எண்ணியிருந்தது ஈடேற -137

137 ' நாளை உத்ரா வந்து விடுவாள்.. ' நந்தினியின் மனதில் சந்தோசம் அலைமோதியது.. அவள் சென்னையில் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறிய...


137


'நாளை உத்ரா வந்து விடுவாள்..'
நந்தினியின் மனதில் சந்தோசம் அலைமோதியது.. அவள் சென்னையில் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறியதிலிருந்து இன்றுவரை நடந்து முடிந்திருக்கும் நிகழ்வுகளை உத்ராவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டு மென்று மனம் பரபரத்தது.. அடிக்கடி உத்ராவுடன் பேசிக் கொண்டிருந்தாள்தான்.. தினமும் நந்தினியிடம் பேசுவதாக உத்ரா வாக்குக் கொடுத்திருந்தாள்தான்.. ஆனால் திருமணம் பண்ணிக் கொள்ளப் போகும் மணப் பெண்ணாக அவள் மணமேடை ஏற வேண்டிய சூழலில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத சுழல் ஏற்பட்டு விட்டது.. திருமணம் முடிந்த பின்பாவது தினமும் பேசுவாள் என்று எதிர்பார்த்தாள் நந்தினி.. உத்ராவுக்கு அனைத்தும் மறந்த போய் வினித்தே சகலமும் என்று ஆகி விட்ட நிலையில் நந்தினியின் நினைவு எப்படி வரும்..?
"உத்ரா.." நந்தினிதான் போனில் அழைப்பாள்..
உத்ராவின் திருமண நேரத்தில் ஒருவாரம் போகட்டும் நந்தினி.. அதன் பின்பு உன்னிடம் தினமும் பேசுகிறேன் என்று உத்ரா சொல்லியிருந்தால் பொறுமை காத்து உத்ராவைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாள் நந்தினி.. திருமணம் முடிந்ததும் போன் செய்ய முயன்றால் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.. தினமும் முயன்று பதினைந்தாவது நாளில் சுபயோக சுபநேரத்தில் போன் உயிர்ப்பாகி..
"ஹலோ.." என்று உத்ராவின் குரல் ஒலித்ததில் உற்சாகமாகிப் போனாள் நந்தினி..
"ஏண்டி குரங்கே.. கல்யாணம் ஆனவுடனே பிரண்ட்ஸை மறந்திரனும்னு கட்டாயம் ஏதும் இருக்கா..? தினமும் போன் பண்றேன்னு பிராமிஸ் பண்ணினவதானேடி நீ.. ஒரு வாரம் போகட்டும்ன்னு சொன்ன.. இப்ப இரண்டு வாரத்துக்கு மேலேயே ஓடிப் போயிருச்சு.. ஒரு போன் பண்ணனும்னு உனக்குத் தோணிச்சா..?" என்று இவள் பாய்ந்து கொண்டிருக்க.. உத்ரா அருகில் கேட்ட வினித்தின் குரலில் கவனமாக..
"இல்லேங்க.. ஸ்ஸ்ஸ்.. நந்தினி லைனில் இருக்கிறா.. என்னது.. எந்த லைனிலா.. இந்தக் குறும்புதானே வேணாம்கிறது.. எந்தக் குறும்புன்னு தெரியலையா..? ஒன்றிரண்டுன்னு இருந்தாத்தானே சொல்ல முடியும்..? உடம்பு முழுக்க குறும்பு.. வேண்டாம்.. விட்டிருங்க.. ஸ்ஆ.. நந்தினி.. நான் அப்புறமாப் பேசறேன்.. வினித்.. உங்களை.." போன் கட்டாகி விடும்..
அடுத்துப் போன் பேச நந்தினி தயங்குவாள்.. இந்த ரீதியில் பேசிக் கொண்டிருப்பவளை எப்படித் தொந்தரவு செய்வது..? உத்ராவின் உலகம் வேறாகிப் போனதில் நந்தினியின் மனதில் தனிமைத்துயர் எழுந்தது.. உத்ராவை வினித்திடம் பறி கொடுத்து விட்டதைப் போல உணர்ந்தாள்..
மனதில் பொங்கும் உணர்வுகளை இனம் காண முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.. ரவிச்சந்திரனின் மீது அவளுக்குள் தோன்றியிருக்கும் சொந்தத்திற்குப் பெயர் என்ன..? காதலா.. இல்லை.. பாசமா..?
இதற்கு உத்ராவின் விடை என்னவாக இருக்கக் கூடும் என்று அறிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.. மனதில் அலை மோதும் இந்தத் தவிப்புகளுக்கான அடிப்படை எதுவாக இருக்கக் கூடும்..? ரவிச்சந்திரனின் காதலை நந்தினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதே சமயத்தில் அவள்மீது அவன் உரிமை பாராட்டுவதைத் தடுக்கவும் முடியவில்லை.. அது ஏன்..?
ரவிச்சந்திரனின் மீதான தனது மயக்கத்திற்கு காரணம் அழகும் கம்பீரமும் கவர்ச்சியும் நிரம்பிய ஆணழகனின் மீது ஏற்படும் இயல்பான பெண்மையின் ஈர்ப்பா..? இல்லை.. அதையும் தாண்டிய ஏதோ ஒன்றா..?
அவன் கோபம் கொண்டால் ஏன் அவள் தவித்துப் போகிறாள்.. அவளை அவமானப் படுத்தும் வகையில் அவன் பேசுகிறான்.. அடித்துத் துன்புறுத்துகிறான்.. இவற்றை எதிர்க்க எதற்காக அவள் தயங்க வேண்டும்.. அவனை விட்டுப் பிரிந்து செல்ல முடியாமல் கால்களைப் பிணைத்திருக்கும் தளை எது..?
இந்த சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள உத்ராவின் துணையை நாடினாள் நந்தினி.. உத்ராவோ அவளுடைய துணையுடன் சுகித்துக் கொண்டிருந்தாள்.. தோழிக்கு நேரம் ஒதுக்க அவளால் முடியவில்லை.. நந்தினியின் மனதில் அலையடித்தது.. பொங்கி வரும் உணர்வுப் பேரலைகளில் மூழ்கி அவள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள்.. எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசிய உணர்வலைகளைத் தோழியிடம் மட்டும்தான் பகிர்ந்து கொள்ள முடியும்..
அந்தப் பகிர்தலுக்காக காத்திருந்தாள் நந்தினி..
வினித்தும் உத்ராவும் தேநிலவு கொண்டாட வயநாட்டு அரண்மனைக்கு வரப் போகிறார்கள் என்பதை ரவிச்சந்திரன் அறிவித்த போது டைனிங் ஹாலில் அமைதி நிலவியது.. 'என் அரண்மனை' என்று ரவிச்சந்திரன் பிரித்துப் பேசியதில் கலவரம் கொண்ட அருள்மொழிவர்மன் பேரனைச் சமாதானப் படுத்த முயன்று தோற்றுப் போனார்..
பேரனிடம் கோபம் கொண்டிருந்த யாழினியின் காதுகளில் கூடுதலாக ஓர் செய்தியைச் சேர்ப்பித்தாள் அஜந்தா..
"பாட்டி.. நீங்க ஒந்நு அறியுமோ..?"
யாழினிக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.. அஜந்தா புதிர் போட்டு விளையாடும் நிலையிலா அவளது குடும்பம் இருக்கிறது..?
'ஈ பெண்குட்டிக்கு சற்றுக்கூட கிலேசமில்லா..' பல்லைக் கடித்தாள் யாழினி..
"எந்தா அஜந்தா.. நீ பப்பாவோ..? ஈ தருணத்திலதான் ஒந்நு, ரண்டு படிக்குமோ..?"
"ஞான் பறஞ்ஞு ஒற்று அதில்லா பாட்டி.."
"வேற எந்துவாம் கொச்சு மோளே.. என்னிடம் விளையாண்டாம்.. கேட்டோ.."
"ஆ நிமிசம் பாட்டி.."
"எந்துக்கு.."
"ரவியத்தாணின்ட பிரண்டு ஹனிமூனுக்கோசரம் நம்மட கொட்டாரத்துக்கு வருமெண்டு பறஞ்ஞல்லோ.."
அஜந்தா நமது அரண்மனையென்று உரிமை கொண்டாடியதில் யாழினியின் மனதிலிருந்த ரணம் ஆறிப் போனதைப் போல இருந்தது.. அஜந்தாவின் அடாவடியை ரசிக்க ஆரம்பித்தாள் யாழினி.. அந்த அரண்மனையின் மீது அவளுக்கு உரிமையில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் ரவிச்சந்திரனுக்கான எதிர்ப்புணர்வு யாழினியின் மனதில் தோன்றியிருந்தது.. அவளையுமறியாமல் அவள் அஜந்தாவுக்குத் துணை போக ஆரம்பித்து விட்டதை அவள் மனம் உணரவில்லை..
"ம்ஹீம்.. நம்மளிண்ட கொட்டாரத்துக்கு எவர் எவரோ வந்து.."
யாழினி விட்ட பெருமூச்சில் சந்தோசமாகிப்n பானாள் அஜந்தா.. பாட்டியின் மனதிலிருந்த அதிருப்தியை கண்டு கொண்டவளுக்கு வெகு திருப்தியாக இருந்தது.. அவளுக்கு இதுதானே வேண்டும்..? கலங்கிய குட்டையிலிருந்துதான் மீன் பிடிக்க முடியும்.. தெளிவாக குளத்து நீர் அஜந்தாவிற்கு உதவுமா..?
அஜந்தா வயநாட்டு அரண்மனைக்கு வீணாவையே மகாராணியென்று ஒப்புக் கொள்ள மாட்டாள்.. யாழினியையா ஒப்புக் கொள்வாள்..? ஈ கொட்டாரம் எண்ட தாத்தா, பாட்டியின் கொட்டாரம் என்று சொல்வதெல்லாம் அந்த அரண்மனையின் மீது அருள்மொழிவர்மனின் பேத்தி என்ற வகையில் அவளுக்கும் உரிமையிருக்கிறது என்று சொல்வதற்காக.. மற்றபடி யாழினியை அந்த அரண்மனையின் மகாராணி சிம்மாசனத்தில் உட்கார வைப்பதால் அவளுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது..? அவளுக்கு அவள் அந்த சிம்மாசனத்தில் உட்கார வேண்டும்.. பட்டத்து ராஜாவான ரவிச்சந்திரனை அடிமையாக்கி விழியசைவில் சுழற்றி வைக்கும் பட்டத்து ராணியாக அரசாள வேண்டும்.. அப்படியொரு தருணம் வரும்போது அவள் வீணாவுடன் சேர்த்து யாழினியையும் மூலையில் உட்கார வைப்பாள்..
இது தெரியாத யாழினி அஜந்தாவுக்கு என்ன குறையென்று மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தாள்..
வீணா மனது வைத்து அஜந்தாவை மருமகளாக்கிக் கொண்டால்தான் என்ன..? அபராஜிதனுக்கு ரம்ய மாலினியைத் திருமணம் செய்து கொடுத்து அரண்மனையோடு மருமகனாக்கிக் கொண்டால்தான் என்ன..? யாழினியின் பார்வைகள் இருவரும் சம்பந்திகளாக ஒரே அரண்மனையில் ஒன்றாக வாழ்வார்களே.. யாழினியின் பேரன்களும், பேத்திகளும் வாழ்வில் ஒன்றுபட்டு சந்தோசமாக வாழ்வார்களே.. வீணா ஏன் அதை கெடுக்கிறாள்..?
"ஈ வீணாவிண் மதி கெட்ட மனசால ரவி மாறிப் போயிட்டானல்லோ.."
"ஓ..! இதி அறிய நிங்களுக்கு இத்தினி திவசமாச்சோ..? எனிக்கும் அம்மைக்கும் எண்டைக்கோ தெரியுமே.. நிங்கதான் ஆ வீணாவுக்கு எதிரா எவர் பறஞ்ஞாலும் அவரை விரோதியெண்டு பறஞ்ஞு.."
"ஆ மனுஷி வல்லிய குணம் கொண்டவளென விஜாரம் கொண்டு... கேட்டோ.."
"அத்தினியும் வேடம் பாட்டி.."
யாழினி ஆமோதிப்பாய் தலையை அசைத்தாள்.. வீணாவைக் கொண்டாடிய மாமியார் அவள்.. அவளையும் மருமகளுக்க எதிராக திசை திருப்பி தலையை அசைக்க வைத்து விட்டாள் அஜந்தா.. நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த அவந்திகாவுக்கு மகளின் சாகச குணத்தில் பெருமை வந்தது..
'என் மோள் கைகாரியாக்கும்..'
"ஞான் பறயஞ்ஞனும்னு விஜாரம் கொண்டதை பறஞ்யாண்டாமோ..?"
"எந்தா பறயுனு கொச்சு மோளே..?"
"அத்தானிண்ட பிரண்டு ஹனிமூன் கொண்டாட நம்மட கொட்டாரத்துக்கு வருமெண்டு பறஞ்ஞல்லோ.."
"அதிக்கு எந்தா..?"
"ஆ மனுசனிண்ட யார் யார் எவருன்னு அறியுமோ..?"
"ஆ மனுஷி எவராயிருந்தா எவருக்கு எந்தா..? இதி பறயனுமெண்டா வந்து..?"
"இல்ல பாட்டி.. ஆ மனுஷி ஈ நந்தினியிண்ட பிராண ஸ்நேகிதியாமில்லோ.. கேட்டோ.."
"எந்து பறஞ்ஞு..?"
யாழினியால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.. அவந்திகாவுக்கு அது தெரியுமென்பதைப் போல முகத்தைச் சுளித்தாள்..
"நீ பறயறயது நிசமானு..?"
"நிசத்திலும் நிசம் பாட்டி.. ஆ பெண்குட்டியோட பேரு உத்ராவாம்.. ஆ மனுஷியும் ஈ நந்தினியும் காலேஜில் ஒந்நாய் படிச்சு.. ஆ மனுஷிக்கோசரம்தான் ஈ கொட்டாரத்தில விருந்து.. ரவியிண்ட் பிரண்டுன்னு பறஞ்ஞது சும்மானு.."
அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டவளா நந்தினி..? யாழினி கொதித்துப் போனாள்.. வயநாட்டு அருள்மொழிவர்மன் என்ற பெயர் பெற்றிருந்த அவளுடைய கணவரை செல்லாக் காசாக்கி மூலையில் உட்கார வைத்து விட்டு கேரளத்து வயநாட்டின் ரவிச்சந்திரன் என்று பட்டம் கட்டிக் கொண்டதுமல்லாமல் அவளையும் அருள்மொழி வர்மனையும் அரண்மனையை விட்டு அவந்திகாவின் குடும்பத்தோடு வெளியேறி விடும்படி சொல்லி விட்டவனல்லவா ரவிச்சந்திரன்..
அவளும் அருள்மொழிவர்மனும் அந்த அரண்மனையில் உரிமையில்லாதவர்களாக வாழ வேண்டும்.. எங்கிருந்தோ ஜோலி (வேலை) பார்க்க வந்த பெண்ணொருத்தி தனது தோழியை தேநிலவு கொண்டாட அரண்மனைக்கு அழைத்து சீராட்டுவாளா..?
அன்றிரவு டைனிங் ஹாலில் உத்ராவைப் பற்றிய கேள்வியை எழுப்பினாள் யாழினி..
"நினக்கு பிரண்டுன்னு பறஞ்ஞு.. பட்ஷே.. நிண்ட செக்கரட்டரிnhயாட பிரண்டோட ஹஸ்பெண்டாமல்லோ ஆ மனுசன்..? அவன் எங்ஙனம் நினக்கு பிரண்டாயி..?"
ரவிச்சந்திரன் யாழினியை உறுத்துப் பார்த்து விட்டு அருள்மொழிவர்மனிடம் திரும்பினான்.. பேரனின் புறக்கணிப்பில் யாழினியின் முகம் மாறியது.. அவள் பேரனை விட்டு விட்டு அவனைப் பெற்ற அன்னையான வீணாவை முறைத்தாள்..
ரவிச்சந்திரன்தான் யாழினியிடம் பேசுவதில்லையே.. அவன்..
"தாத்தா.." என்று ஆரம்பித்தான்..
"ஒந்றும் பறயாண்டாம் கொச்சும் மோனே.." அவசரமாக அவர் பேரனை சமாதானப் படுத்த முயன்றார்.
"கேள்வின்னு வந்தாச்சு.. பதில் சொல்லித்தான் ஆகனும் தாத்தா.." அழுத்தமாக சொன்னான் ரவிச்சந்திரன்..
அருள்மொழிவர்மன் தலை வேதனையுடன் மனைவியை முறைத்தார்.. யாழினிக்கென்ன.. பேச்சை ஆரம்பித்து விடுவாள்.. ரவிச்சந்திரனிடம் பாட்டுக் கேட்பது அவர்தானே..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -137
எண்ணியிருந்தது ஈடேற -137
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-137.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-137.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy