அம்மம்மா.. கேளடி தோழி...! -15

15 எங்கோ ஓர் பறவை பாடிச்சென்றது என்மனதில் உன்நினைவை அதுவிதைத்து சென்றது... இரவு உணவுக்கு முன்னதான அரட்டையில் ராதிகாவின் வீடு இருந...


15
எங்கோ ஓர் பறவை பாடிச்சென்றது
என்மனதில் உன்நினைவை அதுவிதைத்து சென்றது...

இரவு உணவுக்கு முன்னதான அரட்டையில் ராதிகாவின் வீடு இருந்தபோது.. அழைப்பு மணி அலறியது...
"நியூஸ் சேனலை ஏண்டி மாத்தின..?" என்று மனைவியைக் கடிந்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி வாசல் பக்கம் பார்த்தார்...
"யாருன்னு பாரு ராஜி..."
"ஒரு சீரியல் பார்க்க வழியில்ல.. இதில வாசலில் வந்திருக்கிறது யாருன்னு மட்டும் நான் பார்த்து வரனுமா..? டேய் சுந்தர்.. மத்தவங்களை வேலை ஏவற நேரத்திலே உங்க அப்பாவையே அந்த வேலையைச் செய்யச் சொல்லு.."
"சீரியல் பார்த்தா உலக அறிவு வளருமாடி...?"
"வீட்டுக்குள்ளே நாலு சுவருக்குள்ளே கிடக்கறவ.. உலக அறிவை வைச்சு என்ன செய்யப் போறா..? காலையில எழுந்திருச்சதிலிருந்து மாடா உழைக்கிறேன்.. அக்கடான்னு உட்கார முடியறது இந்த நேரம்தான்.. அதில ஒரு சீரியலைப் பார்க்க இந்தவீட்டில் வழியிருக்கா..?"
மீண்டும் அழைப்புமணி அலறியது.. கிருஷ்ணமூர்த்தி மகனைப் பார்த்தார்..
"அப்பா.. எனக்கு ஹோம் வொர்க் இருக்கு.. என்னால கதவைத் திறக்கப் போக முடியாது..."
அவர் வாயைத் திறக்கு முன்னால் மறுத்தான் சுந்தர்...
"ஏண்டா.. நான் இன்னும் சொல்லவே இல்லையே.."
"அதைத்தானே சொல்ல வந்தீங்க...?"
இப்படி முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக பதில் சொல்கிறவனை என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது.. அழைப்பு மணியை மூன்றாம் முறையாக அழுத்தினாள் ராதிகா...
"வீட்டில் யாரும் இல்லையோ.. என்னவோ.." பாலமுரளி கூறினான்...
"ஏன் அப்படிக் கேட்கறிங்க..."
"கதவைத் திறக்க யாரும் வரலையே..."
"அதனாலே இப்படியொரு முடிவுக்கு வந்திட்டிங்களா..? நீங்க வேற... காலிங்பெல் அடிச்சவுடனே கதவைத்திறக்க ஆள் வரலைன்னா.. வீட்டிலே எல்லாரும் இருக்காங்கன்னு அர்த்தம்..."
இப்படியொரு வியாக்கினத்தை இதற்கு முன்னால் அவன் கேட்டதில்லை.. அவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்...
அதேசமயம் வீட்டுக்குள்ளே கிருஷ்ணமூர்த்தி மகளைக் கெஞ்சுதலாகப் பார்த்தான்...
"கீதா... என் செல்லமில்ல..."
"இல்லப்பா.."
இப்படிச் சொல்கிறவளிடம் எப்படி கதவைத் திறக்கச் சொல்வது..?
"ஹீம்.. பெண்டாட்டி பிள்ளைகன்னு இருந்து என்ன பிரயோஜனம்..? ஒரு வேலையில் கை கொடுக்க ஆளில்லை..."
"ஆமாண்டா சுந்தர்... உன் அப்பா மலையை வெட்டியெடுக்கப் போகிறாரு.. அவளுக்கு கை கொடுக்க ஆளில்லாம போச்சு.. இந்தா இருக்கிற கதவுக்குப் போய் அதை திறந்து விட முடியலை.. அதுக்கே இத்தனை பேச்சுன்னா.. நாள் முழுக்க நடந்துக்கிட்டே இருக்கிறவளுக்கு எத்தனை பேச்சு வரும்..?"
அழைப்பு மணி நான்காவது முறையாக அலறியது...
"இது ஒன்னு..." சுந்தர் கோபமானான்...
"ஹோம் வொர்க் பண்றேனில்ல.. ஏய் கீதா.. நீ போய் கதவைத் திறக்கக் கூடாதா..?"
"ஏண்டா எனக்கு மட்டும் வேலையில்லையா..?"
இப்படிக் கேட்ட கீதா நகங்களுக்கு சாயம் பூசிக் கொண்டிருந்தாள்...
"வீடா இது..." சுந்தர் வேகமாக புத்தகத்தை மூடினான்...
அதே வேகத்தோடு எழுந்து சென்று கதவைத் திறக்கப் போகிறான் என்று அபிலாஷை கொண்டார் கிருஷ்ணமூர்த்தி...
அவன் சாபதானமாக அவரின் கையிலிருந்த டிவியின் ரிமோட்டை கைப்பற்றி கிரிக்கெட் சேனலுக்கு மாற்றினான்...
"டேய்.. என்னடா செய்கிற..?"
"பார்த்தாத் தெரியல.. கிரிக்கெட் பார்க்கிறேன்..."
"அப்ப நீ கதவைத் திறக்கப் போகலையா..?"
"அது என்ன தேவைக்கு..? இந்த வீட்டில நான் மட்டுமா இருக்கேன்..."
அழைப்பு மணி ஐந்தாவது முறையாக அலற.. ராஜேஸ்வரி எழுந்து கொண்டாள்.. அவள் கதவைத்தான் திறக்கப் போகிறாள் என்று கிருஷ்ணமூர்த்தி நினைக்க.. சமையலறைப் பக்கம் சென்றாள்...
"என்ன ராஜி.. இப்படிச் செய்கிற...?"
"வேற என்னத்தைச் செய்கிறது..? இந்த வீடுதான் ஆம்பளைக ராஜ்யம் கட்டி ஆள்கிற வீடாப்போச்சே.. ஒன்னு நீங்க நியுஸ் சேனலைப் பார்ப்பீங்க.. இல்லைன்னா.. உங்க மகன் கிரிக்கெட் சேனலைப் பார்ப்பான்.. எனக்குத்தான் பிடிச்ச சீரியலைப் பார்க்க விதியில்லாம போயிருச்சே..."
"ம்ஹீம்.. உனக்கு உன் பிரச்னை..."
அழைப்பு மணி ஆறாவது முறையாக அலற... ராஜேஸ்வரி மகளை அனல்பார்வை பார்த்தாள்...
"ஏண்டி.. காலிஸ்பெல் சத்தம் காதில விழுகலை...? எழுந்து போயி கதவைத் திறக்கிறதுக்கு என்ன வந்தது..? என்னடா.. பொழுது விழுந்ததுக்கு அப்புறமாய் அக்கா வீட்டை விட்டு வெளியே போயிருக்காளே...
அவ பத்திரமாய் திரும்பி வரனுமேன்னு கவலை இல்லை.. நெயில் பாலிஷை போட்டுக்கிட்டு இருக்கா.. போடி.. போய் கதவைத்திற.. அவதான் வந்திருப்பா..."
"உங்களுக்கு இவனைக் கண்ணுக்குத் தெரியாது.. நான் மட்டும்தான் தெரிவேன்..."
முணுமுணுத்தாலும்... கீதா உடனே எழுந்து நெயில் பாலிஷை ஏறக்கட்டி விட்டு கதவைத்திறக்கச் சென்றாள்..
கிருஷ்ணமூர்த்திக்கு மனம் தாளவில்லை... அவரும்தான் அவ்வளவு நேரமாக.. பெண்டாட்டி பிள்ளைகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்... யாரும் அசைந்து கொடுக்கவில்லை...
அதுவே... ராஜேஸ்வரி ஒரு அதட்டலைப் போட்டதும்.. வேலை வேகமாய் நடக்கிறதே...
'எப்படி..?' யோசனையுடன் மனைவியைப் பார்க்க... அவள்...
'எப்படி..?... என்று பதில் பார்வை கித்தாய்ப்பாக பார்த்து வைத்தாள்...
'ம்ஹீம்... இந்த லட்சணத்தில் இந்தவீடு ஆம்பளைக ராஜ்யம் கட்டிய வீடாம்...'
அவருக்கு டிவியில் செய்திகளைப் பார்க்கும் சுவராஸ்யமே அற்றுப் போய்விட்டது.. பேசாமல் வீடு திரும்பும் மகளையாவது பார்க்கலாமே என்று வாசல்பக்கம் திரும்பிப் பார்த்தார்...
"ஆறாவது தடவையா காலிங்பெல் அடிச்சிட்டிங்க.. இந்தத் தடவையாவது கதவு திறக்குமா.. திறக்காதா..?"
பாலமுரளி சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த போது... கதவு திறந்து விட்டது...
"அப்பாடா.. ஒருவழியாய் சொர்க்க வாசல் திறந்திருச்சுங்க..."
அவன் தன்னையறியாமல் சொல்லிவிட.. கதவு திறந்த கீதா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்...
'வாட் எ ஹேண்ட்சம் மேன்...'
அவள் மனதில் ஓடியதை படித்து விட்ட ராதிகா பல்லைக்கடித்தாள்...
"யாருடி இவரு..?" வழியை மறித்துக் கொண்டு கீதா கேள்வி கேட்க...
"முதலில் வழியை விடுடி..." என்று அதட்டினாள் ராதிகா...
"என்னடி.. பிரண்டோட பெர்த்டே பங்சனுக்கு போகிறேன்னு கதையளந்துட்டுப் போன... இப்பப் பார்த்தால்.. ஹீரோவோட வந்து நிற்கிற.. என்னடி.. என்ன விசயம்..? காதலா..?"
பாலமுரளியின் முன்னால் இப்படிக் கேட்டு வைக்கிறாளே... என்று ஆகிவிட்டது ராதிகாவிற்கு...
"அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன்.. பேச்சைப் பாரு பேச்சை.. காலிங் பெல்லை அடிச்சா கதவைத்திறக் கிறதுக்கு என்ன..? அதுக்கு அறிவில்ல.. கண்டதையும் யோசிக்க மட்டும் அறிவிருக்கு..."
"எதுக்குடி இப்ப கோபப் படறே..."
"நீ பேசற பேச்சுக்கு கோபப் படாம கொஞ்சமா முடியும்..? வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காரேன்னு பார்க்கிறேன்.. இல்லைன்னா நடக்கிறதே வேற..."
ராதிகா வெடுவெடுத்தபடி.. கீதாவை முறைக்க.. அவள் வெற்றிகரமாக பின் வாங்கினாள்...
"இது யார்..? உங்க தங்கையா..?"
"அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..."
"அப்படின்னா.. இவங்க உங்க தங்கையில்லையா..?"
"என் அம்மா வயிற்றிலே.. எனக்கப்புறமாய் இவ வந்து பிறந்திருக்கிறா.. அதனாலே என் தங்கைன்னு சொல்லித்தானே தொலைக்கனும்.."
ராதிகாவின் விளக்கத்தைக் கேட்டவனின் விழிகளில் சிரிப்புப் படர்ந்தது... அதுவரை அவளை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தவன்.. அவளது பேச்சையும் ரசிக்க ஆரம்பித்தான்...
"உள்ளே வாங்க சார்.. அப்பா.. அப்பா..."
அந்த வீட்டின் ராஜ்யத்தை உண்மையிலேயே யார்தான் ஆள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையிலிருந்த கிருஷ்ணமூர்த்தி மகளுடன் வந்த புதியவனைக் கண்டதும் சிந்தனையைக் கலைத்தார்...
"ஏம்மா லேட்டு..? யார் இவரு..?"
"என் பிரண்டோட ரிலேடிவ்ப்பா... உட்காருங்க சார்.."
ராதிகா உபசரித்துக் கொண்டிருந்த போது.. சமையலறையை விட்டு...
"ஏண்டி லேட்டு..." என்று அதட்டியபடி வெளியே வந்த ராஜேஸ்வரி.. பாலமுரளியைக் கண்டதும்.. புருவங்களைச் சுருக்கினாள்...
கிருஷ்ணமூர்த்தியைப் போல வெளிப்படையாக யார் என்று கேட்காமல் அவள் விழிகளால் மகளை அதட்ட...
"என் பிரண்டோட ரிலேடிவ்ம்மா..." என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னதையே சொன்னாள் ராதிகா...
"ஓஹோ... சாருக்கு இந்தப் பக்கம் என்ன வேலைம்மா..?"
கிருஷ்ணமூர்த்தி விசாரணைக் கமிசனை ஆரம்பிக்க.. கிரிக்கெட்டை மறந்து.. அந்த விசாரணைக் கமிசனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் சுந்தர்... ராதிகாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.. அவன்தலையில் ஒரு குட்டை வைத்தாள்...
"ஸ்ஆ.. வலிக்குதுக்கா... ஏன் என்னைக் குட்டின..?" அவன் முணுமுணுப்பாய சண்டைக்கு வந்தான்...
"வேடிக்கை பார்க்கிறயா..?"
"வேற என்ன செய்யச் சொல்ற..? சின்னக் கவுண்டர் துண்டை உதறி தோளில் போட்டுட்டா.. இனி பஞ்சாயத்தை ஆரம்பிக்காம விடமாட்டார்.. இந்த சவுண்டில என்னால ஹோம் வொர்க் பண்ண முடியுமா... இல்லை... கிரிக்கெட்டைத்தான் பார்க்க முடியுமா..? ஸோ.. என்னாலே வேடிக்கைதான் பார்க்க முடியும்..."
"அப்பா..."
"என்ன ராது..?"
"அவருக்கு இந்தப் பக்கம் என்ன வேலைன்னு-தானே உங்களுக்குத் தெரியனும்..?"
"ஆமாம்மா..."
"அவரோட காரில் என்னையும்.. ஹேமாவையும் கூப்பிட்டுக்கிட்டு வந்து.. அவரவர் வீட்டில் விடற வேலைக்காக நம்மவீட்டுப் பக்கம் தெரியாத்தனமாய் அவர் வந்து தொலைச்சிட்டார்.... போதுமா..?"
மகளை பாதுகாப்பாய் காரில் கொண்டு வந்து விட்டவன் என்று அறிந்து கொண்ட ராஜேஸ்வரி நிம்மதியாக காபியை கலக்கப் போனாள்...
"ஏம்மா.. நீ போகும் போது ஆட்டோவில்தானே போன..?" கிருஷ்ணமூர்த்தி தாடையைத் தடவியவாறு கேட்க...
"நம்ம நாட்டாமை பஞ்சாயத்தை முடிக்கவே மாட்டேன்னு இப்படி அடம் பிடிக்கிறாரே கீதா.." என்று கீதாவின் காதுகளில் முணுமுணுத்தான் சுந்தர்...
பாலமுரளிக்கு அந்தக் குடும்பத்தை மிகவும் பிடித்து விட்டது.. அவன் வளர்ந்த குடும்பச் சூழல் முற்றிலும் வேறானது... இது அதிலிருந்து வேறுபட்டு நின்றது...









Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -15
அம்மம்மா.. கேளடி தோழி...! -15
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy