அம்மம்மா.. கேளடி தோழி...! -11

11 அந்தியிலே   உந்தன்   முகம்... ரகசியங்களைச்   சொல்லுதடி... எல்லோரும் காத்திருப்பார்கள் என்று ஷோபாவுக்கு மிக நன்றாகவே தெரியும்.....


11
அந்தியிலே  உந்தன்  முகம்...
ரகசியங்களைச்  சொல்லுதடி...

எல்லோரும் காத்திருப்பார்கள் என்று ஷோபாவுக்கு மிக நன்றாகவே தெரியும்.. இருந்தும் அவள் தாமதமாகவே வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்...
அனைவரும் அவளுக்காக காத்திருக்க.. விழா நாயகியாய் அவர்கள் முன்னிலையில் பிரவேசிக்க வேண்டும் என்பது அவளது திட்டம்...
அன்றைய நாள் அவளுடையது.. அந்த விழாவும் அவளுக்கானது.. அவள் வரவை மற்றவர்கள் எதிர்பார்த்து காத்திருக்க.. அவள் மகாராணியைப் போல அவர்கள் மத்தியிலே தோன்ற வேண்டும்...
அவள் பார்த்த இந்திப்படங்களில் இப்படித்தான் வந்தது...
எல்லோரும் ஹாலில் கூடியிருப்பார்கள்.. கதாநாயகி மாடியிலிருந்து வெளிப்படுவாள்.. அனைவரது கண்களும் மாடிப்படிகளை நோக்கித்திரும்பும்... அவள் ஒயிலாக.. பார்வையைச் சுழற்றி எல்லோரையும் பார்த்த வண்ணம் படிகளில் இறங்குவாள்.. அவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து அவளை வரவேற்பார்கள்...
அந்தக் கதாநாயகியைப் போலத்தான் இதுவரை ஷோபா செய்து வந்தாள்.. அந்த வருடம் மட்டும் அது மாறி... ஹாலில் விழா நடக்காமல் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தது...
அதில் ஷோபாவுக்கு சில சங்கடங்கள் இருந்தன..
முதலாவதாக அவளுக்கு தோட்டம் என்றாலே பிடிக்காது...
டிஸ்கொதே போன்றவைகளை விரும்புகிறவளுக்கு இயற்கையின் அழகு எப்படிப் பிடிக்கும்..?
பகலிலேயே தோட்டத்துப் பக்கம் வராதவளை.. இருளில் வரச்சொன்னால் அவளுக்கு எப்படியிருக்கும்..? அதுவும் அன்று அவளது பிறந்தநாள்... தோட்டத்தின் அழகை ரசிப்பவர்கள் அவளது வைர நகைகளின் ஒளிர்வை ரசிப்பார்களா..?
மூன்றாவதாக... அங்கே முயல் குட்டிகள் வேறு இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தன...
ஷோபாவுக்கு வளர்ப்புப் பிராணியாக நாயை மட்டுமே பிடிக்கும்... அதுவும் நாய் வளர்க்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான்...
'ஹேய்... எங்க வீட்டில்.. வளர்க்கிற நாய் உசத்தி ரகம்டி.. எனக்காக டாடி.. வரவழைச்சது...'
ஷோபாவுக்கு நாயும் ஒரு பெருமைக்குரிய பொருள்தான்... மற்றபடி அந்த நாயை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டாள்...
இத்தனை சங்கடங்கள் இருந்தும்.. அவள் தோட்டத்தில் விழாநடத்துவதை ஆட்சேபிக்காமல் இருந்ததிற்கான ஒரே காரணம்... சங்கர்..!
அவனுக்கு இயற்கையை பிடிக்கும்.. இழை.. தழை.. செடி கொடிகளைப் பிடிக்கும் என்ற காரணத்திற்காக மட்டுமே அவள் தோட்டத்தில் விழா நடப்பதை பொறுத்துக் கொண்டாள்...
மற்றபடி.. தோட்டத்தில் அந்த விழா நடைபெறுவதில் ஷோபாவுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை...
அவள் மெதுவாக அன்னம் போல நடக்கிறோமென்ற நினைவில் ஆமைபோல ஊர்ந்து வந்து கொண்டிருக்க.. பரந்தாமனும்.. சுசிலாவும்.. அடித்துப் பிடித்துக் கொண்டு சங்கரை நோக்கி ஓடி வந்தார்கள்...
"யாருடி அந்தப் பொண்ணு..?"
"தெரியலையே... மாப்பிள்ளைக்கு தெரிஞ்ச பொண்ணோ..?"
"அவளை எதுக்குடி இங்கே கூப்பிட்டுக்கிட்டு வந்தாரு..?"
"என்னைக் கேட்டா..? அவரைப் போய் கேளுங்க.."
"இந்த ஷோபாவுக்கு அறிவே இல்லை..."
எப்போதும் மகளைத் திட்டியறியாதவர்.. அவளது பிறந்த நாளில் போய் மகளைத் திட்டி வைத்தார்...
அந்த அளவுக்கு அவருக்கு சங்கரின் மேல் ஈடுபாடு இருப்பதை உணர்ந்ததினால்.. சுசிலாவும் அவரைக் கண்டிக்காமல் மௌனித்தாள்...
"வாங்க மாப்பிள்ளை.. வாங்க.. வந்து ரொம்ப நேரமாச்சா..?"
சங்கரை வரவேற்றுக் கொண்டே.. ராதிகாவை முறைத்தார் பரந்தாமன்...
'இவர் எதுக்கு என்னை முறைக்கிறார்..?'
புரியாமல் ராதிகா ஹேமாவைப் பார்க்க.. அவள் உதட்டைப் பிதுக்கி.. கைகளை விரித்து தோளைக் குழுக்கினாள்...
"இப்போதுதான் வந்தேன்..."
அது நேரம்வரை கண்களில் சிரிப்போடு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தவன் முகத்தில் ஒரு சுளிப்பு ஏற்படுவதை வியப்புடன் உணர்ந்தாள் ராதிகா...
"உங்களுக்காக ஷோபா காத்துக்கிட்டு இருக்கா மாப்பிள்ளை..."
சுசிலா வெகு பவ்யத்துடன் கூறினாள்.. அவளது பார்வை ராதிகாவை அளவிட்டுக் கொண்டிருந்தது.. ராதிகாவின் எளிமையான.. இயல்பான தோற்றம் அவளது பயத்தை விரட்டியடிக்க.. அவள் 'அப்பாடா...' என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாள்...
அதேசமயம்.. அந்த எளிமையிலும்.. அதீதமான அழகோடு ராதிகா இருந்தது சுசிலாவை பாதித்தது...
'இந்த ஷோபா என்னதான் செய்கிறா...'
வீட்டுப்பக்கம் திரும்பிப் பார்த்தாள்... ஆமை நடைபோட்டு வந்து கொண்டிருந்த ஷோபாவைக் கண்டதும் அவளது நிம்மதி அதிகமானது...
'வந்துட்டா.. இனி பயமில்லை...'
"அதோ.. ஷோபா வருகிறாளே..."
சங்கரின் கவனத்தை திருப்ப அவள் சொன்ன வார்த்தைகளை அவன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை...
ஷோபா வருகிறாளா என்று பார்க்காமல்.. அவன் அலட்சியத்துடன் செடிகளுக்கு மத்தியில் பீறிட்டுக் கொண்டிருந்த செயற்கை நீருற்றைப் பார்த்துக் கொண்டிருக்க... ஷோபா அவர்களைப் பார்த்து விட்டாள்..
'சங்கர்...!'
அவள் விழிகள் மின்னிய அதே நேரத்தில்... சங்கரின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராதிகாவை பார்த்து விட்டாள்... பரவசகம் மறைந்து.. அவள் விழிகளில் கலவரம்  படிந்தது..
அவள் போட்டு வைத்த திட்டமே.. சங்கரும்.. அவளும் அருகருகே நிற்க வேண்டும்.. அதைப் பார்த்து ராதிகா பொறாமைப்பட வேண்டும் என்பதுதான்...
இப்போது என்னடா வென்றால்.. ராதிகாவின் அருகே சங்கர் நின்றுகொண்டிருக்கிறான்.. ஷோபா அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்...
'இவளுக்கு மட்டும்.. எல்லாமே தானாகவே நடந்துவிடுமா..?'
அவள் அன்னம் போல நடக்க வேண்டும் என்பதை மறந்து.. ஆமை வேகத்தை விட்டுவிட்டு.. வேகமாக நடைபோட்டாள்...
"ஹாய் சங்கர்..." அவளுக்கு மூச்சிரைத்தது...
"ஹாய்.. இதோ இருக்கிற வீட்டிலிருந்து வருவதற்கா இப்படி ஒலிம்பிக் பந்தயத்திலே ஓடி வந்ததைப் போல மூச்சிரைக்கிற..? மெதுவாய் வர வேண்டியதுதானே..."
சங்கர் நிதானமாக கேட்டான்.. கிடைத்தது வாய்ப்பென்று ஷோபாவிற்கு பதிலாக பரந்தாமன் பதில் சொன்னார்...
"அவ மெதுவாகத்தான் வந்திருப்பா.. உங்களைப் பார்த்திருப்பா.. அதுக்குப் பின்னாலேயும் அவளாலே மெதுவாக நடந்து வர முடியுமா மாப்பிள்ளை..? உங்களைப் பார்த்த சந்தோசத்தில் ஓடி வந்திருப்பா.. ஆம் ஐ கரெக்ட் ஷோபா..?"
"அப்சல்யூட்லி கரெக்ட் டாடி..."
தந்தை மகளின் பேச்சு வார்த்தையிலிருந்து.. சங்கரின் மீதான அவர்களின் ஈடுபாட்டை தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டாள் ராதிகா...
அவள் முன்னால் அந்தப் பேச்சு வார்த்தை நடந்ததில் ஷோபாவுக்கு மனதுக்குள் வருத்தம்.. அதைவிட.. அவள் முன்னாலேயே சங்கர் பாராமுகம் காட்டியதில் அதைவிட வருத்தம்...
'இவ என்னைப்பத்தி என்ன நினைப்பா..?'
அவள் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்த போது.. சங்கர் அவனது பாராமுகத்தை கைவிட்டு அவள் முகம் பார்த்தான்...
அவள் சந்தோசப் பட்டுப் போனாள்..
"நான் மட்டும்தான் இங்கே நிற்கிறேனா ஷோபா.. உன் பிரண்ட்ஸீம் உனக்காக வந்து இங்கே நின்றுக்கிட்டு இருக்காங்களே.. அவங்களை நீ பார்க்கலையா..?"
அவன் அவள் சந்தோசத்தில் வெந்நீரை ஊற்றி வைக்க.. அவள் திணறிப் போனாள்...
'அப்பாடி.. இதுக ரெண்டும் மாப்பிள்ளைக்கு பிரண்டில்லை... ஷோபாவுக்குத்தான் பிரண்டுக போல...'
பரந்தாமனும்.. சுசிலாவும்.. கண்களால் நிம்மதியை பரிமாறிக் கொண்டார்கள்...
"உங்களைப் பார்த்த பின்னால் மத்தவங்க அவ கண்ணில் படுவாங்களா மாப்பிள்ளை..? ஆம் ஐ கரெக்ட் ஷோபா..?"
பரந்தாமன் மகளுக்கு கை கொடுக்க...
"அப்சல்யூட்லி கரெக்ட் டாடி..." என்று அவளும் தவறாமல் அந்த உதவிக்கரத்தை பற்றிக் கொண்டாள்..
"இதுவரை பார்க்கலை... இப்போ பார்த்தாச்-சில்லையா..?"
சங்கர் விடாமல் அதிலேயே நின்றதை.. ஷோபாவும்.. அவளைப் பெற்றவர்களும் மனதிற்குள் குறித்துக் கொண்டார்கள்...
'இது நல்லதுக்கில்லையே...' என்று சுசிலாவும்..
'ஷோபா எதுக்காக.. இது போல அவளை டாமினேட் பண்ணக்கூடிய பிரண்ட்ஸ்களை இன்வைட் பண்ணினா..' என்று பரந்தாமனும் ஒரே நேரத்தில் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள்...
இருந்த போதிலும்.. அவர்களுக்கும் வேறு வழியிருக்கவில்லை... வந்த விருந்தினரை வரவேற்கா-விட்டால் சங்கர் அவர்களைப் பற்றி என்ன நினைப்பான்..?
அதுவும்.. அவர்களது தவறை அவன் சுட்டிக் காட்டிய பின்னாலும் அவர்கள் சும்மா இருந்தால் அது நன்றாக இருக்குமா..?
ஆதலால் வரவழைத்துக் கொண்ட முக மலர்ச்சியுடன்...
"ஹாய் ராதிகா... ஹாய் ஹேமா..." என்றாள் ஷோபா..
ராதிகாவைப் பார்த்த சங்கரின் பார்வையில் ஏதோ செய்தி இருந்தது.. அது என்னவாக இருக்கும் என்று யோசித்த ராதிகாவிற்கு நொடிப் பொழுதில் அது புரிந்து போனது...
ஷோபா அவளது பெயரைச் சொல்லி அழைத்ததில்... அவளது பெயர் அவனுக்குத் தெரிந்து விட்டதாம்...
அவளது கண்கள் அந்தச் செய்தியைப் புரிந்து கொண்டசிரிப்பைக் காட்ட.. அவன் கண்களில் மின்னலடித்தன...
சுபாவத்திலேயே சூட்சுமப்புத்தி அதிகமாக உள்ள சுசிலா இந்தப் பார்வைப் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்து விட்டாள்...
'ஊஹீம்.. இந்த டிராக்கே சரியில்லை...'
மனதில் நினைத்தபோதும் அதை மறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் அவள் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்த போது.. அந்தக் கார் வந்து நின்றது...
கவனம் கலைந்தவர்களாக அவர்கள் திரும்பிப் பார்க்க பாலமுரளி காரிலிருந்து இறங்கினான்...
'பால முரளியா..!' சுசிலாவினால் நம்பவே முடியவில்லை...
அவளும் திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் அவனுடன் பேச்சுக் கொடுக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறாள்...
அவனுக்கு நின்று பேச நேரமிருக்காது.. ஒரு வார்த்தைபேசுவதற்குள் அவனது செல்போன் மணியொலித்து விடும்.. அகன்று விடுவான்...
அவன் ஷோபாவின் பிறந்தநாள் அன்று அவர்களின் வீட்டுக்கு வந்திருக்கிறானா..?
"உன் அக்கா மருமகளோட தம்பி போல இருக்கே சுசி...?"
"அவரேதான்.."
"இன்னைக்கு ஷோபாவின் பர்த்டேக்கு அவரை இன்வைட் பண்ணியிருந்தியா என்ன..?"
"அவருக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கா..? வேற வேலையாய் வந்திருப்பார்..."
சுசிலா சங்கரை மறந்து பாலமுரளியை வரவேற்க விரைந்தாள்







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -11
அம்மம்மா.. கேளடி தோழி...! -11
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy