தஞ்சமென வந்தவளே -28

28 "இது ஜமீன் குடும்பம் சாரும்மா.. இந்தக் குடும்பத்தில குறிப்பிட்ட வயசுக்கு மேல பெண்களை கல்யாணம் பண்ணிக் கொடுக்காம வீட்டில் வைத்...


28

"இது ஜமீன் குடும்பம் சாரும்மா.. இந்தக் குடும்பத்தில குறிப்பிட்ட வயசுக்கு மேல பெண்களை கல்யாணம் பண்ணிக் கொடுக்காம வீட்டில் வைத்திருக்க மாட்டாங்க.. இப்போதே உன் வயதில் இருக்கும் நம் உறவு வட்டாரப் பெண்கள் கையில் குழந்தையோடு இருக்கிறாங்க சாரும்மா.. அதனால காலம் கடத்த முடியாது.."
"அம்மா..."
"பிரதாபனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா.. நான்  உரிமையோட இந்த வீட்டில் இருக்க முடியும்.. அதுவே வேற யாராவதுன்னா மனதுக்குள்ள ஒரு பயம் இருந்துக் கிட்டுத்தான் இருக்கும்.. ஆனாலும் சாரும்மா.. எனக்கு உன் விருப்பம்தான் முக்கியம்..."
இப்படிச் சொல்லும் தாயின் பேச்சுக்கு.. எதிர் பேச்சை எப்படிப் பேசுவாள் சாரதா..?
அவள் பிரதாபனைத் திருமணம் பண்ணிக் கொள்ள சம்மதம் சொல்லி விட்டாள்.. பிரபாவதி மகிழ்ச்சியுடன தம்பிக்கு போனை போட்டு வரச் சொன்னாள்.. அவளிடம் பேசிவிட்டு வந்தவனின் முகம் இறுகியிருந்தது.. சாரதாவை வெறுப்புடன் பார்த்தவன்..
"ஊர்மிளாவுக்குத்தான் என்ன பதில சொல்லப் போகிறேனோ.. தெரியலை.. எல்லாம் உன்னால் வந்தது.." என்று பல்லைக் கடித்துவிட்டுப் போனான்..
"ஊர்மிளாவா..?"
சாரதா பிரபாவதியிடம் கேட்ட போது அவள் மழுப்பினாள்..
"அவ மிருதுளாவின் அண்ணன் மகள்ம்மா.."
"அவளுக்கு உங்க தம்பி எதுக்காகப் பதிலைச் சொல்லனும்..?"
"அதுதானே.. அவன் அப்படியா சொன்னான்..? முறைப் பெண்ணுன்னா இருந்தா அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு எழுதியா வைத்திருக்கு..? இருக்கட்டும்.. அவனை நான் கேட்கிறேன்.."
அவள் என்ன கேட்டாளோ.. ஏது கேட்டாளோ.. அதற்கும் பிரதாபன் சாரதாவைத்தான் முறைத்து விட்டுப் போனான்..
"என்ன..? போட்டுக் கொடுக்கிறயா..?"
இவன் இதை விடவே மாட்டானா என்றிருந்தது சாரதாவிற்கு..
"நான் ஒன்றையும் செய்யலை.. ஊர்மிளா யார்ன்னு தான் கேட்டேன்.." அவள் முணுமுணுத்தாள்...
"இது ஒன்னு போதாதா..? என் அக்கா என்னை காய்ச்சு சாய்ச்சுன்னு காய்ச்சி எடுக்கிறாங்க.. ஆமாம்.. நீ என்ன கழுதைக்காக ஊர்மிளாவைப் பற்றி விசாரிக்கிற..? அதைத் தெரிந்துக்கிட்டு என்ன செய்யப் போகிற..? என்ன..? என் அக்காகிட்ட தியாகி வேசம் போட்டுட்டு உன் காதலன் கூட கம்பி நீட்டிரலாம்ன்னு பார்க்கிறயா..?"
'கம்பி நீட்டறதா..?' சாரதா எரிச்சலுடன் அவனை முறைத்துப் பார்த்தாள்.. அவனின் அந்த வார்த்தை பிரயோகத்தை அவள் ரசிக்கவில்லை. அதைப்பற்றி அவன் பொருட் படுத்துவதாகவும் இல்லை..
கோபத்துடன் அவளை பதிலுக்கு முறைத்து விட்டுப் போய்விட்டான்..
ரவிவர்மன் யோசித்தார்.. பிரபாவதியிடம் கேட்ட போது இதுதுhனே அவர்களின் குடும்ப வழக்கம் என்று அவள் கேட்டாள்...
"இரண்டு குடும்பங்களிலயும் பெண் கொடுத்துப் பெண் எடுக்கிறதுதானே இத்தனை நாள் வழக்கமாய் இருந்து வந்திருக்கு சித்தப்பா..? நான் புதிதாக எதையும் சொல்லி விடலையே.."
"ஆனாம்மா.. ஊர்மிளா..?"
"அந்தப் பேச்சு எதனால் வந்தது சித்தப்பா.. இந்த வீட்டில் பிரதாப்புக்கு தோதான பெண் இல்லைன்னு நாம நினைச்சதினால வந்தது.. இப்பத்தான் சாரதா வந்துட்டாளே.. இனிமேலும் ஊர்மிளாவை எப்படி பிராப் கல்யாணம் பண்ணிக்க முடியும்..?"
பிரபாவதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார் ரவிவர்மன்.. மிருதுளாவிடம் விவரம் போனபோது அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை..
"பிரபா சொல்கிறது நியாயம் தானே..?" என்று தான் அவள் கேட்டாள்..
"மிருது.." ரவிவர்மன் நெகிழ்ந்து போனார்..
ஒரே நொடியில் சிக்கலைத் தீர்த்து வைத்து விட்ட மனைவியின் மீது அவருக்கு காதல் பெருகியது..
"அண்ணனிடம் நான் பேசிக்கறேன்.."
சொன்னதைப் போல அவளது பிறந்த வீட்டிற்குப் போன் போட்டு அவளே விவரத்தை எடுத்துச் சொல்லி விட்டாள்.. ஊர்மிளா மட்டும் பிரதாபனுக்கு போன் செய்து அவன் அவளுக்குத் துரோகம் செய்து விட்டானென்று குற்றம் சாட்டினாள்..
"என்னை விட அழகா.. ஜமீன் சொத்துக்கு வாரிசா ஒருத்தி வந்தவுடன் என்னை மறந்துட்டிங்களே அத்தான்.."
"இதோ பார் ஊர்மிளா.. உனக்கு நான் எப்போதாவது நம்பிக்கை கொடுத்திருக்கிறேனா..? நம்ம வீட்டில பேசின பேச்சுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்..?"
"பேசுவீங்க அத்தான்.. நீங்க பேசுவீங்க.. இதை மட்டுமா பேசுவீங்க.. இன்னும் என்னென்னவோ பேசுவீங்க.. நீங்களா இதைப் பேசலை அத்தான். அவ உங்களைப் பேச வைக்கிறா.. அவ அம்மா ஜமீன்தாரை மயக்கிக் கைக்குள்ள போட்டுக்கிட்டா.. இவ உங்களை மயக்கி வைக்குள்ள போட்டுக்கிட்டு இருக்கா.. அவ மயக்கத்தில இருக்கீங்க அத்தான்.. என பேச்சு உங்க காதில் ஏறாது.."
பிரதாபன் சட்டென்று போனை அணைத்து விட்டான்.. விட்டிருந்தால் ஊர்மிளா அன்று முழுவதும் சாரதாவைத் திட்டித் தீர்த்திருப்பாள்.. அடுத்து அவள் போன் பண்ணியபோது 'ஸ்விட்ச் ஆஃப்' என்ற பதில்தான் வந்தது.. பிரதாபனுக்கு எதனாலோ ஊர்மிளாவின் அந்தப் பேச்சைப் பிடிக்கவில்லை..
திருமணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள்.. மார்த்தாண்டவர்மனின் பலத்த எதிர்ப்பை ரவிவர்மன் தடுத்து நிறுத்தி விட்டார்.. அவரையும் பிரதாப வர்மனையும் எதிர்த்து மார்த்தாண்டவர்மனால் எதையும் செய்ய முடியவில்லை.. பிரதாபவர்மன் அந்த வீட்டில் பெண் எடுக்கப் போவது நிச்சயமானவுடன் அவர் குடும்பத்துடன் அரண்மனையைக் காலி செய்து விட்டு அவர் வீட்டுக்குப் போய் விட்டார்..
பகை நடுவினில் வாழும் நிர்பந்தத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக மூச்சு விட்டாள் சாரதா... நெடு நாள்களுக்குப் பின்னால் அன்றிரவுதான் அவள் அமைதியாக பிரபாவதியின் அருகில் படுத்து ஆழ்ந்து உறங்கினாள்..
சாரதா கம்பெனிக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஓர் மழை நாளில் வழி மறித்தாள் ஊர்மிளா...
கொட்டிக் கொண்டிருந்த மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி.. நடுச்சாலையில் நின்று இருகை களையும் விரித்தவளைப் பார்த்ததும் பிரேக் போட்டு காரை நிறுத்தினார் சபாவதி..
"என்ன சித்தப்பா..?"
சபாபதியை அப்படித்தான் அழைப்பாள் சாரதா.. அவளுக்கும் ஜெயசிம்மனுக்கும் இருந்த ஆழ்ந்த நட்பை அறிந்த பின்பு அவரை டிரைவர் என்று அவரால் நினைக்க முடியவில்லை..
அவளின் அந்த சொந்தத்தில் கட்டுண்டு போனார் சபாபதி.. அன்றும் அதைப் போன்ற வாத்சல்யம் மனதில் பொங்க.. சாலையைக் கவனித்தவர்...
"அவங்கதான் நம்ம சின்னய்யாவோட மாமன் மகள்ம்மா.." என்றார்
"ஊர்மிளாவா..?" அவசரமாக வினவினாள் சாரதா...
ஆமாம் என்ற அர்த்தத்தில் தலை அசைத்தார் சபாபதி..
"மழையில் நனைஞ்சுக்கிட்டு இருக்காளே.."
அவசரமாய் கார் கதவைத் திறந்து இறங்கினாள் சாரதா.. ஊற்றிக் கொண்டிருந்த நீர்த் திவலைகள் அவள் மீதும் கொட்டின.. மழை நீரில் நனைந்தபடி ஊர்மிளாவின் அருகே போனாள்..
"என்னைப் பார்க்கவா வந்தீங்க..?"
"உன்னை எதுக்காக நான் பார்க்க வரனும்..? என் அத்தானை என்னிடமிருந்து தட்டிப் பறிச்சுக்கிட்டவளைப் பார்க்க வந்திருக்கேன்.."
"எதுவானாலும் காருக்குள் உட்கார்ந்து பேசலாமே.. ப்ளீஸ்.. மழைகொட்டுது..."
"தேவையில்லை.. இந்த மழைநீர் என் மனக் கொதிப்பை அடக்கி விடாது.. அதோட உன் காரில் ஏற எனக்கு விருப்பமில்லை.. நீ புதிதாய் இப்பத்தான் காரைப் பார்த்திருக்கிறவ.. நான் பிறந்த போதே கார்.. பங்களாங்கிற வசதியோட பிறந்தவ.. உன் காரில் நான் ஏறுகிறதா..? நெவர்.." ஆணவமாக பேசினாள் அந்த ஊர்மிளா..
"ஓகே.. அப்படியே இருக்கட்டும்.. உங்க காருக்கு வேணும்னா நான் வர்றேன்.. அங்கே உட்கார்ந்து பேசலாம்.." பொறுமையாக தணிந்து போனாள் சாரதா..
"என் காரில் நீ ஏறுகிறதா..? இந்த ஊர் வேண்டும்னா உன்னை பந்தனவாசல் ஜமீன் வாரிசுன்னு கொண்டாடலாம்.. நான் கொண்டாட மாட்டேன்.. என்னை யாருன்னு நினைத்த..? ஊர்.. பேர் தெரியாத அநாதை பெத்த பெண் நீ.. ஜமீன்தாருக்கு மகளாப் பிறந்துட்டா எனக்கு நீ இணையா ஆகிடுவியா..?"
ஊர்மிளா கேட்ட ஒவ்வொருவார்த்தையும் கூரிய அம்புகளாக சாரதாவின் நெஞ்சில் இறங்கின.. அதன் வலி தாங்காமல் துடித்துப் போனாள் சாரதா..
கொட்டும் மழை நீரில் நனைந்திருந்த முகத்தில் வழிந்த நீரைக் கையால் வழித்து விட்டு சாரதாவை உறுத்துப் பார்த்த ஊர்மிளாவின் வெறி பிடித்த பார்வையில் அவள் நெஞ்சம் நடுங்கியது..
"இன்னைக்குச் சொல்கிறேன்.. எழுதி வைத்துக்க.. உன் கழுத்தில் அத்தான் தாலி கட்டலாம்.. உன் கூட குடும்பம் நடத்தலாம்.. ஆனா.. என்னைக்குமே அவர் மனசில நான்தான் இருப்பேன்.. என்னை மனசில நினைச்சுக் கிட்டுத்தான் உன் கூட அவர் வாழ்வார்... இதை மறந்துராதே.."
ஊர்மிளா விருட்டென்று திரும்பி அவள் காருக்கு விரைந்து விட்டாள்.. அசையாமல் மழையில் நனைந்தபடி சிலையாக நின்றிருந்த சாரதாவின் இதயம் 'அம்மா' என அலறித் துடித்தது..
"வாங்கம்மா போகலாம்.."
தானும் நனைந்தபடி அவளைச் சமாதானப் படுத்தி காரில் ஏற வைத்தார் சபாபதி.. வீட்டில் வந்து நின்ற மகளின் அரண்ட கோலத்தைப் பார்த்துப் பதறிவிட்டாள் பிரபாவதி..
"என்னம்மா.. என்ன ஆச்சு..?"
அவள் கேட்டதற்கு சாரதாவிடம்  எந்தவிதப் பதிலுமில்லை.. மாறாக.. பிரபாவதியின் மடியில் தலை வைத்து அப்படியே சரிந்து விட்டாள்.. அன்று இரவில் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது.. காய்ச்சலின் வேகத்தில் அரற்றியவள் பிரபாவதியின் கையைப் பிடித்து..
"அம்மா என்னை விட்டுப் போய் விடாதீங்க.." என்று பதறினாள்..
"இல்லைடாம்மா.. அம்மா உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.. என் கண்ணில்ல.. பயப்படாம தூங்கு.." பிரபாவதி மகளைத் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்தினாள்..
"எனக்குன்னு யாருமில்லைம்மா.. நீங்க மட்டும் தான்.." என்ற சாரதாவின் பரிதவிப்பில் பிரபாவதியின் மனம் வேதனை கொண்டது..
"எனக்கு மட்டும் யாருடா இருக்கா..? எனக்கும் நீ மட்டும்தாண்டா செல்லம்.. அமைதியா இருடாம்மா.." மகளின் நெற்றியை வருடிக் கொடுத்தாள்..
"அம்மா.. நீங்க மனதில வேற யாரையும் மகளா நினைத்துக் கிட்டு வெளியே என்னை மகள்ன்னு வாய் வார்த்தையாய் சொல்ல மாட்டிங்கம்மா.. உங்க மனசிலயும்.. நினைவிலயும் நான் மட்டும்தான்ம்மா.. எனக்கு நீங்க போதும்மா.. இதுக்குத்தான் நான் சொன்னேன்.. கல்யாணம் வேண்டாம்ன்னு.. நீங்க கேட்கலையே.." சாரதா அரற்றினாள்..
சபாபதி டாக்டரை அழைத்துக் கொண்டு வந்துவிட.. பிரபாவதி சிந்தனையுடன் மகளை பரிசோதிக்க விட்டு வெளியே வந்தாள்.. டாக்டர் கொடுத்த ஊசி மருந்தின் உபயத்தில் சாரதா தூங்க ஆரம்பித்ததும் சபாபதியிடம் நடந்ததை விசாரித்தாள்..
கொஞ்சம் தயங்கினாலும் சபாபதி உண்மையைச் சொல்லி விட்டார்.. அவர் ஜெயசிம்மனுக்குத்தான் விசுவாசமானவர்.. பிரதாபவர்மனுக்கு இல்லையே...
நடந்ததைக் கேட்டதும் பிரபாவதியின் முகம் இறுகி விட்டது..
"பிரதாப்.. நீ என் மகளுக்கொன்னும் வாழ்க்கை கொடுக்க வேணாம்.. உனக்கு கழுத்தை நீட்டறதால என் மகள் உன் மாமன் மகள்கிட்டப் பேச்சுக் கேட்கனும்னா அப்படியொரு கல்யாணம் என் மகளுக்கு வேண்டாம்.. என் மகளை மதிக்கிற மாப்பிள்ளைக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துக்கிறேன்.. இனி நீ யாரோ.. நான் யாரோ.." என்று தம்பியை போனில் அழைத்துச் சொல்லி விட்டாள்...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -28
தஞ்சமென வந்தவளே -28
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy