அம்மம்மா.. கேளடி தோழி...! -21

21 என்முன்னாலிருந்த மக்கள்கூட்டத்தில்.. உன்னை மட்டுமே என்கண்கள் தேடின... "யாருடி..." என்றபடி திரும்பிப் பார்த்த ராதிகாவ...


21
என்முன்னாலிருந்த மக்கள்கூட்டத்தில்..
உன்னை மட்டுமே என்கண்கள் தேடின...

"யாருடி..." என்றபடி திரும்பிப் பார்த்த ராதிகாவின் முகத்தில் சங்கடம் நிலவியது...
'இவனா...அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்...
அந்த உதடுகளின்மீது சங்கரின் பார்வை ஆசையாகப் படிவதைக் கண்டதும் அவள் முகம் கன்றி விட்டது...
ஷோபாவின் பிறந்தநாள் விருந்தின் போது அவன்.. அவளையே சுற்றிச்சுற்றி வந்ததை அவளும் உணர்ந்துதான் இருந்தாள்...
இருந்தும் அவளுக்கு ஏனோ... அவன்மீது ஆர்வம் ஏற்படவில்லை.. அது எதனால் என்று தெளிவாக அவளால் சொல்லவும் முடியவில்லை...
பார்ப்பவர்களையெல்லாம் ஆர்வமாக பார்த்து விட முடியுமாஅதே சமயம்... யாரோ ஒருவரின்மீது ஆர்வம் ஏற்பட்டு விட்டால் அதை தடுத்து விடத்தான் முடியுமா..?
பாலமுரளியின் மீது ராதிகாவுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு... சங்கரின் மீது ஏற்படவில்லை என்பது மட்டும் நிதரிசனமான உண்மை...
ஹேமாவுடன் சேர்ந்து வந்தவள்... அவள் சங்கருடன் பேச நின்றதும் நகர முடியாமல் சேர்ந்து நின்றாள்...
"ஹாய் ராதிகா... எப்படியிருக்கீங்க..?" என்ற அவனின் கேள்விக்கு... நாகரிகம் கருதி.. தவிர்க்க முடியாமல்...
"ஐ ஆம் ஃபைன்... நீங்க எப்படியிருக்கீங்க..." என்று பதிலும் சொல்லி விட்டாள்...
ஷோபா கூட நிற்பதை சங்கர் மறந்து விட்டானோ என்ற சந்தேகம் ஏற்படும் அளவிற்கு.. சங்கர் ஷோபாவை கண்டு கொள்ளாமல் ராதிகாவிடம் பேச ஆரம்பித்து விட்டான்...
ராதிகாவுடன் அவனுக்கு பதில் சொல்லியபடி.. வகுப்புக்கு செல்லும் பாதையையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்...
சங்கர் ராதிகாவுடன் பேசப்பேச... ஹேமா.. ஷோபாவை ரகசியப் பார்வை பார்த்த வண்ணம் ஏளனப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்...
அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஷோபாக்கு புரியாதா..?
'பார்... நீ வட்டமடிக்கும் ஆண்மகன்.. உன்னை விட்டுவிட்டு... ராதிகாவைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்...'
ஷோபாவால் ஹேமாவின் அந்தப் பார்வையை சகித்துக் கொள்ள முடியவில்லை... அவளது
உயரம் அவளது காலடியில் சரிவதை திகிலுடன் உணர்ந்தவளுக்கு அதைத் தடுக்கும் வழிவகை தெரியவில்லை... 
ராதிகா அவளுக்கு எத்தனையோ தோல்விகளைத் தந்திருக்கிறாள்.. அவையெல்லாம் சின்னச் சின்னத் தோல்விகள்.. அவற்றையே தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறியவளுக்கு... இந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாது என்று தோன்றி விட்டது...
காலேஜின் பிரதான வாசலுக்கும்.. உள்ளே இருந்த காலேஜ் கட்டிடத்திற்கும் இடையே இருந்த நீண்டு... அகன்ற சிமிண்ட் பாதையின் இருபக்கமும் பூச்செடிகள் அடர்ந்திருந்தன...
அந்த பூச்செடிகளின் மத்தியில் நின்றிருந்த ராதிகாவைப் பார்த்த சங்கர்...
"பூவுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே தெரியலைங்க..." என்றான்...
ராதிகா அலுப்பாக உணர்ந்தாள்... முடியாமல் நீண்டு கொண்டிருந்த உரையாடலில் அவள் சலிப்படைந்திருந்தாள்...
ஷோபாவின் முகத்தில் பொறாமையின் கனல் அப்பட்டமாகத் தெரிந்தது... ராதிகாவிற்கு அதில் சம்மதமில்லை...
அவளுக்கு ஷோபாவை பிடிக்காது தான்.. அதற்காக அவளைச் சீண்டுவதற்காக சங்கரிடம் பேசுவது என்பது அவளது இயல்புக்கு மாறான ஒன்று..
சங்கரும்தாம் இப்படி ஷோபாவுடன் வந்து விட்டு.. ராதிகாவை இழுத்துப் பிடித்து பேசிக் கொண்டிருக்கலாமா..?
அவள் மனதில் கோப அலை எழுந்தது...
'பூவும்... நானும் ஒன்றாமா...?'
அவள் நிமிர்ந்து சங்கரின் முகத்தை கூர்மையாக பார்த்தாள்...
"ஆதிகாலத்தில் இருந்து இப்ப வரைக்கும் ஆண்களின் அப்ரோச் இப்படித்தான் இருக்குது... எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பூவாய் தோன்றும்.. தென்றலாய் தோன்றும்.. இப்படி பெண்களை வர்ணித்தா அவங்க சந்தோசப் படுவாங்கன்னு நீங்களாக ஒரு தப்புக் கணக்கு போட்டுக்கிட்டு.. அதை விட்டு வெளியே வராம.. வட்ட மடிச்சுக்கிட்டு இருக்கீங்க..."
ராதிகாவின் காட்டமான பேச்சைக் கேட்டு சங்கர் துணுக்குற்றான்... அவன்முகம் மாறிவிட்டது...
"நான் தப்பா ஏதும் சொல்லிட்டேனா.. ராதிகா.."
"சரியாவும் சொல்லலை சார்..."
"ஐ ஆம் சங்கர்..."
"எனக்கு சார்தான்.. பெண்கள் பூவாக இருந்த காலம் மலையேறிவிட்டது... அவங்க புயலாய் மாறி வெகு காலமாகிருச்சு... இன்னும் நீங்க பூவிலேயே நிற்கறிங்களே..."
"யு ஆர் ஸோ பியூட்டி புல்... அழகை ரசித்தால்... அது தப்பா...?"
சங்கர் இப்படி வெளிப்படையாக ராதிகாவை அழகியென்று சொல்லி வைப்பானென்று ஷோபாவும் எதிர்பார்க்கவில்லை.. ராதிகாவும் எதிர் பார்க்கவில்லை...
ஹேமாவின் ஏளனப் புன்னகை இன்னும் அதிகமானது...
"ஐ யோ பாவம்..."
ஷோபாவின் காதுபட.. அவள் சொல்லி வைத்தாள்... ஷோபாவிற்கு எங்கே கொண்டு போய் முகத்தை வைத்துக் கொள்வதென்றே தெரியவில்லை...
ராதிகாவிற்கோ தாங்கவில்லை... அவள் இளம் வயதுப் பெண்தான்... இருந்தும் சங்கரைப் போன்ற ஒரு கவர்ச்சிகரமான அழகுடன் இருக்கும் கோடிஸ்வர ஆணின் வாயிலிருந்து இப்படிப் பட்ட வார்த்தைகள் வெளிவருவதில் அவளுக்கு ஏனோ விருப்பமில்லாமல் இருந்தது...
இரண்டு தினங்களுக்கு முன்னால்... அவள் இப்படி இருந்ததில்லை...
'ஏய்ய்... அவன் என்னை சைட் அடிக்கிறானோன்னு தோனுதுப்பா...ஹேமாவிடம் தனிமையில் இப்படிச் சொல்லிச் சிரித்திருக்கக் கூடியவள்தான்...
எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று அவளுக்குத்தான் தெரியவில்லையே...
"சார் ப்ளீஸ்.. நான் கிளாஸீக்குப் போகனும்.."
"நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே..."
"அழகை ரசித்தால் தப்பில்லை சார்.. ஆனால்.. அது உயிருள்ள ஜீவனாக இருந்தால்... அந்த ரசிப்பை வெளியே சொல்வதற்கு முன் ஒன்றுக்கு பத்து தடவை யோசித்துச் சொல்லனும்..."
அதற்கு மேல் அங்கே நிற்காமல் ராதிகா வகுப்பறையை நோக்கி விரைந்து விட்டாள்...
ஷோபாவுக்கு அதிலும் எரிச்சல்தான்...
'இவபெரிய பாக்தாத் பேரழகி... இவ அழகில மயங்கினா வெளியே சொல்லக்கூடாது... இந்த சங்கர்தான் ஆகட்டும்.. அவளிடம் இந்த அளவுக்கு வழிய வேண்டுமா..என்கூட வந்துவிட்டு அவளிடம் வழிந்து மூக்குடைபட்டு என் மானத்தை வாங்குகிறானே...'
ராதிகாவிடம் அவன் பேசிய வார்த்தைகளை ஷோபாவிடம் அவன் பேசினால் எப்படியிருந்திருக்கும்.. என்று யோசிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை...
சந்தோசப்பட்டுப் போயிருப்பாள்.. கால்கள் தரையில் பாவாமல் அந்தரத்தில் மிதந்திருப்பாள்.. இறக்கையில்லாமல் வானத்தில் பறந்திருப்பாள்..
'எனக்கென்ன குறை...இவனுக்கு பக்கத்தில் நிற்கும் நான் கண்ணுக்குத் தெரியவில்லையா..?'
அவளுக்கு ஏக்கமாக இருந்தது...
'கடைசியில் போயும்.. போயும்.. இந்த ராதிகாவைச் சந்திக்க என்னை பகடைக்காயாய் யூஸ் பண்ணிட்டானே'
அவளுக்கு மனம் தாங்கவில்லை...
அருகில் நிற்கும் அவளை விட்டுவிட்டு.. ராதிகா போன திசையையே வெறித்துக் கொண்டு நிற்கும் சங்கரை என்ன செய்தால் தேவலாம்.. என்ற கொலைவெறி அவளுக்குள் மூண்டது...
"போனாப் போகிறா விடுங்க சார்.. எங்கே போய்விடப் போகிறா..." ஹேமா புன்னகைத்தாள்...
"கோபமா போறாங்களே..." சங்கரின் குரலில் தவிப்பிருந்தது...
"அவ ஒரு லூசு சார்... திடிர்ன்னு கோபப்படுவா.. எதுக்கு கோபப் படுகிறோமுன்னு அவளுக்கே தெரியாது.." மறைமுகமாக சங்கருக்கு ஆறுதல் சொன்னாள் ஹேமா...
"என்மேல என்ன தப்பு..?" ஆதங்கத்துடன் கேட்டான் சங்கர்...
"ஒருதப்புமில்லை... அவகிட்ட நான் கேட்கிறேன் சார்..." என்று ஹேமா சொன்னாள்...
"நிஜமாகவா..." ஆவலுடன் சங்கர் கேட்டான்...
"நிஜமாகத்தான்..." அடித்துச் சொன்னாள் ஹேமா...
"அப்போ... ஈவினிங் நான் வருகிறபோது.. என்ன ஆச்சுன்னு என்னிடம் சொல்கிறீங்களா...?"
ஹேமாவிடம் சங்கர் சொல்லிக் கொண்டிருந்த போதுதான்.. அவன் எதற்காக ஷோபாவை தன் காரில் அழைத்துக் கொண்டு வந்தான் என்ற சூட்சுமம் முழுதாக ஷோபாவுக்கு விளங்கியது...
'ஓ... இதுக்குத்தான் ஈவினிங் மீட் பண்ணலாம்ன்னு எனக்கு ஆசை காட்டினானா...'
எப்படி ஏமாந்திருக்கிறோம் என்ற நினைவில் அவளுக்கு வெட்கமாக இருந்தது..
சின்னக்குழந்தைக்கு சாக்லெட் ஆசையைக் காட்டி நினைத்ததை சாதித்துக் கொள்வதைப்
போல... ஷோபாவுக்கு... சங்கருடன் வெளியே சுற்றலாம் என்ற ஆசையைக் காட்டி.. அவன் நினைத்ததை சாதித்திருக்கிறான்..
'என் கார் வேண்டாமாம்.. ஈவினிங் என்னை பிக்-அப் பண்ணிக்க இவன் வருவானாம்.. நான் இங்கே இருந்தால் தானே ஈவினிங் என்னை பிக்கப் பண்ணிக் கொள்கிறேன் பேர்வழின்னு இவன் வந்து நிற்பான்... அப்படி பிக்-அப் பண்ணிக்கிற சாக்கில்தானே ராதிகாவை மீட் பண்ணபிளான் போட்டிருக்கான்.. நான் இல்லைன்னா இவன் எப்படி வருவான்..?'
எப்படியும் ஷோபாவை அவன் வெளியே அழைத்துக் கொண்டு போகப் போவதில்லை.. மாலையில் வந்தாலும்.. ராதிகாவுடன் கடலை போட்டுவிட்டு.. ஷோபாவிடம் எதையாவது சாக்குப் போக்கை சொல்லி வீட்டில் கொண்டு போய் விடத்தான் போகிறான்..
'என்னைப் பார்த்தால் இவனுக்கு எப்படியிருக்கிறது..?'
அவளை ஏமாளியாக நினைத்து விட்டானே... என்று நெஞ்சம் கொதித்து விட்டாள் ஷோபா...
"அப்படியா.. ஈவினிங்கும் நீங்க வருவீங்களா..?" ஹேமா ஆச்சரியத்துடன் கேட்டாள்...
"ம்ம்.. வருவேன்..." சங்கர் உறுதியான குரலில் சொன்னான்...
"அப்போச்சரி... ஈவினிங் பார்க்கலாம்..." ஹேமா சிட்டாகப் பறந்து விட்டாள்...
அவன் போனதும் சங்கர் கைக்கடிகாரத்தைப் பார்க்க..
'இவ்வளவு நேரமாய் இவனுக்கு இதைப் பார்க்கனுமுன்னு தோணலையா... அவளுக போனவுடன் கரெக்டா வாட்சைப் பார்க்கிறானே... இப்பத்தான் இவனுக்கு நேரமாச்சுன்னு உறைச்சுச்சா...ஷோபா பல்லைக் கடித்தாள்...
இதோ இப்போ வாயைத்திறக்கப் போகிறான்.. ஷோபா... ரொம்ப லேட்டாகிருச்சு... 'பை...ன்னு சொல்லப் போகிறான்.. என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் வாய் திறந்தான்...
"ஷோபா.. எனக்கு ரொம்ப லேட்டாகிருச்சு.. பை... ஈவினிங் பார்க்கலாம்..." அவள் முகம் பார்க்காமல் சொன்னான் சங்கர்...
அந்த செய்கையில் ஷோபாவின் முகம் பயங்கரமாக மாறியது... 
"பட்... ஈவினிங் என்னை நீங்க பார்க்க வரமுடியாதே சங்கர்..."
அவசரமாக முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டு நிதானமாக சங்கரின் முகத்தை ஊன்றிப் பார்த்தபடி சொன்னாள் ஷோபா...
"ஏன்..?"
சங்கர் புருவங்களை உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -21
அம்மம்மா.. கேளடி தோழி...! -21
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy