அம்மம்மா.. கேளடி தோழி...! -9

9 மதியத்திலே வந்த கோபம்... மாலையிலே மாறுவதென்ன.. ? இதுதான் சுசிலா...! அவளது சொந்தக்கார வட்டாரத்தில் பாலமுரளி பெரிய ஆள்.. பரம்பர...


9
மதியத்திலே வந்த கோபம்...
மாலையிலே மாறுவதென்ன..?

இதுதான் சுசிலா...!
அவளது சொந்தக்கார வட்டாரத்தில் பாலமுரளி பெரிய ஆள்.. பரம்பரைப் பணக்காரன்.. தினமும் ஒரு தொழில் ஆரம்பித்து வெற்றிகரமாக அதை நடத்தும் வல்லமையுள்ளவன்.. அவன் ஷோபாவுக்கு கணவனாக வந்தாலும் அவளுக்கு சரிதான்...
அவளது கணவரின் தொழில் வட்டாரத்தில் சங்கர் பெரிய ஆள்.. வெளிநாட்டுக்கு போய் படித்து விட்டு வந்தவன்.. கூடுதலாக.. ஷோபாவுக்கு அவன்மேல் மயக்கம் இருந்தது.. அவன் ஷோபாவுக்கு கணவனாக அமைந்தாலும் நல்லதுதான்...
அவள் இரண்டு பக்கமும் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.. இரண்டில் எது அமைந்தாலும்... அவளுக்கு சம்மதம்தான்..
என்ன ஒன்று.. அவள் பலமாக முயற்சி செய்து கொண்டிருந்த இரண்டு மாப்பிள்ளைகளுக்குமே ஷோபாவைக் கண்டால் கட்டோடு பிடிக்காது...
அது ஏன் என்றுதான் பாவம் அவளுக்குப் புரியவில்லை...
ஷோபா அழகாக இருந்தாள்.. படிப்பில் மக்கென்றாலும் இன்ஜினியரிங் காலேஜில் கால் பதித்திருந்தால்.. எல்லாவற்றையும் விட.. பரந்தாமனின் சொத்துக்கு அவள் ஒருத்தி மட்டுமே வாரிசு... பணக்காரி..
இப்படிப்பட்ட பெண் தேடினாலும் கிடைக்காது என்பார்கள்.. சங்கருக்கும்.. பாலமுரளிக்கும் தேடாமலே அவள் கிடைத்தும் இருவருமே சொல்லி வைத்ததைப் போல அவளைத் திரும்பிக்கூடப் பார்க்க மறுத்தார்கள்..
இத்தனைக்கும்.. சங்கரும்.. பாலமுரளியும்.. ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அல்ல...
பாலமுரளி சுசிலாவுக்கு சொந்தக்காரன்.. சங்கர் பரந்தாமனுகுகு நண்பரின் மகன்..
இவனைப் பற்றி அவனுக்கோ.. அவனைப் பற்றி இவனுக்கோ தெரியாதபோது.. எப்படி இரண்டுபேரும் ஒரு மனதாய் ஷோபாவை மறுக்கிறார்கள் என்று சுசிலா மனம் புகைந்தாலும்.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத லேடி விக்ரமாதித்தனாக முயற்சிகளை தொடர்ந்து கொண்டேயிருந்தாள்...
சென்னையில் நடக்கும் விருந்துகளுக்கு சங்கரை அவள் அழைக்க வைத்து விடுவாள்..
அதே போல திருநெல்வேலியில் நடக்கும் குடும்ப விழாக்களுக்கு மகளை இழுத்துக் கொண்டு போய்.. பாலமுரளியின் கண்பார்வையில் படும்படி நிறுத்தி விடுவாள்...
அப்போதும் அப்படித்தான்.. ஷோபாவின் பிறந்தநாள் விருந்துக்கு சங்கரை அழைக்கப் போவதாக கணவர் சொல்லியதும் அவள் மகிழ்ந்து போய் விட்டாள்..
"ஷோபா... உன் பாத்டே டிரஸ்ஸை செலக்ட் பண்ணிட்டயா..?"
"யெஸ் மாம்..."
"எப்பயும் விட இந்த வருச டிரஸ் அழகாய் இருக்கனும் ஷோபா.."
"எனக்குத் தெரியாதா மம்மி.. இந்த வருச பர்த்டே பார்ட்டி சம்திங் ஸ்பெசல் டு மி... ஸோ.. எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துத்தான் வாங்குவேன்..."
ஷோபா சங்கரின் நினைவில் சொல்லுகிறாள் என்று சுசிலா நினைத்துக் கொண்டாள்...
ஷோபாவோ.. ராதிகாவையும் சேர்த்து மனதில் நினைத்துக் கொண்டுதான் அந்த வார்த்தைகளைக் கூறினாள்...
"லாக்கர்ல இருந்து அந்த புது வைர செட்டை கொண்டு வந்திருங்க... ஷோபா அதை போட்டுக்கட்டும்..."
"ஆகட்டும் சுசி..."
வீடு அந்த விருந்திற்காக தயாரானது.. ஷோபா.. அந்த விருந்தில் ராதிகாவின் பொறாமையைத் தூண்டி விடவேண்டும் என்று தயாரானாள்...
விருந்திற்கு முன் நாளிலும் அவள் மறக்காமல் ராதிகாவுக்கு அந்த விருந்தைப் பற்றி நினைவுறுத்தினாள்..
"ராதிகா.. நாளைக்கு என் பார்த்டே பார்டியிருக்கு.."
"இதையே எத்தனை தரம்டி சொல்லுவ...?"
ராதிகா கேட்டவுன் சுற்றியிருந்தவர்கள் சிரித்துவிட.. ஷோபாவின் முகம் சுருங்கிப் போனது...
சிரித்தவர்கள் பெண்களாக மட்டு மிருந்தால்கூட அவள் அதை பொருட்படுத்தியிருக்க மாட்டாள்.. அவளது வகுப்புத் தோழன்களும் சிரித்து வைத்ததில் அவள் கடுப்பாகிப் போனாள்...
'நீ மறந்திடப் போறியோன்னு நினைச்சேன்...'
"இல்லையில்லை... நான் மறக்கலை... ஆக்சுவலாய் ஷோபா... இதுதான் நான் ஈவினிங் டைமில் கலந்துக்கற முதல் பங்சன்.. உனக்காக என் வீட்டில் கெஞ்சிக் கூத்தாடி பெர்மிசன் வாங்கியிருக்கேன்.. கட்டாயம் நான் வருவேன்.. போதுமா..?"
'என்னவோ இது பெரிய விஜபி யைப் போல அலட்டிக்கிறாளே.. இவளை என் வீட்டுக்கு இழுக்க.. நான் என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்கு...'
ஷோபா போய் விட்டாள்.. ராதிகா.. மறுநாள் மாலையில் ஹேமாவும் அவளுடன் வருவாளா என்பதை உறுதிசெய்து கொண்டாள்...
"நீயே போகும் போது.. நான் வராம இருப்பேனாடி.."
"எப்படிப் போகலாம்..?"
"ஏன்..? உன் ஸ்கூட்டி இருக்கே... அதிலேயே போயிடலாமே..."
"அதுவே ஓட்டை ஸ்கூட்டி... வழியிலே அது மக்கர் பண்ணி நின்னுடா என்னடி செய்கிறது..? இவ வேற இருட்டின பின்னாடி பங்சனை வைச்சிருக்கா..."
"என்ன செய்யலாம்..?"
"பேசாம ஆட்டோவில் போயிடலாம்.. அதுதான் பெஸ்ட்.."
"ஓகே... நான் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்றேன்.. ஆன்திவேயில் என்னை நீ பிக்அப் பண்ணிக்க..."
"அந்தக் கதையே வேணாம்.. நீ வீட்டுக்கு வந்தால்தான் என் வீட்டிலே என்னை அனுப்பிவைப்பாங்க.."
"இது வேற இருக்கா..?"
"ஆமாம்.. அதனால நேரத்தோட நீ வீட்டுக்கு வந்துசேரு... இல்லேன்னா.. லேடி ஹிட்லர் என்னை வீட்டுக்கு வெளியிலே காலை வைக்க விட மாட்டாங்க..."
"லேடி ஹிட்லரா..? யாருடி அது..?"
"வேற யாரு..? எல்லாம் என் அருமை அம்மாதான்.."
"அடிப்பாவி.. நீ அம்மாவையும் விட்டு வைக்கலியா..?"
வாய்பொத்தி சிரித்த ஹேமா மறக்காமல் மறுநாள் மாலையில் ராதிகாவை அழைத்துக் கொண்டு போக வந்துவிட்டாள்..
இளம்சிகப்பு வண்ணத்தில் சுடிதார் அணிந்து நின்ற ராதிகாவைப் பார்த்து...
"அசத்தறேடி..." என்றாள்...
"காலாகாலத்தில் வீட்டுக்கு வந்து சேருகிற வழியைப் பாருங்க..." என்று கவலையுடன் சொன்ன ராஜேஸ்வரியிடம்...
"கவலையே படாதீங்கம்மா.. போய் தலையைக் காண்பித்ததும் கிளம்பி வந்து விடுவோம்.." என்று உத்தரவாதம் அளித்துவிட்டு கிளம்பினாள் ராதிகா...
"அதுக்கு ஏண்டி அவ்வளவு தூரம் போகனும்..?" என்றாள் கீதா...
"என்னவோ.. என்னைக்கும் இல்லாம இந்த வருசம் மட்டும் அவ விழுந்து விழுந்து இன்வைட் பண்ணுகிறா.. மறுக்க முடியலைடி..." ராதிகா சொன்னாள்..
"அவளுக்கும் உனக்குமே ஏழாம் பொருத்தம்.. அவ இன்வைட் பண்ணினா நீ ஏண்டி அதுக்கு இம்பார்ட்ன்ட் கொடுக்கிற..." கீதாவுக்கு புரியவில்லை...
"ஏய்ய்... அவ எனக்கு பிடிக்காதவளாகவே இருந்துட்டுப் போகட்டும்.. அதைப்பத்தி பிரச்னையே இல்லை.. அவ வேண்டாதவளா இருந்தாலும்.. அவளோட இன்வைட்டை ஒரளவுக்கு மேலே மறுக்கக்கூடாது கீதா.. அது டீஸன்ஸி இல்லை.. கூப்பிட்டா.. எனக்கு போக விருப்பமில்லைன்னாலும்... அவ கூப்பிட்டதுக்கு மரியாதை கொடுக்கிறதுக்காக ஒரு எட்டு போய்விட்டு வந்துடனும்.. அதுதான் முறை..." நீளமாக விளக்கம் சொன்னாள் ராதிகா...
"அட.. அட.. அடா... புல்லரிக்குது போ.. எப்படி ராது நீ இப்படியெல்லாம் பேசக் கத்துக்கிட்ட.. இந்தா ஸ்வீட் எடுத்துக்க..."
கீதா ஸ்வீட்டை நீட்ட.. ராதிகாவும்.. ஹேமாவும் புதிராக பார்த்தபடி ஸ்வீட்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்கள்..
"எதுக்குடி ஸ்வீட்டைக் கொடுக்கிற..?"
"நீயெல்லாம் எதிரிபக்கம் நின்று பேச ஆரம்பிச்சுட்டில்ல... இந்த நல்லதோர் ஆரம்பத்தை ஸ்வீட் எடு.. கொண்டாடுன்னு கொண்டாட வேணாமா..?"
"போடி போக்கிரி..." ராதிகா சிரிக்க..
"இவகூடச் சேர்ந்து உனக்கும் வால் வளர்ந்துருச்சுடி..?" என்று சான்றிதழ் வழங்கினாள் ராஜேஸ்வரி...
"பத்திரமா போய்ட்டு வாங்கடி..."
"ஏம்மா.. அவ என்ன லண்டனுக்கா போகிறா..? இந்தா இருக்கிற சைதாப் போட்டை வரைக்கும் போயிட்டு வரப் போறா.. அதுக்கா இத்தனை தூரத்துக்கு டாட்டா சொல்வீங்க..."
ராஜேஸ்வரியும் கீதாவும் வாதாடிக் கொண்டிருக்க.. ராதிகாவும் ஹேமாவும் கிளம்பி வாசலுக்கு வந்து நின்றார்கள்...
"ஆட்டோ..."
கடந்து போன ஆட்டோ.. அவர்களது கைதட்டலில் நிற்கவும்... வீட்டு வாசலிலேயே ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள்...
"வழியில் ஏதாவது கிப்ட் ஷாப் இருந்தால் ஒரு செகண்ட் ஆட்டோவை நிறுத்துங்க சார்..." என்றாள் ராதிகா...
"ஏம்மா.. ஒரு செகண்டில நீங்க வாங்க வேண்டியதை வாங்கிட்டு வந்து விடுவீங்களா.." என்று பதிலுக்கு கேட்டான் ஆட்டோக்காரன்...
"ஏதோ பேச்சுவாக்கில் சொல்கிறதுதான்..." ராதிகா மழுப்பினாள்...
"பொம்பளைக சாமான் வாங்கப் போனா எவ்வளவு நேரமாகும்ன்னு எனக்கும் தெரியும்... அதனால நேரத்தை கடத்தாம சட்டுபுட்டுன்னு வர்றதா இருந்தா நான் காத்திருக்கேன்.. இல்லைன்னா ஆட்டோவை கட்பண்ணி அனுப்பிருங்க... நான் வேற சவாரியைப் பார்த்துக்கறேன்.. நீங்களும் வேற ஆட்டோவை பிடிச்சுக்கிட்டு போகப் பாருங்க..." ஆட்டோக்காரன் கறாராக பேசினான்...
"ஒரு நிமிசம் கூட ஆகாது.." உத்திரவாதம் அளித்த ராதிகா.. சொன்னதைப் போலவே ஒரே நிமிடத்தில் திரும்பிவந்துவிட...
"ஏம்மா.. வேண்டாதவங்களுக்கு பரிசு வாங்கப் போனீங்களா..." என்று கேட்டு வைத்தான் ஆட்டோக்காரன்...
"சரியாக் கண்டுபிடிச்சுட்டாருடி..." ராதிகாவின் காதைக் கடித்தாள் ஹேமா...
ஷோபாவின் வீட்டிற்கு முன்னால் வெளி நாட்டுக் கார்கள் அணிவகுத்து நிற்க.. அதற்கு மத்தியில் திருஷ்டிப் பொட்டு வைத்ததைப் போல ராதிகா போன ஆட்டோ சென்று நின்றது...
இறங்கி ஆட்டோவுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்குள் நுழைய முயன்றபோது... வாசல் கேட்டிலிருந்து செக்யூரிட்டி அவர்களை தடுத்து நிறுத்தினான்...
"நாங்க ஷோபாவோட கிளாஸ்மேட்ஸ்.. அவளோட பர்த்டே பங்சனுக்காக வந்திருக்கோம்..."
ராதிகா விளக்கம் கொடுத்தபோது.. அவர்களை இறக்கி விட்டுப் போன ஆட்டோவை முகச்சுளிப்புடன் பார்த்தான் செக்யூரிட்டி...
"நீங்க இரண்டு பேரும் சின்னம்மாவுக்கு பிரண்ட்ஸா..? நம்பவே முடியலையே..."
அவன் சந்தேகமாக வினவியபோது.. இதற்காகத்தான் ஷோபா அவ்வளவு வற்புறுத்தி ராதிகாவை வீட்டுக்கு அழைத்தாளோ என்று முதன் முதலாக ராதிகாவின் மனதில் தோன்றியது...










Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -9
அம்மம்மா.. கேளடி தோழி...! -9
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy