அழகான ராட்சசியே -27

27 காதலையே மறந்து விட்ட.. அழகான ராட்சசி நீ.... சுரேந்திரனின் சீருடையை அணிவித்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.. அவன் தன் போக்கில் ரை...


27
காதலையே மறந்து விட்ட..
அழகான ராட்சசி நீ....


சுரேந்திரனின் சீருடையை அணிவித்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.. அவன் தன் போக்கில் ரைம்ஸ் சொல்லிக் கொண்டிருந்தான்.. ஊர்மிளா அதை ரசித்தபடி அவனுக்குத் தெரியாத வரிகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்..
அறை வாசலில் நிழலாடியது.. நிமிர்ந்து பார்த்தாள்.. நரேந்திரன் நின்றிருந்தான்.. அவள் நிமிர்வதைக் கண்டதும்.. கைக் கடிகாரத்தில் பார்வையை பதித்தான்..
நேரமாகிறதாம்.. அதைக் குறிப்பில் உணர்த்துகிறானாம்.. ஊர்மிளாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அவனைக் கவனிக்காமல் மகனுக்கு தலைவாரி விட்டாள்.. முகத்துக்கு பவுடர் பூசி விட்டாள்.. அதற்குள் நரேந்திரன் கால்மாற்றி நின்று..
"ம்ப்ச்.." என்றான்..
'இவனை யாரு இவ்வளவு சீக்கிரமா கிளம்பி வரச் சொன்னது..?' ஊர்மிளாவுக்கு எரிச்சல் வந்தது..
"சுரேன்.. உங்கப்பாவ உள்ளே வந்து உட்காரச் சொல்லுடா.." என்றாள்..
"எதுக்கடா..? உன்னைக் காரணம் காட்டி உன் அம்மாவோட ரூமுக்குள்ள நான் நுழையப் பார்க்கிறேன்னு எனக்குப் பெயர் கட்டி விடறதுக்கா..? அந்த வம்பே வேணாம்.." கறாராக சொல்லி விட்டான் நரேந்திரன்..
"வம்பா..?" ஊர்மிளாவுக்கு கோபம் வந்து விட்டது..
அவன் எப்படி அவளை வம்பு என்று சொல்லலாம்..?  அதைக் கேட்காவிட்டால் அவள் எப்படி ஊர்மிளா ஆவாள்..?
"வேணாம் சுரேன்.. சொல்லிக் காட்டிக்கிட்டே இருக்கக் கூடாதுன்னு சொல்லு.. நான் சொன்னது வம்புன்னா.. இதைவிட அதிகமான வம்பை உன் அப்பாவும்.. அவரோடா வீட்டாளுகளும் எனக்குச் செய்திருக்காங்க.. வாழ்நாள் பூராவும் சொல்லிக் காட்ட என்னால மறக்க முடியாத நிறைய விசயங்கள் நடந்திருக்கு.. அது அத்தனையையும் உனக்காக பொறுத்துக்கிட்டு இந்த வீட்டிலே ஊமைபோல நடமாடிக்கிட்டு இருக்கேன்.. என்னைச் சீண்டிப் பார்க்க வேணாம்ன்னு சொல்லு.."
கோபத்தில் அவளுக்கு மூச்சிரைத்து.. சுரேந்திரன் புருவங்கள் சுருங்க அவளையே பார்த்தான்.. அவள் சொன்னது எதுவும் அவனுக்குப் புரியவில்லை என்றாலும் அம்மா அவன் மூலமாக அப்பாவுக்கு எதையோ சொல்லுகிறாள் என்பது மட்டுமே அவனுக்குத் தெள்ளத் தெளிவாக புரிந்தது.. நரேந்திரனைத் திரும்பிப் பார்த்தான்..
"நோ.." என்றான்..
நரேந்திரனுக்கு கம்பெனிக்குக் கிளம்ப வேண்டிய அவசரமே மறந்து போய் விட்டது.. மகனின் 'நோ' என்ற ஒற்றைச் சொல்லில் அவனுக்குள் உற்சாகம் குமிழியிட்டது.
"என்னடா நோ..? உங்கம்மா சொன்னா நீ உடனே அப்பாகிட்ட நோ சொல்லுவியா..?" செல்லமாக மகனை அதட்டினான்..
"யெஸ்.." என்றபடி அவனருகே போனான் சுரேந்திரன்..
குனிந்து மகனைத் தூக்கிக் கொண்ட நரேந்திரனின் மனம் நிறைந்தது.. ஒற்றை ஆள் போல பெங்களூரில் குடும்பத்தின் மத்தியில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தவன் தன்னை குடும்பஸ்தனாக உணர்ந்தான்.. மகனை உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தமிட்டான்..
"உங்கம்மா இத்தனை நேரமா எனக்குப் பேச சான்ஸ் கொடுக்காம பேசித் தள்ளினாளே.. இவ ஊமையாம்.. குட் ஜோக்கில்ல..?"
நரேந்திரனின் கேள்விக்கு ஆமாம் என்ற பாவனையில் தலையை ஆட்டினான் சுரேந்திரன்..
"ஒரு கேள்வி கேட்டேண்டா.. அந்த ஒற்றைக் கேள்விக்கும் இது நாள்வரைக்கும் இவ பதிலை சொல்லவே இல்லை.. நீ யாருடா என்னைக் கேள்வி கேட்கன்னு பெட்டியைத் தூக்கிக்கிட்டு என்னை விட்டுவிட்டுப் போயிட்டா.. இப்ப என்னடான்னா. நான் சொல்லிக் காட்டறேன்னு சொல்றா.. நான் கேட்டா மட்டும் தப்பாம்.. அதுவே.. இவ சொன்னா தப்பில்லையாம்.. இது எந்த ஊர் நியாயம்டா சுரேன்.."
ஊர்மிளாவை பார்த்தபடி கேட்ட நரேந்திரனின் கத்தி முனைப் பார்வையின் கூர்மையில் முகம் சிவந்தாள் ஊர்மிளா.. சுரேந்திரனின் ஸ்கூல் பேகை தயார் பண்ணியபடி..
"எங்க திருச்சி நியாயத்துக்கு பெயர் பெற்றதுடா சுரேன்.. உங்கப்பாவோட பெங்களூர்தான் நியாயம்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிறது.." என்று சொன்னாள்.
"ஆமாண்டா.. நாங்க கேட்டோம்.. உங்கம்மா ரெண்டு கிலோ நியாயத்தை பொட்டலம் கட்டிக் கொண்டு வந்து கொடுத்திட்டா.. ஆளைப் பாரு.." நரேந்திரன் முறைத்தான்.
"பாக்காமலா கல்யாணம் பண்ணிக்கிட்டார்..." ஊர்மிளா ஸ்கூல்பேகை எடுத்து நீட்டியபடி சொன்னாள்..
"அதுக்கு முன்னால காதல் பண்ணினதை சொல்லலையே.."
நரேந்திரனின் வார்த்தைகளில் அவள் சட்டென்று அவன் முகம் பார்த்தாள்.. எதிர்பாராமல் கிடைத்த அந்தப் பார்வையில் அவன் தேங்கி நின்றான்..
அவர்களது பின்னிப் பிணைந்த பார்வையில் கடந்த காலம் வந்து நின்றது.. அசையாமல் நின்ற நரேந்திரனின் மனதில் அந்தக் காலம் எழுந்து நின்றது..
திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் நின்று பார்த்த போது திருச்சி மாநகரின் தோற்றம் ஒரு தேர்ந்தெடுத்த என்ஜினியரின் கை வண்ணம் போலத் தெரிந்தது.. திருச்சிக்கு அதி முக்கியமான வேலை ஒன்றிற்காக வந்திருந்தான் நரேந்திரன்.. அது பிஸினெஸ் சார்ந்த வேலையல்ல.. அவனுடன் படித்த நெருங்கிய நண்பனுக்கு திருமணம்.. அதில் கலந்து கொள்ளத்தான் பெங்களூரில் இருந்த அனைத்து வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு திருச்சிவந்து இறங்கியிருந்தான் அவன்..
நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நரேந்திரனைத் தேடி அவன் அறைக்கே வந்து விட்டான் தினேஷ்..
"டேய்.. ஈவினிங் உனக்கு ரிசப்சன் இருக்குடா.. நாளைக் காலையில் உன்னோட கல்யாணம்.. நீ என்னடான்னா.. மூணு மணிக்கு ஹோட்டல் ரூமில வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்க.." நரேந்திரன் சிரித்தான்..
தினேஷ் நரேந்திரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ச்சியுடன் பேசினான்..
"எவ்வளவு பெரிய பிஸினெஸ் மேன் நீ.. உன்னோட நேரம் எவ்வளவு முக்கியமானதுன்னு எனக்கும் தெரியும்டா.. யாருடா நான்..? உன் கூடப் படித்தவன்ங்கிற ஒரே காரணத்துக்காக கல்யாணத்துக்கு முதல் நாளிலேயே வந்து இறங்கியிருக்க பார்த்தியா.. இதுதாண்டா நீ.."
தினேஷை கட்டித் தழுவிக் கொண்ட நரேந்திரன்..
"போடா இவனே.. நீ என் பிரண்ட்.. அதை மட்டும் சொல்லு.. வேற எதையெதையோ உளராதே.. உன் கல்யாணத்துக்கு முதல் நாளே வரனும்னு நீ கேட்டுக்கிட்ட.. வர்றேன்னு நானும் வாக்குக் கொடுத்தேன்.. வாக்கு மாறினா அது நரேந்திரன் இல்லைடா.." என்றான்..
தினேஷின் கண்கள் உணர்வு மிகுதியில் பனித்தன.. அவனும் நரேந்திரனும் ஒன்றாகத்தான் என்ஜினியரிங் படித்தார்கள்.. நரேந்திரன் மேற்படிப்பைப் படிக்க வெளிநாட்டுக்குப் போனான்.. தினேஷ் மேற்படிப்பையும் பெங்களூரிலேயே படித்துவிட்டு.. திருச்சியில் இருந்த பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்து விட்டான்..
அவனுக்குத் திருமணம் முடிவானபோது நரேந்திரனுக்கு அழைப்பிதழ் கொடுக்கத் தயக்கத்துடன் தான் அவன் போனான்.. அப்போதைய நரேந்திரன் தினேஷால் எட்ட முடியாத உயரத்தில் இருந்தான்.. கூடப் படித்தவன் என்ற உரிமையை மட்டும் வைத்துக் கொண்டு அவனைத் தேடிப் போன தினேஷிற்கு நரேந்திரனின் நிறுவனம் இருந்த பல மாடிக் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தில் பயம் வந்தது.. திரும்பிப் போய் விடலாமா என்று கூட யோசித்தான்.. வந்த வேலையை முடித்து விட்டுப் போய் விடலாம் என்ற எண்ணத்துடன் ரிசப்சனை அணுகி அவனைப் பற்றிய விவரத்தைச் சொன்hனான்..
"ஐஸ்ட் எ மினிட் சார்..."
போனை எடுத்துப் பேசினாள் ரிசப்சனிஸ்ட்... தினேஷைப் பற்றிய நினைவிருந்தால் அவன் அறைக்குத் தான் நரேந்திரன் வரச் சொல்வான் என்று எதிர்பார்த்த தினேஷ்... அவள் போனை வைத்துவிட்டு வெகு மரியாதையுடன் அவனைப் பார்த்தபடி எழுந்து நின்றதும் புருவங்கள் உயர்ந்தன..
'ஏன் இப்படிச் செய்கிறா..?' அவனுக்குப் புரியவில்லை..
"தினேஷ்.."
அவன் தோளில் வலிமையான கரம் அழுந்தியது.. திரும்பினான்... இரு கைகளையும் விரித்து நின்ற நரேந்திரன் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்..
அந்த நிறுவனமே தினேஷை மரியாதையுடன் பார்த்து.. எப்பேற்பட்ட கோடிஸ்வரர் வந்தாலும்.. முன் அனுமதி வாங்காமல் நரேந்திரனைப் பார்த்து விட முடியாது.. அப்போதும் அவன் அழைப்பதற்காக வரவேற்பறையில் அவர்கள் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.. அவன் அனுமதிக்கும் போது.. எழுந்து அவன் அறைக்குச் சென்றுதான் அவனை அவர்களால் பார்க்க முடியும்..
அந்த நரேந்திரன் அவன் அறையை விட்டு வெளியே வந்து ரிசப்சனில் நிற்கும் ஒருவனைக் கட்டித் தழுவி வரவேற்று அவன் அறைக்கு அழைத்துச் செல்கிறான் என்றால் அவன் எதிர் கொண்டழைத்த தினேஷ் எப்பேற்பட்டவனாக இருக்க வேண்டும்..!
அனைவரின் மரியாதையான வியந்த பார்வைகளுக்கு மத்தியில் நரேந்திரனுடன் நடந்து சென்றபோது தினேஷ் இமயத்தின் உச்சியிலிருப்பதைப் போல உணர்ந்தான்.
அன்று அவனுடைய திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுக்கும் போதுதான்... திருமணத்திற்கு முதல்நாளே நரேந்திரன் வந்துவிட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தான்..
அவன் கேட்டுக் கொண்டதைப் போல நரேந்திரன் முதல்நாளே வந்து விட்டதில் தினேஷிற்கு தலைகால் புரியவில்லை.. அந்த வார்த்தைகளை அவன் சம்பிரதாயத் துக்காகத்தான் சொன்னான் என்ற போதிலும்.. நரேந்திரன் அதை அப்படி எண்ணி ஒதுக்காமல் அவனுடைய பொன்னான நேரத்தை நண்பனுக்காக ஒதுக்கி கிளம்பி வந்து விட்டதில் தினேஷின் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது..
நரேந்திரன் நண்பனைச் சமாதானப் படுத்தி திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தான்..
"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு நானும் அங்கேதான் வரப் போறேண்டா.. நம்ம பிரண்ட்ஸை மீட் பண்ண இதைவிட்டா வேற சான்ஸ் கிடைக்குமா..?"
அரைமனதுடன் தினேஷ் கிளம்பிப் போன பின்பு கட்டிலில் சரிந்த நரேந்திரன் சற்று நேரம் ஒய்வெடுத்தான்.. ரூம் சர்வீஸை அழைத்து காபி டிபன் கொண்டு வரச் சொல்லி விட்டு.. அறையின் ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தவனின் கண்களில் உச்சிப்பிள்ளையார் கோவில் தென்பட்டது.. அதற்குள் வெயிட்டர் காபி டிபனுடன் வந்து விட்டான்.. அவனிடம் உச்சிப் பிள்ளையார் கோவிலைப் பற்றிக் கேட்டான் நரேந்திரன்..
"திண்டுக்கல்லுக்கு மலைக்கோட்டைன்னா.. திருச்சிக்கு உச்சிப்பிள்ளையார் கோவில் சார்.. இவர் திருச்சியோட காவல் தெய்வம்.. முழு முதற்கடவுளான இவரோட மலைக் கோவில்தான் திருச்சியோட முழு முதல் அடையாளம்.."
சொல்லிவிட்டு வெயிட்டர் போய் விட்டான்... குளியலறைக்குள் புகுந்து.. குளித்து புத்துணர்வுடன் வந்த நரேந்திரன்.. உச்சிப்பிள்ளையார் கோவிலை வேடிக்கை பார்த்தபடி காபி டிபனை காலி செய்தான்.. உடைமாற்றி ஹோட்டல் வாசலுக்கு வந்தவன் காத்திருந்த காரில் ஏறி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப் போகச் சொன்னான்..
மிக அரிதாக கிடைத்திருந்த அந்த ஓய்வு நாளை உற்சாகமாக கழிக்க விரும்பினான் நரேந்திரன்.. தினேஷின் ரிசப்சன் தொடங்க ஏழு மணியாகி விடும்.. அதுவரை அங்கே சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதற்கு ஊரையாவது சுற்றிப் பார்க்கலாமே என்பது அவனது எண்ணமாக இருந்தது..
உச்சிப் பிள்ளையார் கோவிலின் படிகளில் ஏறியபோது எதிரே வந்தவர்களையும்... கூட வந்தவர்களையும் முன்னேயும்... பின்னேயும் வந்து கொண்டிருந்தவர்களையும் வேடிக்கை பார்த்தவனுக்கு.. அந்த நகரின் கலாச்சாரத்தைப் பிடித்துப் போய்விட்டது..
பெங்களூரைப் போல அதிநவின உடைகளை அணிந்து முடியை விரிய விட்டிருக்காமல் திருச்சிப் பெண்கள் சேலை.. சுடிதார் சல்வார் எனத் திகழ்ந்தார்கள்.. அவர்களின் நீண்ட கூந்தல் காவேரி நீரின் கெழுமையைச் சொல்லின.. காவேரித் தாயின் உபயத்தால் நீண்டு வளர்ந்திருந்த கூந்தலைப் பின்னலிட்டு பூ வைத்திருந்தார்கள்..
அந்த மங்களகரமான அழகை ரசித்தான் நரேந்திரன்.. உச்சிப் பிள்ளையாரை வணங்கி விட்டு.. அங்கிருந்து நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மீது யாரோ மோதி விழுந்தார்கள்... மோதிய வேகத்தில் விழப் போனவரை யார் என்று கூடப் பார்க்காமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான் நரேந்திரன்.. அவன் கைவளைவில் சாய்ந்திருந்த நபரின் முகம் பார்த்தவன் விழி விரித்தான்..
அவன் கைகளில் சாய்ந்திருந்தது ஒரு பெண்.. அதுவும் அழகான இளம்பெண்..!
நரேந்திரனின் விழிகள் விரிந்ததில் அவன் கைகளில் சாய்ந்திருந்த பெண் லஜ்ஜை கொண்டாள்.. நாணிச் சிவந்த அவள் முகத்தை அவன் அதிக ஈர்ப்புடன் பார்த்ததில் அவளின் நாணம் அதிகரித்தது.. சங்கடத்துடன் அவன் கையிலிருந்து விலகி நின்றாள்..
"ஐ ஆம் ஸாரி.. இந்தக் குட்டிப் பெண் செய்த வேலையாலே உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.."
முகம் சிவக்க அவள் சொன்னாள்.. அவள் சொல்லிய அந்தக் குட்டிப்பெண் அவள் சேலை மறைவில் ஒளிந்து கொண்டு நரேந்திரனை எட்டிப் பார்த்தாள்.. ஆறு வயதுதான் இருக்கும்.. அந்த அழகான குண்டு முகத்தின் பெரிய விழிகளில் தெரிந்த மிரட்சியில் நரேந்திரனுக்கு அந்தக் குழந்தையின் மீது பிரியம் உண்டானது..
"ஹாய்..!" அந்தக் குழந்தையைப் பார்த்துக் கையாட்டினான்..
"இவளுக்கு ஹாய் சொல்லாதீங்க.. பாரு பவிக்குட்டி.. உன்னாலே இந்த அங்கிள் மேல அக்கா மோதிட்டேன் பாரு.. இதுக்கு உனக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்..?"
அந்தப் பெண் குழந்தையை மிரட்டினாள்.. அந்த மிரட்டலில் குழந்தையின் மிரட்சி அதிகமாகியது..
"பாவம் குழந்தை.. விட்டு விடுங்க..."
நரேந்திரன் பரிந்துரையில் அந்தப்பெண் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அவளின் அழகான வடிவழகில் நரேந்திரன் பிரமித்துப் போனான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -27
அழகான ராட்சசியே -27
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy