அம்மம்மா.. கேளடி தோழி...! -10

10 மாலையிலே   உன்   பார்வை மனதை   மயக்கும்   காரணமென்ன.. ? ஹேமாவுக்கு என்னவோ போல ஆகிவிட்டது... "இதுக்குத்தாண்டி நான் இவ வீ...


10
மாலையிலே  உன்  பார்வை
மனதை  மயக்கும்  காரணமென்ன..?

ஹேமாவுக்கு என்னவோ போல ஆகிவிட்டது...
"இதுக்குத்தாண்டி நான் இவ வீட்டு பங்சனுக்கு வரமாட்டேன்னு சொன்னேன்.. நீ கேட்கலை..."
செக்யூரிட்டிக்கு கேட்டுவிடாமல் மெல்லிய குரலில் சொன்னாள் ஹேமா... ராதிகாவிற்கும் அதே எண்ணம்தான் என்றாலும்.. அவ்வளவு தூரம் வந்துவிட்டு.. வாசலோடு திரும்பிப் போனால் அது ராதிகாவின் இயல்புக்கு அழகில்லையே...
"வேலை செய்கிறவங்களுக்கு என்னடி தெரியும்..? நாமதான் விளக்கமா எடுத்துச் சொல்லனும்..."
பொறுமையாக தோழியை சமாதானப் படுத்திய ராதிகா செக்யூரிட்டியின் முகம் பார்த்தாள்...
"லுக்மேன்.. நாங்க ஷோபாவோட படிக்கிறவங்க.. அவளோட பர்த்டே பங்சனுக்கு வந்திருக்கோம்.. நீங்க வேணும்னா அவகிட்ட கேட்டுக்கிட்டு வந்து எங்களை அலோவ் பண்ணுங்க.. ஏன்னா.. தெரியாதவங்களை நீங்க உள்ளே விடக்கூடாதில்லையா..? அதுதானே உங்க டியூட்டி... இல்லைன்னா பாவம்.. உங்களுக்கும் வேலை போயிடுமில்ல..."
செக்யூரிட்டியின் அலட்சியத்தையும்.. சந்தேகத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு வினாடியில் அவனுடைய நிலையை அவனுக்கு உணர்த்தி விட்டாள் ராதிகா..
ஆட்டோவில் வந்ததால் இளப்பமாக நினைத்த செக்யூரிட்டியின் முகம் இருண்டு விட்டது...
'வெல்டன் ராதிகா...' ஹேமா மனதிற்குள் பாராட்டிக் கொண்டாள்...
"ஸாரிம்மா..." செக்யூரிட்டி கேட்டைத் திறந்துவிட்டான்...
கண்முன்னால் தெரிந்த பங்களாவின் வெளிப்புறத் தோற்றம் பிரம்மாண்டமாகத் தெரிய...
"வாவ்..." என்றாள் ஹேமா...
"இதனால்தான் அவ இத்தனை அலட்டல் அலட்டிக்கிறா போல ஹேமா..."
"ஷ்யூர்.. அதிகபணம்.. அதனால இயல்பாவே அவளுக்கு அந்தக் குணம் வந்திருக்கு.."
"அது நேச்சர்தான்..."
அவர்கள் பேசிக்கொண்டே.. தோட்டத்து புல்வெளியில் கால்வைத்தார்கள்...
செடிகள் தோறும் சீரியல் விளக்குகள் கண் சிமிட்ட. அந்த செடிகளின் மேலே நீருற்று வழிந்து கொண்டிருக்க.. இங்கும் அங்கும் முயல்கள் ஓடிக் கொண்டிருக்க.. என்று அந்தச் சூழலே வெகு ரம்யமாக இருந்தது...
"பெண்டாஸ்டிக் ஹேமா.. இவளோட குணத்துக்கு இவ கார்டனில் வைத்து ட்ரீட் கொடுப்பான்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்லை.."
அந்தச் சூழலை ரசித்தபடி ராதிகா சொன்னதற்கு...
"நானும் நினைத்துப் பார்க்கலை..." என்று உடனடியாக பதில் வந்தது...
ஹேமாவிடம் பேசிக் கொண்டிருந்த ராதிகா... ஆண்குரலில் வந்த பதிலைக் கேட்டு.. புருவம் உயர்த்தினாள்...
'யாராக இருக்கும்..?'
அவர்கள் சுற்று முற்றும் பார்த்தார்கள்.. செடிக்கு அந்தப் பக்கமிருந்து குரல் ஒலித்ததால் ராதிகா லேசாக எட்டிப் பார்க்க.. புன்னகையுடன் ஒருவன் வெளிப்பட்டான்..
"வாவ்... பக்கா ஹேன்ட்சம் மேன்டி..." ஹேமா ராதிகாவின் காதோரம் கிசுகிசுத்தாள்...
'இவ இதுக்கும் 'வாவ்' சொல்லி வைக்கிறாளே..'
ராதிகா எதிரே நிற்பவனின் கவர்ச்சிகரமான அழகை நோட்டம் விட்டபடி அவனுக்கு 'ஹாய்' சொல்லலாமா... வேண்டாமா.. என்று யோசித்தாள்...
"ஹாய்.. ஐ ஆம் சங்கர்..."
அவளை முந்திக்கொண்டு அவன் 'ஹாய்' சொல்லியபடி அவளுக்கு கை நீட்டினான்...
'எதுக்கு கையை நீட்டறான்..? இவன் கையை நான் பிடித்து குழுக்கனுமா..? அது என்ன தேவைக்காம்...'
ராதிகா நினைத்துக் கொண்டிருந்த போதே...
"ஹாய்... ஐ ஆம் ஹேமா..." என்றபடி... ராதிகாவிடம் நீட்டிக் கொண்டிருந்த அவனின் கையைப் பிடித்து குழுக்கினாள் ஹேமா...
"ஏண்டி அலையற..? அவன் உன்னைப்பத்தி என்ன நினைச்சுக்கவான்..?" ராதிகா சத்தமில்லாமல் தோழியை கடிந்து கொண்டாள்...
"என்னடி இது வம்பாப் போச்சு..? அவன்தானே கையை நீட்டினான்..? நீட்டின கையைப் பிடித்து குழுக்கலைன்னா மனசு வலிக்காதா..?" கிசுகிசுப்பாய் நியாயம் கேட்டாள் ஹேமா..
"யார் மனசு வலிக்கும்..?" அதே குரலில் ராதிகா கேட்க...
"அவன் மனசுக்குத்தான்..." என்றாள் ஹேமா...
"உன் மனசு வலிக்கும்ன்னு சொல்லு..." ராதிகா முறைத்தாள்...
தோழிகளின் பேச்சு வார்த்தையை கையை முன்னால் மடித்துக் கட்டியவாறு வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் தென்பட்ட சுவராஸ்யத்தைக் கவனித்ததும்.. பேச்சை நிறுத்தி விட்டாள் ராதிகா...
"ஏன் பேச்சை நிறுத்திட்டிங்க..?" அவன் கரிசனமாக விசாரித்தான்...
ஹேமா எதையோ சொல்ல வாய்திறந்து... ராதிகாவின் கையால் ரகசியக் 'கிள்'ளை வாங்கினாள்...
'ஸ்ஆ... ஒருகிலோ கறியை நகத்தில் எடுத்திருப்பா போல.. இந்தக் கிள்ளு கிள்ளறாளே...'
வலித்த கையை தடவியவாறு ஹேமா வாய் மூடிக்கொள்ள ராதிகா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்...
அவளது பார்வையைக் கண்டவனின் கண்களில் சுவராஸ்யம் கூடியது.. அவளது செய்கையை அவன் ரசித்தான்...
"பார்வையிட்டு முடிச்சாச்சா..?"
அவன் மிதப்பாக வினவிய விதத்தில் அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது..
"யார் சார் நீங்க..?" என்று சண்டைக்கு கிளம்பி விட்டாள்...
"சொன்னேனே.. ஐ ஆம் சங்கர்... நீங்கதான்... இன்னும் உங்க பெயரைச் சொல்லலை..."
"உங்ககிட்ட எதுக்காக நான் என் பெயரைச் சொல்லனும்..?"
ராதிகா மூக்கை விடைத்தாள்.. அவனுக்கு அவளின் அந்தக் கோபத்தைக் கண்டு வேடிக்கையாக இருந்தது...
"நான் என் பெயரைச் சொன்னேனே.."
"நான் கேட்டேனா..?"
"இப்போக் கேட்டிங்களே..."
"என்ன கேட்டேன்..."
"யார் சார்.. நீங்கன்னு கேட்கலையா..?"
அவள் எதற்காக அதைக் கேட்டாள்..? அவன் எதற்கும்.. எதற்கும் இணை கூட்டுகிறான்..? அவளுக்குள் கோபம் கிளர்ந்தது..
"ஏன் சார்.. இது எங்க கிளாஸ் மேட்டோட பர்த்டே பங்சன்.. அதில் கலந்துக்க நாங்க வந்திருக்கிறோம்.. எங்களுக்குள்ள நாங்க ஆயிரம் பேசிக்குவோம்.. நீங்க தேவையில்லாம மூக்கை நுழைச்சா யார் நீங்கன்னு கேட்க மாட்டோமா..?"
"ஓ.. நீங்க கேட்ட யார்... இந்த யாரா..?"
"ஆமாம்.. ஆமாம்.. மத்தபடி.. நீங்க யார்... எவர்ன்னு நாங்க தெரிஞ்சுக்கனும்கிற ஆர்வத்தில அதைக் கேட்கலை..."
"நாங்கன்னு உங்க பிரண்டையும் கூட்டுச் சேர்த்துக்கிட்டா எப்படி..?"
"ஹலோ.. இவ என்னோட பிரண்ட்..."
"யார் இல்லைன்னு சொன்னது..? பட்... ஐ ஆம் ஹேமான்னு எனக்கு இவங்க ஷேக் ஹாண்ட் கொடுத்தாங்களே.. மறந்து போச்சா..?"
அவன் கேலியாக வினவ... இவளை என்ன செய்தால் தேவலாம் என்ற கோபத்தோடு ஹேமாவை முறைத்தாள் ராதிகா...
"அவங்களை ஏங்க முறைக்கறிங்க..?"
அதற்கும் சங்கர் பரிந்து கொண்டு வர.. அவளின் கோபம் அதிகரித்தது...
"இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்..?"
"உங்க பெயர் என்னன்னு தெரிஞ்சுக்கனும்.."
"அதை நீங்க தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போறிங்க..?"
"தெரியுதில்ல... அதைத் தெரிஞ்சுக்கிட்டு நான் ஒன்றும் செய்ய முடியாதுன்னு தெரியுதில்ல.. அப்புறம் எதுக்காக இந்தத் தயக்கம்..? உங்க பெயரைக் கேட்டா சொல்லிட்டுப் போக வேண்டியது தானே.."
"அதெல்லாம் சொல்ல முடியாது..."
"ஏன் சொல்ல முடியாது.."
"எனக்குப் பிரியமில்லை..."
"ஆனா எனக்குப் பிரியமாச்சே..."
"என்னது..."
அவள் அவனை நேருக்குநேர் பார்த்து முறைத்தாள்.. அவன் சிரித்தபடி கைகளை உயர்த்தினான்...
"பஸ்.. பஸ்... எதுக்கு இந்த கோபம்..? நீங்க ஷோபாவோட கிளாஸ் மேட்ஸ்தான்.. பிரண்ட்ஸ் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியுது..."
"வாட்..?"
எப்படி அவன் இதைக் கண்டுபிடித்தான் என்ற நினைவில் ராதிகாவின் விழிகள் ஆச்சரியத்தில் மிதந்தன..
"எதுக்கு இத்தனை ஆச்சரியம்..? நீங்க அவளோட கிளாஸ்மேட்ஸ்ன்னுதான் சொன்னிங்க... மறந்தும் அவளோட பிரண்ட்ஸ்ன்னு சொல்லலையே.. அதை வைத்துத்தான் சொன்னேன்... அதோடு..."
அவன் முடிக்காமல் நிறுத்த.. அவனின் புத்திசாலித்தனமான யூகத்தில் வியந்து போயிருந்த ராதிகாவிற்கு அதற்கு மேலும் அவன் என்ன நினைத்தான் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் துளிர்த்தது...
"அதோடு.. அவளுடைய குணத்துக்கு கார்டனில் வைத்து ட்ரீட் கொடுப்பான்னு நினைத்தும் பார்க்கலைன்னு சொன்னீங்களே... அந்த இடத்தில்தான் நீங்களும்.. நானும் ஒரு மனதாகிறோம்.."
'என்னடா இது.. இப்பவும் இவன் எதற்கோ.. எதையோ இணை கூட்டிச் சொல்லி வைக்கிறான்...' ராதிகா முகம் சிவந்தாள்...
அவளது முகச் சிகப்பை ரசித்தபடி அவன் பேச்சைத் தொடர்ந்தான்...
"உங்களுக்கு தோட்டமும்... இந்தச் சூழ்நிலையும் ரொம்பப் பிடிக்கும் போல இருக்கு.. பட்.. ஷோபாவுக்கு இதையெல்லாம் ரசிக்கத் தெரியாது..."
அது உண்மைதான் என்றாலும்.. அவனிடம் அதை ஒப்புக்கொள்ளும் மனமின்றி...
"அப்படியெல்லாம் இல்லையே..." என்று மறுத்தாள் ராதிகா...
"இப்பக்கூட கார்டனில்தானே பங்சனை அரேன்ஜ் பண்ணியிருக்கா..?" என்று கேட்கவும் செய்தாள்...
"இதைச் சொல்கிறிங்களா... ஹா.. ஹா..." என்று சிரித்தான் சங்கர்...
"எதுக்குச் சிரிக்கறிங்க..?" ராதிகாவுக்கு புரியவில்லை...
"இந்த ஜடியாவை அவள் சொல்லியிருக்க மாட்டாள்... அவளோட பேரண்ட்ஸ் சொல்லியிருப்பாங்க.."
"அதை எப்படி நீங்க நிச்சயமாய் சொல்கிறிங்க..?"
அவன் மர்மப் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தான்.. வாசல் பக்கம் அவன் வரவுக்காக காத்திருந்த பரந்தாமனும்.. சுசிலாவும் அவன் அங்கே நிற்பதைக் கண்டதும் விரைந்தோடி வந்தார்கள்...
அவன் தனிமையில் நின்றிருந்தாலோ.. இல்லை.. வேறு ஆணுடன் பேசிக் கொண்டிருந்தாலோ அவர்கள் அந்த அளவுக்கு கதி கலங்கிப் போயிருக்க மாட்டார்கள்..
ஒரு பெண்ணுடன் அவன் வெகு சகஜமாக பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்களின் அடிவயிறு கலங்கி விட்டது...
அதிலிருந்து அவனை தடுத்தாட் கொள்வதற்காக அவர்கள் விரைந்து ஓடிவந்தார்கள்...
"யாருடி அந்தப் பொண்ணு..."
"தெரியலையே..."
"இந்த ஷோபாக்கழுதை எங்கே போனா..."
அந்த ஷோபாக்கழுதை அப்போதுதான் தன் ஒப்பனைகளை முடிந்துவிட்டு.. ஒயிலாக தோட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள்...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -10
அம்மம்மா.. கேளடி தோழி...! -10
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy