எண்ணியிருந்தது ஈடேற -138

138 "வினித் என்னுடைய பிரண்ட்.. அவரோட வொய்ப் உத்ரா நந்தினியின் பிரண்ட்.. அவங்க இரண்டுபேரும் கேட்டுக்கிட்டதாலேதான் நந்தினிக்கு நான...


138

"வினித் என்னுடைய பிரண்ட்.. அவரோட வொய்ப் உத்ரா நந்தினியின் பிரண்ட்.. அவங்க இரண்டுபேரும் கேட்டுக்கிட்டதாலேதான் நந்தினிக்கு நான் வேலை கொடுத்தேன்.. இந்த விளக்கம் போதுமா தாத்தா.. இல்லை.. இன்னும் கொஞ்சம் வேணுமா..?"
ரவிச்சந்திரனின் இடக்கான பேச்சில் அருள்மொழிவர்மனே வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது யாழினியால் என்ன கேட்க முடியும்..?
எரிச்சலுடன் அவள் மௌனமானாள்.. அஜந்தாவால் அப்படியிருக்க முடியுமா..பிரச்னை வெடிக்கும் என்று பார்த்தால் கேள்வி கேட்ட பாட்டி வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டாளே..
ஆதலினால் அஜந்தா வாய் திறந்தாள்..
"அது எப்படி அத்தான்..கரெக்டா உங்க பிரண்டோட வொய்ப் உங்க செக்கரட்டரிக்கும் பிரண்டா இருக்கா..எங்கேயோ இடிக்குதே.."
தங்கையின் குத்தலான பேச்சை ரசித்துச் சிரித்தான் அபராஜிதன்.. ரவிச்சந்திரனின் கண்கள் இடுங்கின.. சிரித்த முகமாய் ரவிச்சந்திரனைப் பார்த்தவன் அவன் பார்த்த பார்வையில் அரண்டு போனான்.. தொண்டையில் இருந்த உணவு அங்கேயே தேங்கி நின்று கொண்டதில்..
"விக்.. விக்.. விக்.." என்று கண்களில் நீர் தளும்ப விக்கித் தள்ளி விட்டான்..
"வெள்ளம் கழிச்சு மோனே.." அவந்திகா அவசரமாக மகனின் கையில் தண்ணீர் தம்ளரைத் திணித்தாள்..
ஒருவழியாய் தொண்டையில் சிக்கியிருந்த உணவை உள்ளே தள்ளி அவன் ஆசுவாசமாகும்வரைக் காத்திருந்த ரவிச்சந்திரன்..
"எதுக்குச் சிரிச்ச..?" என்று விசாரித்தான்..
"நத்திங் அத்தான்.."
"என்னைத்தை நத்திங்..உன் தங்கையென்ன ஜோக்கா சொல்லிட்டா..ரசிச்சுச் சிரிக்கிற..ஜோக் அடிக்கிற பிறவியா உன் தங்கை..?"
"அது.. வந்து.. அத்தான்.."
"நீயெல்லாம் வாயைத் திறந்து பேசவே கூடாது.. சிரிச்சு வைக்கிற..எதனால் இந்தச் சிரிப்பு..உன்னை வயநாட்டு அரண்மனையில கால் பதிக்க விட்டதிற்கா..?"
அபராஜிதனின் சிவந்த முகம் அவமானத்தில் சிறுத்து விட்டது.. டைனிங் ஹாலில் நந்தினியும் ரம்யமாலினியும் இருந்தார்கள்.. அவர்கள் முன்னால் ரவிச்சந்திரன் அவனை அவமானப் படுத்தி விட்டதில் நிலை குலைந்தாள்.. அவனால் தலை நிமிர முடியவில்லை..
"நீ ஆண்பிள்ளையென்பதால் மும்பைக்கு அனுப்பி வைத்தேன்.. உன் தங்கை வஞ்சகத்திலும் சூழ்ச்சியிலும் உன்னைவிட ஆயிரம் அடி அதிகமாக பாய்வாள்.. இருந்தும் என்ன செய்து தொலைக்க.. இவள் பெண்ணாகப் பிறந்து தொலைத்து விட்டாளே.. அரண்மனையில் இவள் இருப்பதை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது..
இந்த லட்சணத்தில் இவள் கமெண்ட் அடிக்கிறாள்.. நீ சிரிக்கிறாய்.. இது சரிப்படாது.. நீ நாளைக்கே மும்பைக்கு கிளம்பு.. போகும்போது உன் அருமைத் தங்கையையும் உன் குடும்பத்தையும் கையோடு அழைத்துக் கொண்டு போ.. உன் தாத்தா பாட்டியையும் சேர்த்துத்தான் சொல்றேன்.."
'உன் தாத்தா பாட்டியா..?' அருள்மொழிவர்மனுக்குச் சகிக்கவில்லை..
ரவிச்சந்திரனின் தாத்தாபாட்டியென்பதில் கிடைக்கும் பெகுமானம் (மதிப்புமரியாதை) அபராஜிதனின் தாத்தாபாட்டியென்பதில் கிடைத்து விடுமா..?
"ரவி.."
"நீங்க சும்மாயிருங்க தாத்தா.. ஆரம்பித்து வைக்கிறது பாட்டி.. அப்புறம் இவங்களுக்கு பயம் எப்படி வரும்..நந்தினியும் என் பிரண்டோட வொய்பும்தானே பிரண்ட்ஸ்..நானும் அந்தப் பெண்ணும் பிரண்ட்ஸில்லையே.. இதுக்கு உங்க பேத்திக்கு எங்கேயோ இடிக்குதாமே.. இவளோட ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் உட்கார வைத்துத் தாங்குகிறேனில்ல..இடிக்கத்தான் செய்யும்.."
நந்தினி விழியுயர்த்தி அஜந்தாவைப் பார்த்தாள்.. அதைப் பார்த்து விட்ட அஜந்தா ஆவேசம் கொண்டாள்..
அவளை இந்த நந்தினி இளப்பமாக பார்ப்பதா..?
"வேண்டாம் அத்தான்.. எங்க அம்மை அருள்மொழிவர்மனோட மோளாக்கும்.. இந்த அரண்மனையில பிறந்து வளர்ந்தவங்களாக்கும்.."
"அந்தக் கொடுமையினாலதான் அருள்மொழிவர்மன் இந்த அரண்மனையை வித்து உங்கப்பா பட்ட கடனை அடைச்சாரு.. உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னாப் புரியாதா..தினமும் சொல்லிக்கிட்டே இருந்தாலும் அடங்க மாட்டேங்கறியே.."
"அத்தான்.."
"அறஞ்சேன்னா பல்லைக் கழட்டி விடுவேன்.. சட்டமா பேசற..இந்தச் சட்டத்தை உங்கப்பா வீட்டிலே போய் பேசு.. என் அரண்மனையிலே பேசாதே.."
அஜந்தா எதையோ பேசப் போனாள்.. கலவரத்துடன் அவளது கையை அழுத்தித் தடுத்தாள் அவந்திகா.. அபராஜிதன் வந்து தொலைத்திருக்கிறான்.. அந்த கோபத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அபராஜிதனோடு அவந்திகாவின் குடும்பத்தை மும்பைக்கு பிளைட் ஏற்றி விடும் அபாயம் இருக்கிறது..
"எதியும் பறயாண்டாம் மோளே.." முணுமுணுத்தாள்..
அஜந்தா அடங்கித் தொலைத்தாள்.. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவள் சன்னமாக முணுமுணுத்ததில் ரவிச்சந்திரன் இமைக்காமல் ஓர் பார்வை பார்த்தான்..
"மோளே.." அவந்திகா கெஞ்சினாள்..
அஜந்தாவின் முணுமுணுப்பும் நின்று விட்டது..
'இவன் கம்மாண்டரேதான்..நந்தினி மனதுக்குள் சிலாகித்தாள்..
'எப்படித்தான் அத்தனைபேரையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறானோ..அவளுக்கு வியப்பாக இருந்தது..
"இப்பச் சொன்னதுதான் தாத்தா.. வினித்தும் உத்ராவும் ஹனிமூனுக்கு வந்து போகிறவரைக்கும் இந்த அரண்மனையில யாரும் வாயடிக்கிற வேலையை வைத்துக்கக் கூடாது.. சத்தமா மூச்சு விட்டாக்கூட நான் நானா இருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்.."
"அதிக்கெந்து ரவி.. அங்ஙனமே இருந்தானு.. நினக்கு பெந்துன்னா எனிக்கும் அங்ஙனதானு.."
"அவர் பெந்தில்ல தாத்தா.. பிரண்ட்.."
"வல்லதும் ஒந்நு.. நினிக்கு ஸ்nநிகிதமெண்டா.. எனிக்கும் அதே.."
அஜந்தா தலையில் அடித்துக் கொண்டாள்.. கூர்மையான ரவிச்சந்திரனின் பார்வையை புறக்கணித்து அருள்மொழிவர்மனைப் பார்த்து..
"உங்க வயதென்ன..வரப் போகும் ஆளின் வயதென்ன..அந்த ஆளுக்கு இப்போத்தான் மேரோஜியிருக்கு.. ஹனிமூன் கொண்டாட வரப் போகிறான்.. நீங்க பேரன்பேத்தி எடுத்து கொள்ளுப் பேரன்பேத்திகளையும் பார்க்க ரெடியா இருக்கீங்க.. உங்களுக்கு அவன் பிரண்டா..ஏன் தாத்தா இப்படி..?"
"ஸ்நேகிதம் கொள்ள வயசு தடையில்லையல்லோ.."
"என்னவோ போங்க.. சொல்கிறது ரவியத்தானில்ல.. நீங்க இதுவும் பேசுவீங்க.. இன்னமும் பேசுவீங்க.."
எப்படித்தான் இவளால் எந்தப் பேச்சையும் கேட்காததைப் போல இயல்பாக தட்டி விட்டுவிட்டுப் பேச முடிகின்றதோ என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் நந்தினி..
அஜந்தா மட்டும் இருந்து பேச்சு வாங்கியிருந்தால் பரவாயில்லை.. அனைவரும் அங்கிருக்கிறார்கள்.. பணியாள்கள் வேறு... அனைவரின் முன்னாலும் ரவிச்சந்திரன் பேசித் தெளித்திருக்கிறான்.. இவள் எதுவும் நடக்காததைப் போலப் பெரியவரை கேலி செய்கிறாள்..
அஜந்தா எப்படியோ தட்டி விட்டுப் போகிறாள்.. அதைப் பற்றி ஆச்சரியப்பட்டு நந்தினிக்கென்ன ஆகப் போகிறது..உத்ராவும்வினித்தும் வந்து போகிறவரை எவரும் வம்பு வளர்க்காமல் இருந்தால் சரி.. அவளுக்கு அதுதான் வேண்டும்..
"கவலையே படாதீங்க.. யாரும் வாயைத் திறக்க மாட்டாங்க.." தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது சொன்னாள் ரம்யமாலினி..
ரவிச்சந்திரனுடன்தான் தோட்டத்தில் உலவுவாள் நந்தினி.. அவன் இல்லாத பொழுதுகளில் ரம்யமாலினி வந்து சேர்ந்து கொள்வாள்.. அவன் இருக்கும் போது அவள் வருவதில்லை.. அது ஏனென்று நந்தினிக்குப் புரிய வில்லை..
மாடி ஹாலில் இரவு உணவுக்குப் பின்னால் நந்தினி உட்கார்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்க்கும் போது அங்கே அரட்டைக் கச்சேரி களைகட்டும்.. வீணாவும் ரம்யமாலினியும் வந்து விடுவார்கள்.. ரவிச்சந்திரன்தான் நந்தினியின் பின்னாடியே வந்து விடுவானே.. அவனும் ரம்யாவும் சேர்ந்து கொண்டு நந்தினியைக் கலாய்ப்பார்கள்.. நந்தினி வீணாவிடம் தஞ்சம் புகுவாள்.. வீணா நந்தினிக்கு ஆதரவாக பிள்ளைகளிடம் சண்டைக்குப் போவாள்..
அஜந்தா இல்லாத பொழுதுகள் இனிய பொழுதுகளாகத்தான் இருந்தன.. மாடி ஹாலில் நந்தினி இருக்கும் போது அஜந்தா வரத்தான் செய்தாள்.. வம்பு வளர்க்கத்தான் முயன்றாள்.. அவள் வாயைத் திறந்தவுடனே நந்தினி தயாராக வைத்திருந்த பஞ்சை எடுத்து இரு காதுகளிலும் அடைத்துக் கொண்டதில் அவளுடைய முகம் விகாரமாகி கோணிப் போனது.. நந்தினி செய்ததை யாழினியிடமும் சொல்ல முடியாது.. அவள் தரையைக் கால்களால் உதைத்து விட்டுப் போன பின்பு மறைவிடத்தை விட்டு வெளியே வந்த ஓமனா ஓடோடிப் போய் ரம்யமாலினியிடமும் வீணாவிடமும் அந்தச் செய்தியை ஒலி பரப்பி விட்டாள்..
"அஜந்தா அம்மையின் வதனம் கோணிப்போயி.."
ஓமனா முகத்தைக் கோணியதை நினைத்து நினைத்துச் சிரிப்பாள் ரம்யமாலினி..
"அண்ணன் ஆர்டர் போட்டுட்டா யாரும் அதை மீற மாட்டாங்க நந்தினி.. அப்படி மீறினா பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்ன்னு அவங்களுக்குத் தெரியும்.."
"பட்.. இப்போப் பேசறாங்களே.."
"இப்போப் பேசறது வேறு.. அண்ணனோட கெஸ்ட் வந்தவுடன் பேசறது வேறு.. அண்ணன் கோபப்பட்டா என்னாகும்ன்னு அனுபவிச்சவங்க அவங்க.. அடக்கித்தான் வாசிப்பாங்க.. ஸோ.. யு டோன்ட் வொர்ரி.."
ரவிச்சந்திரனின் ஆளுமை மீது நந்தினிக்குள் ஆதர்சம் பெருகியது.. 'கம்மாண்டர்என்று மனதுக்குள் செல்லமாக அழைத்துக் கொண்டாள்.. மழையில்லாத அரண்மனையின் தோட்டம் போல அவள் மனது குளுமையாக இருந்தது..
'ஏன் இன்னும் அவன் வரலை..?'
மாடிப்படிகளைப் பார்த்தாள்.. ரவிச்சந்திரனின் காலடியோசைக்காக அவளது காதுகள் ஏங்கின.. இரவு உணவு முடிந்து நந்தினி மாடிக்கு வந்தவுடன் அவனும் வந்து விடுவான்.. வீணாவும்ரம்யமாலினியும் சற்றுப் பொறுத்துத்தான் வருவார்கள்.. அவர்கள் வருகிறவரை இருவரும் எதையாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.. எதுவென்று மனதில் பதியாது.. ஆனால் பேசிக் கொண்டிருக்கப் பிடிக்கும்..
அர்த்தமற்ற பேச்சுக்கள் கூட சில தருணங்களில் அழகானவை..
"என்ன..விழித்துக் கொண்டே தூங்குகிறாயா..?"
அவன் குரலில் மனம் துள்ள நிமிர்ந்து பார்த்தாள்.. அந்த 'ஆள் மயக்கி கம்மாண்டர்..அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான்.. ஆளை மயக்கும் பார்வை.. ஆகர்ஷிக்கும் பார்வை.. காந்தமென இழுக்கும் பார்வை..!
இருவரின் பார்வைகளும் பிண்ணிப் பிணைந்தன.. அவளைக் கடித்துத் தின்று விடுபவனைப் போல அவன் பார்த்த அந்தப் பார்வையில் அவள் முகம் சிவந்தாள்..
அதை ரசனையுடன் ஊன்றிப் பார்த்தபடி பக்கத்தில் உட்கார்ந்தான் அவன்.. அவள்மீது அவன் பட்டதில் அவள் நகர்ந்து உட்கார்ந்தாள்.. அவனும் நகர்ந்தான்..
ஒரு கட்டத்தில் அவள்மீது அவன் சரிய.. அவசரமாக விலகி எழுந்து எதிர் சோபாவில் அமர்ந்தவளுக்கு மூச்சுத் திணறுவதைப் போல இருந்தது..
இதைத்தான் அனுபவம் புதுமை என்று கவிஞர் பாடி வைத்தாரோ..?





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -138
எண்ணியிருந்தது ஈடேற -138
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-138_29.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-138_29.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy