எண்ணியிருந்தது ஈடேற -126

126 யாழினியின் குன்றலைத் தெள்ளத் தெளிவாக அவளது முகம் பிரதிபலித்ததில் சங்கடம் கொண்டாள் வீணா.. அவளுடைய மரியாதைக்குரிய மாமியாரைக் கம்ப...


126


யாழினியின் குன்றலைத் தெள்ளத் தெளிவாக அவளது முகம் பிரதிபலித்ததில் சங்கடம் கொண்டாள் வீணா.. அவளுடைய மரியாதைக்குரிய மாமியாரைக் கம்பீரமாகப் பார்க்கத்தான் அவள் விரும்பினாள்.. பெற்ற மகளின் பொருட்டு யாழினி குன்றிப் போகும் தருணங்களில் எல்லாம் வீணாவின் மனதில் இரக்கம் ததும்பும்.. இதுபோல மாமியாருக்கு நேரக்கூடாது என்று மனதார விரும்புவாள்.. அதைப் புரிந்து கொள்ளாமல் அவளால்தான் எல்லாமும் என்பதைப் போல அவந்திகாவும், அவந்திகாவின் குடும்பத்தினரும் எதிரியைப் பார்ப்பதைப் போல வீணாவைப் பார்த்து வைப்பார்கள்.. அவர்கள் தான் அருள்மொழிவர்மனிடமும் யாழினியிடமும் மூட்டிக் கொடுப்பார்கள்.. அதை மறைத்து வீணாதான் ரவிச்சந்திரனிடம் மூட்டிக் கொடுத்துத் தாத்தா பாட்டியை எதிர்த்துப் பேச வைக்கிறான் என்பதைப் போல பேசி வைப்பார்கள்..
அன்றும் அதுபோல்தான் நிகழ்ந்தது... அஜந்தாவினால்தான் பிரச்னை வந்திருக்கிறது என்பதை மறந்து அஜந்தாவும், அவந்திகாவும் ஆத்திரப்பட்டார்கள்..
"நோக்கனும் அம்மே.. நிங்க கொச்சு மோனிண்ட செக்கரட்டரி நிங்க கொச்சுமோளை பெகுமானக் குறைவாப் பறஞ்ஞு.. அதி நிங்க கொச்சு மோனுக்கு வல்லிய
திண்டு இல்லியாம்.. கேட்டோ.. ரவியிண்ட செக்கரட்டரிய நிங்க கொச்சுமோள் எந்தாண்டு பறஞ்ஞதுதான் தெற்றாம்.. கேட்டோ.. ஞானும், நிங்க கொச்சு மோளும் ஈ கொட்டாரத்தில எரப்பாளிகளாம்.. ஜீவிதம் பண்ண ஸ்தலம் இல்லாதவர்களாம்.. நிங்க கொச்சு மோன் பறஞ்ஞு.. கேட்டோ.."
கேட்டோ, கேட்டோ என்று அவந்திகா கேட்ட கேள்விகளில் யாழினியின் உயிர் துடித்தது.. அவளுடைய மகளும், பேத்தியும் வயநாட்டு அரண்மனையில் எரப்பாளிகளா..? (பிச்சைக்காரர்களா..?)
"நீ சம்சாரிக்கிறது எவ்விதத்தில நியாயம் ரவி..? ஆ பெண்குட்டி நின்னிடம் ஜோலி பார்க்க வந்து.. அவளும் அஜந்தாவும் ஒந்நுண்டு பறஞ்ஞு...?"
"இல்லையே பாட்டி.. நந்தினியும் அஜந்தாவும் ஒன்றுன்னு நான் சொல்லவே இல்லையே.. சொல்லவும் மாட்டேன்.. நந்தினி பெரியவங்களிடம் மரியாதையாய் இருப்பா.. யாரிடமும் வம்புக்குப் போக மாட்டா.. படிச்ச படிப்புக்கேத்த வேலையைப் பார்த்துக்கிட்டுத் தன் உழைப்பில வாழ்கிறா.. அவளும் அஜந்தாவும் ஒன்றா..? இவளைப் பற்றி நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கனுமா..? என்றைக்காவது இவ என் அம்மாவிடமும் மத்த பெரியவங்களிடமும் மரியாதையாய் பேசிப் பழகி நீங்க பார்த்திருக்கீங்களா..? சட்டம்தான் பேசுவா.. உட்கார்ந்து சாப்பிடுகிற குற்ற உணர்ச்சி
மனசில இருக்குங்கறிங்க..? இல்லவே இல்லை.. எப்பப் பார்த்தாலும் வம்பு இழுக்கிறது.. இதுநாள் வரைக்கும் வீட்டில் இருந்தவங்க கிட்டதான் வம்பிழுத்தா.. இப்ப விருந்தாளிகளிடமும் வம்பிழுக்கிறா.. எனக்கு வருகிற கோபத்துக்கு.."
ரவிச்சந்திரன் பற்களை நறநறத்ததில் அஜந்தாவை அடித்து வைத்து விடுவானோ என்று பயந்து போனாள் யாழினி.. அவந்திகாவுக்கும் அதே பயம்தான் என்பது மகளை இழுத்துத் தன் பின்னால் மறைத்துக் கொண்டதிலிருந்து தெரிந்தது..
யாழினிக்குச் சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது... ரவிச்சந்திரனுக்குக் கோபம் வந்தால் கைநீட்டி விடுவான் என்ற பயம் மனதில் இருக்கிறதுதானே.. இவ்வளவு பயம் இருக்கிறவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..?
"கேட்டுக்கங்க பாட்டி.. இது என் அரண்மனை.. இங்கே என்னோட விருந்தாளிகள் நிம்மதியாத் தூங்க முடியலைன்னா நானும் இங்கே வந்து தங்கிப் போகிறதில எந்த அர்த்தமும் இல்லை.. நாளைக்கே எஸ்டேட் பங்களாவுக்கு நானும், என் அப்பாம்மா, தங்கையும் ஷிப்ட் ஆகிக்கறோம்.. எங்க விருந்தாளிகளை அங்கே தங்க வைத்துக்கலாமில்ல..? வம்பிழுக்க யாரும் இருக்க மாட்டாங்க.. இந்த அரண்மனையில தாத்தாவும், நீங்களும் உங்க மகளின் குடும்பத்தோட நிம்மதியா ஜீவிதம் பண்ணுங்க.. செலவைப் பற்றிக் கவலைப்படாதீங்க.. நான் பார்த்துக்கறேன்.. என் தாத்தா, பாட்டிக்கு ஒரு குறைவுமில்லாம பார்த்துக்கிறது என் கடமையல்லோ.. இனிமே சேர்ந்து இருக்கிறது சரி வராது.."
"ஷெமிக்கனும் ரவி.." யாழினி நடுங்கி விட்டாள்..
ரவிச்சந்திரன் இல்லாத அரண்மனை எப்படி அரண்மனையாகும்..? வயநாட்டில் அருள்மொழிவர் மனையும் யாழினியையும் யார் மதிப்பார்கள்..? ரவிச்சந்திரன் எங்கு இருக்கிறானோ அங்குதான் அருள்மொழிவர்மனின் பாரம்பர்ய ராஜகுலப் பெருமை நிலைத்து நிற்கும்.. அவன் எஸ்டேட் பங்களாவுக்குப் போனால் அவனோடு அவருடைய குலப் பெருமையும் சேர்ந்தல்லவா நகர்ந்து விடும்..?
அவந்திகா மட்டுமா அவர்களின் பிள்ளை..? ரவிவர்மன் இருக்கிறாரே.. தாய் சொல்லைத் தட்டாத பிள்ளை..! தந்தை சொல்லே மந்திரம் என்று வாழும் பிள்ளை..! தங்கைக்கொரு கீதம் பாடும் பிள்ளை..! அவர் போல யாருண்டு..?
அருள்மொழிவர்மன் ஓர் ஆலமரம்.. அவரது நிழலில் ரவிவர்மனின் சுயம் மறைந்தது.. புகழ் மங்கியது.. அவர் அருள்மொழிவர்மனின் மகன் என்றே அடையாளம் காணப்பட்டார்.. தனித்து எதையும் செயலாற்ற முடியாமல் அருள்மொழிவர்மனின் கரம் அவரை இறுக்கிப் பிடித்திருந்தது.. அந்த அரண்மனைக்குத் தலைவராக அருள்மொழிவர்மனே இருந்தார்.. மகனின் தோளுக்குத் தலைமைப் பதவியை மாற்றிக் கொடுக்கவில்லை.. ரவிவர்மனும் அதைக் கேட்கவில்லை..
அதுதான் அவந்திகாவிற்குச் சாதகமானதாக இருந்தது.. குடும்பத்தின் அனைத்து அதிகாரங்களையும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் தாய், தந்தை..! பெற்றவர்களின் சொல்லை மீறாத தமையன்..! அவந்திகா வயநாட்டு அரண்மனையின் வருமானங்களையும், சொத்துக்களையும் சூறையாடினாள்.. அதைக் கேள்வி கேட்கவும், தடுத்து நிறுத்தவும் ரவிச்சந்திரன் பிறந்து வருவான் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லை.. அருள்மொழிவர்மன் மூலம் ரவிவர்மனைக் கட்டுப் படுத்துவதைப் போல ரவிச்சந்திரனைக் கட்டுப்படுத்தி விடலாம் என்று இறுமாப்புக் கொண்டிருந்தாள்.. ரவிச்சந்திரன் வரள, வளர அவளது இறுமாப்பு சுக்கு நூறாகத் தகர்ந்து பொடிப்பொடியாகி விட்டது..
ரவிச்சந்திரன் ஆணையிடுபவனாக இருந்தான்.. ஆணைகளுக்கு அடிபணிபவனாக இல்லை.. அருள்மொழிவர்மன் என்ற ஆலமரத்தின் கீழ் வளராமல்.. விலகிச் சென்று இமயமலையாக உயர்ந்து நின்றான்.. ரவிவர்மனின் மகன், அருள்மொழிவர்மனின் பேரன்
என்று அடையாம் காணப்படாமல் தி கிரேட் ஃபேமஸ் ரவிச்சந்திரன்.. ஸ்டார் ஆஃப் தி பிஸினெஸ் வெர்ல்டு.. கேரளத்து ராஜகுமாரன்.. ஆணழகன்.. என்றெல்லாம் அடையாளம் காணப்பட்டான்.. அருள்மொழிவர்மனும் ரவிவர்மனும் ரவிச்சந்திரனின் தாத்தா, அப்பா என்று அடையாளம் காணப்பட்டார்கள்.. அருள்மொழிவர்மன் திரும்பிப் பார்ப்பதற்குள் ரவிச்சந்திரன் வானை முட்டும் உயரத்திற்கு வளர்ந்து நின்றான்.. ரவிவர்மனால் பெற முடியாத சுய அடையாளத்தை அவருடைய மகன் பெற்றுக் காட்டினான்.. அவரால் முறியடிக்க முடியாத அருள்மொழிவர்மனின் ஆளுமையை அவர் மகன் முறியடித்துக் காட்டினான்.. அரண்மனையின் தலைமைப் பொறுப்பை அருள்மொழிவர்மனிடமிருந்து மிக எளிதாகக் கைப்பற்றினான்.. அவனுடைய அன்னையை அந்த அரண்மனையின் மகாராணியாக வாழ வைத்தான்..
அவந்திகா ஒரு சறுக்குமரம்..! அருள்மொழிவர் மனைச் சறுக்கி விட்ட சறுக்கு மரம்..! இதை நினைத்துப் பல சமயங்களில் யாழினி வேதனைப் பட்டிருக்கிறாள்.. மகனின் தயவில் வாழாமல் கணவனின் ஆதிக்கத்தில் கம்பீரமாக வாழ்ந்தவள் பேரனின் தயவில் வாழ நேர்ந்து விட்டதை நினைத்துத் துயரப் பட்டிருக்கிறாள்.. அத்துடன் விட்டு வைக்காமல் அடுத்தடுத்து அவந்திகா வம்பு வழக்குகளை கொண்டு வந்தால் அவள் என்ன செய்வாள்..?
அருள்மொழிவர்மன் குலப் பெருமையை பெரிதாக நினைப்பவர்.. அஜந்தாவால் சிதிலமாகி விட்ட அவர்களின் குடும்பப் பெருமையைத் தூக்கி நிறுத்தியிருக்கும் ரவிச்சந்திரன் சொல்வதுதான் அவருக்கு வேதம்.. ரவிச்சந்திரனின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச மாட்டார்.. ரவிச்சந்திரனை எதிர்த்து நிற்க மாட்டார்.. அதனால்தான் அஜந்தா கொண்டு வரும் வம்பு வழக்குகளை அவந்திகா அருள்மொழிவர்மனின் காதுகளுக்கு கொண்டு செல்ல மாட்டாள்.. யாழினியிடம் முறையிட்டு விடுவாள்.. அவை வீணாவைக் குறித்தவையென்றால் யாழினி மகளையும் பேத்தியையும் ஒரு பிடி பிடித்துத் திருப்பி அனுப்பி விடுவாள்.. ரம்ய மாலினியைக் குறித்தது என்றால் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்வாள்.. மகன்வழிப் பேத்தி, மகள்வழிப் பேத்தியை அத்தை மகள் என்று நினைத்துப் பெருந்தன்மையாகப் பேசிப் பழகாமல் மனதைப் புண்படுத்தலாமா என்ற கோபம் உண்டாகும்..
இது நந்தினியைப் பற்றிய புகார் என்றதும் யாழினிக்கே கோபம் வந்து விட்டது.. எங்கிருந்தோ வந்த பெண்ணொருத்தி வயநாட்டு அரண்மனையில் வாழும் யாழினியின் பேத்தியிடம் மரியாதை குறைவாய் பேசுவதா..?
யாழினிக்கு வந்த கோபத்தில் நந்தினியையே வரவழைத்துக் கண்டித்திருப்பாள்.. அவள் ரவிச்சந்திரனின் செக்கரட்டரி என்பதினால் வீணாவை அழைத்துக் கோபமாய் கண்டித்துப் பேச வேண்டும் என்று நினைத்தாள்.. வீணா மாமனார், மாமியாரிடம் மரியாதை கொண்டவள்.. பணிந்து நடப்பவள்.. யாழினி கோபப் பட்டால் நிச்சயமாக நந்தினியிடம் ஏனென்று கேட்பாள்..
அதை நினைத்து வீணாவை வரச் சொன்னால் அவளுடன் ரவிச்சந்திரனும் வந்து நிற்கிறான்.. அவனுடைய செக்கரட்டரியை அஜந்தா எப்படி மரியாதைக் குறைவாய் பேசலாம் என்று கொதிக்கிறான்.. அரண்மனையை விட்டு வெளியேறப் போபதாக அறிவிக்கிறான்..
'ஈ விசயம் ஆ மனுசன் அறிஞ்ஞா.. ஞான் தொலையும்..'
"மாப்புத்தரனும் கொச்சு மோனே.. ஈ கொட்டாரம் நிண்டக் கொட்டாரமல்லோ..." யாழினி கெஞ்ச ஆரம்பித்தாள்..
"என் அரண்மனைதான்.. வம்சாவழியாக தாத்தாவின் சொத்து பேரனுக்குச் சொந்தம் என்று வராமல் தாத்தாவிடமிருந்து விலை கொடுத்து என் பெயரில்
வாங்கி ரெஜிஸ்ட்ரர் பண்ணியிருக்கும் என்னோட அரண்மனைதான்.. அந்த நினைவு உங்களுக்கும் உங்க மகளின் குடும்பத்திற்கும் இருக்கிறதா..?"
அழுத்தம் திருத்தமாக ரவிச்சந்திரன் நினைவூட்டியதில் யாழினிக்கு துக்கமாக இருந்தது.. இதைப் போன்ற பேச்சுக்களைக் கேட்க நேரிடும் என்பதினால்தான் அவள் ரவிச்சந்திரனிடம் வாக்குவாதமே வைத்துக் கொள்ள மாட்டாள்.. அப்படி அவளை நிம்மதியாக இருப்பதற்கு அவந்திகாவும் அவள் குடும்பத்தினரும் விட்டு வைக்கிறார்களா..?
"எல்லாத் தாத்தாவும் பேரன்களுக்குச் சொத்தைக் கொடுப்பாங்க.. என் தாத்தா அவரோட மருமகனோட கடனைத் தூக்கிக் கொடுத்திருக்கார்.. ஐநூறு கோடி
கடன்..! எங்கிருந்து அவர் அடைப்பார்.. குடும்பத்தோட என் அரண்மனையில டேரா போட்டிருக்கார்.. உங்க மருமகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் எவ்வளவு செலவாகுதுன்னு அவருக்குத்தான் தெரியுhது.. உங்களுக்குத் தெரியுமில்ல.. அதைப்பத்தின நினைவு யாருக்கும் இருக்கிறதாத் தெரியலை... இந்த அரண்மனையில இருக்கிறவங்களிடம் வம்பு வளர்க்க மட்டும் தெரியுது.."
"ஞான் பறஞ்ஞு கொச்சு மோனே.. இனி இவ்விதமான வழக்கு வந்திடாதல்லோ.."
"எனக்கு நம்பிக்கையில்லை.."
"ஒரப்பானு ஞான் நோக்கினு ரவி.."
"பார்க்கலாம்.. இனிமே நந்தினியைப் பத்தி எதைப் பேசறதா இருந்தாலும் என்னைத்தான் நீங்க கூப்பிடனும்.. அம்மாவைக் கூப்பிடக் கூடாது.. இப்ப எதுக்காக அம்மாவைக் கூப்பிட்டிங்க..? உங்க மகளும், பேத்தியும் எதைச் சொன்னாலும் கேட்டுக்கிட்டு அம்மாவைக் கூப்பிட்டுக் கண்டிப்பீங்களா..? அம்மாவுக்கு வயசாகிருச்சு பாட்டி.. மேரேஜ் பண்ணிக்கிற ஏஜில அவங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறோம்.. அவங்க மாமியாராகிற ஸ்டேஜில இருக்கிறாங்க.. இன்னும் நீங்க உங்க மாமியார் அதிகாரத்தை அவங்களிடம் காட்டனும்னு நினைக்காதீங்க.."
"என்ன இது ரவி..? பாட்டியிடம் இப்படியா பேசுவது..? நான் மாமியாராய் ஆனாலும் பேரன்,
பேத்தி எடுத்து பாட்டியானாலும் என்றைக்குமே உன் பாட்டியோட மருமகள்தான்.. அவங்க என்னிடம் மாமியார் அதிகாரத்தைக் காட்டத்தான் செய்வாங்க.. நீ யார் இதைக் கேட்க..?"
வீணா மகனைக் கோபித்துக் கொண்டதில் யாழினியின் மன ரணத்துக்கு மயிலிறகினால் மருந்து தடவி விட்டதைப் போல ஆறுதல் உண்டானது.. மருமகளை பாசத்துடன் பார்த்தாள்..
"பார்த்துங்க.. இதுதான் உங்க மருமகள்.. உங்க மகளுக்கும் மாமனார், மாமியார் இருக்காங்க.. அவங்களிடம் உங்க மகளை இப்படிப் பேசச் சொல்லுங்க பார்க்கலாம்.. எங்கே..? ஹஸ்பெண்ட் வீட்டில குடும்பம் நடத்தினாத்தானே அதையெல்லாம் பார்க்க முடியும்..? இருக்கிறது அண்ணன் மகனோட அரண்மனையிலே.. இதில மூட்டிக் கொடுக்கறதில முதல் ஆளாய் நிற்கிறாங்க.. ம்ஹீம்.. இன்னைக்குச் சொல்றேன் பாட்டி.. இந்தக் குடும்பம் இரண்டாய் பிரிந்தால் அதுக்கு முழுக்க முழுக்க உங்க மகளும் அவங்களோட குடும்பமும்தான் காரணமாக இருப்பாங்க.. பார்த்து இருந்துக்கங்க.."
ரவிச்சந்திரன் புயல் போல போய் விட்டான்.. புயலடித்து ஓய்ந்த அமைதி அங்கே நிலவியது.. யாழினி பேயடித்தவளைப் போல இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -126
எண்ணியிருந்தது ஈடேற -126
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera126.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera126.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy