எண்ணியிருந்தது ஈடேற -130

130 ' மலரே..! ஓ.. மலரே..!                 நீ என் மலரல்ல..      நான் உன் வண்டல்ல..                 உன் மானம் காவல் கொண்டேன...


130


'மலரே..! ஓ.. மலரே..!
                நீ என் மலரல்ல..
     நான் உன் வண்டல்ல..
                உன் மானம் காவல் கொண்டேன்..
     என்று காதல் கொண்டேன்..?'
இப்படியா ரவிச்சந்திரன் பாடினான்..? இல்லையே..
'ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
                உன் காதல் நான்தானென்று..
     அந்தப் சொல்லில் உயிர் வாழ்வேன்..'
இப்படித்தானே பாடினான்..? இருந்தும் ஏன் நந்தினி பிடி கொடுத்துப் பேச மறுக்கிறாள்..? காதலனாக நிற்பவனை காவலனாக்குகிறாளே.. அவளுக்கு மனது
என்ற ஒன்று இல்லவே இல்லையா..? இருந்தும் அது கல்லாய் இருக்கிறதா..?
"உன் மனசென்ன கல்லாடி..?" அவன் பொருமினான்..
நந்தினி பதில் சொல்லாமல் அவன் கையைப் பிடித்து மறைவிடத்திலிருந்து இழுத்து சோபாவில் உட்கார வைத்தாள்.. அவளையே அவன் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.. நந்தினி குற்றம்சாட்டும் அவனது பார்வையை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் தவித்தாள்..
"எனக்கு உன் பதில் வேணும்.." பிடிவாதமாக கேட்டான் அவன்.
"எதைப் பத்தி பாஸ்.. என் மனசு கல்லா இல்லை இரும்பாங்கிறதைப் பத்தியா..?" அமைதியாக கேட்டாள் நந்தினி..
"ஆர் யு ப்ளே வித் மி..?" ரவிச்சந்திரன் உறுமினான்..
"தி கிரேட் ரவிச்சந்திரனுடன் பிளே பண்ண முடியுமா பாஸ்.. என் மனசு கல்லில்லை பாஸ்.. அதனாலதான் நீங்க காதல் சொல்கிறதில பயந்து போகுது.."
"வாட்..? பயமா..? ஏண்டி..?"
"நான் யார், நீங்க யார் பாஸ்..? என்மேல உங்களுக்கு எப்படிக் காதல் வரும்..? நான் அழகின்னு பொய் சொல்லிராதீங்க.. எனக்கு என்னைப் பத்தித் தெரியும்.."
பேரழகிலும் பேரழகியானவள் இதைச் சொன்னதில் அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..
"முட்டாளிலும் முட்டாள்.. வடி கட்டின முட்டாள் நீதாண்டி.." பல்லைக் கடித்தான் அவன்..
"கரெக்ட்.. அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.. நீங்க பாயிண்டைப் பிடிச்சுட்டிங்க.. யாரு நீங்க..!" மகிழ்ந்து போனாள் நந்தினி..
"உன்னைப் பார்க்கிற வரைக்கும் நானாத்தாண்டி இருந்தேன்.."
ரவிச்சந்திரனின் குமுறல் நந்தினியின் மரமண்டையில் ஏறவேயில்லை.. அவள் வெகு இலகுவாக தலையைச் சரித்து அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.. ரவிச்சந்திரன் பேச்சிழந்தான்..
நந்தினியிடம் கண்சிமிட்டும் பழக்கம் உண்டு.. அவளிடமிருந்து அது உத்ராவுக்கும் தொற்றியிருந்தது.. உற்சாகம் வந்தால் சட்டென கண்சிமிட்டி விடுவாள் நந்தினி.. வயநாட்டுக்கு வந்த பின்பு குறைந்தும், மறைந்தும் இருந்த அந்தப் பழக்கம் சடுதியில் வந்து போனதில்  ரவிச்சந்திரன் அவனாக இல்லை.. அவளைக் கடித்துத் தின்பதைப் போல பார்த்து வைத்தான்..
அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் தன் போக்கில் விளக்கம் சொன்னாள் நந்தினி..
"உங்க அழகுக்கு எப்படி நான் மேட்ச் ஆக மாட்டேனோ.. அதைப்போல அறிவிலும் மேட்ச் ஆக மாட்டேன் பாஸ்.. நீங்க சொல்வதைப் போல நான் தத்திதான்.. தி கிரேட் ரவிச்சந்திரனுக்கு செக்கரட்டரியா இருக்கிறதுக்கே நான் அன்-பிட்.. இதில பெர்சனல் மேனேஜர்ங்கிறது பேராசை.. பெர்சனல் மேனேஜர் போஸ்டுக்கே அப்படின்னா உங்க காதலியா ஆகனும்னா.. ஹப்பா.. நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை.. நீங்க எங்கே..! நான் எங்கே..? மலைக்குப் பக்கத்தில் மடுவை நிறுத்தி வைச்சா மேட்ச் ஆகாது பாஸ்.. உங்களைப் பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு தமிழ்ச் சினிமாப் பாட்டு ஒன்னுதான் நினைவுக்கு வரும்.."
நந்தினி ஏற்ற இறக்கத்துடன் பேசிய விதத்தில் காதல் மயமான சினிமாப் பாடல் ஒன்றைப் பாடப் போகிறாள் என்றுதான் நினைத்தான் ரவிச்சந்திரன்.. வீணாவுக்கு தமிழ் சினிமாப் பாடல்களில் பழைய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.. ரசித்துக் கேட்பாள்.. அம்மா பிள்ளையான ரவிச்சந்திரன் எப்போதும் அவள் முந்தானையைப்
பிடித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருப்பான்.. அவள் கேட்கும் பாடல்களை அவனும் கேட்பான்.. ஏறக்குறைய அனைத்துப் பழைய தமிழ் சினிமாப் பாடல்களும் அவனுக்குத் தெரியும்.. இதைக் குறித்து ஒரு பிஸினெஸ் மேகஸினில் உலகம் சுற்றும் இளைய தலைமுறை பிஸினெஸ் ஸ்டார் பழைய தமிழ் சினிமாப் பாடல்களை விரும்பிக் கேட்பவர் என்று எழுதியிருந்தது..
அழகான பழையத் தமிழ் சினிமாப் பாடல் ஒன்றைக் கேட்கத் தயாராகி காதைத் தீட்டிக் காத்திருந்தான் ரவிச்சந்திரன்.. எந்தப் பாடலைப் பாடுவாள் என்ற எதிர்பார்ப்புடன் பட்டியல் ஒன்றைத் தயாரித்தது அவன் மனம்..
'உன்னை நான் சந்தித்தேன் - நீ
                ஆயிரத்தில் ஒருவன்..'
     இப்படிப் பாடுவாளோ..? இல்லை...
'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
                 உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..
     நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல..
            நீ இல்லாமல் நானும் நானல்ல..'
இப்படிப் பாடுவாளோ..
விழிகள் மின்ன மனதில் ஓடிய பாடல் வரிகளோடு அவன் காத்திருக்க அவளும் பாடினாள்..
"ஆகாயம் பூமி ரெண்டும் ஒன்றா..?
                நீ அந்த வானம்..!
                     நான் இந்த பூமி..!
     ஒன்றென்று யார் சொல்லுவார்..?"
"வாயை மூடுடி.."
அவன் எம்பிக் கட்டிலில் இருந்த தலையணையை உருவி அவள்மீது எரிந்தான்.. பயந்து போய் வாயை மூடித் தப்பித்தாள் அவள்..
"கொன்றுடுவேன்.." ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தவனின் விழிகளில் இருந்த கொலைவெறியில் வாயின் மீது ஒற்றை விரலை வைத்துக் 'கப்சிப்' என உட்கார்ந்து வீட்டாள் நந்தினி..
"ஏண்டி.. உனக்குச் சுட்டுப் போட்டாலும் ரொமான்ஸ் வராதா..?" அவன் நெற்றிக் கண்ணைத் திறக்க இரு இமைகளையும் திறந்து உயர்த்தி அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள் நந்தினி..
'ஏன் வராது..?' அவள் மனம் துயரம் கொண்டது..
அவன் புருவம் உயர்த்தும் வசீகரத்தில் ஒவ்வொரு முறையும் தொலைந்து போகிறாளே.. அது ரொமான்ஸ் இல்லையா..? ஜீப்பை ஓட்டிக் கொண்டிருப்பவனின் முடிக் கட்டுக்கடங்காமல் எதிர் காற்றில் அலைபாய்ந்து முன் நெற்றியில் படிந்து கொள்கின்றபோது அவன் முடிகோத அவள் மனம் துடிக்குமே.. அது ரொமான்ஸ் இல்லையா..? கடித்துத் தின்பதைப் போல அவன் பார்க்கும் பார்வையில் அவளது இதயம் படபடக்குமே.. அது ரொமான்ஸ் இல்லையா..? அவன் முத்தமிடும் போது மின்சாரம் பாய்வதைப் போன்ற உணர்வுப் பேரலையில் மூழ்கித் தவிக்கிறாளே.. அது ரொமான்ஸ் இல்லையா..?
என்ன ஒன்று.. இவற்றையெல்லாம் அவனிடம் சொல்லி அவள் மனதில் அவன் மீதான ரொமான்ஸ் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள அவளால் முடியாது.. அதற்காக அவளை உணர்ச்சிகள் அற்ற ஜடம் என்று அவன் சொல்லி விடுவானா..?
"கொஞ்சமாவது மனுசனோட ஃபீலிங்சை புரிஞ்சுக்கறியாடி.. ஜடம்..! ஜடம்..! உன்னைப் போய் லவ் பண்ணினேன் பாரு.. என்னைச் சொல்லனும்.."
அவன் தலையில் அடித்துக் கொண்டு எழுந்து போய்  விட்டான்.. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து..
"உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு அந்த மனுசனைத் தலையாலே தண்ணி குடிக்க வைச்சு விரட்டி விட்டுட்டேயேடி நந்தினி.. இப்ப உனக்குத் திருப்தியா..?" என்று கேட்டு ஒற்றை விரலை உயர்த்தி..
"கொன்றுடுவேன்.." என்று எச்சரித்தாள் நந்தினி..
"அம்மை ஊன் கழிக்க விளிச்சு.." என்று ஓமனா வந்து நின்ற போதுதான் தான் இன்னும் குளித்து எஸ்nட்டிற்குப் போகத் தயாராகவில்லை என்ற நினைவு வந்தது நந்தினிக்கு..
"அச்சச்சோ.." என்று கைகளை உதறினாள்..
"எந்தா அம்மே.." என்றாள் ஓமனா..
"ஞான் இன்னும் குளிக்கலையல்லோ.." நந்தினி குளியலறைக்குள் ஓடிக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்..
அவளது ஓட்டத்தை ரசித்த ஓமனாக்குட்டி..
"அம்மைக்கு அனைத்தும் விளையாட்டல்லோ.." என்று முகவாயில் கை வைத்தபடி நந்தினி கிளம்பி வரத் தாமதமாகும் என்கிற செய்தியைச் சொல்லப் படியிறங்கினாள்..
டைனிங் ஹாலில் காத்திருந்த வீணா ஓமணாவின் பின்னால் நந்தினி வருகிறாளா என்று எட்டிப் பார்த்தாள்..
"நந்தினி மேடம் தயாராயிட்டு அம்மே.. இப்போ வரும்.." என்றாள் ஓமனா..
"எப்போ வரும்..? உச்சிப் பொழுதிலோ..?" கிண்டலாகக் கேட்டாள் அஜந்தா..
ரவிச்சந்திரன் விழியுயர்த்திப் பார்த்த ஓர் மௌனப் பார்வையில் இறுகிப் போனவளாக வாய்க்குள் மொணமொண என அவனைத் திட்டித் தீர்த்தபடி பலகார வகைகளை மொக்கத் தொடங்கினாள்..
"உச்சிப் பொழுதில் அல்ல அஜந்தா.. புலரிப் பொழுதிலேயே வந்தாச்சு.." என்றபடி அங்கே பிரசன்னமான நந்தினியைப் பார்த்து '' வென வாய் பிறந்தாள் ஓமனா..
"நந்தினி மேடம் இப்பத்தான் நீராடப் போயி..?"
"நீராடாமலே வந்துட்டாளோ என்னவோ.." வாய் திறந்தாள் அஜந்தா..
அன்றுதான் பூத்த புதுமலரைப் போல இருந்த நந்தினி அஜந்தாவின் கருத்துரையால் பாதிக்கப் படாதவளாக..
"நீ அப்படித்தான் வந்திருக்கயா அஜந்தா..?" என்று கேட்டு வைத்தாள்..
அஜந்தாவுக்கு கோபம் பொங்கியது.. என்ன திமிர் என்று யாழினியைப் பார்த்தாள்.. நீ வாயை வைத்துக்கிட்டு சும்மா இருக்கனும் என்ற கடுப்புடன் அவளை முறைத்தாள் யாழினி.. முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்ட அஜந்தாவைப் பார்க்க யாழினிக்குச் சங்கடமாக இருந்தது.. அவள் முன்னால் அவளுடைய பேத்தி மட்டம் தட்டப் படுகிறாள்.. அதை ஏனென்று கேட்க அவளுக்கு வாய் வரவில்லை.. அது ஏன்..?
நந்தினியை வெறுப்புடன் பார்த்தாள்.. இந்தப் பெண் வந்து பின்பு ரவிச்சந்திரன் அதிகமாக அஜந்தாவை கடிந்து கொள்கிறான் என்று யாழினிக்குத் தோன்றியது..
'இவள் ஏன் இங்கே வந்து தொலைத்தாள்..?'
வீணாவிடமும் ரம்ய மாலினியிடமும் கதை பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்தினி யதேச்சையாக யாழினியின் பக்கம் பார்த்து விட்டு அவளுடைய வெறித்த பார்வையில் திகைத்தாள்..
'பாட்டி ஏன் இப்படிப் பார்க்கிறாங்க..?'
சங்கடத்துடன் அவள் புன்னகைத்த புன்னகையை கண்டு கொள்ளாமல் அருள்மொழிவர்மனிடம் எதையோ கேட்பதைப் போல முகம் திருப்பிக் கொண்டாள்
யாழினி.. நந்தினிக்கு முகத்தில் அடித்ததைப் போல இருந்தது..
"என்ன யோசனை நந்தினி..?"
நந்தினியின் முழங்கையைத் தட்டினாள் வீணா.. கவனம் கலைந்தவளாக வீணாவைப் பார்த்தாள் நந்தினி..
"இன்னொரு தோசை வைக்கவான்னு கேட்டுக் கிட்டே இருக்கேன்.. நீ பதில் பேசாம இருக்க.. என்னம்மா ஆச்சு..?" கனிவுடன் கேட்டாள்..
"அதானே.. எதைக் கண்டுக்கலைன்னாலும் டிபனை அப்படிக் கண்டுக்குவியே.. நீயா பதில் பேசாம இருக்கிறது..?" ஏளனமாக சொன்னாள் அஜந்தா..
நந்தினியின் பார்வை உயர்ந்து யாழினியின் மீது படிந்தது.. இப்போது நான் என்ன செய்யட்டும் என்று கேட்ட அவள் பார்வையில் கோபம் கொண்டாள் யாழினி..
"எவரிடம் பகடி பறயறதிண்டு ஓர் வரைமுறை இல்லையோ... நினக்குச் சமமான மனுஷியிடம் சம்சாரிக்கனுமல்லோ.. இல்லையெண்டா.. சம்சாரிக் காண்டாம்.. கேட்டோ.." அஜந்தாவிடம் சீறினாள்..
'என்ன மாதிரியான கண்டிப்பு இது..' நந்தினிக்கு அங்கிருந்து எழுந்து போய்விட வேண்டும் போல இருந்தது..
டைனிங் ஹாலில் அமைதி நிலவியது.. வீணாவின் முகம் இறுகியிருந்தது.. நந்தினியின் கன்றிய முகம் கண்டு மனம் நொந்தாள்.. முதன் முறையாக மாமியாரின் பேச்சுக்கு அவள் முகம் அதிருப்தியை பிரதிபலித்ததில் கோபாவேசம் கொண்டாள் யாழினி..
'அனைத்தும் ஈ பெண்குட்டியால..' நந்தினியின் மீது அவள் மனம் வன்மம் கொண்டது..
"அஜந்தாவுக்குச் சமமான மனுஷி வேண்டும்ன்னா அவ அவளோட அப்பா வீட்டுக்குத்தான் போயாகனும் பாட்டி.. அங்கேதான் இவளைப் போல சார்ட்மைண்ட்
பீபுள் இருப்பாங்க.. இது என்னோட அரண்மனை பாட்டி.. என்னைச் சேர்ந்தவங்களுக்கு பரந்த மனப்பான்மைதான் இருக்கு.. குறுகின மனது இல்லை.."
ரவிச்சந்திரன் இலகுவாகச் சொன்னதில் யாழினியின் மனது காயப்பட்டது.. அது என்ன.. நந்தினியை மறைமுகமாக ஒர்வார்த்தை சொன்னவுடன் அஜந்தாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கிறான்.. அதுவும் நந்தினியின் முன்னிலையில் அஜந்தாவை குறைவாகப் பேசுகிறான்.. எப்படி அவன் அப்படிப் பேசலாம்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -130
எண்ணியிருந்தது ஈடேற -130
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera130.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera130.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy