பொதிகையிலே பூத்தவளே -42

42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. "ஆண்டான் அடி...


42

கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி, தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்..
"ஆண்டான் அடிமை மனோபாவம் இன்னும் மறையல.. பணபலமும் படைபலமும் இருக்கிறவங்க, அது இல்லாத ஏழைகளை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. அப்படிப்பட்ட பணக்காரங்க மத்தியிலே நம்ம சின்ன ஜமீன்தார் வித்தியாசமானவர்.."
அவன் பேச்சை நிறுத்தி மேடையில் அமர்ந்திருந்த விஷ்வாவை வெகு பிரியத்துடன் பார்த்தான்..  விஷ்வாவின் அருகில் அமர்ந்திருந்த மீனாம்பிகை பெருமை கொண்டாள்.. விஷ்வாதான் எத்துனை மனித நேயமுள்ளவனாக இருக்கிறான்..! அவனுக்கும் அவனுடைய தமையன் ரங்கநாதனுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையில் இருக்கும் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறதே.. ரங்கநாதன் கிரி சொன்னதைப் போல பணபலத்தையும், படைபலத்தையும் கொண்டு மக்களை அடிமைப் படுத்துகிறான்.. விஷ்வாவும்தான் அடிமைப் படுத்துகிறான்.. மக்களையல்ல.. அவர்களின் மனங்களை கொள்ளை கொள்கிறான்.. அவர்களிடம் காட்டும் அக்கறையினாலும், அவர்களுக்குச் செய்யும் நன்மையினாலும் அவர்களை அவனுக்கு அடிமையாக்குகிறான்..
"நம் சீனியர் மேனேஜர் என்னை முதன்முதலாகப் பார்த்தபோது முதலாளியிடம் எப்படி இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள் என்று கேட்டார்.. நான் சொன்னேன்.. இது ராமனுக்கும் குகனுக்கும் இடையில் இருக்கும் அன்பு என்று.."
கிரியின் பேச்சில் மறுபடியும் கரகோசம் வானைத் தொட்டு முட்டியது.. அந்த நாளின் நினைவில் மீனாவும் கிரியின் பேச்சை ஆமோதிப்பதைப் போலத் தலையை அசைத்து புன்னகை செய்தாள்..
"நம் சின்ன ஜமின்தார் ராமன்தான்.. கிருஷ்ணன் என்று பலர் சொல்லலாம்.. அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.. அவர் ஆட்சி செய்வதில் ராமன் என்பது.. இங்கிருக்கும் அவருடைய தொழில் சாம்ராஜ்யம் ராமராஜ்யம்.."
இப்போது எழுந்த கரகோசம் அடங்க வெகு நேரமானது.. மீனாவுக்கு அந்தக் கைதட்டல்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.. அது அவளுடைய நாயகனுக்குக் கிடைக்கும் கரவொலி.. அவனைக் கொண்டாடும் மக்கள் வெளிப்படுத்தும் அன்பின் ஸ்வரம்..
"இதோ.. நம் சின்னஜமீன்தார், இந்த கானாடுகிரியின் மலைவாழ்மக்கள் அவருடைய மக்கள் என்பதை நிரூபித்து விட்டார்.. அவர் நம் காவலர் என்பதை உணர்த்தி விட்டார்.. இங்கே அவர் நமக்காக கட்டித் தந்திருப்பது நம் மக்களுக்கான மிகப் பெரும் கல்விக்கூடம் ..இந்தக் கல்விக்கூடம் தற்போது மேல்நிலைப்பள்ளி அளவில் இருந்தாலும் பிற்காலத்தில் கல்லூரிகளையும் சேர்த்துக் கொள்ளும்.. கல்விக்காக நம் இளையதலைமுறை மலையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இனி இல்லை.. மறுக்கப்பட்டக் கல்வி நம் வாசலைத்தேடி வந்து விட்டது.. அதைக் கொண்டு வந்திருப்பது நம் சின்ன ஜமின்தார்.. அவர் நினைத்திருந்தால் அந்த இடத்தில் ஏதேனும் ஒரு தொழில்கூடத்தைத் துவங்கியிருக்கலாம்.. இவர் துவங்கியது கல்விக்கூடத்தை.."
உணர்ச்சிவசப்பட்ட கிரி பேச்சை நிறுத்தித் தொண்டையைச் செறுமினான்.. கூட்டம் உணர்ச்சியுடன் சின்ன ஜமீன்தார் நன்றாக இருக்க வேண்டும் என்று கூவியது.. மீனாவின் கண்கள் பனித்தன.. எவரும் அறியாமல் நாசுக்காக கைக்குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
"அது மட்டுமா..? மருத்துவமின்றி துயர் கொள்ளும் நம் மக்களுக்காக இலவச மருத்துமனையைக் கட்டித் துவக்கியிருக்கிறார்.. இவற்றுக்காக பலகோடி ரூபாய்களுடன் டிரஸ்ட் ஒன்றை நிறுவியிருக்கிறார்.. அந்த டிரஸ்ட் நம் மக்களுக்கான கல்விக் கூடத்தையும், மருத்துவமனையையும் நிர்வகிக்கும்.. குணப்படுத்த முடியாத நோய்களுக்கு பச்சிலை மருத்துவம் செய்து வாழ்ந்து வந்தோம்.. பிரசவங்கள் தானாக நடந்தன.. இயற்கையோடு ஒன்றி வாழும் நம்மை நோய் அண்டியதில்லை என்றாலும் காயங்களுக்கு  சிகிச்சை செய்ய மலையை விட்டுக் கீழே இறங்க முடியாமல் மஞ்சள் அரைத்துப் பூசினோம்.. அதற்கெல்லாம் விடிவெள்ளியாக நம் சின்ன ஜமீன்தார் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.. இதற்கெல்லாம் நாம் எவ்விதம் கைம்மாறு செய்யப் போகிறோம்..?"
மக்கள்கூட்டம்  உயிரையும் கொடுப்போம் என்று கூவியது ..
மேடையில் அமைச்சர், கலெக்டர் மற்றும் அந்தப் பகுதியின் பெரிய மனிதர்கள் பலரும் அமர்ந்திருந்தார்கள்.. மலைவாழ்மக்களின் நாயகனாக விஷ்வா இருப்பதைக் கண்ட அமைச்சரின் மனதில் எப்படியாவது அவனை அவரது கட்சிக்குள் இழுத்து விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது..
"தம்பி விஷ்வா பணம் இருந்தா மட்டும் போதுமா..? அதிகாரம் வேண்டாமா..? எங்க கட்சிக்குள்ள வந்திருங்க.. அடுத்த எலக்சன்லயே உங்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு வாங்கிக் கொடுத்து மந்திரியாக்கி கோட்டைக்குள்ளே கொடியை நாட்ட வைச்சுடறோம்.. இவ்வளவு மக்கள் செல்வாக்கை வைச்சுக்கிட்டு பிஸினெஸ், பிஸினெஸ்ன்னு இருக்கீங்களே தம்பி.. இந்தத் தொகுதியில நீங்க நின்னா போட்டியில்லாம ஜெயிச்சுருவீங்க போல இருக்கே.." அமைச்சர் விஷ்வாவின் காதுகளில் ஓத ஆரம்பித்து விட்டார்..
"அதெல்லாம் என் ஏரியா இல்லை சார்.. அதுக்குன்னே பிறந்து வந்ததைப் போல நீங்கள்ளாம் இருக்கிறப்ப நான் எண்டரி கொடுத்தா நல்லா இருக்காது சார்.." நாசுக்காக மறுப்பைத் தெரிவித்தான் விஷ்வா..
"அப்ப ஆதரவையாவது எங்க கட்சிக்கு கொடுக்கனும்.." அமைச்சர் அடுத்த அஸ்திரத்தை வீசினார்.. அதற்கென்ன என்று சொல்லாமல் மர்மமாகச் சிரித்து வைத்தான் விஷ்வா..
விழா முடிந்தது.. கல்வி அமைச்சர் மேல்நிலைப் பள்ளியைத் திறந்து வைத்தார்.. மாவட்டக் கலெக்டர் மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.. சிறப்பு விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பின்னால் மலைவாழ் மக்களின் இருப்பிடத்தில் பாட்டு, நடனம் என்று பல்சுவை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.. விறகுகள் போட்டு நெருப்பை எரிய விட்டு, அதைச் சுற்றி மலைவாழ் இளம்பெண்கள் குனிந்து கைகொட்டி கும்மியடிப்பதைப் போல ஆடினார்கள்.. நடனத்தின் இடையில் ஒருபெண் ஓடி வந்து மீனாவின் கையைப் பிடித்து இழுத்துத் தங்களின் நடனக்குழுவில் ஐக்கியமாக வைத்தாள்..
மீனா சேலையை இழுத்துச் செறுகிக் கொண்டு மலைவாழ் இளம் பெண்களுடன் ஆடிப்பாட.. அதை ரசித்துப் பார்த்த விஷ்வாவின் கண்கள் மின்னின..
அடுத்து மலைவாழ் இளைஞர்களும், யுவதிகளும் இணைந்து ஆடிய நடனத்தில் விஷ்வாவையும், மீனாவையும் அவர்கள் இணைத்துக் கொள்ள.. விஷ்வாவும், மீனாவும் அந்த நடன ஜோடிகளுடன் சேர்ந்து நடனமாடினார்கள்..
மதிய விருந்து அனைவருக்கும் தயாரிக்கப் பட்டிருந்தது.. அவர்களுடன் சேர்ந்து வெட்டவெளியில் அமர்ந்து விஷ்வாவும் மீனாவும் விருந்துண்டார்கள்.. விருந்து முடிந்ததும் கிரியின் வீட்டுக்குப் போனார்கள்.. கிரியின் அம்மாவிடம் மீனா பிரியமாக பேச ஆரம்பித்தாள்.. கிரி நெகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.. கிரியின் அன்னையிடம் மீனா காட்டிய தன்னலமில்லாத பாசம் அவனைக் கவர்ந்தது.. விஷ்வா செல்போனுடன் மாடிக்குப் போய் விட, கிரியைத் திரும்பிப் பார்த்த மீனா, அவன் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, வலது உள்ளங்கையை விரித்து 'ஏன்' என்று ஜாடையில் கேட்டாள்.. எதுவும் இல்லையென்று தலையை அசைத்த கிரி அவர்களருகில் வந்தான்..
"நன்றிங்க.. நீங்க வந்த பின்னால் நிறைய நல்லவிசயம் நடக்குது.. சின்ன ஜமின்தாரோட தொழில்கள் எல்லாம் பாதுகாப்பா நஷ்டமில்லாம அதிக அளவு லாபத்துடன் நடக்குது.. இப்ப எங்க மக்களுக்காக  ஸ்கூல், ஹாஸ்பிடல்ன்னு வந்திருக்குது.."
"ஐய்யே.. இதுக்குத்தான் இப்படி சீன் போட்டிங்களா..? நான்கூட என்னவோன்னு நினைச்சுட்டேன்.. சாரோட பிஸினெஸ்ஸை பார்த்துக்கிறது தானே எனது வேலை..? அதுக்குத்தானே சம்பளம் வாங்கறேன்..? என் வேலையை நான் செய்கிறேன்.. அப்புறம் இந்த ஸ்கூல், ஹாஸ்பிடல் எல்லாம் சார் கொண்டு வந்திருக்கிறார்.. கிரெடிட் எல்லாம் அவருக்குத்தான் போய் சேரனும்.."
“ தூண்டி விட்டால்தான் விளக்கின் ஒளி பரவும் ..இத்தனை நாளாய் இது நடக்கலையே ...இப்ப நீங்க வந்த பின்னாலதான இதெல்லாம் நடக்குது ?”
“ ச்சும்மா சொல்லாதீங்க ..”
மீனா இரண்டு கைகளையும் விரித்துத் தன்னால் எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல அபிநயிக்க, கிரி தலையை ஆட்டிச் சிரித்தான்.. அவர்கள் இருவருக்கும் இடையே அண்ணன், தங்கை உறவு வெளிப்பட்டது.. அதில் கிரியின் அன்னை ஆனந்தத்துடன் கண்ணீர் விட்டாள்..
அன்பு என்பது அட்சயபாத்திரம்.. அள்ள அள்ளக் குறையாது அனைவரையும் உறவாக்கும் வல்லமை கொண்டது..
விஷ்வா இல்லாத நாள்களில் கிரி மீனாவின் நிழலாக உடனிருந்தான்.. கிரியின் அன்னை எப்படி மீனாவைத் தன் மகளைப் போல நேசிக்கிறாளோ, அதைப்போல புனிதாவும் கிரியை தன் மகனைப் போல நேசித்தாள்.. மூர்த்தியோ ஆனந்தனை கிரியின் வடிவில் கண்டார்..
"நம்ம ஆனந்தன் இப்படிப் பிரியமாப் பேசி நம்ம கூடவே இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..?" புனிதாவிடம் அங்கலாய்ப்பார்..
இதனால் அவரது மனம் வேதனைப் படுகிறது என்பதை புனிதா மீனாவிடம் சொல்ல.. மீனா கிரியிடம் ஓர்முறை சொல்லி விட்டாள்.. அதைக்கேட்ட கிரி அவளுடைய குடும்பக்கதையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினான்.. மீனாவும் தன் மனதிலிருந்த வேதனை முழுதையும் கொட்டி விட்டாள்..
"எனக்கு மட்டும்தான் துயரம்ன்னு நான் நினைத்துக்கிட்டு இருந்தேன்.. இந்த சின்னவயசில எவ்வளவு துயரத்தை அனுபவிச்சிருக்கீங்க.. அவங்க உங்களைப் பெற்ற அம்மா இல்லைன்னு நீங்க சொன்ன பின்னால்தான் தெரியுது.."
"பெற்றால்தான் அம்மாவா..?"
"கோடியில ஒரு வார்த்தைங்க.. அதைப் போல கூடப் பிறந்தாத்தான் அண்ணனா..? என்னை உங்க அண்ணனா நினைத்துக்கங்க.."
அன்று மீனா அழுதுவிட்டாள்.. அதற்குப் பின்னால் அவள் கிரியை பெயர் சொல்லியோ, 'சார்' என்றோ அழைத்ததில்லை.. 'அண்ணா..' என்றுதான் அழைத்தாள்.. மூர்த்தியிடமும் அவன் அதையே வலியுறுத்தினான்..
"பெற்றால்தான் மகனா..? நான் உங்க மகனாக முடியாதா அப்பா..?"
கிரியின் நெகிழ்வில் மூர்த்தி அவனைக் கட்டித்தழுவிக் கொண்டார்.. மகனிடம் ஓர் பாச வார்த்தைக்காக ஏங்கிய அவரது நெஞ்சம் கிரியின் அன்பான வார்த்தைகளில் ஆறுதலடைந்தது..
மகனைப் பிரிந்து தவிக்கும் மூர்த்திக்கு கிரி அன்பான மகன்.. மகளில்லாத கிரியின் அன்னைக்கு மீனா அன்பான மகள்.. பணத்தை மட்டுமல்ல.. அன்பையும் பண்ட மாற்று செய்யலாம்..
கிரியின் அம்மா தன் கைபட பின்னியிருந்த ஸ்வெட்டரைக் கொடுக்க மீனாவை அழைத்துச் சென்றாள்.. அவளுடன் பேசியபடி உள்ளறைக்குள் சென்ற மீனா அங்கே மாட்டப் பட்டிருந்த போட்டாவை யதேச்சையாகப் பார்த்தாள்.. அந்த போட்டோவை எங்கேயோ பார்த்ததைப் போல இருந்தது.. மறுபடியும் உற்றுப் பார்த்தாள்.. நினைவு வந்து விட்டது.. அழகான பெண்ணொருத்தி சிரித்த முகத்துடன் இருந்த அந்த போட்டோ இருந்த குடிசையில்தான் அவளும் விஷ்வாவும் மழைக்கு ஒதுங்கியிருந்தார்கள்..
"இந்தப் போட்டோவில் இருக்கும் பெண் அழகா இருக்காளே.. யாரும்மா இது..? உங்க சொந்தமா..?"
கிரியின் அன்னையிடம் கேட்டாள்.. திரும்பிப் பார்த்த அந்த மூதாட்டியிடம் ஓர் அதிர்வு வந்து போனது.. கலங்கிய கண்களைத் துடைத்தபடி கம்மிய குரலில் பேசினாள்..
"சொந்தம்தான்ம்மா.. இவ உயிரோட இருந்திருந்தா, கிரிக்கு பொஞ்சாதியா, எனக்கு மருமகளா, இந்த வீட்டில இருந்திருப்பா.. அதுக்கு கொடுத்து வைக்காம போச்சே.."
"என்னது.."
மீனா அதிர்ச்சியுடன் போட்டோவைப் பார்த்தாள்.. இவளைப் பற்றி கிரி மீனாவிடம் பேசியதே இல்லையே..
"எப்படிம்மா பேசுவான்..? எங்க சனங்களில கிரியும் இவளும்தான் மலையை விட்டுக் கீழே இறங்கிப் போய் பெரிய படிப்பையெல்லாம் படிச்சுட்டு வந்தவங்க.. கிரியைப் போல இவளும் இவளைப் பெத்தவங்களுக்கு ஒத்தைப் பொண்ணு.. கிரியும் இவளும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசைப்பட்டாங்க.. பெரியவங்க நாங்க கல்யாணம் பேசி முடிச்சோம்.. கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கிறப்ப இவ அருவியில குளிக்கப்போயி கால் வழுக்கி அருவியில விழுந்து செத்துப் போயிட்டா.. அவ போன துக்கத்தில அவளைப் பெத்தவங்க நெஞ்சுவலி வந்து செத்துப் போனாங்க.. கிரி கல்யாணமே வேண்டாம்ன்னு அப்படியே நின்னுட்டான்.."
கிரியின் அன்னை துயரம் தாங்காமல் கேவி அழுதாள்.. அவளைத் தோளில் சாய்த்துத் தேற்றிய மீனாவின் மனதில் சுத்தமாக இருந்த குடிசை வந்து போனது..
ஆளில்லாத குடிசை அவ்வளவு சுத்தமாக இருக்குமா..?












Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -42
பொதிகையிலே பூத்தவளே -42
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/pothikaiyilepooththavale42.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/pothikaiyilepooththavale42.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy