எண்ணியிருந்தது ஈடேற -133

133 மலர்ச்செடிகள் சூழ்ந்திருந்த ரெஸ்ட்டாரெண்டின் முன்னால் ஜீப் நின்றது.. விரக்தியாக எங்கோ வெறித்துக் கொண்டிருந்த நந்தினி ரெஸ்ட்டா...



133


மலர்ச்செடிகள் சூழ்ந்திருந்த ரெஸ்ட்டாரெண்டின் முன்னால் ஜீப் நின்றது.. விரக்தியாக எங்கோ வெறித்துக் கொண்டிருந்த நந்தினி ரெஸ்ட்டாரெண்டைப் பார்த்ததும் திகைத்தாள்..
"இங்கே எதுக்கு பாஸ் வந்திருக்கோம்..?"
"ம்ம்ம்.. விளையாட.. இறங்குவியா.."
நந்தினி குதித்து இறங்கினாள்.. மலர்ச்சியில்லாத அவள் முகத்தைக் கண்டவனுக்கு அஜந்தாவைத் த்வம்சம் பண்ணி விட வேண்டும் போல வெறி வெறியாக வந்தது..
"வா.." உள்ளே போனான்..
தனித்தனி கேபின்களாக தடுக்கப் பட்டிருந்த சோபாக்களில் எதிரும் புதிருமாக அவர்கள் உட்கார்ந்தார்கள்.. மெனுகார்டை புரட்டி பேரரிடம் ஆர்டரைச் சொல்லி விட்டு நந்தினியைப் பார்த்தான்.. சோர்ந்திருந்தாள்..
"ஐ ஆம் சாரி.." வருத்தத்துடன் சொன்னான்..
நந்தினி வியப்புடன் அவனைப் பார்த்தாள்..
"எதுக்கு சாரி கேட்கறிங்க..?"
"பாட்டி பேசினதை மனதில் வைத்துக்காதே.."
"நான் மனசில் வைத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது..?"
நந்தினி பெருமூச்சுடன் விரல்களைக் கோர்த்துப் பிரித்த வண்ணம் இருந்தாள்..
"ஏய்ய்.." ரவிச்சந்திரன் மேஜையின் குறுக்கே கை நீட்டி அவளுடைய விரல்களைப் பற்றி அழுத்தினான்..
நந்தினி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவளது கண்கள் கலங்கியிருந்ததில் ரவிச்சந்திரனுக்கு மனம் வலித்தது..
"என்னைப் பாரு.."
நந்தினி அவனைப் பார்க்கவில்லை..
"என்னைப் பார்க்க மாட்டியா..? ஏண்டி..? என் முகத்தைப் பார்க்கப் பிடிக்கலையா..?"
"வாடி, போடின்னு சொல்ல வேண்டாம்.."
"சரி.. சொல்லலை.."
"இதைப் போல நிறையத் தரம் சொல்லியாச்சு.."
"எதைப் போல..? வாடி போடின்னா..?"
"அதை விடுங்க பாஸ்.."
"எதை..?"
"வாடி, போடியை.."
"ஓகே.. விட்டாச்சு.."
ரவிச்சந்திரன் அவளது கைவிரல்களை நீவிக் கொடுத்தான்.. சிலிர்த்தவளின் பிஞ்சு விரல்களில் முத்தமிட்டான்.. அவள் கையை இழுத்துக் கொள்ள முயன்றாள்.. அவன் விடவில்லை..
"விடுங்க பாஸ்.."
"எல்லாத்தையும் விடச் சொன்னா எப்படி..? வாடி, போடின்னு பேசுகிறதை விடச் சொன்னே.. ஓகேன்னு விட்டாச்சு.. இப்பக் கையையும் விடச் சொன்னா எப்படி..? நான் உன்னைக் கை விடறதா இல்லை.."
'இவன் இப்படியேதான் பேசி வைப்பான்..' ஏக்கத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள் நந்தினி..
அவன் அழகாக இருந்து தொலைத்தான்.. அடர்த்தியான சிகையும் சிவந்த நிறமுமாக அவள் மனதை மயக்கினான்... அவள் சரியாக சாப்பிடவில்லை என்பதற்காக ஹோட்டலுக்கு அழைத்து வந்து சாப்பிட வைக்கும் அவனது கரிசனம் அவளை நெகிழ வைத்தது..
"சாப்பிடு.."
அவள் பக்கமாக தட்டுக்களை நகர்த்தி வைத்தான்.. மனமில்லாமல்தான் சாப்பிட ஆரம்பித்தாள்... ஒரு விள்ளல் உள்ளே போன பின்புதான் வயிற்றின் அகோரப் பகி அவருக்கு உறைத்தது.. படு வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.. கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்..
"தேங்க்ஸ்.." என்றாள்..
"உன் தேங்க்ஸை நான் கேட்டேனா..?" என்றான் அவன்..
ஓரளவு பசி அடங்கியதும் அவள் மெலிதாக சிரித்தாள்..
"ஹப்பா.. சிரிச்சுட்ட.." சந்தோசமாக சொன்னான் அவன்..
ஹோட்டலை விட்டு வெளியே வந்த போது மனதில்  இருந்த பாரம் குறைந்து லேசாக இருந்தது.. ஜீப்பில் போன போது..
"சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு..?
         தென்றலே உனக்கெது சொந்த வீடு..?"
என்று பாட ஆரம்பித்து விட்டாள்..
'இதுதான் இவள்..' அவன் மனம் மிருதுவானது..
'கோபத்தையும் மனத்தாங்கலையும் வெகு விரைவில் மறந்து விடும் குழந்தை குணம் கொண்டவள்.. இவளிடம் போய் பாட்டி வெறுப்புக் கொள்கிறாங்களே.. அஜந்தா என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வதா..' அவன் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஏன் பாஸ்.. இங்கே ஸ்டார் ஹோட்டல் இருக்கா..?" திடீரெனக் கேட்டாள் நந்தினி..
"எதுக்குக் கேட்கிற..?" ரவிச்சந்திரனின் கண்கள் இடுங்கின..
"உடனே வில்லன் வேசம் கட்ட வேண்டாம் பாஸ்.. உத்ராவும் வினித்தும் வரப் போகிறாங்களே.. அவங்க தங்கறதுக்கு ரூம் ரிசர்வ பண்ணனுமே.. அதுக்காக கேட்டேன்.. ஹப்பா.. ஆக்சன் ஹீரோ போல சட்டுன்னு கண் சிவந்திருது.." சிலிர்த்தாள் நந்தினி..
"நீ ரொம்ப பயந்தவதான்.."
"இல்லையா பின்னே..?"
"இந்தக் கதையை வேறு யாரிடமாவது போய் சொல்லு.."
"மோகனிடம் சொல்லவா..? அவன்தான் நான் எப்போ வருவேன்னு கையில ரோஜாப் பூவோட காத்திருப்பான்.. மலரேன்னு பாட்டுப் பாடுவான்.. மலர் டீச்சர்ன்னு கொண்டாடுவான்.."
"இப்படியே பள்ளத்தாக்கில உருட்டி விட்டேன்னு வை.. ஒரு எழும்பு கூட மிஞ்சாது.."
"ஹைய்யோ.. டெர்ரர் பாஸ் நீங்க.."
"தெரியுதில்ல.. வாயை மூடிக்கிட்டு வா.. ஐ லவ் யு சொல்கிறவனுக்குப் பதில் சொல்ல மாட்டாளாம்.. மலர் டீச்சர்ன்னு உருகுகிற இரண்டும் கெட்டானிடம் கதை சொல்லப் போவாளாம்.. என்ன..? மறுபடியும் அடி வாங்கனும்னு ஆசையாய் இருக்கா..?"
"இப்படிக்கூட ஆசைப் படுவாங்களா பாஸ்..?"
"நீ படுவ.. யாரு நீ..?"
"நந்தினி.."
அவள் கண்களைச் சிமிட்டிச் சிரித்ததை ரசித்தான்.. மலை முகடுகளில் பனிப்புகை சூழ்ந்து மிதந்ததை அவள் ரசித்தாள்.. கேரளத்தின் பசுமை அவள் மனதை தாலாட்டியது..
"உத்ராவுக்கு இந்த ஊரை ரொம்பப் பிடிக்கும் பாஸ்.."
"உனக்குப் பிடிக்கலையா..?"
"எனக்கும்தான் பிடிக்கும்.. உத்ரா தங்கறதுக்கு நல்ல ஹோட்டல் வேணுமே பாஸ்.."
"அவங்க எதுக்கு ஹோட்டலில் தங்கனும்..?"
"இதென்ன பாஸ் வம்பாப் போச்சு..? வயநாட்டுக்கு வருகிறவங்க செடி, கொடிகள் மத்தியிலேயா படுத்து உறங்க முடியும்..? குளிரில விறைச்சுப் போயிர மாட்டாங்களா..?"
"அறிவுதான் போ.. நம்ம ஊருக்கு நம்ம கெஸ்டா வருகிறவங்க எதுக்காக ஹோட்டலில் தங்கனும்..? நம்ம அரண்மனையிலே எத்தனை ரூம்ஸ் இருக்குன்னு உனக்குத் தெரியுமா..?"
"உங்க ஊர், உங்க அரண்மனைன்னு சொல்லுங்க பாஸ்.. கெஸ்ட் என்னோட கெஸ்ட்.. பொத்தாம் பொதுவா.. எல்லாத்தையும் நம்மன்னு ஒட்டுக்கு ஜாயின் அடிக்கறிங்களே.."
ரவிச்சந்திரன் முறைத்தான்.. பக்கவாட்டில் இருந்த கிடுகிடு பள்ளத்தாக்கைப் பார்த்த நந்தினி திருவாயை மூடிக் கொண்டாள்.. எதற்கும் இருக்கட்டுமென்று ஜன்னலோரத்திலிருந்து நகர்ந்து அவனை ஒட்டி உட்கார்ந்து கொண்டாள்..
"வெறும் வாய்தான்.." அவனிடம் சிரிப்பு மீண்டது..
"இதைத்தானே நான் திரும்பத் திரும்பச் சொல்றேன்..?" நீங்கதான் நம்பாம என்னை ஜான்ஸிராணி மாதிரி போகஸ் பண்றீங்க..
"அப்போ நீ ஜான்ஸி ராணியில்லையா..?"
"இல்லே சாரே.."
"அட்லீஸ்ட் அவங்க வீட்டுக்கு பக்கத்து வீடாகவாவது இருந்திருக்கிறயா..?"
"இல்லையே பாஸ்.."
"என்னத்தை போ.. நீ சுத்த வேஸ்ட் நந்தினி.."
"இதைத்தான் தினமும் நந்து சொல்வான்.."
தம்பியின் நினைவில் ஆழ்ந்தாள் நந்தினி.. தூரத்தில் எஸ்டேட் தெரிந்தது.. அங்கே காத்திருக்கும் மோகனின் நினைவில் முகம் கடுத்த ரவிச்சந்திரன்..
"உன் தம்பியின் நினைவில் மோகனிடம் குளோசாப் பழகாதே.. அவன் உன்னை அக்கான்னு நினைக்கலை.." என்று எச்சரித்தான்..
"ம்ம்ம்.."
"மனசில்லாம சொல்கிறதைப் போல இருக்கு..?"
"இது வேறயா..? எதில குற்றம் கண்டு பிடிக்கிறதுன்னு காத்திருப்பிங்களா பாஸ்..?"
"உத்ராவும் வினித்தும் நம்ம அரண்மனையிலே தங்கிக்கட்டும்.."
நந்தினி பதில் பேசவில்லை..
"என்ன ஆச்சு..? மௌனியாகிட்ட..?" விசாரித்தான் ரவிச்சந்திரன்..
"அவங்க ஹனிமூன் கப்புள் பாஸ்.."
"என் பொறாமையைக் கிளப்பறியா..?"
"ம்ப்ச்.. நான் சொல்ல வந்ததே வேற.."
"சொல்லு.. சொல்லு.."
"அவங்க சந்தோசமா இருக்கனும் பாஸ்.. அது உங்க அரண்மனையிலே கிடைக்காது.. என் கதை வேறு.. எனக்கு போக இடமில்லை.. உத்ரா அப்படியில்லை.. அவளும் வினித்தும் தங்க ஏதாச்சும் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி ஏற்பாடு பண்ணிக் குடுங்க.. ப்ளீஸ்.."
நந்தினியின் தழதழத்த குரலில் ஜீப்பை நிறுத்தி விட்டான் ரவிச்சந்திரன்.. உறுத்துப் பார்த்த அவன் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உதட்டைக் கடித்தாள் நந்தினி..
"தி கிரேட் ரவிச்சந்திரனால அவனோட அரண்மனையில கெஸ்ட்டை ரிசீவ் பண்ணி சந்தோசமா தங்க வைக்க முடியாதுன்னு நீ செர்டிபிகேட் கொடுத்திருக்கிற.. குட்.."
"பாஸ்.. நான் அப்படிச் சொல்லலை.."
"அப்படித்தான் சொன்ன.."
"ப்ளீஸ்.. டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மி.."
"நீ என்னைப் புரிஞ்சுக்க டிரை பண்ணு.. தட்'ஸ் பெட்டர்.."
"நான் சொல்ல வந்தது என்னன்னா.."
"உத்ராவும் வினித்தும் வயநாட்டு அரண்மனைக்குத் தான் வருவாங்க... தங்குவாங்க... ஹனிமூன் கொண்டாடுவாங்க... அவங்க சந்தோசத்துக்கு நான் கேரண்டி.. என் மீது நம்பிக்கை இருக்கா.. இல்லையா..?"
நந்தினியின் கண்களுக்குள் உற்றுப் பார்த்தபடி கேட்டான் அவன்.. அவள் மனம் அசைந்தது..
"உங்களை நம்பாம வேற யாரை நம்புவேன் பாஸ்..?"
ரவிச்சந்திரனின் புன்னகை விரிந்தது.. அவளது பதில் பூகம்பமாய் வெளிப்பட்டுக் கொண்டிருந்த அவனது கோபத்தை கட்டுப் படுத்தி விட்டது.. இதமான அமைதி மனமெங்கும் நிறைய அவன் இரு கைகளையும் விரித்தான்.. மறுப்பேதும் இல்லாமல் அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள் நந்தினி..
அவளின் அடைக்கலத்தில் அவன் மனம் கனிந்தது.. அவளை அணைத்து உச்சந்தலையில் முத்தம் பதித்தான்.. ஆண்மையின் கர்வம் மனமெங்கும் பரவ..
'உச்சிதனை முகர்ந்தால் - கர்வம்
                ஓங்கி வளருதடி கண்ணம்மா..'
என்று அவன் மனம் குதூகலித்தது.. வயநாட்டின் குளிர் காற்று அவர்கள் முகம் தொட்டுப் போக.. வானிலிருந்து சடசடவென மழை பொழிந்து அவர்கள் இருவரையும் நனைத்தது..
குளிர் மழை..! கொதிக்கும் ரவிச்சந்திரனின் மனதையும்.. தவிக்கும் நந்தினியின் மனதையும் குளிர்வித்த மழை..! ஒன்றுபட்ட மனதுடன் ஒன்றுபட விரும்பிய ரவிச்சந்திரனையும்.. அவனது உயரத்தையும் ஆளுமையையும் கண்டு மனதில் தாழ்வுணர்வு கொண்டு மருண்டு விலகும் நந்தினியையும் இணைந்து மகிழ்ந்த மழை..!
"ஆடை முழுதும் நனைய.. நனைய
                மழையடிக்குதடி.."
ஜீப்பின் சிடி பாடியது.. நந்தினியின் முகம் நனைத்து வழிந்த மழைத் துளிகளில் முகம் நனைந்த ரவிச்சந்திரன் கிளர்ந்தான்..
"எப்போதடி என் காதலை நீ ஏற்றுக் கொள்வ..?"

- ஐந்தாம் பாகத்தில் தொடரும்..









Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -133
எண்ணியிருந்தது ஈடேற -133
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera133.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera133.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy