தஞ்சமென வந்தவளே -32

32 சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா.. ? "ரொம்ப வருசமா அம்மாவைக் கவனி...


32

சாரதாவுக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. சுகந்தியை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்களா..?
"ரொம்ப வருசமா அம்மாவைக் கவனிச்சுக்கிறா.. வேலையிலே கெட்டிக்காரி.. சின்னதா சில குறைகளைத் தவிர பெரிதா அவளைப் பத்தி எதையும் சொல்ல முடியாது.. இருந்தும் அப்பா இந்த முடிவுக்கு வந்திருக்கார்.. என்னன்னு  கேட்டால் பதில் சொல்ல மாட்டேங்கிறார்.."
பிரதாபன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.. குளித்து விட்டு வந்தவன் செல்போனை காதுக்கு கொடுத்தபடி ஜன்னலோரமாக போய்விட.. சாரதா குளிக்கப் போனாள்.. தழையத் தழைய பட்டுப் புடவை கட்டி மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டவளைத் திரும்பிப் பார்த்த பிரதாபன்.. புருவங்களை உயர்த்தினான்..
"நேற்றுத்தான் கல்யாணநாள்.. இன்னைக்கு இல்ல.."
"எங்களுக்கும் அது தெரியும்.. அத்தைதான் சொன்னாங்க.."
"என்னன்னு..?"
"நீயும் பிரதாப்பும் கோவிலுக்கு போயிட்டு வாங்கன்னு.."
"இது வேறயா..?"
சலித்துக் கொள்வதைப் போல பேசினாலும் அவன் மனைவியுடன் கோவிலுக்குப் போனான்.. பெருமாளையும்.. அம்பாளையும் சேவித்து முடித்து விட்டு பிரகாரத்தை வலம் வந்தபோது இயல்பாக கேட்பதைப் போல சாரதா கேட்டாள்.
"சுகந்தி வேலையை விட்டுப் போறதில உங்களுக்கு வருத்தமில்லையா..?"
"எனக்கா..? எனக்கெதுக்கு வருத்தம் வரப் போகுது..? பைத்தியமாடி நீ..? ஏன் இப்படி உளருகிற..?"
"இல்லை.. சும்மாதான் கேட்டேன்..."
"ஊஹீம்.. நீ சும்மா கேட்கிற ஆளில்லை.. விசயத்தைச் சொல்லு.."
"இல்லை.. இன்னைக்குக் காலையிலே நீங்களும்.. அவளும் தோட்டத்தில நின்னு சீக்ரெட்டா எதையோ பேசிக்கிட்டு இருந்தைப் போல இருந்தது..."
அவனது நடைநின்று விட்டது.. மனைவியை முறைத்தான்.. அந்த முறைப்பில் சாரதா வாயை மூடிக் கொண்டாள்..
"உளவு பார்த்தியா..?"
ஒருமாதிரியான குரலில் அவன் வினவவும் அவளுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது..
"ஒரு களவும் பார்க்கலை.. யதார்த்தமா ஜன்னல் வழியாய் தோட்டத்தைப் பார்த்தேன்.. அங்கே நீங்களும் அவளும் நின்றுக்கிட்டு இருப்பீங்கன்னு கனவா கண்டேன்..?"
"நின்றுக்கிட்டு இருந்தா.. உன் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓட ஆரம்பிச்சுருமா..?"
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாமல் நிற்கவும்.. அவன் கோபம் குறைந்தது.. நடையைத் தொடர்ந்தவன்..
"ஆக்சுவலா நான் அவளிடம் பேசலை.. அவதான் என்னிடம் பேச வந்தா.. அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய டேப்லெட் தீர்ந்து போயிருச்சுன்னு சொன்னா.. வாங்கிட்டு வரேன்னு சொன்னேன்.. அதை இவ்வளவு கிட்டத்தில வந்து நின்னு ஏன் சொல்கிறான்னு அப்பவே யோசிச்சேன்.. இப்பத்தான் புரியுது.. ஜன்னல் வழியா நீ பார்த்துக்கிட்டு இருக்கிறதை அவ பார்த்திருக்கனும்னு..."
'அதையும் ஏன் செய்தாள்..?' 
சாரதா உதட்டைக் கடித்துக் கொண்டாள்..
ஒரு வீட்டில் வேலை பார்ப்பவள் அந்த வீட்டு முதலாளியின் இளம் மனைவி பார்க்கும் போது அவனுடன் நெருங்கி நின்று பேச முற்படுகிறாள் என்றால் அதற்கு அர்த்தம் என்னவாக இருக்கக் கூடும்..?
"அதிகம் யோசிக்காதே.." இலகுவாக அவன் சொன்னான்..
"நீ நினைக்கிறது சரிதான்.. அவ கொஞ்சம் அதிகமாத்தான் பேசி வைப்பா.. எனக்கும் அது தெரியும்.."
பேசியபடியே கோவில் வாசலை அவர்கள் கடந்து விட்டார்கள்.. காரின் கதவை திறந்தபோது.. அவள் உன்னிடம் வழிகிறாள் என்று தெரிந்தும் அந்த ஜொள்ளு மழையில் நீ நனைந்தாயா என்ற கேள்வியினை எப்படி அவனிடம் கேட்பது என்று யோசித்தாள் சாரதா..
அந்த வேலையை அவளுக்கு வைக்காமல் காரை ஓட்டியபடி விளக்கம் கொடுத்தான் அவள் கணவன்..
"இங்கேன்னு இல்லை.. எங்கேயும் இது உண்டு சாரு.." 
வெகு இயல்பாக அவன் விரித்த அந்த ஒற்றைச் சொல்லில் உயிர் பெற்றாள் சாரதா..
'சாரு..!'
அவள் மனம் தேனாக இனித்தது.. அவள் கணவன் அவள் பெயரை சுருக்கி அழைக்கிறான்.. அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. சுகந்தியைப் பற்றிய விளக்கம் கூட தேவையில்லாததாக இருந்தது..
ஆனாலும் அவன் சொன்னான்..
"நான் அவளைக் கண்டுக்க மாட்டேன்.. அம்மாவைக் கவனிக்கிறா.. கொடுத்த வேலையை ஒழுங்காச் செய்கிறா.. எனக்கு இதுதானே தேவை.. மத்தபடி வருகிறவ இளம் வயதில இருந்து என்னை சைட் அடித்து வைத்தா.. அதை ஒரு குற்றம்ன்னு சொல்லி வேலையை விட்டு நிறுத்தவா முடியும்..?"
'முடியாதுதான்..'
"இப்ப அப்படியில்லை.. நீ வந்துட்ட.. அவளும் உன்னைக் கண்டவுடன் கடுப்பாகி உன்னைக் கடுப்பேத்த பிளான் பண்ணியிருக்கா.. இது தப்புத்தான்.. அப்பா டிசைட் பண்ணலைன்னாலும்.. நீ கேட்ட கேள்வியில நானே இந்த முடிவைத்தான் எடுத்திருப்பேன்.."
'உண்மையிலேயே இவன் மனசில அவளைப் பத்தின எந்த நினைப்பும் இல்லையா..?'
"உன் மனசில என்ன ஓடுதுன்னு எனக்கும் தெரியும்.. அது எப்படித்தான் பெண்டாட்டிகள் எல்லோருமே புருசனைப் பற்றி இவ்வளவு உயர்வான அபிப்ராயத்தை வைத்திருக்கீங்களோ.. என் மனசில அவளைப் பற்றி எப்படிப் பட்ட நினைவு இருந்ததுன்னு உன்னிடம் சொல்லிட்டேன்.. இதுக்கு மேலே உன் விருப்பம்.."
பிரதாபவர்மன் நறுக்குத் தறித்ததைப் போலச் சொல்லி முடித்து விட.. அடுத்த கேள்வியான ஊர்மிளாவுடனான அவனது சந்திப்பைப் பற்றி எதையும் கேட்காமல் வாய் மூடிக் கொண்டாள் சாரதா..
வீட்டு வாசலில் நின்றிருந்த சுகந்தியின் கண்களில் சேர்ந்தாற்போல காரிலிருந்து இறங்கிய கணவன் மனைவியைக் கண்டதும் உண்டான பொறாமையின் கனலை சாரதாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது..
'ஆனாலும் இது அதிகம்தான்..'
லேசான முறைப்புடன் அவளைக் கடந்து உள்ளே போனவர்களில் பிரதாபனை மட்டும் வழி மறித்த சுகந்தி..
"உங்ககிட்டப் பேசனுமே.." என்றாள்..
"உன் சம்பளப் பாக்கிதானே.. நாளைக்கு காலையில் நீ கிளம்பும் போது உன்கைக்கு வந்துவிடும்.." பட்டென்று பதில் சொன்னான் பிரதாபன்..
முகத்தில் அடித்ததைப் போன்று வந்த அந்த பதிலினால் அடைந்த பாதிப்பை விட.. அதை சாரதாவின் முன்னிலையில் அவன் சொன்னதில் அதிகமான பாதிப்பை அடைந்தாள் சுகந்தி.. அவள் முகம் கருத்து விட்டது.. இயல்பாக அவளைப் பார்த்த சாரதாவின் பார்வையை இகழ்ச்சிப் பார்வையென்று அவள் நினைத்துக் கொண்டாள்..
"அதைக் கேட்கலை சார்.. நான் சம்பளத்துக்காக இங்கே வேலை பார்க்கலை.. உங்களையும்.. உங்க அம்மா.. அப்பாவையும் வேற்று மனுசங்களா நான் நினைச்சதில்லை.."
அவள் பேசிக் கொண்டே போக.. முகச்சுளிப்புடன் இடைமறித்தான் பிரதாபவர்மன்..
"நிறுத்தறியா.. விட்டாப் பேசிக்கிட்டே போறியே.. உன் மனதில என்னதான் நினைத்துக்கிட்டு இருக்க..? வேலைக்குத்தான வந்த..? கேட்ட சம்பளத்தை விட அதிகமா கொடுத்தோமா இல்லையா..? அதுக்கப்புறமா சம்பளத்துக்காக இங்கே வேலை பார்க்கலைன்னு டயலாக் பேசினா என்ன அர்த்தம்..? என்னையும்.. அப்பா.. அம்மாவையும் முதலாளிகளா நீ நினைச்சிருக்கனும்.. அப்படி நினைக்காத காரணத்துக்காகத்தான் உன்னை வேலையை விட்டுத்தூக்கி இருக்கிறோம்.. அதை முதலில் தெரிந்துக்க.. உன் லிமிட் என்னன்னு தெரிந்து வைத்துக்கிறதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்லது.. வேற இடத்தில வேலைக்குப் போனா இதைப் போல பேசி வைக்காதே.. உன்னை ஒரே நாளில் துரத்தி அடிச்சிருவாங்க.. வா..சாரு.."
மனைவியுடன் மாடியேறினவனை வெறித்துப் பார்த்த சுகந்தியின் கண்கள் கலங்கி விட்டன.. அவளால் இவ்வளவு சீக்கிரத்தில் வேலையை விட்டு அனுப்பப் பட்டு விட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை..
பிரதாபவர்மனின் முகச் சுளிப்பில் அவனிடம் எதையும் பேசுவதற்கு பயந்து மௌனமாகி விட்டாள் சாரதா.. மறுநாள் காலையில் அவர்கள் அரண்மனைக்கு குடிபெயர்வதாக இருந்ததால் அன்று இரவில் சீக்கிரமாகவே சாப்பாட்டை முடித்துக் கொண்டு தூங்கப் போக வேண்டும் என்று மிருதுளா சொல்லி விட்டாள்.. சாப்பிட்டு முடித்து அவர்களுக்கான அறைக்கு வந்து உடையை மாற்ற முற்பட்டவளை பின்பக்கத்தில இருந்து கட்டிப் பிடித்து பூ வாசத்தை முகர்ந்தான் பிரதாபன்..
"மங்களகரமான அழகோட இருக்கேடி.. இப்படியே வா..."
அழைத்தவனின் கோரிக்கையை மறுக்காமல் பட்டுப் புடவையுடனே கட்டிலில் அவனுடன் சரிந்தாள் சாரதா.. முதல் நாளைப் போல யார் கூடவும் அவளை ஒப்பிட்டுப் பேசாமல் அவள் மட்டுமே நினைவாக அவளை ஆக்ரமித்வனின் கைக்குள் அடங்கியவளை முத்தமிட்டுக் கட்டிக் கொண்டான் பிரதாபன்..
"சாரு..."
"ம்ம்ம்.."
"காலையிலே பாட்டுப் பாடினயே.."
"அதுக்கென்னவாம்..?"
"இப்பவும் அதைப் போல பாடுடி.. ப்ளீஸ்.."
இப்படிக் கண்களில் தாபத்தை தேக்கி வைத்துக் கொண்டு கேட்டால்.. எந்த மனைவிதான் மாட்டேன் என்று மறுப்பாள்..?
சாரதா அவன் பக்கமாகத் திரும்பி.. பட்டு வேட்டி.. பட்டு சட்டையில் இருந்தவனின் மார்பில் முகம் புதைத்து.. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.. அவன் காதேரமாக சரிந்து பாட ஆரம்பித்தாள்..
"விளக்கேற்றி வைக்கிறேன்..
             விடிய.. விடிய.. எரியட்டும்..
    நடக்கப் போகும் நாள்களெல்லாம்..
             நல்லதாக நடக்கட்டும்.. நடக்கட்டும்.."
பழிவாங்க மணம் முடிக்கப் போவதாக பயமுறுத்தி மணம் முடித்தவனின் கொஞ்சலில் அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருந்தாள்.. அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்.. என்று பயமுறுத்தியவன்.. அதை எதையும் செய்யாமல் அவளைக் காதல் செய்து கொண்டிருந்த சந்தோசத்தில் அவள் குரலில் உற்சாகம் ஊற்றெடுத்துப் பாய்ந்தது..
அவள்மீது சரிந்தவனின் கைபட்டு அவள் கழுத்தில் புரண்ட திருமாங்கல்யத்தைத் தொட்டுப் பார்த்தவளின் மனதில் இனிமை சுரந்தது.. கட்டிலில் மெத்தையிருக்க.. அதைப் புறக்கணித்து.. அவளை மெத்தையாக்கிக் கொண்டிருந்தவனின் அந்த ஆளுமையில் அவள் பெண்மை மகிழ்ந்தது..
"மஞ்சளிலே நீ கொடுத்தாய்..
             மங்கலம்..! - இந்த
    மஞ்சத்திலே நான் தருவேன்
             மந்திரம்..!
    நெஞ்சத்திலே பூசிவிடும்
             சந்தனம்..! - அதைக்
    கொஞ்சட்டுமே நீ கொடுத்த
             குங்குமம்...!"
அவள் முகத்தோடு முகம் புதைத்து அவன் புரட்டிய வேகத்தில் அவள் நெற்றியிலிருந்த குங்குமம் அவன் நெற்றிக்கும்.. சட்டைக்குமாக இடம் பெயர்ந்தது.. முதல் நாளைப்போல விலகி நிற்காமல் விருப்பத்துடன் உடன் பட்டபடி பாடினாள் சாரதா.. வேட்டைக்காரனிடம் அகப்பட்ட மானைப் போல இல்லாமல்.. அவள் கொஞ்சிக் குழாவியதில் அவனது வேட்கை அதிகரித்தது..
சாரதா அவன் முகத்தைப் பார்த்தாள்.. அவளுக்குப் பிடித்தவனுக்கு பிடித்தவளாக தான் இருக்கும் உணர்வில் அவள் மனம் ததும்பியது.. காலம் முழுவதும் சாய்ந்து நிற்க அவன் தோள் கிடைத்ததில் அவள் கண்கள் பனித்தன..
நெஞ்சம் முழுவதும் வஞ்சம் வைத்துக் கொண்டிருந்தவனை.. தஞ்சமென அவனிடம் அடைக்-கலமாகி.. வென்று விட்டாள் அந்தக் காரிகை..
"உன்னைத் தஞ்சமெனத்
             தழுவிக் கொண்டது பெண்மனம்..!
    இனிக் கொஞ்சமல்ல
             கோடி கொள்ளும் உன்மனம்..!"
அவனைக் கட்டித் தழுவிக் கொண்டவளை ஆக்ரமித்துக் கொண்டவனின் வேகத்தில் அவள் திக்கு முக்காடிப் போனாள்.. இந்த இரவில் அவன் போராட வேண்டிய அவசியமில்லாமலே அவன் கேட்டதெல்லாம் கிடைத்து விட்டது.. அதில் கள் குடித்த சிங்கமானான் பிரதாபன்..
மறுநாளில் கண் விழித்த போது சாரதாவின் உடலில் இன்பமான அயர்வு இருந்தது.. குளித்து முடித்தவள் மிருதுளாவைத் தேடிப் போனாள்.. ரவிவர்மனிடம் பேசிக் கொண்டிருந்த மிருதுளா சாரதாவைக் கண்டதும்..
"காலையில டிபனை முடித்ததும் அரண்மனைக்கு கிளம்பிவிடலாம்மா.. பிரதாப் எழுந்துட்டானா..?" என்று விசாரித்தாள்..
"இல்லை அத்தை.." என்றாள் சாரதா..
"முதலில் அவனை எழுப்பிக் கிளப்பப் பாரு.." மிருதுளா உத்தரவிட்டாள்..
"ஆகட்டும் அத்தை..."
சாரதா அறையை விட்டு வெளியே வந்தாள்.. முதல் நாள் இரவின் மகிழ்வான நினைவில் பாடல் ஒன்றை மெலிதாக முணுமுணுத்தபடி மாடிப்படிகளில் இறங்கினாள்.. பாதிப் படியில் நிஷ்டூரமாய் முறைத்தபடி சுகந்தி நின்றிருந்தாள்..
சாரதா.. முதலாளி.. தொழிலாளி.. என்ற பேதத்தைப் பார்ப்பவளல்ல.. வேலையாள்களிடம் சமமாக பழகுபவள்.. அப்படிப் பட்டவளை அந்தப் பார்வை சோதித்தது..
'இவ எதுக்காக என்னை முறைக்கிறா..?'
சாரதாவின் வழக்கமான பழைய நிமிர்வு மீண்டு வந்துவிட.. அவளும் பதிலுக்கு முறைத்தபடி படியிறங்கினாள்.. பாதிப் படிகளில் அவளும் சுகந்தியும்.. எதிரும்.. புதிருமாக சந்தித்துக் கொண்டார்கள்..
"என்னைத்தான் உங்களால விரட்டியடிக்க முடியும்.. அந்த ஊர்மிளாவை விரட்ட முடியுமா..?"
சுகந்தியின் தைரியமான அந்தக் கேள்வியில் அதிர்ந்து போனாள் சாரதா.. இப்படியும் ஒருத்தி இருப்பாளா என்றிருந்தது.. அவளிடம் சுகந்தி நேரடியாகப் பேசினாள்.. பிரதாபனின் புது மனைவியிடம் பேசுகிறோம் என்ற பயம் எதுவும் அவளிடம் இல்லை.. வெகு துணிச்சலாக பிரதாபனின் மீது அவளுக்கிருக்கும் மயக்கத்தையும் அதனால் தான் அவள் விரட்டப் படுகிறாள் என்பதையும் மறைமுகமாக அவள் சாரதாவிடமே ஒப்புக்கொள்கிறாள் என்றால்.. எந்த அளவுக்கு அவள் மனதில் பிரதாபனின் மீது மயக்கம் இருந்திருக்க வேண்டும்..?
அவளுக்கு அவள் வழியில் பதில் சொல்வதுதான் சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள் சாரதா...
"ஊர்மிளாவைப் பற்றி உனக்கென்ன கவலை சுகந்தி..? நீ உன்னைப் பற்றி மட்டும் கவலைப்படு.. அவளைப் பற்றிக் கவலைப்பட நானிருக்கிறேன்.. அந்தக் கவலை உனக்கு வேண்டாம்.. கிளம்பு.. கிளம்பி வேறு இடத்தில் வேலை கிடைக்கிறதான்னுப் போயி தேடிப் பாரு.. இங்கே வேலையைக் கோட்டை விட்டதைப் போல மத்த இடங்களிலேயும் செய்து வைக்காதே.. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது.. எங்களைப் போலவே மத்தவங்களும் வேலையை விட்டு அனுப்பி வைக்கிறதோடு நிறுத்திக்க மாட்டாங்க..."
அடி வாங்காமல் தப்பிக்கும் வழியைப் பார் என்று இதைவிட நாசுக்காகவும்.. நாகரிகமாகவும் சொல்லிவிட முடியாது என்று சுகந்திக்குப் புரியவைத்தாள் சாரதா..
நான் பிரதாபனின் மனைவி.. அவர் மாமன் மகளைச் சமாளிக்கும் கவலை என்னைச் சார்ந்தது.. உன்னைச் சார்ந்ததல்ல.. நீ வேலை பார்க்க வந்தவள்.. அந்த வேலையும் இப்போது போய் விட்டது.. அதனால் நீ பிழைப்பைத் தேடும் வழியைப் பார்.. என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன்...
பட்டுக் கத்தரித்ததைப் போலச் சொல்லி விட்டு கம்பீரமாக சாரதா படியிறங்கி விட.. கூணிக் குறுகி நின்று விட்டாள் சுகந்தி.. இப்படிப்பட்ட நிமிர்வை சாரதாவிடம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அரண்டு போன அவள் முகமே சொல்லியது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -32
தஞ்சமென வந்தவளே -32
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale-32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale-32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy