்ணில் வெயில் தந்து..
மறுகண்ணில் குளிர் தரும்..
அழகான ராட்சசி நீ....


நரேந்திரனும்.. ஊர்மிளாவும் காரை விட்டு இறங்கிய போது அந்தத் தெருவே சோமசுந்தரத்தின் வீட்டு வாசலில் குழுமி நின்று அவர்களை வரவேற்றது.. அடிக்கடி அவனைப் பார்த்திருந்த எதிர் வீட்டுப்பெண் ஆரத்தி எடுத்தாள்.. அவள் கண்களில் பொறாமை வழிந்தது.. நரேந்திரன் இவ்வளவு பெரிய ஆளாக இருப்பான் என்று நினைத்துக்கூடப் பார்த்திராதவளின் மனதில் அது தெரிந்திருந்தால் அவனது கவனத்தைக்
கவர முயற்ச்சித் திருக்கலாமே என்ற நினைவு எழுந்தது.. அந்த நினைவை அவளது கண்கள் காட்டியதில் ஊர்மிளாவின் கை... நரேந்திரனின் கையோடு பிணைந்தது..
ஆரத்தி எடுத்த பெண்ணின் தட்டில் 1000 ரூபாய் தாளைப் போட்டான் நரேந்திரன்.. அவள் விழிகளில் வியப்புடன் எடுத்துக் கொண்டு வழி விட்டாள்.. அவளை முறைத்தபடி கணவனுடன் வீட்டுக்குள் பிரவேசித்தாள் ஊர்மிளா..
வீட்டை அழகாக அலங்கரித்திருந்தாள் பூங்குழலி.. இரண்டு நாள்களுக்குள் இத்தனை வேலைகளை அவளுக்காக.. அவளுடைய பெற்றோர் செய்து முடித்திருக் கிறார்கள் என்ற நினைவில் நெகிழ்ந்தாள் ஊர்மிளா..
ஹாலில் புதிதாக சோபா செட் இறக்கப்பட்டிருந்தது.. நீண்ட சோபாவில் நரேந்திரனையும்.. ஊர்மிளாவையும் உட்காரச்சொல்லி பால்.. பழம் கொடுத்து பகிர்ந்து உண்ண வைத்தாள் பூங்குழலி..
அதுபோன்ற சம்பிரதாயங்கள் பெங்களூரில் கடை பிடிக்கப்படவில்லை என்ற நினைவில் பெருமூச்சு விட்டாள் ஊர்மிளா..
எந்த சம்பிரதாயம்தான் அங்கே கடைபிடிக்கப் பட்டது..?
திருமண மண்டபத்திலிருந்து திருச்சிக்கு கிளம்பி வந்து விடாமல்.. பெற்ற பெண் எந்த முகவரியில் வசிக்கப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போய் விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன்.. அகல்யாவின் அனைத்துப் பேச்சுக்களையும் சட்டை செய்யாமல் முறியடித்து.. புதுமணத் தம்பதிகளுடன் ஊர்மிளாவைப் பெற்றவர்கள் பெங்களூரில் இருந்த நரேந்திரனின் வீட்டுக்கு வந்ததினால் மட்டுமே ஓரிரு சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டன..
பூங்குழலி மகளை பூஜையறையில் விளக்கை ஏற்றச்சொன்னாள்.. பால்.. பழம் கொடுக்க நரேந்திரனைத் தேடினால் அவன் ஓய்வெடுக்க என்று அவனுடைய அறைக்குப் போயிருந்தான்.. அது போன்ற மத்திய தர வர்க்க சம்பிரதாயங்களை அந்த வீட்டில் கடை பிடிக்க மாட்டார்கள் என்று அகல்யா அறிவித்து விட்டாள்..
'போகுது.. போ..' என்று பூங்குழலி.. முதலிரவுக்கு மகளை அலங்கரித்து.. முறைப்படி அறைக்குள் விட்டு விட்டு வந்தாள்.. அதை மட்டும் அவள் செய்யாம லிருந்தால்.. ஊர்மிளாவுக்கு அந்தச் சம்பிரதாயமும் முறைப்படி நிறைவேறியிருக்காது..
புதுப்பெண்ணையும்.. மாப்பிள்ளையையும் பார்க்க.. விருந்தினர்கள் வந்து போன வண்ணம் இருந்தார்கள்..
"எப்படிடீ.. உன் அப்பா.. முதலாளித்துவத்தின் அடையாளமான சோபாவை வாங்கிப் போட்டார்..?" ஊர்மிளாவின் காதோரமாக சரிந்து சந்தேகம் கேட்டான் நரேந்திரன்..
"இருங்க.. என் அப்பாவையே உங்களுக்கு விளக்கம் சொல்லச் சொல்லி அனுப்பி வைக்கிறேன்.." மிரட்டினாள் ஊர்மிளா..
"அடிப்பாவி..! மறுவீட்டு விருந்துக்குப் போகலாம் 'வா'ன்னு ஆசைவார்த்தை காட்டி.. ஏய்த்துக் கூப்பிட்டுக் கிட்டு வந்துட்டு இப்ப உன் அப்பாவிடம் மாட்டி விடப் பார்க்கறியே.. சதிகாரி.." என்றான் நரேந்திரன்..
"பெண்டாட்டிக்கு 'சதி..'ன்னும் ஓர் பெயர் உண்டு மச்சான்.." என்றாள் ஊர்மிளா..
"மச்சானா..? ஏய்ய்.." நரேந்திரன் தேன் குடித்த சிங்கமானான்..
"மூச்.. இது ஹால்.." ஊர்மிளா ஒற்றைவிரலை வாயில் வைத்து அவனை அதட்டினாள்..
நரேந்திரனுக்கு அந்தச் சூழலை மிகவும் பிடித்திருந்தது... அந்த வீட்டிலிருந்த உயிர்ப்பை அவன் ரசித்தான்... மாளிகை போன்ற அவன் வீட்டில் இல்லாத உயிர்ப்பு... அவனது மாமனார் வீட்டில் இருந்தது.. இதுபோன்ற ஒரு வீட்டில் பிறந்து வளர்ந்ததினால்தான் ஊர்மிளா அவனைக் கவர்ந்தாளோ என்று அவன் எண்ணினான்..
பிறந்த வீட்டுக்கு வந்திருந்ததில் ஏற்பட்டிருந்த சந்தோசத்திலும், சுதந்திர உணர்விலும்.. ஊர்மிளாவின் சோபை அதிகாரித்துத் தெரிவதைப் போல இருந்தது.. அவள் குறும்பு கொப்பளிக்க நரேந்திரனை வம்புக்கு இழுத்தாள்.. மனைவியின் அழகிலும்.. பேச்சிலும் மயங்கிப் போனவன் அவளை விழுங்கி விடுவதைப்போல பார்க்க ஆரம்பித்தான்..
"மச்சானோ.. மாமாவோ..
             யாரோ.. இவரு..
    என்னை வைச்ச கண்ணு வாங்காம
             பார்க்கிறாரு.."
ஊர்மிளா மெல்லிய குரலில் அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி பாடி வைத்ததில் அவனது போதை அதிகரித்தது.. அவளைத் தொட்டு இழுக்கப் போனான்..
"அதோ.. அப்பா வர்றார்.." என்று அவள் ஆட்டம் காண்பித்தாள்..
"உங்க அப்பா என்ன பெரிய வஸ்தாத்தாடி..?"
நரேந்திரன் கேட்டுக் கொண்டிருந்த போதே அங்கே சோமசுந்தரம் வந்துவிட.. ஊர்மிளா..
"அப்பா.. இவர் உங்களிடம் ஏதோ சந்தேகம் கேட்கனுமாம்.." என்று கணவனை தந்தையிடம் மாட்டி விட்டாள்..
"தர்ம பத்தினின்னா அது நீதாண்டி.." ஊர்மிளாவிடம் பல்லைக் கடித்த நரேந்திரனிடம்..
"என்ன சந்தேகம் கேட்கணுங்க..?" என்று கேட்டு வைத்தார் சோமசுந்தரம்..
"உங்களிடம் போய் என்ன சந்தேகத்தைக் கேட்பேன்ங்க..? இந்த பொதுவுடைமைக் கொள்கையைப் பத்தி உங்க மகளுக்கு எதுவும் தெரியலையே.. ஏன்..?
நீங்க அவளுக்கு எதையும் சொல்லிக் கொடுத்து வளர்க்கலையா..? எதைக் கேட்டாலும் பதில் சொல்லத் தெரியாம திருதிருன்னு முழிக்கிறாளே.." நரேந்திரன் ஊர்மிளாவை வகையாக மாட்டி விட்டு விட்டான்..
'போச்சுடா..' ஊர்மிளா மனதுக்குள் அலறினாள்.. அவளுக்கா பொதுவுடைமைக் கொள்கையைப் பற்றி எதுவும் தெரியாது..? அவளுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் பூங்குழலி அவளுக்கு பால் சோற்றை ஊட்டி வளர்க்க.. சோமசுந்தரம் அவளுக்கு பொதுவுடைமைக் கருத்துக்களை புகட்டி வளர்த்தவராயிற்றே..
நின்றால் கொள்கை.. நடந்தால் கொள்கை.. ஓய்ந்து.. அக்கடாவென்று கால் நீட்டி உட்கார்ந்தால் அங்கேயும் வந்து கொள்கையென்று வகுப்பை எடுத்து ஊர்மிளாவை ஓட ஓட விரட்டிய ஆருயிர் அப்பாவாயிற்றே அவர்..
அவரிடம் அவள் திரும்பவும் பாடம் கேட்பதா..?
"ஊர்மிளா.."
"அப்பா.."
"இதுதான் அப்பாவுக்கு நீ பெயர் வாங்கிக் கொடுக்கும் லட்சணமா அம்மா..?"
"இல்லையப்பா.."
"உன் வீட்டுக்காரர் சொன்னதைக் கேட்டா யில்லையா..?"
"கேட்டேன்ப்பா.."
"அவர் முதலாளி வர்க்கத்தில் பிறந்து விட்ட சுரண்டல் காரர்.."
"அப்பர்.."
"தொழிலாளி வர்க்கத்தை காலடியில் போட்டு மிதித்து நசுக்கும் பாஸிச கொள்கைக்காரர்.."
"அப்பா.."
"ஏழைகளின் கண்ணீரிலும்.. உழைப்பாளிகளின் வியர்வையிலும் உல்லாசமாக.. மாட மாளிகை.. கூட கோபுரம் கட்டி வாழ்ந்து வரும் பணக்கார முதலை.."
"அப்பா.."
ஊர்மிளாவுக்கு அழுகையே வந்து விட்டது.. மறுவீட்டு விருந்துக்கு வந்திருக்கும் மகளுக்கு.. அவளுடைய கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கித் தந்தே தீருவது என்ற கொள்கைப் பிடிப்புடன் முழங்கிக் கொண்டிருக்கும் தகப்பனாரின் சங்க நாதத்தை நிறுத்தும் வகை தெரியாமல் கைகளைப் பிசைந்தாள் அவள்..
'இந்தப்பா எனக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத் துட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு போல இருக்கே..'
"இப்படி உட்காரும்மா.."
"எதுக்குப்பா..?"
"உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத்தான்.."
உச்சி வெயில் தலையைப் பிளக்கும் நேரத்தில் மகளை உட்கார வைத்து பொதுவுடைமை சித்தாத் தங்களைப் போதிக்கத் தொடங்கினார் சோமசுந்தரம்..
அழமாட்டாத குறையாய் தகப்பனாரின் விளக்கத்துக்கு 'ஆமாம் சாமி' போட்டபடி கணவனை கொலை வெறியுடன் முறைத்துப் பார்த்தாள் ஊர்மிளா..
தலையில் ஆணியடிப்பதைப் போல வேதனையாக இருந்தது அவளுக்கு.. தெரிந்த விளக்கத்தைத் திரும்பவும் கேட்க நேரிடுவதில் இருக்கும் கொடுமையை அனுபவ பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள்..
"புரிகிறதாம்மா..?"
சோமசுந்தரத்தின் கேள்வியில்.. ஆஹா.. பாடம் முடிந்து விட்டது என்று மகிழ்ந்து போய் விட்டாள்..
"புரிஞ்சிருச்சுப்பா.."
தப்பித்து விட்ட சந்தோசத்தில் அவள் தலையை ஆட்ட..
"எங்கே.. நான் என்னென்ன விளக்கத்தைச் சொன்னேன்னு சொல்லு பார்ப்போம்.." என்று டெஸ்ட் வைத்து அவளை கதி கலங்க வைத்தார் அவளைப் பெற்ற தந்தை..
'விதியே..' என்று உட்கார்ந்திருந்த ஊர்மிளா என்ன விளக்கத்தைச் செப்புவாள்..?
'அகப்பட்டுக்கிட்டயா..?' நரேந்திரனின் விழிகள் அவளை கேலி செய்தன..
'இருக்கு.. உங்களுக்கு..' ஊர்மிளாவின் விழிகள் சூளுரைத்தன..
'என்னயாடி மாட்டிவிடப் பார்த்த..? இப்ப நீயே மாட்டிக்கிட்டயா..? இது எப்படி இருக்கு.. ஹா..ஹா..' நரேந்திரன் சைகையிலேயே அவன் பேச வந்ததை உணர்த்தினான்..
'ரொம்பத்தான் குதிக்காதீங்க..' ஊர்மிளா ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தாள்..
"என்னம்மா...?" அவளது ஒற்றை விரல் சைகையினைப் பார்த்து விட்ட சோமசுந்தரம் கேட்டார்..
"ஹி.. ஹி.. ஒன்றுமில்லைப்பா.." என்று அசட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தாள் ஊர்மிளா..
"என்னம்மா இப்படிச் சிரிக்கிற..? நம்ம வீட்டில இருக்கிறப்ப உன்சிரிப்பு எவ்வளவு அழகா.. கம்பீரமா.. இருக்கும்...? இப்ப என்னடான்னா கல்யாணமாகி பெங்களூரில் குடித்தனம் பண்ண ஆரம்பிச்ச ஒரே வாரத்திலேயே உன் சிரிப்பு மாறிப் போச்சே.." சோமசுந்தரம் நரேந்திரனைக் கண்டனப் பார்வை பார்த்தார்..
"உங்க மக இளைச்சிருந்தா என்னைக் குற்றம் சொல்லுங்க கேட்டுக்கறேன்.. அவ சிரிப்பு மாறியிருக் கிறதுக்கு குற்றம் சொன்னா நான் என்ன செய்ய..?" நரேந்திரன் நியாயம் கேட்டான்..
"முதலாளி வர்க்கமில்ல.. இப்படித்தான் பேசுவீங்க.."
சோமசுந்தரம் விறைப்புடன் நரேந்திரனுடன் மோதிவிட்டு..
"நீ சொல்லும்மா.." என்று டெஸ்டில் கவனமானார்..
நரேந்திரனுடனான வர்க்க மோதலில் அவளுக்கு வைத்த டெஸ்டை அவர் மறந்து விட்டாரென்ற சந்தோசத்தில் இருந்த ஊர்மிளா.. விட மாட்டேன் என்கிறாரே.. என்று வாடி.. வதங்கி விட்டாள்.. சோம சுந்தரத்திடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் கொடுமையை விட.. அதை நரேந்திரன் சுவராஸ்யமாக வேடிக்கை பார்ப்பது அவளுக்குப் பெருங்கொடுமையாய் இருந்தது..
அவளுக்கா.. அவளுடைய அன்புக்குரிய அப்பாவிட மிருந்து தப்பிக்கும் மார்க்கம் தெரியாது..?
"அப்பா..."
"ஊம்.. விளக்கம் சொல்லும்மா.."
"உங்களுக்கு நினைவிருக்காப்பா.."
"எதைம்மா...? உன் வீட்டுக்காரர் பசுத்தோல் போர்த்தின சிங்கமாக... தொழிலாளி வர்க்கம் போல வேசம் போட்டுக்கிட்டு வந்து உன்னைப் பெண் கேட்டாரே.. அதைச் சொல்கிறயாம்மா..? எப்படிம்மா மறக்கும்..? மறந்தால்தானேம்மா நினைக்கிறதுக்கு.."
'ஊஹீம்.. இந்த அப்பா.. என்னைத் திருச்சியிலேயே தேக்கி வைச்சுக்கனும்கிற முடிவோடதான் மறுவீட்டு விருந்துக்கு வர வைச்சிருக்காரு..'
"என்னம்மா யோசிக்கிற..?"
"எப்படி நீங்க அந்தப் பாட்டை மறந்தீங்கன்னு யோசிக்கிறேம்ப்பா.."
"எந்தப் பாட்டும்மா..?"
"சின்ன வயசில அம்மா என்னைத் தூக்கி வைச்சு கொஞ்சிப் பாடுவாங்க.. அப்ப நீங்க கொள்கையை எடுத்துச் சொல்லி சேர்ந்து பாடுவீங்க.. அப்பவே எனக்குக் கொள்கை பாடம் சொல்லிக் கொடுத்த 'குரு'ப்பா நீங்க.."
சோமசுந்தரத்திற்கு நினைவு வந்து விட்டது.. ஊர்மிளாவின் உணர்ச்சிமயமான பேச்சில் அவர் நெகிழ்ந்து நெக்குருகிப் போனார்..
"பூஞ்சிட்டுக் கன்னங்கள்..
             பொண்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது..
             பன்னீரிலே.."
ஊர்மிளா பாட ஆரம்பித்தாள்.. டெஸ்ட் எழுத வேண்டியவள் பாட்டுக்கு தாவி விட்ட சாதுர்யத்தில் வியந்து போன நரேந்திரன் அவளது பாடலை ரசிக்க ஆரம்பித்தான்..
'எப்புடி..?' அவள் கண் சிமிட்டியதில் கள்ளூற... அதை அள்ளிப் பருகிய போதையில் அவளையே விழுங்கி விடுவதைப் போல தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தான் அவன்..
"பொங்கல் பிறந்தாலும்..
               தீபம் எரிந்தாலும்..
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே..
             இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே.."
சோமசுந்தரத்தின் உருக்கமான பாடலில் அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.. அந்தப் பாடலை அதற்கு முன்னால் அவன் கேட்டதில்லை.. ஊர்மிளாவைக் காதலிக்க ஆரம்பித்த பின்புதான் திரையிசைப் பாடல்களையே அவன் ரசிக்க ஆரம்பித்தான்.. இதில் பழம் பெருமை வாய்ந்த.. மகோன்னதமான.. அந்தக் காவியப் பாடலைப் பற்றி எங்கே கேள்வி பட்டிருக்கப் போகிறான்..?
சோமசுந்தரம் அவனைச் சாடுவதற்காக பேசினாலும்.. அதில் ஓர் உண்மை இருக்கத்தான் செய்தது..
 நரேந்திரன் முதலாளி.. ஊர்மிளாவைப் போல.. தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தைப் பற்றி அவன் அறிந்திருக்கவில்லை...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -51
அழகான ராட்சசியே -51
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-51.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-51.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy