பொதிகையிலே பூத்தவளே -39

39 நீலகிரியின் மேற்குத் தொடர்ச்சியில் காணப்படும் மலைகள் பலவற்றுள் இரண்டாவது பெரியமலை என்ற அந்தஸ்துடன் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கு...

39

நீலகிரியின் மேற்குத் தொடர்ச்சியில் காணப்படும் மலைகள் பலவற்றுள் இரண்டாவது பெரியமலை என்ற அந்தஸ்துடன் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் குன்னூர் மலைப் பகுதியில் வெகு இயல்பாக உலவி வர முடியும் என்று ஒரு வருடத்திற்கு முன்னால் எவர் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டாள் மீனா.. இன்று அந்த அழகிய மலைபிரதேசம் அவளுக்குப் பரிச்சயமானதாக ஆகியிருந்தது.. அங்கேயே பிறந்து வளர்ந்தவளைப் போல அந்தப் பிராந்தியம் முழுவதும் சுற்றி வந்தாள் மீனா..
கடல்மட்டத்திலிருந்து சுமார் 1930 மீட்டர் உயரத்தில் அமைந்து கண்கவரும் இயற்கைக் காட்சிகளை கண்களுக்குத் தந்து எதிர்பார்ப்பையும் சுகமான ஓர் இம்மை நிரம்பிய இசையையும் மனதில் சுரத்தி ஏமாற்றம் தராமல் இனிமையான பொழுதுபோக்கு இடமாக அமைந்து மனதை வருடியது குன்னூர் மலை.. கண்ணில் கானும் காட்சிகள் மனதுக்கு குளிரூட்டின..
ஊட்டிக்கு வெகு அருகாமையில் அமைந்திருந்த குன்னூருக்கு அருகில் இருந்தது கானாடுகிரி மலை.. ஊட்டி சுற்றுலாவுக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்களை  மனதிற்குள் அசை போட்டுப் பார்த்தாள் மீனா.. அவளுக்கு எட்டாக் கனவாக இருந்த சுற்றுலா மோகனாவுக்குச் சாத்தியப்பட வேண்டும் என்று அவளது செலவுகளைக் குறைத்துக் கொண்டு மோகனாவை பள்ளிச் சுற்றுலாவில் அனுப்பி வைத்தாள்.. அப்பேற்பட்ட கனசுப் பிரதேசமான ஊட்டியில் அவள் குடும்பத்துடன் திரட்டத் திகட்ட சுற்றி வந்து விட்டாள்.. வார இறுதிகளில் ஊட்டிக்குச் செல்வார்கள்.. மோகனாதான் அதை உறுதி படுத்துவாள்..
"அக்கா.. நாளைக்க நாம ஊட்டிக்குப் போறோம்.."
"வாரத்தில ஒருநாள்தான் லீவு.. தூங்க விடுடி.."
"அதெல்லாம் முடியாது.. வாரம் முழுக்க ஸ்கூல் போயிட்டு வரேன்னில.. லீவு நாளில ஊரைச் சுத்தியாகனும்.."
"அதுக்கு வேற எங்கேயாச்சும் போகலாமில்ல.. எப்ப பார்த்தாலும் ஊட்டி, ஊட்டி, ஊட்டிதானா..?"
"எப்பப் பார்த்தாலும் ஊட்டி அழகா, புதுசா இருக்குதேக்கா.. ஆளை இழுக்குதே.. அலுக்கவே மாட்டேங்குதே.."
விழிகள் செறுக மோகனா அபிநயிப்பதில் மனம் லயிக்கும் மீனா, தங்கைக்காக ஊட்டியைச் சுற்றிப் பார்க்கக் குடும்பத்துடன் கிளம்பி விடுவாள்..
"என்ன யோசனை..?"
தேயிலைப் பாத்திகளின் நடுவே நடந்து கொண்டிருந்த விஷ்வா கேட்டான்.. அவன் குரலில் சிந்தனை கலைந்தவள் அவனைப் பார்த்து சொந்தத்துடன் மோகனமாக சிரித்தாள்.. அந்தச் சிரிப்பு அவன் மனதை கொள்ளையடித்தது.. போதையேற்றியது.. அவன் கள் தேடும் வண்டாக அவளை போதையுடன் பார்த்தான்..
"அப்படிப் பார்க்காதீங்க.." முகம் சிவக்க ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தாள் மீனா..
அதில் அவனது கண்கள் இன்னமும் மின்னின.. பக்கத்திலிருந்த தேயிலைச் செடிகளின் பக்கமாக அவள் ஒன்ற, அவன் செடிகளைப் பிடித்து ஒரு குலுக்குக்
குலுக்கி ஆட்டினான்.. அவள்மீது தெறித்து விழுந்த பனித்துளிகளின் சில்லிப்பான ஸ்பரிசத்தில் அவள் இமைகளை மூடி, முகத்தைச் சுருக்கி..
"ஸ்..ஆ.." என்றாள்..
அவளது முகத்தோற்றம் அவனை முத்தமிட அழைத்தது.. அவன் நெருங்கியதை அவள் உணரவில்லை.. மூடிய இமைகளின் மீது படிந்த அவனது முகத்தின் ஈரத்தில் அவள் சிலிர்த்தாள்.. அவனது மீசையின் ரோமங்களின் ஸ்பரிசத்தில் துவண்டவள் அவன் மார்பில் பூங்கொடியாக சரிந்து புதைந்தாள்..
தஞ்சமென வந்தவளைத் தழுவிக் கொண்டான் விஷ்வா.. உலகம் சுற்றி வந்தவன் அவளது நினைவில் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல் திரும்பி வந்திருந்தான்.. அவளது ஒரு பார்வை தரும் போதையில் திளைத்தவனால், மயக்கும் மதுரசம் போன்ற கள்ளப் பார்வைகளில் போதை கிட்டவில்லை..
அவனுக்குத் தேவை, அவனை மட்டும் தேடும் பார்வை கொண்ட பாவை.. அவனை அவனுக்காக மட்டுமே தேட வேண்டும்.. அவனுடைய பணத்துக்காகவும் பின்புலத்திற்காகவும் தேடக் கூடாது.. உண்மையான காதலுடன் தேட வேண்டும்.. வரவழைத்துக் கொண்ட செயற்கைக் காதலுடன் தேடக்கூடாது.. எங்கே அவன் என்ற ஏக்கத்துடன் தேட வேண்டும்.. அவனைக் கண்டவுடன் நினைவு வரும் பாசாங்குடன் தேடக் கூடாது..
விஷ்வாவுக்குத் தேவை மாசற்ற மீனாவின் உண்மையான காதல்..
"மீனா.. ஐ லவ் யு.." என்றான்..
அவள் பதிலின்றி புன்னகைத்தாள்.. அவனுக்கு அது போதவில்லை.. நானும்தான் என்ற கொஞ்சலை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு ஏமாற்றமானது..
"ஏய்ய்.. உனக்கு என் மேல் காதல் இல்லையாடி..?"
அவளது முகத்தை முரட்டுத்தனமாக நிமிர்த்திக் கேட்டான்.. அவள் மோகனமாக நகைத்து அவனுக்குள் மோகத்தீயை மூட்டி விட்டாள்..
"காதல் இல்லாமத்தான் நீங்களே எல்லாம்ன்னு நிற்கிறேனா..?"
அவன் மனது சமாதானமடைந்தாலும் அதட்டினான்.
"அதை வாய்விட்டுச் சொல்ல மாட்டியா..?"
"சொன்னால்தான் காதலா..?"
"கெட்டிக்காரத்தனமாய் பேசுவதாக நினைப்பா..?"
அவள் பதில் சொல்லவில்லை.. குளிருக்கு அவனைக் கணப்பாக்கி அவன் மார்பில் ஒன்றியிருந்தாள்.. அவள் காட்டிய நெருக்கம் அவன் மனதை நிறைத்தது..
"மீனா.."
"ம்ம்ம்.."
"சந்தேகப் படுகிறாயா..?"
"யாரை..?"
"என்னை..?"
"என்னன்னு சந்தேகப்படுவேனாம்..? உங்களை முதல் நாள் பார்த்தப்பவே மேகியை தோளில் தொத்த விட்டுக்கிட்டுத்தானே காரில இருந்து இறங்கினீங்க..? அதுக்கு மேல என்னத்த சந்தேகப்பட..?"
"ஏய்ய்.. அவளை நீ விடவே மாட்டியா..?"
"நீங்க விட்டுட்டிங்களா..?"
"விட்டுட்டேன்னு சொன்னாத்தான் நீ நம்புவியா..?"
"நம்பிட்டேன்.. நம்பிட்டேன்.."
நம்பாத பாவனையில் கிண்டலாகச் சொல்லி விட்டுக் 'கலீக்' என நகைத்தாள் மீனா.. அவளது முல்லைப்பூ பல்வரிசை சிரிப்பை ஆசையுடன் பார்த்தபடி..
"நான் அதைக் கேட்கலைடி.." என்றான்..
"வேற எதைக் கேட்டிகளாம்..?"
"நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு நீ நினைக்கிறாயா..?"
ஆழ்ந்த குரலில் கேட்டான் விஷ்வா.. அவன் மார்பில் முகம் புதைத்திருந்த மீனா மௌனமாக இருந்தாள்..
விஷ்வா அவளது முகம் பார்த்தான்.. அவளது விழிகள் கலங்கியிருந்தாலும் முகத்தில் ஓர் தெளிவு இருந்தது..
"நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் எதிர்பார்க்கலை சார்.." மெல்லிய குரலில் சொன்னாள்.
"சார்ன்னு கூப்பிட்ட.. பல்லைக் கழட்டி விடுவேன்.. சாராம் சார்.. இப்படி நினைச்கிட்டு சார்ன்னு கூப்பிட உனக்கு எப்படி டீ மனசு வருது..?" அவன் சினம் கொண்டான்..
"அது ஒன்னும் தப்பில்ல.."
"மேரேஜ் பண்ணிக்கனும் என்கிற எக்ஸ்பெக்டேசன் இல்லைன்னு சொல்றதும் தப்பில்லை.. இல்லையா..?"
"ஆமாம்.."
"பின்னே.. என்ன கழுதைக்கு என்னைக் காதலிக்கிற..?"
"உங்கமேல காதல் வந்துருச்சு.. காதலிக்கிறேன்.."
"காதலுக்கு அடுத்தது மேரேஜ்தானே.."
"காதலிக்கிறதினால என்னை நீங்க கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிற நிர்பந்தம் எதுவுமில்ல.."
"ஆர் யு மேட்..?"
"யெஸ்.. நான் பைத்தியம்தான்.. உங்க மேல காதல் வைத்திருக்கிற பைத்தியம்.. மத்ததில் தெளிவா இருக்கேன்.."
"இதுதான் உன் தெளிவா..? சுத்தம்.."
"வாழ்க்கையின் நிதரிசனம் என்னன்னு எனக்குத் தெரியும்.. நான் யார்.. நீங்க யார்ன்னும் எனக்குத் தெரியும்.. மலைமீது மடு ஆசைப்படக் கூடாது.. ஆசை வந்திருச்சு.. அதுக்குமேலே எதையும் எதிர்பார்க்கக் கூடாது.."
"உளராதேடி.."
"உளறல் இல்லை.. உண்மைநிலை இதுதான்.. உங்களைக் காதலிக்கிறேன்ங்கிறதுக்காக உங்களை முழுசா உரிமை கொண்டாடிவிட முடியாது.. அது கூடாது.. உங்க பாரம்பர்யத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு.. நீங்க தனியொரு மனிதர் இல்லை.. உங்க அப்பாம்மாவுக்கு மகன்.. அண்ணுக்குத் தம்பி.. தங்கைக்கு அண்ணன்.. அரண்மனையின் வாரிசு.. என்னைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க நினைத்தா, இத்தனை உறவுகளும் உங்களை கேள்வி கேட்கும்.. உங்க தங்கையின் கல்யாணம் பாதிக்கும்.. இன்னும் நிறைய இருக்கு.."
"லுக்.. லவ் மேரேஜ்ன்னா யூசுவலா வருகிற பிராப்ளம்ஸ்தான் இதெல்லாம்.. இதுக்காக காதலை சேக்ரிபைஸ் பண்ணுவியா..?"
"இதைத் தியாகம்ன்னு நீங்க ஏன் நினைக்கறீங்க..? எனக்கு என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கு.."
"அதையும் தாண்டி உனக்குன்னு வாழ வேண்டிய வாழ்க்கை இருக்கு மீனா.. உன் குடும்பத்துக்கான தேவைகளை நான் பார்த்துக்க மாட்டேனா..?"
"ஊஹீம்.. அது சரிவராது.. என் குடும்பத்தை நான் பார்த்துக்கிறது என்பது வேற.. நீங்க பார்த்துக்கிறது என்பது வேற.. என் வீட்டில் அதை ஏத்துக்க மாட்டாங்க.."
"அதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம்.."
"அதைத்தான் நானும் சொல்கிறேன்.. இதோ.. வந்து விடவேன்னு சொல்லிட்டுப் போனீங்க.. ஏழு மாதம் கழித்துத் திரும்பி வந்திருக்கிறீங்க.. உங்களைப் பார்க்காம எப்படித் தவிச்சுப் போயிருந்தேன் தெரியுமா.. இப்பப் போய் எதுக்காக நடக்காததையெல்லாம் பேசனும்.."
"மீனா அறிவில்லாம பேசாதே.."
விஷ்வா கோபத்துடன் கடிந்து கொண்டான்.. குளிருக்கு அணைவாய் முன்னங்கைகளைச் சேர்த்துக் கட்டியிருந்த மீனாவின் உதடுகள் துடித்தன.. அவள் கேவலைக் கட்டுப் படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்குக் கோபம் பறந்தது.. இருகைகளையும் விரித்து அவளை அழைத்தான்.. அவள் தாய்மடி தேடும் மழலையாகத் தேம்பியபடி அவன் கைகளுக்குள் புகுந்தாள்..
"நீ இப்படியெல்லாம் பேசுகிறவள் இல்லையே.. நானே மேரேஜிலிருந்து தப்பிக்க நினைத்தாலும் என் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டு உன் கழுத்தில் தாலியைக் கட்ட வைப்பவள்ன்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. டோட்டலா எல்லாத்தையும் காலி பண்றியே.."
"இல்லை.. இந்த தீர்மானத்தை இப்போது எடுக்கலை.. எப்ப என் மனசில் உங்க மேல காதல் வந்ததோஅப்பவே யோசிச்சு தீர்மானிச்சு வைச்சுட்டேன்.. அதுக்கப்புறமாத்தான் என் காதலை உங்களிடம் ஒப்புக்கிட்டேன்.."
"அப்படி என்னடி டிசைட் பண்ணின..?"
"எந்தக் காரணம் கொண்டும் என் காதலைச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது.. உங்க குடும்பத்துக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.. அவங்களிடம் இருந்து உங்களைத் தட்டிப் பறிக்கக் கூடாது.. விட்டுக் கொடுத்து விலகிப் போயிரனும்.."
"விலகி எங்கேடி போவ..?"
"எங்கேயோ.. அது எதுக்கு உங்களுக்கு.. உங்க கல்யாணம் உங்க குடும்பத்தின் முடிவுப்படிதான் நடக்கணும்.. அதுவரை உங்களைக் காதலிப்பேன்.."
"அதுக்குப் பின்னாலே யாரைக் காதலிப்ப..?"
கண்கள் இடுங்க தீட்சண்யமான விழிகளோடு அவள் முகத்தை தீர்க்கமாகப் பார்த்துக் கேட்டான் விஷ்வா..
"என்ன சொன்னீங்க...?" மீனா அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து விட்டாள்.. அவள் விழிகளில் உக்கிரம்..
"காதலிக்கிறீங்க என்கிறதுக்காக நாக்கு மேலப் பல்லைப் போட்டுப் பேசினீங்கன்னா நடக்கறதே வேற.. சொல்லிட்டேன்.." சீறினாள்..
விஷ்வா விலகவில்லை.. அவளை விலக்கவுமில்லை.. அவள் கைகளுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்தவன் நிதானமாகக் கேட்டான்..
"உன்னைச் சொன்னதுக்கு இவ்வளவு கோபம் வருதே.. உன்னை விட்டு விட்டு வேறு ஒருத்தியை மேரேஜ் பண்ணிக்கனும்னு என்னைச் சொல்கிறாயே.. எனக்கு எவ்வளவு கோபம் வரும்..? அப்படி எவளோ ஒருத்தியை நான் மேரேஜ் பண்ணிக்கிற வரைதான் நீ என்னைக் காதலிப்பியா..? அதுக்குப் பின்னால் என்னடி செய்வ..?"
"உங்க நினைவோடு என் அப்பாம்மாவுக்கு மகளாய் கடைசிவரை இருந்து விடுவேன்.."
அந்தப் பதிலில் அவனது மனம் வலித்தது.. அவளது தூய்மையான காதலில் அவள் நெக்குருகினான்..
"நினைப்ப.. பட்.. காதலிக்க மாட்ட.. ஏண்டி..?"
"ஏன்னா.. அதுக்குப் பின்னாலே நீங்க இன்னொருத்திக்குச் சொந்தமாகிருவீங்க.. அந்தப் பெண்ணுக்கு நான் தீங்கு செய்யக் கூடாது.."
தாளமாட்டாமல் மீனா கதறியழுதாள்.. அவளைக் கட்டித்தழுவி சமாதானப் படுத்துவதற்குள் விஷ்வாக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது..
"வெறும் வாய் வார்த்தைக்குக் கூட என்னை இன்னொருத்தியின் ஹஸ்பெண்டா உன்னால் நினைக்க முடியலையில்ல.. அப்புறமும் எதுக்காக இந்த லூஸ் டாக்..?"
"விஷ்வா.."
முதன் முறையாக அவனது பெயர் சொன்னாள் அவள்.. விஷ்வாவுக்கு பெயர் தெரியாத பறவையொன்று இசைபாடிச் செல்வதைப் போல இருந்தது.. அவளது உச்சந்தையில் முகம் பதித்தான்..
"உன்னை விட்டு விடுவதற்காகத் தொட்டுப் பழகலை.. பர்ஸ்ட் டைம் உன்னைப் பார்த்தப்பவே நீ எனக்கானவள்ன்னு எனக்குத் தோணிப்போச்சு.. என் வாழ்வில் இனி நீ மட்டும்தான்னு நான் டிசைட் பண்ணிட்டேன் மீனா.. நீதான் என் வொய்ப்.."
அவர்கள் இருவரும் ஈருடல் ஒருயிராய் கட்டித் தழுவி நின்ற நிலையை.. உயரமான மலைப்பாதையில் ஜீப்பிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் ரங்கநாதன்.



Name

அகல்விளக்கு,20,அடுத்தடுத்து,1,அழகான ராட்சசியே,3,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,100,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,283,என்னவென்று நான் சொல்ல ?,117,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,24,நிலாக்கால நினைவுகள்,28,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,108,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,40,மகராசி,1,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -39
பொதிகையிலே பூத்தவளே -39
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/10/pothikaiyilepooththavale39.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/10/pothikaiyilepooththavale39.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy