தஞ்சமென வந்தவளே -22

22 இரவு உணவுக்கு எழுந்து கொண்ட போது மிருதுளா மட்டும் படுக்கையில் இருக்க.. சாரதா கேள்வியாக அவளைப் பார்த்தாள்.. "மாடியேறி இறங்கற...


22

இரவு உணவுக்கு எழுந்து கொண்ட போது மிருதுளா மட்டும் படுக்கையில் இருக்க.. சாரதா கேள்வியாக அவளைப் பார்த்தாள்..
"மாடியேறி இறங்கறது கொஞ்சம் சிரமம் சாரும்மா.. இது என்னுடைய ரூம்ங்கிறதினாலயும்.. இங்கேயிருந்து பார்த்தா தோட்டம்.. ஊர்ன்னு வெளியுலகத்தை நன்றாக பார்க்க முடியும்ங்கிறதினாலயும் மாடி ரூமிலேயே நான் தங்கிட்டேன்.. உன் மாமாவுக்கு இங்கே தூங்கினால்தான் தூக்கம் வரும்.. அதனால நீங்க எல்லோரும் டைனிங் ஹாலில் சாப்பிடப் போங்க.." மென்மையாகச் சொன்னாள் மிருதுளா..
"நீங்க அத்தை..?" சாரதா நகரவில்லை...
"எனக்கு சுகந்தி சாப்பாட்டைக் கொண்டு வருவா.."
சாரதா சுற்று முற்றும் பார்த்தாள்.. படுக்கையறையின் முன் பகுதியில் இருந்த விசாலமான வரவேற்பறையில் அவள் பார்வை பதிந்தது.. அங்கே கிடந்த சோபாக்களை இழுத்துப் போட்டாள்.. நடுநாயகமாக அகன்ற டீப்பாயைப் போட்டாள்.. ரவிவர்மனைப் பார்த்தாள்..
"ஏன் மாமா.. நாம எல்லோருமே இங்கேயே டின்னரைக் கொண்டு வரச் சொல்லிச் சாப்பிட்டால் என்ன..? சில ஹோட்டல்களில சாப்பாட்டு மேஜைக்கு முன்னாலே சோபா போட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன்.. நாம இன்னைக்கு அதையே ஃபாலோ பண்ணினா என்ன..?"
"பண்ணலாமே.." உற்சாகத்துடன் சொன்னார் ரவிவர்மன்..
"நீங்க வாங்க அத்தை.."
கட்டிலில் இருந்த மிருதுளாவுக்கு படுக்கையை விட்டு இறங்குவதற்கு கை கொடுத்தாள் சாரதா.. மனைவியுடன் இரவு விருந்தை உண்ணப் போகும் மகிழ்ச்சியுடன் செய்து வைத்திருக்கும் பதார்த்தங்களை மாடியறைக்கு கொண்டு வரச் சொல்லி வேலையாளிடம் உத்தரவு பிறப்பித்தார் ரவிவர்மன்..
முன்னறையின் சோபாக்களில் அவர்கள் நால்வரும் எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள்.. ரவிவர்மனும் பிரதாப வர்மனும் ஒரு பக்கமிருக்க.. மிருதுளாவின் பக்கத்தில் சாரதா உட்கார்ந்து கொண்டாள்.. அவர்கள் அரட்டையடித்த படியே சாப்பிட்டார்கள்.. ரவிவர்மன் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்... அவர் பேசப்பேச... குழுங்கிச் சிரித்துக் கொண்டேயிருந்தாள் மிருதுளா.. இரவு உணவுக்குப் பின்னால் அவர்கள் நால்வரும் மாடி பால்கனியில் சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.. சாரதா தயக்கத்துடன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு..
"நேரமாச்சு மாமா.. நான் கிளம்பனும்.. அம்மா காத்திருப்பாங்க.." என்று ரவிவர்மனிடம் கெஞ்சுதலாகச் சொன்ன அதே நேரத்தில் அவரது செல்போன் ஒலித்தது.. எடுத்து காதுக்குக் கொடுத்தவர்..
"நீ சொன்னதைத்தான் உன் பொண்ணும் சொல்லிக் கிட்டிருக்கா.. அவ சொல்லி வாய் மூடலை.. நீ போனடிச் சுட்ட.. நல்ல அம்மா.. நல்ல பொண்ணு.. உங்க ரெண்டு பேரையும் உட்காரவைச்சு சுத்தித்தான் போடனும்.. என் கண்ணே பட்டுரும் போல இருக்கு.." என்று சொன்னார்..
"....."
"இதோ கிளம்பிக்கிட்டே இருக்காங்க.. இன்னும் ஆறே நிமிசத்தில உன் பொண்ணு உன் பக்கத்தில இருப்பா.. போதுமா.."
செல்போனை அணைத்த ரவிவர்மன் பேச்சு முடிந்து விட்டது என்று சொல்பவரைப் போல எழுந்து நின்றார்.. சாரதா சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த மிருதுளாவின் காலைத் தொட்டு வணங்கினாள்..
"தீர்க்காயுஸாய்.. தீர்க்க சுமங்கலியாய் இரும்மா.." மனதார வாழ்த்தின மிருதுளா...
"தாமரை.." என்று குரல் கொடுத்தாள்..
"வந்துட்டேன்ம்மா.."
கையில் ஒரு பெரிய சில்வர் தட்டுடன் வந்தாள் தாமரை.. அதில் உயர்தரமான பட்டுச்சேலையும் நகைப் பெட்டியும்.. பூவும்.. பழங்களும் குங்குமச் சிமிழும் இருந்தன..
"அத்தை.."
நகைப் பெட்டியில் இருந்த வைர ஆரத்தைப் பார்த்து விட்டு அச்சத்துடன் பின்வாங்கினாள் சாரதா..
"இது செய்கிற முறைதான்ம்மா.. நீ பிரபாவின் பெண்.. பிரபா எங்க வீட்டுப் பெண்.. முதன் முதலா எங்க வீட்டுப் பெண்ணின் பெண் எங்க வீட்டு விருந்துக்கு வந்திட்டு வெறுங் கையோடு திரும்பிப் போகிறதா..?"
மிருதுளா அன்புடன் அந்த ஆரத்தை எடுத்து சாரதாவின் கழுத்தில் போட்டு விட்டாள்.. அதிகரித்த சாரதாவின் அழகில் ஓர் நொடி மயங்கிப் போய் விட்டான் பிரதாபவர்மன்..
"பெண்ணுக்கு பொன்நகையும்.. புன்னகையும் அழகு சேர்க்கும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.." சாரதாவின் கன்னத்தை வருடி திருஷ்டி கழித்தாள் மிருதுளா..
"அத்தை.. இது பொன் நகையில்லையே.. வைர நகையாச்சே.." அப்போதும் அதைப் போட்டுக்கொள்ள சாரதாவுக்கு மனமில்லை..
"நீ வைரம்மா.. காணக்கிடைக்காத வைரம்.. இந்த வைரமெல்லாம் உனக்கு ஈடில்லை.." பிரியத்துடன் அவளது உச்சந்தலையில் கை வைத்து ஆசிர்வதித்தாள் மிருதுளா..
பிரிய மனமில்லாமல் பிரிந்தாள் சாரதா.. அவள் தலையில் மிருதுளா சூட்டி விட்ட மல்லிகைச்சரம் இரு தோள் பக்கமும் சரிந்து தேவதை போன்ற பொழிவைத் தந்தது.. காருக்குள் அவள் ஏறப்போன சமயத்தில் ரவிவர்மன்..
"தேங்க்ஸ்ம்மா.." என்றார்..
"எதுக்கு மாமா..?" வியப்புடன் வினவினாள் சாரதா..
"நைட் டின்னரை மிருதுளா கூடச் சேர்ந்து சாப்பிட வைத்தியே.. அதுக்குத்தான்.." ரவிவர்மனின் குரல் தழதழத்தது..
"மாமா..."
"ஆமாம்மா.. மிருதுளாவுக்காக நான் சிலசமயம் அவள் கூடச்சேர்ந்து சாப்பிடுவேன்தான்.. ஆனால் அது எப்போதாவது ஒரு சமயத்தில்தான்.. பிரதாப்பினால் அதுவும் முடியாது.. அவள் தனியாகத்தான் சாப்பிடுவாள்.. வீட்டுக்கு விருந்தினர் வருவாங்க.. அவளை நலம் விசாரிக்க அவ ரூமுக்கு போவாங்க.. ஆனா.. விருந்து சாப்பிட டைனிங் ஹாலுக்குத்தான் வருவாங்க.. வகை வகையாய் சமைத்து வைத்த சாப்பாட்டை அவங்க கூடச் சேர்ந்து பேசி சிரித்துக்கிட்டே நானும் பிரதாப்பும் சாப்பிடுவோம்... ஆனா அவ தனியாத்தான் சாப்பிடுவா.. என் மனசில அந்த ஏக்கம் இருக்கும்.. இருந்தும் என்னால எதுவும் செய்ய முடிந்த தில்லை.. இன்னைக்கு முதன் முறையா.. வீட்டுக்கு வந்த விருந்தாளி யோட.. சேர்ந்து உட்கார்ந்து அரட்டையடிச் சுக்கிட்டே விருந்துச் சாப்பாட்டை அவ ருசிச்சுச் சாப்பிட்டிருக்கான்னா அதுக்கு நீதான்ம்மா காரணம்.."
"நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் மாமா.. நான் ஆசிரமத்தில வளர்ந்தவ.. இதைப் போல குடும்பச் சூழலில் நான் சாப்பிட்டதில்ல.. வரிசையாய் எல்லோரும் உட்கார்ந்து கடவுள் வாழ்த்துப் பாடி நன்றி சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பிப்போம்.. இங்கே அரண்மனைக்கு வந்த பின்னாலே.. எல்லோரும் என்னைப் பகையாய் நினைக்கிறது எனக்குப் புரிஞ்சது.. அவங்க
கூட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட முடியல.. நான் சாப்பிடப் போகிறதுக்கு முன்னாலேயே அவங்க சாப்பிட்டுட்டு போயிருவாங்க.. அம்மா மட்டும்தான் எனக்காக காத்திருப்பாங்க.. அவங்க முகத்திலயும் சோகம் இருக்கும்.. நாங்க சாப்பிடறப்ப அதிகமா பேசிக்கிட்டதில்ல.. இங்கேதான் முழுமையான குடும்பச் சூழலை நான் உணர்ந்தேன் மாமா.. இதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.."
சாரதா கை கூப்பி வணக்கம் சொல்லி விட்டு காருக்குள் ஏறிக் கொண்டாள்.. கார் சாலையில் விரைந்தது.. ரவிவர்மன் மாடிக்கு வந்தார்.. பால்கனியில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம் போனார்..
"நல்ல பெண்ணில்ல..?" என்றார்..
"ம்ம்ம்.. ரொம்பவும் நல்ல பெண்.. அருமையான பெண்.." என்றாள் மிருதுளா..
அரண்மனையை நோக்கிப் போய் கொண்டிருந்த காருக்குள் சாரதாவின் தலையில் சூட்டப் பட்டிருந்த மல்லிகையின் மணம் பரவியிருந்தது.. மனம் மயக்கும் அந்த மணத்தில் கிறங்கிப் போனான் பிரதாபன்.. அருகில் அமர்ந்திருந்தவளை நோக்கினான் அவள் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தாள்..
"இன்னும் எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசனை செய்துகிட்டு இருக்க..? அதான் அரண்மனையைப் பிடித்து அதில் உன் கொடியையும் நாட்டி விட்டாயே.. அது போதாதா..?" குத்தலாகா கேட்டான்..
இவனுக்கு இதை விட்டால் வேறு பேச்சைப் பேசத் தெரியாதே போல என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் சாரதா..
"என்ன ஆச்சு..? தலையைப் பிடிக்கிற..? தலை வலிக்குதா..? காபி சாப்பிடறயா..? அந்த ஹோட்டலுக்கு வண்டியை விடவா..?" அக்கறையுடன் கேட்டான் அவன்..
"ஒன்னம் வேணாம்.. வீட்டைப் பார்த்து வண்டியை விடுங்க.." எரிந்து விழுந்தாள் சாரதா...
"அப்ப காபி..?" விடாமல் விசாரித்தான் அவன்..
"அதை என் அம்மா கொடுப்பாங்க.." பல்லைக் கடித்தாள் அவள்..
"அதானே.. பந்தனவாசல் ஜமின்தாரிணியை உனக்குக் காபி போட்டுக் கொடுக்கிற வேலைக்காரியா மாத்தி வைச்சிட்டியில்ல.. அதை மறந்தே போயிட்டேன் பார்த்தியா.." இடக்காகப் பேசினான் அவன்..
"மறக்கிறதா.. நீங்களா..? மறக்கிற ஆளைப்பாரேன்.." முறைத்தாள் அவள்..
"ஆமா.. வீட்டுக்குப் போகச் சொல்கிறியே... அது என்ன வீடா..? அரண்மனைம்மா.." அவன் பேச்சை நிறுத்துவதாக இல்லை..
"எங்களுக்கும் அது தெரியும்.." கழுத்தை நொடித்தாள் அவள்..
"மெல்ல.. கழுத்துக் கிழுத்து சுளுக்கிக்கப் போகிறது.." அக்கறைப் பட்டான் அவன்..
"சுளுக்கினா வலிக்கப் போகிறது என் கழுத்துத்தான்.. உங்க கழுத்தில்லை.. அதனால கரிசனப் படறதைப் போல வேசம் போடாம ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டுங்க.." அவள் ரோட்டை நோக்கி கை காண்பித்தாள்..
"அரண்மனைக்காரம்மா.. என்ன வேணும்னாலும் சொல்வீங்க.."
"சும்மா அரண்மனை.. அரண்மனைன்னு சொல்லாதீங்க.."
"சொன்னா என்ன செய்வ..? அதைக் கைப்பற்றிட் டோம்ங்கிற ஆணவத்திலே பேசறியா..?"
"ஹ..! கைப்பற்றினாலும் என் அப்பா வீட்டு அரண்மனையைத்தான் கைப்பற்றியிருக்கேன்.. அடுத்தவங்க அரண்மனையைக் கைப்பற்றலை.."
அவள் சுள்ளென்று சொல்லி விட்டாள்.. 'என்ன திமிர்' என்ற கோபத்துடன் பதிலுக்கு பதில் கொடுக்க வாயைத் திறந்த பிரதாப வர்மன் திறந்த வாயை இறுக மூடிக் கொண்டான்..
அங்கே அரண்மனையின் போர்டிகோவில் ஒளிவிட்ட விளக்கின் வெளிச்சத்தில் பிரபாவதி காத்துக் கொண்டிருந்தாள்..
என்ன பேச்சையே காணோம் என்று திரும்பிப் பார்த்த சாரதா பிரபாவதியைக் கண்டதும்..
"அதானே பார்த்தேன்.. அம்மா நிற்கிறாங்களா..?" என்று கேலியாக கேட்டாள்..
"அது என் அக்கா.." முறைப்புடன் சொன்னான் பிரதாப்
"நான் மட்டும் அத்தைன்னா சொன்னேன்..?"
"சொல்லித்தான் பாரேன்.. அக்கா முன்னாலே அடக்கி வாசிப் பேன்ங்கிற தைரியம்தானே உனக்கு..?"
"தெரிஞ்சாச் சரி.."
அவர்கள் வழக்கடித்தபடி காரை விட்டு இறங்கினார்கள்.. பிரபாவதியின் முகத்தில் சூழ்ந்திருந்த கவலையைக் கண்டதும் சாரதாவின் மனதில் குற்ற உணர்வு எழுந்தது..
"ஸாரிம்மா.. அத்தையும் மாமாவும் ரொம்பச் சொன்னதினால அங்கே சாப்பிட்டுட்டு வரவேண்டியதாப் போயிருச்சு.." தழைந்த குரலில் சொன்னாள்.. அதைக் கேட்ட பிரதாபவர்மன் என்னமாய் அவன் அக்காவை அவள் கைக்குள் போட்டுக் கொள்கிறாள் என்று கடுப்பானான்..
"இருக்கட்டும்மா.. என்கிட்டத்தான் பெர்மிசன் வாங்கிட்டயே.." பிரபாவதி பெருமையுடன் சொன்னாள்..
"இருந்தாலும் உங்களை காக்க வைச்சிட்டேனே.."
"சித்தப்பா வீட்டுக்குத்தான் போயிருக்க.. பிரதாப் உன் கூடத்தான் இருக்கான்.. பத்திரமா கூப்பிட்டுகிட்டு வந்துருவான்.. இருந்தாலும் மனசு கேட்கனுமே.. பெண் பிள்ளையை வெளியில் அனுப்பி வைச்சா.. அவ வீட்டுக்குத் திரும்பி வருகிற வரைக்கும் கவலை இருக்கத் தானே செய்யும்..?" என்ற பிரபாவதி சாரதாவின் கழுத்தைப் பார்த்துவிட்டு..
"அழகா இருக்கே.. சித்தி கொடுத்தாங்களா..?" என்று கேட்டாள்...
"ஆமாம்மா.. நான் வேண்டாம்ன்னுதான் சொன்னேன்.." சங்கடத்துடன் சொன்னாள் சாரதா..
"இது முறைம்மா.. சித்தி உனக்கு முறை செய்து அனுப்புவாங்கன்னு தெரியும்.. ஆனா.. இந்த ஆரத்தை முறையாய் கொடுப்பாங்கன்னு தெரியாது.." ஆச்சரியப் பட்டாள் பிரபாவதி..
"ஏன்ம்மா..?" சாரதாவுக்கு புரியவில்லை..
அந்த வைர ஆரத்தில் அப்படியென்ன விசேசம் ஒளிந்திருக்கிறது..?
"இது அவங்க பிறந்த வீட்டுச் சீதனம்மா.. பரம்பரையாய் அவங்க குடும்பத்தில் பிறக்கிற பெண்களுக்கு சேர வேண்டிய நகை.. மத்தவங்களுக்கு அவ்வளவு எளிதாக கொடுத்து விட மாட்டாங்க.. சரிசரி.. வா தூங்கப் போகலாம்..."
சாரதாவை அழைத்துக்கொண்டு போன பிரபாவதியைப் பார்த்தபடி அசையாமல் நின்றான் பிரதாபன்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -22
தஞ்சமென வந்தவளே -22
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy