அழகான ராட்சசியே -39

39 தித்திக்கும் வார்த்தை தந்தும்.. எத்திக்கும் எனைத் தேடவிட்ட அழகான ராட்சசி நீ.... ஊர்மிளா தூங்க ஆரம்பித்தாள்... மணப் பெண்ணுக...


39
தித்திக்கும் வார்த்தை தந்தும்..
எத்திக்கும் எனைத் தேடவிட்ட
அழகான ராட்சசி நீ....


ஊர்மிளா தூங்க ஆரம்பித்தாள்... மணப் பெண்ணுக்கே உரிய பதட்டம் தந்த பரபரப்பான உணர்வில் தூக்கம் பிடிக்காமல் புரண்டு.. புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் இமைமூடி உறங்க ஆரம்பித்ததும் அறையை விட்டு வெளியே வந்தாள் பூங்குழலி.. அவள் மனதில் பயம் சூழ்ந்திருந்தது.. அவளுக்கு கண்ணீர் விட வேண்டும் போல இருந்தது.. மலைபோல மனதில் அழுந்தும் பாரத்தை இறக்கி வைக்க வழி தெரியாமல் தவித்தாள் அந்தத் தாய்.. மகளின் எதிர்காலம் குறித்த மருட்சி அவளை வாட்டியது..
திருமண மண்டபத்தில் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.. ஆள்கள் இல்லாத மண்டபத்தின் நாற்காலிகளில் ஒன்றில் வெளிச்சமில்லாத இருள் மூலையை தேர்ந்தெடுத்து அவள் உட்கார்ந்தாள்.. அவள் விழிகளில் இருந்து தாரை.. தாரையாக.. கண்ணீர் வடிய தொடங்கியது.. மெதுவாக சத்தமில்லாமல் அவள் விசும்பிக் கொண்டிருந்தாள்..
"பூங்குழலி.." அவள் தோளில் சோமசுந்தரத்தின் கரம் படிந்தது..
அவளருகில் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தவர்.. இருளிலும் தெரியும் அவளின் கண்ணீர் தாரைகளின் வெள்ளி மின்னல் கோட்டினை உற்றுப் பார்த்தார்..
"அழுகிறயாடி..?"
"இல்லை.."
பூங்குழலி கண்ணீரைத் துடைக்க முயன்று தோற்றாள்.. நிற்காமல் அது பெருகியதில் சோமசுந்தரம் விசனம் கொண்டார்... மனைவியின் துயர் அவரை வாட்டியது..
"ஏண்டி..?" அதட்டினார்..
"இல்லைங்க.. சும்மா கொஞ்சநேரத்துக்கு.. மத்தவங்க முன்னாலே உட்கார்ந்து என் மகளும்.. மாப்பிள்ளையும் பேசிக்கிட்டு இருந்தாங்க.. அதையே தாங்கிக்க முடியாம இந்தம்மா அந்தப் பதறு பதறுச்சே.. நாளைக்கு கல்யாணமான பின்னாலே என் மகளை அவ புருசன் கூட சந்தோசமா வாழ விட்டிருமா..?"
"குழலி..!"
சோமசுந்தம் பதைத்தார்.. பூங்குழலியின் ஆழ்ந்த சிந்தனையில் அவருக்குள் பிரமிப்பு ஏற்பட்டது.. எதையெல்லாம் அவள் யோசித்திருக்கிறாள் என்று ஆச்சரியப்படும்போதே.. அவளது யோசனையின் பின்னால் ஒளிந்திருந்த உண்மை அவரை அரட்டியது..
"இந்தம்மா எதை வேணும்னாலும் வாய் கூசாம சொல்கிறவங்களா இருக்காங்கங்க.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே நாம சொல்லாத பேச்சை சொன்னதா நம்ம முன்னாடியே துணிச்சலா சொன்னவங்க.. ஊர்மிளாகிட்ட எப்படியெல்லாம் பேசுவாங்களோ.. இப்ப நடந்தது சின்னப் பேச்சு.. போகுதுன்னு விட்டிரலாம்.. இதுவே பெரிய பேச்சா இருந்துச்சுன்னா.. என்மக வாழ்க்கை நிம்மதியா இருக்குமாங்க..?"
அவள் தாய்..! பெண் மனதின் நுட்பம் நுண்ணிய உணர்வுகளையும் கண்டு சொல்லும் வல்லமை படைத்தது.. அவர்களின் உன்னிப்பு அத்தகையது.. பூங்குழலி வாழ்ந்து பார்த்தவள்.. அவள் மனதில் ஊர்மிளாவின் திருமண வாழ்வு எத்தகையதாக இருக்கும் என்ற பயம் எழுந்தது..
பின்னாள்களில் சோமசுந்தரம் அதை நினைத்துப் பார்த்திருக்கிறார்.. ஒரு சின்னச் சொல்லில்.. சின்ன சம்பவத்தில்.. அகல்யாவின் குணத்தை.. சாத்வீகமே வடிவான பூங்குழலி எப்படி கணித்தாள் என்று வேதனையுடன் ஆச்சரியமடைந்திருக்கிறார்..
அகல்யா ஊர்மிளாவை நிம்மதியாக வாழ விட மாட்டாள் என்பதை அன்றே யூகித்து சொன்னவள் பூங்குழலி..
"மனசைப் போட்டு அலட்டிக்காதே குழலி.."
"முடியலைங்க.. மனசு கிடந்து அடிச்சுக்குது.."
"அலையில்லாத கடல் வேணும்னு ஆசைப்பட்டா அது நடந்திருமா குழலி..? வாழ்க்கைன்னா எல்லமும்தான் இருக்கும்.. அதை எதிர்கொண்டு வாழப் பழகிக்கனும்.. என் மகளுக்கு இதையும் நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன் குழலி.. என் மகள் நேர்மையானவ.. வைராக்கியமானவ.. எதையும் எதிர்த்து நின்னு ஜெயிச்சுக் காட்டுவா.."
சோமசுந்தரம் உறுதியாகத்தான் சொன்னார்.. அதை முறியடித்துக் காட்டினாள் ஊர்மிளா.. அகல்யாவின் சதுரங்க ஆட்டத்தில் வெட்டப்பட்ட காயாக.. சிறகொடிந்த பறவையாக..
"அப்பா.." என்று அவர் காலடியில் விழுந்த ஊர்மிளாவுக்கு அகல்யாவின் சாகசத்தை எதிர்த்து நிற்கும் வல்லமையை தெரிந்திருக்கவில்லை..
நேர்மையாளர்களுக்கு.. அந்த நேர்மையே தளையாகி விடுகிறது.. அவர்களால் சாகசக்காரர்களை ஒருபோதும் முறியடிக்க முடிவதில்லை..
நேர்வழியில் போகிறவர்களுக்கு ஓர் வழிதான்... சாகசக்காரர்களுக்கு பல வழிகள்.. அவையும் குறுக்கு வழிகள்.. செல்ல நினைக்கும் இலக்கை மிக எளிதாக தொட்டு விடும் சாமர்த்தியம் கொண்டவர்கள் அவர்கள்.. பல நாக்கு அவர்களிடம் இருக்கும்.. எதையும் பேசி விட்டு அதை இல்லையென்று சொல்ல அவர்களால் முடியும்.. அதே போல இல்லாத எதையும் இருப்பதைப் போல பேசி விடவும் அவர்களால் முடியும்..
அதைத்தான் அகல்யாவும் ஊர்மிளாவுக்குச் செய்தாள்.. அதைவிட.. அவள் அப்படிச் செய்யக்கூடும் என்பதை யூகித்து பூங்குழலி பயந்தாளே.. அதுதான் தாய்மையின் சூட்சுமம்..
சோமசுந்தரம் அடிப்படையில் ஓர் போராளி.. போராட்டத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர்.. கழிப்பவர்.. அவர் ஊர்மிளாவுக்கு அவரிடமிருந்த போர் குணத்தை கற்றுக் கொடுத்திருந்தார்.. அதனால் அவர் மகள் எதையும் எதிரித்து நின்று வென்று காட்டி விடுவாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை அவள் மீது வைத்திருந்தார்.. அந்த நம்பிக்கை பொய்த்துப் போக ஊர்மிளா அவரைத் தேடி திரும்பி வந்து விட்டபோது அவரும் கொதித்தார்.. ஏன் அவள் தோல்வியை ஒப்புக் கொண்டு திரும்பிவிட்டாள் என்று கேட்டார்.. அவருடைய மகள் தோற்றுப் போய் திரும்பலாமா என்று சாடினார்..
கண்களில் உயிரைத் தேக்கி.. உடலில் உள்ள சக்திகளெல்லாம் வடிந்து போனவளாக சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஊர்மிளா சோகையாக விரக்திச் சிரிப்பைச் சிரித்தாள்..
"இது நேர்மையான யுத்தமில்லை அப்பா.. நீங்கள் போராடியது நேருக்கு நேராக.. இது அப்படியில்லை.. சூதையும்... வஞ்சனையையும்... பொய்யையும்... பித்தலாட்டத்தையும்.. எதிர்த்து நின்று போராட நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே அப்பா.. சாசகத்தை சாகசத்தால்தான் வெல்ல முடியும்.. சூழ்ச்சியை சூழ்ச்சி தான் முறியடிக்கும்.. பொய்யை பொய்யால்தான் எதிர் கொள்ள முடியும்.. அம்மா சொன்ன மகாபாரத கதையில் இப்படித்தான் வருகிறது.. நீங்கள் அதைச் சொல்லிக் கொடுக்கவில்லையே அப்பா.. சாகசம் எனக்குத் தெரியாது.. சூழ்ச்சியைப் பிடிக்காது.. பொய் சொல்ல வாய் வராது.. அதையெல்லாம் பிழைப்பாய் வைத்திருப்பவர்களிடம் தோற்று ஓடி வராமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள் அப்பா..? அதையெல்லாம் என்னைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களா..? வேண்டாம் அப்பா.. அதையெல்லாம் கற்றுக்கிட்டாத்தான் வெற்றி கிடைக்கும்ன்னா அப்படிப்பட்ட வெற்றியே எனக்கு வேண்டாம்.."
எதை நினைத்து பூங்குழலி பயந்தாளோ.. அதுவே பின்னாள்களில் நடக்கத்தான் செய்தது.. ஊர்மிளாவின் சோர்ந்த வார்த்தைகளில் மனது ரணமான போதும்.. சோமசுந்தரம் மகளை நிமிர்ந்து நிற்க வைத்தார்.. அவளது வைராக்கியத்துக்கு உரமூட்டினார்.. அவள் எதைச் செய்தாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு அவளுக்குத் துணையாக நின்றார்..
இதெல்லாம் நடக்கப் போகிறது என்று அன்றைய நாளில் அவர்களுக்கு ஆருடம் தெரியுமா என்ன..?
பூங்குழலியின் அடிமனதிற்கு அது தெரிந்திருக் கிறது.. அதனால்தான் அவள்.. விடிந்தால் மகளுக்குத் திருமணம் என்ற நிலையில் தனிமையை நாடி வந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாள்..
"இது வரைக்கும் வந்து விட்ட கல்யாணத்தை ஊர்மிளாதான் தீர்மானிச்சிருக்கிறா குழலி.. எந்த இடத்தில் பொய் இருக்கிறதோ.. அந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன்னு எடுத்துச் சொல்லியும்.. நரேந்திரனைத் தவிர வேற ஒருத்தருக்கு எப்படிப்பா கழுத்தை நீட்டுவேன்னு கேட்டு என் வாயை அடைச்சிட்டா.. யாரையும் கல்யாணம் பண்ணிக்காம.. காலம் முழுக்க என் பொண்ணு கன்னியாவே நிற்கிறதுக்கு.. மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போராட்டமான வாழ்க்கையையும் போராடி வாழ்ந்து பார்க்கட்டுமே.."
சோமசுந்தரம் சொல்வதிலும் ஒரு நியாயம் ஒளிந்திருப்பதை உணர்ந்தவளாக பூங்குழலி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மகளைத் தேடிச் சென்றாள்.. தூக்கத்தில் கனவு வந்தது போல.. ஊர்மிளா புரண்டு படுத்து கன்னம் குழி விழுக சிரித்தாள்.. அந்தச் சிரிப்பு நிலைக்க வேண்டும் என்ற வேண்டுதலை கடவுளிடம் வைத்தபடி பூங்குழலி உறங்க முயன்றாள்..
மறுநாள் மணமேடையில் நரேந்திரனின் அருகே அமர்ந்து அவன் கையால் தாலி வாங்கிக் கொண்ட ஊர்மிளாவை அணுகக் கூட அவர்களால் முடியவில்லை.. அடுத்தடுத்து வாழ்த்த வந்த வி.ஐ.பிக்களின் கூட்டத்தில் சோமசுந்தரமும்.. பூங்குழலியும் பின்னுக்கு தள்ளப்பட்டு தொலைந்து போனவர்களாக நின்றார்கள்.. அவர்களைக் கூட்டத்தில் தேடிய ஊர்மிளாவின் விழியசைவை கண்டு கொண்ட நரேந்திரன் அருண்குமாரை கூப்பிட்டு... சோமசுந்தரத்தையும்.. பூங்குழலியையும் மணமேடைக்கு அழைத்து வரச் சொன்னதினால் மட்டுமே அவர்களால் மணமக்களை ஆசிர்வதிக்க மீண்டும் மணமேடையில் ஏற முடிந்தது..
"தாரை வார்த்துக் கொடுத்திட்டா வேலை முடிஞ்சிருச்சா..? எங்களை ஆசிர்வதிக்க வேணாமா..?"
விளையாட்டைப் போல கேட்டபடி நரேந்திரன் ஊர்மிளாவுடன் அவளைப் பெற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டதைக் கண்ட அகல்யாவின் கண்களில் பொங்கி வழிந்த துவேசத்தில் பூங்குழலி அரண்டு போனாள்..
புகுந்த வீட்டிற்கு ஊர்மிளா கணவனுடன் போன போது சோமசுந்தரமும்.. பூங்குழலியும் கூடப் போனார்கள்.. அவர்கள் பக்கத்து சொந்தங்களை பஸ்ஸில் ஏற்றி பாதுகாப்பாக அவர்கள் திருச்சிக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த அகல்யா..
"நீங்களும் போகலையா..?" என்று கேட்டாள்..
என்ன மாதிரியான கேள்வி இது..! பூங்குழலி சங்கடப் பட்டுப் போனாள்.. மகளைத் திருமணம் செய்து கொடுத்த கையோடு மண்டபத்திலிருந்து பெண்ணைப் பெற்றவர்கள் கிளம்பிப் போய்விட வேண்டுமா..?
"இல்லைங்க... நாங்க ஊர்மிளாவை அவளோட வீட்டில் விட்டுட்டு... நாளைக்குக் காலையிலே பெண்ணையும்... மாப்பிள்ளையையும் மறுவீட்டு விருந்துக்கு அழைச்சுட்டுத்தான் கிளம்புவோம்.."
அழுத்தம் திருத்தமாக சொன்னார் சோமசுந்தரம்.. அவர் சொன்ன அவர் மகளின் வீடு என்ற வார்த்தையில் அகல்யாவின் முகம் பயங்கரமாக கோணியது..
'என்ன நெஞ்சழுத்தம் இருந்தா என்னிடமே என் வீட்டை இந்த ஆளின் மகள் வீடு என்று சொல்வான்..?'
அவள் கொடூரமாக அவரைப் பார்த்தாள்.. அந்தப் பார்வையை பார்க்க பயந்த பூங்குழலியை முதுகுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டபடி அலட்சியமாக அகல்யாவை நேர்பார்வை பார்த்தார் சோமசுந்தரம்..
"மறு வீடா..? இது போல இடியாடிக் செண்டி மெண்டுக்கெல்லாம் எங்க லெவலில் இடமில்லை.. இதுக்குத்தான் நரேனிடம் கண்டிச்சு சொன்னேன்.. நம்ம ஸ்டேட்ஸீக்கு ஈக்குவலான இடத்தில பெண் பார்க்கலாம்ன்னு.. அவன் கேட்காமல்.. காதல்.. கத்தரிக்காய்ன்னு புதை குழியில மாட்டிக்கிட்டான்.. இதில வேற மறுவீடு.. விருந்துன்னு நீங்க கதை சொல்லிக்கிட்டு வர்றீங்க.. நரேனுக்கு இதெல்லாம் பிடிக்காது.. ஸோ.. நீங்களும் இதே பஸ்ஸில கிளம்பிருங்க.. இல்லைன்னா இடம் கிடைக்காம போயிரப் போகுது.."
சோமசுந்தரத்தின் அலட்சியப் பார்வையை தகர்க்கும் வார்த்தைகளைச் சொன்னாள் அகல்யா.. பூங்குழலி குன்றிப் போனாள்.. இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட பின்பும் மகளின் வீட்டிற்கு எப்படிப் போவது என்று மறுகினாள்.. சோமசுந்தரம் அகல்யாவின் வார்த்தைகளை வெகு அழகாக எதிர்கொண்டார்..
"ஸ்டேட்டஸைப் பத்திப் பேசறிங்க.. லெவலைப் பத்தியும் பேசறிங்க.. ஆனா.. பஸ்ஸில இடம் கிடைக்காமப் போயிரப் போகுதுன்னு லெவலை விட்டு இறங்கிப் பேசறிங்களே.. இதுதான் உங்கள் லெவல் போல.. உங்க ஸ்டேட்டஸ் பத்தி எங்களுக்கு அக்கறையில்லை.. எங்க ஸ்டேட்டஸில எங்க பொண்ணும்.. மாப்பிள்ளையும் மறுவீட்டு விருந்துக்கு வந்துதான் ஆகனும்.."
"அதையும் பார்க்கலாம்.."
கொதிப்புடன் அகல்யா சொல்லிக் கொண்டிருந்த போதே..
"எதைப் பார்க்கப் போகிறிங்கம்மா..?" என்ற கேள்வியோடு ஊர்மிளா பின்தொடர அங்கு வந்து நின்றான் நரேந்திரன்..
தடாலடியாக அந்தர் பல்டி ஒன்றை அகல்யா அடித்த விதத்தில் பூங்குழலிக்கு மயக்கமே வந்து விட்டது..
"இல்லேப்பா.. நம்ம சம்பந்தியும்.. அண்ணியும் அவங்க பக்கத்து சொந்தக்காரங்களோட ஊருக்குக் கிளம்பறாங்க.. ஏன் அண்ணி.. உங்க பெண் வாழப் போகிற வீடு எப்படியிருக்குன்னு வந்து பார்த்துட்டுப் போங்கன்னு சொன்னேன்.. அதுக்கு அவங்க.. சொந்தபந்தம் கூட வந்திருக்காங்க.. அவங்களை விட்டுட்டு நாங்க மட்டும் வந்தா அதை அவங்களுக்கு நடக்கும் மரியாதை குறைவாய் நினைத்துக்குவாங்க.. எங்க மக இனிமேல் உங்க மக போல.. நீங்க பத்திரமா பார்த்துக்க மாட்டிங்களான்னு கேட்டுட்டாங்க.. இப்படிச் சொல்றவங்க கிட்ட.. இல்லையில்லை.. உங்க மகளை நான் பத்திரமா பார்த்துக்க மாட்டேன்னா சொல்ல முடியும்..? எனக்கு மூன்று பிள்ளைகள் அண்ணி.. உங்க மகளை நாலாவது பிள்ளையா நினைச்சுக்கிட்டு அதையும் பார்க்கலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் நரேன்.. ஊர்மிளாவோட அப்பாவையும்.. அம்மாவையும் பத்திரமா இந்த பஸ்ஸில் ஏறி போயிட்டு வரச் சொல்லுப்பா.. இனிமே ஊர்மிளா நம்ம வீட்டுப் பொண்ணு.. அவளை நான் பார்த்துக்க மாட்டேனா..?"
அகல்யாவின் பார்வையில் மர்மம் பொதிந்திருந்தது..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -39
அழகான ராட்சசியே -39
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-39.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-39.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy