அழகான ராட்சசியே -35

முத்துலட்சுமி ராகவன் எழுதிய அழகான ராட்சசியே...! பாகம் – 2 35 ஓர் வார்த்தையில் எனை உயிர்ப்பித்த அழகான ராட்சசி நீ.... அலை...


முத்துலட்சுமி ராகவன் எழுதிய
அழகான ராட்சசியே...!
பாகம் – 2


35
ஓர் வார்த்தையில் எனை உயிர்ப்பித்த
அழகான ராட்சசி நீ....

அலைபாயும் மனதோடு பெற்றவளின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் ஊர்மிளா.. மகளின் தவிப்பை உணர்ந்தாலும்.. அவளிடம் எந்த ஆலோசனையையும் பூங்குழலி சொல்லவில்லை..
அது அவள் மகளின் வாழ்வு..! முடிவை அவள்தான் எடுக்க வேண்டும்... வேறு யாரும் அதைத் திணிக்கக் கூடாது..
சோமசுந்தரம அதைத்தான் செய்ய முயன்றார்.. அவரால் நரேந்திரனின் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதைவிட.. அவர் பெற்று வளர்த்த அவருடைய மகளின் மீது அவருக்கு உரிமையில்லை என்ற ரீதியில் அவரை அவன் தள்ளி வைத்ததை மன்னிக்க முடியவில்லை..
'இப்பவே இப்படின்னா.. நாளைக்கு என் மகளுக்கும்.. எங்களுக்கும் இடையே அகழியே வெட்டி வைச்சிருவான்.. இவன் எனக்கு மாப்பிள்ளையா வரக்கூடாது..'
அவர் தீர்மானித்து விட்டார்.. எப்பாடுபட்டாவது அந்தத் திருமணத்தை நடக்க விடாமல் செய்து.. அவரின் செல்ல மகளை கையோடு அழைத்துக் கொண்டு
போய் விட வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தார்.. பின்னாள்களில் ஊர்மிளா நரேந்திரனைப் பிரிந்து பெற்றவர்களைத் தேடி ஓடி வந்த போது.. பூங்குழலி அதைச் சொல்லியே அவரைக் குத்திக் காட்டிப் பேசி அழுதாள்..
"அன்னைக்கே என் மகளை அவர்கூட வாழவிட மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணினீங்க.. இப்ப என்மக அவபுருசனைப் பிரிஞ்சு ஓடி வந்துட்டா.. இப்ப உங்க மனசு நிறைஞ்சிருச்சா..?"
அந்த அளவுக்கு சோமசுந்தரம் ஊர்மிளா, நரேந்திரனின் திருமணத்தை தடுத்து நிறுத்துவதில் முனைப்புக் காட்டினார்..
"இவர் உனக்கு வேண்டாம் ஊர்மிளா.. வாழ்க்கையின் அடிப்படையே பொய்யில் ஆரம்பிக்கக் கூடாதும்மா.."
"அதை இவர் சொல்லக்கூடாது ஊர்மிளா... இவரோட வாழ்க்கையின் அடிப்படையும் பொய்யிலதான் ஆரம்பிச்சது.."
"கொள்கைப் பிடிப்பு இருக்கனும் ஊர்மிளா.. பண முதலைகள்கிட்ட இருந்து நாம விலகியே நிற்கனும்.."
"உன் முன்னால நிற்கிறது முதலையில்லை ஊர்மிளா.. மனுசன்.. உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிற மனுசன்.."
"காதலிக்கிறவன் பொய் சொல்வானா..?"
"இப்படிப்பட்ட தகப்பனுக்கு மகளாய் பிறந்துட்ட வளைக் காதலிக்கிறவன் பொய் சொல்வான் ஊர்மிளா.."
"பொய் சொன்னதை சமாளிக்க காதலை கேடயம் போல யூஸ் பண்ணக்கூடாது ஊர்மிளா.."
"பொய்யே காதலுக்காக சொன்னதுதானே ஊர்மிளா..? கேட்டுப்பார்.. என் பிஸினெஸ்ஸில் எந்த இடத்திலும் பொய் இருந்ததில்லை.. எனக்கும் பொய்க்கும் வெகு தூரம்.."
"பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு.. இதைப் பொதுக்கூட்டத்தில பேசினா நாலுபேர் கை தட்டுவாங்க.. பேஸ்புக்கில போட்டா நாலுபேர் லைக் போடுவாங்க..
அதை விட்டுட்டு நம்மகிட்டப் பேசி எதுக்காக எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும் ஊர்மிளா..?"
"பொதுக்கூட்டத்தில் பேசறதெல்லாம் உங்கப்பா வோட வேலை.. பேஸ்புக்கில் லைக்கை எதிர்பார்த்து நான் ஸ்டேடஸ் போட மாட்டேன்.. சொல்ல நினைக்கிறதைச் சொல்வேன்.. நான் எனர்ஜிடிக் மேன் ஊர்மிளா.. இந்தப் பேச்சுக்கெல்லாம் என் எனர்ஜி குறைஞ்சிராது.."
"நீ கிளம்பு ஊர்மிளா.. இந்தக் கல்யாணம் உனக்கு வேண்டாம்.. நேர்மையானவனா.. மனைவிகிட்ட உண்மையாய் இருக்கிறவனாப் பார்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறேன்.."
"நான் உன்னைத் தடுக்கப் போகிறதில்லை ஊர்மிளா.. உன் அப்பா சொன்னதைப் போல கிளம்ப உனக்கு விருப்பம்ன்னாக் கிளம்பி விடு.. அவர் பார்த்து வைக்கிற நேர்மையான.. மனைவிகிட்ட உண்மையாய் இருக்கிறவனாய் பார்த்து கல்யாணம் பண்ணிக்க.. நான் குறுக்கே வரமாட்டேன்.. நான் நரேந்திரன்.. நரேன் குருப் ஆஃப் கம்பெனிஸின் முதலாளி.. உலகம் பூராவும் பிஸினெஸ் பண்றவன்.. திருச்சிக்கு வந்தேன்.. உன்னைப் பார்த்தேன்.. காதலிச்சேன்.. நீ பெண் கேட்டு வரச் சொன்ன.. உன் அப்பா முதலாளிகளை வெறுக்கிறவரா இருந்தார்.. அதனால நான் முதலாளிங்கிறதை மறைத்து உன்னைப் பெண் கேட்டேன்.. அதைத்தவிர வேற எந்தத் தப்பையும் நான் செய்யலை.. காதலிக்கிறவளை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னுதான் எந்தக் காதலனும் நினைப்பான்.. நானும் அதைத்தான் நினைச்சேன்.. அதைத் தப்புன்னு நீ நினைச்சா தாராளமா இந்தக் கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்லிட்டு கிளம்பிப் போகலாம்.. நான் உன்னைத் தடுக்க மாட்டேன்.."
'அவ்வளவுதானா..?' ஊர்மிளா நிலை குலைந்தாள்..
அவன் அவளைத் தடுக்க மாட்டானா..? அவள் கிளம்ப முனைந்தால் வழிவிட்டு விலகி நிற்பானா..? அவள்மீது அவன் வைத்திருக்கும் காதலின் அளவு இவ்வளவுதானா..?
அவளின் இதழ்கள் துடித்தன.. கைகள் நடுங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.. அவள் பார்வையில் தெரிந்த உக்கிரத்தில் நரேந்திரனின் பேச்சு நின்றது..
"உங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டிங்கள்ல..?"
"ஊர்மிளா..?"
"நான் பாட்டுக்கு.. நானுண்டு.. என் வேலை யுண்டுன்னு திருச்சியிலே இருந்தேன்.. தேடி வந்து காதல் சொல்லி.. கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திட்டு.. இப்ப கல்யாணத்தை நிறுத்தனும்னா நிறுத்திக்க.. கிளம்பனும்னா கிளம்பு.. நான் தடுக்க மாட்டேன்னு லேசா சொல்லிட்டிங்கள்ல..? இந்த ஊர்மிளா அவ்வளவு எளிதானவளா ஆகிட்டேனில்ல.. நீங்க நினைத்தா என் மனதைக் கலைப்பீங்க.. அதுக்கப்புறம் விலகனும்னா விலகிக்க.. நான் உன்னைத் தடுக்க மாட்டேன்னு சொல்லுவீங்க.. இதை நீங்க சொல்லலைங்க.. உங்க உடம்பில ஓடற பணக்கார ரத்தம் சொல்லுது.. எளியவங்களை ஈஸியா நினைக்கிற உங்க மேல்தட்டு வர்க்கத்தோட குணம் சொல்லுது.."
அன்று சொன்ன அதே வார்த்தைகளை பின்னாள்களில் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறாள் ஊர்மிளா.. அவள் சொன்னதைப்போல அவன் அவளை எளிதாகத்தான் நினைத்துவிட்டான் என்று வேதனைப் பட்டிருக்கிறாள்.. திருமண மண்டபத்திலேயே அவளை தடுக்க முனையாதவன்.. அவன் வீட்டிலிருந்து வெளியேறிய போது தடுக்காமல் வேடிக்கை பார்த்ததில் ஆச்சரியமெதுவில்லை என்று மனம் நைந்திருக்கிறாள்.. கட்டின மனைவி எங்கேயிருக்கிறாள் என்று மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தேடாதவனின் கல்மனம் கல்யாண மண்டபத்திலேயே வெளிப்பட்டு விட்டதே என்று விடிய விடிய பல இரவுகளில் தூங்காமல் அழுதிக்கிறாள்..
நரேந்திரன் அப்படித்தான் இருந்தான்.. எந்தக் காரணத்தைக் கொண்டும் உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்.. உன்மீது எனக்குக் காதல்.. பணக்காரன் என்பதை மறைத்து திருமணம் வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன்.. இப்போது உண்மையைச் சொல்கிறேன்.. ஏற்றுக்கொண்டால் என்னுடன் மணமேடைக்கு வா.. உனக்குத் தாலிகட்டி என் மனைவியாக்கிக் கொள்கிறேன்.. இல்லை பிரிந்து செல்ல முடிவெடுக்கிறாயா..? உன் விருப்பம் அதுவென்றால்
நான் விலகி நின்று வழி விடுகிறேன்.. நீ சென்று வா..
அவளை அவன் வற்புறுத்தவில்லை.. அசையாமல் நின்றான்.. அவனது துளைக்கும் பார்வை மட்டுமே அவள்மீது படிந்திருந்தது..
முடிவை அவள் பொறுப்பில் விட்டுவிட்டு கடமையைத் தட்டிக் கழிப்பவனைப்போல அவன் அவளுக்குத் தோன்றினான்..
'ஏன் அவன் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி ஃபோர்ஸ் பண்ணலை..?'
இதற்கான விடையை அவர்களின் முதலிரவின் போது நரேந்திரன் அவளிடம் சொன்னான்..
"உன்னைக் கட்டாயப்படுத்தி.. உன் கழுத்தில் கத்தியை வைச்சு நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதாக இருக்கக் கூடாது டி.. என் மனசில உன் மேல இருக்கிற காதலில பாதியாவது உனக்கு என்மேல இருக்க வேணாமா..? அப்படியிருந்தா நீ என்னை விட்டு விலகிப் போக மாட்டேன்னு நான் கால்குலேட் பண்ணினேன்.. என் கணக்கு சரியா இருந்தது.."
அந்தப் பதில் அந்தத் தருணத்தில் அவளை அமைதிப்படுத்தி அவனிடம் அடைக்கலம் கொள்ள வைத்தாலும்.. பின்னாள்களில் அந்தப் பதிலில் அவள் பொருமியிருக்கிறாள்..
அவன் சொன்ன அத்தனை விளக்கங்களும் அவனைக் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காகத்தானா..? அவளைத் திருமணம் செய்து கொள்ள கழுத்தில்
கத்தியை வைத்தாலும் பரவாயில்லை என்று ஏன் அவன் நினைக்கவில்லை..?
அவன்மீது இருந்த மயக்கத்தினால்.. முதலிரவில் அவனது அருகாமை தந்த போதையினால்.. அவனது பதிலை சரியென்று அவள் ஏற்றுக் கொண்டு விட்டதாகவே பின்னாள்களில் ஊர்மிளா நினைத்தாள்..
அவனது பதில் சரியான பதிலள்ள.. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவன் தற்காத்துக் கொள்கிறவனாகவே இருந்திருக்கிறான்.. அது திருமண மண்டபமாக இருந்தாலும் சரி.. அதன் பின்னால் வந்த வாழ்வாக இருந்தாலும் சரி..
நான் உன் கழுத்தில் கத்தியை வைத்து உன்னைத் திருமணம்செய்து கொண்டதாக இந்த ஊர் உலகமும் நினைக்கக் கூடாது.. நீயும் நினைக்கக் கூடாது.. எனவே முடிவை நீ எடு.. இது திருமண மண்டபத்தில் அவன் எடுத்த நிலைப்பாடு..
என் அம்மா உன்னைப்பற்றித் தவறாக சொன்னார்கள்.. நான் அதை ஏனென்று கேட்கவில்லை.. மாறாக.. அவர்கள் சொன்னது உண்மையா என்று உன்னைக் கேள்வி கேட்டேன்.. ஏனென்றால்.. என் வீட்டில் உள்ளவர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.. அது என் கௌரவத்திற்கு முக்கியமானது.. அப்படி அனைவரின் முன்னிலையிலும் உன்னைக் கேள்வி கேட்பதினால் உன் மனம் புண்பட்டிருக்குமானால்.. நான் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன்.. இது அவன் வீட்டில் அவன் எடுத்த நிலைப்பாடு..
இரண்டு தருணங்களிலும் அவன் அவளை முடிவெடுக்கும் கட்டாயத்தில் நிறுத்தினான்.. அவளை தடுத்து நிறுத்த முனையவில்லை.. இது ஊர்மிளாவின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது..
"வா.. ஊர்மிளா.. போகலாம்.."
சோமசுந்தரம் திருமண மண்டபத்தை விட்டு அவளை கிளப்ப முனைந்தபோது தலை அசைத்து தன் மறுப்பை வெளிப்படுத்தினாள் ஊர்மிளா.. அதில் நரேந்திரனின் கண்கள் மின்னின.. அவன் முகத்தில் வந்த வெற்றியின் சாயலில் சோமசுந்தரம் சினம் கொண்டார்..
"நான் வரலைப்பா.."
"புத்தியோடதான் பேசறியா ஊர்மி..? இவர் சொல்கிறது எல்லாமே பொய்யாய் இருக்கு.. இதை தெரிஞ்ச பின்னாலுமா கிளம்பி வர மாட்டேங்கிற..?"
"ஆமாம்பா.. இவர் பணக்காரர் இல்லைன்னு பொய் சொல்லியிருக்கலாம்.. ஆனா என் காதலில் எந்தப் பொய்யும் இல்லையேப்பா.. இவரைப்போல நான் எதையும் மறைக்கலையே.. பொய் சொல்லலையே.. உண்மையாய் இவரைக் காதலிச்சேனே.."
"ஊர்மி..?"
"மனசார இவரை நினைச்சுட்டு.. காதலிச்சுட்டு.. வேற ஒருத்தருக்கு எப்படிப்பா நான் கழுத்தை நீட்டுவேன்..?"
ஊர்மிளாவின் அந்தக் கேள்வியில் சோமசுந்தரத்தின் எதிர்ப்புக்கள் பொடிப்பொடியாகின.. நரேந்திரன் கர்வம் கொண்டான்.. பூங்குழலி தன் வளர்ப்பில் பெருமிதம் கொண்டாள்..
"மன்னிச்சிருங்க.."
நரேந்திரன் இரு கரங்களையும் குவித்து சோமசுந்தரத்திடமும் பூங்குழலியிடமும் மன்னிப்புக் கேட்டான்.. பூங்குழலி பதறிப்போனவளாக இழுத்துப் போர்த்தியிருந்த புடவை முந்தானையை இறுக்கிப் பிடித்தபடி தரையில் பார்வையைப் பதித்தாள்.. பேச அவளுக்கு நா எழும்பவில்லை..
சோமசுந்தரம் அப்படி எதையும் செய்யவில்லை.. மாறாக மருமகனை முறைத்தார்.. அவரின் கம்பீரம் குறையாமல் கண்டிப்பான தொனியில் பேசினார்..
"என் மகள் ஒரு கேள்வியில என் மறுப்பை உடைச்சிட்டா... உங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா.. என்மக வாழ்க்கையிலே ஏதாச்சும் சிக்கல் வந்துச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.. நீங்க எவ்வளவு பெரிய கோடிஸ்வரனா இருந்தாலும்.. எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை.. என்மகள் கண்ணிலே ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தாலும்.. உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்.. நினைவிருக் கட்டும்.."
அவருடைய சீற்றத்துக்கு பதிலுக்குச் சீறாமல் இதமாகவே பதில் கொடுத்தான் நரேந்திரன்.. அவனைத் தவிர வேறு யாருக்கும் தன் வாழ்வில் இடமில்லையென்று ஊர்மிளா சொல்லி விட்டதில் அவன் இமயத்தின் உச்சியில் நிற்பதைப் போல உணர்ந்தான்.. அந்த அருமையான காதலியைப் பெற்றவரின் சீற்றத்துக்கு நம்பிக்கையான பதிலைக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுதான் அப்போது அவனிடம் இருந்தது..
"இல்லை.. நீங்க என்னைக் கேள்வி கேட்பதைப் போல வைத்துக்க மாட்டேன்.. ஊர்மிளாவை என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்.. என்னை நீங்க நம்பலாம்.."
"பணக்காரங்க வார்த்தையும்.. தண்ணி மேலே எழுதின எழுத்தும் ஒன்னுன்னு சொல்வாங்க.."
"இந்தப் பணக்காரன் சொல்கிற வார்த்தை கல்வெட்டு..! மாறாது.."
அதனால்தான்.. அந்த வாக்குறுதியில் இருந்து தவறிவிட்ட குற்ற உணர்ச்சினால்தான் பின்னாள்களில் நரேந்திரன் சோமசுந்தரத்திடம் பொறுத்துப் போனான்.. அவன்தான் வேண்டும் என்று பெற்றவரின் பேச்சை மீறி அவனுக்கு கழுத்தை நீட்டிய ஊர்மிளாவை.. வாக்களித்த படி கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியாத குற்ற உணர்ச்சிதான் சோமசுந்தரதின் பேச்சுகளுக்கு பதிலுக்குப் பதில் பேசாமல் அவனை மௌனமாக இருக்க வைத்தது..
திருமணம் நிற்காது என்றானதும்.. நரேந்திரன் உற்சாகமாக அறைக்கதவை திறந்து வைத்தான்.. காத்திருந்த உறவினர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள்..
"மாப்பிள்ளையோட அம்மாவும்.. தம்பி.. தங்கையும் என்னமா பழகறாங்க தெரியுமா..? அந்தம்மா முகத்தில கர்வம் இருந்தாலும்.. அந்தப் புள்ளைககிட்ட அது இல்லை.. பாசமா பேசறாங்க.."
அடுத்த வெடிகுண்டு வெடித்தது.. தாய்.. தகப்பன் இல்லாத அனாதையென்று சொல்லிக் கொண்டவனுக்கு பெங்களூரில் ஒரு குடும்பமே இருந்ததில் சோமசுந்தரம் மீண்டும் தலையைப் பிடித்தார்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -35
அழகான ராட்சசியே -35
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy