எண்ணியிருந்தது ஈடேற -164

164 கடலுண்டி பறவைகள் சரணலாயத்தின் அழகில் சொக்கிப் போன உத்ராவும் , வினித்தும் பிரமிப்புடன் கை விரல்களைக் கோர்த்தபடி தீவுக்குள் நடந்த...


164


கடலுண்டி பறவைகள் சரணலாயத்தின் அழகில் சொக்கிப் போன உத்ராவும், வினித்தும் பிரமிப்புடன் கை விரல்களைக் கோர்த்தபடி தீவுக்குள் நடந்து விட, நந்தினி தனித்து விடப்பட்டாள்..
"வாட் எ பியுட்டிஃபுல் பிளேஸ்..! இங்கே ஹனிமூன் வரனும்னு நீ அடம் பிடிச்சதுக்கு உன்மேல என் மனசில ஓரமா கொஞ்சம் கோபம் இருந்தது.. நம்மோட ஸ்பெசல் டேஸோட இம்பார்ட்டன்ஸை நீ புரிந்துக்கலையோன்னு ஃபீல் பண்ணினேன்.. இந்த இடத்தில நிற்கிறப்பதான் தெரியுது.. ஏன் கேரளாவை கடவுளோட தேசம்ன்னு
மக்கள் கொண்டாடறாங்கன்னு.. தேங்க் யு உத்ரா.. நீ அடம் பிடிச்சு இங்கே அழைத்து வரலைன்னா இந்த ஃபீலிங்சை நான் மிஸ் பண்ணியிருப்பேன்.."
உத்ராவின் விரல் நீவி வினித் சொன்னபோது உத்ரா சந்தோசப் பட்டுப் போனாள்.. சிநேகியைப் பார்க்க வேண்டுமென்ற சுயநலத்துக்காக கணவனின் ஆசையைப் பின்தள்ளி விட்டாளோ என்ற குற்றஉணர்வு அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.. அதனாலேயே நந்தினியுடன் சேர்ந்து ஊர் சுற்றாமல் கழன்று வினித்துடன் ஒட்டிக் கொள்வாள்..
இப்போது அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு விட்டதில் மனம் லேசாகி விட்டது.. வினித்தின் கை வளைவில் தன் கைகளைப் பிணைத்து அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. அதைத் தற்செயலாக பார்த்து விட்ட நந்தினி சங்கடத்துடன் தள்ளி நடந்து மரங்களின் மறைவில் நின்று கடலை வெறித்தாள்..
அவள் மனதில் சஞ்சலம் குடி கொண்டிருந்தது..
காலையில் எழுந்து கொள்ளும்போதே இன்று எப்படியும் தன் மனதில் உணரும் காதல் உணர்வுகளை ரவிச்சந்திரனிடம் சொல்லி விடவேண்டும் என்ற தீர்மானத்துடன்தான எழுந்தாள் நந்தினி.. மனதுக்குள் இன்பப் பரபரப்பு வந்திருந்ததில் 'லா..லா..' என்று பாட்டுப் பாடியபடி குளியலறைக்குள் புகுந்தாள்.
"லவ் பெர்ட்ஸ் லவ் பெர்ட்ஸ்.." என்று பாடல் தூ ப்பியது..
"தக்கத்திமித் தா.." என்றபடி சுவர் அலமாரியைத் திறந்து சிறந்த உடையைத் தேடினாள்..
நந்தினி அப்படியெல்லாம் மெனக்கெட்டு உடையைத் தேர்வு செய்து அலங்காரம் பன்னிக் கொள்ளும் ஆள் அல்ல..
'அதெல்லாம்தான் 'ம.மு', 'ம.பி'ன்னு ஆகிருச்சே..' நந்தினி தலையை ஆட்டிக் கொண்டாள்..
மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறுவதற்கு முன்னால் இருந்த நந்தினி வேறு.. அவள் காதல் என்றால் என்ன கலரில் இருக்கும் என்று கேட்டு வைப்பவள்.. கருப்பா, சிகப்பா..? கை, கால் முளைத்திருக்குமா..? என்றெல்லாம் எள்ளி நகையாடுபவள்..
மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறிய பின்னால்தான் கதையே தலைகீழாய் மாறிப் போய் விட்டதே.. ரவிச்சந்திரன் என்ற ஆணழகனை மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் சந்தித்தாலும் சந்தித்தாள்.. அவள் அவளாக இல்லாமல் வேறு எவளாகவோ ஆகிவிட்டாள்..
"நானே நானா..?
               யாரோதானா..?
     மெல்ல.. மெல்ல..
              மாறினேனா..?"
லவ் பெர்ட்ஸின் ஊடே வேறு பாடல் புகுந்தது.. மெரூன் வண்ணத்தில் ஜரிகைப் புள்ளிகளிட்ட மைசூர் சில்க் சேலையைத் தேர்ந்தெடுத்து மேலே சாய்த்துக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்..
'இது ஷீட் ஆகுமில்ல..?'
ஆகும் என்றுதான் தோன்றியது.. அந்தச் சேலை நந்தினியின் நிறத்துக்கு எடுப்பாக இருக்கும் என்பது ஒரு புறமிருக்க.. அது ரவிச்சந்திரன் எடுத்துக் கொடுத்த சேலை என்பதில் அன்று அந்தச் சேலையை உடுத்திக் கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினாள்.. இதே கோழிக்கோடில்தான் அவன் அவளுக்கு அந்தச் சேலையை வாங்கிக் கொடுத்திருந்தான்.. ரவிச்சந்திரனும் அவளுமாக ஊர் சுற்றியபோது அவள் ஷாப்பிங்க என்று அள்ளிக் கொண்ட அனைத்துக்கும் அவன்தான் பணம் கொடுத்தான்.. சம்பளத்தில் கழித்துக் கொள்வான் என்று சமாதானம் சொல்லியிருந்தான்.. அப்படிச் செய்தானா என்று தெரியவில்லை.. கேட்டால் அவன் 'டோஸ்' விடுவான் என்ற பயத்தினால் நந்தினியும் இதுவரை அதைப் பற்றிக் கேட்கவில்லை..
அன்று அவள் அள்ளிக் கொண்டிருந்தவைகளில் இந்தச் சேலையும் ஒன்று.. நன்றாக இருக்கும் எதையும் அவள் தேர்வு செய்ய மாட்டாளா என்று அந்தச் சேலையைச் சுட்டிக் காட்டி உசுப்பி விட்டு வாங்க வைத்திருந்தான்.. அந்த நினைவில் செல்லச் சிரிப்புச் சிரித்தவள்..
'ஆ மனுசன் கள்ளனல்லோ..' என்று உதட்டைச் சுழித்தாள்..
"கண்ணைத் தொட்டுப்
              பெண்ணைத் தொட்டு
     நெஞ்சைத் தொட்டது ஆசை..!
              ஆசைக் கனவில் யாரோ பாட
     காற்றில் வந்தது ஓசை..!"
லேசாக சுழன்று ஆடியபடி சேலையைச் சுற்றிக் கொண்டாள்.. நேர்த்தியாக கட்டி முடித்து கண்ணாடி பார்த்தவளுக்கு அவன் இந்தச் சேலையை நினைவில் வைத்திருப்பானா என்ற ஏக்கம் வந்தது.. இது தான்தானா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள்..
நந்தினியா இப்படி ஏங்குவது..?
"மாறியது நெஞ்சம்.." அவளது பாடலும் மாறியது..
"மாற்றியவர் யாரோ..?
              காரிகையின் உள்ளம்..
     காண வருவாரோ..?
              மாறியது நெஞ்சம்..
     மாற்றியவர் யாரோ..?"
செல்போனில் இருந்த ரவிச்சந்திரனின் போட்டோவைப் பார்த்து அது நீதாண்டா என்று நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள்.. தலைவாரி தளர்வாகப் பின்னலிட்டு.. விழிகளுக்கு மைதீட்டி.. நெற்றியில் மெரூன் வண்ண ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி முடித்து கண்ணாடியில் அழகு பார்த்தாள்..
"வாவ்..! செமத்தியா இருக்கேடி நந்தினி.." மகிழ்ந்து போனாள்..
'ஞான் வல்லிய சுந்தரியாக்கும்.. ஆ சுந்தர புருசன் எண்ட சேலில (அழகில) மயங்கி.. என் சேலை முந்தானை முடிச்சில் சிக்குவானல்லோ..'
எப்போது அவனைப் பார்ப்பாள் என்றிருந்தது.. மணியைப் பார்த்தாள்.. அப்போதுதான் ஆறு என்றது அது..
'அடிப்பாவி நந்தினி.. அதுக்குள்ள எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி உட்கார்ந்திட்டியா..? இன்னும் அவன் தூக்கத்தை விட்டு எழுந்திருச்சிருக்க மாட்டானேடி..'
வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளின் பரபரப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்பமான இம்சையைக் கொண்டாள் நந்தினி.. அவனுக்குப் போன் பண்ணலாமா என்று யோசித்தாள்.. மற்ற நாள்களில் எல்லாம்..
"ஏய்ய்.. சோம்பேறி.. இன்னுமா தூங்கற.. எழுந்திரு.." என்று செல்போனில் அழைப்பவன்.. அன்று மட்டும் பேசாவிரதம் இருப்பவனைப் போல செல்போனில் அழைக்காமல் சோதித்தான்..
'அவன் கூப்பிடாட்டி என்ன..? நான் கூப்பிடலாமில்ல..'
நந்தினி செல்போனை எடுத்தாள்.. கை விரல்கள் நடுங்கியதில் அது நழுவி கட்டிலில் விழுந்தது..
'அடி இவளே..! அவன் என்ன அறியாத மனிதனா..? இன்னைக்குத்தான் புதிதா அவனிடம் பேசப் போகிறயா..? ஒழுங்கா செல்போனை எடுத்துப் பேசித் தொலைக்கிறதுக்கு என்ன..?' மனது தாளித்துக் கொட்டியது..
'ஹி..ஹி..' மனதிடம் அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி செல்போனை கைப்பற்றி ஒருவழியாக ரவிச்சந்திரனின் செல்நம்பரை அழுத்தி விட்டாள்.. மறுமுனையில் அழைப்பொலி போய் கொண்டே இருந்தது.. அவன் எடுக்கவில்லை..
'ரிங் போய்க்கிட்டே இருக்கு.. என்ன செய்கிறான்..?'
அழைப்பொலி முடிந்து விடும் கடைசி நொடியில் போனில் அவன் குரல் கேட்டது.. இவள் ஆசையாசையாக என்னென்ன பேச வேண்டும், எப்படியெப்படி பேச வேண்டும் என்று மனதுக்குள் வரிசைப் படுத்திக் கொண்டிருக்க.. அவன் மூன்றே மூன்று வார்த்தைகள்தான் சொன்னான்..
"டோன்ட் டிஸ்டர்ப் மி.."
நந்தினியின் ஆசை அலைகடலானது.. அமைதியாகி விட்ட செல்போனை வெறித்துப் பார்த்தாள்..
'ஆசையோ அலைபோலே..
              நாமெல்லாம் அதன் மேலே..
     ஓடம் போல ஆடிடுவோமே..
              வாழ் நாளிலே..'
அவளது மன ஓடம் ஆடியது.. சோக கீதம் பாடியது.. தத்துவத்தை உதிர்த்தது..
'என்னடா இது..' என்று வெறுத்துப் போனாள் நந்தினி..
அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தால் அவள் மனப் புழுக்கத்தில் வெம்பி ஒரு வழியாகி விடுவாள் என்று தோன்றியதால் அறையைப் பூட்டி விட்டு காரிடாரில் நடந்தாள்..
'பிரேக் பாஸ்ட்டுக்கு எல்லாம் வந்து சேர்கிறதுக்கு குறைந்த பட்சம் இரண்டரை மணி நேமாவது ஆகிரும்.. அதுவரைக்கும் ஸ்விம்மிங் பூல் பக்கம் உட்கார்ந்திருக்கலாம்..'
அவளது உற்சாகம் காற்றுப் போன பந்து போல சுருங்கி விட்டது.. நந்தினி யோசனையுடன் நடந்தாள்.. அவள் மனதை ரவிச்சந்திரனிடம் சொல்வதற்கு இன்னும் எத்தனை மணித்துளிகள் அவள் காத்திருக்க வேண்டும்..?
"ஹாய்..! டு யு நோ திஸ் பிளேஸ்..?"
எதிரே நின்ற வெளிநாட்டு இளைஞனின் பார்வையில் அப்பட்டமான ஆசையிருந்தது.. அவனைப் பார்த்தால் முகவரியைக் கேட்பவனைப் போலத் தோன்றவில்லை.. அவளை பார்வையிலேயே துகிலுரிந்து சாப்பிட்டான்..
'இப்படிப் பார்க்காதேடா ராஸ்கல்..' நந்தினியின் உடல் முழுவதும் கூசியது..
"ஐ டோண்ட் நோ.. பிளீஸ் சர்ச் இன் கூகுள்.. ஆர்.. என்கொயர் இன் ரிசப்சன்.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..
"இங்கே என்ன செய்கிற..?" என்ற ரவிச்சந்திரனின் கோபக் குரல் தேனினும் இனிதாக அவள் காதுகளில் நுழைந்தது..
'இங்கே இவன் இருக்கிறானா..?'
காலம் காலமாய் பார்த்துவிட வேண்டுமென்று காத்துக் கிடந்தவளைப் போலத் தவிப்புடன் அவள் திரும்பினாள்..
அவள் எவனோ ஒரு வெளிநாட்டு வாலிபனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற ரௌத்ரத்துடன் உறுமிக் கொண்டிருந்த ரவிச்சந்திரனின் விழிகள் அவளது ஆவலைக் கண்டதும் மின்னின.. அவளது அழகை ரசித்தவன் அவள் உடுத்தியிருந்த சேலையை அடையாளம் கண்டு கொண்டான்.. கவனமாக ஒப்பனையில் மிளிர்ந்த அவளது அழகில் சொக்கிப் போனவனாக அவளைப் பிய்த்துத் தின்று விடுவதைப் போல மேய்ச்சல் பார்வை பார்த்து வைத்தான்..
இதே போன்றதொரு பார்வையைத்தான் அந்த வெளிநாட்டு வாலிபனும் பார்த்து வைத்தான்.. அவன் பார்வையில் அருவெறுப்புக் கொண்ட நந்தினியின் பெண் மனம்.. அதைவிடக் கூடுதலான ரவிச்சந்திரனின் மேய்ச்சல் பார்வையில் நானத்துடன் விருப்பம் கொண்டது..
'எப்படிப் பார்க்கிறான் பார்.. ராஸ்கல்..' நந்தினி முகம் சிவந்தாள்..
"இந்நேரத்துக்கு நீ எழுந்து கொள்வதே பெரிய விசயம்.. இதில குளித்து.. டக்கரா டிரஸ் பண்ணி ஸ்விம்மிங் பூல் பக்கம் வாக் வந்துக்கிட்டு இருக்க..? என்ன ஆச்சு..?" கிண்டலாக அவளை விசாரித்தான்..
"அது.. ச்சும்மா.." நந்தினியின் முகச் சிகப்பு அதிகமானது..
"ஒரு கொஸ்டினுக்கு ஆன்சர் பண்றதுக்கு இத்தனை வெட்கமா..? இது ரொம்ப நல்லாயிருக்கு.. என்னை இம்ப்ரெஸ் பண்ணுது.. இன்றைக்கு நீ ரொம்பவும் புதிதாத் தெரியற நந்தினி.."
அன்றுதான் புதிதாகப் பிறந்ததைப் போல உணர்ந்தாள் நந்தினி.. அவனுக்காகவே பிறந்திருப்பதைப் போலவும் உணர்ந்தாள்.. உலகமே புதிதாகத் தெரிந்தது..
'புதிய வானம்..
              புதிய பூமி..
     எங்கும் பனிமழை பொழிகிறது..'
கோழிக்கோடின் பனிக்காற்றில் உடல் சிலிர்க்க அவனைப் பார்த்தவளுக்குள் ஆசை வெள்ளம் பெருகியது..
"அவனுடன் உனக்கென்ன பேச்சு..? இதற்காகத்தான் ஸ்விம்மிங்க பூல் பக்கம் வந்தாயா.."
வழக்கமான அமில வார்த்தைகள்.. ஆனால்.. அதைச் சொல்பவனின் முகமும்.. கேட்டுக் கொண்டவளின் முகமும் வெறுப்பை வெளிக்காட்டாமல் ஆசையை வெளிப் படுத்தியதுதான் அதிசயமாக இருந்தது..
"அதானே பார்த்தேன்.."
"எதைப் பார்த்த..? என்னையா..?"
உன்னைத்தான் பார்த்தேன் என்ற உண்மையைச் சொல்ல வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டாள் நந்தினி.. அதைச் சொல்ல முடியாமல் நாணம் தடுத்தது..
"என்னடா.. இன்னும் விதண்டாவாதமாப் பேசலையேன்னு நினைத்தேன்.."
"என்னடான்னு யாரைச் சொல்கிற..? என்னையா..?"
போடா என்றிருந்தது நந்தினிக்கு.. அவளை அவன் வம்பிழுத்ததில் அவளுக்குள் பொங்கிய உணர்வலைகளில் மூழ்கி மூச்சுத் திணறிப் போனாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -164
எண்ணியிருந்தது ஈடேற -164
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/164.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/164.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy