எண்ணியிருந்தது ஈடேற -135

135 ரவிச்சந்திரன் வரம் கொடுக்கும் வள்ளலாகத்தான் இருந்தான்.. உத்ராவின் வருகைக்கு முன் அவள் வருபதைப் பற்றி டைனிங் ஹாலில் அறிவித்தான்....


135


ரவிச்சந்திரன் வரம் கொடுக்கும் வள்ளலாகத்தான் இருந்தான்.. உத்ராவின் வருகைக்கு முன் அவள் வருபதைப் பற்றி டைனிங் ஹாலில் அறிவித்தான்..
"என்னோட பிரண்ட்..! நியு மேரிட்..! ஹனிமூனுக்காக வயநாடு வர்றான்.. என் அரண்மனையில்தான் தங்குவான்."
'என் அரண்மனை..'யில் அவன் கொடுத்த அழுத்தத்தில் டைனிங் ஹாலில் அமைதி நிலவியது.. அஜந்தாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு யாழினி வீணாவைக் கூப்பிட்டுக் கண்டித்து வைக்கும் அளவிற்குப் போய் விட்டதில் ரவிச்சந்திரன் கோபம் கொண்டிருந்தான்.. யாழினியுடன் சகஜமாகப் பேசுவதைத் தவிர்த்திருந்தான்.. தன் குடும்பத்தோடு தனியாகப் போய் விடுவதாக அவன் பயமுறுத்தியதில் அரண்டு போன அருள்மொழிவர்மன் பேரனிடம் தனிந்து பேசி சமசரம் செய்து கொண்டதால் பிரிந்து போவதைப் பற்றிய பேச்சைப் பேசுவதில்லை என்றாலும் அன்றைய வாக்குவாதத்திற்குப் பின்னால் என் அரண்மனை, என் குடும்பம் என்று பேசுவதை வழக்கப் படுத்தியிருந்தான்.. அந்த 'என்..' என்ற வார்த்தையில் தானும், தன் மனைவியும் அடங்கவில்லை யென்பதில் தனிமைத்துயர் கொண்டார் அருள்மொழிவர்மன்.. ரவிச்சந்திரன் அவரையும், யாழினியையும் தனித்து நிறுத்தியதில்லை.. அவன் குடும்பத்தில் தாத்தாவும், பாட்டியும் அடக்கமென்றுதான் சொல்லிக் கொண்டிருந்தான்.. யாழினிதான் அதைக் கெடுத்துக் கொண்டாள்.. என்று மகள்வழிப் பேத்தியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து மருமகளிடம் யாழினி கேள்வி கேட்க முயன்றாளோ.. அன்றிலிருந்தே ரவிச்சந்திரன் தாத்தாவையும் பாட்டியையும் தள்ளி நிறுத்தி விட்டான்.. அவர்களை அஜந்தாவின் குடும்பத்தோடு இணைத்து விட்டான்..
"யாழினி சம்சாரிச்சத மனசில கொள்ளாண்டாம் ரவி.. மோளின் மீதான பிரேமத்தில அங்ஙன பறஞ்ஞு..."
"நான் எதுக்கு தாத்தா மனதில் வைத்துக்கப் போறேன்..? அவங்களாச்சு.. அவங்க மகளாச்சு.. எனக்கென்ன போச்சு..? அம்மா இதுவரைக்கும் மாமனார், மாமியார், நாத்தனார், நாத்தனாரோட குடும்பம்ன்னு சேவை செய்து களைத்துப் போயிட்டாங்க.. அவங்களுக்கும் வயசாகிருச்சு.. அவங்களும் மாமியாராகப் போகிறாங்க.. ஒன்றுக்கு இரணட்hய் சம்பந்திகளின் குடும்பங்கள் வந்து போவாங்க.. மருமகள், மருமகன்னு புதிதான உறவுகள் வருவாங்க.. அவங்க முன்னாடி அம்மா தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா..? ஆடிய காலும், அதட்டின வாயும் சும்மாயிருக்காது தாத்தா.. அஜந்தாவுக்கு அவளைத்தவிர மத்தவங்க சந்தோசமா சிரித்துப் பேசிக்கிட்டிருந்தா பொறுக்காது... வம்பிழுப்பா... பாட்டியிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணுவா.. நியாயமான மகள்வழிப் பேத்தியைக் கொண்டிருக்கிற பாட்டி உடனே மருமகளைக் கூப்பிட்டு விசாரணைக் கமிசன் வைப்பாங்க.. மருமகளும் ஒரு பொசிசனில் இருக்கிறதை நினைத்துப் பார்க்க மாட்டாங்க.. இப்படியிருந்தா புதிதாக வரும் உறவுகள் எப்படி அம்மாவை மதிப்பாங்க..? இது சரிவராது தாத்தா.. காலம் முழுக்கப் பாரம் சுமக்க என்னால் முடியாது.. எனக்கு என் குடும்பத்தோட கௌரவம் ரொம்பவும் முக்கியம்.. இது என் அரண்மனை.. ஆனாப் பாருங்க.. இதைச் சொந்த அரண்மனையா நினைச்சு அழிச்சாட்டியம் பண்றது அத்தையும், மாமாவும், அவங்க பெத்த பிள்ளைகளும்தான்.. அப்பா உங்களுக்காகன்னு பார்த்து எதையும் பேச மாட்டார்.. அம்மா மகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து ஒதுங்கி ஒதுங்கிப் போவாங்க.. அரண்மனைக்கு வரும் எங்க விருந்தாளிகள் அஜந்தாவுக்குப் பயந்து நடந்துக்கனும்னு பாட்டி ஆர்டர் போடுவாங்க.. எதுக்கு தாத்தா இத்தனை ரோதனையும்..?"
அருள்மொhழிவர்மனுக்கு கன்னத்தில் அறை வாங்கியதைப் போல உணர்ந்தார்.. அவந்திகாவைப் போன்ற மகளைப் பெற்ற குற்றத்திற்காக அவரும் அவருடைய மனைவியும் பேரனுக்கு ரோதனையாக ஆகி விட்டார்களே.. அவர்களை ரோதனையென்று ரவிச்சந்திரன் சொல்லி விட்டானே..
"எதுக்கும் ஓர் லிமிட் இருக்கனும் தாத்தா.. இங்கே லிமிட் கிராஸாகி ரொம்ப வருசங்களாகுது.. இதை சரி பண்ணனும்னு நீங்களும் நினைக்கலை.. பாட்டியும் நினைக்கலை.. இது சரியாகிடக் கூடாதுங்கிறதில கவனமா இருக்கீங்க.. என்னாலே எப்படி இதைச் சகித்துக்க முடியும்..? சொல்லுங்க.."
"ரவி.."
"என் அரண்மனையிலே என்தங்கை சுதந்திரமா நடமாட முடியலை.. என் அம்மா அதிகாரத்தோட இருக்க முடியலை.. எங்களோட விருந்தாளிகள் நிம்மதியா தங்கிப் போக முடியலைன்னா நான் இவ்வளவு பெரிய ஆளை இருந்து என்ன பிரயோசனம்..? சொல்லுங்க.."
"ஷெமிக்கனும் ரவி.."
"யாரை..? எதுக்கு..? எனக்கு வேறு வேலையே இல்லையா..? உங்க மகளும், அவங்க குடும்பமும் உட்கார்ந்து சாப்பிடுகிற ராஜ வாழ்க்கையா எனக்கு வாய்த்திருக்கு..? நான் ஓடியாகனும் தாத்தா.. ஒரு செகண்டையும் வேஸ்ட்டாக்காம ஓடியாகனும்.. எனக்கு நிற்க நேரமில்லை.."
"ஞான் அறிஞ்ஞு கொச்சு மோனே..!"
"அறிந்து என்ன செய்துட்டிங்க.. அட்லீஸ்ட் என் குடும்பத்தையாவது நிம்மதியாய் இருக்க விடறிங்களா..? யாருக்காக நான் ஓடிக்கிட்டு இருக்கேன்..? என் குடும்பத்துக்காக தாத்தா... என் அப்பாவுக்காக.. அம்மாவுக்காக.. தங்கைக்காக.."
தாத்தா, பாட்டிக்காக என்று ரவிச்சந்திரன் சொல்லவில்லை.. இனிச் சொல்லவும் மாட்டான் என்பதில் இடிந்து போனார் அருள்மொழிவர்மன்.. மனதில் உண்டாகும் விரிசலை எதனாலும் சரிசெய்ய இயலாது என்பதை வாழ்க்கையின் அனுபவ பாடங்களில் கற்றுத் தேர்ந்திருக்கும் அந்த முதியவர் துயரம் கொண்டார்..
"நிண்ட குடும்பத்தில ஈ தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ஸ்தலமில்லையோ கொச்சு மோனே..?"
"ஷெமிக்கனும் தாத்தா.. நீங்களும் பாட்டியும் தனியில்லை.. அத்தையையும் அவங்களோட குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு நிற்கறிங்க.. உங்க பாரத்தை நீங்கதான் சுமக்கனும்.. நான் சுமக்கக் கூடாது.. அது முடியவும் முடியாது.. நன்றியில்லாதவங்களுக்கு செய்கிற உதவிகள் எல்லாமே புல்லுக்கப் பாய்ச்சுகிற நீர்தான் தாத்தா.."
"யாழினியிண்ட ஞான் பறஞ்ஞு.."
"டூ லேட்.. இதை ஏற்கனெவே நீங்க செய்திருக்கனும்.. அம்மா பெரியவங்களிடம் காட்டற மரியாதையை நீங்க உங்களுக்குச் சாதகமா யூஸ் பண்ணிக்கறிங்க.."
"அங்ஙன இல்லா கொச்சு மோனே.. ஆ மனுஷிக்கு மோளிண்ட உள்ள பிரியமானு இதி போல பறஞ்ஞு.. மதியில்லா மனுஷி மீது பிணக்கம் வேண்டாம் ரவி.."
"யாருக்கு அறிவு இல்லை..? பாட்டிக்கா..? குட் ஜோக் தாத்தா.. அது இருக்கு நிறைய.. மகளிடம் ஓர் முகமும் மருமகளிடம் ஓர் முகமும் காட்டுகிற அறிவு இருக்கில்ல..? மகள்வழிப் பேரன் பேத்திகள் மீது பாசம் காட்டனும்.. மகன் வழிப் பேரன்.. பேத்திகள் மீது அதிகாரத்தைக் காட்டனும்கிற அறிவு இருக்கில்ல..? இதை விடவும் அறிவு அதிகமானா உலகம் தாங்காது தாத்தா.."
என்ன சொன்னாலும் பேரனின் மனம் திரும்பாது என்று புரிந்து கொண்டதில் அருள்மொழிவர்மன் சோர்ந்து போனார்.. ரவிச்சந்திரனின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லையென்று மறுக்க முடியாதே... யாழினி அவந்திகாவிடம் ஒரு முகமும் வீணாவிடம் ஒரு முகமும் காட்டுவது உண்மைதானே.. வீணா பொறுமைசாலியென்பதால் மருமகளைத் தாங்கிப் பேசுகிறாள்.. வீணாவும் அவந்திகாவைப் போல சுயநலவாதியாக நியாய, அநியாயம் பார்க்காதவளாக இருந்திருந்தால் யாழினி யார் பக்கம் பேசியிருப்பாள்..? மகளின் பக்கம்தானே..
யாழினியின் மனதிலிருப்பதை அருள்மொழிவர்மன் அறிவார்.. இத்தனைக்குப் பிறகும் அவள் அவந்திகாவின் பிள்ளைகளை ரவிவர்மனின் பிள்ளைகள் மனம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாள்.. எப்படியாவது ரவிச்சந்திரனின் மனம் மாறி அவன் அஜந்தாவை மணம் முடித்துக் கொண்டால் அபராஜிதனுக்கு ரம்ய மாலினியைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு ரவிச்சந்திரனை அஜந்தா சம்மதிக்க வைத்து விடுவாள் என்ற அபிலாசை யாழினியின் மனதில் இருந்தது.. அப்படி நடந்து விட்டால் அவந்திகாவின் எதிர்காலமும் அவளுடைய பிள்ளைகளின் எதிர்காலமும் பாதுகாப்பானதாக மாறிவிடும்.. அவந்திகாவைப் பற்றிய கவலையின்றி
யாழினி கண்களை மூடலாம்..
இது மட்டுமே யாழினியின் எண்ணமாக இருந்தது.. இதனால் ரம்யமாலினியின் வாழ்க்கையும், ரவிச்சந்திரனின் வாழ்க்கையும் வீணாகி விடும் என்பதை அவள் நினைத்தும் பார்க்கவில்லை.. அத்தையின் பிள்ளைகள் சற்று முன்னே பின்னே இருந்தால் என்ன..? ரவிவர்மனின் பிள்ளைகள் அவர்களை அனுசரித்துப் போனால்தான் என்ன என்ற அராஜகமான நியாயம் அவள் மனதில் வேரூன்றி வளர்ந்திருந்தது..
அந்த வித்தை யாழினியின் மனதில் ஊன்றி தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி வளர்த்துக் கொண்டிருந்தாள் அவந்திகா..
"அம்மே.. நிங்களும் அச்சனும் ஜீவிக்கிற காலம் வரைதான் எனிக்கு ஈ கொட்டாரத்தில ஸ்தலம் கிட்டி.. நிங்க காலத்துக்குப் பின்னே ஞான் எங்கு போயி..?"
தினந்தோறும் இதை ஒரு சுலோகம் போலச் சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருந்தாள் அவந்திகா.. கரைப்பார் கரைத்தால் கல்லே கரையும்.. பெற்ற அன்னையின் மனம் கரையாதா..?
"கரையாண்டாம் மோளே.." என்று யாழினி மகளைத் தேற்றினாள்..
"எங்ஙனம் கரையாமலிருக்க அம்மே.. ஈ ரவிச்சந்திரன் எண்ட மோளை விவாகம் கழிச்சா எனிக்கு புலரி கிட்டுமல்லோ.. அஜந்தாளிண்ட எந்தா குறை..?"
"ஞான் அறிஞ்ஞு மோளே.. பட்ஷே.. ரவிச்சந்திரன் மனசில அஜந்தாளிண்ட ஆக்ரஹாம் இல்லையல்லோ.."
"எங்ஙன வரும் அம்மே..? ஆ வீணா அவளிண்ட மோனிடம் அஜந்தாவைப் பற்றிக் குறைவா பறஞ்ஞு.. ஒந்நு திவசம் கூட நம்மட அஜந்தாவைப் பற்றி நல்லவிதமா மோனிடம் சம்சாரிச்சதில்லயல்லோ..? பிறகு எங்ஙன ரவிக்கு அஜந்தாவிடம் பிரேமம் வரும்..? கேட்டோ.."
அப்படித்தானோ என்று யாழினிக்குத் தோன்றி விட்டது.. வீணாவுக்கு அவந்திகாவையும், அவந்திகாவின் குடும்பத்தையும் பிடிக்காது என்பதை யாழினிக்கு நினைவூட்டினாள் அவந்திகா.. இப்படியொரு நாத்தனார் யாழினிக்கு இருந்தால் உணவில் விசம் வைத்து அவளை பரலோகம் அனுப்பி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பாள் என்பதை வசதியாக மறந்து போனாள் யாழினி..  ஒரு மனிதரின் மீது பாரமாக ஏறி உட்காரலாம்.. அவர்களைப் பாதாளலோகத்தில் அமிழ்த்தி புதைத்து விடும் அளவிற்கு பாரமாகி நசுக்கக் கூடாது என்பதை யார் அவளுக்குச் சொல்வது..?
யாழினி கொடுத்து வைத்தவள்.. அவளுடைய மாமனார் அருள்மொழிவர்மனுக்கு உரிய வயது வந்ததும் பொறுப்புக்கள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.. அன்று கைப்பற்றிய குடும்ப அதிகாரத்தை அருள்மொழிவர்மன் விட்டுக் கொடுக்கவே இல்லை.. அவளுடைய அப்பா செய்ததைப் போல ரவிவர்மனுக்கு உரிய வயது வந்ததும் இவர் அதிகாரத்தை மகன் கையில் கொடுத்து விடவில்லை.. இறுக்கிப் பிடித்துக் கொண்டு அதிகாரத்தைத் தன்னிடமே தக்க வைத்துக் கொண்டார்.. ரவிவர்மனுக்குத் திருமணமாகி ரவிச்சந்திரனுக்கும், ரம்யமாலினிக்கும் தகப்பனான
பின்பும் அவருக்குக் குடும்பத்தின் அதிகாரம் கிடைக்கவே யில்லை.. ரவிவர்மனும் அதை எதிர்பார்க்காமல் தாய், தந்தைக்கு அடங்கிய மகனாக இருந்தார்..
யாழினி அந்த அரண்மனையின் மகாராணியாக இருந்தாள்.. அவளுடைய மாமியார் அவளிடம் பணிந்து போனார்.. நாத்தனார்கள் இருவரும் அவரவரின் புகுந்த வீடுகளில் சமர்த்தாக குடும்பம் நடத்தி யாழினிக்கு தலைவலியைக் கொடுக்காமல் பிறந்த வீட்டிற்கு சீர் செய்து கொண்டிருந்தார்கள்.. அவளுக்கு வாய்த்த மருமகளான வீணா தங்கத்திலும் தங்கம்.. சொக்கத் தங்கம்..! மாமியாருக்கு முன்னால் நின்று கூடப் பேச மாட்டாள்..
இப்படிப்பட்ட வாழ்வு கிடைக்கும் வரை வாய்த்த யாழினிக்கு வீணாவின் வேதனைகளைப் பற்றி என்ன தெரியும்..?
தாய், தகப்பனுக்கு அடங்கிய கணவன்.. அதிகாரத்தை விட்டுக் கொடுக்காத மாமனார், மாமியார்.. பிறந்த வீட்டை அழித்து அதில் வாழ வந்த அண்ணியைக் கொன்று விடத் திட்டம் தீட்டும் நாத்தனார்.. வீணா பெற்ற பிள்ளைகளின் வாழ்வைப் பாழாக்க நினைக்கும் நாத்தனார் பிள்ளைகள்.. மைத்துனன் மனைவிக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத அல்லது கொடுக்க விரும்பாத.. வீட்டோடடு மருமகனாய் வந்து உயிரைக் குறைக்கும் நாத்தனார் கணவன்..!
வீணாவின் இடத்தில் மட்டும் யாழினி இருந்திருக்க வேண்டும்.. உன் தங்கையையும் அவள் குடும்பத்தையும் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு என்னுடன் குடும்பம் நடத்த வா.. அதுவரை என் பிறந்த வீட்டில்
நான் இருந்து கொள்கிறேன் என்று ஓடிப் போயிருப்பாள்..
அப்படிச் செய்யவில்லை என்பதை விட அது போன்ற நினைவுகளை நினைத்தும் பார்த்ததில்லை என்பதுதான் வீணா..
இத்தனைக்கும் அவள் அவளுடைய பெற்றோருக்கு ஒரே வாரிசு..!












Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -135
எண்ணியிருந்தது ஈடேற -135
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-135.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/enniyirunthathueedera-135.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy