அழகான ராட்சசியே -32

32 நானிருக்கும் கரைக்கு.. எதிர்க்கரையில் நின்றிருக்கும் அழகான ராட்சசி நீ.... அப்படி எளிமையின் மறு வடிவமாக.. நூறு பேருக்கு விர...


32
நானிருக்கும் கரைக்கு..
எதிர்க்கரையில் நின்றிருக்கும்
அழகான ராட்சசி நீ....


அப்படி எளிமையின் மறு வடிவமாக.. நூறு பேருக்கு விருந்து வைத்து திருமண மண்டபத்தில் நடக்கும் திருமணத்தையே ஆடம்பரத் திருமணமென்று சொல்லிய ஊர்மிளா பெங்களூரில் மிக பிரம்மாண்டமாக நடந்த அவளின் திருமணத்தில் அதிர்ந்துதான் போனாள்..
"ஊர்மி..! என் கல்யாணம் பெங்களூரில் நடக்கனும்டி.."
அவளின் விரல் நீவி அவன் சொன்னபோது அவளுக்கு எதுவும் புரியவில்லை.. அப்பாவியாக விழித்தாள்..
"ஏன்..? அங்கே உங்களுக்கு யாரிருக்கா..?"
ஒரு சாம்ராஜ்யமே இருக்கிறது என்பதை அறியாதவளாய் அவள் கேட்ட அந்தக் கேள்வியில் தன்னை இழந்தான் நரேந்திரன்.. அதே கேள்வியை சோமசுந்தரமும் கேட்டபோது அவன் பொய்யில்லாத பொய்களைச் சொல்ல வேண்டி வந்தது..
"கல்யாணம் பெங்களூரில்தான் நடக்கனும்னு சொன்னீங்களாமே.. ஊர்மிளா சொன்னா.."
"ஆமாம் சார்.."
"ஏன்..? இங்கேன்னா எடுத்துச் செய்ய நானிருக்கேன்... தோழர்கள் இருக்காங்க... அங்கே உங்களுக்கு யாரிருக்கா..?"
"யாரும் இல்லைதான்.. ஆனாலும்.. என் கல்யாணம் பெங்களூரில்தான் நடக்கனும்னு என்னைப் பெத்த அம்மா வேண்டிக்கிட்டாங்களாம் சார்.."
"உங்க அம்மாவா..?"
சோமசுந்தரத்தின் வியப்பில் என்னடா இது என்று ஆகிவிட்டது நரேந்திரனுக்கு.. அவனுக்கு அம்மா இருக்க மாட்டார்களா..? தாயில்லாமல் அவன் பிறந்தானா...?
"எங்க அம்மாதான் சார்.. அம்மா இல்லாம எந்தப் பிள்ளையும் பிறந்திருக்க முடியாதில்லையாசார்.."
"அதுசரி.. அதுசரி.. ஆனா உங்க அம்மாதான் உயிரோடு இல்லைன்னு சொன்னீங்களே..."
"அம்மாதான் உயிரோட இல்ல.. அவங்க வேண்டுதல் உயிரோடு இருக்கே.."
"அது உண்மைதான்.. ஆனா பாருங்க.. உங்க அம்மா எதுக்காக உங்க கல்யாணம் பெங்களூரில்தான் நடக்கனும்னு வேண்டிக்கனும்..? பெங்களூருக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்..?"
'கிழிஞ்சது போங்க..' என்று நினைத்துக் கொண்டான் நரேந்திரன்..
பெங்களூரின் மிகப்பெரிய பணக்காரரான கஜேந்திரனின் ஒரே மகளான நளினிக்கும் பெங்களூருக்கும் என்ன சம்பந்தம் என்று சோமசுந்தரம் கேட்டு வைக்கிறாரே..
"எங்க அம்மாவோட பிறந்த ஊர் பெங்களூர்தான் சார்.."
அவன் வினயமாக சொன்னதும் சோமசுந்தரம் யோசனையுடன் தாடையைத் தடவ ஆரம்பித்து விட்டார்..
'என்னடா இது.. பெங்களூரில் பிறந்தவனுக்குப் பெண் இல்லைன்னு சொல்லிடுவாரோ..' அவன் மனம் சந்தேகித்தது..
'சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது.. இவரே பொதுவுடைமைவாதி.. இவராவது ஊருவிட்டு ஊர் பெண் கொடுக்க மாட்டேன்னு சொல்கிறதாவது..' தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்..
சோமசுந்தரத்தின் மறுமொழியும் அதையே உறுதி செய்தது..
"அதில பாருங்க.. பெங்களூரில் கல்யாணம்ன்னா நம்ம பக்கத்து ஆளுக வந்து திரும்பறதுக்கு சிரமம்ன்னு சொல்லுவாங்க.."
"அவங்களுக்கு டிரான்ஸ்போர்ட் ஏற்பாடு பண்ணிட்டாப் போகுது.. நூறு பேருக்கு ஒரு பஸ் போதாதா..?"
நரேந்திரன் யதார்த்தமாக கேட்க..
"என்னது..?" என்று முறைத்தார் சோமசுந்தரம்..
'அப்படி நானென்ன தப்பாச் சொல்லிட்டேன்..' நரேந்திரன் விழித்தான்..
"ஆடம்பரமே கூடாதுங்கிறேன்.. நீங்க பஸ் ஏற்பாடு பண்ணலாம்ன்னு லேசாச் சொல்றீங்க.. அந்தப் பணத்தில கல்யாணத்தையே நடத்தி முடிச்சிரலாம்.. தெரியுமா..?"
நரேந்திரனுக்கு எங்கே அதெல்லாம் தெரிந்திருந்தது..? அவன் அறிந்த திருமண வைபவங்கள் வேறாக இருந்தனவே... இதுபோன்ற கொள்கைப்பிடிப்பான மாமனாரைச் சந்திப்போம்.. அவர் பெற்று வைத்திருக்கும் குலக்கொழுந்திடம் காதல் கொள்வோம் என்று அவன் நினைத்துப் பார்த்ததில்லையே..
அவனுடைய திருமணத்திற்கு வெளிநாட்டி லிருக்கும் உறவினர்களும்... நண்பர்களும் வந்து போவதற்காக.. தனி விமானத்தையே வாடகைக்கு எடுத்திருந்தவன்.. சோமசுந்தரத்தின் இந்தச் சீற்றத்தில் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்..
'உஸ்ஸ்.. அம்மாடி.. முடியல..'
காதலுக்காக இந்த அளவுக்கா பாடுபட வேண்டும் என்று நரேந்திரனுக்கு ஆயாசமாக இருந்தது..
"இது போல ஆடம்பரத்தை நான் வெறுக்கிறேங்க.. இதெல்லாம் பாஸிசம்.. முதலாளித்துவம்.. இந்த நாட்டைச் சுரண்டற பணக்காரங்களின் அடையாளம்.."
"அதுக்கு என்னங்க பண்ணனும்ங்கறிங்க..?"
"என் மகளை பணக்காரங்களின் நிழல் படாம வளர்த்து வைச்சிருக்கேன்.. இனியும் அவ அப்படித்தான் இருப்பா.."
சோமசுந்தரத்தின் முழக்கத்தில் திருமணமானபின்பு ஊர்மிளாவின் மீது நிழல் படியாமல் எப்படிக் குடும்பம் நடத்துவது என்ற பெருங்கவலைக்கு ஆளானான் நரேந்திரன்.. சோமசுந்தரத்திற்கு பணக்காரர்களின் மீது தீவிரமான வெறுப்பு இருந்தது.. அது அவரின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெளிப்பட்டது..
"நான் காதலுக்கு எதிரியில்லைங்க.. என் மகள் உங்களைக் காதலிக்கிறேன்னு சொன்னப்ப.. உங்களோட எளிமையும்.. ஏழ்மையை மறைக்காம சொன்ன உண்மையும் என்னை அட்ராக்ட் பண்ணுச்சுங்க... அதனாலதான் உங்களுக்குப் பெண் கொடுக்க நான் சம்மதிச்சேன்.."
திரும்பத்திரும்ப.. கீறல் விழுந்த ரிகார்டைப் போல சோமசுந்தரம் அதையே சொன்னதில் கொலைவெறியாகிப் போனான் நரேந்திரன்..
'இவரென்ன இப்படியே பேசிக்கிட்டு இருக்காரு..? இவரோட மகளை சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளயனுக்குக்  கட்டிக் கொடுக்கிறதா இருந்தாக்கூட கவலைப்படாம கட்டிக் கொடுத்திருவாரு போல.. அதுவே ஒரு பணக்காரன் பெண் கேட்டா.. கொடுக்க மாட்டாரு போல..'
பணக்காரர்களை விட சம்பல் கொள்ளையர்கள் மேம்பட்டவர்கள் என்று எதை வைத்து அவர் முடிவுக்கு வந்தார் என்று தெரியாமல் பல்லைக் கடித்தான் நரேந்திரன்..
"ஒன்னு செய்யலாம்ங்க.."
சோமசுந்தரம் சொன்னதில் அவர் எதைச் சொல்லி வைக்கப் போகிறாரோ என்று அரண்டு போனான் நரேந்திரன்..
அப்படி அவர் எந்த வில்லங்கத்தைச் சொல்லி வைத்தாலும் அவன் கேட்டுத்தானே ஆக வேண்டும்..? அந்த முசுட்டு சோமசுந்தரத்திற்கு 'ஊர்மிளா' என்ற அழகான ராட்சசி மகளாய் பிறந்து தொலைத்திருக்கிறாளே..
"சொல்லுங்க சார்.." கைகட்டி வாய் பொத்தாத குறையாக அவன் கேட்டான்..
"கல்யாணத்துக்கு நெருங்கின சொந்தங்களோட நாங்க பஸ் பிடிச்சு வந்திடறோம்.."
'அது எதுக்கு..? எத்தனை கார் வேணும்னு சொல்லுங்க.. நான் அனுப்பி வைக்கிறேன்..' என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விதியே என்று உள்ளே தள்ளினான் நரேந்திரன்..
எதற்கு வம்பு..? அவன் பாட்டுக்கு வார்த்தைகளை விடப் போய் அதில் அவர் கோபம் கொண்டு உனக்குப் பெண் கொடுக்க மாட்டேன்.. சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளயனுக்குத்தான் பெண் கொடுப்பேன் என்று சம்பல் பள்ளத்தாக்குப் பக்கம் கிளம்பிப் போய் விட்டால் என்ன செய்வது..?
'நரேந்திரா..! வாயை மூடிக்கிட்டு இருடா..'
அவன் புத்தனைப் போலவும்.. சித்தனைப் போலவும் மௌனகுருவாகி விட்டான்.. மாப்பிள்ளையாகப் போகிறவனை அப்படி ஆட்டி வைத்துக் கொண்டிருந்த மாமனாரான சோமசுந்தரம் அவருடைய எளிமையான திருமணத் திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தார்..
"கல்யாணம் முடிஞ்சதும்.. திருச்சிக்கு வந்தவுடனே.. ஒரு சின்னத் தேனீர் விருந்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாப் போகுது.. கல்யாணத்தில கலந்துக்க முடியாதவங்க தேனிர் விருந்தில கலந்துக்கிட்டு பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்திட்டுப் போகட்டும்..."
"தேனீர் விருந்தா..?"
நரேந்திரன் திருதிருக்க.. ரிசப்சனைத்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று ஊர்மிளா சன்னமான குரலில் முணுமுணுத்தாள்..
"அடிப்பாவி..! ரிசப்சனை தேனீர் விருந்தாக் கிட்டிங்களா..?" பதிலுக்கு முணுமுணுத்த நரேந்திரனுக்கு வன்கொடுமையாய் இருந்தது..
இப்படியாகப்பட்ட மாமனரைத் தேடிப் பிடித்து அவனுக்கு மாமனாராக்கி விட்ட இறைவனுக்கு அவன் பல்லைக் கடித்தபடி நன்றி சொன்னான்..
"தேனீர் விருந்து எங்கே நடக்கும் மாமா..?"
அவன் எந்த ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் என்று கேட்கத்தான் வாயெடுத்தான்.. ஆனால்.. திருமண விருந்துக்கே.. மெஸ்ஸில் ஆர்டர் கொடுக்கப் போவதாகச் சொல்லிய மாமனார் அவன் மாமனார் என்ற ஞானோதயம் ஏற்பட்டதில்.. கவனமாக வார்த்தைகளைக் கோர்த்து.. எங்கே நடக்கப் போகிறது என்று மட்டும் கேட்டு வைத்தான்..
'ஏதாவது டீக்கடை பெஞ்சை காட்டாமலிருந்தால் சரி..'
நல்லவேளையாக சோமசுந்தரம் அப்படி எதையும் காட்டி விடவில்லை.. மாறாக.. அவர் வீட்டு மொட்டை மாடியைக் காட்டினார்..
டீக்கடை பெஞ்சிற்கு மொட்டை மாடி எவ்வளவோ தேவலாம் என்று ஆறுதலாகிப் போன நரேந்திரன்..
"குட் ஐடியா.." என்று அதை சிலாகிக்கவும் செய்தான்..
"நான் சொன்னா அது குட் ஐடியாவாகத்தான் இருக்கும்.." சோமசுந்தரம் கெத்தாகச் சொன்னார்..
"அதைச் சொல்லுங்க.. உங்க திட்டமிடலில் நான் பிரமிச்சுட்டேன்.. மொட்டை மாடியில ஷாமியானா போட்டு.. வரிசையாக சேர்களைப் போட்டு.. ஒரு பக்கம் டைனிங்ஹால் ரெடி பண்ணினா தூளாயிருக்கும்.." நரேந்திரன் சொல்லிக் கொண்டே போக..
"பொறுங்க.." என்று கையமர்த்தினார் சோமசுந்தரம்..
"ஏங்க.. என்ன ஆச்சு..?"
"ஷாமியானால்லாம் எதுக்கு..? வீண் செலவு.."
'அடக்கடவுளே..!'
நரேந்திரன் வாயடைத்துப் போனான்.. ஷாமியானா கூட இல்லாத தேனீர் விருந்தா..?
"ஆமாங்க.. நாமே சாயங்காலமா ஆறுமணிக்குத்தான் தேனீர் விருந்து கொடுக்கப் போறோம்.. அதுக்கு எதுக்கு ஷாமியானா...? வெயிலா அடிக்கப் போகுது..?"
"அதுவும் சரிதான்.."
"அப்புறம் எதுக்காக வாடகைக்கு சேர் எடுக்கனும்.. வீட்டில இருக்கிற ஜமுக்காளங்களையும்.. பாய்களையும் விரிச்சு விட்டா வந்தவங்க அதில உட்கார்ந்து எழுந்திருக்க மாட்டாங்களா..?"
"குட் ஐடியா.. எனக்குக்கூட சேரை விட.. கைப்பிடி சுவரில உட்காரத்தான் ரொம்பவும் பிடிக்கும்.."
அவசரமாக நரேந்திரன் மொட்டை மாடியின் கைப்பிடிசுவர் அவனுக்கானது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான்..
அவனால் தரையில் உட்கார முடியாது.. அவனுக்கு அது பழக்கமில்லை..
எங்கே அதையும் அவர் மறுத்து விடுவாரோ என்ற கலக்கத்தில் அவனிருக்க..
"அதுக்கென்னங்க.. உங்க விருப்பம் போல உட்கார்ந்துக்கலாம்.." என்று மிகப்பெரிய மனதோடு அதற்கு அனுமதியளித்தார் சோமசுந்தரம்..
'அப்பாடி..' என்று அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டதை ரசித்துப் பார்த்தாள் ஊர்மிளா...
அவள்மீதான காதலினால்.. அவன் சோமசுந்தரத் திடம் அகப்பட்டுக் கொண்டு விழித்ததில்.. அவன்மீதான அவளின் காதல் பெருகியது..
"டைனிங் ஹால் எதுக்கு..?"
"அதுவும் வேணாமா..?"
"ஆமாங்க.. ஒரு கப் டீ குடிச்சுட்டுப் போகப் போகிறவங்களுக்கு எதுக்காக டைனிங்ஹால் ரெடி பண்ணனும்..?"
"ஒரு கப் டீ மட்டும்தானா..?"
நரேந்திரன் நம்ப முடியாமல் கேட்டான்.. திருமணத்தை விசாரிக்க வருகிறவர்களுக்கு.. ஒரு இனிப்பு காரம்கூட கொடுக்காமல் வெறும் டீயை மட்டும் கொடுத்து அனுப்புவர்களும் இருக்கக் கூடும் என்பதில் அவனுக்கு ஆச்சரியம்.. ஆச்சரியமாக இருந்தது..
"ம்ம்ம்.. ஒரு கப் டீ மட்டும்தான்... அதுவே அனாவசியமான ஆடம்பரச் செலவுதான்... ஆனாலும் பாருங்க... ஊர்மிளாவோட அம்மா... அதையும் கொடுக்கலைன்னா அவளோட அம்மா வீட்டுக்குப் போயிருவேன்னு பயமுறுத்தறா.. அதனாலதான் இவ்வளவு பெரிசா செய்ய வேண்டியிருக்கு.."
சோமசுந்தரம் கொடுத்த விளக்கத்தில் நரேந்திரன் எதுவும் பேசாமல் பூங்குழலியைப் பார்த்தான்.. அவள் ஏற்கனெவே இழுத்துப் போர்த்தியிருந்த முந்தானையை இன்னும் அதிகமாக இழுத்துக் கொண்டு தலையை மட்டும் நீட்டிக் கொண்டிருந்த சமையலறையின் சுவர் மறைவில் அந்தத் தலையையும் இழுத்துக் கொண்டாள்..
'இந்த தேனீர்கூட மாமியார் ஊருக்குக் கிளம்பிருவாங்கங்கிற பயத்திலதானா..?' நொந்து போன நரேந்திரன்..
"ஆமாமாம்.. ரொம்பப் பெரி.. சாத்தான் செய்கறிங்க.." என்று மாமனாரை மெச்சிக் கொண்டான்..
"என்னவோ போங்க.. இதுபோல ஆடம்பரத்தை யெல்லாம் அவாய்டு பண்ணனும்னா கேட்கிறாங்களா..?"
"கேட்கனும்தான்.."
"ம்ஹீம்.. உலகம் திருந்தவே மாட்டேங்குது.."
"நீங்கதான் உலகத்தைத் திருத்தனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்களே.. திருத்துங்க..."





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -32
அழகான ராட்சசியே -32
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy