தஞ்சமென வந்தவளே -29

29 "அக்காகிட்ட என்ன சொன்ன.. ?" பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்...


29

"அக்காகிட்ட என்ன சொன்ன..?"
பிரதாபவர்மனின் குரலில் நெருப்புப் பொறி பறந்தது.. குற்றவாளியாய் அவன் முன்னால் கையைப் பிசைந்தபடி நின்றிருந்தாள் சாரதா..
அதே காலை நேரம்.. அதே அருவிக்கரையின் நதியோரம்..
"அக்காவிடம் சொல்லாமல் வா.. சபாபதியும் வேணாம்.."
பிரதாபவர்மனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரபாவதியிடம் சொல்லாமல்.. சபாபதிக்கும் தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு அருவிக்கரைக்கு வந்திருந்தாள் சாரதா..
'எதுக்காக வரச் சொல்கிறான்..?'
வழியெல்லாம் இதே நினைவுதான்.. வந்து பார்த்தால் அவன் கொதித்துக் கொண்டிருக்கிறான்..
"இத்தனை வருசத்தில இது போல அக்கா பேசி நான் கேட்டதில்லை.. நீயாரோ.. நான் யாரோன்னு சொல்லிட்டாங்க.. யாராலே..? உன்னாலே.. எங்கிருந்துடி கிளம்பி வந்த..? என்னையும் என் அக்காவையும் பிரிக்கிறதுக்குன்னுதான் நீ பந்தனவாசலில் கால் வைத்தியா..?" வார்த்தைகளால் அவளைச் சுட்டான்..
"நிஜமாவே நான் எதையும் சொல்லலை.." சாரதாவுக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது...
"நடிக்காதேடி.. ஆமாம்.. ஊர்மிளா சொன்னாள்தான்.. மனசுக்குள் அவளை வைத்துக்கிட்டுத்தான் உன்கூட நான் குடும்பம் நடத்தப் போறேன்.. அதுக்கு இப்ப என்னங்கிற..? ஏன்..? உன் அப்பா இதைச் செய்யலை..? மனசில உன் அம்மாவை வைத்துக்கிட்டு.. என் அக்காகூட குடும்பம் நடத்தலை..? அவர் செய்தா மட்டும் சரி.. அதையே நான் செய்தா அது தப்பா..? அவருக்கொரு நியாயம்.. எனக்கொரு நியாயமா..?"
சாரதாவின் மனதில் இடி இறங்கியது.. வரப்போகும் வாழ்வைப் பற்றி தெளிவாக பிரதாபன் சொல்லி விட்டான்..
இனி அவள் என்ன செய்ய வேண்டும்..?
"கல்யாணத்தை நிறுத்தி விடலாம்ன்னு மட்டும் கனவு காணாதே.. அதுக்கு நான் விட மாட்டேன்.. உன்னைக் கடத்திக் கொண்டு போயாவது உன் கழுத்தில் தாலியைக் கட்டுவேன்... என் அக்கா சொன்னாலும் அவங்களை விட்டு நான் போக மாட்டேன்.. வேற ஒருத்தன் அவங்களுக்கு மாப்பிள்ளையா வந்து சேர்கிற துன்பத்தை நான் அனுமதிக்க மாட்டேன்..."
சாரதா உதட்டைக் கடித்தபடி மௌனமாக இருந்தாள்.. அவள் என்ன செய்ய வேண்டும் என்ற வினாவிற்கான விடை அவளுக்கு கிடைத்து விட்டது..
அவன் மனதில் அவள் இல்லையென்று தெளிவாக அவன் சொல்லி விட்டான்.. வேறொருத்தியை மனதில் நினைத்தபடிதான் அவளுடன் வாழப் போவதாக அறிவித்தும் விட்டான்.. அவனைத் தவிர வேறொருவனை அவள் மணந்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டு விட்டான்.. அவனுடைய அக்காவின் பாதுகாப்புக்காக மட்டுமே அவள் கழுத்தில் விருப்பமில்லாமல் தாலி கட்டப் போவதாக வெளிப்படையாகத் தெரிவித்து விட்டான்..
இனிமேல் அவள் செய்வதற்கு எதுவுமில்லையே..
யோசித்துப் பார்த்தபோது இதுதான் நியாயம் என்று அவளுக்குத் தோன்றியது... சாரதாவுக்கு அதுவரை கிடைக்காத தாய் மடியையும்... அறியாத தாயன்பையும் கொடுத்த பிரபாவதியின் மனதில் அவளுடைய கணவன் அவளைத் தவிர வேறொருத்தியுடன் வாழ்ந்தவன்.. அவளை உயிருக்குயிராய் காதலித்தவன்... அவள் நினைவோடு பிரபாவதியுடன் வாழ்ந்தவன் என்ற உண்மையில் மிகப் பெரும் அடி விழுந்திருக்கும் தானே.. அந்த மனவலிக்கு சாரதாவைப் பெற்ற தாயும்.. தந்தையும் தான் காரணமென்றால் அதற்கான தண்டணையை சாரதா அனுபவிப்பதுதானே நியாயம்..?
"வாழுகின்ற மக்களுக்கு..
             வாழ்ந்தவர்கள் பாடமடி..
    பெற்றவர்கள் பட்ட கடன்..
             பிள்ளைகளைச் சேருமடி.."
காரில் வரும்போது எப்.எம்மில் ஒலித்த பாடல் இதுதான் வாழ்க்கையென்று சாரதாவுக்கு அடையாளம் காட்டியது...
கனத்த மனத்தோடு அருவிக் கரையிலிருந்து திரும்பிய சாரதா பிரபாவதியைத் தேடிச் சென்றாள்..
"அம்மா.." என்ற அவளின் அழைப்புக்கு..
"என்னடாம்மா..?" என்று ஆவலுடன் முகம் பார்த்த அந்தத் தாயின் பாசத்தைக் கண்டபோது இவளுக்காக எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளலாமே என்று சாரதாவுக்குத் தோன்றியது..
பிரதாபவர்மன் சொல்வதிலும் ஒர் உண்மை இருந்தது.. சாரதாவின் பாதுகாவலில் தான் பிரபாவதி இருக்க வேண்டும் என்று ஜெயசிம்மன் சொல்லியிருக்கிறார்.. சாரதாவுக்கு திருமணம் என்ற ஒன்று நடந்து அவளுடைய கணவனின் ஆதிக்கம் அவள்மீது விழும்போது.. அது பிரபாவதியையும் சேர்த்துப் பாதிக்குமே என்ற சந்தேகம் அவர் மனதில் ஏற்படவே இல்லையே.. பிரதாப வர்மனத் தவிர வேறு யாரை சாரதா திருமணம் செய்து கொண்டாலும்... பிரபாவதியின் மரியாதைக்கும்.. கௌரவத்திற்கும் நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை யென்பது உண்மைதானே..
சாரதா கணவனுடன் போராடலாம்.. பிரபாவதியை பாதுகாக்கலாம்.. ஆனால்.. தன்னால்தான் மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் சண்டை நடக்கிறது என்ற நினைவில் பிரபாவதி மனம் நொந்து போய்விட மாட்டாளா..?
அப்படியொரு வேதனையை ஒருநாளும் சாரதா பிரபாவதிக்கு கொடுக்க மாட்டாள்..
"அவர்கிட்ட போனில் பேசினீங்களாம்மா..?"
மகள் சொல்லும் எவர் அந்த 'அவர்' என்பதை புரிந்து கொண்ட பிரபாவதி.. ஆமாம் என்ற பாவனையில் தலையை அசைத்தாள்..
"கல்யாணத்தை நிறுத்தப் போகிறதா சொன்னீங்களா..?"
"ஆமாண்டா.."
"வேண்டாம்மா.. கல்யாணம் நடக்கட்டும்.."
"ஏண்டா..? அப்படியொரு தியாகத்தை எனக்காக நீ செய்ய வேண்டாம்.. என்னவொரு தைரியம் இருந்தா என் மகளிடம் முகத்துக்கு நேரே அப்படியொரு சவாலை அந்த ஊர்மிளா விடுவா..? இது யார் கொடுத்த தைரியம்..?"
அவன் கொடுத்த தைரியம்தான் என்ற நினைவில் அவள் மனதில் துக்கம் பொங்கியது... இருந்தாலும் அவளால் என்ன செய்ய முடியும்..? தண்டனையென்று தெரிந்திருந்தாலும் அந்தத் தண்டனையை அவள் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்..?
"இல்லைம்மா.. இது தியாகமில்லை.. எனக்கு அவரைப் பிடிக்கும்.."
ஒருவகையில் இது உண்மைதானே.. சாரதாவுக்கு பிரதாபவர்மனைப் பிடிக்கும்தானே.. அவன் முகத்தைப் பார்க்கும் போது அவள் முகத்தில் நாணச் சிகப்பு வந்து தடுமாறிப் போகிறாள்தானே.. நேர் கொண்ட பார்வையோடு இருப்பவளால் அவன் பார்வையை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லைதானே..
"சாரதா..?"
"ஆமாம்மா... நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..."
"ஆனா.. அந்த ஊர்மிளா..?"
"கோபத்தில எதையோ பேசறா.. யாராக இருந்தாலும் அந்த கோபம் வரும்தானே..? அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தவளுக்கு அது இல்லைன்னு ஆகிப் போனா கோபம் வராதா..?"
எல்லாவற்றுக்கும் சாரதாவிடம் பதில் இருந்தது.. பிரபாவதி எதைக் கேட்டாலும் அவள் தெளிவான பதிலைச் சொன்னாள்.. அருவிக் கரையில் ஊர்மிளாவைச் சந்தித்து வந்தவுடன் காய்ச்சலில் விழுந்து விட்டாளே என்ற கேள்விக்கு மழையில் நனைந்தால் காய்ச்சல் வராதா என்று எதிர் கேள்வி கேட்டாள்.. பிரபாவதியின் கையைப் பிடித்துப் புலம்பினாளே என்ற கேள்விக்கு.. காய்ச்சல் வேகத்தில் வாய்க்கு வந்ததை வைத்துத் தள்ளுவது நோயாளியின் இயல்புதானே என்று சொன்னாள்..
பிரபாவதி முற்றிலுமாக சமாதானம் ஆகாவிட்டாலும் சாரதாவுக்கு பிரதாபவர்மனைப் பிடித்திருக்கிறது என்ற நினைவில் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்..
பந்தனவாசலே விழாக் கோலம் பூண்டிருந்தது.. திருமணத்தில் தொலைதூரத்தில் இருந்த உறவினர்கள் கூட வந்து கலந்து கொண்டார்கள்..
"நம்ம ஜெயசிம்மனோட மகள் எப்படியிருக்கும்ன்னு பார்த்து விட்டுப் போக வந்தோம்.. அப்படியே அவர் ஜாடையில இல்ல இருக்கு..! நல்லா இருக்கட்டும்..."
ஏறக்குறைய இதே வார்த்தைகளைத்தான் அவர்கள் மாற்றி மாற்றிச் சொன்னார்கள்.. மிருதுளாவின் பிறந்த வீடு விட்டுக் கொடுக்காமல் திருமணத்தில் கலந்து கொண்டது.. ஊர்மிளா மட்டும் வரவில்லை.. அவளுடைய நெருங்கிய தோழியின் வீட்டு விசேசத்திற்கு சென்று விட்டதாக சொன்னார்கள்..
திருமணம் சீரும்.. சிறப்புமாக நடந்து முடிந்தது.. மாப்பிள்ளையும் பெண்ணும் குலதெய்வ கோவில்களுக்கு போய் வந்தார்கள்.. பாலும்.. பழமும் உண்டார்கள்.. விழா நாளின் அயர்வு நீங்க ஆளுக்கொரு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்..
மாலை மயங்கிக் கொண்டிருந்தது.. போதை தரும் இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.. முடியாத உடலோடு.. திருமணத்தில் கலந்து கொண்டிருந்த மிருதுளா.. பிரபாவதியை அழைத்தாள்.. அறையில் ரவிவர்மனும் இருந்தார்..
"இன்றைக்கு எங்க வீட்டில்தான் முதலிரவு நடந்தாகனும் பிரபா.. அதனால பிரதாப்பையும்.. சாரதாவையும் கூப்பிட்டுக்கிட்டுப் போகனும்.. பெண் வீட்டாளா நீயும் கூட வரனும்.."
"தெரியுது சித்தி.. இது இன்னைக்கு நடக்கப் போகிற விசேசம்.. நாளைக்கு..?"
"என்ன செய்யலாம்..? அதையும் நீயே சொல்லு..."
"அங்கே ஒரு குடும்பம்.. இங்கே ஒரு குடும்பம்ன்னா.. பிரதாப் எந்த வீட்டில் இருப்பான் சித்தி..? பெத்தவங்களை விட்டு விட்டு மாமனார் வீட்டில் தங்க அவன் விரும்ப மாட்டான்.. புகுந்த வீடிருக்க.. பிறந்த வீட்டில் இருக்கிறதுக்கு சாரதாவும் யோசிப்பா.. நானோ அரண்மனையை விட்டு நகர முடியாது.. இந்தச் சூழ்நிலையில நான் என்ன செய்யட்டும் சித்தி..? தனிமரமாய் காலம் தள்ளனுமா..?"
"என்ன பேச்சுன்னு இதைப் பேசற பிரபா.. உன்னைத் தனியா தவிக்க விடறதுக்காகவா இந்தக் கல்யாணம் நடந்தது..?"
"அப்படி நீங்க நினைக்கிறதா இருந்தா எல்லோரும் ஒரே குடும்பமா இந்த அரண்மனையில இருந்தாகனும் சித்தி.. அப்பத்தான் நானும் சரி.. நீங்களும் சரி.. நிம்மதியாக இருக்க முடியும்.. எப்படியும்.. கம்பெனி பொறுப்புக்களை யெல்லாம் பிரதாப்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.. சாரதா மேலே படிக்க ஆசைப்படறா.. அவ அதைப் படிக்கட்டும்ன்னு நான் நினைக்கிறேன்.. படிச்சு முடிச்சதும் சொந்தமா ஒரு ஹாஸ்பிடல் கட்டி பிராக்டிஸ் பண்ணனும்கிறது அவளோட கனவு.. அப்படியிருக்கிறப்ப உடந்தைப்பட்டவன் அரண்மனையை விட்டுத் தள்ளி நிற்க கூடாது சித்தி.. அவனோட குடும்பம் இங்கேயிருந்தாத்தான் தள்ளி நிற்காம அவனும் இங்கேயிருக்க சம்மதிப்பான் சித்தி.. நாளைக்கு இந்த அரண்மனையோட சொத்துக்களை ஆளப்போகிறது யார் சித்தி..? உங்க குடும்ப வாரிசுகள்தானே..?"
பிரபாவதி பொறுமையாகப் பேசினாள்.. நிலைமையை எடுத்துச் சொன்னாள்.. ரவிவர்மனும்.. மிருதுளாவும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்..
"இன்றைக்கு நடக்க வேண்டிய விசேசம் நடந்து முடியட்டும் பிரபா.. மறுவீட்டு விருந்து.. சடங்கு சம்பிரதாய மெல்லாம் முடிஞ்சவுடனே.. நாங்க எல்லோரும் அரண்மனைக்கே வந்து விடுகிறோம்.. நல்லநாள்.. கிழமைக்கு எங்க வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரத்துக்கு இருந்துட்டு வந்துட்டாப் போச்சு.. நீ மனதைப் போட்டு உழட்டிக்காதே.. உனக்காகத்தான் இந்தக் கல்யாணமே நடந்திருக்கு.. நாங்க உன்கூட இல்லாமல் விட்டு விட்டுப் போய் விடுவோமா..?"
மீண்டும் சூழ்நிலையின் சிக்கலை மிக எளிதாக தீர்த்து வைத்து விட்டாள் மிருதுளா.. மனைவியை காதல் பொங்கப்பார்த்தார் ரவிவர்மன்.. அவரின் அந்தப் பார்வையில் ஜெயசிம்மனின் நினைவு பிரபாவதிக்கு வந்தது.. அன்றைய இரவுக்கான ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டார்கள்.. ரவிவர்மனின் வீட்டில்.. முதலிரவுக்காக அலங்கரிக்கப் பட்டிருந்த அறைக்குள் சாரதா காலடி எடுத்து வைத்த போது அவளது உடல் நடுங்கியது.. அவள் பயந்ததைப் போலவே காத்திருந்த பிரதாபன்..
"உன் அப்பா மனதில் உன் அம்மா இருந்தாங்கதான்.. அதுக்காக என் அக்காகூட உன் அப்பா குடும்பம் நடத்தாம விலகி நின்று விரதமா இருந்தார்..?" என்று கேள்வி கேட்டான்..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -29
தஞ்சமென வந்தவளே -29
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale29.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale29.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy