எண்ணியிருந்தது ஈடேற -127

127 நீச்சல் குளத்தில் மிதந்த செயற்கை அன்ன பொம்மைகள் இயற்கையாய் அன்னங்கள் மிதப்பதைப் போலவே இருந்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த...


127


நீச்சல் குளத்தில் மிதந்த செயற்கை அன்ன பொம்மைகள் இயற்கையாய் அன்னங்கள் மிதப்பதைப் போலவே இருந்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..
ரவிச்சந்திரனின் அரண்மனைத் தோட்டம் வெகு அழகாக இருந்தது.. கேரளத்தின் இயற்கையழகைச் சிதைக்காமல் செடி, கொடிகளை அழகுற அமைத்து.. இடைப்பட்ட புல் வெளியைச் சீராக வெட்டி விட்டு ஆங்காங்கே மேடு பள்ளங்களுடன் அதியற்புதமாக இருந்தது அந்தத் தோட்டம்.. புதர்ச் செடிகளை பல வடிவங்களில் கத்தரியால் செதுக்கியிருந்ததைப் பார்க்கப் பார்க்க அவளுக்குத் தெவிட்டவில்லை.. ஆங்காங்கே நீருற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன... வயநாட்டில் நீருற்றுகளுக்கா பஞ்சம்..?
நந்தினியை மயக்கி இழுத்து வைத்திருந்தது தோட்டம்.. எப்பொழுது பொழுது விடியும் என்று காத்திருப்பவள் பொழுது விடிந்தவுடன் ஸ்வெட்டரின் மீது சால்வையைப் போர்த்திக் கொண்டுத் தோட்டத்திற்கு ஓடி வந்து விடுவாள்.. வெயிலில் குளிர் காய்ந்தபடி கால் வலிப்பதைப் பொருட் படுத்தாமல் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருப்பவளை வேலைக்குக் கிளம்பும் உத்தேசம் இருக்கிறதா இல்லையா என்று அரட்டி கிளம்ப வைப்பான் ரவிச்சந்திரன்..
நண்பகலில் உணவுக்கு அரண்மனைக்கு வரும் போதும் சாப்பிட்டவுடன் தோட்டத்திற்கு வந்து விடுவாள்.. ரவிச்சந்திரன் பின்னாடியே வந்து சப்தம் போட்டு இழுத்துச் செல்வான்.. பிற்பகலில் வேலை முடிந்து அரண்மனைக்கு வந்து விட்டால் இருட்டும் வரை தோட்டத்திலேயே குடியிருப்பாள்..
"அப்படி இங்கே என்னதான் இருக்கு..?" ரவிச்சந்திரன் தோட்டத்தின் மீதும் பொறாமைப் படுவான்..
"எப்பவுமே கையில் இருக்கிறதோட மதிப்பு நமக்குத் தெரியாது பாஸ்.." என்பாள் நந்தினி.
"அதை நீ சொல்கிறயா..?" ஒரு தினுசான குரலில் வினவி அவளை சோதித்து வைப்பான்..
நந்தினியால் பேச முடியாது.. உதட்டைக் கடித்துக் கொள்வாள்.. தீட்சண்யம் மிக்க அவன் பார்வையை அவளால் எதிர் கொள்ள முடியாது.. தலையைக் குனிந்து கொள்வாள்..
அவனுக்கும் அவளுக்கும் இடையில் நடந்த உணர்ச்சிப் போராட்டத்தில் அவள் கரைந்து கொண்டிருந்தாள்.. மின்மினிப் பூச்சிகளின் கண் சிமிட்டல்களைப் போல நூதனமான இன்பம் நிறைந்த உணர்வுக் குவியலுக்குள் அவள் புதைந்து கொண்டிருந்தாள்.. முள்ளாக அவன் சாடினாலும் அவனை ஏன்  அவளால் வெறுக்க முடியவில்லை என்ற நுட்பமான மனோதத்துவம் நிரம்பிய கேள்விக்கு அவளிடம் பதிலில்லை..
வயநாட்டின் இயற்கையழகு அவளை கட்டிப் போட்டது.. கேரளாவின் கடவுளின் தோட்டம் என்று கொண்டாடப்படும் வயநாட்டில் அவள் வாசம் செய்கிறாள் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை.. பிறந்து வளர்ந்த தஞ்சை.. அருகிலிருக்கும் பூர்விக கிராமம்.. படிக்கப் போன சென்னை.. உத்ராவின் திருமணத்தைச் சாக்கிட்டுப் போன செஞ்சி.. இவைதான் அவள் பார்த்திருந்த ஊர்கள்.. கேரளாவிற்கு வந்து அவள்
விரும்பும் இயற்கையழகை ரசித்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் மலைத்துப் போவாள்..
பச்சைக் கம்பளம் விரித்ததைப் போன்ற கேரளத்தின் பசுமை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.. மிதமான வெயில்.. முகத்தைத் தொட்டுப் போகும் குளிர்காற்று.. எப்போதும் கொட்டும் மழையென்று வயநாட்டின் அழகே தனித்துவம் கொண்டதாக இருந்தது.. அடாது மழை பெய்தாலும் விடாது குடை பிடித்துத் தோட்டத்தில் உலா வந்து ரசிப்பாள்.. இரவுப் பொழுதுகளில் அறையின் ஜன்னலோரமாக சோபாவை இழுத்துப் போட்டுக் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மழையில் குளித்துக் கொண்டிருக்கும் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள்..
அறையின் ஹீட்டரும், போர்த்திக் கொண்டிருக்கும் கம்பளியும் கதகதப்பைக் கொடுக்கக் கொட்டிக் கொண்டிருக்கும் வயநாட்டின் மழையை இரவில் ரசிப்பது பெரும் சுகம்..
அன்று மழையில்லாமல் வெயிலுடன் இருந்த தோட்டம் அவளை வா,வா என்று அழைத்தது.. வெயிலில் குளிர் காய்ந்தபடி நீச்சல் குளத்தின் கரையிலிருந்த சாய்வான மர பெஞ்சில் சாய்ந்து கால்களை ஆட்டியபடி செயற்கை அன்னங்களை ரசித்துக் கொண்டிருந்தவளை ரசித்துப் பார்த்தான் ரவிச்சந்திரன்.. காலையில் எழுந்ததும் சோம்பல் முறித்தபடி அறையின் ஜன்னலைத் திறந்து தோட்டத்தைப் பார்த்தால்.. அங்கே நீச்சல் குளத்தின் பக்கத்தில் நந்தினி உட்கார்ந்திருக்கிறாள்.. கால்களை ஆட்டியபடி செயற்கை அன்னங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தவளின் குழந்தைத்தனம் அவனை ஈர்த்தது.. உடனே நந்தினியின் பக்கத்தில் பறந்து போய் உட்கார்ந்து வம்பிழுக்க விரும்பினான்..
"சாய் கொண்டு வந்து.." ஓமனா வந்து நின்றாள்..
ஓமனா கொண்டு வந்திருந்த டீயை வாங்கிக் குடித்தபடி..
"நந்தினிக்கு டீ கொடுத்தியா..?" என்று வினவினான்..
நந்தினியின் பெயரைக் கேட்டதும் ஓமனாவின் முகம் மலர்ந்தது விட்டது.. அஜந்தாவின் பெயரைக் கேட்டால் இவள் முகம் எப்படி மாறும் என்று யோசித்துப் பார்த்தான்.. சிரிப்பு வந்தது..
"புலரியிலேயே கொடுத்திட்டன் சாரே.." என்றாள்..
"ஓ.." காலிக்கப்பைக் கொடுத்துவிட்டு நடந்தான்..
படிகளில் வேக வேகமாக இறங்கித் தோட்டத்துக்குப் போன போது நந்தினி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.. அவளின் பின்புறமாகப் போய்க் கண்களைப் பொத்த வேண்டும் என்று சப்தம் எழுப்பாமல் சென்றவன்.. நந்தினியின் போனில் ஒலித்த ஆண்குரலைக் கேட்டதும் அப்படியே நின்று விட்டான்.. நந்தினி படு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாள்..
"ஹைய்யோ.. இங்கே எவ்வ்வ்..வளவு அழகாய் இருக்கிறது தெரியுமா..? நீங்க வந்து பார்க்கனுமே.. அசந்து போயிருவீங்க.."
"நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.. தினமும் நீங்க வர்ணிக்கிறதைக் கேட்கிறப்ப எனக்கும் அங்கே வரனும்னு ஆசையாகத்தான் இருக்கு.."
"அங்கேயிருந்துக்கிட்டே ஆசைப்பட்டா எப்படி..? இங்கே வந்து பார்த்தா இல்ல தெரியும்.."
"வர்றேன்.. வர்றேன்.."
"வர்றேன்.. வர்றேன்னா எப்போ வரப் போறிங்க..? நானும் தினமும் வர்லாம் வா.. வர்லாம் வான்னு கூவிக்கிட்டுத்தான் இருக்கேன்.. அங்கேதான் ஒரு ஆக்சனையும் காணோம்.."
"எவரி ஆக்சனுக்கு ஒரு ரியாக்சன் இருக்குமில்ல.. அதை நினைத்தாத்தான் டெர்ரரா இருக்கு.."
"எப்படி, எப்படி..? எங்க ரியாக்சனைக் கண்டு பயமாமா..? யாருகிட்டக் காது குத்தறிங்க..?"
"ஹா.. ஹா.. நீங்கள்ளாம் யாரு..? பயமா இருக்காதா..?"
"பயமா இருக்காமா..? இருக்கு உங்களுக்கு.."
அதற்கு மேல் காது கொடுத்துக் கேட்க முடியாமல் நந்தினியின் கையிலிருந்த போனைப் பறித்தான் ரவிச்சந்திரன்.. மறுமுனையில் ஆண்குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே போனை கட் பண்ணி விட்டான்..
"என்ன காரியம் செய்கறிங்க.. அவர் என்னன்னு நினைத்துக்குவார்..?" நந்தினி பதறினாள்..
"அவரா..?" ரவிச்சந்திரன் மூர்க்கமானான்..
அவர்கள் நின்று கொண்டிருப்பது வயநாட்டு அரண்மனையின் தோட்டத்தில் என்பதையும் மறந்து நந்தினியின் தோள்களைப் பிடித்து உலுக்கினான்..
"எவன்டி அவன்..? போனிலேயே இந்தக் கொஞ்சல் கொஞ்சறியே.. நேரில் பார்த்தா எப்படியெல்லாம் கொஞ்சுவ..? வயநாட்டுக்கு வர்லாம் வா, வர்லாம் வான்னு கூவிக்கிட்டு இருக்கறியா..? அவ்வளவு ஆசையா அவன் மேலே..? இருக்கு அவனுக்குங்கற.. என்னத்தைடி வைத்திருக்க..?"
கோபம் வந்தால் அவன் நாகரிகத்தின் எல்லைகளை அனாசியமாகக் கடப்பான் என்பதை அறிந்திருந்தும் நந்தினியால் அவன் பேசுவதைத் தாங்க முடியவில்லை.. ஒரு நொடியாவது அவள் யாருடன் பேசப் போகிறாள் என்று நினைத்துப் பார்க்கிறானா என்றிருந்தது அவளுக்கு.. எதற்கெடுத்தாலும் சந்தேகம்.. அவள் யாருடன் பேசினாலும் சந்தேகம் என்றிருந்தால் எப்படி..? அவளை அவன் இப்படித்தான் கணித்து வைத்திருக்கிறானா..?
"வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதீங்க பாஸ்.." அவள் குமுறினாள்..
"உன் வாயிலே வந்துச்சேடி.. ஆக்சன் பத்திப் பேசற.. அவன் ரியாக்சனை நினைத்துப் பயமா இருக்குங்கிறான்.. எப்படிடீ ரியாக்ட் பண்ணுவ..?"
"ப்ளீஸ்.. மைண்ட் யுவர் டங்.."
"மைண்ட் யுவர் பிஸினெஸ்ன்னு சொல்றியா..?"
"நான் அப்படிச் சொல்லலை.. பட்.. நீங்க பேசுகிற விதத்தைப் பார்த்தா அப்படிச் சொன்னாலும் தப்பில்லைன்னுதான் தோணுது.."
"என்னடி சொன்ன..?"
ரவிச்சந்திரன் அடிப்பான் என்பதை எதிர் பார்த்திருந்ததால் கண்களை இறுக்கி மூடி அவனது அடியை மௌனமாக ஏற்றுக் கொண்டாள் நந்தினி.. அவளுக்காக எவ்வளவோ செய்திருக்கிறான்... அடைக்கலம் கொடுத்திருக்கிறான்.. மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் தாய்பறவை சிறகுக்கடியில் காத்து நிற்பதைப் போலக் காத்து நின்றிருக்கிறான்.. இத்தனைக்கும் மேலாக அவன் சொன்ன காதலை ஏற்றுக் கொள்ள மறுத்தவளை வற்புறுத்தாமல் பொறுமை காக்கிறான்..
இத்தனை செய்தவனின் அடியை அவள் பொறுத்துக் கொண்டால்தான் என்ன..? அதனால் அவள் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டாள்..
அடிவாங்கிப் பழக்கமில்லை என்பதில் வலித்தது.. கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.. அதைப் பார்த்தும் ரவிச்சந்திரனின் ஆத்திரம் அடங்க வில்லை.. அவள் எப்படி இன்னொரு ஆணிடம் கொஞ்சிப் பேசலாம் என்ற கொதிப்பில் இருந்தான்..
"எதுக்காக அவனை வரச்சொல்லி இந்தக் கெஞ்சு கெஞ்சற..? என்ன பிளான் பண்ணியிருக்கிற..? அவனோடு ஓடிப் போக பிளான் பண்ணியிருக்கியா..?"
"ஷட் அப்.." நந்தினி அங்கிருந்து போக முயன்றாள்..
"ஏய்ய்.." அவள் கைபற்றி நிறுத்தி உறுமினான் ரவிச்சந்திரன்..
"நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ போய்க்கிட்டு இருக்கிற..? என்னடி நினைத்துக்கிட்டு இருக்கிற..?"
நந்தினி பதில் சொல்லாமல் தன் கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.. அவன் பிடிதான் இரும்புப் பிடியாய் இருக்குமே.. கையை விடுவித்துக் கொள்ள முடியுமா..?
"நான் ரவிச்சந்திரன்டி.. கொன்று புதைத்து விடுவேன்.."
"அதைச் செய்து விடுங்க.." நந்தினியின் உதடுகள் துடித்தன..
புல்தரையில் கிடந்த நந்தினியின் செல்போன் ஒலித்தது.. நந்தினியின் கையை விடாமல் குனிந்த ரவிச்சந்திரன் செல்போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்..
"வாட் ஹேப்பன் நந்தினி..? போனை எதுக்காக கட் பண்ணிணீங்க.." மறுமுனையில் ஆண்குரல் கேட்டது..
"ஹீ ஆர் யு..?" கர்ஜித்தான் ரவிச்சந்திரன்..
"ஐ ஆம் வினித்.. ஹீ ஆர் யு..? இது நந்தினியின் போனாச்சே.. அவங்க எங்கே..?"
"வினித்..?"
ரவிச்சந்திரன் நந்தினியின் கையை விட்டு விட்டான்.. உதட்டைக் கடித்தபடி நின்ற நந்தினியின் முகத்தைப் பார்த்தவனின் பார்வை மன்னிப்பை இறைஞ்சியது..
"யெஸ்.. வினித்தான் பேசறேன்.."
"ஐ ஆம் ரவிச்சந்திரன்.. ஹௌ ஆர் யு..?"
"ஃபைன் சார்.."
"உத்ரா எப்படியிருக்காங்க..? மேரேஜ் நல்லபடியா முடிஞ்சிருச்சுன்னு என் பிரண்ட் சொன்னான்.."
"ஆமாம் சார்.. மறுவீட்டு விருந்து, குலதெய்வ கோவில் பொங்கல், சொந்த பந்த வீடுகளுக்கு விருந்துக்கு போய் வரதுன்னு எல்லா ஃபார்மாலிட்டிஸீம் முடிஞ்சாச்சு.. ஹனி மூனுக்கு வயநாட்டுக்கு வருகிற பிளானில் இருக்கிறோம்.. உத்ரா நந்தினியைப் பார்க்கனும்னு ஆசைப்படறா.."
"ஓ.. பெண்டாஸ்டிக்.. யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் வினித்.. உங்க ஹனிமூன் எங்க வயநாட்டில்தான்..
எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க.. கோழிக்கோடில் பிக் அப் பண்ணிக்கிறேன்.."
"தேங்க் யு சார்.. நெக்ஸ்ட் வீக் கிளம்பி வர்றோம்.."
"ஓகே.. சீ யு.."
போனைக் கட் பண்ணி விட்டு நிமிர்ந்த ரவிச்சந்திரன் அங்கே நந்தினி இல்லாததில் திகைத்தான்..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -127
எண்ணியிருந்தது ஈடேற -127
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera127.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera127.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy