எண்ணியிருந்தது ஈடேற -139

139 'w' வடிவ மலைப்பாதையில் ரவிச்சந்திரனின் கார் மலையை விட்டுக் கீழிறங்கிக் கொண்டிருந்தது.. அது சுகமான கார்ப் பயணம் என்று ...


139


'w' வடிவ மலைப்பாதையில் ரவிச்சந்திரனின் கார் மலையை விட்டுக் கீழிறங்கிக் கொண்டிருந்தது.. அது சுகமான கார்ப் பயணம் என்று தோன்றியது நந்தினிக்கு.. அருகிலிருந்த ஆணழகனை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள்.. அடர் நீலத்தில் சட்டையும் ஆகாய நீலத்தில் ஜீன்ஸீம் அணிந்திருந்தான்.. கண்களில் கூலிங்கிளாஸ்.. சன்னமான விசிலோடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..
அலையடிக்கும் அவனழகில் படகாக மிதந்தது அவள் மனம்.. அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.. யதேச்சையாக அவள் பக்கம் திரும்பியவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவளது பார்வையைக் கண்டு புருவங்களை உயர்த்தி இறக்கிக் கிறங்க வைத்தான்..
'ஆத்தி...!'
இமைகளை மூடித் தன் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்ட நந்தினி.. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் ஏதாவது ஒன்று ஆகும் என்று சாலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்..
கேரளத்தின் பசுமை அவள் மனதை குளிரச் செய்தது.. எங்கு பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடந்தது..
'இப்படியிருந்தா பின் ஏன் கேரளாவை கடவுளின் தேசம்ன்னு கொண்டாட மாட்டாங்க..'
சாலையின் இருபக்கமும் கொடி வீடுகளைப் போல அடர்ந்திருந்த மலர்ச்செடிகள்.. ஓங்கி உயர்ந்திருந்த மரங்கள்.. அவற்றை மறைத்துக் கவிந்திருந்த பனிப் புகை யென்று அது பணிதேசம் போல காட்சியளித்தது..
கேரளத்தின் இயற்கையெழிலில் மனம் மயங்கினாள் நந்தினி.. தஞ்சைக்கு வரச் சொல்லி அவளுடைய பெற்றோர் அழைக்கும் போது எப்படி இந்த இயற்கையை விட்டுப் பிரிவாள் என்று ஏக்கம் கொண்டாள்.. இயற்கையழகில் மனம் லயிப்பது கூடப் போதையில் மூழ்குவதைப் போன்றதுதான்.. எளிதில் மீண்டு வர மனம் வராது.. இயற்கை மிகப் பெரும் போதை..
எதற்கோ காரின் ஜன்னல் கதவுகளைத் திறந்து மூடினான் ரவிச்சந்திரன்.. பனி நிரம்பிய குளிர்காற்று அவள் முகத்தில் அப்பி விலகியது.. சிலிர்த்துப் போனாள்
நந்தினி.. மாசில்லாத காற்றும்.. கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமையும் கொண்ட இயற்கையென்பது மிகப் பெரும் வரம்.. அது கேரளத்து மக்களுக்குக் கிடைத்திருக்கிறது..
"கொடுத்து வைத்தவங்க.." வாய் விட்டுச் சொல்லி விட்டாள்..
"யார் கொடுத்து வைத்திருக்காங்க..? எதைக் கொடுத்து வைத்திருக்காங்க..?" காரை ஓட்டியபடி அவள் பக்கமாக திரும்பிக் கேட்டான் ரவிச்சந்திரன்..
"கேரளத்து மக்களைத்தான் சொல்கிறேன்.. இப்படியாப்பட்ட ஊரில வாழ கொடுத்து வைத்திருக்கனும்.."
ரவிச்சந்திரன் அவளைப் பார்த்த ஆழ்ந்த பார்வையில் அவளுக்கு மூச்சுத் திணறல் உண்டானது.. பார்வைகள் புதிரானவை.. அதிலும் ரவிச்சந்திரனின் பார்வைகள் புதிரிலும் புதிரானவை.. புதிதிலும் புதிதானவை.. அவனுடைய பார்வைப் பின்னலில் சிக்கிவிட்டால் மனம் மீண்டு வருவது கடினம்..
"நீயும் கெடுத்து வைத்தவளா ஆகி விட வேண்டியது தானே..? நீ கொடப்பதை வாங்கி வைத்துக்கத்தான் நான் காத்திருக்கிறேனே.."
'நினைத்தேன்..'
உதட்டைக் கடித்தபடி மௌனமானாள் நந்தினி.. எங்கே சுற்றினாலும் பேச்சு இங்கேதான் வந்து நிற்கிறது.. ஒன்று கோபப்படுவான்.. இல்லையென்றால் கொஞ்சுவான்.. இரண்டில் அவன் எதைச் செய்தாலும் நந்தினியின் பாடுதான் திண்டாட்டமாகி விடுகிறது.. அவனது கோபத்தையும், வேகத்தையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
பச்சைப் போர்வையைப் போர்த்தியதைப் போன்ற ரம்யம் கொண்ட கேரளத்துச் சாலைகளின் அழகு அவளை ஈர்த்தது.. வயநாட்டின் மலைப்பாதை சீரானது.. ஹேர்பின் பெண்டு வளைவுகள் இல்லாத சுகமான மலைப்பாதை பயணம்.. இருபக்கமும் அடர்ந்திருந்த இளம் பச்சை செடிகளின் இலைகளை கிள்ள வேண்டும் போல இருந்தது.. அவனிடம் சொன்னால் செடிகளுக்கு வலிக்காதா என்று அதட்டுவான்.. மண்ணின் மைந்தன்.. அவனுடைய கோபத்துக்கும், முரட்டுத்தனத்துக்கும் செடிகளுக்கு வலிக்கும் என்ற மென்மையான உணர்வுகளுக்கும் எதிர்மறைப் பொருத்தம் என்று நினைத்துக் கொண்டாள் ரவிச்சந்திரன் 'மாறுபட்ட உணர்வுகள், ஆளை ஈர்க்கும் அழகு என்று அந்த மாயக்கண்ணனைப் போல மனதையும் மதியையும் மயகுகிறான் இவன்..' நந்தினி சொக்கிப் போனாள்..
சொக்குப்பொடி போட்டு அவளை சொக்க வைக்கும் சொக்கநாதனான அவன் அடிக்கடி அவளைப் பார்த்து இமைகளைச் சிமிட்டி மயக்கத்தில் ஆழ்த்தினான்..
அந்த வசீகரனின் ஆளை மயக்கும் அற்புத அழகு மனதை கொள்ளை கொள்வது.. நந்தினியின் மனமும் கொள்ளையடிக்கப் பட்டது.. மனதை மீட்க அவள் போராடிக் கொண்டிருந்தாள்..
பனிப்புகை சூழ்ந்த சாலையின் நடுவே அனாசியமாக சென்றது கார்.. வேகத்தைக் குறைக்காமல் ஓட்டியவனின் தீரத்தில் அவள் லயித்தாள்..
"என்ன யோசிக்கிற..?"
"ஒன்னுமில்லை.."
"அப்படின்னு நீ சொன்னா நம்பிடுவேனா..? நீ என்ன நினைக்கிறேன்னு நான் சொல்லவா..?"
அவனைத்தான் நினைக்கிறாள் என்பதைச் சொல்லி விடுவானோ.. அரண்டு போனாள் நந்தினி..
"கோழிக்கோடு ரயில்வே ஜங்சனுக்குப் போய்க்கிட்டு இருக்கோமே.. அப்படியே மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில தாவி ஏறி வயநாட்டை விட்டு ஓடிப் போயிரனும்னு நினைத்துக் கொண்டிருப்ப.." அவன் முகம் இறுகியது..
நந்தினி திகைத்தாள்.. எதற்கெடுத்தாலும் அவள் சொல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் வந்து நிற்கும் கோழிக்கோடின் ரயில் நிலையத்திற்குத்தான் அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.. அவன் சொல்வதைப் போல ரயிலில் தாவி ஏறி வயநாட்டை விட்டு ஓடிப் போய் விட வேண்டும் என்று ஏன் அவளுக்குத் தோன்றவில்லை..?
"என்ன..? நான் சொன்னது சரிதானே..?"
"நீங்க என்னைக்குத் தப்பாச் சொல்லியிருக்கீங்க.."
"ஸோ.. நான் சொன்னதைப்போல எஸ்கேப் ஆகிறதைப் பத்தித்தான் பிளான் பண்ணிக்கிட்டு இருந்திருக்க.."
"யெஸ் பாஸ்.."
"உன்னை.."
முகம் கடுகடுக்க பற்களை நறநறத்தான் ரவிச்சந்திரன்.. சிடுமூஞ்சி என்று மனதுக்குள் அழகு காட்டிக் கொண்ட போதும்..
'கடுகடுன்னு முகத்தில முள்ளைக் கட்டிக் கிட்டாலும் நல்லாத்தான் இருக்கான்..' என்று ஜொள்ளியது அவள் மனம்..
அவன் மீதான ஆசையில் அவள் இதழ்களில் இளநகை அரும்பியது.. கிட்டாதாயின் வெட்டென மறக்க வேண்டும்தான்.. இங்கே எட்டாக்கனி அவளுக்குக் கிட்டுகிறது.. இருந்தும் அதை ஏற்றுக் கொள்ள இதயம் ஏன் அஞ்சுகிறது..?
"மனதுக்குள்ள என்னைத்தானே திட்டுகிற..?"
'போடா.. நீயும் உன் ஷெர்லெக் ஹோம்ஸ் கண்டு பிடிப்பும்..'
அவளையுமறியாமல் அவள் உதட்டைச் சுழித்து அழகு காட்டி விட்டாள்.. விழிகள் மின்ன..
"ஏய்ய்.." என்றான் அவன்..
"ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க பாஸ்.." என்றாள் அவள்..
கடுகடுப்பு மாறி சிரித்த முகமாகி விட்டான் அவன்.. சன்னமான விசிலொலி திரும்பியிருந்தது.. வயநாட்டு மலையிலிருந்து இறங்கி கோழிக்கோடில் கார் நுழைந்த போது அவள் எக்கி எக்கி வேடிக்கை பார்த்தாள்.. அங்கே கழிந்த நாள்களின் மலரும் நினைவுகள் அவள் மனதில் சிறடித்து விரிந்தன..
"பார்த்து.. விழுந்து விடப் போகிற.." கிண்டலடித்தான் ரவிச்சந்திர..
"யாழ் ஹோட்டலுக்குப் போவோமா பாஸ்.." ஆவலுடன் கேட்டாள் நந்தினி..
அவளை மாற்றுடைகளை எடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தான்... கோழிக்கோட்டில் தங்கப் போகிறார்களா என்ற ஆவல் கலந்த வினா நெஞ்சில் எழும்பிய பேதும் அவனிடம் அதைக் கேட்காமல் மாற்றுடைகளை ஒரு லெதர் பேக்கில் திணித்துக் கையில் எடுத்துக் கொண்டாள் நந்தினி.. அவனிடம் கேட்டால் எப்போது பார்த்தாலும் ஊரைச் சுற்றிக்கிட்டே இருக்கனுமா என்று கேட்டாலும் கேட்டு வைப்பான். அவன்தான் எந்த நேரம் எதை கேட்டுப் பிடுங்குவான் என்று தெரிந்து தொலைக்க மாட்டேன் என்கிறதே.. நீ வேலை பார்க்க வந்தயா இல்லை ஊர் சுற்ற வந்தாயா என்று கடித்து வைத்தால் அவள் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வாள்..?
அவளை மாற்றுடைகளை பேக் பண்ணச் சொல்லி விட்டு அவன் வீசின கை வெறுங்கையாக ஹாயாக கையை உதறிக் கொண்டு கூலிங்கிளாஸ் சகிதம் கிளம்பி விட்டான்..
'என்னை மட்டும் எங்காச்சும் பார்சல் பண்ணிக் கடத்தி விடப் போகிறானோ..?' அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது..
எங்கே அனுப்பி வைத்தாலும் அஜந்தா இல்லாத இடம் அவளுக்கு சொர்க்கபுரிதான் என்றாலும் அங்கு ரவிச்சந்திரன் இல்லாவிட்டால் சொர்க்கம் சொர்க்கமாக இருக்காதே..
இதில் வேறு உத்ராவும் வினித்தும் தேநிலவு கொண்டாட வயநாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்..
'உத்ரா.. உன்னை மீட் பண்ணுவேனாடி..?'
நந்தினி மனதுக்குள் புலம்பவே ஆரம்பித்து விட்டாள்.. குழப்பமான அவள் முகத்தைப் பார்த்து விட்டு விளக்கம் கேட்ட ரம்யமாலினி விழுந்து விழுந்து சிரித்து வைத்தாள்..
"இவ்வளவு இன்னொஸெண்டாவா இருப்பீங்க..? அண்ணனை என்னன்னு நினைச்சீங்க..?"
'அது என்னென்னவோ நினைப்பு மனசில ஓடுது.. என்னன்னுதான் தெளிவாத் தெரிய மாட்டேங்குது..'
"யாழ் ஸ்டார் ஹோட்டல்ஸோட ஓனர்.. யாழ் ஹோட்டல்லில் அண்ணனுக்குன்னு தனி ரூமும்.. பேமிலிக்குன்னு தனி ஷீட்டும் இருக்கும்.. டைனிங் ஹாலும் அப்படித்தான்.."
"இதுதான் எனக்குத் தெரியுமே.."
"அப்போ ஏன் அண்ணன் மாத்திக்க டிரஸ் பேக் பண்ணிக்கலை அப்படிங்கிறதும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே.."
"அதுதானே தெரியலை.."
நந்தினி பரிதாபமாய் விழித்து வைக்க..
"சமர்த்து.." என்று சிரித்தாள் ரம்யமாலினி..
நந்தினி சமர்த்தாய் இருப்பது சிரிப்புக்குரிய விசயமா என்ன..?
"அண்ணனுக்கு ரூம் இருக்கிறப்ப.. அங்கே மாத்திக்கிறதுக்கான டிரஸ்ஸஸீம் இருக்காதா..?"
"அப்படியா.. அவருக்குன்னு இருக்கிற ரூம்களில மாத்திக்கிறதுக்கான டிரஸ்ஸீம் ரெடியா இருக்குமா..?"
"இருக்கும்.. அண்ணன் திடிர்.. திடிர்ன்னுதான் ஹோட்டல் விசிட்டுக்குப் போகும்.. பிளான் பண்ணிப் போகாது.. ஸோ.. அதுக்கான திங்ஸ் எல்லாமே அந்தந்த ஹோட்டல்ஸ் ரூமில ரெடியா இருக்கும்.. டிரஸ் உட்பட.."
"வாவ்.. சூப்பர் மேன்தான்.."
"இதை இன்னுமா நீங்க தெரிஞ்சுக்கலை..?"
ரம்யமாலினி என்னவோ விளையாட்டாகத்தான் கேட்டாள்.. நந்தினிக்குத்தான் என்னவோ போல் ஆகிவிட்டது.. ரவிச்சந்திரனின் உயரத்தை அவள் தெரிந்து கொள்ளாமலே சிறுபிள்ளைத்தனமாய் விளையாடிக் கொண்டிருக்கிறாளோ..
'ஸோ வாட்..?' மனதுக்குள் வீம்பு எழுந்தது..
அவன் பெரிய அப்பாடக்கராகவே இருக்கட்டுமே.. அவனிடம் நந்தியென்ன நிரந்தரமாகவா வேலை பார்க்கப் போகிறாள்..? செல்வச் செழிப்பு மிக்க மேகநாதனின் மகள் இத்தனை நாள் செக்கரட்டரி வேடம் போட்டதே பெரிது.. மேகநாதனின் மனம் மாறிய அடுத்த நொடியில் தஞ்சைக்கு இளவரசியாக பறந்து விடுவாளே..
"தெரிந்துக்காமத்தான் விட்டுட்டேன் ரம்யா.."
"இனித் தெரிந்துக்கங்க.."
இதையும் ரம்யமாலினி விளையாட்டாகத்தான் சொன்னாள்.. நந்தினியின் மனதில்தான் புதுப்புது அர்த்தங்கள் தோன்றி வைத்தன.. அவை காரில் போய் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவள் மனதில் சுழன்று கொண்டிருந்தன..
"யாழ் ஹோட்டலோட ஓனரைப் பார்த்துக் கேட்கிற கேள்வியா இது..?"
அப்படிக் கேட்கக் கூடாதா கேள்வியையா அவள் கேட்டு விட்டாள்..? யாழ் ஹோட்டலில் தங்கப் போகிறோமா என்றுதானே கேட்டாள்..?
"ஏன் பாஸ்..?"
"ஏற்கனெவே சொல்லியிருக்கேன் நந்தினி.. என் ஹோட்டல்ஸை செக் பண்ண நான் தனியா டேஸ் பிக்ஸ் பண்ணி வருவதில்லை.. எப்போ எந்த ஊரில் இருக்கிறேனோ அப்போ.. அந்த ஊரில் இருக்கிற என்னோட ஹோட்டல்லில் ஸ்டே பண்ணி செக் பண்ணுவேன்.. என்னோட விசிட் சர்ப்ரைஸ் விசிட்டாத்தான் இருக்கும்.. மனசிலாயி.."
"மனசில் வைச்சுக்கிட்டேன் பாஸ்.."
"என்னைத்தானே.."
அவன் திரும்பி கவர்ச்சிகரமாய் கண்களைச் சிமிட்டியதில் அவள் மனம் பொங்கியது.. அழகன் இவன் என்று மயங்கியது..
'பேரழகன்..!'
அந்தப் பேரழகன் பார்வையிட உலகத்தில் எத்தனையோ பேரழகிகள் காத்துக் கொண்டிருக் கிறார்களே.. அவர்களை விட்டு விட்டு ஒழுங்காய் தலையைக் கூட வாரிக் கொள்ளாத நந்தினியை ஏன் பார்வையிடுகிறான்.?
இந்தக் கேள்விக்குத்தான் நந்தினி விடை தேடிக் கொண்டிருந்தாள்..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -139
எண்ணியிருந்தது ஈடேற -139
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-139.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-139.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy