எண்ணியிருந்தது ஈடேற -129

129 "நீ தானா.. ?" அஜந்தாவைப் பார்த்ததில் நந்தினிக்கு அளவு கடந்த நிம்மதி உண்டானதில் ஆச்சரியப்பட்டுப் போனாள் அஜந்தா.. &...


129


"நீ தானா..?"
அஜந்தாவைப் பார்த்ததில் நந்தினிக்கு அளவு கடந்த நிம்மதி உண்டானதில் ஆச்சரியப்பட்டுப் போனாள் அஜந்தா..
'என்னைப் பார்த்து ரீலீஃப் ஆகிறா.. என்னவாம்..? பிரண்ட் ரிகஸ்ட் கொடுத்து வளைத்துப் போட்டுக்கலாம்ன்னு பிளான் பண்றாளோ..'
அஜந்தா சந்தேகத்துடன் நந்தினியை ஏற இறங்க பார்த்தாள்.. அவளுக்கு என்ன தெரியும்..? அந்த அரண்மனையில் அவந்திகாவையும், அஜந்தாவையும் தவிர மற்ற பெண்கள் சுவாதீனமாக நந்தினியின் அறைக்குள் நுழைந்து விடுவார்கள்.. நந்தினியால் அதைத் தடுக்க முடியாது.. அப்படி நுழைபவர்கள் ரவிச்சந்திரனைப் பார்த்து விட்டால் கதை கந்தலாகி விடுமே..
அவந்திகாவும், அஜந்தாவும் அப்படி உள்ளே நுழைந்து விட மாட்டார்கள்.. என் பாதம் பட உன் அறைக்கு என்ன தகுதியிருக்கிறது என்ற துச்சப் பார்வையுடன் விரல் சொடுக்கி அவளை வெளியே அழைப்பார்கள்..
நந்தினி நிம்மதியுடன் வெளியே வந்து அறைக்கதவை இறுக்கி மூடினாள்.. அதை இகழ்ச்சியாகக் கவனித்த அஜந்தா..
"உன் ரூமில வைரமும் வைடூரியமும் கொட்டிக் கிடக்குது பாரு.. நான் வந்து அள்ளிக்கிட்டுப் போகப் போறேன்.. வேலை பார்க்க வந்தவளைப் போலவா நீ பிஹேவ் பண்ற..?" என்று எரிந்து விழுந்தாள்..
"நான் எப்படி பிஹேவ் பண்ணினா உனக்கென்ன..? நீயா எனக்கு வேலை கொடுத்திருக்கிற..?" நந்தினி நிதானமாகக் கேட்டாள்..
"அது என்ன.. வா, போன்னு பேசற..?"
"நீ மட்டும் வாங்க, போங்கன்னா பேசற..? எது கொடுக்கிறாயோ அதுதானே உனக்குத் திருப்பிக் கிடைக்கும்..?"
"ஏய்ய்..?"
"அடங்கறியா..? இப்ப எதுக்காக வந்திருக்கிற.. அதைச் சொல்லு முதலில்.."
"அதட்டலெல்லாம் பலமாய் இருக்கு..? எல்லாம் என் அத்தான் கொடுக்கிற இடம்.. வந்த புதிதில் வாங்க, போங்கன்னு மரியாதையாய் பேசிய வாய் இன்றைக்கு என்னமாய் கிழியுது..!"
"உன் வாயை விட அதிகமாக் கிழியலை.. மரியாதை கொடுத்தா அதைக் காப்பாத்தி வைத்துக்கனும்.. என்னவோ கொடுத்து வைத்திருக்கிற மாதிரி ஆணவத்தில ஆடினா இப்படித்தான்.."
"எப்படித்தான்..?"
"போ, வா தான்.. இன்னும் போடி, வாடின்னு மாறலைன்னு சந்தோசப் பட்டுக்க.."
"அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியா..?"
"நான் வரலை.. நீதான் என் ரூம் வாசலுக்கு வந்திருக்கிற.. என்ன கழுதைக்கு வந்திருக்கிறன்னுதான் புரியலை.."
"என் அத்தானோடு என்னடி கொஞ்சிக் குழாவல் வேண்டிக் கிடக்கு..?"
'இவ எப்போப் பார்த்தா..?'
நந்தினிக்குத் 'திக்' கென்று ஆகி விட்டது.. அறைக் கதவு பூட்டித்தானே இருந்தது..? பூட்டிய அறைக்குள் அவளும் ரவிச்சந்திரனும் தழுவிக் கொண்டதை
இவள் பார்த்திருக்க முடியாதே.. இவளுக்கென்ன லேசர் பார்வையா இருக்கு..?
இப்போது அஜந்தாவை நந்தினி சந்தேகமாக பார்த்து வைத்தாள்..
"என்ன.. இப்படி முட்டைக் கண்ணை முழிச்சுக்கிட்டுப் பார்க்கிற..?"
"இல்லை.. சேரவள நாட்டுப் பெண்குட்டி.. செந்தமிழில் மாட்டாடுதேன்னு பிரமிச்சுப் போய் பார்க்கிறேன்.."
"கிண்டல்..?"
"உன்னிடம் கிண்டல் பண்ணிட்டாலும்.. ம்ஹீம்.. ஜோக்கடிக்க நல்ல நேரம் பார்த்த போ.. எனக்கு இருக்கு ஆயிரம் வேலை.."
"என்ன வேலை..? என் அத்தானுக்கு சொக்குப் பொடி போடற வேலையா..?"
"இது கூட நல்லாயிருக்கே.. நாளைக்கே ஸ்டார்ட் பண்ணிட்டாப் போச்சு.."
"ஹேய்.. எவரிடம் நொனா பறஞ்ஞு..?"
"ஆரம்பிச்சுட்டியா..? ஏன் இந்த கொலைவெறி..? நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது..? செந்தமிழில பேசிவை திடிர்ன்னு எதுக்கு மலையாளத்துக்கு தாவற..?"
"அது என் இஷ்டம்.."
"கேட்கிறதுக்கு எனக்கு கஷ்டம்.. ஒழுங்காத் தமிழில் பேசு.."
"யார்கிட்டப் பொய் சொல்ற..?"
"ஓ.. இதையா நீ பறஞ்ஞு..? பாருடா.. உன்கிட்ட யாராவது பொய் சொல்வாங்களா..? யாரு நீ..? பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவளாச்சே.. பொய்கிட்டேயே பொய் சொல்லக் கூடாதுன்னு எனக்கும் தெரியும் அஜந்தா.. மனசிலாயி.."
"யு.. யு.. யு.."
வார்த்தைகள் வராமல் தவித்தாள் அஜந்தா.. ஆத்திர மிகுதியில் வார்த்தைகள் அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டன..
"நான் நான்தான்.. நீயும் நீதான்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?"
ஒதுங்கிப் போகிறவளைத் துரத்தித் துரத்தி வம்பிழுத்து அதை யாழினிப் பாட்டியின் காதுகள் வரை கொண்டு போய் வம்பை அணைய விடாமல் ஊதிப் பெரிதாக்கும் அஜந்தாவை நந்தினி வெறுத்தாள்.. யாழினி நந்தினியிடம் சரியாகப் பேசுவதில்லை.. தன்னிலை விளக்கம் கொடுக்க நந்தினி முயன்றபோது..
"எந்துக்கு..? நீ ரவியிண்ட செக்கரட்டரி.. ஈ கொட்டாரம் அவனின்ட கொட்டாரம்.. எனிக்கு நீ விளக்கமளிக்க தேவையில்லா.. கேட்டோ.." என்று சொல்லி விட்டாள்..
அந்தக் கொதிப்பை மனதில் பதுக்கி வைத்திருந்த நந்தினியிடம் கதவைத்தட்டித் தானாகக் சிக்கிக் கொண்டாள் அஜந்தா.. அவள் என்றுமில்லாத திருநாளாக தோட்டத்துக்குப் பக்கம் போனாள்.. அங்கே ரவிச்சந்திரன் நந்தினியின் தோள்களைப் பற்றிக் குனிந்ததைப் பார்த்து விட்டாள்.. உடனடியாக அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று அவந்திகாவைத் தேடிப் போய் அழைத்தால் அவள் அறை ஜன்னல் வழியாக தோட்டத்தை எட்டிப் பார்த்துவிட்டு அங்கே யாருமில்லையே என்று புருவங்களை நெறித்தாள்.. இப்போதுதானே பார்த்தேன் என்று அஜந்தாவும் பார்த்தாள்.. அவந்திகா சொன்னதைப் போல அங்கே யாரும் இல்லை.. அஜந்தாவுக்கு பிரமையென்று அவந்திகா சொல்லி விட்டாள்.. மனதுக்குள் யாழினியிடம் இன்னொரு பிராதி (புகார்) யைக் கொண்டு சென்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதில்லையென்று அவந்திகா சந்தோசப் படுகிறாளோ என்று அஜந்தா சம்சயப் பட்டாள்..
'இப்போத்தானே பார்த்தேன்..'
அதை நந்தினியிடம் கேட்டுவிட வேண்டுமென்று அவளைத் தேடிப் போய் அறைக்கதவைத் தட்டிச் சண்டைக்குப் போனால்.. வாடி, வா.. இதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்.. நீயாக வலிய வந்து சிக்கிக் கொண்டாயா என்ற வெப்பராளத்துடன் (கொதிப்புடன்) நந்தினி அவளை வாங்கு, வாங்கு என வாங்கிக் கொண்டிருந்தாள்.. இவளெல்லாம் எனைப் பேசுவதா என்ற வெப்பராளத்தில் அஜந்தாவுக்குப்
பேச்சுத் தொண்டையில் சிக்கிக் கொள்ளத் திக்கித் திணறினாள்..
"எண்ட அத்தானோட நினக்கு என்னடி ஜோலி..?"
"உனக்கு மண்டையில மூளையே இல்லையா..? களிமண்தான் இருக்கா..? உன் அத்தானிடம்தான் எனக்கு ஜோலி (வேலை) மறந்துட்டியா..?"
"ஏய்ய்.. ஞான் ஆ பணியைக் கேக்கலையல்லோ.."
"நீ இ பணியைக் கேட்டாலும் ஊ பணியைக் கேட்டாலும் என் பதில் இதுதான்.. நான் அவரிடம்தான் வேலை பார்க்க வந்திருக்கிறேன்.. ஸோ.. அவரிடம்தான் எனக்கு வேலை.."
"எந்து ஜோலி..? தோட்டத்திலே இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கிற ஜோலியோ..?"
'ஓ.. இவ தோட்டத்தில அவன் என் தோளைத் தொட்டதைப் பார்த்துட்டு வந்து வம்பிழுக்கிறா..'
அறைக்குள் ரவிச்சந்திரன் இருப்பதை அறியாமல் வந்திருக்கிறாள் என்பதில் நந்தினிக்குள் நிம்மதி வந்தது..
"மத்தவங்க கொஞ்சுகிறதை ஒளிஞ்சிருந்து பார்த்திருக்கயே.. உனக்கு வெட்கமே இல்லையா..?" வேண்டுமென்றே கடுப்பேற்றினாள்..
"நாணத்தப் பத்தி நீ பறஞ்ஞு..?"
"ஞான்தான் பறஞ்ஞு.. நீயெல்லாம் அத பறயாண்டாம்.. கேட்டோ.."
"நந்தினி.."
"எதுக்கு இப்போ சவுண்டு விடற..?"
"ஞான் தாத்தா, பாட்டியிடம் போயி.."
"போ..."
நந்தினி வலதுகையை நீட்டி வழியைக் காண்பித்தாள்..
"நினக்கு எந்து தைரியமானு..? பாட்டியிண்ட ஞான் பிராதி தந்தா எந்தா நடக்கும்ன்னு அறிஞ்ஞு..?"
"அறியும், அறியும்.. பாட்டி அன்வர்ஷிக்கனும்னு (விசாரிக்கனும்னு) ஆள் அனுப்புவாங்க.. உன் ஆசை அத்தான் போய் நிற்பார்.. அதுக்கு மேலே என்ன நடக்கும்ன்னு ஞான் செப்பித்தான் நீ அறியனுமோ..?"
"உன்னை.." அஜந்தா பல்லைக் கடித்தாள்..
"என்னை..? ம்ம்ம்..?" நந்தினி தூண்டினாள்..
"இரு.. இரு.. ஈ அஜந்தா யார்ன்னு வெகு விரைவில் உனக்குக் காட்டறேன்.."
"அட..! இந்த அரண்மனையில் நீ யார்ன்னு உனக்கேத் தெரியாதா..? இது தெரியாம என்கூட சண்டைக்கு வந்துக்கிட்டு இருக்கிற.. போம்மா.. போய் ஜோலிக் கழுதை ஏதாச்சும் இருந்தா பாரு.. போ.. போ.."
நந்தினி 'ஜெயம்' திரைப்படத்தின் கதாநாயகியைப் போலத் தலை கவிழ்ந்து கை நீட்டிப் போகச் சொன்னதில் கொந்தளிப்புக் கொண்ட அஜந்தா அதை அவந்திகாவிடம் கொட்ட ஓடோடிப் போனாள்..
"ஒருவழியாய் போய் தொலைச்சா.. மகராசி.. சண்டை போட நல்ல நேரம் பார்த்தா.."
அலுப்புடன் கதவை விரிய திறந்து வைத்து விட்டு உள்ளே சென்றாள் நந்தினி.. இனி யார் வந்தாலும் அவளுக்கு கவலையில்லை.. பூட்டிய அறைக்குள் அவளும் ரவிச்சந்திரனும் பேசிக் கொண்டிருந்தால்தான் அது தவறாக தெரியும்.. திறந்திருக்கும் அறைக்குள் ரவிச்சந்திரன் இருந்தால் எந்தவிதமான வில்லங்கமும் வராது.. நந்தினியின் அறைக்கு அவன் வருவதும் அவளுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதும் சகஜமான ஒன்றுதான்..
"ஊஃப்.."
கன்னங்களைக் குவித்து தலையை ஆட்டி வாய் விட்டுச் சொன்னபடி ரவிச்சந்திரனைப் பார்த்த நந்தினி திகைத்தாள்..
அவள் எந்த இடத்தில் அவனை நிற்க வைத்து விட்டுப் போனாளோ.. அந்த இடத்தில் அசையாமல் சுவர் அலமாரியின் மறைவில் நின்று கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்..
அவன் அப்படி மறைந்து நிற்பவன் அல்ல..
"இங்கேயேவா நிற்கறிங்க..?" வியப்புடன் கேட்டாள் நந்தினி..
"இங்கேதானே என்னை நிற்கச் சொன்ன..?" என்றான் அவன்..
"நான் சொன்னதுக்காகவா ஒளிஞ்சு நிற்கறிங்க..? காட்..!" கன்னத்தில் கையை வைத்து விழிகளை விரித்தாள்..
"நீ சும்மா சொல்லியிருந்தா போடின்னு சொல்லிட்டு உன் பின்னாடியே வந்திருப்பேன்.. உன் மேல் பிராமிஸ் பண்ணிச் சொல்லிட்டயே.. எப்படி மீறுவேன் நந்தினி..?" ஆழ்ந்த குரலில் கேட்டான் ரவிச்சந்திரன்..
நந்தினி அசைவற்று நின்று விட்டாள்.. எதிரே நிற்பவன் எவராலும் அடக்க முடியாத புயல் போன்றவன்.. கரை போட முடியாத காட்டாறு.. அருள்மொழிவர்மனையே தன் கண்ணசைவில் கட்டி வைத்திருப்பவன்..
அவளது கண்ணசைவிற்குக் கட்டுப்பட்டு நின்றிருக்கிறான்.. பயம் என்பதையே அறியாதவன் அவள்மீது ஆணை வைத்து 'ஒளிந்து நில்' என்று சொல்லி விட்டாள் என்பதற்காக ஒளிந்து நிற்கிறான்..
"பாஸ்.." தழுதழுப்புடன் அவனை அழைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து விட்டாள்..
அவன் மீதான கோபத்தை அவள் மறந்து விட்டதில் அவன் முகத்தில் மென்மை படர்ந்தது.. அவனை அவள் மன்னித்து விட்டதில் பிரியம் கொண்டான்.. அவனுடைய தவறுகளைப் பொருட்படுத்தாமல் மன்னிப்பை அள்ளித் தரும் அந்த ரோசக்காரியின் மீதான பிரேமம் அவனுக்கு அதிகரித்தது..
"பார்த்தியா.. நீ கிழிச்ச கோட்டை நான் தாண்டலை.. இப்பவாவது என்னைக் காதலிக்கிறேன்னு சொல்ல மாட்டியா..?" அவள் காதோரமாக இதழ் பதித்துக் கேட்டான்..
அவனை விட்டு விலகிய நந்தினியின் கண்களில் கலக்கம் இருந்தது.. மறுப்பாக தலையை அசைத்தாள்..
"எனக்கு ஏதாவது ஒன்னுன்னா ஓடி வந்து உங்க கைக்குள்ள புகுந்துக்கனும்னு தோணுது பாஸ்.. உங்க பக்கத்திலே இருக்கும் போது பயமில்லாம பாதுகாப்பா ஃபீல் பண்றேன்.. தனியா இருந்தா பயமா இருக்கு.. ஏதேதோ தோணுது.."
மிரண்டு விழித்தவளின் கண்களில் காதல் இல்லாததில் அவன் பெருமூச்சு விட்டான்..










Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -129
எண்ணியிருந்தது ஈடேற -129
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera129.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera129.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy