தஞ்சமென வந்தவளே -27

27 யாருமற்ற அநாதையாகத்தான் சாரதா இருந்தாள்.. வளர்ந்தாள்.. ஆனால் அப்போதெல்லாம் இது போன்ற துயரம் பந்தாகச் சுருண்டு அவள் தொண்டையை அடைத்த...


27

யாருமற்ற அநாதையாகத்தான் சாரதா இருந்தாள்.. வளர்ந்தாள்.. ஆனால் அப்போதெல்லாம் இது போன்ற துயரம் பந்தாகச் சுருண்டு அவள் தொண்டையை அடைத்த தில்லை..
அன்று அந்த துயரை அவள் உணர்ந்தாள்..
அவள் மனம் விரும்பியவன் அவளை வெறுத்துப் பேசுகிறான்.. அவளை வேம்பாக நினைக்குமளவிற்கு அவன் உள்ளம் கசந்து போயிருக்கிறது.. அந்த வெறுப்பில் கொட்டும் வார்த்தைகளைக் கேட்கும் துர்பாக்கிய நிலையை ஏன் கொடுத்தாய் ஆண்டவனே என இறைவனை அவள் கேட்டாள்..
அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவனுடைய அன்புக்குரிய அக்கா அவனிடம் கேட்டிருக்கிறாள்.. அதை மிகப் பெரிய கொடுமையாக எண்ணி அவளிடம் அவன் சீறுகிறான் என்றால் எந்த அளவுக்கு அவன் மனதில் வெறுப்பிருக்க வேண்டும்..?
"நான் அம்மாவிடம் பேசுகிறேன்.." உறுதியான குரலில் சொன்னாள் சாரதா..
"கிழிச்சே.." அதற்கும் அவன் சீறினான்..
"இல்லை.. நான் சொன்னால் அம்மா கேட்டுக்கு வாங்க.. நீங்க நிம்மதியாப் போங்க.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற பனிஷ்மெண்ட் நிச்சயமா உங்களுக்கு இருக்காது.."
"அந்தப் பனிஷ்மெண்டில இருந்து நான் தப்பிக்க நினைச்சா.. வேற ஒரு பனிஷ்மெண்ட என் அக்காவுக்கு கொடுத்து தொலைக்கறியே..."
"நானா.. என் அம்மாவுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கிறேனா..?"
"எனக்கு நல்லா வந்திரும் வாயில.. உன்னாலதாண்டி எல்லாமும்.. இத்தனை குடைச்சலைக் கொடுத்துட்டு அறியாப் பெண்ணப் போல கண்ணைக் கண்ணை கொட்டற பாரு.. அதுதாண்டி எனக்கு கொலைவெறியை கிளப்புது.."
அவன் பல்லைக் கடிக்க.. இவன் என்ன சொல்கிறான் என்று திகைத்தாள் சாரதா..
"என்னடி..? திருவிழாவில வித்த ஆடு போக இருக்கும் சொச்ச ஆட்டைப் போல இந்த விழி விழிக்கிற.. உனக்கு விசயமே தெரியாதா..?"
அவன் சந்தேகமாக கேட்டான்.. அவள் தெரியாது என்ற பாவனையில் இடம் வலமாக தலையை அசைத்தாள்..
"உன்னைப் பெண் கேட்டு இரண்டு பேர் போட்டி போடறானுக.. அது உனக்குத் தெரியாதுங்கிற.. போகட்டும் விடு.. ஏன் அவனுக போட்டி போட மாட்டானுக..? கோடிக் கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு ஜமீன்தாரோட செல்ல மகள்.. கட்டின பெண்டாட்டியையும் அவர் அம்போன்னு விட்டு விட்டு அத்தனை சொத்தையும் தூக்கி உன்கிட்ட தாரை வார்த்திருக்காரு.. உன்னைக் கட்டிக்க போட்டி போட மாட்டானுகளா..?"
'ஏன் நீ போட்டி போடவில்லை..?' மனதுக்குள் கேட்டுக் கொண்டாள் சாரதா..
யார் யாரோ போட்டி போட்டு என்ன செய்ய..? அவள் மனம் கவர்ந்தவன் அந்தப் போட்டியில் இல்லையெனும் போது அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது..?
பிரதாபன் அப்படி அவளைப் பேசாமல் இருக்க விடவில்லை.. பொருமினான்..
"ஒருத்தன் அந்த சுகுமாரன்..! என் மாமாவுக்கு ஏழுவிட்ட தங்கையின் மகனாம்..
ஜமீன் பரம்பரை.. சொத்து சுகத்தில உனக்கு சளைச்சவனில்ல.. எம்.பி.ஏ படிச்சிருக்கான்..
சொந்தம் விட்டுப் போயிரக் கூடாதுன்னு நினைக்கிறானாம்.. இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கிட்டுத்தான் அன்னைக்கு மாமான்னு அவனிடம் பல்லைக் காட்டினயா..?"
"அபாண்டமாப் பேசக் கூடாது.. அப்பாவோட சொந்தக்கரர் உனக்கு மாமா முறையாகனும்னு அம்மா சொன்னாங்க.. அதைத்தான் நானும் சொன்னேன்.."
"நீயும் மாமா.. அவனும் மாமான்னு டயலாக் அடிச்சியே.."
"பின்னே..? நீங்க மாமா.. அவரென்ன எனக்கு அண்ணனா..?"
"அடிச்சுப் பல்லைக் கழட்டிருவேன்.. அவரென்ன வேண்டிக்கிடக்கு..? குட்டிச்சுவர்.."
"ஓகே.. அந்தப் பேச்சை விட்டுத் தொலைங்க.."
"இன்னொருத்தன் யாருன்னு தெரிஞ்சா உனக்கு ஜில்லுன்னு இருக்கும்.."
"சொல்லுங்க.. ஜில்லுன்னு இருக்கா.. இல்லையான்னு அப்புறமா சொல்றேன்.."
"நக்கலா..?"
"ஒரு கல்லும் இல்லை.. நீங்க சொன்னதுக்கு நானும் சொன்னேன்..."
"உனக்கு கொழுப்புடி.."
"இருக்கலாம்.. ஆனா அது நீங்க போட்ட சாப்பாட்டால் வந்ததில்லை..."
"சாரதா...!"
"ம்ப்ச்.. சும்மா கத்தாதீங்க.. விசயத்தைச் சொல்லுங்க.."
"உன் காதலன் பொண்ணு கேட்டுட்டான்ங்கிற திமிரா..?"
"என் காதலனா..? இது என்ன புதுக்கதை..?"
"புதுக்கதையில்லை.. தொடர்கதை.. அன்னைக்கே நினைச்சேன்.. என்னடா இது.. கூடப் படிச்சவன் குற்றாலத்துக்கு வந்தா அருவியைத்தான பார்ப்பான்..? என் அக்கா மகளையும் சேர்த்தா பார்ப்பான்னு அன்னைக்கே எனக்கு சந்தேகம் தட்டுப் பட்டுச்சு.. காதலனை வீட்டுக்குள்ள கொண்டு வர நீ இப்படியொரு வழியை கண்டுபிடிச்சிருக்கன்னு அப்புறம்தானே எனக்குத் தெரிஞ்சுச்சு..."
"யு மீன்.. விக்ரம்..?"
"அவனேதான்.. அவன் என்னடி உன்னைப் பெண் கேட்கிறது..? உனக்கு அவன் தாலியைக் கட்டுவான்.. அடுத்த நிமிசமே உன் சொத்துக்கு உரிமை கொண்டாடு வான்.. அதுக்கப்புறம் அவன்கிட்ட என் அக்கா கையேந்தி நிற்கனும்.. இதுதானே உன் எண்ணம்..?"
"ஸ்டாப் இட் ஐ ஸே.. விக்ரம் கோடிஸ்வரன்.. நீங்க நினைக்கிறதைப் போல இந்தச் சொத்தைப் பெரிதா நினைக்கிறவனில்ல.. பட்.. அவன் என்னப் பெண் கேட்டானா..?"
"அடேங்கப்பா.. அம்மணிக்கு இது தெரியாதாக்கும்..? இதை நான் நம்பனுமாக்கும்..? போடி போ.. நான் உன்னையும் பார்த்திருக்கேன்.. உன் அப்பாவையும் பார்த்திருக்கேன்.. எல்லோருமே ஏமாற்றுகிற பிறவிக.. ச்சே..."
"நிஜமாகவே அவன் என்னைப் பெண் கேட்க வந்திருக்கான்னு எனக்குத் தெரியாது.. அவன் நல்ல பிரண்ட்.. அவன் மனதில இப்படி ஒரு எண்ணம் இருந்ததா..?"
"அது உனக்குத் தெரியாதா..? அட..! அட..! அட..! நடிப்பில் பிய்த்து உதறுகிறடி.. ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்.."
"உங்க கிட்ட நடிக்கனும்னு எனக்கொன்னும் அவசியமில்லை.."
"அதுதானே.. உனக்காக ஒன்றுக்கு இரண்டாய் கோடிஸ்வரனுக காத்துக்கிட்டு இருக்கிறப்ப என் அவசியம் உனக்குத் தேவையில்லைதான்.."
இது என்னடா துன்பமாய் போய் விட்டது என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் சாரதா.. இவனுக்கு என்னதான் வேண்டும்..? இவளைத் திருமணம் செய்து கொள்வதை தண்டனையாய் அவன் நினைத்தால் இவளை வேறு யாராவது திருமணம் செய்து கொள்வதென்பது அவனுக்கான விடுதலைதானே.. இதற்கும் ஏன் அவன் பாய்கிறான்..?
"என்னடி பார்க்கிற..? எவனோ ஒருவன் என் அக்காவுக்கு படியளக்கிறதை நான் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.. அக்கா முடிவாச் சொல்லிட்டாங்க.. உன்னிடம் கேட்டுப் பார்த்தேன் பிரதாபா.. நீ பதிலே சொல்லலை.. இப்ப இரண்டு இடத்தில இருந்து சாரதாவை பெண் கேட்டு வந்திருக்காங்க.. இரண்டில் ஒன்றை நான் முடிவு பண்ணித்தான் ஆகனும்னு.."
"அதிலதான் உங்களுக்கு வருத்தமிருக்கப் போகிற தில்லையே.." விட்டேற்றியாகப் பதில் சொன்னாள் சாரதா.. அவள் மனதில் வெறுமை குடி கொண்டிருந்தது..
"நீ மட்டும் போய் தொலைஞ்சா.. விட்டது கழுதைன்னு நிம்மதியா இருந்து தொலைத்திருப்பேன்.. உன்னோடு சேர்ந்து சொத்துக்களுமில்ல போய் சேர்ந்திரும்..? என் அக்கா உன் பாதுகாவலில் இருக்கனும்னு மாமா சொல்லிட்டுப் போயிருக்காருன்னு அவங்க என் கூடவும் வந்து தொலைக்க மாட்டாங்க.. என் கண் முன்னாடியே என் அக்கா அவங்க தேவைகளுக்காக யாரோ ஒருத்தனின் தயவை எதிர்பார்த்து நிற்கிறதை என்னால் பார்க்க முடியாது.. ஸோ.."
"ஸோ...?"
"நான் உன் கழுத்தில் தாலியைக் கட்டித்தான் ஆகனும்.."
வேண்டா வெறுப்பாக.. விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு அவன் பேசிய விதத்தில்.. இப்படியொரு திருமணத்தை அவசியம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா என்று சாரதாவுக்கு தோன்றி விட்டது..
என்னதான் அவன்மீது அவளுக்கொரு மயக்கம் இருந்தாலும் அதற்காக.. அவனுக்கு வேண்டாத மனைவியாக காலம் முழுவதும் வாழ்வதென்றால் அது அவளுக்கான தண்டனை அல்லவா..?
இப்படி.. அவனும்.. அவளும்.. தண்டனையாக நினைக்கும் திருமணத்தை அவசியம் பண்ணிக் கொள்ளத்தான் வேண்டுமா...?
"வேண்டாம்.." அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் சாரதா...
"எது வேண்டாம்..?" அவன் கண்கள் இடுங்கின..
"இந்தக் கல்யாணம்தான்.." அவள் சொல்லிவிட்டாள்..
"ஓ.." அவன் முகம் பயங்கரமாக மாறியது..
"வேற யார்கூட நடக்கிற கல்யாணம் வேண்டும்..? உன் காதலன் விக்ரம்கூட நடக்கிற கல்யாணம்தான் வேண்டுமா..?"
"அவன் என்காதலனில்லை.."
"ஆனா.. அவன் உன்னைக் காதலிக்கிறதா என் அக்காவிடம் சொல்லியிருக்கானே.. நீ அமைதியானவளாம். அடக்கமானவளாம்.. பண்பாளியாம்.. அது.. இதுன்னு அள்ளி விட்டிருக்கிறானே..."
"அதெல்லாம் எனக்குத் தெரியாது.."
"அ.. அ.. அ.. யாருகிட்ட காது குத்தற..? நான் பிரதாப வர்மன்டி.. உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருப்பேன்..?"
"இப்ப என்ன தான் பண்ணனும்ங்கறிங்க..?" பொறுக்க முடியாமல் முறைத்து விட்டாள் சாரதா..
அவளும்தான் என்ன பண்ணுவாள்..? உன்னைப் பிடிக்காது.. உன்னை நினைத்துப் பார்ப்பதென்றால் வேம்பாக எனக்குக் கசச்கிறது என்று சொல்கிறவனுக்கு எப்படி அவள் கழுத்தை நீட்டுவாள்..?
"உனக்குப் பிடித்தாலும்.. பிடிக்கலைன்னாலும் எனக்கு நீ கழுத்தை நீட்டித்தான் ஆகனும்.." அதிகாரமாக அவன் சொன்னான்...
'போடா.. உன்னைப் பிடிக்காதுன்னு யார் சொன்னது..? எனக்குத்தான் உன்னைப் பிடித்துத் தொலைக்குமே..'
"எனக்கு நீ வேம்புதான்.."
'ஆனா எனக்கு நீ கரும்புதாண்டா...'
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நான் ஒன்றும் தாவிக்கிட்டு நிற்கலை..."
'ஆனா.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு என் ரோசம் கெட்ட மனது தாவிக்கிட்டு நிற்குதே...'
"அக்காவுக்காக பார்க்கிறேன்.. அவங்க உன் காவலில் இருந்தாகனும்.. நீ உன் புருசன் காவலுக்கு போயாகனும்னா.. அந்தப் புருசனா நான்தான் உனக்கு இருந்தாகனும்.. வேற வழியில்ல.."
இதைவிடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது என்று சாரதாவுக்குத் தோன்றியது.. இப்படியா ஒரு மனிதன் பேசிவைப்பான்..?
"வேற வழியில்லாம நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிற அவசியம் ஒன்னுமில்லை..."
"உனக்கு உன் காதலன் காத்திருக்கிறான்ங்கிற தெனாவெட்டில பேசறியா..?"
"ஒரு வெட்டிலயும் பேசலை.. கல்யாணம்ன்னு ஒன்றைப் பண்ணிக்கிட்டாத்தானே இந்தப் பிரச்னை..? எனக்கு கல்யாணமே வேண்டாம்.. எனக்கு அம்மா.. அம்மாவுக்கு நான்.. இது போதும்..."
படபடவென்று பேசிவிட்டு அவள் விரைந்து விட்டாள்.. அவள் போவதையே பார்த்தபடி சிந்தனையுடன் அசையாமல் நின்றான் பிரதாபன்.. அவனிடம் சொன்னதை பிரபாவதியிடம் அவள் சொன்னபோது...
"அது முடியாது மகளே.." என்று சொன்னாள் அவள்..
"ஏன்ம்மா..? என்னால அது முடியும்.. வேண்டாம்மா.. என் கல்யாணம் உங்களையும் என்னையும் பிரிக்கும்ன்னா.. அந்தக் கல்யாணமே எனக்கு வேண்டாம்.."
"சாரு.." உணர்வுப் பெருக்குடன் தாய்மை பொங்க.. மகளைக் கட்டிக் கெண்டாள் பிரபாவதி..
"என்னைப் பெற்ற தாயின் முகத்தை நான் பார்த்த தில்லைம்மா.. போட்டோவில்தான் பார்த்தேன்.. அந்தப் பெற்றதாயா என் கண்முன்னாலே நிற்கிறது நீங்க மட்டும் தான்.. உங்களை வேறாய் நான் நினைச்சதில்லைம்மா.. நீங்கதான் என்னைப் பெற்ற அம்மான்னு நினைக்கிறேன்.. எனக்கு நீங்க போதும்.. வேற எதுவும் வேண்டாம்.."
சாரதா பேசப்பேச.. பிரபாவதியின் மனம் நிறைந்தது.. அவள் மடிமீது தலை வைத்து விசும்பிய மகளின் தலை கோதி விட்டாள்..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -27
தஞ்சமென வந்தவளே -27
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale-27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale-27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy