தஞ்சமென வந்தவளே -30

30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...


30

அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்தாள்.. அவள் மீது விழுந்து கிடந்த வலிமையான முரட்டுக் கரத்தின் இறுக்கமான அணைப்பில் அவள் இருப்பதை உணர்ந்தவளுக்கு முதல் நாளின் இரவு நினைவுக்கு வந்தது..
"நீ பார்த்ததில்லைடி.. நான் பார்த்திருக்கேன்.. அப்படியொரு ஆசையாசையாய் என் அக்காவை பார்த்துக் கிட்டார்.. இவ்வளவு நடந்தும் என் அக்கா அவர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அரண்மனையிலேயே சிறையிருக்காங்கன்னா அது எதனால..? அந்த அளவுக்கு என் மாமா.. அதாண்டி.. உன்னைப் பெத்த அப்பா.. அவங்க மனசில இடம் பிடிச்சிருக்காரு.. நான் மட்டும் என்ன கேணயனா..? விலகி நின்னு விரதம் காக்க என் தலையில என்ன எழுதியா வைத்திருக்கு..? உன் கழுத்தில தாலியைக் கட்டிட்டு தள்ளி நிற்க நான் ஒன்னும் முட்டாள் இல்லைடி.. கிட்ட வா..."
அவன் அவளை முரட்டுத்தனமாக ஆக்ரமித்தான்.. சாரதாவின் மனம் நொறுங்கியது.. உனக்கும் எனக்கும் திருமணம் நடந்து விட்டது... நடந்ததை மறந்து விடுவோம்.. இனி என் மனதில் நீ மட்டும்தான்.. வா.. சேர்ந்து வாழ்வோம்...
இப்படி அழைத்திருந்தால் அவள் மனப்பூர்வமாக அவளை அவனிடம் ஒப்படைத்திருப்பாளே.. அவன் அதைச் செய்யவில்லையே.. அவளைத் தொட்டான்.. தழுவினான்.. முத்தங்களால் அவளை ஈரமாக்கினான்.. வேட்கையுடன் அவளை ஆக்ரமித்தான்.. ஆனால் அந்த அத்தனை நிகழ்வுகளிலும் ஒப்பீடலை நிகழ்த்திக் கொண்டிருந்தான்..
"அவ உன்னைப் போல இத்தனை அழகில்லைடி.. ஆனாலும் அவ அழகே தனி அழகுதான்.."
"உன் கையில் இருக்கும் இந்த வழவழப்பு இயற்கையானது.. அவ அப்படியில்ல.. பியூட்டிபார்லருக்கு அதிகமா போவா.."
"உனக்கு நீளமான முடிடி.. அவளுக்கு அப்படியில்லை.. இடுப்புவரை தான் இருக்கும்.."
"உன் பாதம் முயல் குட்டியைப் போல மென்மையா இருக்கு.. அவளுக்கு அப்படியில்ல..."
இப்படி அவளுக்கு அப்படியில்லை.. அவளுக்கு அப்படியில்லை என்று எவளோ ஒருத்தியுடன் அவளை ஒப்பிட்டுக் கொண்டே ஒரு கணவன் கூடினால் எந்தப் பெண்தான் இசைந்து கொடுப்பாள்..?
சாரதா திமிறி விலக முயன்றாள்.. அவன் விடவில்லை.. முரட்டுத்தனமாய் அவளை இறுக்கிக் கொண்டான்.. இரும்பைப் போன்ற வலிமை கொண்ட அவன் கரங்களின் அரணிலிருந்து அவளால் விடுபட்டு வெளியேற முடியவில்லை...
"ஏன்..?" அவன் உறுமினான்..
"எனக்கு வேண்டாம்.." துடித்தாள் சாரதா..
"ஆனா.. எனக்கு வேண்டுமே.." அவள் முகம் நோக்கி அவன் குனிந்தான்.. விலக முயன்ற அவளின் முகத்தில் அழுந்தப் பதிந்து ஆழமான முத்தத்தை அவள் இதழ்மீது அவன் இதழ் பதித்தது...
சாரதா தவித்தாள்.. அவனின் தொடுகையில் கிளர்ந்த அவளின் உணர்வுகளின் பேரலையில் அவள் அடித்துச் செல்லப்பட்டாள்.. அவனது கைகள் முன்னேறி அவளது உடலெங்கும் அத்து மீறிப் பரவி பிரவேசித்தபோது அந்த இன்பமான இம்சைகளில் துடித்தாள்.. அவளது உடல் மெழுகாக உருகிக் கரைந்து அவனுடன் கலந்து விடத் துடிப்பதை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை..
"நான் உன்னைத் தொட்டுத் தாலி கட்டியவண்டி.. உன் புருசன்.."
அவன் அவள்மீது படர்ந்தான்.. அவனது ஆண்மையான ஆக்ரமிப்பில் மூச்சுத்திணறி.. அவளுக்குள் புதையுண்ட அவனின் ஸ்பரிசத்தில் அவள் மூழ்கத் தொடங்கிய போது அவளின் காதோரமாக அவன் குரல் கிசுகிசுத்தது...
"பட்டுப் போல இருக்கேடி.. மெத்தையே வேணாம் போல இருக்கு.. இனிமே நீதாண்டி என்னோட மெத்தை.. அவ இப்படி இருக்கமாட்டா.."
அப்படியே பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்ற துக்கம் சாரதாவுக்குள் கரை புரண்டு எழுந்தது..
அவளுக்குள் புதைந்திருந்த அந்த நேரத்திலும் வேறு ஒருத்தியின் நினைவு அவன் மனதில் வருமானால்.. அந்தக் கூடலில் அவள் சுகித்து விட முடியுமா..? அது கௌரவத்தைத்தான் அவளுக்குத் தருமா..?
அவளுடைய உணர்வுகளை அவன் கண்டு கொள்வதாகவே இல்லை.. அவனது விருப்பப்படி அவளை ஆண்டு முடித்த பின்புதான் அவளை விட்டு விலகினான்..  சாரதா துக்கம் தாளாமல் குளியலறையில் பொங்கி அழுதாள்.. அதுபோல அவள் அழுததில்லை.. யாருமில்லாத அநாதையாக அவள் இருந்தபோது இருந்த மன தைரியம்.. இப்போது எல்லாமும் இருப்பவளாக... உறவுகளால் சூழப்பட்டவளாக அவள் இருக்கும் போது அவளிடமிருந்து  விடை பெற்றுக் கொண்டு போய் விட்டது..
அழுது ஓய்ந்து.. கண்கள் சிவக்க.. படுக்கைக்கு திரும்பியவளை உற்றுப் பார்த்தான் அவன்.. கலங்கிச் சிவந்த முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சாரதா..
"ஏன்..?" அவன் மீண்டும் உறுமினான்..
முரட்டுத்தனமாக அவள் முகத்தைப் பற்றித் திருப்பி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. சாரதா அவன் கண்களைப் பார்க்க மறுத்தாள்..
"ஏண்டி..? என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்கலையா..? அந்த விக்ரம் முகமா இருந்தா பிடிச்சிருக்குமா..?"
நிதானமாக அவன் வினவியதில் அவள் மீது செந்தணல் கொட்டியதைப் போல அவள் துடித்துப் போனாள்..
"ஷட் அப்.." சீறி விட்டாள்..
"ஓ.." அவன் கண்கள் இடுங்கின..
"இந்த அளவுக்கு கோபப் படுவியா..? இப்பத்தான் நான் உன்னை முழுசா ஆண்டு முடிச்சேன்.. இந்த நேரத்திலயும் அவன் பேச்சை எடுத்தா உனக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா உன் மனசில எந்த அளவுக்கு அவன் பதிஞ்சிருக்கனும்..?"
"அது உங்க புத்தி.." பட்டென்று சொல்லி விட்டாள் சாரதா..
"என் புத்தியா..? அப்படி என்ன புத்தியைடி என்னிடம் கண்டு விட்ட..?" கண்கள் இடுங்க அவன் கேட்டான்..
"அவ அப்படியில்ல.. அவ அப்படியில்லன்னு எவளோ ஒருத்தி பெயரைச் சொல்லிக்கிட்டே என்னைத் தொட்டிங்களே.. அந்தப் புத்தி..."
சாரதா குமுறிவிட்டாள்.. அந்தக் குமுறலில் அவன் முகத்தில் படிந்த வெற்றியின் சாயலை அவள் கவனிக்கவே இல்லை..
"அந்த என் நேர்மையைப் பாராட்டனும்னு உனக்குத் தோணுதா..?" அவன் குறைபட்டுக் கொண்டான்..
"என்னது..?" சாரதா ஆக்ரோசத்துடன் அவனை முறைத்தாள்..
"உன் அப்பாவைப் போல மனசில் ஒன்னு.. வாக்கில் ஒன்னுன்னு நான் இருக்கலையே.. என் மனசில என்ன நினைச்சேனோ அதைச் சொல்லிக்கிட்டேதானே குடும்பம் நடத்தறேன்..?"
பிரதாபவர்மன் நிதானமாக கேட்டபோது அவளிடம் பதிலில்லை.. வேதனையுடன் தலையணையில் முகம் புதைத்து சுருண்டு விட்டவளைப் பார்த்த அவன் முகம் மாறியது.. புருவச் சுளிப்புடன் அவளின் குழுங்கும் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.. மீண்டும் அவளை அணுகியபோது வெறுப்புடன் விலக முயன்ற அவளை அவன் விடவில்லைதான்.. பிடிவாதமாக அவள் எதிர்ப்புக்களை இலட்சியம் செய்யாமல் அவளை முரட்டுத்தனமாக ஆக்ரமித்தான்தான்.. ஆனால் யாருடனும் அவளை ஒப்பிட்டுப் பேசவில்லை.. மாறாக அவள் காதோரம் அவன் பேசிய மொழிகள் வேறாக இருந்தன.. அவன் கோரிக்கைகளில் அவள் தடுமாறிப் போனாள்.. அவன் கேட்டதைக் கொடுக்கும்படி அவன் வற்புறுத்தினான்.. விடிகின்ற வேளை வரை அவர்களுக்குள்ளான போராட்டம் நீண்டு கொண்டே இருந்தது.. கடைசியில் கேட்டது கிடைத்த பின்னால்தான் அவன் அவளை விடுவித்தான்.. இருந்த போதும் அவனது இரும்புக்கரத்தால் அவளை வளைத்து சிறைபிடித்தபடிதான் அவன் தூங்கினான்..
சாரதா அவன் கையை மெதுவாக விலக்க முயன்றாள்.. முடியவில்லை.. அவள் முகத்துக்கு வெகு அருகாமையிலிருந்த அவனது முகம் ஆழ்ந்த உறக்கத்தைச் சொல்லியது.. அவள் அந்த முகத்தையே ஆசையுடன் பார்த்தாள்.. விழித்திருக்கும் வேளைகளில் இத்தனை ஆசையுடன் அவனை அவள் பார்த்து விட முடியாது..
தீர்க்கமான செதுக்கி வைத்த சிற்பம் போன்ற அவன் முகத்தில் பொங்கித் ததும்பிய ஆண்மையின் கம்பீரத்தில் அவள் ஆகர்ஷிக்கப்பட்டாள்.. பிடிவாதத்தை பறைசாற்றும் விதத்தில் வளைந்து மடிந்திருந்த அவன் உதடுகளில் விரலால் கேலாம் போடவேண்டுமென்ற ஆசை அவள் மனதில் எழுந்தது.. அவளது கன்னத்தைப் பதம் பார்த்த அவனது மீசை முடியின் உராய்வுகளில் உண்டான இன்பங்களை நினைத்துப் பார்த்தவளுக்கு அடர்ந்த அந்த மீசையைப் பிடித்து திருக வேண்டுமென்ற ஆசை மனதுக்குள் கிளர்ந்தது.. அவனைப் போல அடங்க மறுக்கும் முரட்டு முடி அவன் முகத்தில் படிந்திருக்க.. அதை விலக்கி சீராக்கி.. அவன் தலை முடிக்குள் கைவிட்டு மீண்டும் அதைக் கலைத்து விட வேண்டுமென்ற ஆசை அவளுக்குள் பெருக்கெடுத்தது.. அவனது அகன்ற மார்பை அவள் உணர்ந்த நேரங்களை நினைத்துப் பார்த்தவளின் முகத்தில் நாணச் சிகப்பு வந்தது.. பரந்து விரிந்த அவன் மார்பில் தலை வைத்துப் படுத்துறங்க அவள் ஆசைப் பட்டாள்.. நீண்ட அவன் கரங்களின் வலிமைக்குள் சிறைபட்டிருந்தவளுக்கு.. அந்தக் கைவிரல்களைப் பற்றிக் கன்னத்தில் பதிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை மேலிட்டது.. அவன் விரல் பட்ட அந்த நொடியில் மூழ்கி கண்மூடி அந்த ஸ்பரிசத்தின் சுகத்தில் திளைக்க வேண்டும்.. அவன் விரல் வருடும் அந்தப் பொழுதில் அவனது அகன்ற உள்ளங்கையில் ஆசையாய் ஓர் முத்தம் பதிக்க வேண்டும்.. அவன் தோள் சாய்ந்து ஆசையுடன் பின்னிப் பிணைய வேண்டும்...
நினைத்ததையெல்லாம் நடத்த முடியாத ஏக்கத்துடன் அவள் பெருமூச்சு விட்டாள்.. முதன் முதலாக ஆசிரமத்தில் அவனைச் சந்தித்த அந்த நாளை நினைத்துப் பார்த்தாள்..
அப்போது அவள் அறிவாளா..? அவனிடம்தான் அவள் தஞ்சம் புகப் போகிறாள் என்பதை..?
விலக மனமின்றி அப்படியே தலையணையில் தலை சாய்த்து அவன் முகம் பார்த்தபடி அவன் கையணைவில் படுத்து விட்டாள் சாரதா.. விலகினால் அவன் எழுந்து விடுவான்.. விழித்துக் கொண்டிருக்கும் போது அவளை நெருப்பாகச் சுடுவான்... இதைப் போல இதமான மனநிலையுடன் அவன் முகம் பார்த்து ரசிக்க அவளால் முடியாமல் போய் விடும்..
உறக்கத்தில் அவனிருக்கும் அந்த நேரத்தை உளமாற பயன் படுத்திக் கொள்ள விழைந்தாள் சாரதா.. ஆசையுடன் அவன் முகம் பார்த்தபடி கண்கள் பனிக்க மெல்லிய குரலில் பாடினாள்..
"உன்னைத்தானே.. தஞ்சமென்று...
             நம்பிவந்தேன் நானே...
         உயிர் பூவெடுத்து அதில் மாலை கட்டி..
             விழி நீரினிலே ஒரு கோலமிட்டேன்.."
அவள் பாடிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அவன் கண்விழித்தான்.. பாதியிலேயே அவள் பாடல் நின்று விட்டது.. விலக முயன்றவளை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொண்டான்.. அவள் நெற்றியில் விழுந்திருந்த குழல் கற்றையை விலக்கி விட்டு.. அவள் முகத்தையே உற்றுப் பார்த்தவனின் முகத்தில் இருந்த அந்த ஏதோ ஒன்றில் அவள் மனம் குழம்பினாள்.. அவள் நெற்றியின் மீது அவனது ஆள்காட்டி விரல் படிந்தது.. அந்த ஸ்பரிசத்தில் கண் மூடியவளைப் பார்த்தபடியே விரலால் அவள் நெற்றியிலிருந்து கோடிழுத்தான்.. அவள் இதழ் மீது படிந்த விரல்களின் நிரடலில் அவள் கிறங்கித் தவித்தாள்..
"பாட்டை ஏண்டி நிறுத்திட்ட..?" அவன் கேட்டான்..
"யார் பாடினது..?" முகம் சிவக்க அவள் மறுத்தாள்..
"ஊம்.. நம்ம வீட்டுத் தோட்டத்தில கூடுகட்டியிருக்கிற சிட்டுக் குருவிதான் வந்து பாடிட்டுப் போகுது.." உல்லாசமாக அவன் நகைத்தான்..
அவன் சிரித்தபோது பளீரிட்ட பல்வரிசையில் அவள் பிரமித்தாள்..
'இவன்தான் எத்தனை அழகாக இருக்கிறான்..' அவள் மனம் பெருமிதத்தில் நனைந்தது..
உல்லாசமாய் அவளைக் கொஞ்சுபவனின் கழுத்தின் மீது கை போட்டு வளைத்து.. உரிமையுடன் சரசமாட அவள் மனம் ஏங்கியது..
"சிட்டுக்குருவியோ.. பட்டுக்குருவியோ.. எனக்கு எதுவும் தெரியாது..." கள்ளச் சிரிப்புடன் அவள் சொன்னாள்..
"தோட்டத்தில சிட்டுக்குருவிதான் இருக்குது.. இங்கே என் கைக்குள்ளேதான் பட்டுக்குருவி இருக்குது.. நீ பட்டுடி.. பட்டு மெத்தை.." அவள் காதோரமாக அவன் கிசுகிசுத்தான்..
வெட்கம் தாளாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டாள்.. அவள் விரல்களை விலக்கி அவள் முகம் பார்க்க அவன் முயன்றான்.. அது முடியப் போகும் வேளையிலே அவள் முகம் சிவக்க.. அவன் முகம் பார்க்க முடியாமல் சட்டென்று அவன் மார்பில் முகம் புதைத்து விட்டாள்...
அவளது கூந்தலில் இருந்து வந்த மணத்தை அவளது உச்சந்தலையில் முத்தம் பதித்த அவனது நாசி உணர்த்தியது..










Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -30
தஞ்சமென வந்தவளே -30
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy