தஞ்சமென வந்தவளே -21

21 ' சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது.. ' தன்னைத்தானே கடிந்து கொண்டாள் சாரதா.. அந்த சுகந்தி மிருதுளாவைக் கவனித்துக் கொள்...


21


'சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது..'
தன்னைத்தானே கடிந்து கொண்டாள் சாரதா.. அந்த சுகந்தி மிருதுளாவைக் கவனித்துக் கொள்ளும் வேலையில் அமர்த்தப் பட்டிருப்பவள்.. வந்திருக்கும் விருந்தினரின் முன்னிலையில் மிருதுளா கண்டிப்பான தொனியில் பேசியதில்.. அவள் மனம் புண்பட்டிருக்கலாம்.. அந்த கோபம் அவள் விழிகளில் தெரிந்திருக்கலாம்.. அதைப் பார்த்து சாரதா எதையெதையோ நினைத்து விடக் கூடாது..
"அப்புறம்.. உனக்கு இந்த ஊர் பிடிச்சிருக்கா..?"
மிருதுளாவின் கேள்வியில் அந்த சுகந்தியை மறந்தே போனாள் சாரதா.. அதுவும் தாய்க்கான பதிலை சாரதாவை சொல்ல விடாமல் பிரதாபவர்மன் முந்திக் கொண்டு சொன்னதில் சுகந்தியைப் பற்றிய நினைவு சுத்தமாக மறந்து அது தூரதேசம் நோக்கி ஒடியே போய்விட்டது...
"பிடிக்காம இருக்குமா..? ஜமீன் அரண்மனை.. வைரப் பெட்டகம்.. கோடிக்கணக்கான பணத்தை லாபமாக் கொட்டும் கம்பெனிகள்ன்னு இங்கே கொட்டிக் கிடக்கிறப்ப.. கசந்துக்கிட்டா இருக்கும்..? பிடித்துத்தான் இருக்கும்.."
பிரதாபவர்மனின் குத்தலில் இவன் எந்நேரமும் அதே நினைவில்தான் உழல்வானோ என்றிருந்தது சாரதாவுக்கு..
'துர்வாச முனிவர்' 'பிடி சாபம்' என்று சாபத்தைத் தன் கை மறைவில் வைத்துக் கொண்டு காத்திருப்பதைப் போல இவனும் 'பிடி குத்தலை..' என்று குத்தல் மொழிகளைத் தன் கைமறைவில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறான் போல.. பல்லைக் கடித்தவள்..
"உங்க மகனுக்கு.. உயிரில்லாத சொத்துக்கள் மேலதான் எப்பவுமே கவனம் இருக்கும் போல அத்தை.. இங்கே உயிர்ப்புடன் இருக்கிற இயற்கை இருக்கு.. அருவி இருக்கு.. அம்மா இருக்காங்க.. மாமா இருக்கார்.. நீங்க இருக்கீங்க.. இதெல்லாம் அவர் கண்ணில் படாது போல இருக்கு.." என்று அவன் அனுப்பி வைத்த குத்தலை அவனுக்கே திருப்பி அனுப்பி வைத்தாள்..
மிருதுளாவின் விழிகளில் சாரதாவின் மிகச் சரியான பதிலுக்கான பாராட்டுத் தெரிந்தது...
"ஹா.. ஹா.." என்று உரக்கச் சிரித்து அந்தப் பதிலை ரசித்த பிரதாபன்..
"ஏன் அம்மா... உங்க மருமகளுக்கு... உங்க எல்லோரையும் தான் கண்ணுக்குத் தெரியுதா..? என்னைத் தெரியலையா..?" என்று சாரதாவைப் பார்த்தபடியே மிருதுளாவிடம் கேட்டு வைத்தான்..
அவனின் அந்தப் பார்வையிலும்.. 'உங்க மருமகள்..' என்ற வார்த்தையிலும் சாரதாவின் மனம் சிறகடித்தது.. அதுவரை இல்லாத புதியதோர் உணர்வை அனுபவித்தாள் சாரதா.. அந்த உணர்வுப் பெருக்கில் திக்கு முக்காடிய-வளுக்கு பேச நா எழவில்லை..
"என்னம்மா.. பேச்சைக் கானோம்..?" அவன் அதற்கும் வம்பிழுத்தான்..
"சும்மா இருடா.. இப்ப எதுக்காக இவளைக் கேலி பண்ற..? இவன் இப்படித்தான்ம்மா.. வாயைத் திறந்தாலே கலாட்டாதான்.."  மிருதுளா சாரதாவுக்கு பரிந்து கொண்டு வந்தாள்..
"பாருடா.. வீட்டுக்குள்ளே வந்து ஒரு மணி நேரம் கூட ஆகலை.. அதுக்குள்ள அத்தையுடன் கூட்டணி போட்டாச்சு.. அதிலயெல்லாம் கெட்டிக்காரிதான்... அங்கே அம்மா.. இங்கே அத்தை.. எங்கே யாரைக் கவர் பண்றதுன்னு கரெக்டா தெரிஞ்சு வைச்சிருக்கிற.. பவர் இருக்கிற இடத்தைச் சரியாக் கவர் பண்றியே..."
பிரதாபவர்மனின் இந்தப் பேச்சு புகழ்ச்சியா.. இல்லை இகழ்ச்சியா என்று தெரியாமல் திணறினாள் சாரதா..
இதற்கு என்ன பதிலைச் சொல்லுவது..?
அவளுக்கு யோசிக்கும் வேலையைக் கொடுக்காமல் மிகச்சரியாக கை கொடுத்தாள் மிருதுளா..
"இவளே பவர்தாண்டா.. பவர் பவரோடதான் சேரும்.. கவர்பண்ண வேண்டிய அவசியமே இல்லை.. அதெல்லாம் உன்னைப் போல ஆளுக பண்ண வேண்டிய வேலை.."
"வெரிகுட்... வீட்டுக்குள்ளே வந்தவுடனே அம்மாவையும் மகனையும் பிரிச்சாச்சு.."
"அதுக்குப் பதிலா அத்தையும் மருமகளும் ஒட்டிக் கிட்டாச்சு.. போவியா.." செல்லமாக மகனின் முதுகில் ஒரு போடு போட்டாள் மிருதுளா..
பேச்சு திசை திரும்பியது.. சாரதாவின் படிப்பைப் பற்றி விசாரித்தாள் மிருதுளா..
"மேலே படிக்கனும்ங்கிற ஆசை இருந்தது... உதவித் தொலையில் அதெல்லாம் சாத்தியமில்லைன்னு வேலையில் சேரலாம்ன்னு இருந்தேன்.." என்றாள் சாரதா..
"ஏன்ம்மா.. உன் அப்பாதானே உன்னைப் படிக்க வைச்சாரு... மேலே படிக்க நினைத்திருந்தா அதைச் சொல்லியிருக்கலாமே.." அனுதாபத்துடன் கேட்டாள் மிருதுளா...
"அப்ப அவர்தான் என் அப்பான்னு எனக்குத் தெரியாதே.." நலிந்த குரலில் சாரதா சொன்னதும் மிருதுளாவின் அனுதாபம் அதிகமாகியது..
கடல்நீர் நடுவே குடிநீர் தேடும் துயரம் இவளுடையது என்று நினைத்துக் கொண்டாள் அவள்..
மிகப்பெரிய கோடிஸ்வரருக்கு மகளாகப் பிறந்தவள்... ஜமீன் குடும்பம் என்ற பாரம்பர்யத்தில் வந்தவள்.. அதை எதையும் அறியாமல் அநாதையாய் ஓர் ஆசிரமத்தில் வளர்ந்திருக்கிறாள் என்றால் விதியின் கொடுமையை என்னவென்று சொல்லுவது..?
சாரதாவின் கைவிரல்களைப் பற்றிக் கொண்ட மிருதுளா..
"விட்டு விடும்மா.." என்று ஆறுதலாகச் சொன்னாள்..
"இப்போதுதான் நீ யார்ன்னு இந்த உலகத்துக்கும் உறவுக்கும் தெரிஞ்சிருச்சே.. இனிமேலும் எதுக்காக போனதை நினைத்து வருத்தப்படற..?"
"இல்லை அத்தை.. நான் ஆசிரமத்தில் வளர்ந்ததை நினைத்து ஓர் நாளும் வருத்தப்பட்டதில்லை.. இந்த உண்மைகள் எனக்குத் தெரியாமலே இருந்ததில் வருத்தப் படலை.. ஏன் இந்த உண்மைகள் எனக்குத் தெரிய வந்ததுன்னுதான் வருத்தமாயிருக்கு.."
மனம் விட்டுப் பேச ஆள் கிடைத்து விட்டால் மனதின் பாரம் தன்னையறியாமல் கொட்டி கவிழ்ந்து விடும்..
சாரதாவின் மனபாரமும் அதைப் போல்தான்.. அதை மதித்து உணர்ந்து கேட்ட மிருதுளாவின் முன்னால் கொட்டிக் கவிழ்ந்தது.. பிரதாப வர்மனின் நெற்றியில் கோடுகள் படிந்தன.. அவன் சாரதாவை விசித்திரமாகப் பார்த்தான்.. மிருதுளா மட்டுமே சாரதா சொன்னதை ஒரு புரிதலுடன் கேட்டுக் கொண்டாள்..
"ஏம்மா அப்படிச் சொல்ற..? எங்களுக்கு நீ கிடைத்ததிலே உனக்கு அத்தனை வருத்தமா..?"
மிருதுளாவின் கேள்வி இப்படியிருக்க.. பிரதாப வர்மனின் கேள்வியோ வேறு விதமாக இருந்தது..
"ஊஹீம்.. இதை இப்படிக் கேட்கக் கூடாதும்மா.. இத்தனை சொத்துக்களும் உனக்குக் கிடைச்சதிலே உனக்கு அத்தனை வருத்தமான்னு கேட்கனும்.." அவன் தாய்க்கு சொல்லிக் கொடுத்தான்..
"பிரதாப்.." மிருதுளா மகனை அதட்டினாள்..
"மத்தவங்க மனதைப் புண்படுத்தறதைப் போல நீ எப்ப பேச ஆரம்பித்த..? நான் உன்னை இப்படி வளர்க்கலையே.."
"நீங்க மட்டும் என்னை வளர்க்கலைம்மா.. அக்காவும்  தான் சேர்த்து வளர்த்தாங்க.. அவங்களுக்கு அநியாயம் நடந்திருக்கு.. அதை ஏன்னு கூட நான் கேட்கக் கூடாதா..?"
"அதை சாரதாவின் அப்பாவிடம்தான் நீ போய் கேட்கனும்.. அவர்தான் இப்ப இல்லையே..."
"இதை இப்படியும் சொல்லலாம் அம்மா.. என் அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாமாவிடம் தான் நான் போய் கேட்கனும்.. ஆனா.. அவர் இப்ப இல்லை.. பந்தனவாசல் ஜமீன்தாரை இந்த உறவு முறையில்தான் எனக்குத் தெரியும்.."
"போதும் பிரதாப்.. அவரோட மகளா சாரதா வந்தாச்சு.. இவளை மகளா பிரபாவதியும் ஏத்துக்கிட்டாச்சு.. அம்மாவுக்கும்.. மகளுக்கும் ஊடே வர நீ யாருடா..?"
"அவங்க என் அக்கா.. அம்மா முறை கொண்டாடி இப்போத்தான் இவ வந்திருக்கிறா.."
"இப்படி எதிரியைப் பேசறதைப் போல பேசித் துளைக்கிறதுக்காகத்தான் இங்கே இவளை கூப்பிட்டுக் கிட்டு வந்தியா..? இன்னைக்குப் பூராவும் இதைப் போல் தான் இவளிடம் பேசி வைத்தியா..?"
இவன் எப்போதுமே இதைப் போல்தான் பேசி வைக்கிறான் என்ற செய்தி மிருதளாவுக்குத் தெரியுமா என்று சாரதா நினைத்துக் கொண்டாள்..
இவன் கொட்டுகிற தேள்.. இருந்தும் இவன் கொடுக்கையும் தாண்டிய ஓர்வித ஈர்ப்பை அவளுக்குள் உணர்த்திக் கொண்டிருக்கிறானே என்றிருந்தது அவளுக்கு..
தேளாக கொட்டும் மனிதனிடம் ஈர்ப்பு ஏற்படுவது சாத்தியமா..?
"இதைத்தான் நானும் சொன்னேன் அத்தை.." என்றாள் சாரதா..
"ஆசிரமத்தில் அநாதையாக வளர்ந்த போது இருந்த சந்தோசமே வேறு.. அந்த வாழ்க்கையில் என்னைச் சுற்றிப் பகையில்லை.. யாரும் என்னை எதிரியாக பார்க்கவில்லை.. எல்லோருமே என்மீது பிரியமாக இருந்தார்கள்.. நேசித்தார்கள்.. பசிக்கு சோறும்.. உறங்க இடமும்..
உடுத்த துணியும்.. படிக்க படிப்பும்.. நேசிக்கும் மனங்களும் அங்கே எனக்குத் தாராளமாக கிடைத்தன.. ஆனால் அத்தை.. அநாதை என்ற அடையாளம் மறைந்து பந்தனவாசல் ஜமீன்தாரின் மகள் என்ற அடையாளம் எப்போது எனக்கு வந்ததோ.. அப்போதே அவையெல்லாம் எட்டாத தூரத்தில் விலகிப் போய் விட்டன.. இப்போது பசிக்கு சாப்பிடும் அந்த சாப்பாடாக இல்லாமல் அறுசுவையான சாப்பாட்டு வகைகள் குவிந்து இருக்கின்றன.. அதைச் சாப்பிடத்தான் என்னால் முடியவில்லை.. ஒரு கவளம் சோறாக இருந்தாலும் அதை நிம்மதியாக உண்ண வேண்டும்.. அந்த நிம்மதிதான் தொலைந்து போனதே.. பஞ்சு மெத்தையாக இருந்தாலும் படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும்.. அந்த உறக்கம்தான் என்னைவிட்டு ஓடிப் போய் விட்டதே.. ஆசிரமத்தின் சிமிண்ட் தரையில் பாய் விரித்துப் படுத்தவுடன் உறங்கி விடுவேன்... இங்கே அரண்மனையில் வசதியான ரூமில்.. நுரை போன்ற மெத்தையில் விடிய விடிய விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. உறக்கம் வரவில்லை அத்தை.."
"சாரதா.." மிருதுளா அவளைத் தட்டிக் கொடுத்தாள்.
"அம்மாவின் கண்களில் சோகம் தெரிகிறது.. அதுக்குக் காரணம் நான்தானே என்று என்மனது துடிக்கிறது.. அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டி.. அவங்க கூடப் பிறந்த மாமாக்கள்.. அவங்களின் குடும்பத்தாரின்னு அவங்க அத்தனைபேரிடமும் பகை தெரியுது.. இத்தனை பேருக்கு பகையாளியாய் போனேனே என்ற எண்ணம் என்னை வாட்டுது.. அது என் நிம்மதியை விரட்டுது
அத்தை.."
"சாரும்மா.." மிருதளா சாரதாவை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்..
பிரதாபவர்மனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. அவள் தன்பக்க நியாயத்தைக் கூறி அனுதாபம் தேடப் பார்க்கிறாள் என்ற கோணத்தில் அவன் நினைக்க முயன்றான்.. ஏனோ அவனால் அவ்வாறு நினைக்க முடிய வில்லை.. அது ஏனென்றும் அவனுக்குத் தெரியவில்லை.. சாரதாவின் முகத்தில் இருந்த உண்மை அவனை உறுத்தியது.. அது அவளுக்கு எதிர்ப்பாக நினைக்க முடியாமல் அவனைத் தடுத்து நிறுத்தியது..
ரவிவர்மன் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள மாடிக்கே வந்து விட்டார்.. சாரதாவின் படிப்பைப் பற்றி அவரும் விசாரித்தார்.. தன் சோகத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட சாரதா சிரித்த முகத்துடன் அதற்குப் பதிலளித்தாள்..
"நான் கூட நிறையப் படித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன்.." அவர் பெருமூச்சு விடுவதைப் போல பாவனை செய்ய..
"பட்டப்படிப்பெல்லாம் கொஞ்சூண்டு படிப்பாமா..?" என்று செல்லக் கோபத்துடன் அவரை முறைத்தாள் மிருதுளா...
"இந்தக் காலத்துக்கு அது கொஞ்சூண்டு படிப்புத்தானே..?" அவர் மனைவியை மடக்க முயன்றார்..
"இப்ப உங்களுக்கென்ன வயதா திரும்பியிருக்கு..? நம்ம காலத்துக் கதையைப் பேசுங்க அத்தான்.. அந்தக் காலத்தில என் பட்டப் படிப்புத்தான் அதிகமான படிப்புன்னு என் அத்தான் அடிக்கடி சொல்லி நான் கேட்டதாக ஞாபகம்.." மிருதுளா மடங்காமல் அவரை வாரினாள்..
"விடுடி.. இதெல்லாம் ஒரு பேச்சா..?" சட்டையைத் தட்டி விட்டுக் கொண்டார் ரவிவர்மன்..
"ஊஹீம்.. சட்டையைத் தட்டக் கூடாது அத்தான்.. மீசையைத் தட்டனும்.. ஒட்டின மண்ணெல்லாம் அங்கே தான் ஒட்டியிருக்கு.." மிருதுளா வாய் பொத்திச் சிரித்தாள்..
அவர்களின் அன்யோன்யத்தைப் பார்க்கப் பார்க்க.. வாழ்ந்தால் அது போல வாழ வேண்டும் என்ற ஆசை சாரதாவின் மனதில் எழுந்தது.. நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தாலும் மிருதுளாவின் முகத்தில் மலர்ச்சி மட்டும் குறையாமல் இருப்பதன் மர்மம் என்னவென்று அப்போது அவளுக்குப் புரிந்தது..
வயோதிகத்திலும்.. நோய் வாய் பட்டாலும்.. காதலில் குறையாத.. காதலைக் குறைக்காத கணவன் அமைந்து விட்டால்.. அந்த மனைவியின் முகத்தில் மலர்ச்சி எவ்வாறு குறையும்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -21
தஞ்சமென வந்தவளே -21
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy