எண்ணியிருந்தது ஈடேற 128

128 பரபரவெனத் தன் துணிமணிகளை டிராவல் பேக்கில் அடுக்கிக் கொண்டிருந்த நந்தினியின் மனம் வலித்தது.. கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்க ந...


128


பரபரவெனத் தன் துணிமணிகளை டிராவல் பேக்கில் அடுக்கிக் கொண்டிருந்த நந்தினியின் மனம் வலித்தது.. கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்க நேர்ந்து விட்டதில் மனம் துடித்தது..
'என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..' பொருமினாள்..
'ஒன்று இவன் மட்டமாகப் பேசுவான்.. இல்லைன்னா இவனோட அத்தைமகள் நான் சோற்றுக்கில்லாம இந்த வயநாட்டு அரண்மனையில அண்டிப் பிழைக்க வந்திருக்கேன்னு செப்பிக்கிட்டு வருவா.. போதும் இந்தப் பிழைப்பு.. பேசாம தஞ்சாவூருக்கே திரும்பிப் போயிடலாம்.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமேன்னு சும்மாவா பாடி வைச்சார் கவிஞர் கண்ணதாசன்..? நான் இருக்க வேண்டிய என் வீட்டிலே இருந்திருக்கனும்.. அதை விட்டுட்டு பெல்ட் மன்னனின் பெல்ட் அடிக்குப் பயந்து வீட்டை விட்டு ஓடி வந்ததுக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..'
அவளது கை அடிபட்ட கன்னத்தைத் தடவிப் பார்த்தது.. ஐவிரல்களும் பதிந்திருந்த விரல் தடங்கள் கண்ணாடியில் கன்றிச் சிவந்து தெரிந்தன.. வலித்தது..
"இந்த அடிக்கே இந்த வலி வலிக்குதே.. இதிலே இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்ன்னு நீயாத் தலையைக் குடுக்கறியே நந்தினி.. இதுக்கும் மேலே ஒரு அடி அடிச்சாலும் நீ தாங்குவியா.." கண்ணாடியைப் பார்த்துக் கேட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தாள்..
'எதற்கெடுத்தாலும் கை நீட்டுகிறான்.. என்னை மனுஷின்னு நினைத்தானா.. இல்லை சேரளம் எஸ்டேட்டின் லாயத்தில் கட்டியிருக்கும் குதிரைன்னு நினைத்தானா..? இவன் அடிக்குப் பெல்ட் அடியே தேவலாம்.. அடியே நந்தினி..! எங்கே போனாலும்
அடி வாங்கிச் சாகனும்னு உன் தலையிலே எழுதி வைத்திருக்கேடி..'
நந்தினிக்குத் துயரமாக இருந்தது.. சிறுவயதி லிருந்து சீராட்டிப் பாராட்டி வளர்க்கப் பட்டவள்.. கடிந்து ஓர் வார்த்தை கேட்டதில்லை.. மேகநாதன் கண்டிபாக இருப்பதைப் போலப் பாவனைதான் செய்வார்.. கடிந்து பேச மாட்டார்.. அப்படி வளர்ந்தவள் தெரியாத்தனமாக இந்த வயநாட்டு அரண்மனையில் வந்து மாட்டிக் கொண்டு சீரழிகிறாள்..
மூக்கை உறிஞ்சியபடி அடுத்த செட் துணியை சுவர் அலமாரியிலிருந்து எடுத்துத் திரும்பாமல் பேக்கில் திணிக்கப் போனால் அவளது கையிலிருந்து துணி உருவப் பட்டது..
"பேசாமப் போயிரு ஓமனா.. செமத்தியான மூட் அவுட்டில இருக்கேன்.. இப்போப் பார்த்து அம்மே.. மே.. மேன்னு கத்தினேன்னு வைய்யு.. குரல்வளையை நெறிச்சுருவேன்.."
பொரிந்து தள்ளியபடி திரும்பிப் பார்க்காமல் துணியை உருவப் போனாள்.. துணி வரவில்லை..
"இப்ப என்னத்துக்கு டிரஸ்ஸைப் பிடுங்கற..? ஞான் எண்ட ஊருக்குப் போயி.. மனசிலாயி.."
ஓமனாவிடமிருந்து பதில் வரவில்லை.. நந்தினிக்கு ஆயாசமாக இருந்தது.. ஓமனாவின் அன்புத் தொல்லைக்கு ஒரு அளவே இல்லையா..? நந்தினியால் வயநாட்டு அரண்மனையில் நிரந்தரமாக இருந்துவிட முடியுமா..?
"சொன்னாப் புரிஞ்சுக்க ஓமனா.. இங்கே நான் கெஸ்டாத்தான் வந்தேன்.. என்னைக்கிருந்தாலும் நான் திரும்பிப் போகனும்ன்னு உனக்குத் தெரியும்தானே.. எதுக்காக அடம் பிடிக்கற..? டிரஸ்ஸைக் கொடுத்திரு தாயி.."
அதற்கும் ஓமனாவிடமிருந்து அசைவில்லாமல் போனதில் நந்தினி ஆத்திரத்துடன் திரும்பினாள்.. ஓமனாவை மாட்டு மாட்டு என்று மாட்ட நினைத்தவளுக்குப் பேச்சு வரவில்லை.. தொண்டையிலேயே வார்த்தைகள் சிக்கிக் கொண்டன..
அவளிடமிருந்து துணியைப் பறித்துக் கையில் வைத்திருந்த ரவிச்சந்திரன் டிராவல் பேக்கை அவன் பக்கமாக இழுத்து எட்டிப் பார்த்து விட்டு..
"மூட்டை கட்ட ஆரம்பிச்சுட்டியா..? எங்கே போகிறதா உத்தேசம்..?" என்று புருவங்களை உயர்த்தினான்..
அவளது விழிகளை நேருக்கு நேர் சந்தித்த அவன் விழிகளில் தன்னம்பிக்கை ததும்பிக் கொண்டிருந்தது.. உற்றுப் பார்த்த அவனது உல்லாசப் பார்வையும்.. இதழ்களில் நெளிந்த கள்ளச் சிரிப்பும் அவனது புருவம் உயர்த்துதலில் அவள் மயங்கிப் போய் விடுவாள் என்பதைக் கணித்து வைத்திருந்ததை அறிவித்தன..
'இவனைப் பார்க்கக் கூடாது..'
பார்த்துத் தொலைத்தாள்...
'மடச்சியைப் போல மயங்கக் கூடாது..'
மயங்கித் தொலைத்தாள்..
வெற்றிப் புன்னகையுடன் அவளையே பார்த்தபடி அருகில் வந்தவன் அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி..
"என்னை விட்டுப் போயிடுவியா..?" என்று குழைந்தான்..
அவன் விழிகள் என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..? உன்னால் முடியுமா என்று சவால் விட்டன.. அது முடியாது என்பதில் சோர்ந்து போனாள் நந்தினி..
இது அவள்தானா..?
"உத்ரா.. அவன் அடிப்பான் என்பதில் வலியை விட எனக்கான அவமானம் அதிகம்டி.. இதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்கிற.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் என்கிற ஒரே காரணத்துக்காக அவனிடம் நான் அடிவாங்கினா அது என் சுயமரியாதையில் விழுகிற அடியில்லையா..? அப்போ நான் நானா இருக்க மாட்டேண்டி.. என்மீது எனக்கே மரியாதை இருக்காது.." என்று உத்ராவிடம் செஞ்சியில் புலம்பி அழுதாளே.. அந்த நந்தினியாகத்தான் இப்போதும் இருக்கிறாளா..? அந்த ரோசமும், சுயமரியாதையும் எங்கே போனது..?
"கோபம் வந்தாத் திட்டு.. கேட்டுக்கறேன்.. விட்டுட்டுப் போகனும்னு மட்டும் நினைக்காதே.." அவன் நெருங்கினான்..
'பக்கத்தில் வர்றானே..' நந்தினி கலவரத்துடன் பின் வாங்கினாள்..
அவனது புருவம் உயர்த்துதலில் வீழ்ந்து வைக்கிறவள் அவன் தொட்டால் பாகாய் குழைந்து விடும் அபாயம் இருக்கிறது..
'அப்படியேதும் ஆகித் தொலைத்து விடக் கூடாது..'
அவளுக்குள் அபாய சங்கு ஊதியது.. நந்தினி களைத்துப் போன மனதுடன் சுவரில் சாய்ந்து கண் மூடி நின்றாள்.. அவளது தோள்களில் அவன் விரல்கள் படிந்தன.. அவளது முகம் அவனுடைய மூச்சுக்காற்றை உணர்ந்தது.. இமைகளில் அவனது இதழ்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தாள்..
'முத்தம் கொடுக்கிறானே..'
அவளுக்குள் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிக் குவியல்களை அவளால் அடக்க முடியவில்லை.. நீலிமலையின் புல்வெளியில் அவன்மீது சரிந்திருந்த
அந்த நொடிகளின் சுகம் மீள்வதை உணர்ந்தாள்.. சிறு புள்ளியாக அவளுள் தோன்றிய மயக்கம் உடலெங்கும் வியாபிக்க கிறக்கத்துடன் உதட்டைக் கடித்தாள்.. கீழுதட்டில் பல் பதிந்ததில் அவன் விரல் அதைத் தடவிக் கொடுத்தது..
"ம்ப்ச்.. வேண்டாம்.. அலட்டிக்காதே.." மிருதுவாக அவளது நெற்றியில் முத்தமிட்டான்..
அவனைத் தள்ளிவிட வேண்டும் என்று அவன் மார்பில் அவள் கை பதிக்க.. அவளது அந்த உள்ளங்கையை பூப்போலப் பிடித்துத் தன் கைக்குள் அடக்கி அதற்கும் ஓர் முத்தம் கொடுத்தான்..
'என்னை விட்டுத் தொலைடா..'
இதழ்களை அசைத்து உச்சரிக்க முடியாமல் அவளது இதழ்களை அவனது இதழ்கள் மென்மையாக ஆக்ரமித்து முரட்டுத்தனத்திற்கு இழுத்துச் சென்றன..
ஆவேசத் தழுவல்.. ஆழ்ந்த முத்தம்.. விடுபட முடியாத ஆழிப் பேரலை.. அடியாழத்தில் அவள் அமிழ ஆரம்பித்தாள்.. எதிர்ப்புக்கள் வலுவிழந்து போன நிலையில் அவன் மார்பில் முகம் புதைத்துத் தழுவிக் கொண்டாள்.. அவன் முதுகில் படர்ந்த அவளது கரங்கள் அணைக்கவும் முடியாமல் விலக்கவும் தெரியாமல் அங்கும் இங்குமாக அலை பாய்ந்தன..
"நந்தினி.."
அவளது கழுத்தில் முகம் பதித்தவனின் வெப்ப மூச்சுக்காற்று அவளது காதோர மடலைச் சுட்டது..
"ஏண்டி என்னைப் படுத்தற..?"
வழக்கமான பழி போடல்.. வழக்கமான சுடு வார்த்தைகள்.. வழக்கமான அடி.. பின்.. வழக்கமான தழுவல்.. வழக்கமான கேள்வி..
'இவனுக்கு இதுவே பிழைப்பாகப் போய் விட்டது..'
அறையில் காலிங்பெல் ஒலித்ததில் நந்தினி விதிர்த்துப் போய் விலகினாள்.. பதட்டத்துடன் அறைக் கதவைப் பார்த்தாள்.. உள்புறமாகத் தாழிடப் பட்டிருந்தது..
'நல்லவேளை.. யாரும் பார்க்கலை..'
நிம்மதியடைய முடியாமல் காலிங் பெல்லை அடிப்பது யார் என்ற பயம் எழுந்தது..
அது யாராக இருந்தாலும் தாழிடப் பட்ட அறைக்குள் அவளும் ரவிச்சந்திரனும் சேர்ந்து இருப்பதைப் பார்த்து விட்டால் என்ன ஆவது..? அவளை என்னவென்று நினைப்பார்கள்..? எப்படி அவள் மற்றவர் முகத்தில் விழிப்பாள்..?
'எல்லாம் இவனால் வந்தது..'
அழுகையும் ஆத்திரமுமாக அவனை முறைத்தாள்.. சற்றுமுன் அவளை ஆக்ரமித்திருந்த மயக்கம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப் போயிருந்தது..
பயமெல்லாம் அவளுக்குத்தான்.. அவனுக்கு எதுவுமேயில்லை அலட்டிக் கொள்ளாமல் கதவை திறக்கப் போனான்..
"என்ன காரியம் செய்கறீங்க..?" தாழ்ந்த குரலில் அவள் சீறினாள்..
"எதுக்கு இந்த ஆங்க்ரி..?" என்றான் அவன்..
"உங்க தலை..!" அவள் தலையில் அடித்துக் கொண்டாள்..
"என் தலையைச் சொல்லிட்டு நீ உன் தலையில அடித்துக்கற.." கரிசனத்துடன் அவள் தலையைத் தடவிக் கொடுக்க முனைந்தான் ரவிச்சந்திரன்..
"ரொம்பத்தான் அக்கறை.." ஆத்திரத்துடன் அவன் கையைத் தள்ளி விட்டாள் நந்தினி.
"வொய்..? நான் அக்கறைப்படக் கூடாதா..?"
"எதுக்கு இந்த அக்கறை..?"
"உன் தலை வலிக்குமே.."
"ஆஹாஹா..! அதைக் கன்னத்தைப் பெயர்த்தவர் சொல்லக் கூடாது.. அக்கறைப் படுகிறாராம் அக்கறை.. யாருக்கு வேண்டும் உங்க அக்கறை..?"
"உனக்கு வேண்டாமா..?"
"வேண்டவே வேண்டாம்.."
"என் அக்கறை ரொம்பக் காஸ்ட்லிம்மா.. தி ஃபேமஸ் சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரனோட அக்கறை தனக்குக் கிடைத்து விடாதான்னு எத்தனை பெண்கள் ஏங்கிக்கிட்டு இருக்காங்க தெரியுமா..?"
"ஏன் தெரியாது..? அதான் கோழிக்கோடில ஒன்னு.. இந்த அரண்மனையிலே இன்னொன்னுன்னு நான் பார்த்துக்கிட்டே இருக்கேனில்ல.."
"இரண்டைத்தானே பார்த்திருக்க.. இந்த உலகம் பூராவும் நிறைய இருக்காங்க.. ஒவ்வொருத்தரையாப் பார்த்தேன்னு வை.. அசந்து போயிருவ.."
"எனக்கெதுக்கு அந்த அசத்தல்..? உங்க அக்கறையைக் கேக்கறவங்கள நான் பார்க்கவும் வேணாம்.. அசரவும் வேணாம்.. பெருமையடிக்க நல்ல நேரம் பார்த்தீங்க போங்க.."
"போகத்தான் நீ விட மாட்டேங்கறியே.."
"உங்க மேல ஆசைப்பட்டு இருக்கச் சொல்லலை.. உங்களையும் என்னையும் பூட்டின ரூமுக்குள்ள வைத்து மத்தவங்க பார்த்துட்டா என்ன ஆகும்..?"
"நமக்கு மேரேஜ் ஆகும்.."
தீர்க்கமான பார்வையோடு அவன் சொன்னான்.. நந்தினியின் விழிகளில் மின்னல் வந்து போனது.. கடந்து போன மின்னலை அவன் கவனித்திருக்கக் கூடாது என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்..
"அப்படியொரு கிரிட்டிக்கலான சிச்சுவேசன் உண்டாச்சுன்னா நீ என்னை அவாய்ட் பண்ண முடியாதுல்ல..? என்னிடமிருந்து தப்பிக்கவும் முடியாது.. மேரேஜ் பண்ணித்தான் ஆகணும்.."
அவன் விழிகள் ஒளிர்ந்ததில் அப்படியொரு இக்கட்டான நிலையை அவன் உருவாக்கி விடுவானோ என்று பயந்து போனாள் நந்தினி.. அவசரமாக அவனை இழுத்து அலமாரியின் கதவுகளுக்கு இடையில் நிற்க வைத்து..
"என்மேல் ஆணை.. நீங்க இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது.." என்று சொல்லி விட்டுக் கதவைத் திறக்க ஓடினாள்..
திறந்த கதவுகளுக்கு அப்பால் அஜந்தாவின் முகம் தெரிந்ததில் நந்தினிக்கு அப்பாடா என்றிருந்தது..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற 128
எண்ணியிருந்தது ஈடேற 128
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera128.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera128.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy