அம்மம்மா.. கேளடி தோழி...! -16

16 அந்தரங்கம் அறியாமல்.. ஆருயிரே..! நீ அலைக்கழித்தாய்... பாலமுரளியின் அம்மாவான மேகலா... கணவரின் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசினதில்ல...


16
அந்தரங்கம் அறியாமல்..
ஆருயிரே..! நீ அலைக்கழித்தாய்...

பாலமுரளியின் அம்மாவான மேகலா... கணவரின் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசினதில்லை.. அவனும்... அவனுடைய அக்காவான பால சரஸ்வதியும்... மாணிக்கவாசகத்தின் முன்னால் உட்காரக்கூட தயங்கு-வார்கள்.. இதில் அவருடன் சகஜமாய் எப்படிப் பேசுவார்கள்..?
ஆதலால்... அவர்களின் தேவைகள் அனைத்தையும்.. மேகலாவின் காதுகளில் போட்டு விடுவார்கள்... அவள் பக்குவமாக.. கணவரின் மனநிலையையும்.. சூழ்நிலையையும் அறிந்து.. மாலை நேரக் காப்பியின் போதோ.. இரவு நேர உணவின் போதோ.. பிள்ளைகளின் தேவைகளை கணவரிடம் எடுத்துரைப்பாள்...
"என்னங்க..."
"சொல்லு... மேகலா..."
"நம்ம முரளிக்கு மோட்டார் சைக்கிள் வேணுமாம்.."
"பத்து வயசில மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியுமா..?"
"முடியாதுதான்..."
"அதனால.. அவனுக்கு பழைய சைக்கிளை தூக்கிப் போட்டுட்டு புது சைக்கிளை வாங்கித்தரேன்..."
"என்னங்க..."
"இன்னும் என்னம்மா..?"
"நம்ம சரசுவோட பள்ளிக்கூடத்திலே ஆண்டு விழா வருதாம்..."
"வரட்டுமே..."
"இவள அதில ஆடச்சொல்லி அவங்க டீச்சரம்மா சொல்றாங்களாம்..."
"நம்ம குடும்பத்துக்கு ஆடுகிறதெல்லாம் சரிப்பட்டு வராது மேகலா..."
"ஆமாங்க..."
"அதனால.. ஏதாவது பாட்டுப் பாடச் சொல்லு... வேணும்ன்னா.. பாட்டுச் சொல்லித்தர ஆள்
ஏற்பாடு பண்ணித்தரேன்.. வீட்டுக்கே வந்து சொல்லித்தருவாங்க.."
"அது சரிங்க..."
உண்மையில்.. பாலமுரளி புது சைக்கிள்தான் கேட்டான்... பாலசரஸ்வதி.. பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டாள்...
அவை இரண்டையும் வேறாக மாற்றிச் சொல்லி.. தேவையானதை பிள்ளைகளுக்குப் பெற்றுத் தந்த சாதுர்யம் மேகலாவுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று...
அந்த ஊரின் பெருந்தனக்காரரான மாணிக்க-வாசகத்திடம் சில குண இயல்புகள் இருந்தன.. அதில் ஒன்று.. பெற்ற பிள்ளைகளை கண்டிப்பாக வளர்ப்பது... இரண்டாவது.. குடும்பத்தினரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது...
அதனால்.. எந்தத் தேவையானலும்.. அதற்கு எதிர் தேவையைச் சொல்லி... தேவையானதை பெற்றுக் கொள்ளும் சாமர்த்தியம் மேகலாவிடம் இருந்தது...
பின்னாளில் அதை... பாலமுரளியும்.. பாலசரஸ்வதியும்...
"அம்மா.. அந்தக் காலத்திலேயே... 'மாத்தி யோசி..' ரகமாச்சே..." என்று தங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வார்கள்...
அப்படிப்பட்ட குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவனுக்கு... அதற்கு நேர் எதிரான குடும்பச் சூழ்நிலையைப் பார்த்ததும் சுவராஸ்யம் ஏற்பட்டது..
தாடையைத் தடவியபடி கேள்வி கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு ராதிகா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ரீதியில் அவன் அவளைப் பார்த்து வைக்க...
"பார்த்தியாக்கா.. நான் வேடிக்கை பார்க்கிறதுக்கு என்கூட சண்டைக்கு வந்தியே.. இப்பப்பாரு.. உன்னை டிராப் பண்ண வந்தவரே.. வந்த வேலையை மறந்துட்டு.. நம்ம அப்பாவோட பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டார்..." என்று அவள் காதோரமாக முணுமுணுத்தான் சுந்தர்...
ராதிகாவுக்கும் அதே கோபம் தான்.. பாலமுரளியின் கண்களில் தென்பட்ட சுவராஸ்யத்தை அவளும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்...
"ஏன் சார்... உங்களுக்கு என்நிலைமையைப் பார்த்தா எப்படி இருக்கு..?" அவன்கூட சண்டைக்குப் போனாள்...
"இப்ப எதுக்காகம்மா.. இவர்கூட சண்டைக்குப் போகிற...?"
"வேற என்னப்பா செய்றது..? நியாயமாப் பார்த்தா.. உங்ககூடத்தான் நான் சண்டை போடனும்.. அது முடியுதா..? அதனாலேதான் இவர்கூடயாவது சண்டை போடலாமேன்னு... சண்டைக்குப் போகிறேன்..."
"கேள்வி கேட்டா பதிலைச் சொல்லு... அதை விட்டுட்டு சண்டை போடனும்கிற அவசியம் என்ன..?"
கிருஷ்ணமூர்த்தி அடுத்த கேள்வியைக் கேட்க...
"நியாயம்தானே..." என்றாள் கீதா...
பாலமுரளியைப் போன்ற கம்பீரமான ஆண்மகனுடன்.. தனியாக காரில் வரும் வாய்ப்பு ராதிகாவுக்கு மட்டும் கிடைத்திருக்கிறதே என்ற பொறாமையுணர்வு அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது...
"உனக்கெதுக்கு இத்தனை காண்டு..?" சுந்தர் சந்தேகமாக கீதாவைப் பார்த்து விழித்தான்...
"ஏய்ய்... எனக்கொன்னும் யார் மேலயும் காண்டு இல்லை.. இவ போகும் போது.. ஆட்டோவிலதானே போனா..? வரும்போது மட்டும் எப்படி காரில் வந்து இறங்குறா..?"
"ஓ.. உனக்கு இந்த காண்டா..?"
"போடா போ.. அப்பா கேட்கிற கேள்வியில நியாயம் இருக்கு.. நான் எப்பவும் நியாயத்தின் பக்கம்தான் நிப்பேன்..."
"எப்போதிருந்து..?"
"எப்பவும் நான் அப்படித்தான்.. நீங்க கேள்வி கேளுங்கப்பா.. நான் உங்க சப்போர்ட்தான்..."
"ஆமாமாம்.. நம்ம அப்பா என்னவோ நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிங்கிற மாதிரி கேள்வி ஒன்னைக் கேட்டுட்டார்.. அக்கா பதில் சொன்னதும்.. பணம்.. கொட்டோ.. கொட்டுன்னு கொட்டப் போகுது.. போடி.. போ..."
"அப்போ நீயென்ன இவளுக்கு சப்போர்ட்டா...?"
"ஆமாம்ன்னுதான் வைச்சுக்கயேன்.."
"அப்பாதான் ஜெயிப்பார்.."
"அக்காதான் ஜெயிக்கும்..."
"என்ன பெட்..?"
"ஹண்ட்ரெட் ரூபிஸ்..."
கணநேரத்தில் அங்கே 'ஆடுகளம்' உருவாக.. சண்டைக் கோழியும்.. சண்டைச் சேவலும் முறைத்துக் கொள்வதைப் போல.. கீதாவும்.. சுந்தரும் முறைத்துக் கொண்டார்கள்..
பாலமுரளிக்கு சிரிக்க வேண்டும் போல இருந்தது.. வெறும் சுவராஸ்யமான பார்வைக்கே முறைத்துக் கொண்டிருக்கும் ராதிகாவைப் பார்த்ததும் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.. அவள் அதையும் கவனித்து விட்டு முறைப்பை அதிகமாக்கினாள்..
"என்ன இங்கே சத்தம்..?"
சமையலறையிலிருந்து காபிக் கோப்பையுடன் வெளிப்பட்ட ராஜேஸ்வரி சின்ன மகளையும்.. மகனையும் அதட்டினாள்...
"ஒன்னுமில்லேம்மா.. அப்பா ஒரு கேள்வி கேட்டா... இந்த ராதிகா அதுக்குப் பதில் சொல்லனுமா.. வேணாமா..?" கீதா கேட்டாள்..
"சரியாப் போச்சு போ.. நாட்டாண்மைக்கே ஒரு நாட்டாண்மையா..?"
சுந்தரின் கேள்வியைத்தான் அப்போது மனதில் கேட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி...
எப்போது அவர் விசாரணைக் கமிசனை போட்டாலும் இறுதித் தீர்ப்பை வழங்குவது ராஜேஸ்வரியாகவே இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கக்கூடும் என்று இதுவரை அவருக்கு புலப்படவே இல்லை...
யாரை அவர் கேள்வி கேட்டாலும்.. பதில் கிடைப்பது ராஜேஸ்வரிக்குத்தான் என்றால்... அவர் கேள்விக்குத்தான் என்ன அர்த்தம் இருக்கிறது..?
குடும்ப உறுப்பினர்களை ஆட்டுவிக்கும் நூலின் கயிறு அவரிடம் இல்லாமல் மனைவியின் கைக்கு எந்த நொடியில் இடம் மாறியது என்பதை அவரால் அனுமானிக்கவே முடிவதில்லை...
"அவர் கேள்வி கேட்பது ஒருபக்கமிருக்கட்டும்.. முதலில் வீட்டுக்கு வந்த விருந்தாளியை உட்காரச் சொல்லனுமா.. வேண்டாமா..? அந்த அறிவு கூடவா இங்கே யாருக்கும் இல்லாமப் போச்சு..? இதைக்கூட நான் வந்துதான் சொல்லனுமா..?" ராஜேஸ்வரி வெடித்தாள்...
"எங்கேம்மா..? அப்பாதான் என்னோடு இவரையும் சேர்த்து நிற்க வைத்து கேள்விமேல.. கேள்வியாய் கேட்டுக்கிட்டே இருக்காரே... அப்புறம் எங்கே அவரை நான் உட்காரச் சொல்கிறதாம்..." ராதிகா குறைபட்டுக் கொண்டாள்...
"இந்த கீதா என்ன பண்றா..?"
"பெட்கட்டிக்கிட்டு இருக்காம்மா..."
"அது எதுக்காம்..?"
"ஜெயிக்கிறது.. அப்பாவா.. இல்லை நானான்னு பெட் கட்டுகிறாளாம்..." என்றாள் ராதிகா... சின்ன மகளை எரிப்பதைப் போலப் பார்த்தபடி
"நீங்க உட்காருங்க தம்பி..." என்றாள் ராஜேஸ்வரி...
'அப்பாடி... ஒருவழியாய் உட்காரச் சொன்னாங்களே...'
நின்று.. நின்று கால் வலித்துப்போன பாலமுரளி சந்தோசமாக அமர்ந்து கொண்டான்...
"காபி சாப்பிடுங்க தம்பி..." ராஜேஸ்வரி காபி கப்பை நீட்டினாள் பாலமுரளி காபிக்கப்பை வாங்கி.. காபியை உறிஞ்ச ஆரம்பிக்க...
"தம்பிக்கு எந்த ஊரு..?" என்று ராஜேஸ்வரி கேள்வியை ஆரம்பித்தாள்...
"அது ரஜனிகாந்த் நடித்த படம்மா..." கீதா ஆர்வமாய் குறுக்கே பேச... அவளை முறைத்தாள் ராஜேஸ்வரி...
"உன்னைக் கேட்டேனா..?"
கீதா வாயை மூடிக் கொண்டாள்...
"நீங்க சொல்லுங்க தம்பி..." ராஜேஸ்வரி பாலமுரளியின் பக்கம் திரும்பினாள்...
"குற்றாலம் பக்கம்.. தேனூத்துங்கிற கிராமங்க..."
"அப்படிங்களா.. தம்பி அங்கே என்ன செய்கிறிங்க..?"
"அது இருக்கு நிறைய தொழில்ங்க.. தோப்பு வயல் செங்கல் சூளை... கரும்பு மில்.. ஜவுளிக்கடைன்னு அது அனுமார்வாலைப் போல நீண்டுக்கிட்டு போகும்ங்க..."
சாதாரணமாகப் பதில் கூறியவனை வியப்புடன் ஏற இறங்கப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி...
அவர்கள் வீட்டு வரவேற்பறையில் சுவாதீனமாக அமர்ந்து ராஜேஸ்வரி கொடுத்த காபியை மறுக்காமல் வாங்கிக் குடித்துக் கொண்டிருப்பவனின் உயரம் அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது...
'யாருன்னு இப்போது தெரியுதா..? இந்த மனுஷரைத்தான் உட்கார விடாம நிற்க வைச்சுக்கிட்டு உங்க மகளை கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தீங்க...'
ராஜேஸ்வரியின் பார்வை அவரைச் சுட்டது... அதன் தகிப்பிற்கு பழக்கப்பட்டிருந்தாலும்... எப்போதும் போலவே.. இப்போதும் அவர் தாங்க மாட்டாமல் நெளிந்தார்..
"நீங்க... ராதிகாவோட பிரண்டுக்கு உறவு முறைங்களா..?"
"ஆமாங்க.. என் அக்காவைத்தான்.. ஷோபாவோட பெரியம்மா மகனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கோம்..."
"ஓ... அப்போ.. அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற உறவு முறைன்னு சொல்லுங்க..."
ராஜேஸ்வரியின் இந்தக் கேள்வியினை பாலமுரளியும் ரசிக்கவில்லை.. ராதிகாவும் ரசிக்கவில்லை..
எனவே பாலமுரளி அதற்கு பதில் சொல்வதைத் தவிர்த்து மௌனமாக சிரித்து வைத்தான்...
"ராதிகாவை வீட்டில் டிராப் பண்ணி விடறேன்னு நீங்க சொன்னீங்களா..?"
ராஜேஸ்வரி இயல்பாக கேட்பதைப் போலக் கேட்டுவைக்க.. அவளின் புத்தி கூர்மையில் ஆச்சரியப் பட்டுப் போனான் பாலமுரளி...
கிருஷ்ணமூர்த்தி நேரடியாக கேட்ட கேள்விக்கான பதிலை மறைமுகமாய் அவன் வாயிலிருந்து வரவழைக்க முனையும் ராஜேஸ்வரியின் சூட்சுமம் நிறைந்த சாதுர்யம் அவனைக் கவர்ந்தது...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -16
அம்மம்மா.. கேளடி தோழி...! -16
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy