எண்ணியிருந்தது ஈடேற -124

124 ஓமனா நந்தினியைப் பார்த்த பார்வையில் ஆதர்சம் கொப்பளித்தது.. சும்மாவே அவள் நந்தினியைக் கொண்டாடுவாள்.. ஆதர்சத்தைக் கூடைகூடையாக நந்...


124


ஓமனா நந்தினியைப் பார்த்த பார்வையில் ஆதர்சம் கொப்பளித்தது.. சும்மாவே அவள் நந்தினியைக் கொண்டாடுவாள்.. ஆதர்சத்தைக் கூடைகூடையாக நந்தினியின் மீது கொட்டுவாள்.. அம்மே என்று நாத்தழுதழுப்பாள்.. பிரேமம் கொள்வாள்.. இதில் அவளுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் அஜந்தாவிடம் நந்தினி விரல் சொடுக்கி தொலைத்து விடுவேன் தொலைத்து என்ற ரீதியில் அரட்டி வைத்து விட்டு வந்ததை நேரலையில் பார்த்ததில் புளகாங்கிதப் பட்டுப் போனாள்.. ஆரத்தி எடுத்து சூடம் சாம்பிராணி காட்டாத குறைதான்..
"எண்ட நந்தினி அம்மேதானா..?"  தள்ளி நின்று அடையாளம் பார்த்து அவள் கன்னம் வழித்ததில் நந்தினிக்கு கடுப்பு மறைந்து சிரிப்பு வந்து விட்டது..
"நந்தினி மேடம்ன்னு சொல்லு.. சும்மா ஆட்டுக் குட்டியைப் போல அம்மே, அம்மேன்னு சொல்லி வைக்காதே.." என்றபடி ஓமனாவின் கைகளை விலக்கி விட்டாள்..
"அம்மே அறிஞ்ஞுமோ.. ஆ அஜந்தா அம்மே ராட்சசியாக்கும்.. ஈ கொட்டாரத்தில ஆ அம்மையிண்ட வார்த்தைக்கு எதிர் வார்த்தை எவரும் பறயாண்டாம்.. கேட்டோ.."
"எல்லாத்தையும் கேட்டாச்சு.. நிறையக் கேட்டாச்சு.. விடு ஓமனா... அவளெல்லாம் ஒர் ஆளுன்னு நம்ம டயத்தை வேஸ்ட் பண்ணி அவளைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கனுமா..? கொடுமை.."
"கொடுமையானு அம்மே.. ஈ கொட்டாரத்திண்ட ஜோலி செய்யும் பணியாளுக வல்லதும் தெற்று செய்தா அஜந்தா அம்மை வல்லிய வெப்பராளம் கொள்ளுமல்லோ.. எந்துண்டு அன்வர்ஷிக்காம சிஷா அளிச்சிடுமல்லோ.. சில சமயங்களிட்ட வேணுமின்னே தெற்று பறஞ்ஞு.. ஆ மனுஷிக்குப் பிடித்தமில்லேண்டா வல்லதும் பறஞ்ஞு சிஷா அளிச்சு.. ஈ திவசம் எண்ட நந்தினி அம்மே ஆ அஜந்தா அம்மையிண்டா எந்தான்னு எதுத்து நின்னு.. ஆ காட்சியினக் கண்டு ஞான் ரோமாஞ்சனம் கொண்டு.. நன்னி.. அம்மே.. நன்னி.."
"போதும் ஓமனா போதும்.. இன்னைக்கு இது போதும்.. நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வைய்யி.."
ஒமனா காட்டிய சாம்பிராணிப் புகையைக் கலைத்து அவளை ஆற்றுப்படுத்தி அமைதியாக்குவதற்குள் நந்தினிக்கு போதும், போதும் என்று ஆகி விட்டது.. ஒரு வழியாக ஓமனா கண்ணீர் மல்க காலி பரலகரத்தட்டும், டீக் கோப்பையுமா இடத்தைக் காலி செய்தாள்.. நந்தினி ஏன் சோர்வாக இருக்கிறாள் என்று ரம்ய மாலினி கேட்டுக் கொண்டிருந்த போது வீணா வேகமாக அங்கு வந்தாள்.. அவளைக் கண்டதும் நந்தினி அவசரமாகக் கட்டிலை விட்டு எழுந்தாள்..
"அத்தை.. நீங்களா..?"
"உட்காரு நந்தினி.."
ரம்ய மாலினிக்குப் பக்கத்தில் இருந்த சோபாவில் உட்கார்ந்த வீணா யோசனையுடன் நந்தினியைப் பார்த்தாள்.. என்னவாக இருக்கும் என்று நந்தினிக்குப் படபடப்பாக இருந்தது.. ஏதேனும் காரணம் இல்லாமல் வீணா நந்தினியைத் தேடி அவள் அறைக்கே வந்திருக்க மாட்டாள்..
"என்ன அத்தை..?"
"உனக்கும் அஜந்தாவுக்கும் இடையே ஏதாச்சும் வாக்குவாதம் வந்ததா..?"
'என்னடா இது..' என்று ஆகி விட்டது நந்தினிக்கு..
அப்போதுதான் அஜந்தாவுடன் மோதி விட்டு அறைக்குள் வந்திருக்கிறாள்... அதற்குள் விவரம் அரண்மனை முழுவதும் பரவி விட்டதா..? வீணாவே நந்தினியைத் தேடி வந்திருக்கிறாள் என்றால் அஜந்தா விசயத்தை ஊதிப் பெரிதாக்கியிருக்க வேண்டும்..
"ஆமாம் அத்தை.. பட்.. அவங்கதான் என் வழியை மறித்து வம்புக்கு இழுத்தாங்க.. குறைவா மட்டம் தட்டறதைப் போலப் பேசினாங்க.. செர்டயின் லிமிட்டுக்கு மேலே என்னால் பொறுமையாய் போக முடியலை.. எதிர்த்துப் பேசிட்டேன்.."
"இப்படித்தான் நடந்திருக்கும்ன்னு நானும் நினைத்தேன்.."
"உங்களுக்கு எப்படித் தெரியும் அம்மா..? ஓமனா சொன்னாளா..? நானும் ஓமனாவும் வந்தப்ப மாடி ஹாலில நந்தினியிடம் அஜந்தா சண்டை போட்டுக்கிட்டு இருந்தா.. நாங்க மறைந்து நின்னு பார்த்தோம்.."
"ஓமனா சொல்லலை ரம்யா.. அஜந்தாதான் உன் பாட்டியிடம் வத்தி வைத்துக்கிட்டு இருக்கிறா.. எங்கிருந்தோ வந்த பெண்கூட என்னை மதிக்கலைன்னா இந்த அரண்மனையில நான் யாருன்னு அழுது புலம்பி ஆகாத்தியம் பண்ணிக்கிட்டு இருக்கிறா.."
"ஓ.. வெரி ஸ்டேன்ரஜஸ்..! பாட்டி அவ சொல்றதை அப்படியே கேட்டுக்குவாங்களே.. என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டாங்களே.."
"அதுதான் எனக்கு ரம்யா.."
"அம்மா.. நாம நந்தினியை விட்டுக் கொடுக்கக் கூடாது.. இவங்க நம்ம கெஸ்ட்.. அஜந்தா எப்படி இவங்களிடம் மரியாதை குறைவாய் பேசலாம்..? இந்த அரண்மனையிலே அவ வைத்ததுதான் சட்டமா..?"
"நீ சொல்கிறது எனக்குப் புரியுது ரம்யா.. ஆனா அஜந்தா உன் பாட்டியிடம் கோள் மூட்டிக்கிட்டு இருக்காளே.. உன் பாட்டியைப் பத்தி உனக்கே தெரியும்.. அஜந்தாவை விட்டுக் கொடுக்க மாட்டாங்க.."
"நாம மட்டும் நந்தினியை விட்டுக் கொடுக்கனுமா..? நெவர்.."
"நந்தினியை விட்டுக் கொடுக்கிறதுங்கிற பேச்சுக்கே இடமில்லை ரம்யா.. நீயேன் கவலைப்படற.."
"நீங்கதான் தாத்தா, பாட்டிக்கு எதிரா ஒருவார்த்தை கூடப் பேச மாட்டிங்களே.."
"பட்ஷே.. உன் அண்ணன் பேசுவானே.."
"அம்மா..!"
ரம்யமாலினி கண்களை விரிக்க.. வல்லமை மிகுந்த மகனைப் பெற்றிருந்த அந்தத் தாய் கர்வத்துடன் புன்னகைத்தாள்..
"எங்கேயோ போயிட்டீங்கம்மா.. என்னமா காய் நகர்த்தறீங்க.. சூப்பர்ம்மா.. அண்ணன் இருக்கிறப்ப அஜந்தாவுக்கு அஞ்ச வேண்டாம்.."
"யாருக்கும் அஞ்ச வேண்டாம்.." வாசல் பக்கமிருந்து குரல் ஒலித்தது..
அது ரவிச்சந்திரனின் குரல் என்பதில் நந்தினிக்குள் ஓர் மின்சார அதிர்வு வந்தது.. வெகு காலம் பார்க்காமலிருந்தவனைப் பார்த்து விட்டதைப் போல அவள் மனம் தடதடத்தது.. எதற்காக இந்த விசித்திர உணர்வுகள் ஏற்பட்டுத் தொலைக்கின்றன என்று அவள் கலங்கினாள்..
வேட்டைக்காரனின் மீது புள்ளி மானுக்கு ஈர்ப்பு வந்து தொலைக்குமா..? ஏன்..?
அந்த அறையில் அவனுடைய அன்னையும், தங்கையும் இருக்கிறார்கள் என்ற நினைவின்றி நந்தினியைப் பிய்த்துத் தின்று விடுவதைப் போல வெட்கமில்லாமல் பார்த்தபடி உள்ளே வந்தான் ரவிச்சந்திரன்..
'எப்படிப் பார்க்கிறான் பார்.. காய்ஞ்ச மாடு கம்மங் கொல்லையைப் பார்க்கிறதைப் போல மேய்ச்சல் பார்வை.. வெட்கம் கெட்டவன்..'
அந்த வெட்கம் கெட்டவன் அவளுடைய முறைப்பையும் ரசித்துத் தொலைத்தான்.. என்னவோ குளிர்ச்சி நிரப்பி அவள் பார்ப்பதைப் போலக் கொஞ்சலாக பார்த்து வைத்தான்..
'அத்தையும், ரம்யாவும் நோட் பண்ணிட்டா என்ன செய்கிறது..?'
நந்தினிக்குத்தான் பயமாக இருந்தது.. அந்த பயமெல்லாம் அவனுக்கு இல்லை.. அவன் உரிமையுடன் அவளைப் பார்த்தபடி கட்டிலில் அவள் பக்கத்தில் சுவாதீனமாக உட்கார.. பதறிப் போன நந்தினி விசுக்கென எழுந்து வீணாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்..
'ம்ப்ச்..' ரவிச்சந்திரனின் பார்வை அவளது செய்கையை ஆட்சேபித்தது..
'கட்டிக்கிட்டவனைப் போல மிரட்டறான் பாரு..' நந்தினி அவன் பார்வையைச் சந்திப்பதைத் தவிர்த்து வீணாவின் பக்கம் திரும்பிக் கொண்டாள்..
'இவனைப் பார்த்தாலே டேன்ஜர்தான்.. அத்தையும், ரம்யாவும் இருக்கிறாங்கங்கிற நினைப்பில்லாம வெட்கம் கெட்டத்தனமா பார்த்து வைப்பான்.. ராஸ்கல்..'
ரவிச்சந்திரனாகப்பட்ட அந்த ராஸ்கல் அவளையே பார்த்தபடி "வாட்'ஸ் தி பிராப்ளம் மாம்..?" என்று அவனுடைய மம்மியிடம் விசாரித்தான்..
"நந்தினியிடம் அஜந்தா வம்பிழுத்திருப்பா போல ரவி.. நந்தினி கோபப் பட்டுட்டா போல.. அஜந்தா உன் பாட்டியிடம் பற்ற வைச்சுக்கிட்டு இருக்கிறா.." கவலையுடன் விளக்கினாள் வீணா..
"இவ்வளவுதானா..? இதுக்குப் போயா கான்பரன்ஸை கூட்டியிருக்கீங்க.. பாட்டியிடம் நான் பேசிக்கறேன்.." அபயமளித்தான் ரவிச்சந்திரன்..
அப்பாடி என்ற நிம்மதி வீணாவின் முகத்தில் படர்ந்ததைக் கண்ட நந்தினிக்குள் குற்ற உணர்வு வந்தது.. அவளால்தானே பிரச்னை என்ற மனது குறுகுறுக்க..
"ஸாரி அத்தை.. நான் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம்.." என்று வருத்ததுடன் சொன்னாள்..
"எதுக்காக நீ பொறுமையாய் இருக்கனும்..? என்ன தேவைக்கு..?" அன்புடன் நந்தினியைக் கடிந்து கொண்ட வீணா அவளை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்..
வீணாவின் தோள் சாய்ந்த நந்தினிக்குள் சிலிர்ப்பு உண்டானது.. என்ன தவம் செய்தேன் இந்த பாசத்தைப் பெற என்று நெகிழ்ந்து போனாள்..
வீணாவிற்கு அவள் என்ன சொந்தமா..? பந்தமா..? மகனின் பெர்சனல் மேனேஜர் (?) அல்லது செக்கரட்டரி (!) அவளுக்கு ஆதரவாக மாமியாரை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் என்ன..? வீணா நினைத்திருந்தால் இருக்கின்ற பிரச்னைகளில் இது வேறு புதுப் பிரச்னையா என்று முகம் சுளித்திருக்கலாம்.. அவள் அதைச் செய்யவில்லை.. மாறாக குற்ற உணர்வு கொண்ட நந்தினியை அன்புடன் கண்டித்து அரவணைத்துக் கொள்கிறாள்..
ரவிச்சந்திரனால் உண்டாகியிருந்த மன ரணம் ஆறி இதமாகி விட்டதைப் போல உணர்ந்தாள் நந்தினி.. அவள் மனதை அவன் புண்படுத்தினாலும் மற்றவர்கள் ஓர் வார்த்தை சொல்ல அனுமதிப்பதில்லை.. குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்திருப்பவளின் தனிமை உணர்வை புரிந்து கொண்டு அவளைத் தன் குடும்பத்தில் ஒருத்தி போல பாவிக்க வைத்து அரண்மனையில் தங்க வைத்திருக்கிறான்..
'எல்லாம் சரிதான்.. இப்படி முள் குத்தற மாதிரிப் பேசற பேச்சுக்களையும்.. தேள் போலக் கொட்டற சுபாவத்தையும் மாத்திக்கிட்டாத் தேவலை.'
இதை அவனிடம் சொல்ல முடியுமா..? உனக்கேற்றாற் போல நான் மாற வேண்டுமா என்று கேட்டு வைப்பான்.. அவன் குணத்திற்கு ஏற்ப அவள்தான் மாற வேண்டும் என்று கிளாஸ் எடுப்பான்..
'தேவையா..?'
திருவாயை இறுக மூடிக் கொண்டாள் நந்தினி.. வழக்கமற்ற அமைதியுடன் இருந்தவளின் மீது அவன் பார்வை வட்டமிட்டது.. நந்தினி பிடிவாதமாக அவன்
பக்கம் திரும்பாமல் வீணாவின் புடவை முந்தானையைப் பிடித்துத் தன் விரலில் சுற்றிக் கழற்றியபடி பேசிக் கொண்டிருந்தாள்..
"இன்னும் இந்தப் பழக்கத்தை விடலையா..?"
ரவிச்சந்திரன் அதட்டியதும் அவசரமாக வீணாவின் சேலை முந்தானையை விட்டு விட்டாள்.. வீணா செல்ல கோபத்துடன் மகனை முறைத்தாள்..
"உனக்கு என்னடா பொறாமை..?"
"பின்னே..? நீங்க என்னோட மாம் ஆச்சே.."
"அவளுக்கு நான் அத்தையாக்கும்.."
"இவளுக்கு ரொம்பத்தான் செல்லம் கொடுக்கறிங்கம்மா.. ஐ அப்ஜெக்ட் இட்.."
கோபப்படுபவனைப் போலச் சொன்னவனின் முகத்தில் துளிக்கூட கோபமில்லை.. ஆட்சேபமில்லை.. பிரியத்துடன் அவளை வருடிக் கொடுத்தது அவன் பார்வை.. அவனுடைய தாயின் பாசத்தை மௌனப் புன்னகையில் அங்கீகரித்தான்..
'இவன் மனது பெரிது..' என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி..
விசாலமானதுதான் அவன் மனது.. வீட்டை விட்டு ஓடி வந்தவளுக்கு அடைக்கலம் கொடுத்து, வேலை கொடுத்து, அவள் தங்குவதற்கு வீட்டில் இடமும் கொடுத்திருக்கிறான்.. இவனைப் போல யாரிருப்பார்..?
"அம்மை விளிச்சு.." ஓமனாக் குட்டி ஓடி வந்தாள்..
அந்த வீட்டிலிருக்கும் அனைத்துப் பெண்களம் அவளுக்கு அம்மைதான் என்று ரம்யமாலினியின் காதோடு சொன்னாள் நந்தினி.. அதனால் எந்த அம்மை என்ற குழப்பம் ஏற்படுகிறது என்றாள்.. அப்படியல்ல என்று மறுத்தாள் ரம்யமாலினி..
"நீங்க இப்பத்தானே வந்திருக்கீங்க.."
"நான் வந்து ரொம்ப நாளாகியிருச்சு ரம்யா.."
"நாளை எண்ணிக்கிட்டு இருக்கீங்க போல.. நீங்க வருகிறதுக்கு முன்னால் நாங்களும்.. நாங்களும்ன்னா நானும் அம்மாவும்ன்னு அர்த்தம்.."
"நீங்களும்..?"
"நாங்களும் நாள்களை எண்ணிக்கிட்டுத்தான் இருந்தோம் நந்தினி.. நீங்க வந்த பின்னாலே நாள் ஓடறதே தெரியலை.. இறக்கை கட்டிக்கிட்டுப் பறக்குது.. உங்ககிட்ட ஒரு பாஸிடிவ் எனர்ஜி இருக்கு நந்தினி.."
"சும்மா எதையாச்சும் சொல்லனும்னு சொல்லாதீங்க.. உங்க அண்ணன் வாயைத் திறந்தாலே நெகடிவ் பாயிண்ட்ஸகித்தான் அடுக்கிறார்.. அவளுக்குத் தெரிகிற நெகடிவ் பாயிண்ட்ஸ் உங்களுக்குத் தெரியாம இருக்கிறது ஆச்சரியம்தான்.."
"பிகாஸ்.. அண்ணன் உங்களுக்கு பாஸ்.. நான் உங்க பிரண்ட் தட்ஸ் ஆல்.."
தலையைச் சாய்த்துச் சிரித்த ரம்ய மாலினியைப் பார்த்த போது இவளிடம்தான் உயிர்ப்பு சக்தி இருக்கிறது என்று பிரமித்தாள் நந்தினி..
இவள் இருக்குமிடம் உயிர்ப்புடன் இருக்கும்.. அதை ஏன் இவள் உணரவில்லை..?







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,97,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -124
எண்ணியிருந்தது ஈடேற -124
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera124.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera124.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy