அம்மம்மா.. கேளடி தோழி...! -14

14 காற்றினிலே   மிதந்து   வந்த.. கானத்தினை   நான்   கேட்டேன்... "ராதிகா... நீ இந்த நேரத்தில் ஆட்டோவைத் தேடி சிரமப்பட வேணாம...



14
காற்றினிலே  மிதந்து  வந்த..
கானத்தினை  நான்  கேட்டேன்...

"ராதிகா... நீ இந்த நேரத்தில் ஆட்டோவைத் தேடி சிரமப்பட வேணாம்... இவர் என் ரிலேடிவ்.. உங்களை உங்க வீடுகளில் டிராப் பண்ணிட்டு போகிறேன்னு சொல்லியிருக்கார்.. ஸோ.. நீங்க இரண்டு பேரும்... இவர் காரிலேயே வீட்டுக்கு போயிரலாம்..."
ஷோபா சொல்லியபோது.. அதை மறுக்கத்தான் நினைத்தாள் ராதிகா... ஆனால் அவள் கைகாட்டிய திசையில் பாலமுரளி நின்றிருந்ததைப் பார்த்தபின்பு.. அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை..
அது ஏனென்று அவளுக்குத் தெரியவில்லை... அவன் அவளைக் கட்டிப்போட்டு விட்ட வித்தைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. அவளுடைய சிந்தனைகளைப் போல... அவனது சிந்தனைகளும் இருப்பதினாலா... அல்லது.. அவளைப் போலவே அவனும் பழைய பாடல்களை ரசித்துப் பாடுகிறவன் என்பதினாலா.. எதுதான் அது என்று அவளால் அனுமானிக்க முடிய வில்லை.. அவள் மனம் எதனாலோ அவனிடம் நிலை கொண்டுவிட்டது... அவனின் அருகாமையை அவள் மிகவும் விரும்பினாள்...
ராதிகா மறுப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்த ஹேமாவிற்கு அவளது சம்மதமான தலையசைவு ஆச்சரியத்தைத் தந்தது...
"என்னடி..." அவளின் காதோரமாக கேட்டாள் ஹேமா...
"அவரைப் பார்த்தால் ஜென்டில் மேனைப் போல இருக்கு ஹேமா... நம்பி அவர் காரில் ஏறலாம்..." மெலிதான குரலில் பதில் சொன்னாள் ராதிகா...
"நம்ம கூடப் பேசிக்கிட்டு இருந்த சங்கரும் ஜென்டில் மேன்தான்..."
"நான் அவரை ரோக்குன்னா சொன்னேன்..?"
"அவர்கிட்டேயும் கார் இருக்கு..."
"இருக்கட்டுமே.. இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற..?"
"அவரை நம்பியும் காரில் ஏறலாமுன்னு சொல்ல வந்தேன்..."
"ஹேமா..."
ராதிகாவின் குரல் கண்டிப்புடன் ஒலிக்க... தூரத்தில் அவர்களுக்கு முதுகு காட்டி யாருடனோ பேசிக் கொண்டிருந்த சங்கரை ஏக்கத்துடன் பார்த்தபடி.. ராதிகாவின் பின்னால் நடந்தாள் ஹேமா...
பாலமுரளி காரின் பின்பக்க கதவை ராதிகாவிற்காக திறந்து விட.. ஹேமாவும்.. ராதிகாவும் காரில் ஏறிக் கொண்டார்கள்.. கார் கிளம்பியது.. ஷோபா.. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்...
"பாடினாள்  ஒரு பாட்டு..
                பால்நிலாவினில்  நேற்று...
     ஓடினேன்  அதைக்கேட்டு..
                தேடினேன்  வலைபோட்டு...
     பூங்குயில்  அவள்  யாரோ..
                பொன்மயில்  அவள் பேரோ..."
அவனது  காரில் பாடல் ஒலிக்க.. ஆரம்பித்தது...
"சாருக்கு பழைய பாட்டுன்னா ரொம்ப இஷ்டம் போல..." என்றாள் ஹேமா...
"உங்களுக்கு இஷ்டமில்லையா...?"
முன் பக்கத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்ணாடி வழியாக ராதிகாவைப் பார்த்தபடி ஹேமாவிடம் கேட்டான் பாலமுரளி...
"ஊஹீம்.. அதெல்லாம் பாட்டி காலத்துப் பாட்டுசார்... அதைப் போய் யார் இஷ்டப் படுவாங்க...?"
"உங்க பிரண்ட் இஷ்டப் பட்டிருக்காங்களே..."
"இவளுக்கு பழைய பாட்டுன்னா பித்து சார்.. அது ஏன்னுதான் தெரியல..."
"ஏன்னா... அது எவர்கிரின்... என்றும் பசுமையான ராகம்..." இதைக் கேட்ட ஹேமா ஆச்சரியத்துடன்... "அட!" என்றாள்...
"என்னங்க திட்ட ஆரம்பிக்கிறிங்க...?"
"ஐயையோ.. நான் உங்களைச் சொல்லலை சார்.."
"நம்ப முயற்சி பண்றேன்..."
"அட..! நான் சொன்ன 'அட..' அது இல்லை சார்.. இது வேற 'அட..'..."
"இன்னும் எத்தனை அட போடுவீங்க..."
"ஐயோ சார்.. இவளும் பழைய பாடல்களை எவர்கிரின் பசுமையான ராகம்ன்னுதான் சொல்லுவா.."
"அப்படியா..."
பாலமுரளி... கண்ணாடி வழியாக ராதிகாவை ஊன்றிப் பார்த்தான்... அவள் அதை உணராதவளாக.. ஹேமாவின் கையைப் பிடித்துக் கிள்ளினாள்... ஹேமா கையை உதறியவாறு அலறினாள்...
"ஸ்ஆ.. பிசாசே... கை வலிக்குதுடி..."
"என்னங்க.. என்ன ஆச்சு...?"
"இவ என் கையை கிள்ளுகிறா சார்..."
"அவங்களைப் பார்த்தா சாது போலத் தெரியுது.. அவங்களைப் போய் இப்படிச் சொல்கிறீங்களே..."
"இவளா சாது..? அப்படியெல்லாம் தப்புக் கணக்கு போட்டு விடாதீங்க சார்.. இவ ஜில்லாக் கேடி..."
இதைக் கேட்டதும்.. ராதிகாவிற்கு வெட்கம் வந்து விட்டது...
'இவன் என்னைப் பற்றி என்ன நினைச்சுக்குவான்..?'
"ஏய்ய்.. சும்மா இரு..." ஹேமாவை அதட்டினாள்...
"யாரு..? நீ... என்னை சும்மாயிருக்கச் சொல்ற.. எல்லாம் நேரம்டி... தினத்துக்கு ஒரு கிலோ சதையை கிள்ளியெடுக்கிறா.. இவ கையை வைச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டாளாம்.. என்னை சும்மா இருக்கச் சொல்வாளாம்.. நீங்களே இந்த நியாயத்தைக் கேளுங்கசார்..."
"உங்களை வாயை வைத்துக்கிட்டு சும்மாயிருக்கச் சொல்கிறாங்களோ என்னவோ..."
"ஆனாலும்.. நீங்க அநியாயத்துக்கு இவளை சப்போர்ட் பண்றீங்க சார்.. உங்ககிட்ட நியாயம் கேட்டேன் பாருங்க... என்னைச் சொல்லனும்.."
"தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க பிரண்ட் அமைதியா வர்றாங்க.. அவங்களைப் பார்த்தா.. பாட மட்டும் தான் வாயைத் திறப்பாங்க போல இருக்கு..."
பாலமுரளி சொல்லியதைக் கேட்ட ஹேமா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்...
"ராதிகா... நீ வாயைத்திறக்கவே மாட்டாயாம் டி.. சாருக்கு உன்னைப்பத்தி தெரியலை.. சார்... இவ வாயைத் திறந்தா அணுகுண்டுதான்... விவரம் தெரியாம இவளுக்கு அமைதியான பொண்ணுன்னு சர்டிபிகேட் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க... இவபேச ஆரம்பிச்சா நீங்க இல்ல.. உங்க கிராமமே தாங்காது..."
'இவளா வாயாடி..?' பாலமுரளியால் நம்ப முடியவில்லை...
அமைதியாக.. அடக்க ஒடுக்கமாக.. முகத்தில் நாணம் பரவ.. ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டு வரும் இந்த மென்மையான பெண்.. வாயைத் திறந்தால் மூடவே மாட்டாளாமே.. உண்மையாகவா..?
ஹேமாவின் வீடு முதலில் வந்தது...
"வீட்டுக்கு வந்திட்டுப் போ ராதிகா..."
"இன்னொரு நாள் வரேண்டி..."
"நான் மட்டும் உன் வீட்டுக்கு வந்து உன்னைக் கூப்பிட்டுப் போகனும்.. நீ வரக்கூடாதா..?"
ஹேமா கோபம் கொள்ள.. தர்மசங்கடத்துடன் பாலமுரளியைப் பார்த்தாள் ராதிகா...
ஹேமாவின் வீட்டிற்குள் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்று திரும்பி வந்தால் நன்றாக இருக்குமா..?
"நான் காரில் வெயிட் பண்றேன்.. நீங்க போயிட்டு வாங்க..."
அவளது சங்கடத்தை உணர்ந்தவனாக பாலமுரளி கூறினான்.. ஒரு விடுதலை உணர்வுடன்.. காரை விட்டு இறங்கி ஹேமாவின் வீட்டிற்குள் போனாள் ராதிகா...
அவள் விழிகளில் தெரிந்த நன்றியுணர்வில் பாலமுரளியின் மனதில் இதம் பரவியது...
அவள் வரும்வரை.. சந்தடியில்லாத சாலையை வேடிக்கை பார்த்தபடி காரில் காத்திருந்தான் அவன்...
"ஸாரி.. நேரமாகிருச்சா..." அவள் அவசரமாக திரும்பிவந்தாள்...
"அப்படி நான் சொன்னேனா..?" அவன் காரைக் கிளப்பினான்...
அவனும்.. அவளும் மட்டும் காரில் இருக்க.. அதுவரை அப்படி அறிமுகமில்லாத ஆடவனுடன் பயணித்தறியாத ராதிகாவுக்கு என்னவோ போல இருந்தது.. அதேசமயம்.. அந்தப் பயணம் அவளுக்கு பிடித்தமானதாகவும்.. என்றுமே மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவும் இருந்தது...
இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. வார்த்தைகள் தேவையற்ற மௌனத்தின் போர்வை அவர்களைச் சுற்றிப் போர்த்தியிருந்தது...
"மௌனமே  காதலாய்..
                ஒரு வார்த்தை  பேசவேண்டும்..
     நாணமே  ஜாடையாய்..
                ஒரு பாடல் பாட வேண்டும்..."
அழகான பாடலில் அவர்களின் மௌனம் அதிகமானதாக ஆனது...
"ஷோபாவோட கிளாஸ் மேட்ன்னா... நீங்க என்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கறிங்களா..?" அவன் மௌனத்தை கலைத்தான்...
"வேற படிச்சா.. அவளோட கிளாஸ்மேட்டாய் இருக்க முடியாதே சார்...", ராதிகா தன் வழக்கப்படி பதில் சொல்லிவிட்டாள்...
பாலமுரளிக்கு.. பேசியது அவள்தானா என்று பெருத்த ஆச்சரியமாகப் போய்விட்டது...
ஹேமா எதற்காக அப்படி விழுந்து விழுந்து சிரித்தாள் என்று இப்போது அவனுக்கு புரிந்தது...
"தெரியாம கேட்டுட்டேங்க..." அவன் சிரித்தான்...
"ஊஹீம்.. தெரிந்தேதான் கேட்டிங்க..."
"தெரிந்தே கேட்டேனா..? நானா..?"
"ஊம்.. நீங்கதான் கேட்டிங்க.. நீங்க கேட்காமல்.. வேற யார் கேட்டது..? அதோ அங்கே பிளாட்பாரத்தில் நடந்து போகிறாரே.. அவரா வந்து கேட்டார்..?"
"ஓகே.. நான்தான் கேட்டேன்.. ஒப்புக்கிறேன்... எதைத் தெரிந்து கேட்டேன்கிறீங்க..."
"ஷோபா என்ன படிக்கிறா.. எந்த இயர்ல படிக்கிறாங்கிற விவரம் உங்களுக்குத் தெரியுமா.. தெரியாதா..?"
"தெரியும்.."
"அதைத் தெரிந்துக்கிட்டேதான் கேட்டிங்கன்னு நான் சொன்னேன்..."
"ஓ.."
"நீங்க விக்ரமின் ரசிகனா..?"
"நான் படம் பார்ப்பேன்.. குறிப்பாய் யாரோட ரசிகன்னும் என்னைச் சொல்லிக்க மாட்டேன்..."
"அப்புறம் எதுக்கு சார் 'ஓ..' போட்டிங்க..?"
மீண்டும் 'ஓ...' போட வாயைத் திறந்தவன்.. கடைசி வினாடியில் வாயை மூடிக் கொண்டான்...
தேனூத்தில் அவன் முன்னால் நின்று பேசக்கூட யாரும் பயப்படுவார்கள் என்ற நினைவு அவனுக்கு வந்தது... அவனும் யாருடனும் அதிகமாகப் பேசியதில்லை.. பேச்சு நேரத்தை விழுங்கும் என்ற எண்ணமுடையவன் அவன்...
அவனை வாயைத் திறந்து ஒரு ஒற்றை எழுத்தைச் சொல்ல முடியாமல் ஒரு பெண் வாயை மூட வைக்கிறாள் என்றால் இதை என்னவென்று சொல்வது..?
"ஷோபா உங்க பிரண்டா.."
"கிளாஸ் மேட்..."
"நினைத்தேன்.. அவளுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தமாச்சே.. நீங்க இரண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்க முடியாதுன்னு நினைச்சேன்..."
"இன்னும் என்னவெல்லாம் நினைச்சீங்க..?"
பின்சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டு சட்டமாக கேள்வி கேட்டவளை திரும்பிப் பார்த்தான் பாலமுரளி...
என் மனதில் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. அதைச் சொல்லவா என்று கேட்க வேண்டும் போல அவனுக்கு இருந்தது...
லேசாக சிரித்தபடி.. காரை அவள் வீட்டின் முன்னால் நிறுத்தினான்.. அவள் இறங்காமல்...
"நீங்களும் இறங்குங்க சார்.." என்றாள்...
"நான் எதுக்குங்க..?" அவன் தயங்கினான்...
"சார்.. அது ஹேமாவின் வீடு... இது நைட்நேரம்... அங்கே அவளை விட்டுவிட்டு நீங்களும் நானும் சேர்ந்து வெளியே வரனும்... நான் அப்படியெல்லாம் தெரியாதவங்களோடு பகலிலேயே வெளியே போய் வந்ததில்லை... நைட்டுன்னா சொல்லவே வேணாம்.. அதனால சங்கடப் பட்டேன்.. இது என்வீடு சார்...
"இங்கே மட்டும் உங்களுக்கு சங்கடமாக இருக்காதா..?"
"எப்படி இருக்கும்..? எப்படியும் நீங்க வந்து காரில் இறக்கி விட்டுட்டுப் போகிறதை என்வீட்டில் சொல்லத்தான் போகிறேன்.. அது இன்னார்ன்னு அவங்களுக்கு காட்ட வேணாமா..?"
அவளின் பேச்சு.. அவனுக்கு ஆச்சரியத்தையும்.. அவள்மீதான மரியாதையையும் அதிகப் படுத்தியது...
அதற்கு மேலும் வழக்கடிக்காமல் அவன் காரை விட்டு இறங்கினான்.. அவள் வீட்டைப் பார்த்தான்... முன்புறம் ஒரு கார் நிற்குமளவிற்கு சிறிய போர்டி கோவுடன்.. அடக்கமாக.. அழகாக அமைந்திருந்தது வீடு...
தேனூத்திலிருக்கும் அவன் வீட்டு போர்டிகோவின் பத்தின் ஒரு பங்கு அளவில் தான் அந்த வீடு இருக்கும் என்று நினைத்தவாறே வீட்டுப் படியேறினான் பாலமுரளி...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -14
அம்மம்மா.. கேளடி தோழி...! -14
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy