தஞ்சமென வந்தவளே -24

24 "எனக்குன்னு உங்களைத் தவிர வேற யாருமில்லைம்மா.. பெத்தவங்களா நான் நேரில் பார்த்தது உங்களை மட்டும்தான்.. உங்க கூட நான் இருந்தால்...


24

"எனக்குன்னு உங்களைத் தவிர வேற யாருமில்லைம்மா.. பெத்தவங்களா நான் நேரில் பார்த்தது உங்களை மட்டும்தான்.. உங்க கூட நான் இருந்தால் போதும்.. அதை மட்டும் வேணாம்ன்னு சொல்லிடாதீங்க.. உறவுகளே இல்லாமல் ஆசிரமத்திலேயே இருந்திருந்தா எனக்கொன்னும் தோன்றியிருக்காது.. இப்ப.. அம்மான்னு உங்களைப் பார்த்துட்டேன்.. உங்க நிழலில் வாழ்ந்துட்டேன்.. திரும்பவும் எதுவுமில்லைன்னு ஆசிரமத்துக்கு திரும்பனும்னா என்னால அது முடியாதும்மா.. எனக்குச் சொத்து வேண்டாம் அம்மாங்கிற உங்க சொந்தம் போதும்ங்கிறா பிரதாப்.."
பிரபாவதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. சற்றுத் தொலைவில் நின்ற காரின் முன் பகுதியில் சாய்ந்து நின்றிருந்த சபாபதி எஜமானியின் கண்ணீர் துளிகளை சலனமில்லாமல் பார்த்தார்..
'இவரை எதுவும் பாதிக்காது..' பிரதாபன் நினைத்துக் கொண்டான்..
'அதே சமயம் இவருக்குத் தெரியாததுன்னு எதுவுமே இருக்காது.. இவர் ரகசியச் சுரங்கம்..'
அரண்மனையின் சுவர்களுக்குக்கூட காது இருக்கும்.. அப்படிப் பட்ட இடத்தில் இருந்து கொண்டு அனைத்தையும் அறிந்தவராய்.. அதே சமயம் எதையும் வெளிவிடாதவராய் இருக்க சபாபதியினால் மட்டுமே முடியும் என்று பிரதாபனுக்கு மிக நன்றாகவே தெரியும்..
"எனக்கெதுக்கு சொத்து பிரதாப்..? அவதான் என்னுடைய சொத்து.. உன் மாமா எனக்கு அநியாயம் செய்துட்டார்ன்னு நினைச்சிருந்தேன்.. இல்லை.. அவர் எனக்கு நியாயம் செய்து விட்டுப் போயிருக்கிறார்.. அவர் வாழும் காலத்தில் என்னிடம் உண்மையைச் சொல்லாமல் என்னைப் பாதுகாத்தார்.. அவர் போனபின்பு உண்மையைச் சொல்லி என்னைப் பாதுகாத்திருக்கிறார்.. பிள்ளை பெற முடியாதவளுக்கு அவருடைய மகளைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.. அவ அவர் ரத்தம்டா... வேற எப்படி இருப்பா..? அவரோட ரத்தம் என்னோட மகளில்லையா..? அவளுக்கு ஒன்னுன்னா நான் செத்து விடுவேன் பிரதாப்.." பிரபாவதி விசும்பியதில்
"அக்கா.." என்று அதிர்ந்து விட்டான் பிரதாபன்..
"என்ன பேச்சுப் பேசறிங்க..?" அதட்டினான்..
"ஆமாம் பிரதாப்.. அவ மேல நான் உயிரையே வைச்சிருக்கேன்.. என் மகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது.. அதை என்னால தாங்கிக்க முடியாது.." பிரபாவதி கண்ணீர் சொரிந்தாள்..
"என்னக்கா இது.." பிரதாபன் தேற்றினான்..
"நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்க்கா.. அவ மேல சின்னதா ஒரு கோபம்.. மற்றபடி அவளை நான் எதுவும் பேச மாட்டேன்க்கா.. என்னால அவளுக்கு ஒரு கெடுதலும் வராது.. எதுக்காக அழுகறிங்க.. நான் உங்க தம்பிக்கா.."
"இல்லைடா பிரதாப்.. எனக்கு உன்மேல பயமில்லை.."
'அப்பாடி.. தப்பிச்சேன்..' நிம்மதி பெருமூச்சு விட்டான் பிரதாபன்..
அவன் பாட்டுக்கு வாய் விடப் போய்.. சாரதாவின் மீது உயிரையே வைத்திருக்கும் அவனுடைய அன்பு அக்கா.. மகள் கிடைத்து விட்ட மமதையில் போடா நீயுமாச்சு.. உன் உறவுமாச்சு என்று அவனைத் தள்ளி வைத்து விட்டால் அவனால் மட்டும் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா..?
"எனக்கு பயமெல்லாம் அப்பா மீதும்.. அண்ணன்கள் மீதும்தான்.. அவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க.."
பிரபாவதி சொல்வது முக்காலும் உண்மை என்பதால் எதுவும் பேசாமல் மௌனமாக வயல் வெளியின் நாரைகளை வெறித்தான் பிரதாபன்..
'இதுகளைப் பாரு.. நானும் அக்காவும் மாறி மாறி முறைக்கிறோம்.. கொஞ்சமாவது பயந்து போய் பறந்து போகுதுகளா..? என்ன ஒரு தெனாவெட்டு..'
அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்..? பிரபாவதி சொல்வதை ஆமாம் என்று ஆமோதிக்க முடியுமா..? அவர்கள் அவனுக்கு பெரியப்பாவாகவும் பெரியப்பாவின் மகன்களாகவும் ஆகிப் போனார்களே..
அதனால் அப்போது அவனால் செய்ய முடிந்த இலகுவான வேலையாக நாரைகளை ரசிக்கும் வேலையை அவன் செய்து கொண்டிருந்தான்..
"சாரதா வந்ததும் அவசரமாக அவளிடம் நகைகள் இருக்கும் லாக்கரின் சாவியை நான் ஒப்படைத்ததிற்கு காரணம் இதுதான் பிரதாப்.. என்னிடம் அந்த நகைகள் இருந்திருந்தா இந்நேரத்துக்கு அது என் அப்பா வீட்டுக்கு இடம் மாறியிருக்கும்.."
"அவ மட்டும் அதை பத்திரமா பார்த்துக்க முடியுமா..?"
"எனக்கும் அந்தக் கவலையிருக்குடா.. முறைப்படி லாக்கரை அவள் பெயருக்கு மாற்றிக் கொடுத்திட்டதாலே அவ கையெழுத்துப் போட்டு எடுத்தாத்தான் நகைகளை வெளியே எடுக்க முடியும்.. அவளை அவ்வளவு சீக்கிரத்திலே அவங்களாலே நெருங்கி விட முடியாது.."
"எத்தனை நாளைக்குத்தான் நீங்க காவலிருக்க முடியும்க்கா..?"
"அதைப் பற்றிப் பேசத்தான் உன்னை இங்கே வரச் சொன்னேன்.."
"சரியாப் போச்சு போங்க.. எனக்கு இருக்கிற வேலை பத்தாதுன்னு அவளுக்கு எஸ்கார்டு உத்தியோகத்தையும் சேர்த்துப் பார்க்கனும்னு சொல்கிறிங்களா..?"
"ஒரு வகையில் அப்படித்தான் பிரதாப்.. அவ என்னவோ ஈஸியா சொல்லிட்டா.. அத்தனை சொத்துக் களையும் என் பெயருக்கு மாற்றிக் கொடுத்திடறேன்னு.. அப்படி மாத்திட்டா என்ன ஆகும்..? என் பேரில் இருக்கிறதை அவங்க பேருக்கு நொடிப் பொழுதில் மாத்திருவாங்க.. அது தெரியாம அவ பேசறா.."
இதற்கு அவனால் என்ன பதிலைச் சொல்ல முடியும்..? சங்கடத்துடன் வேறு வழியில்லாமல் வெறித்த நாரைகளையே மீண்டும் வெறித்து வைத்தான் பிரதாபன்..
"அவ உயிருக்கு ஆபத்திருக்குடா.. அரண்மனையிலே சமைக்கிறசாப்பாட்டைக் கூட நான் சாப்பிட்டுப் பார்த்துட்டுத்தான் அவளைச் சாப்பிட வைத்துக்கிட்டு இருக்கேன்னா.. இது என்ன கொடுமைடா..?"
"உங்களுக்கு எதுக்கு இந்த வேலை..?" அவனுக்கு கோபம் வந்து விட்டது..
"நீங்க நினைக்கிறதைப் போல அதில விசம் கலந்திருந்தா உங்களுக்கு ஏதாவது ஆகித் தொலைக்காதா..? அது பரவாயில்லையா..? அவ உயிர் மட்டும் வெல்லக் கட்டி.. உங்க உயிர் என்ன வேப்பங் கட்டியா..?"
"இல்லைடா பிரதாப்.. அவ என் மகள்டா.. எனக்கு தஞ்சம் கொடுக்க வந்தவளான்னு நான் மனம் கசந்தேன்.. அப்படியில்லைம்மா.. நான் உங்ககிட்ட தஞ்சமாகத்தான் வந்திருக்கேன்னு அவ என் முன்னாலே மண்டி போட்டு என் மடியில தலை வைத்தாடா.."
'அவ தஞ்சமென வந்தவளா..?'
பிரதாபவர்மனின் மனக்கண்ணில் நேர் கொண்ட பார்வையும்.. நிமிர்ந்த நன்னைடயுமாக சாரதா தோன்றினாள்.. அந்தப் பார்வையில் அவனைக் கண்டதும் கலக்கும் நாணத்தில் அவன் மனம் சுழன்றது.. அந்த நிமிர்ந்த நடையில் அவனைக் கண்டதும் ஏற்படும் தடுமாற்றத்தில் அவன் நெஞ்சம் நிலை கொண்டது..
"பிரதாப்.. என் மகளைக் காப்பாற்று.." பிரபாவதி கெஞ்சினாள்..
"என்னை என்னதான்க்கா செய்யச் சொல்கிறிங்க..? சரி.. உங்களுக்காக அவ பின்னாலே ரோந்து சுத்தற வேலையைச் செய்து தொலைக்கிறேன்.. போதுமா..? ஆனா ஒன்னு.. அவ வாயை அடக்கி இருக்கனும்.. அதை விட்டுட்டு எக்குத் தப்பா வாய் விட்டான்னு வைய்யிங்க.. உங்க மகள்ன்னும் நான் பார்க்க மாட்டேன்.. மாமா மகள்ன்னும் பார்க்க மாட்டேன்.. தாடையை பேர்த்திருவேன்.."
"இந்தக் கோபத்தை அவ மேல காட்டாம.. அவளை அழிக்கனும்னு நினைக்கிறவங்க மேல காட்டுடா.."
"அப்படியெல்லாம் என் பெரியப்பாகிட்டயும்.. அண்ணன்கள்கிட்டயும் என் கோபத்தை காட்ட முடியாது.. அதுக்காக நீங்க ஒன்னும் கவலைப் பட்டுக்க வேண்டாம்.. அவ பின்னால ரோந்து
சுத்தற வேலையை நான் செய்ய ஆரம்பிச்சேன்னா.. ஆட்டோமேடிக்கா அவங்களே ஆஃப் ஆகிக்குவாங்க.."
"எத்தனை நாள் ரோந்து சுத்துவ பிரதாப்..?"
"புரியலையே.."
"காலம் பூராவும் ரோந்து சுத்தற வேலையை நீ செய்ய முடியுமா..?"
"அதுக்கு..?"
"அவளை உன் காவலில் வைத்துக்கன்னு சொல்றேன்.. இப்பவும் புரியலையா..? அவ கழுத்தில தாலியைக் கட்டி உன் மனைவியாக்கிக்கிட்டா காலம் முழுவதும் உன் நிழலில் அவ இருப்பா.. என் அப்பாவாலும் அண்ணன்களாளும் அவளை நெருங்க முடியாதுடா.. எனக்காக இதைச் செய்டா பிரதாப்.."
பிரபாவதியின் விழிகளில் மன்றாடல் இருந்தது.. பிரதாபவர்மனின் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்வுகளின் கலவை வந்து போனதில் அவள் கேட்டுக் கொண்ட கோரிக்கையை அவன் நிறைவேற்ற மாட்டானோ என்று அவள் சஞ்சலம் கொண்டாள்..
"பிரதாப்.." அவன் தோள் தொட்டாள்..
அவளது கையை விலக்கிவிட்டான் பிரதாபவர்மன்.. அவனால் உடனடியாக எந்தவொரு பதிலையும் சொல்லி விட முடியவில்லை.. அவனுக்காக காத்திருக்கும் மிருதுளாவின் தம்பி மகள் ஊர்மிளாவை நினைத்துப் பார்த்தான்.. அவனைக் கண்டதும் அவளது மைவிழிகளில் மையம் கொள்ளும் மையலை நினைத்துப் பார்த்தான்.. அவனுக்கு அவள்தான் என்று முடிவெடுத்திருக்கும் குடும்பத்தை நினைத்துப் பார்த்தான்..
இன்னொரு பக்கம் எளிமையான உடையும் இயல்பான பேரழகுமாக நிற்கும் சாரதாவை நினைத்துப் பார்த்தான்.. இவள் விழிகளிலும் இவனைக் கண்டதும் ஒரு தடுமாற்றம் வரத்தான் செய்கிறது.. ஆனால்.. ஊர்மிளாவைப் போல உரிமையுடன் இவள் விழிகள் மையலைக் காட்டிய தில்லை..
ஊர்மிளாவுக்கு ஜமீன் பரம்பரையில் பிறந்து வளர்ந்தவள் என்ற பின்புலம் இருந்தது...
சாரதா பந்தனவாசல் ஜமீனின் வாரிசாக இருந்தாலும்.. அவளைப் பெற்ற சரயு தாய் தந்தை யார் என்று தெரியாத அநாதை.. அவள் ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. அவளைப் போல மகளையும் ஆசிரமத்தில் வளர விட்டுச் சென்றவள்.. என்னதான் இன்றைய சாரதாவின் அந்தஸ்து உயரத்தில் இருந்தாலும் அவளுடைய இந்த பின்புலத்தை பிரதாப வர்மனின் உறவினர் வட்டாரம் விமரிசிக்கவே செய்யும்..
ஊர்மிளாவின் மயக்கத்தை பிரதிபலிக்கும் விழிகளில் அவனுக்கும் ஓர் மயக்கம் உண்டு..
சாரதாவின் எளிமையான தோற்றத்துடன் கூடிய இயற்கையான பேரழகிலும்.. அவளது நேர்கொண்ட பார்வையிலும்.. நிதானமான செயல்பாடுகளிலும் அவனுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு..
ஊர்மிளா.. நாளொரு மேனி.. பொழுதொரு வண்ணமாக.. ஆடை அணிகலன்களில் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் விருப்பம் உடையவள்..
சாரதாவோ.. மெலிதான வண்ணம் கொண்ட காட்டன் புடவையும்.. நெற்றியில் பொட்டும்.. பின்னி விடப்பட்ட நீண்ட பின்னலுமாக ஆளை அடித்துப் போகும் அழகை எந்தவித அலங்காரங்களும் இல்லாமல் இயற்கையாகவே பெற்றவள்.. ஒப்பனைகளில் விருப்பம் இல்லாதவள்..
ஊர்மிளா தன்னுடைய பாரம்பர்யப் பெருமையை பிரதிபலிக்கும் கர்வம் கொண்டவள்..
சாரதாவோ.. அத்தனை பெரிய ஜமீன் சொத்துக்களுக்கு அதிபதியாக ஆகியிருந்தும் அதைப் பற்றிய எந்தவிதமான உணர்வும்.. சிந்தனையும் இல்லாதவள்..
ஊர்மிளா அவளுடைய உறவினர் வட்டாரங்களிலேயே யாரையும் சமதையாக நினைத்துப் பேச மாட்டாள்.
சாரதாவோ.. வீட்டில் வேலை செய்யும் வேலை யாள்களுடன் உறவு பாராட்டிப் பேசி அவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவாள்..
இரு வேறுபட்ட குணாதிசயம் கொண்ட இரண்டு பெண்களும் அவன் மனக்கண்ணில் இரண்டு திக்கில் நின்றார்கள்...
அவன் யாரைத் தேர்ந்தெடுப்பான்..?
ஊர்மிளாவின் மீது அவனுக்கு இருக்கும் மயக்கம்.. அவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற உறவு முறையில் உண்டானது...
சாரதாவின் மீது அவனுக்கு இருக்கும் ஈர்ப்பு இயல்பாக அவன் மனதில் எழுந்தது.. அவனை ஈர்க்க வேண்டும் என்று அவள் நினைத்ததேயில்லை.. அவனை ஈர்க்கும் முறையில் பேசிப் பழகியதும் இல்லை.. ஆனால்..?
அவளை அவனுக்கு மிக.. மிக.. பிடிக்கும்..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -24
தஞ்சமென வந்தவளே -24
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy