எண்ணியிருந்தது ஈடேற -125

125 நந்தினியின் சிந்தனையைக் கவனிக்காமல் ஓமனாக் குட்டியின் ' அம்மே.. ' என்ற விளிப்புகள் பலவிதம் என்பதைப் பற்றிச் சொல்ல ஆரம்பி...


125

நந்தினியின் சிந்தனையைக் கவனிக்காமல் ஓமனாக் குட்டியின் 'அம்மே..' என்ற விளிப்புகள் பலவிதம் என்பதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள் ரம்யமாலினி..
"ஓமனா 'அம்மே'ன்னு பயபக்தியோட சொன்னா அவ பாட்டியைப் பற்றிச் சொல்கிறான்னு புரிஞ்சுக்கனும்.. 'அம்மே..'ன்னு உரிமையாச் சொன்னா எங்கம்மாவைப் பத்திச் சொல்கிறா.. 'அம்மே..'ன்னு செல்லமாச் சொன்னா அது நான்.. மத்தபடி அவந்திகா அத்தையையும் அஜந்தாவையும் இவ 'அம்மே'ன்னு விரிக்க மாட்டா.."
"நிஜமாவா..?"
விழிகளை விரித்தாள் நந்தினி.. ஓமனாவின் 'அம்மே..' என்ற விளிப்பு அஜந்தாவுக்கும் அவளைப் பெற்ற அவந்திகாவுக்கும் கிட்டுவதில்லை என்பதில் அவளுக்கு அதீதமான ஆனந்தம் உண்டானது..
"ஆமாம் நந்தினி.. அவங்களைப் பத்தி பாட்டியிடம் சொல்லும் போது மட்டும் 'நிங்கட மோள் அம்மே.. கொச்சு மோள் அம்மே..'ன்னு சொல்லுவா.. எங்களிடம் சொல்லும் போது.. 'ஆ அஜந்தா..' 'நம்ம அச்சரிட அணியத்தி..'ன்னு சொல்லுவா.."
"ஓ.."
நந்தினி ஓமனாவை வாத்சல்யம் பொங்கப் பார்த்தாள்.. அதில் பரவசப்பட்டுப் போன ஓமனா பசுவைக் கண்ட கன்றாய் உருகி..
"அம்மே.." என்று பாய்ந்து வந்தாள்..
'போச்சுடா.. சும்மாவே இவ பாசரசம் பிழிவா.. இதில நான் வேறு இவளைக் கிளப்பி விட்டுட்டேனே..'
ரம்ய மாலினியின் பக்கம் ஒன்றிக் கொண்ட நந்தினி..
"ஓமனா.. பாட்டி உன்னை விளிச்சு.." என்று அவளை திசை திருப்பி விட்டுத் தப்பித்தாள்..
"ஞான் வரட்டே.." ஏழுகடல் ஏழுமலை தாண்டிப் பயணம் செய்யப் போகிறவளைப் போல ஏக்கத்துடன் கேட்டபடி அங்கிருந்து நகர மனமில்லாமல் நகர்ந்தாள் ஓமனா..
"பிழைச்சேன்.." நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானாள் நந்தினி..
"பாசம் காட்டியே பயமுறுத்தறாளா..?" ரம்யமாலினி சிரித்ததாள்..
யாழினி அழைக்கிறாள் என்பதில் கவலை கொண்டிருந்தாள் வீணா.. அதை முகத்தில் காட்டினால் நந்தினி குற்ற உணர்வு கொள்வாள் என்பதினால் மறைத்துச் சிரித்த முகமாய் இருப்பதைப் போலத் தன்னைக் காட்டிக் கொண்டாள்..
"நந்தினிகூடப் பேசிக்கிட்டு இரு ரம்யா.." எழுந்தாள்..
"நீங்க எங்கேம்மா போகிறீங்க..?" ரம்யமாலினி தடுத்தாள்..
"பாட்டி கூப்பிட்டிருக்காங்கல்ல.. போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்.." விளக்கம் சொன்னாள் வீணா..
"நானும் வரேன் அத்தை.." நந்தினி எழப் போனாள்..
"நீ இரு.. அம்மாவும் நானும் போகிறோம்.." ரவிச்சந்திரன் கண்டிப்புடன் சொன்னான்..
"இல்லை பாஸ்.." நந்தினி வாதாடினாள்..
"நான் தான் அஜந்தாவுடன் ஆர்கியூ பண்ணினேன்.. என்னைப் பத்தித்தான் அவ பாட்டியிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கா.. அதைப் பத்திக் கேட்கத்தான்
பாட்டி அத்தையைக் கூப்பிட்டிருக்காங்க.. இதுக்கான விளக்கத்தை நான்தான் சொல்லனும்.. அதுதான் முறை.."
"எது முறைன்னு எனக்குத் தெரியும்.. நீ அடங்கி உட்கார்.."
"என் மனசு கேட்கலை பாஸ்.."
"உன் மனசு எத்தனையோ விசயங்களைக் கன்சிடர் பண்ணலை.. இதை மட்டும் கன்சிடர் பண்ணுதா..?"
ரவிச்சந்திரன் எதைச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட நந்தினி உதட்டைக் கடித்தாள்.. 'ஜிவ்' வென்று எழும் உணர்வின் அலைகள் அவளைப் பாடாய் படுத்தின.. மூச்சுத் திணறுவதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.. வீணாவும் ரம்யமாலினியும் அவளுடைய உணர்வை உணர்ந்து விடக் கூடாதே என்று தவித்துப் போனாள்..
நல்லவேளையாக வீணாவும், ரம்யமாலினியும் நந்தினியின் தடுமாற்றத்தைக் கண்டு கொள்ளவில்லை.. அவர்கள் அஜந்தா மூட்டி விட்டிருக்கும் கலகத்தைப் பற்றிய நினைவோடு இருந்தார்கள்.. அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிய வியூகங்களில் மூழ்கியிருந்தார்கள்..
"லுக் நந்தினி.. இப்ப நீ அஜந்தாவை எதிர்த்து நின்றிருக்கிற பார்.. இதை நான் அப்ரிசியேட் பண்றேன்.. கீப் இட் அப்.. தப்புச் செஞ்சிட்டோமேன்னு நீ ஃபீல் பண்ணினேன்னு வை.. அஜந்தா இன்னும் கொஞ்சம் ஆட்டம் போடுவா.. அவளைக் கண்ட்ரோல் பண்ண முடியாது.." என்றான் ரவிச்சந்திரன்..
வீணாவும் ரம்யமாலினியும் அதை ஆமோதிப்பதைப் போலத் தலையசைத்தாலும் நந்தினிக்கு மனது கேட்கவில்லை..
"அஜந்தா என்ன எனக்கு எதிரியா பாஸ்..? நான் அவங்களை டீஸ் பண்ணனும்னு நினைக்கவே இல்லை.."
"பட்ஷே.. அவ நினைப்பா.. அதுதான் அவ குணம்.. நீ உன்னை ஸேவ் பண்ணிக்கனும்னா நிமிர்ந்து நிற்கப் பழகிக்கனும்.."
'அதை நீ சொல்லித்தான் நான் செய்யனுமா.. என்ன..?' என்று சிலுப்பிக் கொண்டாள் நந்தினி..
பெல்ட்டால் அடிப்பான் என்பதற்காக பணக்கார மாப்பிள்ளையை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்திருப்பவள் அவள்.. நிமிர்வைப் பற்றி அவளுக்கா தெரியாது..?
"வாங்கம்மா.."
ரவிச்சந்திரன் வீணாவை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.. தன்னால்தானே என்ற குற்ற உணர்வை அடக்க முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள் நந்தினி.. எவ்வளவு முயன்றாலும் குற்ற உணர்வை அடக்க அவளால் முடியவில்லை..
"உங்க மேலத் தப்பில்ல நந்தினி.."
ரம்யமாலினி கிளிப்பிள்ளை ஒப்பிப்பதைப் போலத் திரும்பத் திரும்ப ஒப்பித்து விட்டாள்.. நந்தினியின் செவிகளில் அது ஏறவில்லை.. இருக்கும் இடம் தெரியாமல் இருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுப் போனாள்..
"உங்களாலே முடியாததைப் பற்றியெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணிக்காதீங்க நந்தினி.."
சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை தீவிரமாக வைத்துக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்தபடி சொன்னாள் ரம்யமாலினி..
"எதைச் சொல்கிறீங்க..?" நந்தினி விழித்தாள்..
"இருக்கிற இடம் தெரியாம இருக்க உங்களாலே முடியுமா..? அதை இதை உருட்டலைன்னா நீங்க எப்படி நந்தினி ஆவிங்க..?"
கண்கள் மின்ன ரம்யமாலினி கேட்டதும் நந்தினி சிரித்து விட்டாள்..
"ஹப்பா.. சிரிச்சுட்டிங்க.." நந்தினியின் விரல்களோடு விரல் கோர்த்து நெருங்கி அமர்ந்து கொண்டாள் ரம்யமாலினி..
"பாட்டியின் அதிகாரம் அண்ணனிடம் செல்லாது.. நீங்க கவலைப் படாதீங்க.. அண்ணன் பார்த்துக்கும்.."
ரம்யமாலினி ஆறுதல் சொன்னாலும் நந்தினி உம்மென்றுதான் இருந்தாள்.. இந்த அஜந்தாவினால் எப்படியெல்லாம் பிரச்னை வருகிறது..? எங்கேயோ போகிற மங்காத்தா.. என்கூடக் கொஞ்சம் ரம்மி ஆடு ஆத்தா என்கிற கதையாய் அல்லவா ஆகிவிட்டது..
ரவிச்சந்திரனும் வீணாவும் யாழினியின் அறைக்குள் நுழைந்தார்கள்.. அங்கே அவந்திகாவும், அஜந்தாவும் இருந்தார்கள்..
"நினைச்சேன்.." என்றான் ரவிச்சந்திரன்..
"என்னைத்தானே நினைச்சீங்க..?" அஜந்தா குழைந்தாள்.
அருவெறுப்பாக அவளை ரவிச்சந்திரன் பார்த்த பார்வையில் யாழினிக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.. ஏற்கனெவே வீணாவை விசாரணைக்கு அழைத்தால் அவள் ரவிச்சந்திரனுடன் வந்து நின்றிருந்ததில் சங்கடம் கொண்டிருந்தாள்.. ரவிச்சந்திரனின் முன்னிலையில் வீணாவிடம் எப்படி கண்டித்துப் பேசுவது..? வீணா தனித்து வந்திருந்தால் நந்தினிக்கு அந்த அரண்மனையில் என்ன வேலை என்று கேட்டு வெளியேற்றியிருக்கலாம்.. இப்போது அது முடியாது..
இந்த மனப்போராட்டத்தில் அவளிருக்க அஜந்தா ரவிச்சந்திரனிடம் வழிந்து வாங்கிக் கட்டிக் கொண்டால் அவளுக்கு சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருக்காதா..?
"எதுக்கு பாட்டி வரச் சொன்னீங்க..?" அதட்டலாக கேட்டான்..
"ஞான் நின்ன விளிக்கல ரவி.. வீணாவையல்லோ விளிச்சானு..?" அறிவுறுத்தினாள் யாழினி..
"அதைத்தான் எதுக்குன்னு கேட்டேன்.." அழுத்தம் திருத்தமாக யாழினிக்கு அறிவுறுத்தினான் ரவிச்சந்திரன்..
"அப்பச்சிக்கும் மோனன்ட பார்யாளுக்கும் இடையில ஆயிரம் விவகாரங்கள் இருக்குமல்லோ.. நாங்க சம்சாரிக்கிறது நினக்கு எந்துக்கு கொச்சுமோனே..?"
"எனக்கு அது தேவைதான் பாட்டி.. என்னன்னு சொல்லுங்க.."
"அதி பத்தி நிண்ட அம்மையிடம் ஞான் பறஞ்ஞு.. நீ போகனும் ரவி.."
"முடியாது.."
"ரவி.."
"இது என்னுடைய அரண்மனை பாட்டி.. நீங்களும், தாத்தாவும் என் பொறுப்பில் இருக்கீங்க.. ஸோ.. இங்கே எது நடந்தாலும் எனக்குத் தெரிந்தாகனும்.. சொல்லுங்கள்.. அம்மாவை எதுக்காக கூப்பிட்டிங்க..?"
"எந்துக்கு ரவி.. நிண்ட அம்மையிடம் எனிக்கு பந்தமில்லையோ.. ஞான் நிண்ட அம்மையின அன்வர்ஷிக்கக் கூடாதோ..?"
"அம்மாவை எதுக்காக விசாரிக்கறிங்க..? அதை முதலில் சொல்லுங்க பாட்டி.."
"வீணா எண்ட மருமகள்.."
"உங்க மருமகள் என்னோட அம்மா பாட்டி.. ரவிச்சந்திரனின் அம்மாவை அவனோட பாட்டியாகவே இருந்தாலும் கேள்வி கேட்க முடியாது.. கேள்வி கேட்கக் கூடாது.."
தன் சாம்ராஜ்யம் சரிந்து போனதை உணர்ந்தாள் யாழினி.. அவளால் வீணாவை கடிந்து கொள்ள முடியாது.. ஏனென்றால் வீணா ரவிச்சந்திரனைப் பெற்ற அன்னை.. யாழினி அவனுடைய பாட்டி.. ரவிவர்மனைப் பெற்ற வயிற்றில் அவந்திகாவையும் பெற்று விட்டதினால் அனைத்துச் சொத்துக்களையும் இழந்து நிற்பவள்.. ரவிச்சந்திரனின் பராமரிப்பில் வாழ்பவள்..
"ஞான் ஆரானு கொச்சு மோனே..?"
துயரத்துடன் கேட்டாள் யாழினி.. வீணா மனம் கசிந்தாள்.. அவளது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மாமியார் துயரம் கொள்ளுவதா..? அதை அவள் பார்த்துக் கொண்டிருப்பதா..?
"அத்தை.." என்று எதையோ சொல்லப் போனாள்..
"உஸ்ஸ்.." வாயில் ஆள்காட்டி விரலை வைத்து தாயை அடக்கினான் ரவிச்சந்திரன்..
"வாயைத் திறக்கக் கூடாது.. நான் பேசிக்கிட்டு இருக்கேனில்ல.."
"ஆனா ரவி.. உன் பாட்டி வருத்தப்படறாங்க.."
"என்னிடம்தானே வருத்தப் படறாங்க..? நான் பதில் சொல்லிக்கறேன்.. நீங்க ஊடே வரக் கூடாது.."
வீணா பேச முடியாமல் தவித்தாள்.. ரவிச்சந்திரன் அவளை அடக்கி விட்டு யாழினியின் பக்கம் திரும்பினான்.. தாழ்ந்த குரலில் தாயின் காதுகளில் ஓதிக் கொண்டிருந்த அவந்திகாவை வெறுப்புடன் சுட்டிக் காட்டி..
"நீங்க யார்ன்னுதானே கேட்டிங்க பாட்டி.. நீங்க இந்த அவந்திகா அத்தையோட அம்மா.." என்றான்..
"ரவி.." யாழினி விக்கித்துப் போனாள்..
"நினக்கு ஞான் ஒந்நுமேயில்லையோ..?"
"எனக்கு நீங்க பாட்டிதான்.. பட்ஷே.. எனக்கும் முதலில் அஜந்தா, அபராஜிதனுக்குப் பாட்டியா இருக்கீங்க.. அதுதான் உங்க பிராப்ளம்.. அப்பாவுக்கும் நீங்க அம்மாங்கிறதை பாசத்தில நினைக்காம அவரோட வருமானத்தைப் பிடுங்கி அத்தைக்குத் தள்ளறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டிங்க.."
"ரவி..."
"இவங்களுக்குத்தான் மனச்சாட்சி இல்லை.. அதைக் கழட்டித் தூரக் கடாசிட்டாங்க.. நீங்களும் அப்படித்தான் ஆகிக்கிட்டு இருக்கீங்க பாட்டி.. இவங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குவீங்களா..? கண்டிச்சு வைக்க மாட்டிங்களா..?"
"வல்லதும் தெற்று இருந்தாத்தானே ரவி கண்டிக்க ஏலும்.. அவந்திகா தெற்று இல்லாதவளல்லோ.."
"அதுசரி.. குற்றத்தின் மொத்த உருவம் இவங்கதான்.. இவங்க குற்றமில்லாதவங்களாம்.. நான் கேட்கிறதுக்கு முதலில் பதில் சொல்லுங்க.. என்னுடைய பெர்சனல் செக்கரட்டரியை உங்க பேத்தி எதுக்காக மிரட்டினா..?"
"எந்தா..?"
யாழினி திகைத்தாள்.. நந்தினி எதற்காக அஜந்தாவிடம் மோதினாள் என்று கேட்பதற்காக அவள் வீணாவை வரச் சொன்னால்.. அஜந்தா எதற்காக நந்தினியிடம் மோதினாள் என்று கேட்டபடி ரவிச்சந்திரன் வந்து நிற்கிறான்..
கதை இப்படியா திரும்பி வைக்கும்..?
"இது என் அரண்மனை பாட்டி.. நந்தினி தமிழ் நாட்டில இருந்து தனியாய் வந்திருக்கிறா.. சின்னப் பெண்.. அவளை நம்ம குடும்பத்தோடு தங்க வைக்கிறதுதான் அவளுக்குப் பாதுகாப்புன்னு அரண்மனையிலே தங்க வைத்திருக்கிறேன்.. அது தெரிந்தும் உங்க பேத்தி நந்தினியிடம் மரியாதை குறைவாய் பேசியிருக்கிறா.. இருக்க இடமில்லாம அவ அரண்மனையில தங்கியிருக்கிறதா சொல்லியிருக்கிறா.. இருக்க இடமில்லாம இந்த அரண்மனையில் தங்கியிருக்கிறது நந்தினி மட்டும் தானா பாட்டி..?"
"ரவி.." வாயடைத்துப் போனாள் யாழினி..
எத்தனை முறைதான் இந்தக் கேள்வியைக் கேட்டுத் துடித்துப் போவது.. அவன்தான் வாய்ப்புக் கிடைத்தால் இந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கிறானே.. இந்த அவந்திகாவும் அஜந்தாவும் புத்தியோடு வாயை மூடி இருந்து தொலைத்தால்தான் என்ன..?






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -125
எண்ணியிருந்தது ஈடேற -125
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera125.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera125.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy