அழகான ராட்சசியே -43

43 நதிநீரில் கால் நனைக்கும் சந்தோசத்தை எனக்களிக்கும்.. அழகான ராட்சசி நீ.... அகல்யா எவ்வளவோ முனைப்பாக இருந்தாள்.. நரேந்திரனின்...


43
நதிநீரில் கால் நனைக்கும்
சந்தோசத்தை எனக்களிக்கும்..
அழகான ராட்சசி நீ....


அகல்யா எவ்வளவோ முனைப்பாக இருந்தாள்.. நரேந்திரனின் ஒருபக்கம் அவளும்.. இன்னொரு பக்க்ம அருண்குமாரும், அர்ச்சனாவும் இருக்க வேண்டும்..
அந்தப் போட்டோ எல்லாப் பத்திரிக்கைகளிலும் வரவேண்டும் என்பது அவளுடைய குறிக்கோளாக இருந்தது.. அந்த குறிக்கோளை மீடியா மக்கள் தகர்த்து விட்டார்கள்..
"மிஸ்டர் நரேன் ப்ளீஸ்.. மிஸஸ் நரேன் பக்கத்தில் நின்னு போய் கொடுக்கறிங்களா..?"
போட்டோகிராபரின் கேள்வியில் மிஸஸ் நரேந்திரன் அவன் பக்கத்தில்தானே இருந்தாள்..? எங்கே போனாள்..? என்று திரும்பிப் பார்த்த நரேந்திரன் திகைத்தான்..
அவன் பக்கத்தில் படுஸ்டைலாக கேமராவுக்கு போஸ் கொடுக்க ஏதுவாக செயற்கை சிரிப்பை உதட்டில் ஒட்ட வைத்த வண்ணம் அகல்யா நின்றிருந்தாள்..
"ஊர்மி...?"
அகல்யாவுக்கு அந்தப் பக்கமாக நின்றிருந்த ஊர்மிளாவின் கை பற்றி தன்னருகில் இழுத்துக் கொண்டான் நரேந்திரன்.. அகல்யாவின் முகம் மாறி விட்டது.. போட்டோகிராபர்களும்.. வீடியோ எடுக்கிறவர்களுமாக புதுமண தம்பதிகளை சூழ்ந்து கொண்டதில்.. அவள் பின்னடைய வேண்டியதாகி விட்டது.. அவளைப் போலவே பின்னடைந்த அருண்குமாரும்.. அர்ச்சனாவும்.. அவரவரின் தோழமை வட்டத்திற்குள் தங்களை இணைத்துக் கொண்டு சிரிப்பும் பேச்சுமாக அளவளாவ ஆரம்பித்து விட்டார்கள்..
'இதுக மட்டும் எப்படி இதையெல்லாம் ஈஸியா எடுத்துக்குதுக..'
அகல்யாவுக்கு புரியவில்லை.. அருண்குமாரை மடக்கிக் கேட்டபோது அவன் முகம் சுளித்தான்..
"கொஞ்சமாவது சென்சோட பேசறிங்களா..? இது மேரேஜ் ரிசப்சன்.. பார்ட்டியில்ல.. இங்கே அண்ணன் பக்கத்தில அண்ணிதான் நிற்கணும்.. அண்ணனோட தம்பி நிற்கக் கூடாது.."
"ஏண்டா..?"
"என்னம்மா நீங்க.. அவங்கதானே அண்ணனோட லைஃப் பார்ட்னர்.."
அகல்யாவுக்கு அதிர்வு வந்தது.. உனக்கு என்ன வந்தால் எனக்கென்ன என்று அருண்குமார் விட்ட அரட்டையைத் தொடரப் போய் விட்டான்.. ஆற்ற மாட்டாமல் அர்ச்சனாவை அவள் தேடிப்பிடித்தாள்..
"லூசாம்மா நீங்க..?" என்ற கேட்டாள் அர்ச்சனா..
அகல்யா லூசா..? சுற்றியிருக்கும் அத்தனை பேரையும் லூசாக்கி விடும் வல்லமை படைத்தவளைப் பார்த்து வந்த கேள்வியில் அகல்யா நொந்து போனாள்..
"என்னடி.. இப்படிக் கேட்கிற..?"
"பின்னே.. என்னம்மா..? எல்லோருக்கும் நான் அண்ணனோட தங்கைன்னு தெரியுமா..? மேரேஜ் ரிசப்சனுக்கு வருகிறவங்க அண்ணன் பக்கத்தில நிற்கிற பெண்ணைத்தானே அண்ணியா நினைச்சுக்குவாங்க..? அந்த அறிவில்லாம ஏன் வந்தன்னு கேட்கறிங்க.. போங்கம்மா.. போயி வந்திருக்கிற கெஸ்டை ரிஸீவ் பண்ணுங்க.."
'அது ஒன்னுதான் குறைச்சல்..'
அகல்யாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அவள் என்ன நரேந்திரனின் கல்யாண வரவேற்புக்கு வருகிறவர்களை பந்தி விசாரிக்கவா அங்கே வந்திருக் கிறாள்..?
முதன்முதலாக.. நரேந்திரனின் மனைவி என்று ஒருத்தி வந்ததினால் அவளது அரியாசனம் பறிபோவதை உணர ஆரம்பித்தாள் அகல்யா..
இனி நரேந்திரனின் குடும்பமாக அவனுடைய மனைவியும்.. பிள்ளைகளும் மட்டுமே இருப்பார்கள் என்பதில் அவளுக்கு பீதி கிளம்பியது.. மணமக்களைப் பார்த்தாள்.. நரேந்திரன் குனிந்து ஊர்மிளாவின் காதோடு எதையோ சொன்னான்.. அவள் வெட்கத்துடன் எதையோ முணுமுணுத்தாள்.. அவன் பலத்த குரலில் சிரித்தான்..
"மிஸ்டர் நரேந்திரனுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா..?"
அகல்யாவுக்கு பக்கத்திலிருந்த பிரமுகர் ஒருவர் வியப்புடன் சொன்னார்.. அதை அவருக்குப் பக்கதி லிருந்தவர் ஆமோதித்தார்..
"யெஸ் மிஸ்டர் வினோத்.. நானும் இதைத்தான் நினைத்தேன்.."
"லவ் மேரேஜாமே..?"
"அப்படித்தான் சொல்லிக்கிட்டாங்க.."
"அதுதான் இந்தச் சிரிப்பு.. மிஸஸ் நரேந்திரனும் அழகாய் இருக்கிறாங்க.. கண்ணசைவில் நரேந்திரனைக் கண்ட்ரோல் பண்றாங்க.."
அவர்கள் சிரித்துக் கொண்டார்கள்.. அகல்யா விழித்துக் கொண்டாள்.. நரேந்திரன் ஊர்மிளாவின் கட்டுப் பாட்டுக்குள் போய் விட்டான் என்பதில் அவளுக்குள் குளிர் ஜீரம் வந்தது..
அதுவரை அகல்யாவின் கட்டுப்பாட்டுக்குள் ஒன்றும் நரேந்திரன் இருக்கவில்லை.. யாருக்கும் கட்டுப்படாத.. கட்டுக்கடங்காத காற்றாக அவன் இருந்தான்.. இன்று ஒரு பெண்ணின் கண் பார்வைக்கு அவன் கட்டுப்படுகிறான் என்றால் அந்தப் பெண்ணின் காதல் எத்தனை சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்..?
அகல்யா பல்லைக் கடித்தாள்.. செழியன் இருந்த வரை நரேந்திரனின் கருணை அவள் பக்கம் வந்ததில்லை.. அவர் போனபின்பு.. கருணை கொள்ளாவிட்டாலும்.. நரேந்திரன் அகல்யாவை வெறுக்காமல்.. அவளையும் அவள் பெற்ற பிள்ளைகளையும் அவனது குடும்பமென்று சொல்லிக்கொள்ள அனுமதித்தான்.. அது சமூகத்தில் மிகப்பெரிய உயர்ந்த அந்தஸ்தை அகல்யாவுக்கும்.. அவளுடைய பிள்ளைகளுக்கும் அளித்தது.. அதில் அகல்யா கர்வம் கொண்டாள்.. அவள் பெற்ற பிள்ளைகளோ.. அதற்குக் காரணமான நரேந்திரனிடம் நன்றியுணர்வைக் கொண்டார்கள்..
அன்று அகல்யாவின் கர்வம் ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது.. ஊர்மிளாவின் ஒவ்வொரு சிரிப்பிலும் நரேந்திரனுக்கும்.. அகல்யாவின் குடும்பத்திற்குமான இடைவெளி அதிகரிப்பதைப் போல உணர்ந்தாள் அகல்யா.. அவளின் துவேசமான பார்வையினை அவதானித்தபடிதான் சோமசுந்தரமும், பூங்குழலியும் நின்று கொண்டிருந்தார்கள்..
"இந்தம்மா பார்வையைப் பாத்தியா குழலி.."
"வீட்டுக்குப் போனவுடனே ஊர்மிளாவுக்குச் சுத்திப் போடனும்ங்க.."
"வெளியாளுக பார்வை படாமலிருக்க சுற்றிப் போடலாம்.. வீட்டாளுக பார்வை படாமலிருக்க சுத்திப் போடணும்னா தினமுமில்ல சுத்திப் போடனும்..?"
"வேற என்னதான் செய்கிறது..?"
"நம்ம நிலைமையைப் பார்த்தியாடி.. திருச்சியிலே நிம்மதியா நானுண்டு.. என் புத்தகக் கடையுண்டு.. வாராவாரம் போகிற பொதுக் கூட்டமுண்டுன்னு நான் இருந்தேன்.. நீயும், நீயுண்டு.. உச்சிப் பிள்ளையார் கோவிலுண்டுன்னு இருந்த.. நிம்மதியாப் போன நம்ம வாழ்க்கையிலே எங்கே வந்து நிற்கிறோம்ன்னு பார்த்தியா குழலி.. நம்மைப் போல இருக்கிற இடம் தெரியாம வாழ்கிறவங்க நிற்க வேண்டிய இடமாடி இது..?"
சுற்றிலும் இருந்த ஆடம்பரமான மனிதர்களையும்.. அவர்களது கோட்.. சூட்டென்ற உடையலங்காரத்தையும் பார்த்தபடி கூறினார் சோமசுந்தரம்.. பூங்குழலி தலையை அசைத்தாள்..
"ஊர்மிளாவுக்காகத்தானே நாம இங்கே நிற்கிறோம்.."
"ம்ம்ம்.. அதைச் சொல்லு.. அவள் சந்தோசமாக இருந்தால் சரி.."
"சந்தோசமாக இருக்கணும்.."
வேண்டுதல் போலச் சொன்னபடி மகளைப் பார்த்தாள் பூங்குழலி.. ஊர்மிளாவின் முகத்தில் தெரிந்த வெட்கச் சிகப்பில் அவள் மனம் நிறைந்தது.. இது போன்ற மகிழ்வுடன் எப்போதும் அவள் வாழவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் பூங்குழலி..
நரேந்திரன் கம்பீரமாக.. சாம்பல் வண்ண கோட் சூட்டில் அரசனைப் போல அழகாக இருந்தான்.. அவனது ஆளுமை நிறைந்த அந்த அழகை ஓரக் கண்ணால் அள்ளிப் பருகுவதைப் போல அடிக்கடி பார்த்துக் கொண்டாள் ஊர்மிளா.. வாழ்த்துச் சொல்ல வருகிறவர்களைக் கட்டித் தழுவி பேசியபடி அடிக்கடி மனைவியைப் பார்த்துக் கொண்ட நரேந்திரனின் கண்கள் மின்னின..
"என்னடி.. சைட் அடிக்கிறயா..?"
அடிக்குரலில் மற்றவர்களுக்குக் கேட்காத வண்ணம் முணுமுணுத்தான் நரேந்திரன்.. ஊர்மிளாவின் முகம் செவ்வானமானது..
"நினைப்புத்தான்.." என்றாள் அவள்..
"என் நினைப்பில நீ இருக்கிறதைச் சொல்கிறயா..?" என்றான் அவன்..
"ஹ..! இவர் பெரிய ஹீரோ.. இவர் நினைப்பில நாங்க உருகறோம்.." ரகசியமாக உதட்டைச் சுழித்தாள் ஊர்மிளா..
"எங்கே.. என் முகத்தைப் பார்த்துச் சொல்லு.. நான் ஹீரோ இல்லையா..?" ரகசியமாக கண் சிமிட்டினான் நரேந்திரன்..
ஊர்மிளா தவித்துப் போனாள்.. அவனுடைய பார்வையும்.. பேச்சும்.. ரகசிய கண் சிமிட்டல்களும் அவளுக்குப் புதிதல்ல என்றாலும் அன்று அவளுக்கு அத்தனையும் புதிதாக இருந்தன..
அடுத்தடுத்து விருந்தினர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.. அவர்களின் நடையுடை பாவனைகள் ஊர்மிளா அறிந்து வைத்திருந்த சூழலிருந்து
வித்தியாசமாக இருந்தன.. மேல்தட்டு வர்க்க மக்களின் ஒப்பனைகளையும்.. உடையலங்காரத்தையும்.. நுனி நாக்கு ஆங்கிலப் பேச்சுக்களையும் மருட்சியுடன் பார்த்தபடி இயந்திரம் போல கை குவித்துக் கொண்டிருந்தாள் அவள்..
அந்தச் சூழலோடு ஒன்றி வாழ அவளால் முடியுமா என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது..
அந்த ஹாலின் மூலையில் மேற்கத்திய இசை ஒலித்துக்கொண்டிருந்தது.. வந்திருந்த விருந்தினர்களில் சிலர் லேசாக இடையை அசைத்தபடி நடனமாடிக் கொண்டிருந்தார்கள்..
'அப்பாவுக்கும்.. அம்மாவுக்கும் இதெல்லாம் பிடிக்காதே...'
கவலையுடன் கூட்டத்தின் மத்தியில் தாய் தந்தையைப் பார்வையால் துழாவினாள் ஊர்மிளா.. அவர்கள் இருக்கின்ற சுவடே தெரியவில்லை..
"யாரைத் தேடற..?"
நரேந்திரனின் கரம் அவள் தோளை அணைத்தது.. அவள் தாய்.. தந்தையை மறந்தவளாக அவனைப் பார்த்துச் சிரித்தாள்..
"யாரையும் தேடலை.."
"அதானே.. நீ தேட வேண்டிய ஆள்தான் உன் பக்கத்திலேயே இருக்கிறேனே.. அப்புறம் வேற யாரை நீ தேடப் போறியாம்..?"
அவளுடைய அம்மா.. அப்பாவை அவள் தேட மாட்டாள் என்ற நிச்சயத்துடன் அவன் சொன்னான்.. அவனை விட்டு அவள் அவர்களைத் தேடமாட்டாள் என்று நம்பினான்.. அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அவள் அவனை விட்டு விலகி அவர்களைத் தேடி ஓர் நாள் சென்றாள்.. அப்படிச் செல்ல வேண்டிய காலமும் அவர்கள் வாழ்வில் வரக்கூடும் என்பதை அறியாதவர்களாக அவர்கள் இருவரும் ரகசியப் பேச்சில் கிளுகிளுத்துச் சிரித்துக் கொண்டார்கள்..
சுற்றிலும் இருந்த அத்தனை கூட்டத்துக்கும் மத்தியில் அவர்களுக்கே அவர்களுக்கு என்று பிரத்யேகமான உலகை சித்தரித்துக் கொள்ள அவர்களால் முடிந்தது.. ஒவ்வொரு விருந்தினரும் வந்து போகும் அந்த இடைபட்ட நேரத்தில் சின்னச் சின்ன கண்சிமிட்டல்கள்.. ரகசியப் பேச்சுக்கள் என்று அந்த நொடிகளை உல்லாசமய மானதாக ஆக்கிக் கொண்டிருந்தான் நரேந்திரன்..
அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருந்தாள் அகல்யா.. நரேந்திரனுக்கு அதுபோல சிரிக்கக் கூடத் தெரியும் என்பதை அன்றுதான் அவள் கண்டாள்..
"ஹாய் அகல்யா.." என்றபடி அவளருகில் வந்தாள்.. சாதனா..
அவள் செழியனின் நண்பரின் மனைவி..
"ஹாய்..." அசுவராஸ்யமாக சொன்னாள் அகல்யா..
"ஒரு வழியாய் நரேன் மேரேஜ் பண்ணிக்கிட்டார் போல.." என்றாள் சாதனா..
அதில் உனக்கென்ன இவ்வளவு சந்தோசம் என்ற எரிச்சலுடன்..
"ம்ம்ம்.." என்று முணுமுணுத்தாள் அகல்யா..
"லவ் மேரேஜாமே..?" சாதனா விடவில்லை..
இதையே ஏன் எல்லோரும் மாற்றி மாற்றிக் கேட்கிறார்கள் என்று அகல்யாவுக்கு கோபம்.. கோபமாக வந்தது..
"ம்ம்ம்.." அவள் அதற்கும் முணுமுணுத்தாள்..
"பெண் ரொம்பவும் அழகாயிருக்கா.. நீ தேடியிருந்தாக் கூட இவ்வளவு அழகாய் பெண்ணை செலக்ட் பண்ணியிருக்க முடியாது.." என்று பாராட்டினாள் சாதனா..
'நான் எங்கேடி பெண் தேடினேன்..?' அகல்யாவுக்கு ஆயாசமாக இருந்தது..
திருமணம் என்ற ஒன்று நரேந்திரனுக்கும் நடக்கும் என்ற நினைவே இல்லாமல் வாழ்ந்தவள் அவள்.. அவளைப் போய் நரேந்திரனுக்காக பெண் தேடினாள் என்று சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது..?
"ம்ம்ம்.." அலுப்புடன் முணுமுணுத்தாள்..
"நரேனைப் பாரேன்.. வொய்பின் மேல் வைத்த பார்வையை விலக்கிக்கலை.. சாது போல இருக்கிற பொண்ணு.. நரேனைத் தன் கண்ணசைவுக்குள்ளே வைச்சிருச்சே.. பரவாயில்லை.. கெட்டிக்காரிதான்.." சாதான சான்றிதழ் கொடுத்தாள்..
அகல்யாவுக்கு 'பக்' கென்று இருந்தது.. இவள் கவனித்ததைப் போல அங்கே வந்திருந்தவர்களில் எத்தனை பேர் இதைக் கவனித்தார்களோ என்ற கவலையில் ஆழ்ந்தாள் அவள்..
நரேந்திரன் மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டான் என்று மற்றவர்கள் சொல்வது அகல்யாவிற்கு நல்லதல்லவே..
"இல்லையில்லை.." அகல்யா உடனடியாக அதை மறுத்தாள்...
அவ்வளவு நேரமும் 'ம்ம்ம்' என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தவள் அவசரம்.. அவசரமாக மறுத்துப் பேசியதும்.. சாதனாவின் இதழ்களில் நமட்டுச் சிரிப்பு தவழ்ந்தது..
"எதை இல்லைங்கிற..?" அறியாப் பெண்ணைப் போல அவள் வினவினாள்..
அவள் வேண்டுமென்றே வாயைக் கிளருவதை அகல்யா புரிந்து கொண்டாலும் அவளுடைய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தாள்..
எந்த ஒரு நிலையிலம் நரேந்திரன் ஊர்மிளாவின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டான் என்பதை அகல்யா ஒப்புக்கொண்டு விடக்கூடாது.. அது அவளுக்கான இறக்கமாக ஆகிவிடும்.. அதை ஒரு போதும் அகல்யாவினால் அனுமதிக்க முடியாது..
"நரேன் தாய் சொல்லைத் தட்டாதவன்.. யாரோட கட்டுப்பாட்டுக்குள்ளேயும் போக மாட்டான்.."
"அது யாரோ இல்லை அகல்யா.. நரேனின் வொய்ப்.."
சாதனா நினைவு படுத்தினாள்.. அகல்யாவின் முகம் கோணியது.. இதைச் சொல்லச் சொல்லி இவளிடம் நான் கேட்டேனா என்ற வெகுண்டாள் அவள்..
"இருக்கட்டுமே.. அதுக்காக அவ கண்ட்ரோலில் நரேன் இருக்கனும்னு கட்டாயம் ஏதுமிருக்கா..?" படபடத்தாள்..
"உனக்கேன் இவ்வளவு கோபம் வருது..?" இமை கொட்டி விசாரித்தாள் சாதனா..
"எனக்கேன் கோபம் வரப் போகுது..? நான் சும்மா உன் கேள்விக்கு பதிலை மட்டும் சொன்னேன்.." அகல்யா சமாளித்தாள்..
"ஐ.. ஸீ..."
சாதனாவின் உதடுகளில் உன்னை நான் அறிவேன் என்ற புன்னகை தவழ்ந்தது..
"அதுசரி அகல்யா.. நரேந்திரன் தாய் சொல்லைத் தட்டாதவர்ங்கிறதை நீ எப்படித் தெரிஞ்சுக்கிட்ட..? ஏன் கேட்கிறேன்னா நரேனோட தாயை நீ பார்த்ததில்லையே.. அவங்க இறந்து போனதினாலதான உனக்கு நரேனோட அப்பாவை செகண்ட்மேரேஜ் பண்ணிக்கிறதுக்கான சான்ஸ் கிடைச்சது..?"
சிரித்தபடியே கழுத்தை அறுக்கும் வார்த்தைகளைப் பேச அகல்யாவுக்கு மட்டும்தான் தெரியுமா..? சாதனா விற்கும் அது தெரியுமென்பதை அவள் நிருபித்து விட்டுப் போய் விட்டாள்..
அகல்யாவிற்கு.. அந்த திருமண வரவேற்பின் விருந்து ருசிக்கவில்லை.. கசந்தது..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -43
அழகான ராட்சசியே -43
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-43.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-43.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy