எண்ணியிருந்தது ஈடேற -131

131 "ஒர்மை கொள்ளனும் ரவி.. அஜந்தா நிண்ட பெந்தல்லோ.. வேற்று மனுஷி முன்னாடி நிண்ட பெந்துவக் குறைச்சுச் சம்சாரிச்சு.. இது நன்னாயிண்...


131

"ஒர்மை கொள்ளனும் ரவி.. அஜந்தா நிண்ட பெந்தல்லோ.. வேற்று மனுஷி முன்னாடி நிண்ட பெந்துவக் குறைச்சுச் சம்சாரிச்சு.. இது நன்னாயிண்டல்லோ.." யாழினி தன் கண்டனத்தை வெளிப் படுத்தினாள்..
அருள்மொழிவர்மன் முகச் சுளிப்புடன் மனைவியை விழிகளால் அதட்டினார்.. யாழினியின் பேச்சு அவருக்குப் பிடிக்கவில்லை.. ரவிவர்மனின் மௌனப்பார்வை உணர்த்திய எதிர்ப்பை அவர் விரும்பவில்லை.. மகனின் மனம் கோணும்படி யாழினி பேசியதில்லையே.. இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்..?
அருள்மொழிவர்மனின் அதட்டலைப் பார்த்தும் பார்க்காததைப் போலப் புறக்கணித்தாள் யாழினி.. அவள் மனதில் ரவிச்சந்திரனின் மீது அதிருப்தி தோன்றியிருந்தது.. அதிகப்படியாக அவன் அஜந்தாவைப் பேசுகிறான் என்று அவள் நினைத்தாள்..
"யாரை வேற்று மனுஷின்னு சொல்கிறீங்க பாட்டி..?" அழுத்தமாக கேட்டான் ரவிச்சந்திரன்..
யாழினியின் போக்கை அவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. அஜந்தாவிற்கு ஆதரவான அவள் நடவடிக்கையை துளிர்க்கும் போதே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று அவன் நினைத்தான்.. இல்லையென்றால் அது விசச் செடியாக வேரூன்றி விருட்சமாக வளர்ந்து நின்று விடும்.. அப்போது அதை வெட்டி வீழ்த்துவது யாழினிக்குத்தான் துன்பத்தை ஏற்படுத்தும்.. அதற்கு இது மேல் அல்லவா..?
"எவரையெண்டு எண்ட கொச்சு மோன் அறிஞ்ஞு.."
"இல்லை பாட்டி.. எனக்குத் தெரியலை.."
"நினக்குத் தெரியாதெண்டு பறயாண்டாம் ரவி.. எண்ட வாயாலே அதிப் பறஞ்ஞனுமெண்டு விஜாரம் கொண்டோ..?"
"உங்க வாயால் அதைக் கேட்க ஆசைன்னே வைத்துக்கங்களேன்.."
"ஈ கொட்டாரத்தில உள்ள வேற்று மனுசி நிண்ட செக்கரட்டரிதானு.. வேற ஆரானு..?"
"ஓ.. நந்தினியைச் சொல்கிறிங்களா..?"
"ஈ பெண்குட்டியத்தான் பறஞ்ஞுண்டு நீ அறிஞ்ஞு..?"
"நந்தினி வேற்று மனுஷியில்லை பாட்டி.. என் கெஸ்ட்.. அஜந்தாதான் வேற்று மனுஷி.."
"வேண்டா ரவி.. இதி மாதிரி பறயாண்டாம்.."
"சாரி பாட்டி.. நான் சொல்லத்தான் செய்வேன்.."
"நிண்ட செக்கரட்டரிய விட நிண்ட அம்மாச்சி மோள் குறைவாயிண்டாளோ..?"
"இதில் உயர்வு குறைவுங்கிறதே இல்லை பாட்டி.. எனக்கு யார் முக்கியம், முக்கியமில்லைங்கிறது மட்டும் தான் வரும்.. அந்த வகையில் எனக்கு என் செக்கரட்டரிதான் முக்கியம்.. அவளாலே எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.. அவ உண்டு.. அவ வேலையுண்டுன்னு இருக்கிறா.. யாருடனும் வம்புக்குப் போகிறதில்லை.. யார் மனதையும் புண்படுத்தறதில்லை.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கிறதில்லை.."
"ரவி.."
"ஏன் உங்களுக்கு மனது குத்துது பாட்டி..? உங்க பேத்தி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கிறவள் என்கிறதினாலதானே..?"
யாழினிக்கு அவமானமாக இருந்தது.. நந்தினியை வைத்துக் கொண்டு ரவிச்சந்திரன் இப்படிப் பேசியிருக்கக் கூடாதுதென்று அவள் நினைத்தாள்.. இதனால்தான் நந்தினி அஜந்தாவை மட்டம் தட்டிப் பேசுகிறாள்.. அதற்கு ரவிச்சந்திரனே வழி செய்து கொடுக்கிறானே..
"அஜந்தா நிண்ட பெந்து ரவி.."
"சொந்தம் என்கிறதுக்காக எந்த அளவுக்கு பொறுத்துப் போகிறது..? வாழ்நாள் முழுவதும் பொறுத்துப் போகனும்னா.. ஐ ஆம் ஸாரி பாட்டி.. என்னால் அது முடியாது.."
"ஞானும் எண்ட கணவரும் திரவியமின்றி நின் தயவில் ஜீவிக்கிறதினாலதான எங்களோட மோள் குடும்பத்த நீ குறைவாக மதிச்சு..?"
"ஓ.."
நிஷ்டூரமாகப் பேசிய யாழினியை புதிதாகப் பார்ப்பதைப் போல பார்த்தபடி '' போட்டான் ரவிச்சந்திரன்.. அவந்திகாவின் முகத்திலும் அவள் குடும்பத்தினரின் முகத்திலும் ஒளி வந்திருந்தது... உரிமைப் போராட்டத்திற்கு யாழினி குரல் கொடுத்து விட்டாள் என்று அவர்கள் அகம் மகிழ்ந்து போனார்கள்..
மத்தாப்பூச் சுட்டுச் சுட்டுப் போடட்டுமா என்று மத்தாப்பூ கொழுத்தி வெடி வைத்து இந்த உரிமைக் குரலைக் கொண்டாட வேண்டும் போல இருந்தது அஜந்தாவுக்கு..
யோகானந்தன் உலகம் சுற்ற விரும்பினார்.. வெனிஸ் நகரத்தின் நதியில் படகில் மிதந்தபடி இந்த சந்தோசத்தைக் கொண்டாட வேண்டும்.. அதற்குப் பணம் வேண்டும்.. அதை அவருக்கு யார் கொடுப்பார்கள்..? ரவிச்சந்திரன் அவருடைய கடன்களுக்கும் அவனுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது என்று பேப்பரில் அறிவிப்புக் கொடுத்த பின்னால் ஒருவன் கூட ஒற்றை ரூபாயைக் கூடக் கடன் கொடுப்பதில்லையே.. பணத்திற்கு அவர் எங்கே போவார்..?
அபராஜிதன் டிஸ்கொதே போக வேண்டும் என்று ஆசை கொண்டான்.. அவனுடைய தாய் வழிப் பாட்டி ரவிச்சந்திரனுக்கு எதிராக உரிமைக் குரல் கொடுத்து விட்டாள்.. இனி ரவிச்சந்திரனின் அனைத்துச் சொத்துக்களையும் பிடுங்கி அபராஜிதனுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடுவாள்.. அந்த தினம் வெகு தொலைவில் இல்லை என்று அபராஜிதனுக்குத் தோன்றியது.. அதைக் கொண்டாட அவனுக்கு ஒரு பெண் போதாது.. ஐந்தாறு பெண்களுடன் அவன் டிஸ்கோ ஆட வேண்டும்..
அவந்திகாவிற்கு அப்போதே அந்த அரண்மனைக்கு உரிமைக்காரியாய் ஆகி விட்டதைப் போல இருந்தது.. வீணாவை இளக்காரமாக பார்த்தாள்.. பார், என் தாய் பேச ஆரம்பித்து விட்டாள்.. இனி சகலமும் எங்கள் கையில் என்று அவள் பார்வை அறிவித்தது.. அரண்மனையின் வேலையாள்களைக் கூட்டி அந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவள் மனது ஆசை கொண்டது..
ஆளுக்கொரு ஆசையுடன் அவர்கள் இருக்க..
"என் தயவில் நீங்களும் தாத்தாவும் இருக்க வேண்டியதில்லை பாட்டி.." என்று நிதானமாகச் சொன்னான் ரவிச்சந்திரன்..
அருள்மொழிவர்மனின் முகம் கருப்பதை ஓரக் கண்ணால் கண்டும் காணாததைப் போலத் தொடர்ந்தான்..
"உங்களுக்குன்னு தனிபங்களாவைக் கொடுக் கிறேன்.. ரப்பர் பேக்டரியையும் எழுதி வைக்கிறேன்.. நீங்க உங்க மகளின் குடும்பத்தோட அந்த பங்களாவுக்கு ஷிப்ட் ஆகிக்கலாம்.. நானும் என் குடும்பமும் நிம்மதியா இருப்போம்.."
யாழினியின் முகம் வெளிறியது.. நானும் என் குடும்பமும் என்று ரவிச்சந்திரன் சொல்லி விட்டான்.. அந்தக் குடும்பத்தில் அவளுக்கும் அருள்மொழிவர் மனுக்கும் இடமில்லை.. நுணல் தன் வாயில் கெட்டதைப் போலத் தன் வாயால் தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தாள்..
"கொச்சு மோனே.." அவள் குரல் நடுங்கியது..
"ப்ளீஸ்.. என்னை உங்க பேரன்னு சொல்லிக்க வேண்டாம்.. ஐ டோன்ட் லைக் இட்.. என்ன சொன்னீங்க..? நீங்களும் உங்க கணவரும் சொத்தில்லாம என் தயவில இருக்கிறதாலே உங்க மகளையும் அவங்க குடும்பத்தையும் நான் குறைவாக நினைக்கிறேனா..? குட்.. உங்க வாயிலிருந்தே உங்க மனதில் இருக்கிறது வெளியில் வந்து விட்டது.. உங்களுக்கு உங்க மகள்தான் முக்கியம்.. அவங்க குடும்பம்தான் முக்கியம்.. என்னையும் என் குடும்பத்தையும் அவங்க எந்த அளவுக்கு அபெக்ட் பண்ணினாலும் நீங்க அவங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க.. அப்புறம் எதுக்கு என்னிடம் பேரன் உறவுமுறையைக் கொண்டாடறிங்க..?"
"ஷெமிக்கனும் ரவி.."
"எத்தனை முறை மன்னிக்கிறது..? எனக்கு அலுத்துப் போச்சு.. நீங்க கிளம்புங்க.."
"எங்கே..?"
"உங்களுக்குன்னு நான் கொடுக்கப் போகிற பங்களாவுக்கு.. பணத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.. என் அப்பாவைப் பெற்றவங்க நீங்க.. உங்களுக்காக இல்லைன்னாலும் என் அப்பாவுக்காக உங்க செலவுகளை நான் பார்த்துக்குவேன்.. உங்க மருமகன் செலவை நீங்க பார்த்துக்கங்க.. இனிமே நாம ஒன்னா இருக்கிறது சரி வராது.."
யாழினி பயந்து போனாள்.. பேத்திக்காக அவள் பேசப் போய் தனித்து நிற்பதைப் போல ஆகிவிட்டதே.. ரவிச்சந்திரன் ஓர் வார்த்தை சொல்லி விட்டால் அது எதிர்வார்த்தை இல்லாமல் அங்கீகரிக்கப் பட்டு விடுமே..
"கேட்டோ.." கணவனிடம் முறையிட்டாள்.
"ஞான் கேட்டு வல்லதும் ஆகப் போவதில்லையல்லோ.. எண்ட கொச்சு மோனோட பிணக்கம் கொண்டு.. பிராதி கொடுத்து வழக்கு இழுத்தாயல்லோ.. நாமத் தனியா ஜீவிதம் பண்ணப் போயாகனுமல்லோ.. தயாராயிட்டு.. நினக்கும் நிண்ட கொச்சு மோளுக்கும் அதாண்ட ஆக்ரஹாம்..?"
"அம்மையைத் திட்டாண்டாம் அச்சா.."
"வேற எவரைத் திட்ட..? நின்னையோ..?"
"அச்சா.."
"நிண்ட மோளிண்ட சுபாவத்தால இதி போன்ற ஓர் திவசம் வருமிண்டு ஞான் விஜாரம் கொண்டு அவந்திகா.. அத்திவசம் இத்தினி விரைவா வருமிண்டு நினக்கலயல்லோ.."
யாரோ எதையோ பேசிக் கொள்ளுங்கள்.. எனக்கொன்றுமில்லை என்பதைப் போல ரவிச்சந்திரன் எழுந்து விட்டான்.. நடக்கும் குடும்பச் சண்டையில் தொண்டயில் ஒரு விள்ளல் கூட இறங்காமல் துயரத்தோடு உட்கார்ந்திருந்த நந்தினியிடம்..
"எஸ்டேட்டுக்கு கிளம்பனும்ங்கிற நினைவு இருக்கா.. இல்லையா..?" என்று ஓர் அதட்டல் போட்டான்..
அவசரமாக எழுந்த நந்தினி வீணாவிடமும் ரம்ய மாலினியிடமும் தலையை அசைத்து விடை பெற்றபடி கை கழுவ ஓடினாள்..
"எல்லாப் பிணக்கும் ஈ பெண் குட்டியாலதான்.." யாழினி எரிச்சலுடன் சொன்னாள்..
"எதை வைத்து அப்படிச் சொல்கிறீங்க அத்தை..?"
வீணாவின் கேள்வியில் உறைந்து போனாள் யாழினீ.. மாமியாரின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசியிராத வீணா எதிர்த்து கேள்வி கேட்டு விட்டாள்.. இது நல்லதற்கு அல்ல என்று எச்சரித்தது அவள் மனது..
ரவிச்சந்திரனும், நந்தினியும் இல்லாத டைனிங் ஹாலில் யோகானந்தன் பலகார வகைகளை காலி செய்து கொண்டிருந்தார்.. அவருக்குச் சற்றும் சளைக்காத அபராஜிதன் தன் பங்குக்கு வெட்டோ வெட்டென டிபனை வெட்டினான்.. சாப்பிட வந்தவர்களை சண்டைக் காரர்களாக்கி எதிரும் புதிருமாக விரட்டி விட்டு எதுவுமே நடக்காததைப் போல உணவில் கவனமாக இருந்தாள் அஜந்தா.. அவந்திகாவும் சும்மா இருக்கவில்லை..
நெய் தோசையையும் நேத்திரம் சிப்சையும் நொறுக்கியபடி தான் அருள்மொழிவர்மனிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள்..
வீணாவுக்கு வெறுப்பாக இருந்தது.. ரவிச்சந்திரன் மட்டும் இரும்பு மனிதனாக நிமிர்ந்து நின்றிருக்கவில்லை யென்றால் அந்தக் குடும்பத்தின் கௌவரம் கேள்விக் குறியாகியிருக்கும்.. அதைப் பற்றிய எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் யாழினி இந்தப் பேச்சுப் பேசலாமா..? பாடுபடுபவன் ஓர் வாய் உணவை உருப்படியாய் சாப்பிடவில்லை.. அவனுடன் சண்டையிட்டு ஓட்டி விட்டு ஒண்ட வந்த குடும்பம் உணக்கையாக சசிருசியாக உண்டு கொண்டிருக்கிறது.. இத்தனையும் யாராலே..? மகள், மகள் என்று அவந்திகாவிற்காக மகனின் குடும்பத்தைப் பாடாய் படுத்தும் அருள்மொழிவர்மன், யாழினியாலே.. இதில் யாழினி எல்லாச் சண்டையும் நந்தினியால்தான் வந்தது என்று ஒன்றும் அறியாத சின்னப் பெண்ணின் மீது பழி போடுகிறாள்..
"ஆரானு பறயறது..? எண்ட மோனின் பார்யாளோ.."
"நான்தான் அத்தை.. ஏன்.. நான் பேசக் கூடாதா..?"
"இத்தினி திவசமா ஞான் பறஞ்ஞா நீ வல்லதும் பறஞ்ஞதில்லையல்லோ.. அதினால ஞான் சம்சயம் கொண்டு.."
"பேசியிருக்கனும் அத்தை.. இத்தனை நாளாய் பேசாமல் இருந்ததுதான் தப்பாகிருச்சு.. எதை வைத்து அந்தச் சின்னப் பெண்ணாலதான் இத்தனை சண்டையும்ன்னு சொல்கிறீங்க..? அவ என்ன பண்ணினா..? நம்மிடம் வேலை பார்க்க வந்தா சுய மரியாதை இல்லாமல் இருக்கனும்னு சட்டம் எதுவும் இருக்கா அத்தை..? அவளைப் பேசினதுக்குத்தானே பதில் பேசினா..? அதைக் குற்றம்ன்னு நீங்களே சொல்கிறதை என்னால் நம்ப முடியலை.. நீங்க நியாயம் தெரிந்தவங்கன்னு தானே இத்தனை நாளாய் நினைத்திருந்தேன்..?"
இதுபோல நீளமாக வீணா பேசக்கூடும் என்பதை அந்தக் குடும்பத்தினர் அன்றுதான் அறிந்தார்கள்..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -131
எண்ணியிருந்தது ஈடேற -131
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera131.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera131.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy