எண்ணியிருந்தது ஈடேற -132

132 சாது மிரண்டால் காடு கொள்ளாது.. வீணா மிரண்டால் வயநாடு கொள்ளாது.. அமைதியின் சிகரமான வீணா வெடிப்பது நன்மைக்கான அறிகுறியல்ல என்று ந...


132


சாது மிரண்டால் காடு கொள்ளாது.. வீணா மிரண்டால் வயநாடு கொள்ளாது.. அமைதியின் சிகரமான வீணா வெடிப்பது நன்மைக்கான அறிகுறியல்ல என்று நொந்து போனார் அருள்மொழிவர்மன்.. மாமனார், மாமியாருக்கு மரியாதை கொடுக்கும் மருமகள் கிடைப்பது வரம்.. அவள் மாமியாராகப் போகும் வயது வந்தும் அந்த மரியாதையைக் கை விடாமலிருப்பது அதைவிட பெரிய வரம்..
அப்பேற்பட்டக் கொடுப்பினையைக் காப்பாற்றிக் கொள்ளும் புத்தி யாழினிக்கு இல்லாமல் போய் விட்டது தான் துயரத்திலும் பெரும் துயரம்..
வீணா தனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துக் கொள்ளக் கூடியவள்.. தன் பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.. கடவுளின் அனுகிரகத்தில் அவள் பெற்ற மகன் சிங்கமாக சிலிர்த்து நின்று தன்னையும் காப்பாற்றித் தன் குடும்பத்தையும் காப்பாற்றும் தீரம் மிக்கவனாக வளர்ந்து வீட்டான்.. ரவிச்சந்திரனின் தங்கை என்பதினால் ரம்யமாலினி இரும்புக் கோட்டையில் பாதுகாக்கப் பட்டாள்...
வீணாவும் பிள்ளைகளைப் பற்றிய கவலையில்லாமல் நிம்மதியாக இருந்தாள்.. அந்த நிம்மதியைக் குலைத்த அபராஜிதனை ரவிச்சந்திரன் வயநாட்டை விட்டே வெளியேற்றினான்.. இருந்தாலும் வீணா தன் நிழலை விட்டு அகல விடாமல் ரம்யமாலினியைப் பொத்திப் பாதுகாக்க ஆரம்பித்தாள்..
சொந்த அரண்மனையிலேயே சுதந்திரம் இல்லாமல் தங்கை இருக்க நேர்ந்ததில் ரவிச்சந்திரனின் மனதுக்குள் அத்தையின் குடும்பத்தின் மீது ஆழ்ந்த வெறுப்பு உண்டு.. அதை உணர்ந்திருந்த அருள்மொழிவர்மன் அது இடம் மாறி அவர்மீதும் யாழினி மீதும் படிந்து விடக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருப்பார்.. அந்தக் கவனம் யாழினியிடம் இல்லாமல் போய் விட்டது.. மகள் மீதான பாசத்தில் அவள் ரவிச்சந்திரனின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது போதாது என்று நந்தினியைக் குறைகூறி வீணாவின் மனத் தாங்கலையும் சம்பாதித்து விட்டாள்..
"இந்த அரண்மனையிலே அஜந்தா மட்டும்தான் இளம்வயதுப் பெண்ணா இருக்கிறாளா அத்தை..? ரம்யா இல்லையா..? ரம்யா நந்தினியின் மனது கஷ்டப்படறதைப் போலப் பேசினதில்லையே.."
பேச்சைக் குறை என்று அருள்மொழிவர்மன் சமிக்ஞை செய்தும் வீணாவின் பேச்சில் வெகுண்டாள் யாழினி..
"நினக்கு பெந்து அஜந்தாவா.. இல்ல.. ஆ நந்தினியா..?"
"சொந்தம் என்கிறதுக்காக தப்பைத் தப்புன்னு சொல்லாம இருக்க முடியுமா அத்தை.. அஜந்தா நந்தினியிடம் மட்டும் வம்பிழுக்கலை.. ரம்யாவிடமும் வம்பிழுக்கிறா.. அது உங்களுக்கும் தெரியும்.. இருந்தும் நீங்க அஜந்தாவைக் கண்டிச்சதில்லை.. ஏன்
அத்தை..? ரம்யாவும் உங்க பேத்திதானே..? நந்தினியை மட்டம் தட்டின அஜந்தாவை நந்தினி பதிலுக்கு மட்டம் தட்டினதுக்கு எல்லாம் அவளாலேன்னு பழி போடறிங்களே.. இத்தனை நாளா அஜந்தா ரம்யாவைப் பேசற பேச்சுக்குப் பதில் பேசாம ரம்யா ஒதுங்கிப் போனாளே.. அதை ஏன்னு நீங்க அஜந்தாவை ஓர் வார்த்தை கேட்டிருப்பீங்களா..? உங்க மகளோட மகள் உயர்த்தி.. உங்க மகனோட மகள்ன்னா குறைவு.. அப்படித்தானே.. இதை இதுவரைக்கும் நான் ரவியின் காதுகளில் போட்டதில்லை.. நம்மால் குடும்பத்தில் சண்டை வர வேண்டாம்ன்னு நினைச்சேன்.. அது தப்புன்னு இப்பத்தான் புரியுது.."
"ஓ.. நிண்ட மோன் பலவான்.. எங்கள ரட்சிப்பவன்.. அவனிடம் எங்களப் பத்திக் கோள் மூட்டயில்லண்டு பறஞ்ஞோ..?"
"கோள் மூட்டறது என் பழக்கமில்லை.. அது உங்க மகளின் பழக்கம்.. மகள் வழிப் பேத்தியோட பழக்கம்.."
"கேட்டோ.. இத்தினி திவசமா இங்ஙன சம்சாரிக் கத்தான் ஈ மனுஷி காத்திருந்தாளல்லோ.. எண்ட மோளையும், கொச்சு மோளையும் பழிக்கான்டாம்.. கேட்டோ.."
யாழினி அருள்மொழிவர்மனிடம் கொதித்தாள்.. அவர்  பாவம் என்ன செய்வார்..? பெண்களின் பேச்சு வார்த்தையில் அவர் ஊடே புக முடியுமா..?
"எந்தா இது மோனே.."
இடித்த புளிபோல இருந்த ரவிவர்மனை அதட்டினார்.. மகனின் மௌனம் அவருக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது.. பெற்றவர்களுக்கு ஒன்று
என்றால் ரவிவர்மன் தாங்க மாட்டார்.. தாய், தந்தைக்கு அடங்கிய மகன்..
அவரா மனைவியைப் பேசவிட்டு வாய் மூடி அமர்ந்திருக்கிறார்..?
"நான் என்ன செய்யட்டும் அப்பா..? வீணா கேட்கிறது நியாயமான கேள்வி.. நீங்களும் அம்மாவும் அவந்திகாவைக் கொண்டாடினீங்க.. தலையில் தூக்கி வைத்து ஆடினீங்க.. நானும் அது போல் ஆடனும்னு சொன்னீங்க.. செய்தேன்.. என்னையும் அவந்திகாவையும் ஒன்று போல நீங்க நினைத்திருந்தா சேட்டன் பத்தி நினைக்கனும்னு அவந்திகாவுக்கு சொல்லி வளர்த்திருப்பீங்க.. நீங்க அப்படிச் செய்யலையே.. அவந்திகாவையும் அவ குடும்பத்தைப் பத்தியும் அவளோட சந்தோசத்தைப் பத்தியும் நினைக்கனும்னு எனக்கு மட்டும் சொல்லி வளர்த்தீங்க.."
"மோனே.."
இன்று விடிந்த விடியல் சரியானதாக இல்லை என்று நொந்து போய் விட்டார் அருள்மொழிவர்மன்..
வீணா என்னும் சாது மிரள்கிறது.. ரவிவர்மன் எனும் யோகி தத்துவ மழையைப் பொழிகிறது..
இது எதில் போய் முடியப் போகிறது..?
"உங்களுக்கு உங்க மகள் முக்கியம்ன்னா எனக்கு என் மகள் முக்கியம்ப்பா.. உங்க மகளோட மகனால என் மகளுக்கு தொந்தரவு வருதுன்னுதானே ரவி அபராஜிதனை மும்பைக்கு அனுப்பி வைத்தான்..? அவன் வயநாட்டுக்கு வந்து நின்றிருக்கிறானே.. அதை ஏன்னு நீங்களும் அம்மாவும் கேட்டிங்களாப்பா..?"
இப்படியொரு கேள்வியை எதிர்கொள்ள நேரிடும் என்று நினைத்தும் பார்த்திராத அருள்மொழிவர்மன் நிலைகுலைந்து போனார்.. ரவிவர்மனின் மனதில் இப்படியொரு புயல் மையம் கொண்டிருக்கக் கூடும் என்று ஏன் அவர் நினைக்காமல் போனார்..?
அவந்திகா விழித்துக் கொண்டாள்.. இந்தப் பேச்சை வளர விடுவது விபரீதத்தில் முடியும் அபாயம் இருப்பதை அவளது புத்தி அறிவுறுத்தியது..
"எண்ட மோன ஷெமிக்கனும் சேட்டா.. நீங்களும் உங்க பிள்ளைகளிண்ட அச்சனல்லோ.. அம்மை, அச்சனைப் பார்க்கனும்.. அணியத்தியைப் பார்க்கணு மெண்டு ரவிக்குத் தோணுமல்லோ.. அதி போலதானே அபராஜிதனுக்கும் தோணும் சேட்டா.. அம்மை, அச்சனையும் அணியத்தியையும் காண வேண்டுமெண்டு எண்ட மோன் வயநாட்டுக்கு வந்து.. சேட்டன் அதில வல்லிய குத்தம் காணாண்டாம்.. எனிக்காக அபராஜிதன ஷெமிக்கனும் சேட்டா.." ரவிவர்மனிடம் கெஞ்சினாள்..
அஜந்தாவுக்கும் யோகானந்தனுக்கும் அது பிடிக்கவில்லை..
"எண்ட சேட்டன் வயநாட்டுக்கு வந்து போகிறதை எவர் தடுக்க முடியும் அம்மே.. அவன் என்ன கைதியோ..?" அஜந்தா பொங்கினாள்..
'பாவி மோள்.. எல்லாம் இவளாலே வந்து.. அதி அறியாம எண்ட அம்மை ஆ நந்தினிய பறஞ்ஞு..' பல்லைக் கடித்தாள் அவந்திகா..
அஜந்தா தலையிடாமல் இருந்திருந்தால் ரவிவர்மன் அத்துடன் விட்டிருப்பாரோ என்னவோ.. அவள் ஊடே பேசவும் அவரும் பேச வேண்டியதைப் பேசி விட்டார்..
"நிண்ட சேட்டன் வயநாட்டுக்கு வந்து போகட்டும் அஜந்தா.. ஈ அரண்மனைக்கு வரக் கூடாது.. ஏனென்டா இதி என் மகனோட அரண்மனை.. கேட்டோ.. அப்படி அவனுக்கு அம்மை அச்சன் மேலே பாசம் பொங்கி வழிந்தா மும்பைக்கு உங்களையும் அழைத்துக்கட்டும்.. அங்கேதான் வீடு இருக்கே.. அதை உங்க பெயருக்கு எழுதித் தரச் சொல்றேன்.. உங்க அப்பா அந்த வீட்டை விற்று ஊரைச் சுற்றாமல் பார்த்துக்க வேண்டியது உங்க தலைவிதி.. எங்களுக்கென்ன வந்தது..? குடும்பத்தோட எப்போக் கிளம்பறிங்க..?"
அவந்திகா கையைப் பிசைய.. ஹைய்யா.. நமக்கு விற்றுத் திங்க ஓர் சொத்துக் கிடைக்கப் போகிறது என்று உற்சாகமானார் யோகானந்தன்..
"ஈ திவசமே கிளம்பலாமல்லோ.. அஜந்தா, அவந்திகா, அபராஜிதா.. ரெடியாயினு.. நாம மும்பைக்குப் போயி.."
'அப்படியே நம்ம பிழைப்பும் போயி..' அவந்திகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
வயநாட்டு அரண்மனையில் இருக்கும் வரைதான் அவளுக்கும் அவள் குடும்பத்தினர்க்கும் வாழ்வென்பதை அவந்திகா நன்கு அறிவாள்.. அபராஜிதனுடன் அவர்கள் கிளம்பி விட்டால் அப்படியே அவர்களை ரவிச்சந்திரனின் குடும்பத்திலிருந்து துண்டித்து விடுவான் அவன்.. அவர்கள் தனிமைப் படுத்தப் படுவார்கள்.. ரவிவர்மன் சொன்னதைப் போல அவர்களுக்கு என்று மும்பையில் கொடுக்கப் படும் பங்களாவை யோகானந்தன் விற்று ஊர் சுற்றுவதற்கு முன்னால் அபராஜிதன் அதைச் செய்து விடுவான்.. இப்போதே எத்தனை கோடி கடன் வைத்திருக்கிறானோ.. தந்தைக்கு மகன் சளைத்தவனில்லை..
"ஞான் நிண்ட அணியத்தி சேட்டா.." அவந்திகா கண்ணீர் விட்டதில் ரவிவர்மனின் வேகம் கொஞ்சம் குறைந்தது..
"நினக்காக ஓர் அளவுதான் பொறுத்துப் போக முடியும் அவந்திகா.. அபராஜிதனை மும்பைக்கு அனுப்பி வைக்கிற வழியைப் பார்.. அப்புறம் நந்தினி எங்க குடும்பத்தின் விருந்தாளி.. அவளிடம் உன் மகள் வம்புக்குப் போகக் கூடாது.."
"எந்தா மோனே.. நிண்ட அணியத்தியின் மோள விட நிண்ட மோனிடம் ஜோலி பார்க்க வந்த ஆ பெண் குட்டி வல்லியளல்லோ..? அதி எந்தா.. நிண்ட குடும்பம்ன்னு பிரிச்சி பறஞ்ஞு..?" யாழினி ஆத்திரப்பட்டாள்..
"யாரை விடவும் யாரும் பெரிதுன்னு இங்கே சொல்லலை அம்மே.. ரவிக்குன்னு ஒரு பெயர் இருக்கு.. மதிப்பு, மரியாதை இருக்கு.. ஈ அரண்மனை அவனிண்ட அரண்மனைன்னு சொல்லப்படறதிலதான் பெகுமானம் இருக்கு.. ரவி ஈ கேரளாவில ஒரு பிஸினெஸ் ஸ்டார்.. அவனிடம் வேலை பார்க்க வந்த பெண்ணை நம்ம அரண்மனையிலே தங்க வைத்தால் நாம் எப்படி அந்தப் பெண்ணைப் பார்த்துக்கனும்..? அதை விட்டுட்டு அந்தப் பெண்ணின் மனம் நோகப் பேசினால் அவன் சும்மாயிருப்பானா..? எனக்கு ரவி முக்கியம் அம்மே.. ஒரு விருந்தாளிக்கான மதிப்பு மரியாதையை குடுக்க முடியாம அவந்திகாவின் குடும்பம் இடைஞ்சலா இருந்தா என் குடும்பம்ன்னு நான் பிரிந்து போகிறதைத் தவிர வேறு வழியில்லை.. எனக்குக் கல்யாண வயதிலே மகனும், மகளும் இருக்காங்க.. அவங்களுக்கு கல்யாணம் நிச்சயமாகும்.. சம்பந்திகள் வீட்டில இருந்து விருந்தாளிகள் வந்து போவாங்க.. ஒரு சின்னப் பெண்ணுக்கு இந்த அரண்மனையில இத்தனை தொல்லைகள் வரும் போது சம்பந்திகள் வீட்டில இருந்து வருகிற விருந்தாளிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வருமோ..? நான் எல்லாத்தையும் யோசிக்க வேண்டியிருக்கு அம்மே.."
மகன் யோசிக்க ஆரம்பித்து விட்டதில் யாழினிக்குள் எதுவோ தொலைந்து போனதைப் போல இருந்தது.. என்றைக்கும் எதிரே நின்று பேசியிராத மருமகள் எதிர்த்துப் பேசுகிறாள்.. அம்மே, அச்சா என்று சுற்றி வந்த மகன் என் குடும்பம் என்று பிரித்துப் பேசுகிறார்.. இவை அனைத்தும்  யாரால் நிகழ்ந்தது..?
அஜந்தாவால் என்பதை ஒப்புக் கொள்ள அவளது பாட்டி மனம் மறுத்தது..
'ஆ நந்தினியாலதான்..' என்று வன்மம் வைத்தது..
வீணாவின் சீற்றத்தில் பீதியடைந்திருந்த அவந்திகா தன் குடும்பத்தினருடன் தலை மறைவாகி விட்டாள்.. மகனும் மருமகளும் பேரனுடன் சேர்ந்து கொண்டு தனிக் குடும்பமாக பிரிந்து போக நினைக்கிறார்களே என்ற சஞ்சலத்தில் அருள்மொழிவர்மன் நிம்மதியிழந்து அமைதியைத் தேடித் தோட்டத்துப் பக்கம் போனார்.. மகளுக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது என்று பல்லைக் கடித்தபடி யாழினி தன் அறைக்குப் போனாள்..
இவை எதையும் அறியாத நந்தினி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ரவிச்சந்திரனுடன் ஜீப்பில் போய் கொண்டிருந்தாள்..








Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -132
எண்ணியிருந்தது ஈடேற -132
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueeedera132.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueeedera132.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy