தஞ்சமென வந்தவளே -25

25 அவன் சாரதாவை விரும்பினானோ.. இல்லையோ.. அவளின் சில தன்மைகளால் கவரப்பட்டான்.. அவளைப் போன்ற குணாதிசியங்கள் கொண்ட ஒரு பெண்ணை அதற்கு முன...


25

அவன் சாரதாவை விரும்பினானோ.. இல்லையோ.. அவளின் சில தன்மைகளால் கவரப்பட்டான்.. அவளைப் போன்ற குணாதிசியங்கள் கொண்ட ஒரு பெண்ணை அதற்கு முன்னால் அவன் பார்த்ததில்லை.. இந்த அளவுக்கு  கொட்டிக் கிடக்கிற செல்வம் கிடைத்தும் எப்படி ஒருத்தியினால் தாமரையிலைத் தண்ணீரைப் போல் இருக்க முடிகிறது என்ற பலத்த ஆச்சரியம் அவனுக்குள் உண்டு..
அவள் எதனாலும் பாதிக்கப் படாதவளாக இருந்தாள்.. அவளைச் சுற்றிச் சூழ்ந்திருந்த பகையும் அவளைப் பாதிக்க வில்லை.. அவளிடம் கொட்டிக் கிடந்த செல்வமும் அவளைப் பாதிக்கவில்லை.. அவளுடைய இலக்கு எது என்பதில் அவள் மிகத் தெளிவாக இருந்தாள்..
அந்த இலக்கு பிரபாவதியின் அன்பையும்.. பாசத்தையும் வெல்வது மட்டும்தான்.. வேறு எதுவும் அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை..
பிரதாபவர்மனிடம் வாதாடும் சமயங்களில் மட்டும் அவனை வெறுப்பேற்றுவதற்காக 'உங்கள் அக்கா' என்று சொல்பவள்.. மற்றவர்களிடம் பிரபாவதியைப் பற்றிப் பேசும் போது.. ஒரு போதும்
'அம்மா..' என்ற வார்த்தையைத் தவிர்த்து வேறு வார்த்தையைப் பேசியதில்லை...
அவள் பிரபாவதியை உண்மையாக நேசித்தாள்.. அவள்தான் அவளுடைய தாய் என்பதில் திடமாக இருந்தாள்.. என் பாதுகாவலில் நீ இல்லை... உன் பாதுகாவலில்தான் நான் இருக்கிறேன் என்று உறுதியுடன் உணர்த்தினாள்.. உன்னிடம் தஞ்சமென்று வந்திருக்கிறேன் என்று பிரபாவதியின் மடி சாய்ந்தாள்..
எந்தப் பெண்தான் அவளுடைய கணவருக்கு இன்னொரு பெண்ணின் மூலம் பிறந்த மகளை தன் மகளாக ஏற்பாள்..?
பிரபாவதி அதைச் செய்தாள்.. அம்மா என்று அவளிடம் தஞ்சம் புகுந்த அவள் கணவரின் மகளை தன் மகளாக ஏற்றாள்.. அவளுக்காக பெற்றவரையும் கூடப் பிறந்தவர்களையும் எதிர்க்கத் துணிந்தாள்..
அதைச் செய்து காட்டியது சாரதாவின் அப்பழுக்கற்ற அன்பு மட்டும்தான்... அப்படிப்பட்டவளை கை பிடிக்க பிரதாபவர்மனுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது..
'ஆனால்..?' பிரதாப வர்மனின் முகம் இறுகியது..
"அக்கா எனக்கு யோசிக்க டைம் வேண்டும்.. உடனடியா இதுக்கான பதிலைச் சொல்லிவிட என்னால் முடியாது..."
அவனின் அந்தப் பதிலை பிரபாவதி எதிர்பார்த் திருக்கவில்லை.. அவள் கேட்டதும் சம்மதித்து விடுவான் என்று நினைத்து வந்தவளின் முகத்தில் ஏமாற்றம் பரவியது.
"ஒன்றை மனதில் வைத்துக்க பிரதாப்.. உன் மாமா சொன்னதுதான் எனக்கு வேதவாக்கு.. அவர் அரண்மனையை விட்டு நான் நகரக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.. சாரதாவின் பாதுகாப்பில்தான் கடைசிவரைக்கும் நான் இருந்தாகனும்னு சொல்லியிருக்கார்.. யோசித்துப் பார்.. நாளைக்கே சாரதாவுக்கு கல்யாணமாகி.. யாரோ ஒருவன் அவளுக்கு கணவனா வந்து விட்டால் என் நிலைமை என்னவாகும்..?" பிரபாவதி கேட்டாள்..
"உங்க நிலைமைக்கு ஒரு குறைவும் வந்து விடாதுக்கா.. வர நான் விடவும் மாட்டேன்.." பிரதாப வர்மனின் கண்கள் சிவந்தன..
"உன்னால் என்னடா செய்ய முடியும்..? உறவுக்கு வெளியில் நீ நிற்பாய்.. உறவாக வேற யாரோ ஒருவன் இருப்பான்.. நீ கேட்கவந்தால் அதைக் கேட்க நீ யார்ன்னு கேட்க மாட்டானா..?"
"எமோசனலாய் பிளாக் மெயில் பண்றீங்களாக்கா..?"
"உலக நடப்பைச் சொன்னேன் பிரதாப்.. உன்னுடன் வரச்சொல்லி நீ அடிக்கடி சொல்லுவாய்.. சாரதாவைக் கல்யாணம் பண்ணி நீ என் மருமகனா வந்து விட்டால் உரிமையுடன் உன் வீட்டுக்கு நான் வரலாம்டா.. கடைசி வரைக்கும் உன் பாதுகாப்பில் இருக்கலாம்.."
பிரபாவதி வற்புறுத்தினாலும்.. அவள் சொல்வதிலும் ஓர் அர்த்தமிருப்பதை உணர்ந்தான் பிரதாபன்.. அவனைத் தவிர சாரதாவை யார் மணந்தாலும் பிரபாவதியின் நிலைமை கேள்விக் குறியாகத்தான் ஆகிவிடும்.. சாரதா கணவனிடம் போராடலாம்தான்.. நிச்சயமாக அவள் போராடுவாள்தான்.. அதைக் கண்கொண்டு பார்க்கும் பிரபாவதி அதைத் தாங்கிக் கொள்ள மாட்டாள்...
"அக்கா ப்ளீஸ்... உங்களுக்கு அப்படியொரு நிலைமை வர நான் விட்டுவிட மாட்டேன்.. அதேசமயம்.. நீங்க கேட்டதுக்கு உடனடியா சம்மதம்.. சொல்லவும் என்னால முடியலை.. இப்போதைக்கு இந்த விசயத்தை ஆறப் போடுவோம்.. பிறகு இதைப் பற்றிப் பேசலாம்.."
"ஏன் பிரதாப்..? என் மகளைவிட உனக்கு உன் மாமன்மகள் பெரிதாக போய் விட்டாளில்ல..?" பிரபாவதி கேட்டு விட்டாள்..
அப்படியில்லை என்று சொல்லிவிட பிரதாபனால் முடியவில்லை.. எப்படி அவனால் அப்படியொரு பதிலைச் சொல்ல முடியும்..? ஊர்மிளா அவனுக்காக காத்திருப்பது உண்மையல்லவா..?
"போகலாம்க்கா.."
"அப்ப.. பதிலைச் சொல்ல மாட்ட...?"
"பிறகு பேசலாம்.."
பிரபாவதி உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கிப் போய் விட்டாள்.. பிரதாபன் அவன் காருக்கு வருவதற்குள் அவளுடைய கார் பறந்து விட்டது..
அவளின் கோபத்தில் பிரதாபவர்மனுக்கு வருத்தம் வந்தது.. அவனும்தான் என்ன செய்வான்..? திடிரென்று இப்படிச் சொன்னால் அவனால் என்ன பதிலைச் சொல்ல முடியும்..?
அவன் காரைக் கிளப்பினான்.. வீட்டுக்குப் போனவனுக்கு அதே சிந்தனைதான்.. மில்லுக்கு கிளம்பிப் போனவன்.. வழியில் சாரதாவைச் சந்தித்தான்.. வழியில் இருந்த 'நதி எக்ஸ்போர்ட்ஸ்' கம்பெனியின் வாசலில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தவள்.. அவன் காரைக் கண்டதும் பிரகாசமானாள்..
'யார் கூடப் பேசறா..?'
சாரதாவுடன் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தான்.. உயரமாக.. கவர்ச்சியாக.. நாகரிகமான நடையுடை பாவனையுடன் இருந்தவனைக் கண்டதும் அவன் கார் நின்று விட்டது..
'இந்த மாமன்.. எந்த மாமன்..?'
ஒரு தினுசாக சாரதாவைப் பார்த்தபடி காரை விட்டு இறங்கிய பிரதாபன் அவளருகில் சென்றான்.. நின்றான்..
"ஹாய்.." உற்சாகமானாள் சாரதா..
"பந்தனவாசலில் ஹாய் சொல்லிக்க மாட்டாங்க.." என்றான் பிரதாபன்..
மிளகாயின் காரத்தோடு அவன் பேசியதில் சாரதாவின் அருகில் நின்றிருந்தவன் ஆச்சரியத்துடன் பிரதாபனைப் பார்த்தான்.. பதிலுக்கு பிரதாபன் அவனை முறைத்துப் பார்த்தான்..
சாரதா சங்கடத்துக்கு ஆளானாள்.. அதை மறைத்துக் கொண்டு..
"விக்ரம்.. இவர்தான் பிரதாபவர்மன்.. என் அம்மாவின் தம்பி.. இங்கே இளைய ஜமீன்தார்ன்னு இவரைச் சொல்லு வாங்க.." என்று வந்திருந்தவனுக்கு அவனை அறிமுகப் படுத்திவைத்தாள்..
அந்த விக்ரம் புன்னகை மன்னனாக..
"ஹலோ.." என்று கை நீட்ட.. பதிலுக்கு கை நீட்டாமல்..
"இவரை என்னன்னு சொல்லுவாங்கன்னு எனக்கு நீ சொல்லலையே.." என்று சாரதாவைப் பார்த்துக் கேட்டான்.
'ஆரம்பிச்சுட்டானா..?' சாரதா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. விக்ரம் அவளுடன் படித்தவன்.. மேற்படிப்பை படிக்கப் போகிறான்.. குற்றாலத்துக்கு வந்தவன் பக்கத்தில்தான் சாரதா இருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அவளைப் பார்த்து விட்டுப் போக வந்திருக்கிறான்..
'இந்த நேரம் பார்த்தா இவன் வந்து சேரனும்..?'
ஏற்கனெவே ஜெயசிம்மனின் உறவுக்காரனை 'மாமன்' என்று சொல்லி விட்டதற்காக பிரதாபவர்மன் விட்ட அறையில் அவள் காது இப்போதும் 'bநுhய்' என்று ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.. இந்த லட்சணத்தில் இன்னொரு அறிமுகப் படலத்தையும் அவனிடம் அவள் நிகழ்த்தியாக வேண்டும்...
இப்போது என்ன செய்து வைக்கப் போகிறானோ என்ற கவலையுடன்..
"இவர் என் கிளாஸ் மேட்.. டாக்டர்.. பி.ஜி. படிக்கப் போகிறார்.." என்று வந்திருந்தவனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்..
"டாக்டருக்கு எக்ஸ்போர்ட் கம்பெனியில் என்ன வேலை..?" வெகு அக்கறையாக விசாரணையைத் தொடர்ந்தான் பிரதாபன்..
அவளைப் பார்க்க வந்திருக்கும் கல்லூரித் தோழனின் முன்னிலையில் பிரதாபன் அப்படிப் பேசிவைத்ததை சாரதா விரும்பவில்லை..
"நீங்க கூடத்தான் மில் ஓனர்.. உங்களுக்கு இங்கே என்ன வேலை..?" அவளும் கேட்டுவிட்டாள்..
"ஓ..." பிரதாபவர்மனின் கண்கள் இடுங்கின..
'இவன் அடுத்த மண்டகப்படியை ஆரம்பிச்சுட்டான்..' சாரதா மானசீகமாக தலையைப் பிடித்துக் கொண்டாள்..
"நீ எனக்கு அக்கா மகள்ன்னு எனக்கு ஞாபகம்.. அதான்.. பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்... இந்த விளக்கம் போதுமா.. இல்லை இன்னும் ஏதாவது சொல்லனுமா..?" கன கரிசனமாக அவன் கேட்டான்..
"போதும்.. போதும்.. உங்களைப் போல்தான் இவரும்.. என்னைப் பார்த்துட்டுப் போக வந்திருக்கிறார்.. உங்களுக்கும் இந்த விளக்கம் போதுமா.. இல்லை.. இன்னும் கொஞ்சம் வேணுமா..?" விட்டுக் கொடுக்காமல் அவளும் கேட்டாள்..
"போதும்.. போதும்.. எவ்வளவு விளக்கம் சொல்லிட்ட.. இதைப் போதாதுன்னு சொல்ல நானென்ன மாங்காய் மடையனா..? ஹலோ மிஸ்டர்.. இல்லையில்லை.. நீங்க டாக்டரில்ல.. அதை மறந்துட்டேன் பாருங்க.. ஹலோ.. டாக்டர் விக்ரம்.. இப்ப உங்க கையைக் கொடுங்க.."
விக்ரமின் கையை இறுக்கிப் பிடித்து அவன் குறுக்கிய வேகத்தில் வலி தாங்காமல் முகத்தை லேசாகச் சுளித்தான் விக்ரம்..
பிரதாபன் காருக்குள் ஏறும் போது அந்த விக்ரம்..
"இங்கே எதையெதை எக்ஸ்போர்ட் பண்றிங்க சாரு.." என்று கேட்டுக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.
'சாரு..?'
பிரதாபன் பல்லைக் கடித்தபடி காரை விரட்டிய வேகத்தில் முப்பது நிமிடங்களில் சென்றடைய வேண்டிய மில்லை மூன்றே நிமிடங்களில் அடைந்து விட்டான்..
காத்திருந்த வேலைகளில் மூழ்கினாலும் அவன் மனது முழுவதும் 'நதி எக்ஸ்போர்ட்ஸ்' கம்பெனியின் வாசலிலேயே நின்றது..
அந்த விக்ரமின் கவர்ச்சிகரமான தோற்றத்தில் அவன் மனம் அலைக்கழிந்தது.. அவன் காதுகளில் 'சாரு' என்ற குரலே ஒலித்துக் கொண்டிருந்தது..
'கூடப் படித்தவன் கூடப் பேசிப் பழகத்தான் இவ கம்பெனிக்கு வந்தாளா..?' கோபத்துடன் பிரபாவதிக்கு போனைப் போட்டான்..
"என்ன பிரதாப்.. முடிவெடுத்துட்டியா..?" மறுமுனையில் அவள் பரபரத்தாள்..
"நீங்க அதிலேயே இருங்க.." இவன் வெடுவெடுத்தான்..
"என்னடா..? கோபமா பேசற..?"
"பின்னே.. உங்க மகள் செய்து வைக்கிற வேலையைப் பார்த்தால் கொஞ்சவா முடியும்..?"
"அவ என்னடா செய்தா..?"
"அது கூடத் தெரியாம அரண்மனைக்குள்ள அடைஞ்சு கிடங்க.. விளங்கிரும்.."
"நீ என்னன்னுன்னுதான் சொல்லேண்டா.."
"என்னத்தைச் சொல்கிறது..? இப்ப அவ எங்கேயிருக்கா.. யார்கூடப் பேசிக்கிட்டு இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா..?"
"ஏன் தெரியாது..? இதோ.. வீட்டில் உட்கார்ந்து.. என்கூடத்தான் பேசிக்கிட்டு இருக்கா.. போனை அவளிடம் கொடுக்கவா..? சாரு.. சாரும்மா.."
பிரபாவதியின் கொஞ்சுதலான அழைப்புக்கு "என்னம்மா.." என்று கேட்ட சாரதாவின் குரல் பிரதாப வர்மனின் காதுகளில் தெளிவாக விழுந்தது..
'இவ இப்பத்தானே கம்பெனியில இருந்தா..' அவன் குழம்பிப் போய் விட்டான்..
"வேண்டாம்க்கா.. அவளிடம் கொடுக்க வேணாம்.." அவசரமாக பிரபாவதியைத் தடுத்தான் அவன்..
"என்னாச்சு பிரதாப்..?"
"ஒன்னும் ஆகலை.. ஆமாம்.. இப்பத்தானே உங்க மகளை எக்ஸ்போர்ட் கம்பெனி வாசலில் பார்த்தேன்..? அதுக்குள்ளே எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தா..?"
"அதுவா பிரதாப்.. அவகூடப் படிச்ச பையன் ஒருத்தன் குற்றாலத்துக்கு வந்துச்சாம்.. வந்த புள்ள.. பக்கத்திலதானே சாரதா இருக்கா.. பார்த்துட்டுப் போகலாம்ன்னு அரண்மனைக்கு தேடி வந்துச்சு.. நான் தான் அவ கம்பெனியில இருக்கான்னு வழி சொல்லி அனுப்பி வைத்தேன்.. இவ என்னடான்னா.. அந்தப் புள்ளயைக் கண்டதும் வாப்பான்னு விசாரித்துட்டு.. என்னதான் கூடப் படித்த பையனா இருந்தாலும் தனியா நின்னு பேசக் கூடாதுன்னு அரண்மனைக்கு கூப்பிட்டுக் கிட்டு வந்துட்டா.. இப்ப என் முன்னால உட்கார்ந்து தான் அந்தப் புள்ளகூட பேசிக்கிட்டு இருக்கா.."
பிரபாவதியின் குரலில் பெருமை பொங்கி வழிந்தது..
'இதிலயும் ஜெயித்துட்டாளா..?'
சாரதாவை எதுவும் செய்ய முடியாத கோபத்தில் செல்போனை அணைத்து விட்டெறிந்தான் பிரதாபன்.. அவன் காதுகளில்..
'சாரு..' என்ற விக்ரமின் அழைப்பு ஒலித்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -25
தஞ்சமென வந்தவளே -25
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale25.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale25.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy