எண்ணியிருந்தது ஈடேற -136

136 வீணாவைப் போன்ற மருமகள் கிடைப்பதற்கு யாழினி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. அவளும் அப்படித்தான் நினைத்தாள்.. வீணாவை விட்டுக் கொ...


136


வீணாவைப் போன்ற மருமகள் கிடைப்பதற்கு யாழினி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. அவளும் அப்படித்தான் நினைத்தாள்.. வீணாவை விட்டுக் கொடுக்காமல் தாங்கிப் பேசினாள்..
ஆனால் எல்லாவற்றிலும் பொறுமையின் சிகரமாக பொறுத்துப் போன வீணா அவந்திகாவின் பிள்ளைகள் விசயத்தில் மட்டும் பொறுத்துப் போகாமல் பொங்கி எழுந்ததில் யாழினியின் மனதின் ஓரத்தில் சிறு மனத்தாங்கல் உண்டானது.. அனைத்திலும் விட்டுக் கொடுத்துப் போகும் மருமகள் தான் பெற்ற பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் கச்சை கட்டி நின்றதில் யாழினி கோபம் கொண்டாள்.. அதை மருமகளிடம் வெளிப் படுத்தவும் செய்தாள்.. யாழினி எதைக் கேட்டாலும் மறுக்காமல் பதில் சொல்லும் வீணா பிள்ளைகளின் திருமண விசயத்தில் மட்டும் மௌனம் சாதித்தாள்.. மகனைக் கேடயமாக்கி யாழினியின் முன் நிறுத்தி விட்டு அவன் பின்னால் ஒளிந்து கொண்டாள்..
எவராலும் அசைக்க முடியாத இரும்பு மனிதனை மகனாக பெற்று விட்ட கர்வம் மருமகளுக்கு என்று பொறுமித் தவித்தாள் யாழினி.. மகனைக் கட்டுக்குள் வைத்ததைப் போல பேரனைக் கட்டுக்குள் வைக்க அவளால் முடியவில்லை.. ரவிச்சந்திரன் கட்டுக்குள் அடங்காத சிங்கமாய் இருந்தான்.. ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அச்சுறுத்தினான்.. அவனுடைய தகப்பனால் கைப்பற்ற முடியாத குடும்ப அதிகாரத்தை மிக எளிதாக கைப்பற்றித் தன் வசப்படுத்திக் கொண்டான்..
அருள்மொழிவர்மனின் சிகையே ரவிச்சந்திரனின் கைபிடிக்குள் எனும்போது யாழினி எம்மாத்திரம்..?
அவளால் பேரனை எதிர்கொள்ள முடியவில்லை.. அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.. அவந்திகா சறுக்கிக் கொண்டே போக ரவிச்சந்திரன் உயர்ந்து கொண்டே போனான்.. ஒரு கட்டத்தில் யாழினியின் சொத்துக்கள் உட்பட அனைத்துக் குடும்பச் சொத்துக்களையும் அவனுடையதாக்கிக் கொண்டு அருள்மொழிவர்மனையும், யாழினியையும் அவன் தயவில் வாழ வைத்தான்..
ரவிவர்மனின் உழைப்பிலும் சொத்திலும் உரிமை கொண்டாடுவதைப் போல ரவிச்சந்திரனின் உழைப்பிலும், சொத்திலும் உரிமை கொண்டாட முனைந்த யாழினியையும், அருள்மொழிவர்மனையும் தள்ளி நிறுத்தி..
"என் குடும்பம்.." என்று தன் தாய், தந்தையையும் தங்கையையும் கை காட்டினான்..
ரவிச்சந்திரனின் மீது வீணாவுக்குத்தான் முதல் உரிமை என்பதில் ஆரம்பமானது வீணாவின் மீதான யாழினியின் வன்மம்.. அவந்திகாவின் பிள்ளைகளைப் பற்றி மாமனார், மாமியாரிடமோ.. கணவரிடமோ புகார் கூறாமல் வீணா தன் மகனிடம் புகார் கூறி அவன்
மூலம் அவந்திகாவின் பிள்ளைகளை கண்டித்து கட்டுக்குள் வைத்ததில் அந்த வன்மம் முற்றியது.. ரம்யமாலினியை அபராஜிதன் தொந்தரவு செய்தான் என்பதை ரவிச்சந்திரனுக்கு வீணா தெரியப்படுத்திவிட.. ரவிச்சந்திரன் அபராஜிதனை நையப் புடைத்து வயநாட்டை விட்டு நாடு கடத்தி மும்பைக்கு விரட்டி விட்டான்..
அதில் யாழினி வீணாவின் மீது ஆத்திரம் கொண்டாள்..
"எந்துக்கு ரவியிண்ட ஈ விவகாரங்கள பறஞ்ஞு..? என்னிடம் பறஞ்ஞுருந்தா ஞான் அபராஜிதன ஏனெண்டு கேட்டிருப்பேனல்லோ..?"
யாழினி கோபப்பட்டபோது வீணா நிமிர்ந்து மாமியாரைப் பார்த்தாளே ஓர் பார்வை..! அந்தப் பார்வையை அந்த ஜென்மம் முழுக்க யாழினி மறக்க மாட்டாள்.. அப்படியொர் தீர்க்கமான தீட்சண்யம் மிக்கப் பார்வையைப் பார்த்து வைத்தாள் வீணா.. குஞ்சைப் பாதுகாக்க பருந்தை எதிர்த்து நின்று போரிடும் தாய்ப் பறவையின் பார்வை அது..
யாழினி வாயடைத்துப் போனாள்.. எதிர்ப்பை வெளிப்படுத்திய மருமகளின் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.. அப்போது அருள் மொழிவர்மனும் அங்கேதான் இருந்தார்.. சர்வ வல்லமை மிக்க ரவிச்சந்திரனை மகனாக பெற்றிருக்கும் திமிரினால் வீணா அப்படிப் பார்த்து விட்டுப் போகிறாள் என்று கணவரிடம் யாழினி பொருமினாள்..
எனக்கு அவந்திகாவைப் போல தங்கை இருந்து அவளுக்கு அபராஜிதனைப் போல மகன் இருந்து நம் மகளிடம் அவன் வம்பு செய்தால் நீ என் அம்மாவை எப்படிப் பார்ப்பாய் யாழினி.. என்று அவர் கேட்டு வைத்தார்.. யாழினியால் பதில் சொல்ல முடியவில்லை..
ரவிச்சந்திரனை எதிர்க்க முடியாமல் அடங்கிப் போக நேரும் ஒவ்வொரு தருணத்திலும் வீணாவின் மீது ஓர்விதமான பகையுணர்வு ஏற்படுவதை யாழினியால் தடுக்க முடியவில்லை.. மருமகளின் குணமறிந்து சீராட்டுபவள்தான் அவள்.. மகளா, மருமகளா என்று வரும்போது அவந்திகாவின் நலனை முன்னிட்டு வீணா அவளுடைய பிள்ளைகளின் நலனைச் சற்றுப் பின் தள்ளினால்தான் என்ன என்ற நியாயமற்ற கோபம் யாழினிக்குள் எழுந்து தொலைத்தது..
நீரு பூத்த நெருப்பு என்பார்களே.. அதுபோல மருமகளின் மீது யாழினிக்கு இருந்த மெலிதான கோபத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கினாள் அவந்திகா.. அவளால்தான் அருள்மொழிவர்மனுக்கும், யாழினிக்கும் துன்பங்கள் உண்டாகின்றன என்பதை அப்படியே தலைகீழாக மாற்றி.. ரவிச்சந்திரனாலும், வீணாவாலும் அவந்திகாவும் அவளது குடும்பமும் அல்லல் படுகின்றார்கள் என்று அழுது புலம்புவாள்..
"அம்மே.. ஞான் எங்க போயி..?" என்று கேவும் அவளது கேள்வியில் யாழினியின் உயிர் துடிக்கும்..
"ஞான் அருள்மொழிவர்மனிண்ட மோள் அம்மே.. நிங்க வயிற்றில உதிச்சு.. எனிக்கு எந்து பெகுமானமும் கிட்டலயல்லோ.." என உருவேற்றுவாள்..
அவந்திகா யோகானந்தனின் மனைவி.. பிறந்த வீட்டின் அனைத்துச் சொத்துக்களையும் கபளீகரம் செய்து அருள்மொழிவர்மனின் நிம்மதியைப் பறித்தவள் என்பதை எப்போதுமே சொல்ல மாட்டாள்..
"அம்மே.. ஞான் நிங்க மோள்.." என்று அருள்மொழிவர்மன், யாழினியின் மகளாக மட்டுமே தன்னை அடையாளப் படுத்திக் கொள்வாள்..
"அம்மே... அச்சா.." என்று அவள் குரல் கொடுப்பது அன்றுதான் பிறந்த மழலை குரல் கொடுப்பதைப் போலவே இருக்கும்..
அவந்திகாவின் நினைவைத் தவிர வேறு எந்த நினைவும் யாழினியின் மனதில் வந்து விடாமல் பார்த்துக் கொண்டாள் அவந்திகா.. அவளுக்குத் தெரியும்.. அவந்திகாவின் கவலைகளை ஒன்றுக்குப் பத்தாக எடுத்துரைத்து அருள்மொழிவர்மனைப் பாடாய் படுத்தி அவந்திகாவிற்குத் தேவைக்கு அதிகமாக செய்ய வைத்து விடுவாள் யாழினி என்பது..
பரந்த மனப்பான்மை கொண்ட யாழினி மெல்ல, மெல்ல அவந்திகாவின் நலனை மட்டுமே நினைவில் கொள்ளும் குறுகிய மனப்பான்மை கொண்டவளாக மாறிப் போனாள்.. அதை உணர்ந்த அருள்மொழிவர்மனாலும் மனைவியைக் கடிந்து கொள்ள முடியவில்லை.. அவந்திகாவின் மீது அவருக்கும் பாசம் உண்டே..
என்று அபராஜிதனை ரவிச்சந்திரனிடம் சொல்லி வீணா வயநாட்டை விட்டு வெளியேற்றினாளோ அன்றிலிருந்தே யாழினிக்கும் வீணாவுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத பனிப்போர் ஆரம்பமாகி விட்டது..
"அஜந்தாவுக்கு ரவி கிட்டுமல்லோ.. பட்ஷே.. ஈ வீணா மோனிண்ட மனசில விசத்தையல்லோ விதைச்சு.. ஆ மனுஷி எத்திவசமும் நம்மட அஜந்தாவப் பத்தித் தப்புத்தப்பா பறஞ்ஞு.. பின்னே எங்ஙனம் ரவியிண்ட மனசில அஜந்தா மீது ஆக்ரஹாம் வந்து அம்மே..?"
அஜந்தாவைப் பற்றிக் குறைவாக பேசி மகனின் மனதில் வீணா விசத்தை விதைக்கிறாள்.. அதனால்தான் ரவிச்சந்திரன் அஜந்தாவை வெறுக்கிறான் என்று யாழினியிடமும் முறையிட ஆரம்பித்தாள் அவந்திகா.. ரவிச்சந்திரன் அஜந்தாவை திருமணம் செய்து கொண்டால் அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து விடும்
என்று எடுத்துரைத்தாள்.. அஜந்தா ரவியின் மனைவியாகி விட்டால் எப்பாடுபட்டாவது அபராஜிதனுக்கு ரம்யமாலினியைத் திருமணம் செய்து கொடுக்க வைத்து விடுவாள்.. அதன் பின்னால் அந்த அரண்மனை மீண்டும் அருள்மொழிவர்மனின் கைகளுக்குள் வந்துவிடும்.. யாழினியின் அதிகாரம் மீண்டு விடும்..
வயநாட்டு அரண்மனையில் யாழினியின் பேரன்களும் பேத்திகளும் சந்தோசமாக வாழ்வார்கள்.. அப்படி மட்டும் நடந்து விட்டால் ரவிச்சந்திரன் என் குடும்பம் என்று அருள்மொழிவர்மனையும் யாழினியையும் பிரித்து நிறுத்தி வீணாவைக் கூட்டுச் சேர்த்துக்
கொள்ள மாட்டான்.. இப்போதே யாழினியின் நிலைமை இப்படியாகி விட்டது.. ரவிச்சந்திரன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் யாழினியால் அந்த அரண்மனையில் இருக்க முடியுமா.. என்ற கேள்வியைத் தினம் தினம் கேட்டு உருவேற்றி விட்டாள் அவந்திகா.. யாழினியின் மனதில் பயம் வந்தது..
உண்மையில் அந்த பயம் அவந்திகாவின் மனதில்தான் இருந்தது.. ரவிச்சந்திரனின் திட்டத்தை அவளறிவாள்.. அவந்திகாவின் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து அரண்மனையை விட்டு வெளியேற்றி விட வேண்டும்.. அஜந்தாவுக்கு அவளுடைய புகுந்த வீட்டில் இடம் கிடைத்து விடும்.. அபராஜிதனுக்கு மும்பை பங்களாவையும், எக்ஸ்போர்ட் கம்பெனியையும் எழுதிக் கொடுத்து மும்பையிலேயே குடித்தனம்
வைத்து அவன் பொறுப்பில் அவந்திகாவையும், யோகானந்தனையும் அனுப்பி வைத்து விட வேண்டும்.. இதை பலமுறை ரவிச்சந்திரன் சொல்லியிருக்கிறான்.. இந்தமுறை அபராஜிதனோடு அவந்திகாவின் குடும்பத்தை மட்டுமல்ல, அருள்மொழிவர்மனையும், யாழினியையும் சேர்த்து அனுப்பி வைத்து விடவேண்டும் என்று சொல்லி விட்டான்..
"ரவி எங்ஙன ஈ விதம் பறஞ்ஞு அம்மே.. ஆ சிறு பையன் மனசில ஈ ஒர்மையுண்டுண்டு ஞான் அறியேன்.. நிங்களயும் அச்சனயும் வயநாட்டு கொட்டாரத்த விட்டு வெளியேற்றுமோ..?"
அங்கலாய்ப்பதைப் போல யாழினியின் மனதில் கொந்தளிப்பை உண்டாக்கினாள் அவந்திகா.. அவளும் அஜந்தாவும் கூட்டுச்சதி செய்து வீணாவைக் கொல்லப் பார்த்தார்கள் என்பதை யாழினி மறக்கும்படி செய்து விட்டாள்.. வீணாவும், ரவிச்சந்திரனும் கூட்டுச்சதி செய்து அருள்மொழிவர்மனையும், யாழினியையும் அரண்மனையை விட்டுத் துரத்தப் பார்க்கிறார்கள் என்று யாழினியின் மனதில் பதிய வைத்து விட்டாள்..
வீணா மனது வைத்தால் ரவிச்சந்திரனுக்கு அஜந்தாவை திருமணம் செய்து கொடுத்து விட முடியும் என்று யாழினியின் காதுகளில் ஓதினாள்.. தாயின் மீது மாறாத பாசம் கொண்ட ரவிச்சந்திரன் அப்படிச் செய்தாலும் செய்வான் என்று யாழினியின் மனதில் தோன்றி விட்டது.. ரவிச்சந்திரன் கட்டுக்கடங்காதவன்.. தனது திருமண விசயத்தில் எவர் சொல்வதையும் கேட்க மாட்டான்.. அஜந்தாவைக் கண்டாலே அவனுக்கு ஆகாது என்பதை பூசி மெழுகி மறைத்து விட்டாள் அவந்திகா.. வீணா கை நீட்டிச் சுட்டிக் காட்டும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஓர்முறை டைனிங் ஹாலில் குடும்ப அங்கத்தினர்களின் மத்தியில் அவன் அறிவித்திருந்ததை யாழினிக்கு நினைவு படுத்தினாள்..
அது சிக்கலான தருணம்.. வீணாவைக் கொல்ல அவந்திகாவும் அஜந்தாவும் திட்டம் தீட்டியதை ரவிச்சந்திரன் கண்டுபிடித்து அம்பலப்படுத்திய தருணம்.. வீணாவுக்கு ஒன்றென்றால் அவன் சும்மா விடமாட்டான் என்று கர்ஜித்த பொழுதுதான் அவன் தாய் சொல்லைத் தட்டாத தனயன் என்பதை தெளிவு படுத்தினான்.. அப்போதும் ஒன்று கூறினான்..
"அம்மா அஜந்தாவைக் கை நீட்ட மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும்.. அவங்களை யாராவது ஃபோர்ஸ் பண்ணி அஜந்தாவைக் கை நீட்டிட்டாங்கன்னா அதை மட்டும் நான் ஏற்றுக்க மாட்டேன்.. அஜந்தாவைத் தவிர எந்தப் பெண்ணை அம்மா கை நீட்டினாலும் கண்களை மூடிக்கிட்டு அவளை என் மனைவியா ஏத்துக்குவேன்.. மைண்ட் இட்.."
தெள்ளத் தெளிவாக அஜந்தாவின் மீதான அவனது வெறுப்பை ரவிச்சந்திரன் வெளிப்படையாக கூறி விட்ட பின்பும்..
"எல்லாம் ஆக்டிங் அம்மே.." என்றாள் அஜந்தா..
"ரவியிண்ட அம்மை கிழிச்சு கோட்டை ரவி என்றுமே தாண்டியதில்லையல்லோ.. வீணா மட்டும் விரல் நீட்டி அஜந்தாதான் எண்ட மருமகள்ன்னு சுட்டிக் காட்டினா ரவி அதி மீறுமோ..?"
ஏன் வீணா அதைச் செய்யக்கூடாது என்ற மாமியாரின் கோபம் யாழினியின் மனதில் மையம் கொண்டது..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -136
எண்ணியிருந்தது ஈடேற -136
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-136.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-136.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy