அம்மம்மா.. கேளடி தோழி...! -20

20 உன் ஒற்றைப் பார்வையில் இற்று விழுந்தது என்மனம்... ஷோபா... காலை டிபனை நாசுக்காக மொக்கிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு வேண்டியதை பர...


20
உன் ஒற்றைப் பார்வையில்
இற்று விழுந்தது என்மனம்...

ஷோபா... காலை டிபனை நாசுக்காக மொக்கிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு வேண்டியதை பரிமாறியபடி சிந்தனையில் இருந்தாள் சுசிலா.. அதை ஜாடையாக பார்த்தபடி சாப்பிட அமர்ந்தார் பரந்தாமன்...
மனைவியின் எண்ண வோட்டத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது...
ஷோபாவின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தின் போது... அவர்கள் எதிர்பார்த்திருந்தபடி எதுவும் நடக்காத ஏமாற்றம் அவள் நெஞ்சில் படிந்திருப்பதை அறிந்தும். அறியாதவரைப் போல அவர் சாப்பிட ஆரம்பித்தார்...
அவரும் தான் என்ன செய்வார்..?
இரவும்.. பகலும் சுசிலா புலம்பும் புலம்பல்களைக் கேட்டுக் கேட்டு.. அவரது காது ஜவ்வு... இப்போதோ.. அப்போதோ என்று கிழிபடும் நிலையில் இருந்தது...
"என்னங்க இப்படி ஆகிருச்சு...?"
"எதைச் சொல்கிற சுசிலா...?"
"உங்க பிரண்டோட மகன் வந்தால் ஷோபாவைப் பார்த்து மயங்கிடுவான்னு சொன்னீங்க... ஒன்னையும் காணோம்..."
"நீ கூடத்தான்.. உன் அக்கா மருமகளோட தம்பி வந்து நம்ம மகளைப் பெண் கேட்பான்னு சொன்ன.. அதுமட்டும் நடந்திருச்சா...?"
"என்னங்க.. நீங்க... புரியாம பேசறிங்க... பாலமுரளி என் அக்காவுக்கு சொந்தக்காரன்.. எப்பவும் அவன் நம்ம கையைவிட்டுப் போகமாட்டான்..."
சுசிலா நிச்சயமான குரலில் பேச... அவளைப் போல தன்னால் நிச்சயமாய் பேச முடியவில்லையே என்று மனதிற்குள் குமைந்து போனார் பரந்தாமன்...
சங்கரைப் பற்றி அவரால் அவ்வளவு நிச்சயமாக பேசிவிட முடியாது... அவனைப் பெற்ற தந்தையான ராமாமிர்தமே நிச்சயமாக பேசிவிட முடியாது எனும்போது அவரால் மட்டும் அது முடிந்து விடுமா...?
"எனக்குத் தெரியாதா சுசி...?"
"அதனாலேதான் சொல்கிறேன்... ஒன்று சங்கருக்கு ஷோபாவை பேசி முடிங்க... இல்லைன்னா... பாலமுரளிக்காவது பேச ஆரம்பிக்கலாம்..."
"அவன் பட்டிக்காட்டில் இருக்கிறானே சுசி..."
"பட்டிக்காட்டில் இருந்தாலும்... கோடிஸ்வரனாய் இருக்கிறான்... அதை நினைவில் வைச்சுக்கங்க... இன்னும் சொல்லப்போனா... சங்கரைவிட பாலமுரளிதான் பணக்காரன்..."
"இதையே எத்தனை தரம்தான் சொல்லுவ... ஆனா நம்ம ஷோபாவுக்கு சங்கரைத்தானே பிடிச்சிருக்கு..?"
"அதைப் பார்த்தா முடியுமா..? அப்படி நினைக்கிறவர் சங்கரை கை நழுவ விடாம பார்த்துக்க வேண்டியதுதானே..."
எங்கே போய் அவனைப் பார்த்துக் கொள்வது..?
பேசாமல் ஒரு இரும்புச் சங்கிலியை எடுத்துக் கொண்டு போய் அவனைக் கட்டி பிணைத்து... அதன் பின்னால் அவனைப் பார்த்துக் கொண்டால்தான் உண்டு என்ற நிலைமையில் பரந்தாமன் என்ன செய்வார்...?
அவரால் சுசிலாவிற்கு சமாதானம் சொல்லவும் முடியவில்லை... அதேசமயம் அவளின் பயத்தை அலட்சியம் பண்ணவும் முடியவில்லை...
அதனால் கூடுமானவரை மௌன விரதத்தை கடைபிடித்தார்...
அன்றும் அதே போல... சுசிலாவின் சஞ்சலமான பார்வையை சந்திப்பதை தவிர்த்து சாப்பாட்டில் கவனமாக இருந்தவர்...
"என்னங்க..." என்ற சுசிலாவின் பரவச அழைப்பில் தன் காதுகளையே நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் மனைவியை பார்த்தார்...
வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது விழிகள் மின்னின...
"சங்கர் வருகிறான்ங்க..."
"என்னது..."
பரந்தாமனும்.. ஷோபாவும் ஒருமித்த குரலில் கேட்டபடி வாசலைப் பார்த்தார்கள்...
அங்கே சங்கர் வந்து கொண்டிருந்தான்...
"நான் சொல்லலை..? நம்ம ஷோபாவை பெர்த்டே பங்சனில் பார்த்தா சங்கர் மயங்கிடுவான்னு.. நான் சொன்னதைப் போலவே நடந்திருச்சு...", சுசிலா மகிழ்ந்து போனாள்...
அவள் எப்போது அப்படிச் சொன்னாள் என்று யோசித்த பரந்தாமனுக்கு... அது யோசனைக்கான நேரமல்ல என்பது புத்தியில் உறைக்க... அவசரமாக எழுந்து வாசலுக்கு விரைத்தார்...
தன் ஒப்பனை குறித்த கவலையில் ஆழ்ந்தாள் ஷோபா... அவன் வரும் விவரம் அவளுக்குத் தெரியாது.. தெரிந்திருந்தால்... அதிகாலையிலேயே எழுந்து.. ஒப்பனையை ஆரம்பித்திருப்பாள்...
ஒருதரம் கண்ணாடியைப் பார்த்தால் தேவலை என்று அவளுக்குத் தோன்றியது...
அதற்கு வழியின்றி... ஹாலில் இருந்து...
"ஷோபா..." என்று பரந்தாமன் அழைக்கும் குரல் கேட்டது...
"யெஸ் டாட்.." ஷோபா ஹாலுக்கு விரைந்தாள்...
"என்ன பெண்ணம்மா நீ...? சங்கர் உன்னைப் பார்க்கத்தான் வந்தாராம்.. நீ என்னன்னா... அவரை உடனே வந்து பார்க்காம மெதுவா ஆடி.. அசைஞ்சு வருகிற..." பரந்தாமன் கடிந்து கொண்டார்...
"நான் ஷோபாவைப் பார்க்க வந்தேன் அங்கிள்..."
சங்கர் கூறிய இந்த வார்த்தைகளில் அவர் இறக்கை இல்லாமல்... வானில் பறந்து கொண்டிருந்தார்...
சுசிலாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்...
அன்று மாலை லேடிஸ் கிளப்பில்... அந்த மிஸஸ் அய்யனாரின் முன்னால்... மற்ற பெண்மணிகளிடம்.. சங்கர் ஷோபாவைப் பார்க்கவென்று தன் வேலைகளை ஒதுக்கித் தள்ளி விட்டு வந்து நின்ற விவரத்தை சொல்லி விடும் கனவில் இருந்தாள் அவள்...
'அப்ப அந்த செல்வியோட முகம் போகிற போக்கைப் பார்க்கனும்...' அவள் மனதில் ஆசை தோன்றியது...
"என்னைப் பார்க்க வந்திங்களா..?" ஷோபா விழி விரியக் கேட்கிறேன் பேர்வழியென்று கண்களை உருட்டி விழித்தாள்...
அதைப் பார்த்த பரந்தாமனே பயந்து விட்டார்.. அப்படி விழித்துப் பார்க்கக் கூடாதென்று மகளிடம் சொல்லி வைக்க வேண்டுமென்று மனதில் குறித்துக் கொண்டார்...
சங்கருக்கு திடசித்தம் போல... பரந்தாமனைப் போல ஷோபா பார்த்த பார்வையில் அவன் பயந்து விடவில்லை...
"ஷ்யூர்... உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்... காலேஜீக்கு கிளம்பிட்டயா..?" என்று நிதானமாகக் கேட்டான்...
"இன்னைக்கு காலேஜ் கட்டடிச்சா ஒன்னும் தப்பில்லை... நான் நாளைக்கே காலேஜ் போய்க்கறேன்.. வாங்க... கார்டனில் போய் பேசலாம்..." ஷோபா பரபரத்தாள்...
"நோ.. நோ.. காலேஜையெல்லாம் கட்டடிக்கக் கூடாது.. அதோடு... எனக்கு காலையிலே முக்கியமான அர்ஜன்ட்வொர்க்ஸ் இருக்கு.. ஸோ.. நாம ஈவினிங் மீட் பண்ணலாம்..."
"ஓ கே..."
"இப்போ என் காரில் வருகிறயா..? நான் உன்னை காலேஜில் டிராப் பண்றேன்... போகும் போதே நாம கொஞ்சம் பேச வேண்டியிருக்கு..."
"பட்.. என்னோட காரில்தான் நான் காலேஜ் போகிறது வழக்கம்..."
"அது எதுக்கு உனக்கு..? ஈவினிங் உன்னை காலேஜில் வந்து நான் பிக்-அப் பண்ணிக்கறேன்..."
மாலையில் அவனைச் சந்திக்கு முன்னால்... பியூட்டி பார்லருக்கு போய் வந்து விடலாம் என்ற நினைவோடு இருந்த ஷோபாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
"அப்படியே நாம வெளியில் போய் விட்டு வரலாம்..." என்று அவன் ஆசைகாட்டிய போது... அவளால் மறுக்க முடியவில்லை...
ஷோபா... அவளுடைய காரை விட்டுவிட்டு... சங்கரின் காரில் ஏறிக்கொண்டாள்...
போகும்போது நாம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொன்ன சங்கர்... அந்த நினைவே  இல்லாதவனைப் போல மௌனமாக... காரை ஓட்டிக் கொண்டிருந்தான்...
'இதுதான் இவன் என்கூட பேசுகிற லட்சணமா..?'
ஷோபா... ஏமாற்ற மடைந்தாள்... காலேஜ் வாசலில் அவள் இறங்கி உள்ளே போக முயன்றபோது.. சங்கரும் அவள் கூடவே சேர்ந்து இறங்கி.. உள்ளே நடந்து வந்தான்...
"என்ன..?"
"உன் காலேஜைப் பார்க்கலாம்ன்னுதான்... வேற ஒன்றுமில்லை..."
ஷோபா அதை நம்பத்தயாராக இல்லை... சங்கரின் பார்வை கடந்து போன பெண்களின் மத்தியில் யாரையோ தேடித் துழாவியது திடிரென்று அவன் கண்கள் மின்னியதைப் பார்த்த ஷோபாவின் மனதில் பயம் பிறாண்டியது...
'யாரைப் பார்க்கிறான்..?'
"ஹாய்..." சங்கர் உற்சாகமாய் கையாட்ட...
"ஹாய்... நீங்களா...?" என்று அருகில் வந்தாள் ஹேமா...
அவள் கூடவே வந்த ராதிகாவின் மேல் சங்கரின் ஆர்வப்பார்வை படிவதை உணர்ந்த ஷோபாவிற்கு.. எதற்காக.. காலையிலேயே... அவளைத் தேடிக் கொண்டு சங்கர் வந்தான் என்பதற்கான காரணம் பிடிபட்டு விட்டது...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -20
அம்மம்மா.. கேளடி தோழி...! -20
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy